சந்திக்க வருவாயோ?-42

அத்தியாயம் 42

/* உன்னை அள்ளி ஏந்தியே

ஒரு யுகம் போகவா.

தலைமுதல் கால்வரை

பணிவிடை பார்க்கவா.

லாளி லாளி

நானும் தூளி தூளி.

லாளி லாளி நீ

என் தூளி தூளி.

காலை அணைப்பின் வாசமும்

காதில் கிருங்கும் சுவாசமும்

சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே.*/

இன்றைய கால கட்டத்தில் விவாகரத்து என்பதெல்லாம் சாதாரண ஒன்றுதான்… வினாடிக்கு ஆயிரம் ப்ரேக் அப்ஸ், தடுக்கி விழுந்தால் நூறு விவாகரத்து… சுற்றிப் பார்த்தால் லிவ் இங் டூ கெதர் வாழ்க்கை முறை… இதெல்லாம் பார்க்காத கேட்காத… வீட்டுக்குள் இருக்கும் பெண் அல்ல அவள்…

இப்போது அப்படி கூட பெண்களைச் சொல்ல முடியாது… வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கே… உலகம் விரல் நுனியில் இருக்க…

ஏன் சந்தியா திகைக்க வேண்டும்… ஏன் இவ்வளவு அதிர்ச்சி… நிகழ்வுகள் தன் வட்டத்திற்கு வெளியே எனும் போது அது செய்தி… வட்டதிற்குள் எனும் போது… மனம் ஸ்தம்பிக்கின்றது… விசித்திரமான மனித மனத்தின் அளவீடுகள்…

அதே நிலைதான் சந்தியாவுக்கும்…

விவாகரத்து… ஒற்றை வார்த்தைதான்… ஆனால் அந்த வார்த்தை கடும் வேதனையைக் கொண்டு வந்தது…

இதே வார்த்தைகள்தான் அன்று தன் அன்னையிடமிருந்து வந்தது…

இங்கோ விவாகரத்து கேட்ட தன் மனைவியிடம் சந்தோஷ் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்….

வசந்திக்கோ… இந்த வார்த்தைகளுக்கான அவள் கணவனின் பதில்… வார்த்தைகளினால் அல்ல… கைகளினால் கிடைத்தது…

கண்கள் கசிந்தே விட்டன சந்தியாவுக்கு… தன் அண்ணனின் நிலையைப் பார்த்து…

தவறு செய்து விட்டான்தான் மன்னிப்பு கிடையாதா அவனுக்கு… ’ரூல்ஸ் ராமானுஜி’… விளையாட்டுத்தனமாக வைத்த பெயர்தான்… தனக்கான கொள்கைகள்… தனக்கான கோட்பாடுகள்… என யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் அவளின் நடவடிக்கைகள் பிடிக்காததினால் தனக்கு விபரம் தெரியாத வயதில் எரிச்சலில் வைத்த பெயர்… ஆனால் இப்போது மிருணாளினியை நினைக்கும் போதெல்லாம்… பெண்ணாக கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும்… எல்லோராலும் இப்படி இருக்க முடியாது என்று… ஆனால் அந்த குணம் தன் அண்ணனுக்கே வேதனையாக இருக்கும் போது…

இப்போதும் மிருணாளினியின் மேல் கோபம் எல்லாம் இல்லை சந்தியாவுக்கு… ஆனால் தன் அண்ணன் வாழ்க்கையை நினைத்து பயம் தான் வந்திருந்தது சந்தியாவுக்கு…

சந்தோஷுக்கு கோபம் எந்த அளவுக்கு வரும் என்று இவளுக்கும் தெரியும்… தன் அப்பாவோடு தன் அண்ணன் பேசினாலே கடும் விவாதத்தில் தான் முடியும்… ஒரு கட்டத்தில் இருவருமே அவரவர் எல்லைக் கோட்டில் நின்று கொண்டு விட… பெரிதாக சலசலப்புகள் இப்போது இல்லை அதுதான் உண்மை… அதிலும் சந்தோஷ் எப்போது குடும்பத்தில் தலையெடுக்க ஆரம்பித்தானோ அப்போதிலிருந்தே… இவள் தந்தை தன் ஆளுமையையும் அதிகாரத்தையும் மிக அதிக அளவில் குறைத்திருக்க… எப்போதாவது தான் சந்தியாவும் வசந்தியும் மாட்டுவார்கள்… தன்னிடமும் தன் அன்னையிடமும் அவர் அதிகாரத்தின் எல்லைகள் வரம்பு மீறும் போது போது சந்தோஷ் அடக்கிவிடுவான்… சந்தோஷ் ஆண்பிள்ளை என்ற காரணத்தினாலேயே தன் தந்தை அடங்கிப்போகிறார் என்று இவளாகவே நினைத்துக் கொள்வாள்…

