top of page

சந்திக்க வருவாயோ?-46-3

அத்தியாயம் 46-3 :

/*நதியினில் ஒரு இலை விழுகின்றதே...


அலைகளில் மிதந்தது தவழ்கிறதே...


கரை சேருமா....

உன் கை சேருமா...

எதிர்காலமே...*/


அடுத்த நாள்… அதிகாலை நான்கு மணி


சென்னை விமான நிலையம் வழக்கமான அதன் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இயங்கிக் கொண்டிருக்க…. சந்தியாவின் குடும்பம் சந்தியாவை வழியனுப்புவதற்காக வந்திருந்தனர்… கணேசனும் அதில் அடக்கம்…

சந்தோஷும் வசந்தியும் சந்தியாவுக்கு ஆயிரம் பத்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்…. அதிலும் அவள் காதம்பரி வீட்டில் தங்கவில்லை என்பதால் இன்னும் கூடுதல் பத்திரங்கள்… கூடுதல் அறிவுரைகள்….

இந்த அறிவுரைகள் எல்லாம் சந்தியாவின் காதுகளுக்கு போய்ச்சேர்ந்தனவா என்றால் அதுதான் இல்லை… சந்தியாவின் எண்ணங்களையும் நினைவுகளையும் தேடல்களையும் என்றோ அவள் கணவன் ராகவ் தான் பறித்துக் கொண்டிருந்தானே…

ஒரு கையில் டிக்கெட்டையும்… இன்னொரு கையில் ஹேண்ட்பாக்கையும் வைத்தபடி…. நுழைவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்... ஒரு வித பதட்டத்தோடேயே….


அலாரத்திற்கு பதிலாக… அவளை எழுப்பி விட்டதே… ராகவ்தான்… அவளைக் அப்போதே கிளம்பச் சொன்னவன் இன்னும் வரவில்லையே… என்று நொடிக்கொரு தரம் பார்வை கணவனை எதிர்பார்த்து… நுழைவாயிலுக்கே கண்கள் போக

“இன்னும் ஏன் வரலை… போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கிறார்…. இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு…. ப்ச்ச்… கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பார்த்தா….. டேய் ரகு…. அநியாயத்துக்கு இன்னைக்கு என்னை பழி வாங்குறடா….” என்று பாதி திட்டலும் கொஞ்சம் சிணுங்கலுமாக கணவனுடன் வாக்குவாதம் நிகழ்த்திக் கொண்டிருக்க….

சந்தோஷ் தான் இவளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தான்….

“அம்மா இவளத்தான் நாம… கையில விழுந்து காலில விழுந்து ரகுவை மேரேஜ் பண்ணச் சொன்னோமா…. ”

முறைத்தாள்… தன் அண்ணனை…

“அடங்குறியா… உன்னாலதான் எல்லாம்… “ என்று சலிப்பாகச் சொல்ல…

”எஸ் என்னாலதான் எல்லாம்.. என் சகோதரியே” என்று இவனும் அவளை வார…

“நான் சொன்னது மேரேஜ் பத்தி இல்லை…. இப்போ டெல்லி போறதப் பற்றி சொன்னேன்…”

சந்தோஷ் அதை மறுத்து ஏதோ கிண்டலாகப் பேசப் போக… அப்போது அவனது பார்வையில் சந்தோஷமும்… மின்னலும்… காணாத ஒன்றைக் கண்ட வியப்பும்… மேலிட…

இவன் ஏன் இந்தப் பார்வை பார்க்கிறான்…. நினைத்தபடியே பின்னால் திரும்பிப் பார்த்தவளுக்கு…. மிகப்பெரிய சந்தோஷ அதிர்வை அவளவன் வழக்கம் போலே கொடுத்துக் கொண்டிருந்தான்….

ஆம்!! சுகுமார் யசோதா… இவர்கள் மட்டுமல்ல மிருணாளினியும் இவளை நோக்கி வந்து கொண்டிருக்க….

