top of page

சந்திக்க வருவாயோ?-50

Updated: Jun 24, 2020

அத்தியாயம்:50

/* கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது

*/


சந்தியாவிடம் பேசி முடித்த பின்னர் போனை வைத்தவன்… வேக வேகமாக அறைக்கு வந்து… அதே வேகத்தில் பரபரவென தனக்கான உடைகளை பெட்டிக்குள் அள்ளிப் போட்டவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்

ஏன் காவல்துறை சந்தியாவைத் தொடர வேண்டும்… அவளுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்… அதுவும் டெல்லி போலிசாரோடு… என்று நினைத்த போதே அவனுக்கு காதம்பரி ஞாபகம் வர…

சிறு வயதில் அடிக்கடி காதம்பரி வீட்டுக்கு சென்றிருக்கின்றேன்… கல்லூரி சென்ற பிறகு அடிக்கடி சென்றதில்லை, கடைசியாக காதம்பரி திருமணத்திற்கு அதுவும் அவள் திருமணத்தன்று போகாமல் சில தினங்கள் கழித்தே சென்றதாக சந்தியா சொன்னதெல்லாம் இப்போது ஞாபகம் வர… ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின அவனுக்கு… என்ன நினைப்பது என்றே தெரியவில்லை… திடீரென்று அவளின் சிறுவயது குறும்புகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர… டெல்லியில் சென்றிருக்கும் போது யாராவது இவளிடம் வாலாட்டியிருப்பார்களா… இப்போது குழந்தைகளுக்கு நடக்கும், கேட்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர… இருக்காது அந்த மாதிரி இருந்திருந்தால்… முதல் கூடலிலேயே இவனால் கண்டுபிடித்திருக்க முடியும்… வேறு என்னவாக இருக்கும்… கொலை வரை எல்லாம் அவனால் யோசிக்க கூட முடியவில்லை… ஒன்று மட்டும் நிச்சயம் இரண்டு வருடம் அவளை தொடர்ந்திருக்கின்றனர்… அவளுக்காகவே தன்னைக் கூட அதுவும் மொரிஷியஸ் வரை தொடர்ந்திருக்கின்றனர் என்ற போது விசயம் சாதாரணமானதல்ல என்று மட்டும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது…

அறையின் ஏசியிலும் குப்பென வியர்த்தது…

அதே நேரம்… இப்போது உடனடியாக இங்கிருந்து எப்படி கிளம்புவது… என்னவென்று சொல்லி கிளம்புவது என்று யோசிக்க… எதுவுமே ஞாபகத்துக்கு வந்து வேறு தொலையவில்லை…

”ஆட் கம்பெனியில் வேலை பார்த்திருந்தாலாவது… ஷூட் என்று காரணம் கிளம்பிப் போயிருக்கலாம்… ஆனால் இவன் தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே வேலையை ராஜினாமா செய்திருந்தானே… அதற்கான மீட்டிங் என்றுதான் அவனது பாஸை சந்திக்கச் சென்றது… அதன் பிறகு தான் பார்ட்டி எல்லாமே… இன்னும் அலுவலக வட்டாரத்திற்கு இவனது விசயம் பரவவில்லை… ராகவ் முடிக்க வேண்டிய சின்ன சின்ன வேலைகள் இன்னும் இருக்க… அலுவலகம் போய்க்கொண்டிருந்தான்… அதை எல்லாம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே சந்தியாவோடு கிளம்ப முடியவில்லை…

யோசித்த போதே….

“ராகவ்… வேலையை ராஜினாமா செய்ததை… நீ இன்னும் உன் குடும்பத்துக்கு சொல்லவில்லை… சந்தியாவிடமும் சொல்லவில்லை… அவளுக்கு சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ்… என்று நீ சொல்லி சொல்லி இன்று அவளறியாமலேயே உனக்கு சஸ்பென்ஸ் வைத்து விட்டாள்…” மனசாட்சி அவனை ஒரு புறம் குத்த இருந்தும்… இங்கிருந்து செல்வதற்கான காரணத்தை சொன்னதற்காக மனசாட்சி நன்றி சொன்னவனாக…

வேகமாக உடைகளை வைத்து பெட்டியை மூடியவனால்… அதை ஒழுங்காகக் கூட மூட முடியவில்லை… மீண்டும் எல்லாவற்றையும் வெளியே எடுத்து… அதை மீண்டும் வைத்து மூடியவனுக்கு… நேற்று இதே நேரம் சந்தியாவின் உடைகளை எல்லாம் அவளது பெட்டியில் மடித்து அடுக்கி தயார் செய்து கொடுத்தது ஞாபகம் வர… கண்ணைக் கரித்தது..

சமையலறையில் அவளோடு வம்பளந்த போது… சந்தியா எதார்த்தமாக… இவனுக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்க… இவனுக்கு சமையலில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்று சொல்லி விட… அவள் முகம் வாடியதும்… அதன் அவள் அறைக்கு வந்து அவளை உறங்க வைத்து விட்டு… கட்டிலில் கிடந்த அவளைது உடைகளை எல்லாம் மடித்து அடுக்கி வைத்த உடன்… எழுந்து பார்த்தவள்… கண்கள் விரித்து… சந்தோஷத்தில் முத்தங்களை பரிசளித்ததும் இப்போது ஞாபகம் வர… கனமாகிய மனதை… ஆறுதல் படுத்த மனசாட்சி கூட வரவில்லை…

கசிந்த கண்ணீரை… அவனையுமறியாமல்… துடைத்துக் கொண்டவன்… அந்த அறையை விட்டு வெளியே வந்து வரவேற்பறைக்கு வந்திருந்தான்….

