சந்திக்க வருவாயோ?-43

Updated: May 25, 2020

அத்தியாயம் 43:/*பகலெல்லாம் பைத்தியமாய்

உன்னை எண்ணி ஏங்கி

ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே


வெண்ணிலாவை அள்ளி வீசி

வெளிச்சங்கள் ஆக்கி

சிரிப்பது இயற்கையின் சதி தானேஆணங்கே சிணுங்கலாமா

நெருங்கி அணைக்க நானிருக்க

இது தான் தருணம் தனியே வரணும்


தெரிந்தே நடிக்கலாமா

இதழை துணிந்து யார் கொடுக்க

முதலில் தரணும் பிறகே பெறனும்*/ராகவ் அவளையே பார்த்தபடியே நின்றிருந்தான்…. வெள்ளை நிற சிம்பிளான எம்ப்ராய்டரி டாப்ஸ்… அவளுக்கென்றே அளவாக… அவள் தேகத்தின் வளைவுகளில் சரியாக நேர்த்தியாக பொருந்தி இருந்ததே மிகவும் அழகாக எடுத்துக்காட்ட… அணிந்திருந்த துப்பட்டாவோ… கண்ணாடி… எம்ப்ராய்டரி என பல வேலைப்பாடுகள் நிறைந்த பீச் வண்ண துப்பட்டா… துப்பட்டாவின் வண்ணத்திலேயே லெக்கிங்ஸ்… கால்களிலோ பாயிண்டட் ஹீல்ஸ்… வலது கையில் சிறு வெண் கற்கள் பதித்த மெல்லிய ப்ரேஸ்லெட்… இடது கையில் ப்ரௌன் வண்ண ஸ்ட்ராப் வாட்ச்… நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்…. முன்னால் சில முடிகள் அழகாக கலைந்திருக்க அது கூட அவள் அழகை மிகைப்படுத்தி எடுத்துகாட்டியதோ… காதில் தங்கத்தில் சிறு வளையங்கள்… கழுத்தில் மஞ்சள் கயிறு கூடவே… இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் சிறு மெல்லிய ஜெயின்… நெற்றியில் இவனின் திருமதி ஆகி விட்ட அடையாளம்… திருத்தப்பட்ட புருவங்கள்… அதன் நடுவே சின்னதாக பொட்டு…. சில நிமிடங்களுக்கு முன் பீச் வண்ண ஷேட் லிப் கிளாசில் மினுமினுத்த இதழ்களோ…… இப்போது பிங்க் வண்ணத்தில் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது இவன் கைவண்ணத்தில்.. இல்லையில்லை இதழ்வண்ணத்தில்… முகமோ திருமணத்திற்காக அழகுநிலையத்திற்கு சென்று ஃபேஷியல் செய்யப்பட்டதாலோ என்னவோ பளீரென்று… பளபளத்தது… அதிலும் சற்று முன் இவனின் திருவிளையாடல்களினால் இன்னும் முகம் சிவந்திருக்க… அதுவும் அவள் அழகை எடுத்துக்காட்ட… அன்றோ சேற்றில் மூழ்கி எடுத்திருந்தான் இந்த வெள்ளை நிற தேவதையை… இன்றோ அதே வெண்ணிற தேவதையிடம் மொத்தமாக மூழ்கி இருந்தான்…அணுஅணுவாய் அவளை ரசித்தவன்… இவள் தன்னவள் என்ற பெருமையில்… இன்னும் அவனின் அணைப்பின் இறுக்கம் அதிகமாக… அவளைக் கட்டிக்கொண்டபடியே“என் அழகுடி நீ…” அனுபவித்துச் சொன்னவன்… அந்த கிறக்கம் மாறாமல்…“உன்னை மாதிரியே… எனக்கு பேபி கேர்ள் வேணும்டி…” எனக் கொஞ்ச ஆரம்பிக்கும் போதே…சட்டென்று அவனை அடித்தவள்…“நான் என்ன கன்சீவா இருக்கேன்னா சொன்னேன்… இப்போ இவ்ளோ சீன் காட்ற… கன்சீவ் ஆனால் என்ன பண்றதுன்னு நானே பயந்துட்டு இருக்கேன்.. இவருக்கு இப்போதான் பொண்ணு குழந்தை வேணுமாம்” அவள் கவலை அவளுக்கு…வேகமாக பெருமூச்சு விட்டவன்… தனது ரசிகன் மோடை மாற்றியபடி….“உனக்கு என்னதாண்டி இப்போ பிரச்சனை” என்றபடி
”நீ ரொமான்ஸ் புக்ஸ் அதிகமா படிப்பியா…. சினிமா… புக்ஸ் பார்த்து அதிகமா கெட்டுப் போயிட்டேனு நினைக்கிறேன்… சரி அதை விடு… இப்போ என்ன அப்டியே ஆனால் கூட… வீட்ல சொல்றதுக்கென்ன…. யார் என்ன சொல்வாங்க…” சந்தேகமாகக் கேட்பது இப்போது ராகவ்வின் முறையாக…“அம்மா கேட்பாங்களே… எப்படினு” கேள்வி கேட்டவளைப் பார்த்து வந்த கடுப்புக்கு என்ன வார்த்தைகளை அவன் வாய் உரைத்திருக்குமோ…. ஆனால்

