top of page

சந்திக்க வருவாயோ?-46

அத்தியாயம் 46 :


/* யாரோ இவன், யாரோ இவன்...

என் பூக்களின் வேரோ இவன்...

என் பெண்மையை வென்றான் இவன் ...

அன்பானவன்......

யாரோ இவன், யாரோ இவன்...

என் பூக்களின் வேரோ இவன்...

என் பெண்மையை வென்றான் இவன் ...

அன்பானவன்......*/


நள்ளிரவில் அப்படி ஒரு சீற்றத்துடன் அவன் கைகளில் கார் வேகமெடுத்து ஒடிக் கொண்டிருந்தது…. அந்த வேகமே ராகவ்வின் கோபத்தை சந்தியாவுக்கு பறைசாற்ற.. அவன் கண்களில் தெறிந்த கோபத்தில் அவனைப் பார்க்கவே பயந்தவளுக்கு பேச மட்டும் தைரியம் வருமா என்ன… என்ன சொல்லி இவனை சமாதானப்படுத்துவது…. எப்படி யோசித்தும் அதற்கான வழி ஒன்றுமே புலப்படவில்லை…


இருந்தும்… ஏதாவது பேசி சமாதானப்படுத்தலாம்… என்று வாய் திறக்க ஆரம்பிக்க... அவள் நாக்கு அவள் அண்ணத்தை தீண்டி வார்த்தைகளைக் கோர்க்குமுன்னமே….


“சந்தியா வீடு போகிற வரை… என்னைச் சமாதானப்படுத்தனும்… அப்டி இப்டினு… ஏதாவது பேச ஆரம்பிச்ச கடுப்பாகிருவேன்… வாயைத் திறக்கவே கூடாது” என்று அவன் பேசி… பேச ஆரம்பித்த இவளது வாயையும் அடைத்து விட்டானே…. பிறகு எங்கிருந்து பேசுவது… அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்தபடி வந்தவளுக்கு… வெளியில் இருந்த இருளைக் காட்டிலும்… இவனது இறுகிய முகமே பயத்தைக் கொடுத்தது எனலாம்… இவள் இப்படி இருக்க…இவனுக்கோ… ஏன் இப்படி கோபப்படுகிறோம் என்றே தெரியவில்லை… அவளிடம் சமாதானமாக… இல்லை ஆறுதலாக பேசலாம் தான்… ஆனால் ஏன் பேச முடியவில்லை என்றும் தெரியவில்லை…


அன்று உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொண்டது தவறு என்று தோன்றியதினால்தானே… இந்த பத்து நாட்களில்… மிகக் கவனமாகத் அவளிடம் நடந்து கொண்டான்… அவள் தானே… சந்தியாவே தான் அவனிடம் அன்று அழுதாள்… இன்று காலையில் இருந்து… அவள்தான் அவனிடம் அவனை பல விதங்களில் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்… வேண்டாம் என்று தானே தள்ளி இருந்தான்…


இப்போது ’பொண்டாட்டியாம்… பொண்ணாம்…’


“ச்சேய்” என்றான் அவனையும் மீறி… கைகள் ஸ்டியரிங்கை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டது…அவளோடு முழுவதுமாக ஒன்றியிருந்தவனை திடீரென்று… விலகி எழ வைத்த அவள் கண்ணீர்… மனது அவளைப் புரிந்து கொண்டது… ஆனால் தேகம்… எப்படியே மீண்டு விட்டான் தான்…. மீட்டுக் கொண்டான் தான்…


யோசிக்க ஆரம்பித்தான் சாலையில் கவனம் வைத்தபடியே…


இப்போது நிதானமாக யோசித்தபடியே… மனைவியின் மனநிலையை ஆராய ஆரம்பித்தான்…


முதலில் அவள் தானே ஆரம்பித்து வைத்தாள்… அவளால் தானே இங்கு வந்தது என்று தவறாக யோசிக்க ஆரம்பித்த மனது… இன்னும் யோசிக்க யோசிக்க… தவறு எங்கிருக்கிறது என்று சரியாக உணர ஆரம்பித்து இருந்தது….


இவன் தான்… இவன் மட்டுமே காரணம்… ஆரம்பத்தில் இருந்தே இவன் சொதப்பி வைத்து விட்டு… இப்போது சந்தியாவை எப்படி குற்றம் சொல்ல மனம் வந்தது இவனுக்கு…


ஆம்… முதல் கோணல் முற்றிலும் கோணலாக இவனது திருமண வாழ்க்கை ஆரம்பித்ததை உணர்ந்த போது… மனம் திடுக்கிட்டது…


எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை… என் தங்கைக்காக எவளையும் திருமணம் செய்வேன்…. என திருமணத்திற்கு சம்மதம் சொல்லிய அவன் கோணல்களை ஆரம்பித்த புள்ளியில் மனம் அவனைக் கொண்டு வந்து நிறுத்தியது…. இப்போது நன்றாகவே புரிந்தது…


எத்தனை எதிர்பார்ப்போடு அலுவலகத்துக்கு வந்திருப்பாள்… நான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை நினைத்து… ஆனால் நான் என்ன செய்தேன்… வேண்டுமென்றே… அவள் வந்ததைப் பார்த்தும் வன்மத்துடன் இரண்டு மணி நேரம் அவளைக் காத்திருக்க வைத்தது.. அவள் கண் முன்னாலேயே… இரண்டு பெண்களுடன் அரட்டை அடித்தது… உண்மையைச் சொல்லப் போனால் அன்று சாதனா கொடுத்த முத்தத்தை அவன் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்… வேண்டுமென்றே சந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றேதான் அவளை அனுமதித்தான்… அடுத்து அவளை அறையில் வைத்து… அவன் பேசிய பேச்சென்ன… அதிலும்… நீ எனக்கு அநாவசியம்தான்… ஆனால் ஹார்மோன்கள் வேலை செய்தால் மனைவியாக அவசியம் எனச் சொல்லி அவளைக் கேவலப்படுத்தியது… இன்னும் திருமணத்திற்கு முன் நடந்த எந்த ஒரு நிகழ்விலும் அவளை சந்தோஷமாக ஒன்ற விடாமல் மன ரீதியாக அவளைத் துன்புறுத்தியது என… இது எல்லாம் போக காதல் வந்த பின்னால்… இவனுக்கு வந்த பிரச்சனைகளின் காரணமாக… அவளிடம் முறை தவறி நடக்க முயற்சித்தது…


