அத்தியாயம் 34
/* பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா.... அன்பால் கூடவா...
அன்பே ஓடி வா அன்பால் கூடவா */
சந்தியாவின் இல்லம்…. அதாவது அவள் இத்தனை வருட காலமாய் பிறந்து வளர்ந்த இல்லம்… உறவினர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டிருக்க… மீதி இருந்த உறவினர் கூட்டத்தோடு சந்தியாவின் தந்தை கணேசன் சத்தமாக தோரணையோடு விவாதித்துக் கொண்டிருந்தார்.,…
”என்ன மாப்பிள்ளை இப்படி ஆகிருச்சு…. நாம யாருனு அந்த சுகுமாருக்குக் காட்டனும்….” என்று பெரிதும் ஆவேசப்பட்டு ஒருவர் கணேசனிடம் எகிற…
”புதுப்பணக்காரனாகிட்டாருல்ல… அதான் ஆடறான்……. பார்க்கலாம் அவனா நாமளானு” கூட்டத்தில் இன்னொரு உறவினர் ஒருவர் சலம்ப…
”பொண்ணா அது என்னமா எதிர்த்துப் பேசுது… அதுக்கு அவ குடும்பமே சப்போர்ட்…”
”அவன்லாம் நாம பாக்க வளர்ந்த பையன்… துள்றான்… சந்தியாவை மட்டும் குடுக்கலைனு வை… அங்கயே பொலி போட்ருப்பேன்…. அந்தப் பையனை…”
ராகவ் மீதும் அவர்கள் குடும்பம் மீதும் வஞ்சனை இல்லாமல் சொல்லம்புகளை எய்து கொண்டிருந்தது கூட்டம்…
இதை எல்லாம் கேட்டபடிதான் அவரவர் அறையினுள் இருந்தனர் சந்தியாவும் சந்தோஷும்…
சந்தியாவுக்கு சந்தோஷ் மிருணாளினி கவலை மட்டும்தானே தவிர… அவள் இங்கு வந்தது பற்றி… பெரிதாக ஒரு வருத்தமும் இல்லை துக்கமும் இல்லை… சொல்லப்போனால் அவள் வாழ்க்கைக்கான தெளிவுதான் அவளுக்குக் கிடைத்திருந்தது… ராகவ் பார்த்துக் கொள்வான் தங்கள் வாழ்க்கையை… அவள் கணவன் மீது பெரும் நம்பிக்கை… இந்தப் பிரிவு நிரந்தமில்லாத ஒன்று… தனக்காக கவலைப்பட ஒன்றுமே இல்லை …. ஆனால் தன் அண்ணன் நிலை… அவன் வாழ்க்கையை நினைத்து மனம் பெருங்கவலையில் விழ.. அதே கவலையோடு சந்தோஷ் அறைக்குச் சென்றாள்…
சந்தோஷ் நிலைதான் மொத்தமாக பிரண்டிருந்தது…
சுத்தமாக தன்னை மறந்து அமர்ந்திருந்தான்… நேற்றைய உடையினைக் கூட மாற்றாமல்… இன்னும் அப்படியே சித்த பிரமையில்… . தன் மனைவி கழட்டி எறிந்த தாலியினை பார்த்தபடி பித்துப் பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்….
நேற்று… அவள் வீட்டை விட்டு வெளியேறிய பின் அவள் பின்னாலேயே பித்து பிடித்தவன் போல தொடர்ந்து வந்தவன்… அதிகாலை வரை அவள் வீட்டின் முன் காரை நிறுத்தி அங்கேயே அமர்ந்திருந்தவனின் கோலம் இப்போது வரை மாறவில்லை…. அவனையுமறியாமல் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது…
தவறிவிட்டேன்…. திருந்தி விட்டேன் என்று சொன்னேனே… உண்மையைச் சொன்னால் இதுதான் பலனா…. கண்கள் விரக்தியில் இருந்தன…
இத்தனை விரக்தியிலும்…. தன் மனைவி தன்னை அவமானப்படுத்தி விட்டாள் என்று துளியளவு கூட நினைக்கவில்லை… தன்னை புரிந்து கொள்ள மாட்டாளா என்றுதான் ஏங்கியிருந்தான்.. அந்த உண்மையான காதலன்,…
“சந்தோஷ் “ தங்கையின் கமறலான குரல்… செவிகளை எட்டியபோதுதான்… தன் தங்கை அறைக்குள் வந்திருக்கிறாள் என்ற உணர்வே…. அதுவும் தன் முன் அமர்ந்திருக்கிறாள் என்ற சுயமே வர… இப்போது சந்தியாவைப் பார்த்தவனின் கண்கள்… இப்போது அதிகமாக விழி நீரை வெளியேற்ற ஆரம்பித்து இருந்தன.. தங்கையைப் பார்த்ததும்…
தன்னால் தன் சகோதரி வாழ்க்கையும் இப்படி ஆகி விட்டதே…. தான் ஒருவன் ஒருமுறை செய்த கோணல் செயல்.. நான்கு பேரின் வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டதே…. தாங்க முடியவில்லை சந்தோஷால்…
சந்தியாவை அணைத்துக் கொண்டு கதறியவன்….