தவித்த விழிகளைப் பார்த்தவன்… வந்த வார்த்தைகளை எல்லாம் தொண்டையிலேயே விழுங்கியவன்…திட்டுவது இப்போது முக்கியமல்ல… சமாதானப்படுத்துவதுதான் முக்கியம்… என்று தனக்குள் சொல்லிக் கொண்டு“சகிம்மா…. அவங்க அதெல்லாம் கேட்க மாட்டாங்க….. அது மட்டுமில்லாமல்… அவங்களுக்கும் தெரியும்… உன்னை மாதிரி உங்கம்மா லூசு இல்லைன்னும் நினைக்கிறேன்” என்றவன் இருவருக்குமான திருமண நாள் இரவை அவளுக்கு ஞாபகப்படுத்தியவன்…. சந்தடி சாக்கில் தன் மாமியார் மீதான திருப்தியின்மையை சொல்லி மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டான்…ஏனோ அந்த வார்த்தைகள்… தன் அன்னையைத் அவன் திட்டுவது போலத் தோன்றவில்லை சந்தியாவுக்கு… நல்லவேளை சாமர்த்தியமாகச் சொன்ன வார்த்தைகளினால் தப்பித்துக் கொண்டான் ராகவ்…இப்போது சந்தியா…“அதுதான் அன்னைக்கு ஒண்ணுமே நடக்கலையே” என்று அப்பாவியாக விழி விரித்த போது…. ராகவ்வுக்கு சற்று முன் தான் ரசித்த.. மயங்கி கிறங்கிய… இளம்பெண் சந்தியா போல் தோன்றவில்லை அவன் மனைவி…. அன்று கையில் கடலை பொட்டலத்துடன் தன் முன் அமர்ந்திருந்த சிறுமியாகத் தோன்ற….


இப்போது புன்னகை முகமாக…“நீ மட்டும் 4 வருசம் முன்னால பிறந்திருந்த…. ரயில்வே ஸ்டேசன்ல பார்த்த அன்னைக்கே உன்னைக் கடத்திட்டு போயிருப்பேன்டி... வேற யாருக்கோ உன்னைத் தூதுக்கு அனுப்பி இருக்க மாட்டேன்….” என்றவனின் வார்த்தைகளில் உண்மையோடு நேசமும் வழிந்து ஓட…சந்தியாவோ அவனைக் கிண்டல் செய்ய ஆரம்பித்து இருந்தாள்…”நான்… என்னை… காமெடிலாம் பண்ணாதடா… அப்போ நான்லாம் உன் கண்ணுக்கு அவுட் ஆஃப் ஃபோகஸ் பாஸ்… பார்த்தேனே…. அன்னைக்கு உன் வழிசலைத்தான்…. ’காது’ போட்ருந்த ஹைஹீல்ஸ்ல இருந்து…. அவ ஹேர் ஸ்டைல் வரை இந்த கண்ணால அலசுன அலசு…. இதுல இந்த டைலாக் வேறயா…” என்றவளின் வார்த்தைகளில் கொஞ்சம் கோபமும் மனைவிக்கே உரித்தான பொறாமையும் வழிந்தோடியது என்றே சொல்லலாம்…இவனுக்கோ மொத்த மோன நிலையும் அப்படியே வடிந்து போய் விட்டது போல தோன்ற… இதழ்களும்… கரங்களும் தானாகவே தளர்ந்தன…. மனைவியின் வார்த்தைகளிலேயே… அவள் விவரித்த அழகிலேயே“உண்மையிலேயே உனக்கு நான் உன் மேல காட்ற காதல் தெரியலையா சந்தியா…” ராகவ் மனதில் இருந்த ஆதங்கம் வார்த்தைகளில் வெளி வந்து விட…