அங்கோ

சந்தோஷ் – மிருணாளினி வாழ்க்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையை நினைத்து.. மொத்த குடும்பமும்… மகிழ்ச்சியாக அமர்ந்திருக்க…

அறைக்குப் போன ராகவ்… திரும்பி வரும்போது… கையில் லக்கேஜோடு… வந்து நிற்க மொத்த குடும்பமும்… அதிர்ச்சியோடு பார்க்க…

மனதில் இருந்த கவலைகளையும், பதட்டத்தையும் மறைத்தபடி…

”திடிர்னு… ஒரு அட்வெர்டைஷ்மெண்ட் ஷூட்பா… ப்ராடெக்ட் டெலிவெரி ஷெட்யூல் பிரீ ஷெட்யூல் ஆகிருச்சாம்… சோ உடனே ஆட் வேனும்னு சொல்றாங்க…” என்றவனை அத்தனை பேரும் வித்தியாசமாகப் பார்த்தனர் ஆனால் கவலையோடு அல்ல.. குறும்போடு…

சந்தோஷ் வேகமாக…

“டெல்லில தான ஆட் ஷூட் மச்சான்” என்று ராகவ்வை அந்த சூழ்நிலையும் கலாய்க்க… மிருணாளினி முறைக்க…

“அட்லீஸ்ட் இதுக்காகவது என்னைப் பார்க்கிறியே” என்று சந்தோஷ் திருப்திப் பட்டுக் கொள்ள…

சந்தோஷின் கேலிக்கு… கஷ்டப்பட்டு சிரிக்க முயற்சி செய்தான் ராகவ்…. அதில்… ராகவ் உதடு மட்டும் விரிய… அதன் பின்னால் இருந்த விரக்தியை மற்றவர் கண்கள் அறியாமல் மறைக்க பெரும் பிரயத்தனம் பட்டான் என்றே சொல்ல வேண்டும்…

ஆனாலும் கண்கள் ஜீவனை இழந்திருக்க… அது அங்கும் யார் கண்களிலும் படவில்லை…

அவர்கள் என்ன கண்டார்கள்… சந்தியா இப்படி மாட்டியிருப்பாள்… அதில் இவன் வாடியிருக்கின்றான் என்று… அனைவருமே சந்தோஷமாகத்தான் இருந்தார்கள்.. சொல்லப்போனால் அவன் டெல்லி செல்வது அங்கு யாருக்குமே வித்தியாசமாகவேப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்

திவாகர் அவனிடம்

“என்ன ரகு… செப்பி.. மிரட்டிட்டு போயிருக்காளா… இன்னைக்கே அங்க வந்து சேர்ந்துருக்கனும்னு... பண்ணுவா அந்த ராட்சசி” என்று சிரித்தபடி கேட்க…

“அதெல்லாம் இல்லண்ணா” என்று மட்டும் சொன்னவன்… வேகமாக வெளியேறியவனுக்கு கதவருகே சென்ற போதுதான்… யாரிடமும் முறையாக விடை பெறாமல் செல்கிறோம் என்றே தோன்ற… பெட்டியை வைத்து விட்டு திரும்பி வந்தவனை…

இப்போது அனைவரும் கொஞ்சம் யோசனையாகப் பார்க்க.. அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனாக…

மிருணாளினியிடம் வந்தவன்…

அவளைத் தன் தோளோடு அணைத்து… அவள் உச்சியில் முத்தமிட்டவன்

“குட்டி.” என்று ஆரம்பித்தவன்… சந்தோஷை இருப்பதை உணர்ந்தபடி… குட்டிம்மா என்ற வார்த்தையை தவிர்த்தவனாக

“மிருணா… லைஃப்ல நீ எடுக்கிற டெஷிசன் எப்போதுமே கரெக்ட்டா இருக்கும்னு நான் எப்போதுமே சொல்வேன்… ஆனால் சந்தோஷ் விசயத்தில் நீ தப்பாதாண்டா முடிவெடுத்துட்ட… எனக்கு சொல்லனும்னு தோணுச்சு… டைம் இருக்குடா… நிதானமா அவன் பக்கத்தில இருந்து இன்னும் யோசி… வாழ்க்கை ஒரு முறைதான் நமக்கு வாய்ப்பு கொடுக்கும்… அதை விட்டுட்டு.. பின்னால கலங்கக் கூடாது” என்று சொன்ன போதே

தன் அண்ணனின் குரலில் இருந்த ஏதோ ஒரு அழுத்தம்… மிருணாளினியை அவளையும் மீறி தலையை ஆட்ட வைக்க… சந்தோஷும் அருகில் வர… இருவரையும் ஒரு சேர பார்த்த திருப்தி ராகவ்வுக்கு வந்திருக்க… திவாகர், கணேசனிடம் விடைபெற்றவனுக்கு வசந்தியைப் பார்க்கவே முடியவில்லை… அவரோடு பேசினால் உடைந்து விடுவோம் என்றே தோன்றியது அவனுக்கு… வசந்தியைத் தவிர்த்துவிட்டு…. வேகமாக தந்தையிடமும் தாயிடமும் சென்றவன்… தலை அசைத்தபடி நகர்ந்தவன்… என்ன நினைத்தானே தெரியவில்லை…

“லவ் யூ டாடி.. ஐ மிஸ் யூ… அண்ட் தேங்க்யூ சோ மச் டாடி… நீங்க மட்டும் இல்லாட்டினா என் சகி எனக்கு கிடைச்சிருக்க மாட்டா டாடி… “ என்றவனை சுகுமார் அப்படி ஒரு சந்தோஷத்தில் முகம் மலர பார்க்க…

“யெஸ் டாட்… ஐ லவ் ஹெர் சோ மச்… இந்த உலகத்தில இருக்கிற எல்லாவற்றையும் விட அவள நான் நேசிக்கிறேன்… இதை நான் நேற்றே சொல்லி இருக்கணும்…” என்று சொல்லி முடிக்கவில்லை…