“உன்னோட வாழ்க்கையையும் சேர்த்து நடுத்தெருவுல நிறுத்திட்டேன் தியா…. ஐயோ” என்றவன்… அதே வேகத்தில்
தன் கண்களைத் துடைத்தபடி…
“ரகுகிட்ட நான் பேசுறேன்மா… அவன் ரொம்ப நல்லவன்மா… ஏதோ ஒரு வேகத்தில் தான் உன்னை கூட்டிட்டு போகச் சொல்லியிருப்பாண்டா… உன்னை அங்க கொண்டு போய்ச் சேர்க்கிறது என்னோட பொறுப்பு… அண்ணாவை தப்பா நெனச்சுடாதடா…” சகோதரப்பாசமே இப்போது முன்னிலை வகிக்க…
சந்தியாவின் கண்களிலும் கண்ணீர்த்துளிகள்.. சந்தோசைப் பார்த்தபடி…
”ஏண்ணா இப்படி பண்ணின… 2 வருசம் லவ் பண்ணேல்ல… அப்போ சொல்லி இருந்தா இன்னைக்கு இவ்வளவு அதிர்ச்சி ஆகி இருக்காதே மிருணாவுக்கு… நீ ரிலேஷன்ஷிப்ல இருக்கறேனு தெரிஞ்ச்ப்ப எனக்கே அவ்வளவு வலி… தங்கச்சி நான் என்னாலயே முடியலையே... உன்னை மட்டுமே நம்பி வந்தவளுக்கு… முடியாதுன்னா… எந்த ஒரு பொண்ணுக்கும் தாங்க முடியாதுண்ணா….” என்றபோதே
சந்தோஷு அதிர்ந்து பார்த்தான்… தங்கையின் வார்த்தைகளில்… அதுமட்டுமல்ல… சந்தியாவுக்கு தன்னைப் பற்றி ஏற்கனவே தெரியுமா???… எப்படி தெரியும்??… இதயத்தில் சுளீரென்று வலி தோன்ற… தங்கையைப் பார்க்க முடியாமல் அவமானத்தில் தலை குனிந்தான்… சந்தியா அவன் நிலையை உணர்ந்தாள்தான் இருந்தாலும்… இனிமேலும் மறைக்க என்ன இருக்கின்றது
இப்போது சந்தியா… அவன் முகத்தைப் பார்க்காமல்..