மனம் நிறைய காதல் இருந்தும் திருமண நாளுக்கு முந்தைய இரவில் கூட அவளது மன அழுத்தங்களை… அவளது பிரச்சனைகளை யோசிக்க மறந்து விட்டோமே… இது எல்லாவற்றையும் விட… அவன் செய்த பெரிய முட்டாள் தனம்… காதலிக்கிறேன் என்று இரவு முழுக்க… தன் அன்பால் அக்கறையால் அவளை, அவளது உணர்வுகளை தன் பால் மொத்தமாக கவர்ந்து கொண்டவன்… அடுத்த நாளே… அவளைப் பற்றி… அவளின் எண்ணங்கள் பற்றி நினைக்காமல் அவளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பியது… இது எல்லாவற்றிருக்கும் முத்தாய்ப்பாக… உணர்ச்சிகளின் வேகத்தில் நடந்த கூடல்…


மனம் மனைவியின் இடத்தில் இருந்து சிந்திக்க ஆரம்பித்திருந்தது


“என்னை பழி வாங்கிட்டடா” அவளில் மூழ்கி… உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்த… அப்படி ஒரு நிலையில்.. மனைவியிடமிருந்து வந்த வார்த்தைகள் இப்போது ஞாபகம் வந்து குப்பென்று வியர்த்தது ராகவ்வுக்குள்… காரின் ஏசியையும் மீறி…கோபத்தில் சிவந்திருந்த கண்கள்… ஆற்றாமையில் இன்னுமே சிவக்க ஆரம்பித்ததுஅவள் சொன்னதில் தவறே இல்லை… யோசித்துப் பார்த்தால் அது உண்மையே என்று தோன்றியது… உணர்வுப்பூர்வமாக அவளை எப்படியெல்லாம் ஆட்டுவித்திருக்கின்றோம்…


ஆனாலும் மனைவியாக அவளை எந்த ஒரு இடத்திலும் அவன் விட்டுக் கொடுக்க வில்லை… ஆராதனை தான் செய்தான்… ஆனால் பெண்ணாக அவளுக்கான உணர்வுகளை மதித்தானா… யோசித்தவனுக்கு எங்கு தவறு செய்கிறோம் என்று நன்றாகவேப் புரிய…. அதற்கான தீர்வையும் மனம் எடுத்துக் கொடுக்க இப்போது மனம் அமைதி அடைந்தது தான்…மனம் அமைதி அடைந்தாலும், தீர்வு கண்டாலும்… மனைவியிடம் அதைக் காட்டிக் கொள்ள வில்லை… இன்னும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் வந்து கொண்டிருந்தான்…
“ரகு…ப்ளீஸ்.. நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோங்க”


அவன் கோபம் தாங்காமல்… அவன் உம்மென்று வருவது தாங்க முடியாமல் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள்.. என்ன திட்டினாலும் பரவாயில்லை என்று இப்போது வாயைத் திறக்க…“நல்ல்ல்லா புரிஞ்சதும்மா… புரியாம இருக்கிறதுக்கு, மேடம் நீங்க நினைத்து வைத்திருக்கிற அளவுக்கு வடிகட்டின முட்டாள் எல்லாம் இல்லை நாங்க… கொஞ்சம் எங்களுக்கும் மூளை இருக்குது தாங்க “ என்று அவளைப் பார்க்காமலேயே சொன்னவனின் நக்கல் வார்த்தைகளில்… இவளுக்கு கொஞ்சம் ஆட்டம் கண்டதுதான் உள்ளுக்குள்…


இருந்தும் ”ரகு… நான் என்ன சொல்ல வந்தேன்னா “ என்ற போதே…


“சந்தியா…” என்று பல்லைக் கடித்தபடியே சொன்னவன்… சில வினாடிகள் அமைதியாகவே வண்டியை ஓட்டியவன்…


“மேடம் தான் பெரிய எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்துட்டீங்களே… அதுனால… பொண்டாட்டி பொடலங்காய்க்கும்.. பொண்ணு பொடலங்காய்க்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கும் புரியுது… போதுமா…” நக்கல் எல்லாம் இல்லை அவன் குரலில்… அனலடித்தது…கோபம் வந்தால் இப்படி எல்லாம் பேசுவானா என்றிருக்க… சந்தியாவுக்கு இப்போது என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை.. அதில் இன்னும் கவலை வர… மெதுவாக அவனிடம்… தயங்கி தயங்கி…“ரகு… கோபமா இருக்கீங்களா” உமிழ்நீரை முழுங்கியபடி கேட்டவளைப் பார்க்காமலேயே“சேச்சேய்… என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுது…. அப்படியே குளுகுளுன்னு இருக்குதுமா… ஒரு கூடை ஐஸ் கட்டிய அப்டியே மொத்தமா கொட்டின மாதிரி… நீ ஒண்ணும் கவலைப்படாத…” என்றான்.. இப்போது மொத்த குரலிலும் நக்கல் நக்கல் மட்டுமே..