ஆனந்த அதிர்ச்சியில் சந்தியாவுக்கு கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை…. அவர்களை பார்த்தபடியே அப்படியே நின்றிருந்தாள் கால்கள் வேரோடி…

இதற்கெல்லாம் காரணமானவனோ… இன்னும் இவளுக்கு தரிசனம் தராமல் இருக்க…. அவனை அப்போதே பார்க்க வேண்டும் போல இருந்தது சந்தியாவுக்கு….

“ஹேய் தியாம்மா” என்று அழைத்தபடியே சுகுமாரே அருகில் வந்து விட… சட்டென்று வேகமாக அவர்கள் அருகில் சென்றவளை… அவர்களை அணைத்துக் கொள்ள…

“ஏன் மாமா… நீங்க கூட என்கூட பேசலைல…. ரகு பேசாமல் இருந்திருந்தால் கூட நான் இவ்வளவு ஃபீல் பண்ணியிருந்திருக்க மாட்டேன்…. நீங்க பேசாமல் இருந்ததுதான் எனக்கு அவ்வளவு கஷ்டம் மாமா…. எங்க மேல தப்பு இருக்கப் போய்த்தானே பேசலை… இப்போ கூட உங்கள எதிர்பார்க்கலை நான்… ரகு மட்டும் தான் வருவார்னு நினைத்தேன்… “ தேம்பலாகச் சொன்னவளை…

யசோதாவும் அணைத்து தேற்ற…

“அத்தை உங்க பையன்கிட்ட சொல்லி.. என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க…” சலுகையாகச் சொன்ன தன் மகளை வசந்தி சிரித்தபடி பார்க்க…. மிருணாளினியும் புன்சிரிப்பாக நின்றாள்… வசந்தியைப் பார்த்து மட்டும் புன்னகைத்தவள்… கணேசனிடம் மரியாதைப் பார்வை மட்டுமே பார்த்து வைத்தாள்… ஆனால் மறந்தும் சந்தோஷ் என்ற ஒருவன் அங்கிருப்பதை ஏறெடுத்துகூட பார்க்கவில்லை…

பெரிதாக சலசலப்புகள் இல்லாமல் சுகுமாரன் குடும்பத்தார் சந்தியாவோடு பேசிக் கொண்டிருக்க… சந்தோஷ் மட்டும் தள்ளிச் சென்று விட்டான்…. மிருணாளினி தனித்து நிற்காமல் இன்னும் கொஞ்சம் அவர்களோடு இணக்கமாக பேச வேண்டும் என்று நினைத்து…

இப்போது அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மிருணாளினியின்…. கண்களில் ஏக்கம் வர… இதயம் அவள் அறிவைத் தனக்குக் கீழ் அனுப்பிக்கொண்டிருந்தது... இதயம் பேசுவதை மிருணாளினி கேட்பாளா…. பொறுத்திருந்து பார்ப்போம்…

“அத்தை உங்க பையன என் பார்வைல அடக்கிக் காட்றேன்னு சொன்னேன்…. அதுக்கு பல காலம் ஆகும் போல…. “ என்று அன்று தன் மாமியாரிடம் விட்ட சவாலை சிரித்தபடியே சந்தியா சொல்ல…

மிருணாளினி பளிச்சென்று சொன்னாள்…

“சந்தியா.. நீ பார்வையில அடக்கிறதுக்கு முன்னால… உன் ஹார்ட்ல என்ன சொல்லுதுனு எங்க அண்ணாக்கு தெரிஞ்சுருது… சோ அதை செய்ய ஆரம்பிச்சிட்டாரு… அதுக்கப்புறம் நீ எதுக்கு பார்வைய காட்டனும்…” ராகவ்வின் நிலையைத் துல்லியமாக கணித்து சொல்ல.. தன் கணவனின் தங்கையிடம் வெட்கப் புன்னகை காட்டியவளின் கண்கள் பனித்தன….