தன் மகனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டவர்…

“எனக்குத் தெரியும் ராகவ்… உன் அப்பாக்குத் தெரியாதாடா உன்னைப் பற்றி” என்று சொன்னவரிடம்…

”தேங்க்ஸ் டாட்” என்று இன்னும் கட்டிக் கொண்டவனிடம்

”என் மருமகள நீ இந்த வீட்டுக்கு எப்போடா கூட்டிட்டு வர்ற” என்று அதிகாரமாகக் கேள்வி கேட்டவருக்கு கண்கள் கலங்கித்தான் போயிருந்தன…

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு… தன் மகன் பாசத்தோடு, உரிமையோடு… தன்னை நேருக்கு நேராக பார்த்து, பேசும் பேச்சை இன்றுதான்… கேட்கிறார்…

“என் மருமக என் மகனைத் திருப்பித் தந்துட்டான்னு அவளைப் பார்த்த உடனே சொல்லிருடா…” என்று சொன்னவரிடம்

”கண்டிப்பா சொல்கிறேன்…” என்று அவரிடம் சொன்னவன்..

“உங்க மருமகளோட சீக்கிரம் வருகிறேன்” அவரிடம் சொன்னவன் தனக்குள் சொல்லியும் கொண்டவன் தாயிடமும் சொல்லிக் கொண்டு கிளப்ப…

இதை எல்லாம் பார்த்திருந்த வசந்தியின் கண்கள் பனித்திருக்க… வேறு வழியின்றி… வசந்தியிடமும் தலையை மட்டும் அசைத்தவன்… அதன் பிறகு சில நொடிகள் கூட நேரத்தை வீணாக்கவில்லை…

அதன் பிறகு… கிட்டத்தட்ட… 4 மணி நேரம் ஆகியிருந்தது… அவனது உயிரை மீண்டும் மீட்டெடுத்துக் கொள்ள…

சென்னையில் விமானத்தைப் பிடித்து… டெல்லியில் இறங்கி… சிவாவின் இல்லத்தை அடைந்து சந்தியாவை மீண்டும் சந்தித்த போதுதான் அவன் உயிர் மீண்டும் அவனிடமே வந்து சேர…

அவனது உயிரைத் தனக்குள் வைத்திருந்தவளோ… கதறியபடி… ஓடி வந்து தன் மார்பில் தஞ்சமாய் வந்து அடங்கியிருக்க… அவள் தேகத்தின் நடுக்கம் இவன் தேகத்தில் ஊடுருவ…. தேம்பியபடி இருந்தவளை… தன் அணைப்பில் இன்னும் இறுக்கியவன்… அவளுக்கு ஆறுதல் சொல்ல அவள் முகத்தை நிமிர்த்த அப்படியே உறைந்து நின்றான்…

அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தவனுக்கோ… கண்களில் உக்கிரம் வந்து இரத்தச் சிவப்பாகி இருந்தது…. தன்னவளின் கன்னங்களில் அழுத்தமாக பதிந்திருந்த கைத்தடம் பார்க்க… அது ஒன்றே சொல்லியது… அவன் மனைவியின் தற்போதைய நிலையை

முகமெங்கும்… அடக்க முடியாத கோபத்துடன்… கை முஷ்டிகள் இறுக தன்னை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டவன்…”இதுதான் உங்கள் வீரமா” என்று சிவாவையும் நிரஞ்சனாவையும் குற்றம் சாட்டும் பார்வை பார்வையில் முறைத்தான் ராகவ்…

ஆனால்… அவர்களிடம் மோதுவதற்கு முன்…

பயத்தில் உறைந்து திகிலடைந்து நின்றிருந்த மனைவியை தேற்றுவதுதான் இப்போது முக்கியம் என உணர்ந்தவனாக…

அவளை நிமிர்த்தி… அவள் கண்ணீரைத் துடைத்தவன்…

“ஒண்ணும் இல்லடா… நான் வந்துட்டேன்ல.. பயப்படாத… “ என்று சந்தியாவைத் தேற்ற… அவள் உடல் நடுக்கம் ஓரளவு நின்ற பின் தான்… தன் முன்னால் நின்றவர்களை நிமிர்ந்து பார்க்க…

இப்போது சிவா அவனின் பார்வையில்

“நீ வரணும் ராகவ்… சந்தியா எங்களுக்கு எப்படி முக்கியமோ… அதே போல ராகவ் சாரி சாரி… ரகு சந்தியாவுக்கு முக்கியமில்லையா… என்ன சந்தியா உண்மைதானே” சிவா சந்தியாவைப் பார்த்து புருவம் உயர்த்தி கேட்க

விஷ்ணுவின் அவதார நாமங்களை சுமந்திருந்த ராகவரகுராமனோ இப்போது ருத்ர அவதாரம் தரித்திருந்தான்… அந்த ருத்ரனின் உக்கிர பார்வையில் முன்னால் இருந்த இருவரும் பஸ்பமாகி இருக்க வேண்டும் தான்… கலியுகம் அல்லவா… அவதார புருசர்களுக்கு இடமில்லை போல

”என்ன வேண்டும் உங்களுக்கு … “ வார்த்தைகளைக் கடித்து துப்பினான் ராகவ் கண்களில் தீப்பொறி பறக்க…

சிவா பதில் சொல்வதற்கு முன்…

“இரண்டு வருசமா ஃபாளோ பண்றாங்களாம் ரகு… ஸ்போர்ட்ஸ்க்கு சப்ஸ்ட்டியூட் கேள்விப்பட்ருப்போம்… அக்யூஸ்ட்டுக்கு சப்ஸ்ட்டியூட்… இதோ இவ போலிஸாம் ரகு… தன் கணவன் தன்னுடன் இருக்கின்றான்” என்ற தைரியத்தில் வாங்கிய அடிகளை எல்லாம் மறந்து விட்டு… குரல் உயர்த்தி இன்னும் தைரியமாக சந்தியா பேச