“உன்னைப் பற்றி மட்டுமல்ல… நீ ஏன் அப்ப்டி பண்ணினேன்னு அதுக்கான காரணமும் தெரியும் “ என்ற போதே அவள் உதடுகள் துடித்தன… அடுத்த வார்த்தையை பேசக் கூட முடியாமல்… கண்ணீர் மட்டுமே… அவளிடமிருந்து வர
இன்னும் அதிர்ந்து போய்ப் பார்த்தான் சந்தோஷ்… எது தன் தங்கைக்குத் தெரியக்கூடாது என்று இத்தனை நாள் தாயும் தானும் மறைத்து வைத்த்திருந்தோமோ… அது… தந்தையைப் பற்றி தெரிந்து விட்டதா…
அடுத்தடுத்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவனிடம்…
தொடர்ந்தாள் சந்தியா…
“மிருணாளினி அன்னைக்குத்தான் உனக்கு ப்ரப்போஸ் பண்ணிருப்பாள்னு நினைக்கிறேன்… ஆனால் நீ வேண்டாம்னு சொல்லிட்டு மறுத்துட்டு வந்துருப்ப போல… அன்னைக்கு நீ தண்ணியடிச்சுட்டு வந்த… நான் தான் கதவைத் திறந்து விட்டேன்… ஞாபகம் இருக்கா… அப்போ நீ உளறினது தான் எல்லாம்… ’என்னால உன்னை லவ் பண்ண முடியாதுடி… உனக்கு தகுதியானவன் இல்லைனு… ஆரம்பித்து… நம்ம அப்பாக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருந்ததுன்ற வரை’…” நிறுத்தியவள்… சில நிமிடங்கள் அமைதியாகவே இருந்து பின்
“அம்மா தற்கொலை முயற்சிக்கு அதுதான் காரணமாடா…” இப்போது சந்தியா தேம்பி தேம்பி அழ… அவளை அணைத்துக் கொண்டான் வார்த்தைகளின்றி,…
”ஏண்டா இப்படி பண்ணின… அம்மாவைப் பார்த்தும்… எப்படிடா உனக்கு … இப்படி பண்ண மனசு வந்துச்சு… நீயும் அந்த மனுசிய கொண்ணுட்டடா…. “ வேதனையில் தன் அண்ணனை… அவன் இருந்த நிலையையும் மறந்து வார்த்தைகளில் குதற ஆரம்பிக்க…
“எனக்கு இந்த மேரேஜ் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு… சந்தியா… இந்தாளப் பார்த்து… என் லைஃப்ல எந்த பொண்ணுக்கும் இனி இடம் கிடையாதுனு… ஒரு முடிவெடுத்திருந்தேன்… அப்படிப்பட்ட முடிவுக்கு… அந்த கல்ச்சர் எனக்கு ஒத்து வர… தவறிட்டேன்… தப்புதான்… ஆனால் என்னால அதுல கண்டினியூ பண்ண முடியலடா… அதிகபட்சம் ரெண்டு நாள் தான் தாக்குப் பிடிக்க முடிஞ்சது… மூச்சு முட்டிருச்சுடா… ரெண்டே நாள்ள அதில இருந்து வெளிய வந்துட்டேன்… மேரேஜே வேண்டாம்னு இருந்தப்போதான் மிருணாளினி என் வாழ்க்கைல மறுபடியும் பார்த்தேன்… அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்டா… அது ஏன்னு அவளுக்கே தெரியாது…. நானும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் முடியவில்லை…” என்றவனை ஆயாசமாகப் பார்த்தாள் சந்தியா…
”மிருணாளினி பற்றி தெரிந்தும் ஏண்டா இப்படி பண்ணின…” என்று வந்த ஆயாசம் அது…
“அவளோட காதல் எல்லாம் அவ்வளவு ஈஸியா யாருக்கும் கிடையாது் சந்தியா… ஏதேதோ சொல்லி மறுத்த நான் இந்தக் காரணத்தை மட்டும் சொல்லலை… ஏன்னா எனக்கும் அவளைப் பிடிக்க ஆரம்பிச்சுருச்சு… அவளை.. அவ காதலை விட்டு விலக மனசு சம்மதிக்கல தியா” அலைபாய்ந்தன அவன் விழிகள்… அதில் மிருணாளினியின் நினைவுகள் மட்டுமே…
”காதலிக்கும் போது என்னை விட்டுப் போயிருவாளோன்ற பயம்… இப்போ அவளோட உண்மையான காதலுக்கு பயம்… இனி என்ன ஆனாலும் பரவாயில்லைனு சொல்லிட்டேன்மா… ” என்றவன் சந்தோஷமாகப் பார்த்தான் தன் தங்கையை..
