சந்திக்க வருவாயோ?-49-1

அத்தியாயம் 49-1:

/* கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது */


வசந்தி சொல்லி முடித்தவற்றை எல்லாம் கேட்டபடி அமைதியாக தனக்குள் அசைபோட்டபடி இருந்த மிருணாவைப் பார்த்தார் வசந்தி…

”நான் அமைதி, கணவனுக்கு கீழ அடங்கி அடிமை வாழ்க்கை வாழ்கிற ஒண்ணுமே தெரியாத அப்பாவி… இதுதான் இப்போ நீங்க பார்க்கிற வசந்தி… அது கிடையாது நான்…

பிடிக்காத மேரேஜ்… என்னை விட எல்லா விதத்திலும் குறைந்த கணவன்… எனக்கு அவரைப் பிடிக்கலை… மேரேஜை நிறுத்துங்கன்னு கெஞ்சிப் பார்த்தேன்… அவர் நிறுத்தலை… மேரேஜும் நடந்துச்சு… ஆனால் அவரை மதிக்கவேயில்லை… எல்லா விதத்திலும் அவரை ஒதுக்கினேன்… அதை மீறி அந்த பிடிக்காத வாழ்க்கையிலும் குழந்தை…. இது எல்லாத்துக்கும் மேல இவரோட இன்னொரு வாழ்க்கை… அதிலும் எனக்கு முன்னமே அவர் வாழ்க்கையில் இன்னொரு பெண்… அதில் குழந்தை… அந்த வாழ்க்கையை இடையூறு இல்லாமல் அனுபவிக்க என்னோட ஒதுக்கம் அவருக்கும் இன்னும் ஒரு வசதியாக போக, அது தெரிந்த போது.. அதில் இன்னும் ஆக்ரோசம்… அதுனால என் அண்ணா மூலமா அந்த பொண்ணை மிரட்டி… இந்த ஊரை விட்டே அனுப்பினேன்… வசந்தி இப்போ பார்க்கிற வசந்தி கிடையாது மிருணா..

ஆனால் தற்கொலை வரை போய்… என் பொண்ணு அதைப் பார்த்து… டிப்ரஷன்ல போனப்போதான்… என்னோட ஆட்டமெல்லாம் நின்னுச்சு.. எனக்காக ஒரு ஜீவன் இந்த உலகத்தில் உண்மையான பாசம் காட்டியதுன்னா… அது என் சந்தியாதான்… என் பொண்ணோட பாசத்துக்கு அடிமையாகி... அவளுக்கு நான் குழந்தையா மாறினப்போ… என் வாழ்க்கைக்கு வேறொரு அர்த்தம் கிடைத்தது… கணவனோட அன்பு கிடைக்கலை… ஆனால் என் வாழ்க்கைக்கு என்னோட பிடித்தமா என் பசங்க ஆனாங்க… அந்த வாழ்க்கைக்கு அப்படியே பழக்கிக் கொண்டேன் நான்… என் பசங்களும் என்னை எல்லா விதத்திலும் என்னைத் தாங்க ஆரம்பித்தனர்… அதிலும் சந்தியா… எந்த ஒரு விசயத்திலும் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்க… அவளுக்காக ஒரு கட்டத்தில் நான் வாழவும் பழகிக் கொண்டேன்… கிட்டத்தட்ட என் சந்தோஷத்துக்காக என் குழந்தைகளை என்னோடு இருக்கும்படி வைத்துக் கொண்டேன்… அவர்களுக்காக நான்… எனக்காக அவர்கள்… என்ற வாழ்க்கை…

ஆனால் என்னோட குழந்தைகள் தான் அவரோட வாரிசா இருக்கனும்னு இந்த உலகம் நினைக்கனும்னு நான் எடுத்த முடிவு தான்… என்னோட பிடிவாதம் தான் தவறு… உன்னை மாதிரி நான் அப்போ முடிவெடுத்திருந்தால்… என் பையன் நல்லா இருந்திருப்பானோ எனக்குத் தெரியலை… இன்னும் அந்த சின்னப் பொண்ணு கண்ணுல தெரிந்த வேதனை என் கண்ல இருக்கு மிருணா… என் வாழ்க்கை அசிங்கமாக எல்லோருக்கும் தெரிஞ்சுறக் கூடாதுனு… அந்த பச்ச மண்ணு வாழ்க்கைல மண்ணள்ளி போட்டுட்டேனோ தெரியலை… சந்தியா மாதிரிதான் அந்தப் பொண்ணும்னு ஏன் நினைக்கத் தோணலை…” என்று கண்களைத் துடைக்க…