அப்படிப்பட்ட தன் அண்ணன் மிருணாளினியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றான்… அவன் வாழ்க்கைக்காக மனைவியிடம் கையேந்தி நிற்கின்றானா…

ஸ்தம்பித்தவளாகி சந்தோஷையே பார்த்துக் கொண்டிருந்தவளை…

சந்தியாவைப் பார்த்த ராகவ்வுக்கோ.. இவள் ஓவராக ரியாக்ட் செய்கிறாளோ இல்லை ஓவராக தன்னைக் குழப்பிக் கொள்கிறாளோ என்று தோன்ற… அவளது ஓய்ந்த தோற்றம் இன்னொன்றையும் அவனுக்குள் சில விசயங்களையும் சொல்லாமல் சொல்லியது…

இந்த அளவுக்கு அவள் எமோஷனல் ப்ளாக் ஆகின்றாள் என்றால்… சந்தோஷ் மிருணாளினி விசயத்தோடு… தன் அன்னையையும் சேர்த்து நினைக்கின்றாள்..

இந்த சில தினங்களிலேயே அவனுக்கு இது நன்றாகத் தெரிந்தது… அந்த எண்ணம் தந்த விளைவு… கடுப்பான குரலில்

“சந்தியா” என்று அதட்டி அழைக்க… திரும்பினாள் தானே அவள்…

சந்தோஷ் மிருணாளினிதான் சுற்றம் மறந்து இருக்கிறார்கள் என்றால்.. இவளுமா…

“ஓ காட்”… வாய்க்குள்ளேயே முணங்கிக் கொண்டவனுக்கு…

”அவள் தன்னைப் பார்த்து மயங்கி நின்றிருந்தால் கூட பரவாயில்லை…” தன்னைத் தானே நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது ராகவ்வால்…

பிறகென்ன… அவள் கைகளைப் பிடித்து இழுத்தபடி வந்தவன்… அவன் அலுவலகத்தின் மற்றொரு அறைக்குள் அழைத்து வந்திருக்க… அந்த அறையின் அமைப்பெல்லாம் அவளின் கவனத்தை ஈர்க்கவில்லை… அப்படியே அமர்ந்திருந்தாள்… கவலையோடும் வேதனையோடும்

நொடிகள் பல கடந்தன… நொடிகள் நிமிடங்கள் ஆக… சில நிமிடங்களும் கடந்தன… பல நிமிடங்கள் கடக்க…. பல்லைக் கடித்தவன்… சந்தியாவின் திருவாளனே…

அமைதியாகவே அமர்ந்திருந்தாள் சந்தியா…. ராகவ்வைப் பார்த்த சந்தோஷம் கூட அவள் முகத்தில் இல்லை… எண்ணமெங்கும் தன் அண்ணனைப் பற்றித்தான்…

இப்போது… நிமிடங்களை மணித்துளியாக கடக்க விட ராகவ் என்ன பைத்தியக்காரனா!!!!….

அவளைப் பார்த்தபடியே அருகிலிருந்த இசைக்கருவியின் பட்டனைத் தட்டி விட… அடுத்த நொடி… அறை எங்கும் அதிரடியான காதைக் கிழிக்கும் சத்தம்… சந்தியாவின் காதில் வந்து விழுந்த சத்தம்… இல்லை இல்லை அந்த மேற்கத்திய இசையின் பல்வேறு வாத்தியங்களின் சத்தங்களின் அலைவரிசை… சந்தியாவின் நினைவலைகளின் அலைவரிசையை அறுத்து அவளது மூளையை வேறு திசைக்கு திருப்ப…

வேகமாக ராகவ்வை நிமிர்ந்து பார்க்க… அவன் தான் இவளையே பார்த்துக் கொண்டிருந்தானே… தன்னவளை ரசி