அவன் கோபம் கூட இந்த அளவு அவளுக்கு கஷ்டம் தரவில்லை…. ஆனால் இந்த நக்கல் பேச்சு உண்மையிலேயே அவளைக் கொல்லாமல் கொல்ல… அதைத் தாங்க முடியாதவளுக்கு இப்போதா அப்போதா என்று கண்ணீர்துளி வெளிவருவது போல இருக்க... இருந்தும் அது வெளிவராமல் அடக்கிக் கொண்டு வர…


ராகவ் அவளைப் பார்த்தும் பார்க்காமல் தான் வந்து கொண்டிருந்தான்…. ஆனால் ஏனோ ஏதோ எதுவும் சொல்ல தோன்றவில்லை… அப்படியே விட்டு விட்டான்…


கிட்டத்தட்ட வெகு நேர பயணத்திற்குப் பின்… இவனது கார்… அவள் வீடு இருக்கும் தெருமுனைக்குள் நுழையும் போது வேகத்தைக் குறைக்க… தயங்கினாள் சந்தியா இறங்க… பின்னே இந்த அர்த்த ராத்திரியில் தனியாக எப்படி வீடு செல்வது… இதைச் சொன்னால் அதற்கு வேறு திட்டித் தொலைவானோ என்றிருக்க… அவனிடம் ஏதும் சொல்லவில்லை…


அவளின் தயங்கிய பார்வையில் அவளை ஒரு முறை முறைத்தவன்…. விருட்டென்று வேகத்தைக் கூட்டி காரை எடுக்க… இப்போது கார் சந்தியா வீட்டின் முன் நின்றிருந்தது… வேகமாக இறங்கியவள்… தயங்கி அவனைப் பார்க்க… இவளது முகத்தைக் கூட அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை…


“இவனை எப்படி மலை இறக்குவது” என்று நினைத்தவள் சரி போனில் பேசி எப்படியாவது சரிகட்டுவோம் என்று அவனிடம் விடைபெற்றபடி…… வேகமாக வீட்டை நோக்கிப் போக… அப்போது கார் லாக் ஆகும் சத்தம் கேட்க… பின்னே திரும்பிப் பார்க்க… ராகவ்வும் இவர்கள் வீட்டுக் கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தான்…. புரியாமல் விழித்தாள்…


கையில் பேக் பேக்கும் இருக்க… இப்போது திரு திருவென்று முழித்தவள்… கையில் இருந்த தன் போனை வெறிக்க வெறிக்க பார்த்துக் கோண்டிருந்தாள்…


ஏனென்றால்… சந்தியா எப்போதும் முதலில் அழைப்பு மணியை அழுத்த மாட்டாள்… கைபேசியில் அன்னைக்கு போன் செய்துவிட்டு… அவர் எடுக்க தாமதமானால் மட்டுமே அழைப்பு மணிக்கு கை போகும்…


இன்றும் அதே போல் போனை எடுத்தவளுக்கு… இப்போது தன் அன்னைக்கு போன் செய்வோமா வேண்டாமா… என்று யோசித்தபடியே இருந்தவள்… ராகவ் தன் அருகில் நிற்பது மீண்டும் ஞாபகத்துக்கு வர…. வேகமாக..“ரகு… ப்ளீஸ்… நீ கிளம்பு…. எங்க அப்பா உன்னைப் பார்த்தால் என்ன சொல்வாரோ தெரியலை… முதன் முதல்ல நீ வீட்டுக்கு வரும்போது ஏதாவது திட்டிட்டார்னா என் மனசு தாங்காது…. அவர் ஏற்கனவே உன் மேல செம்ம கோபத்தில இருக்கார்…. அவருக்கு கோபம் வந்துச்சுன்னா…. அறிவே இல்லாமல் ஏதாவது பண்ணித் தொலைப்பார்…. சொல்றதைப் புரிஞ்சுக்கோ ரகு…. ப்ப்ளீஸ்” கெஞ்சினாள் சந்தியா…. ராகவ்விடம்தன் வீட்டிற்கு அவன் வருவது… அதுவும் எந்தவித வற்புறுத்தலுமுன்றி அவன் வருவது சந்தியாவுக்கு அளப்பறிய சந்தோஷமே…. ஆனால் தன் தந்தையை நினைக்கும் போதோ வந்த மகிழ்ச்சி எல்லாம் அவளுக்கு தூர ஓடிப் போனது போல் இருந்தது…


அதுவும் கணேசனின் கோபத்தை நினைத்துதான்… மிகவும் பயந்தாள் சந்தியாகோபம் வந்தால் சுற்றமும் பார்க்க மாட்டார்… மற்றதையும் பார்க்க மாட்டார்…. அனுபவித்திருக்கிறாளே…. தானும் அனுபவித்திருக்கிறாள்… தன் தாய் அனுபவித்ததையும் பார்த்திருக்கிறாளே…. அந்த அந்த பயம் தான் சந்தியாவுக்கு…. தன்னுடைய கணவனை… கணேசன் அவரது வறட்டுப் பிடிவாதத்தால் மனம் நோக வைத்து விடுவாரோ…. மனம் கலங்கியது சந்தியாவுக்கு… தனக்கு சந்தோசத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருப்பவனுக்கு… தன்னால் துன்பம் வருவதா…. அவளையுமறியாமல் கண்கள் கலங்க… அதே கண்களோடு ராகவ்வைப் பார்க்க…


“சகி… புரிஞ்சுக்கோ… காலிங் பெல்லை அடி… ஒண்ணும் நடக்காது… அப்படியே பிரச்சனை வந்தாலும்… இல்லை உங்க அப்பா என்னிடம் கோபப்பட்டாலும்… அதுனால நம்ம உறவுக்கு எந்தப் பிரச்சனையும் வரப்போறதில்லை…. என்னை நம்புறதானே…” என்று அழுத்தமாகச் சொல்ல… கோபமாக சொல்கிறானா… ஆறுதலாகச் சொல்கிறான என்று வேறு இன்றிருக்கும் சூழ்நிலையில் பிரித்தறிய முடியவில்லை இவளால்… அவன் முகத்தைப் பார்க்க அதிலும் ஒன்றுமே கணிக்க இயலாமல் போக.. குழம்பியவளாக அப்படியே நிற்க.. எரிச்சலானது என்னவோ இவன் தான்…


“சந்தியா… உன் புருசன் தானே நான்… உங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளைதானே… என்னமோ உன்னைக் கூட்டிட்டு ஓடிப் போய் தாலி கட்டிட்டு…. அம்மா அப்பா ஆசிர்வாதம் வாங்க காத்துட்டு இருக்கிற லவ்வர்ஸ் மாதிரி சீன் போடற… உங்க வீட்ல ஒண்ணும் சொல்ல முடியாது என்னை… அதைப் புரிஞ்சுக்கோ…. அப்படியேனாலும் என்ன சொல்லிருவாரு உங்க நானும் பார்க்கிறேன்“ என்றவன் சண்டைக்கு நிற்கும் சேவல் போல சிலிர்த்துக் எழுந்தவனாக சொல்லிக் கொண்டே அவளைப் பார்க்க…