ஆனால் சந்தியா அப்பாக்கு சந்தியாவைப் பிடிக்காது… காரணம் அவர் என்ன சொன்னாலும் எதிர்த்துதான் பேசுவா… அவர் சொன்னதுக்கு மாறாகத்தான் செய்வாள்… அதுனால என்னவோ சந்தோஷை ஏற்றுக் கொண்ட அவரால் சந்தியாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அவருக்கு சிந்தியான்னா அவ்வளவு பிடித்தம்… அவ அவரை விட்டுப் போனதை அவரால ஏத்துக்க முடியவில்லை… அவ அவரை விட்டு போன பின்னால… என் பொண்ணுகிட்ட இருந்து சிந்தியாவோட பாசத்தை தேடினார்தான்… ஆனால் சந்தியா அவர் பாசத்தை புரிஞ்சுக்க ட்ரை பண்ணாம அவரை ஒதுக்கத்தான் செய்தாள்… ஆக மொத்தம் என்னை மட்டுமே நம்புகிற… எனக்காகவே வாழுகிற… எனக்காக மட்டுமே கவலைப்படுகிற சந்தியா எனக்கு கிடைத்தாள்.. சந்தியாக்கு நான் அன்னையா பாசத்தைக் காட்டினேனோ என்னவோ… சந்தியா என் மேல உயிரா இருந்தா… அவளோட ஒவ்வொரு வார்த்தையிலும்… கவலையிலும்… சந்தோஷத்திலும் நான் இருந்தது… அது மட்டுமே எனக்கு இந்த வாழ்க்கையில் மிச்சம்…

என்ற வசந்தியை… மிருணாளினி.. இப்போது சந்தேகமாகப் பார்த்தாள்

’ராகவ் சந்தியா உறவை வசந்தியால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா’… என்று தோன்ற… அதைக் கேட்டும் விட

“என் பொண்ணு வாழ்க்கைலலாம் நான் குறுக்க நிற்க மாட்டேன்… என் பொண்ணு நல்லா இருக்கணும்… ” என்றவர்…

“ஒருவேளை… நான் அவங்க ரெண்டு பேருக்கு இடையில அதிகமா வருகிற மாதிரி இருந்தா… கண்டிப்பா சந்தியா கிட்ட இருந்து என்னை விலக்கிக்கத்தான் நினைப்பேன்… எனக்கு என் பொண்ணோட சந்தோஷம் மட்டுமே முக்கியம்”

என்று முடித்த போது… வசந்திக்கு அழுகை வந்து விட்டது…

“ப்ச்ச் அத்தை அழாதீங்க… “ என்றவளிடம்

“என் பையன்… அந்த மனுசன் மாதிரி இல்லை மிருணா… உனக்கு சந்தோஷை பிடிக்கலைனா கூட நான் இதைச் சொல்லி இருந்திருக்க மாட்டேன் மிருணா… உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு… அவனும் நீ இல்லாம வாழ மாட்டான்… அவன புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மிருணா… ”

”நான் பண்ணின தவறைத்தான் நீ பண்ண நினைக்கிற… என்ன ரிவர்ஸா… பிடிக்காத ஒருத்தனை என் வாழ்க்கைல நீட்டிக்க விரும்பின என்னோட பிடிவாதம்.. யாருக்குமே நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் மிச்சமாயிற்று…”

“நீ உனக்குப் பிடித்த ஒருவனை வாழ்க்கையிலிருந்து விலக்க நினைக்கிற பிடிவாதம்…”

”ஒரு கட்டத்தில் ஓய்ந்து திரும்பிப் பார்க்கும் போது… நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம்னு தோணும்… அவரோட அன்பைப் பெறனும்னு நான் நினைக்காதப்போ… அந்த பிடிக்காத வாழ்க்கையை வாழ ஏன் அவ்வளவு போராடினேன்… ஏன் சந்தியா அப்பாவோட சந்தோசத்தை கெடுத்தேன்னு இப்போ நினைக்கிறேன்… அவரை விட்டு விலகி இருக்கலாமோனு தோணுது”

”சந்தியாவுக்கு இந்த மேரேஜ்ல பெரிதா ஈடுபாடு இல்லை ஏன் உன் அண்ணாக்கு கூடத்தான் பெருசா ஈடுபாடு இல்லை… என் பொண்ணுகிட்ட ரெண்டு மூணு தடவை மிரட்டி இருக்கிறார் இந்த மேரேஜை நிறுத்தச் சொல்லி… ”