சிவாவின் புருவம் உயர்ந்தது… சந்தியாவைப் பார்த்து…

“உன் கணவன் இருக்கிறான் என்ற தைரியமோ” என்ற நோக்கில் வந்த சிறு கிண்டல்.. அடுத்த நொடி... அந்தப் பார்வை ராகவ்விடம் சென்றடைய… ராகவ்விடம்

“நான் சொன்னேன்ல ராகவ் நாம சீக்கிரம் மீட் பண்ணுவோம்னு… ரிலாக்ஸா நாம பேசலாம்… சந்தியா கொஞ்சம் டென்சனா இருக்காங்க… ஃபர்ஸ்ட் அவங்கள கூல் பண்ணுங்க…” என்று உள்ளே இருந்த அறையைக் காட்ட…

கை மறித்து நிறுத்தினான் ராகவ்

“என்ன வேணும்னாலும் நீங்க கதை சொல்லுங்க… அதுக்கு முன்னால இவள ஏன் அடிச்சீங்க… என்ன ரைட்ஸ் இருக்கு உங்களுக்கு… போலிஸ்னா என்ன அராஜகம் வேண்டுமானாலும் பண்ணுவீங்களா… இங்க வரும் போதும் கூட என்ன காரணமாக இருக்கும்… சந்தியா இவங்களுக்கு எந்த விதத்தில் தேவை என்ற சிந்தனைதானே தவிர… இவளோட பயம் மட்டுமே எனக்கு பெருங்கவலையாக இருந்ததே… வேறு பெரிதாக கவலை இல்லை… ஆனால் இந்த மாதிரி ஒரு பொண்ண அடிக்க என்ன காரணம்… உங்க மேல அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் சிவா சார்…” என்றவனிடம்…

“இப்போதும் தாராளாமா அந்த நம்பிக்கை வைக்கலாம் ராகவ்” என்ற போதே….

“சாரி சார்… தனி மனுசங்க மேல உங்க அராஜகத்தை காட்ற உங்ககிட்ட நம்பிக்கையை எதிர்பார்க்கிறதுக்கு நான் முட்டாள் இல்லை… அதிலயும் அப்பாவி பொண்ணுக்கிட்ட… எனக்குத் தெரியும்… உங்க நோக்கம் தவறா இருக்காதுனு… ஆனா அதுக்காக எங்கள கட்டாயப்படுத்துறது… எந்த வகையில் நியாயம்… சந்தியாவை நான் கூட்டிட்டு போறேன்… ” என்று நிறுத்தியவன்…

“இதுக்காக என்னை மிரட்டினால்… என்னை வைத்து இவள உங்களுக்கு அடிபணிய வைக்க நினைத்தால்… அதை எப்படி ஃபேஸ் பண்றதுன்னும் தெரியும் சார்… நான் தப்பு செய்யலைனும் போது எதுக்காக பயப்படனும்… “ என்ற போதே சந்தியா புரியாமல் ராகவ்வைப் பார்த்தபடி…

“ரகுவை என்ன பண்ணினாங்க… ஏற்கனவே பேசும் போது கூட… போதை மருந்து என்றெல்லாம் வந்ததே” என்று யோசித்த போதே… அன்று ராகவ் சிவாவிடம் பேசியது ஞாபத்தில் வர…

”இவங்க எல்லாமே ப்ளான் பண்ணி பண்ணிருக்காங்க ரகு…. என்னாச்சு ரகு… “ என்று கணவனை கவலையாக பயத்தோடு நோக்கினாள்…

ஆமோதிப்பாக தலையை ஆட்டியபடியே…

“ஆசை ஆசையா நம்ம நிச்சயதார்த்ததிற்கு வந்த என்னை… போலிஸ் ஸ்டேசன்ல நிக்க வச்சுட்டாங்க சந்தியா… அப்போ கூட எனக்குத் தெரியலை… புரியுலை இவங்க டார்கெட் நீதான்னு… அதெல்லாம் அப்புறமா சொல்றேன்…” என்ற போதே ராகவ்வுக்கு குரல் அடைத்ததுதான்… அந்த புகைப்படங்களும் வீடியோவும்… இன்று வரைத் தன்னைத் தொடருமென நினைத்துக் கூடப் பார்க்கவில்லை அவன்…

என்றவன் சிவாவிடம் திரும்பி…

“நாங்க கிளம்புகிறோம் “ என்றபடி…

“டார்ச்சர் பண்ணுனீங்க… மொத்த மீடியாக்கும் உங்களப் பற்றி சொல்லிருவேன்.. ஜாக்கிரதை” என்று மிரட்டியபடி நகர…

சிவாவோ விழுந்து விழுந்து சிரித்தான்.. அடக்க மாட்டாமல்… அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ராகவ் தன் மனைவியோடு வெளியே செல்ல முயற்சிக்க.. முன்னால் வந்து மறித்தனர் இருவர்…

சந்தியா பயந்து ராகவ்வைப் பார்க்க… ராகவ் திரும்பி சிவாவை முறைக்க…

“அவ்வளவு சீக்கிரம் இந்த ட்ராப் லருந்து தப்பிக்க முடியாது மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராகவ்” என்ற சிவா..