அவளோபயத்தில் சிலையென நின்றிருக்க…


இவள் இப்போது மீள மாட்டாள் என்பது புரிய இதழ் கடையோரம் சுழித்தபடி…. அழைப்பு மணியை தானே அழுத்த…


சந்தியா என்ற சிலை மீண்டும் உயிர்பெற்றது… வெகு வேகமாக…


”ரகு…” அதிர்ந்தவளின் இதயத்துடிப்பு ஒரு நொடி நின்று மீண்டும் துடிக்க ஆரம்பிக்க…

மனதிற்குள்ளேயோ… ஒரு விதமாக கிலி பரவியது…


“ஹையோ என்ன ஆகும்…. அப்பா என்ன சொல்வார்… அம்மா என்ன நினைப்பாங்க… சந்தோஷ் ரகுவைப் பார்த்தால் என்ன ரியாக்‌ஷன் கொடுப்பான்…”


இந்த மாதிரியான எண்ணங்கள் அவளை ஆட்டிப்படைக்க… இதயத்தின் துடிப்பு பயத்தை விட எதிர்பார்ப்பில் பட பட வென்று துடிக்க ஆரம்பிக்க… ராகவ் எடுக்கும் இவள் எதிர்பார்க்காத திடீர் திடீர் முடிவுகளினால்… இப்போதும் சந்தியா நிலைகுலைய…“ப்ளீஸ் ரகு…” வார்த்தைகள் தடுமாறின… ஏதாவது பெரிதாக நடந்து விடுமோ என்று பயத்தில் தடதடத்தது இதயம்…. ராகவ்வுக்கு அவமானம் ஆகி விடுமோ… இதில் தான் அவள் மொத்தமாக பயந்தது… அப்படி ஏதாவது நடந்து விட்டால் சத்தியமாக அவளால் தாங்கவே முடியாது… இவன் இப்படி பண்ணுகிறானே என்று தனக்குள்ளாக மருக ஆரம்பிக்க… ராகவ்வோ வெகு சாதரணமாகவே இருந்தான்… எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டான்… அதை செயலாற்றவும் ஆரம்பித்து இருக்க…


இவளைப் பார்த்தவன்


“சந்தியா… நான் பார்த்துக்கிறேன்…” என்று அவளை அமைதிப்படுத்த எண்ணி அவளருகில் பேச ஆரம்பிக்கும் போதே….


கதவு உள்பக்கமாக திறக்கும் சத்தம் கேட்க… வேகவேகமாக அவனை விட்டு தள்ளி நின்றவள்... இப்போது அத்தனை தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்து இருக்க…“சகி…. நீ இவ்வளவு பயந்த புள்ளையா… என்னால நம்ப முடியலையே” என்றவன் கிண்டலாகச் சொன்னாலும்… அவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது… இந்த அளவு அவள் தந்தையை எண்ணி பயந்து சாகிறாளே என்றுதான் தோன்றியது…


சற்றும் முன் தன்னவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்த சந்தியாவின் மனம்… இப்போது தாய் தந்தை சகோதரனை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்து இருக்க… அதே நேரம் கதவு திறக்கப்பட…


அதுவரை இருந்த அணிந்திருந்த இறுக்கமான பாவனையை… ராகவ்வின் முகம் களைந்திருக்க… மிகச் சாதராணமாக… தோரணையோடு…. கணேசனைப் பார்த்தான் நேர்கொண்ட பார்வையோடு…


அங்கோ கணேசனின் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சிகள்… அதோடு ஆயிரம் கேள்விகள்… இத்தனை பார்வையிலும்… ராகவனை அவர் வித்தியாசமாக நோக்கவில்லை… ஹாலில் இருந்த சுவர்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவர்… இருவரையும் மீண்டும் பார்த்து…. மீண்டும் ஒருமுறை ராகவ்வைப் பார்த்தவர்…அங்கு அவனிடம் முறைக்க முடியாமல் தன் மகளைப் பார்த்து முறைத்து அவளிடம் தன் பார்வையை நிறுத்த…..


சந்தியாவுக்கு பேச வாய் வரவில்லை… தந்தையைப் பார்த்து… தன் இதயம் வெளி வந்து விடுமோ என்று தோன்றும் அளவிற்கு பட படவென அடித்துக்கொண்டிருக்க … … இருந்தும் ராகவ்வை அவர் ஏதாவது திட்டி விடும்முன் தான் பேச வேண்டும்… இந்த நிலையில் தான் பயந்து…. வாயை மூடிக் கொண்டு இருந்தால் அது ரகுவுக்குத்தான் எதிராக முடியும் என்று நினைத்தவள்… அதில் வேகமாக…


“அப்பா… நைட் ஷிப்ட்… ரகு வீட்ல இல்லை.. ஸ்ட்ரீட்ல வந்து விடறேன்னு” என உளர ஆரம்பித்து இருக்க… சிறு வயதில் தன் தந்தையைப் பார்த்து பயப்படும் சந்தியாவாக இப்போது மாறியிருந்தாள்…


கல்லூரி படிக்கும் போது தன் தந்தையிடம் பேச்சைக் குறைத்தவள்… வேலைக்குச் சென்ற பின்னர்… பேசாமல் எல்லாம் இருக்கவில்லை… அவரிடமிருந்த பயமெல்லாம் போய்,. அவரை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து இருந்தாள்…ஆனால் இன்றோ இப்படி அவரிடம் தட்டுத்தடுமாறி பேசும் அளவுக்கு… ஒரு தர்மசங்கடமான நிலைக்கு தன்னைத் தள்ளி விட்டு விட்டானே என்று ராகவ் மீது கோபமாகத்தான் வந்தது…. காரணமானவனிடமும் தன் கோபத்தை காட்டமுடியவில்லை.. ஏற்கனவே தன் மேல் கோபமாக இருந்தவனிடம் எந்த முகத்தைக் காட்டுவது… தனக்குள் குமுறிக் கொண்டிருந்தவளாக இருக்க


“சந்தியா ஒரு நிமிசம்” என்று அவள் பேசுவதை… இல்லையில்லை உளறியத தடுத்து நிறுத்தியவனாக… கணேசனிடம் பேச ஆரம்பித்தான் ராகவ்…


“மாமா” என்ற போதே… பட்டென்று…


“வாங்க…” என்று முறைப்பாகச் சொன்னவர்… என்ன நினைத்தாரோ தெரியவில்லை…


“அங்கேயே நில்லுங்க” என்று சொல்லிவிட்டு… உள்ளே செல்ல… வசந்தி அவருக்குப் பின்னால்தான் நின்றிருப்பார் போல… இப்போது வசந்தியின் முகம் தெரிந்தது…


சந்தியா பயத்தில் இந்தப் பக்கம் சிலையாக நின்றிருந்தாள் என்றால்… சந்தோஷ அதிர்ச்சியில் வசந்தி கதவின் அந்தப் பக்கம் என்ன செய்வது என்று தெரியாமல் சிலையாக நின்றிருந்தார்….