இந்த மாதிரி ஒரு குடும்பத்திற்கு… தன் குடும்பம் ஏற்ற ஒன்றா…. மனம் குழம்பியபோதும்…. அவளுக்கு கிடைத்த பெரிய வரமாக ராகவ்வின் குடும்பம் காட்சி அளிக்க… அதில் இனி தானும் ஒரு அங்கம் நினைக்கும் போதே தித்தித்தது…. ஏனோ அவளையுமறியாமல் தன் தாய் வசந்தியிடம் சரண் புகுந்தாள் சந்தியா…

தன் மகளின் சந்தோஷ தருணங்களில் நெக்குருகிப் போனாவள் அந்த தாய்தான்… தான் இல்லாமல் போனால்….. இவளின் நிலை என்ன ஆகும் என்று தானே அன்று மரணத்தின் நுழைவாயிலுக்கு போய் திரும்பி வந்தாள்…. மகளைக் கட்டிக் காத்து… சேருமிடம் சேர்த்தாயிற்று…. மகிழ்ச்சியில் மனம் கனமாகியது வசந்திக்கு… பாரத்தை இறக்கி வைத்தால் ஏன் மனம் கனக்கின்றது… வசந்தி தன் மகளை உச்சி முகர்ந்தாள்…. தனக்கு கிடைக்காத மணவாழ்க்கையின் சந்தோசம் மகளுக்கு மொத்தமாக கிடைத்திருக்கிறது என்றெண்ணி மனம் நிறைவாகி இருந்தது வசந்திக்கு…

இங்கு நடந்து கொண்டிருந்த உணர்வு போராட்டங்களை எல்லாம் தெரியாதவனாக… வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்… ராகவ்…

சந்தியா கிளம்ப…. இன்னும் பத்து நிமிடங்களே இருக்க... அவசர அவசரமாக வந்தவனை தூரத்தில் இருந்தே அவளின் இல்லாள் பார்த்து விட… சுகுமார் யசோதாவைப் பார்த்து வேரோடி நின்றது போல் எல்லாம் நிற்க வில்லை… அவனிடம் வேகமாக ஓடினாள்… தன் சந்தோஷம் முழுவதையும் அவனிடம் கொட்ட… நடந்தால் கூட நொடிகளை வீணாக்கி விடுவாமோ என்று அவனை நோக்கி ஓட…..

தனது குடும்பத்தைப் பார்த்தால் சந்தியா நிச்சயம் உணர்வுகளின் உச்சக் கட்டத்தில் இருப்பாள் என்றே எதிர்பார்த்திருந்தான் ராகவ்… சற்று தாமதமாகத் தான் சென்றால்… அவர்கள் பேசுவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தவன்… காரைப் பார்க் செய்து வருகிறேன் என்று காரணம் சொல்லி அவர்களை முன்னே அனுப்பினான்… இவன் நேரம்… அங்கு தாமதமாகி விட…. சற்று தாமதித்து என்பது போய்… இருபது நிமிடங்கள் தாமதமாகி விட்டது…

ஓடி வந்து தன் முன் வந்து நின்றவளிடம்… வாய் திறந்து ஏதோ பேசப் போக…

“நீ பேசாதடா… யூ இடியட்… என்னால முடியலைடா… நீ கொடுக்கிற சந்தோச அதிர்ச்சியில… ஓவ்வொரு தடவையும் என்னால சந்தோச கடல்ல மூழ்க முடியலைடா… மூச்சு முட்டுதுடா..… .” வார்த்தைகள் கோர்வைகளாவே வர வில்லை…. கண்களில் நீர் ஒரு புறம் வழிய….

“ஹேய் சகி…. இது என்ன… “ என்று அவள் கண்களை துடைக்க நீட்டிய கைகளைத் தட்டி விட்டவள்…

“டோண்ட் டச் மீ.. “ என்றபடியே இப்போது தட்டி விட்ட அவன் கைகளை தன் கைகளோடு இணைக்க… அப்படி ஒரு அழுத்தம் அந்த இணைந்திருந்த கைகளில்…

கட்டி அணைக்க வில்லை… முத்தப் பறிமாற்றமும் இல்லை… ஆனால் அவனோடு இறுக்கிப்பிடித்திருந்த கைகளில் தன்னை…. தன் உணர்வுகளை எல்லாம் அவனுக்குள் புதைக்க ஆரம்பித்திருக்க….