“மிஸஸ் மிருணாளினி சந்தோஷ்…. இது போதும் சந்தியா… எத்தனை வருடம் என்ன எத்தனை ஜென்மம் ஆனாலும் அவளை என்னோட கொண்டு வந்து சேர்க்க…” என்றவனின் விழிகள் வெறிக்க ஆரம்பிக்க… சந்தோஷையே… வேதனையிலும் அவன் கண்களில் தெரிந்த அளப்பறிய காதலை வைத்த கண் வாங்காமால் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் சகோதரி…
”மிருணா போனே எடுக்க மாட்டேங்கிறா தியா… என் கூட இருந்து எவ்வளவு பிரச்சனை பண்ணினாலும் நான் தாங்குவேன்… அவ அங்க தனியா இருக்கா… அவ அண்ணா .. அப்பால்லாம் அவளை சமாளிக்க முடியாது.. என்னால மட்டுமே முடியும்… அது அவளுக்குத் தெரியும்… அந்த காரணத்துக்காகத்தான் என்னை பக்கத்தில விட மாட்டேங்கிறா… ” என்று உறுதியாகச் சொன்னவன்… அதே நேரம்
”ரகுக்கு போன் பண்ணி பேசினாலும் பேச மாட்டேங்கிறா தியா… மனசு வலிக்குது” என்று மீண்டும் மீண்டும் மிருணாளினியின் நினைவுகளில் வீழ்ந்தவனை.. தேற்ற வார்த்தைகளைத் தேடத்தான் முடியவில்லை… இருந்தும்
”நீ ஃபர்ஸ்ட் குளி… வேற ட்ரெஸ் மாத்து,…. அம்மா வேற சுத்தமா உடஞ்சு போய்ட்டாங்க…. எங்க போகப் போறா மிருணா… அவகிட்ட உன்னைப் புரியவைக்க உன்னால முடியும்டா… அவங்க உன்னைப் பிடிக்கலைனு போகலையே… உன்னை ரொம்பப் பிடிச்சதுனாலதான் அதுனால வந்த ஏமாற்றம் தான் … உச்சக்கட்ட அதிர்ச்சில இந்த முடிவ எடுக்க வச்சுருக்கு… விட்டுப்பிடி… ” என்று சொல்லி இன்னும் எவ்வளவு சமாதானப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்து அவனை குளியலறைக்குள் தள்ளியவள்… அடுத்து தாயிடம் சென்றாள்…
ஏனோ தன் தந்தையைப் பற்றி சந்தோஷிடம் அதிகம் பேசவில்லை…பேசவும் விரும்பவில்லை…. சந்தோஷ் இருந்த மனநிலையில் இவளுக்கு தந்தையின் விசயம் தெரிந்துவிட்டது என்று அதிர்ந்ததோடு சரி… அவனும் அதோடு விட்டுவிட்டான்… மிருணாளினியைப்பற்றியே அவனது எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்ததால் விட்டு விட்டானோ… தெரியவில்லை
வசந்தி இன்னுமே தெளியவில்லை … தன் மக்களின் நிலை என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் அவருக்கு இருந்த லோ பிபி வந்து விட… வசந்தியிடம் எதுவும் பேசி… இன்னும் நிலைமையை மோசமாக்க விரும்பாமல்… அன்னைக்குத் தேவையான மாத்திரைகளை கொடுத்து விட்டு… அவரை உறங்க வைத்த சந்தியா கிச்சனுக்குள் நுழைந்து காலை உணவுக்கு சமையல் செய்ய ஆரம்பித்தாள்…
ஒருவேளை திருமண நிகழ்வுகள் நன்றாக தொடர்ந்திருந்தால் உறவினர்கள் கூட்டம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை…. அனைவரும் திவாகர் வீட்டுக்கு சென்று விட்டிருந்தனர்…. இங்கு கணேசனோடு பேசிக் கொண்டிருப்பர்களுக்கும் சேர்த்து சமைப்பதாக திவாகர் வீட்டில் இருந்து போனில் சொல்லிவிட … தங்கள் 4 பேர்க்கு மட்டுமே என்பதால் சந்தியா சமைக்க ஆரம்பிக்க…. ஹாலில் இன்னும் கணேசன் காரசாரமாக பேசிக் கொண்டிருக்க… தன் தந்தை பேசுவதை எல்லாம் அவள் கணக்கில் கொள்ளவும் இல்லை…. நேற்றிருந்த தன் மண வாழ்க்கை பற்றிய மன ரீதியான பயம் தயக்கம் எல்லாம் போய் விட்டதால் உடலும் நேற்று போல அவளை வருத்த வில்லை…. வீட்டில் இருக்கும் நிலைக்கு இப்போது அவள்தான் அனைவரையும் தேற்றி சரி படுத்த வேண்டிய நிலைமையிலிருக்க… என்ன செய்யலாம்… எப்படி சந்தோஷ் மிருணாளினியை சேர்த்து வைப்பது… என்று யோசனையோடு சமைத்துக் கொண்டிருந்தாள்….