”ராகவ் நீ ஸ்மார்ட்னு அடிக்கடி நான் சொல்றதை… வாபஸ் வாங்க வச்சுறாதீங்க… பிடிவாதம் பிடிக்காமல்…. கொஞ்சம் உள்ள வர்றீங்களா…” என்ற சிவா… அவர்களை மறித்த காவலர்களை கண்களாலேயே வெளியேறிப் போகச் சொன்னவன்… கதவையும் அடைக்கச் சொல்ல… அவர்கள் அதைத் தட்டாமல் செய்திருக்க…

இங்கிருந்து எப்படி தப்பிப்பது எப்படி என்ற யோச்னையில் ராகவ் அங்கேயே நின்றிருக்க… சந்தியா அவனோடு இன்னும் ஒன்றியிருக்க…

ராகவ்வை சிவா… கைப்பிடித்து இழுத்து உள்ளே இழுத்து வந்து அறைக்குள் கூட்டி வர…இயந்திரம் போல ராகவ்வும் தன் மனைவியுடன் வந்திருந்தான்…

அங்கிருந்த ப்ராஜெக்டரை ராகவ்வுக்காக மீண்டும் ஓட விட்டவன்… ராகவ்வையும் பார்க்க வைத்தவன்…

இந்த வெடிகுண்டு கேஸ் பார்த்திருப்பீங்கதானே ராகவ்… உங்களுக்கெல்லாம் இது நியூஸ் அவ்வளவுதான் உங்க அக்கறை.. ஜஸ்ட்… நியூஸ் சேனல்ல வரும் போது சில நொடிகள் பார்க்கிற விசயம்… என்னைக்காவது இதுல பாதிக்கப்பட்ட மக்களை யோசிச்சு பார்த்திருப்பீங்களா… இதுனால நிலைகுலைந்த அவங்க குடும்பங்களையும் உறவுகளையும் நெனச்சு பார்த்துருப்பீங்களா… இல்லை அந்த தீவிரவாதி கூட்டத்துமேல வெறித்தனமா கோபப் பட்டிருப்பீங்களா… இன்னைக்கு உங்க மனைவிக்கு… அவளோட கன்னத்தில இருக்கிற தடத்துக்கு இந்த அளவு பொங்குறீங்களே… அங்க பாருங்க.. கை வேறு… கால் வேறுனு… கிடக்கிற பிண்டங்களை… இதோ அவ அப்பாவோட உடல்ல ஒரு பார்ட் கூட எங்களால எடுக்க முடியலை… என்னோட வைஃப்… 4 மாதக் கர்ப்பிணியா “ என்ற போதே சிவாவின் குரல் சட்டென்று உடைய… இருந்தும் தன்னை சமாளித்தவனாக…

“அம்மா எங்கேனு கேட்ட என்னோட பச்சக் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாம திணறிய என் வேதனை… இதுமாதிரி எத்தனையோ பேர்… எத்தனையோ குமுறல்கள்… இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா” என்றவன்…

திரையை வேகமாக ஓட விட்டு… முதலில் ஒரு ஆண் முகத்தைக் காட்டியவன்… அடுத்ததாக அதீனாவின் முகத்தை ஓட விட்டு திரையை நிறுத்தியவன்…

“இதோ இவ தான்… இத்தனை பிளானையும் கச்சிதமா பண்ணிருக்கா… “ என்ற போது அந்த முகத்தைப் பார்த்த ராகவ் அப்படியே உறைந்து போய் நின்றான்…

அன்று சந்தியாவைப் பார்த்தாற்போல இருந்த பெண்ணின் முகம்… சந்தியா போல தோன்றியது உண்மைதான்… அதன் பின் காட்டிய புகைப்படங்கள் எல்லாம் சந்தியா சந்தியா மட்டுமே… நேற்று ஏர்போர்ட் வரை அவளது புகைப்படங்களை அந்த வீடியோ தாங்கி இருக்க…

அவற்றை எல்லாம் பார்த்த ராகவ்வுக்கு… சந்தியாவைத் தாங்கி இருந்த அவன் கைகளின் இறுக்கம் இன்னும் அதிகரிக்க… அதிலும்… இருவருமாக இவனின் பிறந்த நாள் அன்று வெளியில் வந்த போது எடுத்த புகைப்படத்தை பார்த்த போது தேகமெங்கும் எரிந்தது ராகவ்வுக்கு…

தங்களைச் சுற்றி… இல்லையில்லை சந்தியாவைச் சுற்றிய வளையம்… இதிலிருந்து அவளை எப்படி காப்பது என்று தெரியவில்லை ராகவ்வுக்கு…

”இவ எனக்கு துரோகம் பண்ணிட்டா ரகு…” நிரஞ்சனாவை மீண்டும் சுட்டிக் காட்டினாள் சந்தியா… சந்தியாவுக்கு மற்ற எல்லாவற்றையும் விட தோழியின் துரோகத்தை சீரணிக்க முடியாமல்தான் இன்னும் தவித்தாள் சந்தியா…

மனைவியின் வேதனை தாங்க முடியாமல்… அவளை தட்டிக் கொடுத்தபடி… நிரஞ்சனாவை முறைத்தபடி பார்க்க

நிரஞ்சனா எதுவுமே பேசவில்லை…மௌனத்தையே மொழியாக்கி அங்கு சிலையென நின்றிருந்தாள்…

சிவா மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்…

“லுக் ராகவ் சந்தியா… நாங்க உங்களுக்கு விரோதி இல்லை… எங்களுக்கு உங்க மூலம ஒரு ஹெல்ப் அவ்வளவுதான்.. யெஸ்… சந்தியா கேட்டது போல நியாயம் கிடைக்க இருக்கிற அக்யூஸ்ட்டுக்கெல்லாம் சப்ஸ்ட்டியூட் வைப்பீங்களா… உங்க இஷ்டத்துக்கு வளைப்பீங்களானு… நீ கேட்டதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான்… ஆனால் அந்த வெடிகுண்டு விபத்துக்கு பின்னால நீ ஏன் என் கண்ல படனும்… இதே டெல்லி ரயில்வே ஸ்டேஷன்ல தான் உன்னை முதன் முதலா பார்த்தேன்… திமிரா தெனாவெட்டா என்னை எரிக்கிற பார்வை பார்க்கிற அதீனாவை… படபடத்த விழியோடு… அம்மா கையை பிடிச்சுட்டு… துள்ளலா… பார்த்தேன் இந்த சந்தியான்ற ரூபத்தில்… அவ்வளவு ஆச்சரியம்…. எனக்கு” என்ற சிவா