தனது மகள் அவள் கணவனோடு தங்கள் வீட்டு வாசலில்…


மகளையும் மருமகனையும் ஒன்றாகப் பார்த்து நொடியில் மலர்ந்தது அவரது முகம்….சந்தியாவின் முகத்தைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்தவர்... தன் கணவரைப் பார்க்க… அவரோ ஒன்றும் சொல்லாமல் உள்ளே போக… தொங்கிப் போன முகத்துடன் அவரைப் பார்க்க…


“என்ன… என்னயே பார்த்துட்டு இருக்க…. உள்ள வரச் சொல்லு அவங்கள….” என்றபடி நகர்ந்து விட… வசந்திக்கு இதை விட பேரானந்தம் வேறு இருக்க வேண்டுமா…வசந்தி பெரு மகிழ்ச்சியோடு…. சந்தியா ராகவ்வை நோக்கிச் செல்ல.. சந்தியாவுக்கோ மயக்கம் வராத குறைதான்… ராகவ் என்னவோ சாதரணமாகத்தான் நின்றிருந்தான்… இது எல்லாம் நடக்கும் என முன்னமே எதிர்பார்த்தது போல…


அப்போது… கணேசனின் அதட்டல் அந்த இரவின் நிசப்தத்தையும் மீறி ஒலிக்க ஆரம்பித்திருந்தது


“ஏய் நில்லு…. உனக்கு அறிவே இருக்காதாடி…. முதன் முதல்ல வர்றாங்க… ஆரத்தி எடுத்து… திருஷ்டி கழிச்சுட்டு உள்ள கூட்டிட்டு வாடி” இப்போதும் கணேசனின் வார்த்தைகள் வசந்தியை நோக்கி அதட்டலுடன் அதிகாரத்துடன் தான் இருந்தது“இதோ இதோங்க… எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை…. மாப்பிள்ளையப் பார்த்த உடனே” என்றபடி… உள்ளே போக… ராகவ்… மணியைப் பார்த்தான்…


மணி இரவு கிட்டத்தட்ட நள்ளிரவு 1 மணி..


சந்தியா ஆவென்று அப்படியே நின்றிருந்தாள்…தோளைக் குலுக்கியபடி அலட்சியமாக சந்தியாவைப் பார்த்தவன்… அவளிடம் குனிந்து…


“ஏதாவது புரியுதா… எங்க எப்படி இருந்தாலும்… இனி எப்போதும் உன்னை என் மனைவியாத்தான் என்னை உன் கணவனாத்தான்… இந்த சமூகம் பார்க்கும்… இப்போ உனக்கு... நீ என்கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும்… ” என்றவன்…


”அண்ட்… கணவனா… ஆண்மகனா எப்போதும் நான் தவறு செய்யலைனு நீ நம்புனா அது போதும் எனக்கு” என்ற போதே… சந்தியா அவனிடம் பேச வர…


அந்த வினாடி… ஆரத்தி கரைசலுடன் வசந்தி வந்து விட… பேச்சை நிறுத்தி விட்டு சந்தோஷ முகத்தோடு சந்தியா தன் தாயைப் பார்க்க… வசந்தி அவளைப் பார்த்தால் தானே…அவரது முழுக்கவனமும் ராகவ்வின் மேலேதான்…


வசந்தியின் கைகளால் ஆரத்தி எடுக்கப்பட…


“வாங்க மாப்பிள்ளை…. “ என்று சந்தோசப் படபடப்புடன் வரவேற்றவர்… அவர்களை உள்ளே போகச் சொல்ல….


வலதுகாலை துள்ளளுடன் உள்ளே எடுத்து வைத்த ராகவ் அதே நேரம் தன்னவளையும் அணைத்துக் கொள்ள மறக்க வில்லை…


சந்தியாவின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி படர்ந்திருந்தது… சற்று முன் அவளை பெரும்பாடாக படுத்திக் கொண்டிருந்த கணவனது கோபம் கூட இப்போது அவளை இம்சிக்க வில்லை…


கோபமாக அவன் இருப்பதாக காட்டிக் கொண்டாலும்…. பிரச்சனை என்று தான் நினைத்த எல்லாவற்றையும் கணவன் முறியடிக்கும் பாங்கு சந்தியாவைக் களிப்படைய வைக்க அது அவளின் முகத்திலும் எதிரொலித்தது…
வசந்திக்கோ அதை விட…. தன் மகளைப் புரிந்து கொண்ட மருமகன்…. யாரை நினைத்து சந்தேகப்பட்டாளோ அவனை நினைத்து இன்று பெரும் சந்தோஷப்பட்டாள் என்றால் அது மிகையில்லைஉள்ளே நுழைந்த சந்தியாவுக்குத்தான் சந்தோஷத்தையும் மீறி கொஞ்சம் சங்கடம்…


ராகவ் முன்னிலையில் தன் தாயை அதிகாரத்துடன் தந்தை அதட்டியது அவளுக்கு பிடிக்கவில்லை… நல்லதுதான் சொன்னார்… ஆனால் சொல்லும் விதம் என்று இருக்கிறது அல்லவா… என்னவோ வேலைக்காரியிடம் சொல்வது போல அதட்டும் அந்த தோரணை அன்றும் இன்றும் என்றும் சந்தியாவுக்கு பிடிக்காதது…