காலை 8 மணிக்கு இங்கு வந்தது…. முழுமையாக 2 மணி நேரம் ஓடிப்போயிருக்க…. அவளின் எண்ணங்கள் இங்கிருந்து மாறி… தன் கணவன் வீட்டிற்குச் சென்றது…. மிருணாளினியின் கோபம் தணிந்திருக்குமா…. தன் வாழ்க்கையைப் பற்றி… இங்கு அவளே வாழ்க்கை என பித்துப் பிடித்தார்ப்போல இருக்கும் அவள் கணவனைப் பற்று சிறிதேனும் நினைத்துப் பார்ப்பாளா… கவலையாக வந்தது சந்தியாவுக்கு….
கை சமையலை கவனிக்க… எண்ணங்கள் அலைப்பாய்ந்து கொண்டிருக்க… அவளையும் மீறி அவளது விழிகள் அவளது போனையே பார்த்துக் கொண்டிருந்தன அவ்வப்போது….
‘ரகு போன் செய்வானா…. பேசுவானா…. தன்னை அனுப்பியதற்கு கண்டிப்பாக வருந்துவான்… என்பது நிச்சயம்…’ என்று நினைத்தபோதே… அவளையுமறியாமல் கண்ணில் நீர் வந்து விட்டது… என்னவோ ராகவ்வை யுகம் யுகமாக பிரிந்தது போல் இருந்தது… இந்த இரண்டு மணி நேரத்தில்…
இதுநாள் வரை அவள் கூட இருந்த அத்தனை பேரும்…. அவளைச் சுற்றி இப்போதும் இருக்கின்றார்கள்… ஆனால் அவர்கள் யாருமே இவளுக்கு முழுமையைத் தரவில்லை… சூன்யமாக இருந்ததது… எங்கு பார்த்தாலும் … எதை நினைத்தாலும் ரகு ரகு ரகு மட்டுமே… ஒரே நாள் இரவில் தன் ஒட்டு மொத்த உலகமும் அவனாக மாறிப்போன விந்தையை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது…
நேற்றைய இரவு எல்லைகள் மீறாத இரவே என்ற போதிலும்… மனம் முற்றிலுமாக சாய்ந்த விந்தை அவளுக்கே புதியதாக இருக்க அவளையுமறியாமல் அவள் முகத்தில் புன்னகை படர… இத்தனை நாள் ரகு என்ற வார்த்தையில் புரியாத… வராத பரவசம் இன்று நினைக்கும் போதே வந்திருக்க… உற்சாகமாகவே இருந்தாள் நேற்றைய நினைவுகளோடு…
போர்வையை தூக்கி எறிந்து விட்டு அவனையே அவளைச் சுற்றி அரணாக அமைத்தவன்… ஏதேதோ பேசினான் பேசினான்… பேசிக் கொண்டே இருந்தான்… ஆனால் அவன் உதடுகள்… அதிகமாக பேசும் பணியைச் செய்தவனவா… இல்லை இவள் மேனியில் முத்தமிடும் பணியைச் செய்தனவா இவளுக்கே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை… சந்தியா அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாளா… இல்லை அவன் இதழ் தீண்டலில் மூழ்கி மூழ்கி மீண்டு கொண்டிருந்தாளா… அதையும் கணக்கிட முடியவில்லை…. உறக்கத்தில் அவளையுமறியாமல்… கண்களை மூட… இமைகளில் பதித்த அவனது இதழ் ஒற்றல்தான் இவளது கடைசி ஞாபகமாக இருக்க..… முடிவில் சோர்ந்து இவளும் முடித்துவிட்டாள் அந்தக் கணக்கை முடிவற்ற எண்ணிக்கையாக… …