“அந்த குண்டு வெடிப்பால் தன் அக்கா காதம்பரி திருமணத்துக்கு வர முடியாமல்… அதன் பின் சில நாட்கள் கழித்து தான் வந்த போதுதான் சிவாவின் கண்களில் தான் விழுந்திருக்கின்றோம்” என்பதை உணர்ந்தவளாக சந்தியா ராகவ்வைப் பார்க்க… ராகவ்வும் அதை உணர்ந்து கொண்டான்

கிட்டத்தட்ட 3 வருடங்கள்… நிரஞ்சனா வந்து 2 வருடங்கள்… இரண்டு வருடங்களாக தன்னை சுற்றி வலை விரித்திருக்கின்றார்களா…

”அது மட்டும் இல்லை… ஹரி உன்னை லவ் பண்ணியது முதல் இதோ உன் ரகு வரை உனக்கான எங்கள் எல்லைகளை விரித்து வைத்திருந்தோம் சந்தியா… உனக்கு ராகவ்வை பிடிக்காமல் திருமணம் செய்கிறாய்… என்பதால் நிச்சயதார்த்தத்திற்கு வராமல் ராகவ்வை தடுத்தோம்… ஹரியும் உனக்கு பொருத்தமானவன் என்பதால் ஹரியையை உனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தோம்… ராகவ் மொரிஷியஸ் போன இடத்தில் ஒரு டைவெர்ஷன் எங்க பிளான்ல… ராகவ் உன்னை உண்மையா விரும்புகிறார் என்று தெரிந்து… சில விசயங்களை மாற்றிக் கொண்டோம்… அப்போ கூட திருமணத்தின் போது சந்தியாவை நிரஞ்சனா மூலம் இங்கு கொண்டு வர செய்தோம்… அங்கேதான் எங்களுக்கு மிகப் பெரிய அடி.. எஸ் நிரஞ்சனா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்… நிரஞ்சனாவுக்கு இதில் ஆரம்பத்தில் இருந்தே விருப்பமில்ல…”

நிரஞ்சனாவை அவர்களுக்கு புரியவைக்க முயற்சித்தான் சிவா

”ஆனால்… நான்தான் கட்டாயப்படுத்தினேன்… இப்போ கூட அவ குற்ற உணர்விலதான் இருக்கிறாள்” என்றான் சிவா…

அதை அலட்சியமான பாவனையில் கடந்தாள் சந்தியா… நம்பிக்கை துரோகம்… அவளால் ஜீரணிக்க முடியாதது…. அவளின் நட்பை நம்பி எவ்வளவு தூரம் வந்தாள்… அவள் கொடுத்ததென்ன… தன் திருமணத்தின் போது ராகவ்வால் இவள் பட்ட வலிகளை இவள் நட்பை மட்டுமே நம்பி… பகிர்ந்து கொண்டாளே… அத்தனையும் நடிப்பு,கடமை என்று ஒரே நொடியில் தகர்த்து விட்டாளே… கண்கள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை… காதலில் மட்டுமல்ல…. நட்பிலும் துரோகம் ரண வேதனையைத்தான் அளிக்க… தன்னவனின் கைகளை இறுகப் பற்றினாள்… மனதில் கனம் தாங்காமல்….

”உனக்கு உன்னை அறியாமல் ஹிந்தி படிக்க வைக்க ஆள் தேவைப்பட அதற்கு நிரஞ்சனா உதவினாள்… உன்னோட குரலையும் அவளுக்குள் பழகிக் கொண்டாள்… உங்க திருமண நாள் முதல் நாள் இரவு… கிட்டத்தட்ட நீ கடத்தப்பட்டிருக்க வேண்டும்… உனக்கு மயக்க மருந்து கொடுத்து எல்லா விதத்திலயும் தயார் நிலையில் இருந்த போதுதான் நிரஞ்சனா அம்மாவோட உடல் நிலை இடையில் வர… “ என்று நிறுத்த…

சந்தியாவுக்கு அப்போதுதான் புரிந்தது… அன்று ஏன் தனக்கு அந்த அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டது என்று… பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்க மட்டுமே அவளால் முடிந்தது இப்போது…

“நிரஞ்சனாவுக்கு அவங்க அம்மா மட்டுமே… வேறு வழி இல்லை… ப்ளான் ஊத்திகிருச்சு” என்று முடித்தவன்.. ராகவ்வைப் பார்த்து

“ஆத்மார்த்த காதல் தான் ராகவ் உங்களோடது…” அந்த வேளையிலும் சிநேகமாக கண் சிமிட்ட…

ராகவ்விடத்திலோ பதிலுக்கு சிநேக பாவனை மருந்துக்கு கூட இல்லை… என்ன சொன்னாலும் தன் மனைவியை இவர்கள் திட்டத்துக்கு உதவ வைக்க போவதில்லை என தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டவனாக… சிவாவைத் தீர்க்கமாகப் பார்த்தான்… ஆனால் சிவாவின் பார்வையோ அதை விட தெனாவெட்டாக ராகவ்வை நோக்க…

அந்தப் பார்வையிலேயே… ராகவ்வுக்கு தெரிந்து விட்டது சந்தியாவை சம்மதிக்க வைக்க… தன்னைத்தான் கருவியாக உபயோகிக்க போகிறார்கள் என்பது…. வெறுப்பாக சிவாவைப் பார்த்து கசந்த புன்னகையை வீச…

“ஹ்ம்ம்… கரெக்டா கெஸ் பண்ணிட்டீங்க போல ராகவ்… “ என்றவனின் கைகளில் இப்போது ராகவ்வின் தோள்ப்பை…

“மிஸஸ் ராகவரகுராம்… உங்க ரகு உங்க என்கேஜ்மெண்ட் அன்னைக்கு உங்களுக்கு கொடுக்க ஆசைப்பட்ட பொருள் ஒண்ணு என்கிட்ட இருக்கு…. பார்க்கறீங்களா” என்று சிரிக்க….

