சந்திக்க வருவாயோ?-51-1

அத்தியாயம்:51- 1

“சந்தியா” என்ற ராகவ்வின் அதட்டலான குரலில் கூட அதிராமல் அசையாமல் சந்தியா அப்படியே அமர்ந்திருந்தாள்…


இவனின் கோபத்திற்கு அவளின் பிரதிபலிப்பு சுத்தமாக இல்லாமல் போக… அது ராகவ்வுக்கு இன்னுமே கோபத்தை அவனுக்குள் அதிகரித்து இருக்க


வேகமாக அவளை கைகளால் இழுத்து தன் முன் நிறுத்தியவன்…

“முடிவுகள் எடுக்க நீ ஒண்ணும் தனியாள் இல்லை சந்தியா….. இப்போ என் மனைவி… புருசன்னு ஒருத்தன் இங்கே நான் இருக்கேன்றது தெரியுதா…” என்று முகத்தைப் பற்றி நிமிர்த்தியவனின் கை அழுத்தத்திலேயே இவள் மீதான அவனின் கோபம் புரிய… இருந்தும் அப்படியே நின்றிருந்தவள்… விழி மட்டும் உயர்த்தி…


“அப்போ அன்னைக்கு என் அம்மா வீட்டுக்கு என்னை அனுப்பினது என்னைக் கேட்டா முடிவெடுத்த ராகவ்… அன்னைக்கு நான் தனியாளா ராகவ்” சில நேரங்களில்.. சில முடிவுகள்… சில வார்த்தைகள் தனக்கே திரும்பி வரும் போது எதிராளியை வார்த்தைகளின்றி நிராயுதபாணியாக்கி விடுகின்றன…