அவர் மாற மாட்டார்… அது ஒருபுறம் இருக்க…


ராகவ்வை பார்த்து தன் தந்தை புன்னகைக்கவில்லைதான்…. ஆனால்… வரவேற்ற விதம்… ஏனோ திருப்தியைத்தான் தந்திருந்தது அவளுக்குள்… என்ன இருந்தாலும்… அரேஞ்ச்ட் மேரேஜ் அரேஞ்ட் மேரேஜ் தான்… சந்தியாவின் முகம் தானாகவே புன் முறுவலைப் பூக்க… அதைக் கண்டு கொண்ட கணவனும் இலேசாக புன்முறுவல் பூக்க… சந்தியாவின் மனம் நிம்மதியில் அடங்கியது…


அதன் பின்…


ராகவ் சந்தியா இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்…. அங்கிருந்த இல்லாத அத்தனை தெய்வங்களின் ஆசிர்வாதத்தையும் தங்கள் மக்களின் மேல் திரும்பும்படி வேண்டியவர்…. இதே போல் மிருணாளினியும் சந்தோஷும் ஒன்று சேர வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டார்…


அனைத்தையும் பார்த்தபடியே…. வழக்கம் போல கணேசன் ஹாலில் அமர்ந்திருந்தார்…. ராகவ் உள்ளே வந்ததையும் அதிலும் தன் மகளை அணைத்தபடியே வந்த பாங்கும் இருவரின் இணக்கமான பந்தத்தைக் காட்ட…. என்ன இருந்தாலும் மகளல்லவா…. அவள் முகத்தில் இருந்த அபரீதமான மகிழ்ச்சி.. கணேசனது இறுக்கமான பாவனையை அவரையுமறியாமல் மாற்றி இருந்தது…சந்தியா ராகவ்வை ஹாலில் அமரச் சொல்லிவிட்டு தன் தாயை நோக்கிச் செல்ல... ராகவ் வேண்டுமென்றே அவருக்கு எதிரே அமர்ந்தான்… எப்படியும் தன் குடும்பத்தைப் பற்றி கேட்பார்…. இல்லை மிருணாளினியைப் பற்றி கேட்பார் என்று எதிர்பார்க்க … கணேசனோ வாய் திறக்கவில்லை…


இனி அடுத்து என்ன… ராகவ் இன்றிரவு இங்குதான் தங்கப் போகிறானா… இல்லை கிளம்ப போகிறானா என்று வசந்திக்கு தெரியவில்லை... வீட்டுக்கு வந்திருக்கும் மாபிள்ளையிடமா இதைப் போய்க் கேட்க முடியும்… அதனால் சந்தியாவிடம் அதைக் கேட்க…


“நீயே போய்க் கேட்டுக்கோ… உன் மாப்பிள்ளைக்கிட்ட“ என்று அலட்சியமாக சொல்லியபடி அங்கிருந்து நழுவி விட்டாள் சந்தியா…


ஏற்கனவே இவளை முறைத்துக் கொண்டிருப்பவனிடம்… இதை வேறு கேட்டு வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டுமா…தன் அறைக்குள் நுழைந்து விட்டாள்… உடை மாற்றப் போகிறேன் என்ற சாக்கில்…


”நீயாச்சு உன் மருமகனாச்சு” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டவள் தன் அறைக்குள் நுழைய…


அவளது அறையோ அப்படி ஒரு அலங்கோலமாக காட்சி அளித்தது… கட்டிலிலோ இடமே இல்லை எனும்படி…. சந்தியாவின் உடைகள் அனைத்தும் தாறுமாறாக பரப்பப்பட்டிருந்தது….


டெல்லி பயணத்திற்காக, காலையில் அலுவலகம் செல்லும் முன்… இரவு வீடு திரும்பியதும் பெட்டியில் வைப்பதற்காக… கட்டிலில் தேவையான உடைகளை எடுத்துப் போட்டு விட்டு வந்திருக்க… மலையாக குவிந்திருந்த அவற்றைப் பார்த்து இவளுக்கு இப்போது ஆயாசமாக வந்து விட்டது…


“இதை எல்லாம்…. எப்போ க்ளீன் பண்ணி…” என்று தலையில் கைவைத்தபடி மலைத்தவள்


“ரகுவை எப்படி இங்கு படுக்கச் சொல்வது” என்று யோசித்தபடியே இரவு உடையை மாற்றியவள்… முகத்தை அலம்பி… பின்னலை தளர்த்தி… சுருட்டி… கேட்சர் கிளிப்பில் அடக்கி… வெளியே வர…


ராகவ் வசந்தியிடம்…


“சந்தோஷ் இருக்கான்ல… நான் அங்கேயே படுத்துக்கறேன்” என்று நல்ல நல்ல மிக நல்ல பிள்ளையாக சொல்லிக் கொண்டிருக்க…


“அடப்பாவி” தனக்குள் சொல்லிக் கொண்டபடியே அவர்கள் அருகில் வந்தவள்.. இயல்பாக ராகவ்வின் அருகில் போய் நிற்க…


ராகவ்தான் மனைவியின் கோலத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போனான்…


இந்தக் கோலத்தில்… சிறு ஒப்பனை கூட இல்லாமல் தன் அருகில் நின்றிருந்தவளின் சாதாரண கோலமே அவளை மிகப் பேரழகியாக அவன் கண்களுக்கு காட்ட… அது அவனை இன்னுமே இம்சிக்க…


“நான் மேல போகிறேன் சந்தியா… “ என்று அவளைப் பார்த்தும் பார்க்காமலும் வேகமாக நகர… அதே நேரம்… கணேசனும்


“காலையில பார்க்கலாம்” என்று ராகவ்விடம் சொல்லிவிட்டு… அவரும் கிளம்பி விட… வசந்திக்கும் இதற்கு மேல் சந்தியா பார்த்துக் கொள்வாள்… அங்கு இருவருக்கும் இடையில் தான் நிற்பது தேவையிலாதது போல் தோன்ற… சந்தியாவிடம்…


“உன் ரூமைக் கிளீன் பண்ணப் போறியா என்ன… அது கஷ்டம்தான் “ என்று தன் மகளிடம் சந்தேகமாகப் கேட்டபடியே