“சகி..” என்று இவனும் அழுத்தம் கொடுத்தான்.... இந்த அளவு… சந்தியா உணர்ச்சி வசப்படுவாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை….

“ஹேய் இங்க பாருடி…. எதுக்கு இவ்ளோ சீன்” சீண்டினான்… தன் மனதை மறைத்து…

”உன்கிட்ட நான் மொத்தமா விழுந்தப்போ கூட நீ இவ்வளவு எமோசனல் ஆகலையே…. இப்போ உன் மாமனார்… மாமியாரலாம் பார்த்த உடனே இவ்ளோ எமோசனல் காட்டுற… கடுப்பாகுதுடி எனக்கு” சொன்னவனைப் பார்த்து சிரித்தாள்… அழுகையோடே….

“நீ வேண்டாம் போ….” என்று சொல்ல…

”வாட்….”

“நீ வேண்டாம் போன்னு சொன்னேன்… எனக்கு அவங்க போதும்… உனக்கு நான் வேணும்ணா…. என் மாமாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கூட்டிட்டுப் போ…. கணேசனோட பொண்ணு... சாதரணமானவ… சுகுமாரோட மருமகள அவ்ளோ ஈசியாலாம் கிடைக்க மாட்டா “ இவளும் சீண்டினாள்….

ராகவ் சிரித்தான் ஆனால் சத்தமாக…

“மன்னிப்பா அது எதுக்குடி… இத்தனை நாள் உங்க மாமனார் மாமியார்கிட்ட இருந்து பிரிச்சதுக்கா…. அடிப்பாவி… எனக்குனு எங்க இருந்து வர்றீங்க… அன்னைக்கு அவர் என்னடான்னா…. நீ மருமகளா வர்றதுக்கு நான் தேவையில்லைனு சொன்னாரு…. இன்னைக்கு நீ என்னடான்ன…. அவர் மருமகள் நான்… நீ தேவையில்லைனு சொல்ற… உங்க ரெண்டு பேருக்கும்…. அவ்ளோ இளிச்ச வாயனா நான்” பற்றியிருந்த கரத்தை இழுத்து தன்புறம் கொண்டு வந்தவன்… அவளைத் தோளோடு அணைத்தபடி நடக்க ஆரம்பிக்க…

“ஐ லவ் யூடா… ரகு….”


அப்படியே நின்று விட்டான் ராகவ்… தன் மனைவியின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில்


“இங்க ஒண்ணும் பண்ண முடியாதுனு சொல்றியாடி…” அப்பாவியாகக் கேட்க…

“ஒண்ணும் பண்ண முடியலைனுதான் ஐ லவ் யூவே சொல்றேண்டா” சோகமாக முகத்தை வைத்து தீவிரமாகச் சொல்ல….

“மரியாதை மரியாதை…”

“லவ்யூங்க ரகு…. ஐ லவ்வோ லவ் யூங்க ராகவ்…. உங்களை மட்டும் லவ்வோ லவ்யூங்க ராம்… உங்க ஒவ்வொரு ஆர் க்கும் இந்த சந்தியா வோட லவ் போதுமா ட்ரிப்பிள் ஆர்… . ” என்றவளிடம்…

”சொல்லு சொல்லு… நான் இப்போ சொல்ல மாட்டேன்…. இனி என்னைக்குத் தனியா மாட்டுறியோ…. அன்னைக்கு… என் லவ்வப் பாரு….” சந்தோஷம்… சந்தோஷம் மட்டுமே… அங்கு விரவியிருந்தது….

தூரத்தில் இருந்தே ராகவ்-சந்தியாவை பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் பெற்றவர்களுக்கோ….