குப்பென்று வியர்த்தது ராகவ்வுக்கு… அந்த புகைப்படங்கள்.. வீடியோ அதில் இருப்பது தான் இல்லையென்றாலும்… பொய்யாக கூட சந்தியா பார்க்க கூடாது என்று மனம் தவிக்க ஆரம்பித்தது… அப்படி அவள் பார்க்கும் நிலை ஏற்பட்டால்… சத்தியமாக அவளால் தாங்க முடியாது…. என்று தன்னவளுக்காகவும் தனக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தான் ராகவ்

ராகவ்வின் பயத்தை, அவன் கண்களில் கணட கலவரத்தை நொடிகளில் உள்வாங்கிக் கொண்ட சிவா..

“என்ன ராகவ்… கொடுத்துறலாமா… நிச்சயாதார்த்தப் பரிசை… நீங்க கொடுக்க வச்சிருந்ததை கொடுக்கலாமா… இல்லை… சாதனா கொடுக்க நினைத்ததை கொடுக்கலாமா” என்று கேட்டவன்…

யோசிப்பது போல பாவனை செய்தவனாக…

“உங்க வைஃப்க்கு எப்போ வேண்டும்னாலும் உங்க பரிசைக் கொடுக்கலாம்… மூணாம் மனுசங்க கொடுத்ததை கொடுத்திறலாம்.. ப்ரையாரிட்டி வைஸ்” என்று சொன்னவன் முகத்தில் கேலி கிண்டல எல்லாம் இல்லை… தீவிரமாக ராகவ்வை மட்டுமே அவன் கண்கள் நோக்கி இருந்தது…

“இப்போது உன் பதில் என்ன…” என்று ராகவ்வை அடக்கிய… அதிகார பாவனை மட்டுமே சிவாவின் கண்களில்

சந்தியாவுக்கு ஒன்றுமே விளங்காமல் ராகவ்வைப் பார்க்க… மனைவியைப் பிடித்திருந்த ராகவ்வின் கைகள் அவனையுமறியாமல் தளர்ந்திருந்தது இப்போது

கண்மூடி… மூச்சை ஒரு முறை உள்ளிழுத்து வெளியே விட்டவன்… முடிவெடுத்தவனாக…. கண் திறந்தவன் தன்னையே விழி அகற்றாது பார்க்கும் தன் மனைவியை நோக்கி…

“சந்தியா… நீ எப்போதுமே என்னை நம்புவதானே..” படபடத்த இதயத்தோடு தன்னவளைப் பார்த்து கேட்டான் ராகவ்…

“என்னாச்சு ரகு… எதுனாலும் என்கிட்ட சொல்லுங்க ரகு…“ என்று வியர்வை பூத்த அவன் நெற்றியை தன் துப்பட்டாவினால் துடைத்தபடி கேட்டாள் சந்தியா… தன் கணவன் மனதுக்குள் ஏதோ வைத்துக் கொண்டு மருகுவது நன்றாகப் புரிய… அவன் என்ன சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ள முயன்றாள்…

கண்கள் கலங்கின ராகவ்வுக்கு… சந்தியாவை நேருக்கு நேராகக் கூட பார்க்க முடியவில்லை… இதில் அவன் தவறில்லை… அவனுக்கும் அந்த புகைப்படங்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்ற போதிலும்… பொய்யென்ற போதிலும்… அந்த கேவலமான பொய்யை தன் மனைவியிடம் சொல்லி ஆக வேண்டிய நிலைமையில் காலம் அவள் முன் தன்னை நிற்க வைத்து விட்டதே என்று…

வேறு வழியின்றி…

மொரிஷியஸ் சென்ற தினத்தில் இருந்து அடுத்து இவளோடு தவறாக நடந்த முறை வரை சந்தியாவிடம் ராகவ் சொல்ல ஆரம்பிக்க…

சிவா… அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டான்… ஜோடிக் கிளிகள்… பேசி முடித்து வாருங்கள் என்பது போல

அதே போல சந்தியாவிடம் அத்தனையும் சொல்லி முடித்த ராகவ்….

“அன்னைக்கு நான் உன்கிட்ட முறை தவறி நடக்க முயற்சித்ததுக்கு… எங்கே இந்த போட்டோஸ் இல்லை வீடியோஸ் கிடைத்தால் நீ என்னை விட்டுட்டு போயிருவியோன்னு பதட்டத்தில் தான் சந்தியா… என்னை லவ் பண்ணாத… நேசிக்காத உன்கிட்ட… அந்த போட்டோஸ், வீடியோஸ்லாம் கிடைத்தால் நான் என்ன சொல்லி உன்னை என்னை நம்ப வைப்பேன்… அதுனாலதான் வேறு வழி இல்லாமல்… உன்னை உடலளவுல என்கிட்ட சேர்த்துட்டேன்னா.. நீ என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லி” என்றவன் அன்றைய தன் கேவலமான நடவடிக்கையை நினைத்து வெட்கி அதற்கு மேல் பேச முடியாமல்… அவளைப் பார்க்க முடியாமல்… அவள் கைகளில் தன் முகத்தை வைத்து கலங்கியவனை…

