சந்திக்க வருவாயோ?-32

அத்தியாயம் 32:

/*ஆண் ஒருவன் தாயான அதிசயத்தை பார்த்தேனே

காதலியை தாலாட்டும் காதலனை கண்டேனே


என் நிழலை யாரும் தான் மிதித்து போக விட மாட்டாய்

என்னைக் கிள்ள எனக்கேதான் சம்மதங்கள் தர மாட்டாய்*/

அத்தியாயம் 32:


மொத்தமாக எடுத்து முடித்தாகி விட்டது… புயல் வந்து வீழ்ந்த மரம் போல சுருண்டிருந்தாள் சந்தியா… ராகவ் அவளை அழைத்துச்சென்று முகம் கழுவி … துடைத்து விட்டு… மீண்டும் தண்ணீர் அருந்தவைத்து… கட்டிலில் அமரவைக்க… அமரக் கூட முடியவில்லை…தலையில் எதையோ வைத்து அழுத்துவதைப் போல பாரமாக இருக்க…. அப்படியே சுருண்டு படுத்து விட்டாள் சந்தியா அதே ஈரப் புடவையுடன்…. பசி வேறு வந்து வயிற்றைக் கிள்ள…. அங்கிருந்த பழங்களை நோட்டமிட்டன கண்கள்…. இருந்தும் ராகவ் என்ன சொல்வானோ என நினைத்தபடி… அவனைப் பார்க்க… அவனோ அவனது அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிக்க… அவனைவிட்டு அறையை நோட்டமிட…. அறை முழுவதும் அவள் உடைத்த பாட்டிலின் கண்ணாடிச் சிதறல்கள்…. சிதறிய பால் துளிகள்…என அந்த அறையே அலங்கோலமாக இருக்க… அதைப்பார்த்தவள்… அவளையுமறியாமல் மெதுவாக எழ முயற்சிக்க……. அப்போது கையில் அவனுக்கான மாற்றுடைகளை எடுத்தபடி வந்தவன்... ஈரப்புடவையில் மடங்கி அமர்ந்திருந்த சந