“மேல போர்ஷனுக்கு போறதா இருந்தா தலையணையும் பெட்ஷீட்டும் எடுத்துட்டு போங்க… ” என்று இருவரையும் சேர்த்துச் சொல்ல… சந்தியா… ஞே என்று பார்த்திருந்தாள் அவள் அன்னை சொன்னதை நினைத்து


”சந்தோஷ் தூங்கிட்டான்ன எழுப்பறது கஷ்டம்…சாவி எடுத்துட்டு போ…” என்றபடியே சாவியையும் எடுத்து அவள் கையில் திணித்து விட்டு… வசந்தியும் அவர் அறைக்குப் போய்விட…


சந்தியா ராகவ் மட்டுமே இப்போது… அதுவும் தனியே தன்னந்தனியே…


“இப்போ என்ன சொல்ற…” என்ற ரீதியில் ராகவ் கைகளைக் கட்டியபடி அப்பாவி போல பார்வை பார்த்து வைக்க… அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தும்… கண்டு கொள்ளாதவளாக


”அதெல்லாம் மேல போக வேண்டாம்… நம்ம ரூம்க்கே போகலாம்” என்ற போதே


“பரவாயில்ல… என் மச்சான் ஒரு பக்கம் புலம்பிட்டு இருப்பான்… நானும் அவன் சங்கத்துல ஒரு துண்ட போட்டுட்டு புலம்பிட்டு இருக்க போறேன்… எனக்கு அவன் ஆறுதல் அவனுக்கு நான் ஆறுதல்னு… நாங்க எங்களுக்குள்ள ஆத்திக்கனும்… நீயெல்லாம் வர வேண்டாம்… கீயைக் கொடு” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே….


அவனைப் முறைத்தவள் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் அவள் அறைக்கு மீண்டும் திரும்பிப் போக…


இவனுக்கோ…


“ஏய்… எங்கடி போற” என்று கத்த…


“உங்களுக்குத்தான்… இந்த பாய் தலையணை… அப்புறம் பால் சாரி சாரி தண்ணி சொம்பு” எல்லாம் எடுக்க..


வேகமாக அவளை எட்டிப் பிடித்தவன்…. அவள் கையிலிருந்த சாவியைப் பறித்தபடி….


“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்… ஆள விடு” என்று வேகமாக வாங்கிக் கொண்டு… தப்பித்தோம் பிழைத்தோமென்று… வீட்டின் வெளியே வந்து வாசல்படி வழியாக மாடிப்படி ஏற… சந்தியாவும் அவன் பின்னாலேயே தலையணையோடு வந்தவள்…


“லூசாடா நீ… அர்த்த ராத்திரில… தனியாவா வருவேன் நான்” என்று அவன் பின்னாலேயே வர….


”நீயே ஒரு மோகினிப் பிசாசு… உனக்கு இதெல்லாம் பயமா இருக்குனு சொல்லும் போதுதாண்டி காமெடியா இருக்கு” என்று நக்கலடித்தவனை முறைத்தபடியே வந்தவள்… கதவைத் திறந்து அங்கிருந்த இன்னொரு அறையில் அவனுக்கு படுக்கையையைத் தயார் செய்து கொண்டிருக்க…


இவனோ வெளியில் மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் உட்கார்ந்து கொண்டான்… அவள் வெளியில் வரும் போது உள்ளே போய்க்கொள்ளலாம் என்று… புடவையிலும் சுடிதாரிலும் பார்த்த கண்களுக்கோ… இப்போது அவள் அணிந்திருந்த இரவு உடையியின் புதுவித தரிசனம்… அது அவனை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம்… எல்லையையும் தாண்ட வைக்கலாம்


வெட்கம் கெட்ட மனது… கோபம் கொண்ட நேரத்திலும் ரசிக்க தவறவில்லை…. ஆக மொத்தம்… தனக்குத்தானே போட்டுக்கொண்ட நல்ல பிள்ளை அவதாரத்தை கைவிடாமல்… எதற்கு வம்பு என்று வெளியிலேயே நின்று விட்டான்…“டேய் ரகு… மோகினிப் பிசாசுக்கிட்ட சிக்காமல் அவள டெல்லி அனுப்ப பாரு” என்று ஆயிரம் முறை தனக்குள் சொல்லிக் கொண்டவன்… எழுந்து நின்றபடி… உள்ளுக்குள் தகித்தாலும்… அப்போதைக்கு குளிர்விக்கும் வகையில் தெரிந்த நிலவினை ரசிக்க ஆரம்பித்தான்… கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடியே…”ம்க்க்கும்” குரல் வந்த போதும்… கேட்ட போதும்… திரும்பாமல் நிற்க…


அவளோ அவள் அருகில் வந்து நின்றாள்…. மிக உரிமையாக நெருக்கமாக


அதுமட்டுமல்லாமல்… கைப்பிடிச் சுவரில் அவன் வைத்திருந்த கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து சந்தியா அழுத்த…. இவனும் விலக்கவில்லை… அதே நேரம் அவளையும் பார்க்கவில்லை… ஏனோ அப்படியே அந்த நேரங்களை அனுபவிக்க வேண்டும் போல் தோன்ற… தடுக்காமல் சில நிமிடங்கள் அப்படியே அமைதியாக இருக்க…


அவனின் அந்த மௌனம் தாங்க முடியாதவளாக…


“ரகு… சாரி சாரி… சாரி… ப்ளீஸ்” என்றவளிடம்…


“கீழ போ சந்தியா” என்று மட்டும் சொல்லி தன் கரத்தின் மீது இருந்த அவள் கைகளை தன் மற்றொரு கரத்தின் உதவியுடன் தன்னிடமிருந்து பிரிக்க…


”ரகு… சாரி சொல்றேன்ல… இவ்வளவு சொல்லியும் கெஞ்சியும்… என் மேல உனக்கு கோபம் போகலையா” அந்த இரவில் யாசித்து கெஞ்சியவளிடம்… பேச முடியாமல் தவித்தது என்னவோ இவன்தான்…