மிருணாளினிக்கு இந்த தகவல் புதிதாக இருக்க… வியப்பில் வசந்தியைப் பார்க்க

”ஆனால் திருமணத்திற்கு பின்னால… அவங்க வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிஞ்சுகிட்டாங்க… எனக்குள்ள அந்த ஆச்சரியம் இன்னும் இருக்கு… அது பெரிய ஆச்சரியம் இல்லை… புரிதல், பரஸ்பர விட்டுக் கொடுத்தல்னு சந்தியா என்கிட்ட சொன்னப்போ புரிஞ்சுக்கிட்டேன்… அவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற… அந்த புரிதல் எனக்கு இல்லைனு நினைக்கும் போது எனக்கு என்னை நினைத்து வருத்தமா இருக்கு… ஏன் உனக்கும் இல்லைனுதான் தோணுது…

என்றவர்…

“சந்தியாவோட முகத்தில் இருக்கிற ஒவ்வொரு புன்னகைக்கும் காரணம் … ரகு மட்டுமே காரணம்… அவ முகத்தில இருக்கிற அந்த பூரிப்பு அது போதும் என்னோட வாழ்க்கைகு…” என்று மகளின் நினைவில் சிலாகித்தவர்… உடனடியாக

“பெத்த அம்மா கண்ணுதான் புள்ளைக்கு பெரிய கண்ணுனு சொல்வாங்க” என்று உடனடியாக தன் மகளுக்கு தான் வைத்த கண்ணைத் தானே திருஷ்டி கழித்தவர்…

“ப்ச்ச் அதெல்லாம் விடு மிருணா… நேசிக்காத ஜீவன் கூட நான் குடும்பம் நடத்தும் போது… உன்னையே உயிரா நினைக்கிற என் மகன் சந்தோஷ் கூட வாழ முயற்சி செய்ய நினைத்தால் என்ன மிருணா… ” என்று முடிவாகக் கேட்க

தன்னைப் பற்றிய பேச்சை தவிர்த்த மிருணாளினி

”அவங்கள தேட ட்ரை பண்ணலையா அத்தை… ” என்று தன் வாழ்க்கைப் பற்றி விட்டு விட்டு… வசந்தியின் கடந்த காலத்திற்கு போக…

“இல்லை மிருணா… சந்தியா கொஞ்சம் பெரிய பொண்ணான போதுதான்… எனக்கு அவங்க ஞாபகமே வந்தது… ஏன்னா சந்தியா வளர்ந்த பின்னால அப்படியே சிந்தியா சாயல்ல இருந்தாள்… இப்போ கூட சந்தியாவைப் பார்க்கும் போதெல்லாம்… சிந்தியாவும் இப்படித்தான் இருப்பாளா இல்லை வளர்ந்த பின்னால் வேறு மாதிரி சாயல் வந்திருக்குமோன்னு யோசிப்பேன்… ஆனால் என் எண்ணமெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்… எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கனும்… சந்தியாவுக்கு ராகவ் போல மாப்பிள்ளை கிடைத்த மாதிரி அவளும் குழந்தை குட்டியா குடும்பமா சந்தோசமா இருக்கனும்… இதுதான் என்னோட அனுதின வேண்டல் மிருணா… நான் அந்த சின்னப் பொண்ணுக்கு பண்ணின துரோகம் என் பொண்ணத் தாக்கிருமோன்னு… நித்தம் நித்தம் செத்துட்டு இருந்தேன் மிருணா… சந்தியாவை என்னை விட்டு எங்கயும் விடாமல் என் கைக்குள்ளேயே வச்சுருந்தேன் மிருணா… 2 மணி நேரம் என் பொண்ணு கூட நான் பேசாமல் இருக்க மாட்டேன் மிருணா… நான் பண்ணின பாவம் என் பொண்ணத் தாக்கிருமோன்னு அவளை கண் கொத்தி பாம்பா பாதுகாத்துட்டு இருந்தேன்… அவ மேரேஜ் ஆன பின்னாலதான் அந்த கவலை எல்லாம் போய் நிம்மதியா இருந்தேன்… ஆனால் சந்தோஷ் வாழ்க்கைல விதி விளையாடிருச்சு… ”

என்று முடிக்க

“அந்த பொண்ணு நல்லா இருக்கனும்னுன்ற வேண்டுதல் கூட… உங்க பொண்ணு நல்லா இருக்கனும்தானா அத்தை… உங்க போரட்டத்தில அந்த சின்னப் பொண்ணு வாழ்க்கையைப் பற்றி ஏன் அத்தை நினைக்கலை… “

அமைதியாக இருந்த வசந்தியிடம்