அவன் சொல்லி முடிக்கும் ராகவ்வையே…. ராகவ்வின் கண்களையே… பார்த்திருந்தவள்… இப்போது தன் கரங்களில் தலை கவிழ்ந்து கலங்கிய கணவனின் முகத்தை நிமிர்த்தி… அவன் கலைந்த முன் கேசத்தை சரி செய்து… அவன் நெற்றியில் முத்தமிட்டு… அவன் கண்களைத் துடைத்தவள்

“ரகு” என்று அழைக்க… அவளைப் பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பியவனின் முகமும் கண்களும் அப்படி சிவந்திருக்க…

அவன் முகத்தை அவள் புறம் திருப்பிய சந்தியாவின் முகத்தினைப் பார்த்தவனுக்கு வேறொன்றும் அதில் கண்டுபிடிக்க முடியவில்லை… ஆனால் உணர்ச்சிகளை சந்தியா தனக்குள் அடக்குக்கிறாள்… அடக்க முயற்சிக்கின்றாள் என்பது அவளின் அலைபாய்ந்த விழிகள் இவனுக்கு உணர்த்த…

“சந்தியா…” என்றவனின் பதட்டமான குரலில்

“சாதனாவும்… இவங்களோட சேர்ந்தவங்களா” கோபமாக சந்தியா சிவாவிடம் பார்வையை வீசி விட்டு தன்னவனை ஆதுரமாகப் பார்க்க.. இப்போது தன்னவளின் பார்வையில் மனம் சற்று அமைதி கொள்ள…

“ம்ஹ்ஹூம் இல்லை சந்தியா..” மறுப்பாக ராகவ் தலை அசைத்தான் வேதனையோடு…

“அந்த போட்டோஸ்… வீடியோஸ்க்கும் இவங்களுக்கும் தொடர்பு இல்லை… “ அவன் சொன்ன போது அவனையே பார்த்தபடி இருந்தவளுக்கு… முதன் முதலாக தான் ஏன் அவன் வாழ்க்கையில் வந்தோம் என்று கேள்விக்கு பதில் கிடைத்தது…

இப்போது அவன் மனைவி தெளிந்திருந்தாள்… முடிவெடுத்திருந்தாள் தனக்குள்…

அந்த தெளிவில்… தன் முடிவில்… இப்போது தொடுத்தாள் கேள்விகளை தன் கணவனைப் பார்த்து .. நிதானமா நிறுத்தி… தெளிவாக

“சோ… போதை மருந்து கேஸ்ல மாட்டி விட்டதுதான் இவங்க… அதைப் பண்ணும் போது அந்த போட்ட்டோஸ் வீடியோஸ் இவங்க கைல கிடச்சுருக்கு… சரியா” என்றவளின் விழிகள்… கணவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க..

அவனையே பார்த்தபடியேதான் அடுத்தடுத்த தன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்

“சப்போஸ் இவங்க உன்னை ஃபாளோ பண்ணலைனா…. இவங்க அன்னைக்கு உன்னை அந்த கேஸ்ல மாட்ட வைக்கலேன்னா… அந்த போட்டோஸ் அவங்க கைக்கு கிடைக்கலேன்னா என்ன ஆகியிருக்கும் ரகு…”

“அதுதான் கிடைக்கலையேடா… அதை விடு..” எனும் போதே… விடமாட்டேன் என்பது போல சந்தியா தலையை ஆட்டியபடி…

“நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட ரகு… ஆமாம் ரகு… அதுதான் உண்மை… உன்னை நான் நம்பிருக்க மாட்டேன் தான்… நம்ம மேரேஜே நடந்திருக்காது தான்… என் வாழ்க்கைல உன்னைப் பற்றி தெரியுறதுக்கு முன்னால உன்னை பிடிக்கும் தான்… ஆனால் உன்னோட வேல்யூ எனக்கு தெரியாது ரகு… நீ எனக்கு எவ்வளவு பெரிய ப்ரீஷீயஸ்னு… உன்னோட காதலை நான் உணர்ந்த நொடிலதான் ரகு… அப்படிப்பட்ட உன்னை இந்த கேவலமான போட்டோஸ் கண்டிப்பா என்னிடமிருந்து பிரிச்சுருக்கும் தான் ரகு ” என்று கட்டிக் கொண்டு அழுதவளை…

“அப்படிலாம் உன்னை விட்ருவேனா சந்தியா… என்னை நான் உன்கிட்ட நிருபிச்சிருப்பேன் சந்தியா” என்று அவளை இன்னும் இறுக்கமாக அணைக்க..

“ஆனால் அதுக்கு முன்னாடி உன் மானம் அந்த சாதனாவால போயிருக்கும் தானே ரகு… என்னை விடு எத்தனை பேர்கிட்ட நீ உன்னை நிரூபிப்ப…”

என்றவள்… கணவனை விட்டு விலகி எழுந்து… சிவாவின் முன்னால் போய் நின்றிருந்தாள்…

தூண்டிலில் மீன் சிக்கியிருக்க… தன் முன் நின்ற சந்தியாவைப் பார்த்த சிவாவின் முகத்தில் அடுத்தடுத்த திட்டங்களுக்கான நிரல்கள் அணிவகுத்திருந்தது…

/*ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா இணைந்திடாது போவதோ வானம் ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது*/

2,913 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

1 comentario


Saru S
Saru S
27 jun 2020

Sandu voda mudivu enna

Lovely update

Sandiya ragu purithal wooow

Sandiya ragu critical Siva un plan enga vandu nikudu

Waiting to Siva plana

Me gusta
© 2020 by PraveenaNovels
bottom of page