சந்திக்க வருவாயோ? -38

அத்தியாயம் 38

/*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது — ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் வேராரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்*/

இடம் டெல்லி : ஜெயவேலின் கண்கள் தன் முன் அமர்ந்திருந்த அதீனாவின் மீது மட்டுமே நிலைத்திருந்தது…. எப்போது அவர் அதீனாவை நேருக்கு நேர் சந்தித்தாரோ அன்றிலிருந்து அவர் அதீனா மேல் கொண்ட மோகம் பற்றி எறிய… பொருந்தா காதல்கூட இல்லை பொருந்தா காமத்தில் அவரது நினைவுகள் கண்கொத்திப் பாம்பாக அவளை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க.. இதோ இன்று அவருக்கு வாய்ப்புக் கிடைக்க பயன்படுத்திக் கொண்டார்… தன்னை… தன் முன் நிற்கும் கயவர்கள் பார்வையாலேயே துகிலுருக்கின்றனர் என்று தெரிந்த போதும்… அது அதீனாவை இம்மியளவு கூட பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்… இதை எல்லாம் கடந்து வந்தவள் தான் அதீனா… உணர்வுகளின் எல்லை கடந்தவளிடம் பார்வைகள் இம்சைப்படுத்துமா என்ன… அதீனாவும் அலட்ச்சியத்துடனே அமர்ந்திருந்தாள்… என்றே சொல்லலாம்… திமிரான பார்வையுடனே அவர்கள் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அதீனா கையில் கைவிலங்குடன்… ”கரண்… இந்தப் பார்வைதான் கரண்… இந்த பொண்ணு மேல எனக்கு ஒரு கண்ணு வைக்கத் தோணுச்சு…” என்று தமிழில் அவர் உரைத்த வார்த்தைகள் அதீனாவுக்கும் புரியும் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்… “ஜெயவேல்… இந்தப் பொண்ணை அவ்வளவு ஈஸியா நம்ம தூக்கிற முடியாது… ஃபுல் பாதுகாப்பு வளையத்தோட இருக்கிறவ… அந்த சிவா லாஸ்ட் டைம் நாம வந்த போதே அத்தனை கேள்வி கேட்டான்… அவனுக்கு உன் பார்வையே பிடிக்கலை…” என்று எச்சரிக்க “அவன் கிடக்கிறான் விடு்… அவனெல்லாம் ஒரு ஆளுன்னு… உனக்கு கீழ இருக்கிறவனுக்கு இவ்வளவு பில்டப் ஏன்… ஆமாம் இவளுக்கு எப்போ தீர்ப்பு சொல்லப் போறாங்க… அதிகப்பட்சமா தூக்கு தண்டனை… இல்லை ஆயுள் தண்டனை… ஆயுள் தண்டனைனா பொறுமையா இருப்பேன்… தூக்கு தண்டனைனா… “ என்று அதீனாவைப் பார்த்தவரின் கண்களில் கள்வெறி மட்டுமே இருக்க… அதீனாவின் அருகில் சென்றவர்.... அதீனாவின் தோள் வளைவில் கைவைத்தபடி… “இந்த கழுத்தை…. தூக்குக் கயிறு