சந்திக்க வருவாயோ?-49-2

அத்தியாயம் 49-2:

/*வெண்ணிலாவை சிறையில் வைப்பதா வானம் என்ன வெளியில் நிற்பதா வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா*/

ஏர்போர்ட்டில் தன்னை அழைக்க வந்த நிரஞ்சனாவைப் பார்த்து… ஓடோடிப் போய்க் கட்டிக் கொண்டாள் சந்தியா….. பத்து நாட்கள்தான் ஆகி இருந்தன இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து… ஏனோ நிரஞ்சனாவை பல வருடங்களாகப் பார்க்காதது போல… சந்தியா அவளது மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ள… அவளது அன்பை பறிமாறிக் கொள்ள… ஆனால் நிரஞ்சனா அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்தாள்…

அதிலும்… புதிதாக கட்டிய மஞ்சள் தாலியுடன்… அந்த பொலிவு மாறாமல்…. புதுப்பெண்ணின் பூரிப்பில் இருந்த சந்தியாவை காண உள்ளம் சந்தோஷத்தில்தான் திளைத்தது… ஆனால்… தான் அவளுக்கு செய்யப்போகும் துரோகம்… இதோ இந்த பூரிப்பை… இந்தப் புன்னகையை அவளிடமிருந்து பறிக்கப் போகிறதே… மனமெங்கும் குற்ற உணர்ச்சியுடன்… அவள் முகத்தைப் பார்க்க முடியாமல்… தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் சந்தியாவையும் அழைத்துக்