அவளின் ஒவ்வொரு கெஞ்சல்களின் மூலமும் மன்மதன் அவனை நோக்கி எறிந்த ஆயிரம் அம்புகளை எதிர்த்து அவன் போராடிக்கொண்டிருந்ததை அவள் அறிவாளோ என்ன…


இதெல்லாம் அறியாமல் சந்தியாவோ


“ரொம்ப பண்றடா… இப்போ ஏன் இவ்ளோ சீன் போடற… “ என்று சந்தியாவும் இப்போது கோபத்தை ஆயுதமாக எடுக்க…


அப்போதும் பேசாமல் ராகவ் உள்ளே போக… உள்ளே சந்தோஷ் தூங்கிக் கொண்டு இருக்க… இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு… அவன் எழுந்து விட்டால்… ஆக இவளால் ராகவ்வோடு உள்ளே சென்றும் வாக்குவாதம் செய்ய இயலாது… அதைப் புரிந்தவளாக


”என்னை அழ வைக்கிறடா நீ” இவளை விட்டு கடந்தவனை விடாமல் கைகளைப் பிடித்தபடி சந்தியா அவனைப் பார்க்க… அவள் கண்களில் கண்ணீர்…


அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்


”குட் நைட்” என்று மனசாட்சியே இல்லாமல் சொன்னவனிடம்… அதற்கு மேல் போராடவும் முடியவில்லை அந்த அர்த்த ஜாமத்தில்…


வேகமாகக் கண்களைத் துடைத்தபடி


“ஹலோ… நீங்க பாட்டுக்கு உள்ள போனா என்ன அர்த்தம்… கீழ வந்து விட்டுட்டு லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிட்டு மேல வாங்க” என்று அதிகாரமாகச் சொல்ல


“வாட்” என்று இவனும் வாய்விட்டுக் கேட்க…


“ஹான்… இந்த ஸ்டெப்ஸ்ல… தனியா என்னால போக முடியாது… என் கூட இறங்கி வந்து கீழ விட்டுட்டு வாங்க” என்று சொன்னவளை.. அவள் முகத்தை நிமிர்ந்து இவன் பார்க்க… உண்மையிலேயே அவள் சீரியஸாகத்தான் சொல்லுகிறாள்… என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது…


மொத்த எரிச்சலையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவனாக…”வாடி… இம்சை…” என்றபடி முன்னே போனவன்…


“முதல்ல இவளோட இந்த பயத்துக்கு முடிவு கட்டனும்” என்று நினைத்தபடிதான் இறங்கினான்….சந்தியாவும் அமைதியாகவே அவன் பின்னே வந்தவள்… கீழே வந்ததும்… வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள்… பின் திரும்பி அவனிடம் வந்தவள்…


“ஒழுங்கா கெட்டபையனா இருந்திருந்தா… ஒரு குட்நைட் கிஸ் கிடச்சிருக்கும்.. மிஸ் பண்ணிட்ட” என்று கவலையோடு, பரிதாபமான பார்வை பார்த்தபடி உதட்டுச் சுழிப்போடுச் சொல்ல…


அசரவில்லையே அவள் நாயகன்….


அவளைப் பார்த்தபடியே… தலைமேல் கை உயர்த்தி கும்பிடு போட்டவன்…


“போதும்மா… போதும்… அதையெல்லாம் எப்படி வட்டியோட வசூலிச்சுக்கனும்னு… எங்களுக்கு தெரியும்… நாங்க பார்த்துக்கிறோம்… இப்போ நீங்க கிளம்புங்க” என்று இகழ்ச்சியாகவும்… கல்மிஷமாகவும் சொல்லி வீட்டின் உள்புறம் நோக்கி கைகாட்டியவனைப் பார்த்து… இடுப்பில் கைவைத்து முறைத்து பார்த்தபடியே…”உனக்கு இன்னைக்கு… பேய்க்கனவா வரும் பாரு…” என்று சொல்லி அவனிடம் பழிப்புக் காட்டியபடி உள்ளே போனவளைப் பார்த்து…“ஓய்… ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்… அல்ரெடி… பேய் தான் கனவுல வருதுடி… சந்தியான்னு பேர் வேறயாம் அதுக்கு” என்றவனிடம் கோபம் இப்போது முற்றிலும் போய் குறும்புத்தனம் வந்திருக்க…


வேகமாகத் திரும்பிப் பார்த்தவள்…


”எனக்கு போன் பண்ணின… நீ செத்தடா” என்ற போதே… அவன் போன் செய்வான் என்று எதிர்பார்த்து ஏங்கித்தான் சொன்னாள்… ஆனால் அவனோ


“சான்சே இல்லை செல்லம்… நான் போன் பண்ணுவேன்னு நீயும் எதிர்பார்க்காத.. மாம்சுக்கு செமயா தூக்கம் வருது…” என்றவனைப் பார்த்து இன்னும் இன்னும் முறைத்தவள் தன் அறைக்குள் போய்… தன் போனை எடுத்து வைத்துக் கொண்டு நப்பாசையாகப் பார்த்தபடிதான் இருந்தாள்… ஆனால் ராகவ் அவன் சொன்னது போலவே தூங்கித்தான் போயிருந்தான்… இவளோ எப்படியும் பேசுவான் என்று அவன் போனை எதிர்பார்த்தபடியே தன் போனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை..


/*உன் காதலில் கரைகின்றவன்

உன் பார்வையில் உடைகின்றவன்

உன் பாதையில் நிழலாகவே

வருகின்றவன்....

என் கோடையில் மழையானவன்...

என் வாடையில் வெயிலானவன்...

கண் ஜாடையில்

என் தேவையை அறிவான் இவன்....*/3,152 views1 comment

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின் புதிய இல்லத்துக்கான முதல் கல்லை அடிநாட்டினாள்… அதன் பின் பள்ளி

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை அலைகழித்திருக்க… மருது ’மணி’ என்று தானே அழைப்பான் யோசித்தாலும்….

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது போல அவளை நடத்த ஆரம்பித்திருக்க கண்மணியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவே

1 Comment


Saru S
Saru S
Jun 05, 2020

Semma pravee

Like
© 2020 by PraveenaNovels
bottom of page