எப்படியோ இருந்த இவர்களே… இப்படி மாறி இருக்கும் போது… காதலித்த சந்தோஷ் மிருணாளினி இருவரின் இணைவும் இனி வெகு தூரமில்லை… என்றுதான் தோன்றியது… அந்த எண்ணமே இன்றைய சந்தோசத்தை இன்னும் அதிகரித்தாற் போலத் தோன்ற…. மகிழ்ச்சி பொங்கிய தருணங்களாக மாறி இருக்க…

அடுத்த சில நிமிடங்களில்… சந்தியாவுக்கும் அவளது விமானத்துக்கான அறிவிப்பு வர…

சந்தியா அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப…. அதுவரை ரகு-சந்தியா இருவருக்கும் பெரிதாக எதுவும் தோன்றவில்லை… இவன் வந்த போது பிடித்த கை தான் இதுவரை விடவில்லை இவனும்.. அவளும் எடுக்க விடவில்லை….

“ரகு பை” என்றவளின் குரலில்… திடிரென்று எங்கிருந்து அவ்வளவு கனம் குடியேறியதோ தெரியவில்லை… இவனுக்கோ உயிர் பிரிவது போல திடிரென்று வலி… இங்கிருக்கும் டெல்லி தானே செல்கின்றாள்… ஏன் இத்தனை வலி…. ஏனென்று தெரியாமல்…. என்ன செய்வதென்றும் தெரியாமல்… கைகளை பிரிப்பதற்கு பதில்.. அவளது கைகளை இன்னும் அழுத்தி தனது கைக்குள் பத்திரப்படுத்திக் கொள்ள…. சந்தியாதான் தன்னைச் சமாளித்தவளாய்… கைகளை அவனிடமிருந்து உருவிக் கொள்ள… ராகவ்வும் சமாளித்தவனாக

“டேக் கேர் சகி…. 1 வீக்ல நானும் அங்க வந்திருவேன்…. என்னால உன்னை விட்டு இருக்க முடியாது சந்தியா….” என்று அடுத்த ஆனந்த அதிர்ச்சியை மின்னாமல் முழங்காமல் அவளுக்கு கூற….

“இது உனக்கு சர்ப்ரைஸ்னா… எனக்கு தேவை… 2 மன்ந்த்ஸ் உன்னைப் பார்க்காம உன்னோட போன்ல மட்டும் பேசி… சான்சே இல்லை… முடியாது.. மே பி நீ சொல்ற மாதிரி மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் தாண்டினா…. நான் நார்மல் ஆகிருவேனா சகி” சீண்ட வில்லை அவன்… உண்மையிலயே தீவிர பாவத்துடன் பேச….


பதிலுக்கு இவள் சீண்டவெல்லாம்வில்லை….


“ஹ்ம்ம்… நானும் ரகு… உனக்காக காத்துட்டு இருக்கேன்…. “ என்று மட்டும் சொல்லி நகர்ந்தவள்.. சில அடிகள் தூரம் மட்டுமே போயிருக்க… திரும்பி ராகவ்வைப் பார்க்க… அவனும் இவளையே பார்த்துக் கொண்டிருக்க…


கொஞ்சம் சத்தமாக…


”அப்புறம்…. ”

“மீசை… ஞாபகம் இருக்குதானே… எனக்காக… உன் சகி பேபிக்காக…” என்று சொல்ல… இவன் முகம் அஷ்ட கோணலாக மாற…. அதைப் பார்த்தபடியே சந்தோஷமாக… அவனை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே செக்கின் நோக்கிப் போய்க் கொண்டிருக்க….


இருவரின் கடினமான காலங்களும்… அவர்களுக்காக அவர்களை நோக்கி காத்துக் கொண்டிருப்பது தெரியாமல்…. அதை நோக்கி சந்தியா செல்ல… அவளது பதியும் அவளோடு இணைந்தான்…/*எனக்காகவே பிறந்தான் இவன்

எனைக் காக்கவே வருவான் இவன்

என் பெண்மையை வென்றான் இவன் ...

அன்பானவன்......


என் கோடையில் மழையானவன்...

என் வாடையில் வெயிலானவன்...

கண் ஜாடையில்

என் தேவையை அறிவான் இவன்....*/2,994 views7 comments

Recent Posts

See All

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

© 2020 by PraveenaNovels
bottom of page