ஆனால் கணக்கிலடங்கா… புன்னைகை தடவிய அத்தனை இதழ் தீண்டலிலும் அவன் கண்கள் தாபம் காட்டவுமில்லை…. இவளுக்குள் மோகத்தை பற்ற வைக்கும் மன்மதக் கலையையும் காட்டவில்லை... காதல் மட்டுமே…. கனிவு மட்டுமே…. இப்போதும் அவன் காட்டிய அதே காதல் நினைவில்… அவள் கணவன் நினைவில் அப்படியே தன்னை மறந்து மெய் மறந்து நின்றாள் தான் சந்தியா… நல்லவேளை இத்தனை வருட சமையல் பழக்கம்… அவளை அனிச்சையாக செயல்படுத்திக் கொண்டிருந்தது… அதனால் சமையலில் அவள் சொதப்பவில்லை…
ராகவ் தன் குடும்பத்தின் மீது கோபமாகத்தான் இருப்பான் என்று தெரியும்… ஆனால் தன்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான்… என்று உறுதியாக நம்பினாள்… ஆனாலும் எங்கோ ஒரு மனம் அவன் ஏன் இன்னும் தன்னுடன் பேச வில்லை….அட்லீஸ்ட் ஒரு மெசேஜாவது அனுப்பி இருக்கலாமே..ஏன் அனுப்பவில்லை என்று சஞ்சலத்துடனே இருக்க… அப்போதுதான் உணர்ந்தாள்… தன் போன் நம்பர் அவனுக்குத் தெரியுமா…. ஒரே ஒரு முறை இவள் அவனுக்கு போன் செய்திருந்தாள்…. தன் நண்பர்களுக்கு கொடுத்த விருந்தில் கலந்து கொள்ள அழைக்க… சுகுமார்தான் கொடுத்திருந்தார் தன் மகனின் எண்ணை…. அப்போதே பதிவு செய்ய நினைத்தாள்தான் தன் அலைபேசியில்… ஆனால் கார் ஆக்ஸிடென்ட் இடையில் வந்து விட அப்படியே விட்டுவிட்டாள்… ஆனால் அவனது எண்கள் இவளது இதயத்தில் பதித்திருக்க… அதை பதிவு செய்யும் அவசியம் இல்லாமல் போயிருந்தது… அதேபோல ராகவ்வும் இவள் நம்பரை வைத்திருப்பான் என்றே நினைத்திருந்தாள்…. இதுவரை… தனது எண் அவனிடம் இருக்கும் என்ற எண்ணத்தில் தான்… அவன் பேசட்டும் என்று அவன் பேசும் வரை காத்திருந்தாள்…
ஆனால் இப்போது தன் எண்ணே அவனிடம் இருக்குமா என்ற சந்தேகம் வந்து விட… நேற்று ஏதேதோ பேசினோமே இருவரும்… தன் எண்ணை வைத்திருக்கிறானா என்று.. தான் கேட்டோமா… இல்லை அவன்தான் கேட்டானா…
“ரொம்ப நல்லா வருவோம்டா நீயும் நானும்” இருவரையுமே ஒரு சேரத் திட்டிக்கொண்டவள்..
அதற்கு மேல் அவன் பேசும்போது பேசுவோம்… என்று காத்திருக்கத் தோணவில்லை அவளுக்கு…. வேக வேகமாக தனது மொபைலை எடுத்தவள்…. ராகவ்விற்கு கால் செய்ய… அதுவோ அணைத்துப் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பை சொல்ல மீண்டும் மீண்டும் இவள் முயற்சிக்க… எதிர்முனைக் குரலும் அசரவில்லை… அதே பதிலை திரும்ப திரும்ப இவளுக்கு சொல்ல.
”ச்சேய்… போனை ச்விட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன பண்றான் இவன்… “ என்று தன் போனைப் பார்த்தபடியே கணவனைத் திட்டியவள்…போனிடம் கோபம் என்பது போனை முறைத்துப் பார்த்தபடி மனைவியவள் வைக்க…
அவள் கணவனோ …. மிருணாளினியின் கரங்களால் தூக்கி எறியப்பட்டு… சுக்கு நூறாகிப் போன தன் மொபைலின் பாகங்களை சேகரித்துக் கொண்டிருந்தான்… அவன் தங்கையின் அறையில்
/* என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி */
Kommentare