சந்திக்க வருவாயோ?-31

அத்தியாயம் 31:

/*மஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வா

மஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வா

தூறல் சிந்திடும் காலைத் தென்றலே வா வா வா

கண்களுக்குள்ளே தொலைந்த உருவம்

கண்ணீரின் வழியே வரைந்த கடிதம்

தெறித்த துளியால் வரிகள் மறைய

உப்புக் கரிசல் உறையிலே

உணர்ந்து கொள்வோம் உதட்டிலே*/

சந்தோஷ்-மிருணாளினி மற்றும் ராகவ்- சந்தியா திருமண நாள்… இரு குடும்பங்களின் பரபரப்பும் உச்சக்கட்டத்துக்கு வந்திருக்க… அங்கு மங்கல வாத்தியங்களும்… பட்டுபுடவைகளின் அணி வகுப்பும்… இளவட்டங்களின் செல்ஃபிகளும் என கலகலப்பாக அரங்கேற்றம் ஆகிக் கொண்டிருக்க… மிருணாளினி சந்தோஷ் இருவருக்குமான திருமண முகூர்த்த நேரம்….

சுகுமாரும் - யசோதா கணேசன்- வசந்தி இரு தம்பதியரும் தாரை வார்த்துக் கொடுத்துக் சடங்கில் ஈடுபட்டுக்கொண்டிருக்க…

மிருணாளினி பாந்தமாய் அமர்ந்து… புரோகிதர் சொல்லச் சொன்ன மந்திரங்களை கருமமே கண்ணாகச் சொல்லிக் கொண்டிருக்க…. அவளின் தீவிர பாவமே… எந்த அளவுக்கு சந்தோஷை விரும்புகிறாள் என்று விளக்க… மகளின் மனமகிழ்ச்சியே அவர்களுக்கு பெரும் நிம்மதியைத் தர …

மிருணாளினியின் முகத்தில் இருந்த புன்னகை இவர்களுக்கு பரமதிருப்தியைத் தந்தாலும்… மகளைப் பெற்ற பெற்றோராக…. சுகுமார் யசோதாவிற்கு கண்கள் கலங்க… இவர்களைப் பார்த்த ராகவ்வையும் அந்தக் காட்சி கண் கலங்க வைக்க… தன் தாயின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டவன்..

“அம்மா… ஏன்மா… மிருணா பார்த்துட்டு அழப் போறா… கண்ணைத் துடைங்க…” என… மகனின் வார்த்தைகளைக் கேட்டவராக… தன் கண்களைத் துடைக்க…

அதே நேரம்…

வசந்தி…. தன் மகள் தயாராகி விட்டாளா என்று பார்க்க அவளது அறைக்கு வந்திருந்தார்…

மணமகள் அலங்காரத்தில் சந்தியா ஆயத்தமாகிக் கொண்டிருக்க..

அவரது ஆசை மகளைக் காண அவருக்கே கண் கோடி போதாது போலிருக்க… தன் மகளைச் சுற்றி போட்டவராக…. சந்தோஷமாக பார்த்தவரிடம்….

”அம்மா சந்தோஷ் மேரேஜ பார்க்க முடியுமா “ என்று கெஞ்சலாகக் கூறியவளிடம்… இன்னும் தெளிவில்லை தான்…

“நீ இல்லாமலா…. உன்னைக் கூட்டிட்டு போகத்தான் வந்தேண்டா…. ” என்று வாஞ்சையுடன் கூறியவள்…. அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண்களிடம்…

“சந்தியாக்கு இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதுதான் முகூர்த்தம்…. சிம்பிளா மேக்கப் பண்ணினால் போதும்… அவதான் நாத்தனார் சடங்கெல்லாம் செய்ய வேண்டும்…

என்ற போதே …

அந்த பெண்களும்

“அனுப்பிடறோம் ஆன்ட்டி…” என்றபடி மிதமான அலங்காரத்தில் சந்தியாவை அனுப்பி வைக்க… தன் தாயுடன் மேடையில் ஏறினாள்…

மேடையில் நின்றிருந்த ராகவ்வோ… சந்தியாவை தன் வாழ்க்கையில் அப்போதுதான் முதன் முதலாக பார்ப்பது போல… தன் விழிகளை அவள் மீது பதித்தவன் தான்… பார்வையை அகற்றவில்லை… மேடையேறி… தன் அருகில் வந்து நிற்கும் வரை…

இத்தனை நாளாக … இதுவரை தோன்றாத உணர்வுகளெல்லாம் அவனுக்குள்… இன்னும் ஒரு மணி நேரம் என்பதைக் கடத்தவே அவனுக்கு பெரும்பாடாக இருக்க… இருக்கும் இடம் உணர்ந்து தன்னை அடக்கியவன்…

விட்ட பெருமூச்சின் அனலின் அளவை அளவீடு செய்ய இதுவரை எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை…

இதையெல்லாம்.. அவன் எண்ணத்தின் நாயகி உணரவும் இல்லை…. உணர்ந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை…

தான் நாயகனின் நாயகி… என்ற நினைவு இருந்தால் தானே … இப்போதைக்கு… சந்தோஷின் தங்கை… அது மட்டுமே நினைவில் இருக்க….

ராகவ் சந்தோஷின் அருகில் நிற்க…. மிருணாளினியின் பின்னால் நின்று கொண்டாள் சந்தியா… தன் உரிமையான நாத்தனார் முடிச்சை போடும் பேராவலில்….

சந்தியா மனதில் பெரும் சோகம் எல்லாம் இல்லை…. ராகவ்வை மட்டுமே நினைத்து பயம்… அதிலும்… நாள் நெருங்க… நெருங்க பயம் அதிகரித்தது என்ற நிலை மாறி… இப்போது நேரம் நெருங்க… நெருங்க… பயத்தின் அளவு எகிறியது என்றே சொல்லலாம்… ஆனாலும்…இவள் வாய் திறந்தால் மட்டுமே அங்கு போர்க்களம் என்ற நிலை… தன் தவிப்பை எல்லாம் மனதில் வைத்து புழுங்க மட்டுமே முடிந்தது….. அதிலும் முதல் நாள் இரவில் இருந்தே அவளின் மனதின் அழுத்தத்தோடு உடலும் ஒத்துழைக்காமல் போக… இப்போது தனக்கு முடியவில்லை என்று சொன்னால் யார் என்ன நினைப்பார்களோ… அந்த பயமும் வேறு… எதையும் யாரிடமும் சொல்ல முடியாத காட்ட முடியாத தவிப்பு… என எல்லாம் சேர்ந்து தனக்குள்ளேயே மனம் குமைந்து கொண்டிருந்தாள்…

நேற்று நிரஞ்சனா நிலைமைக்கே ஆளாளுக்கு பேச ஆரம்பித்திருந்தார்கள்…

“இது என்ன திடிரென அபசகுனமாக… அது இது என்று”

அதிலும்… இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக…

சந்தியா உறவில்… அப்படிக் கூட சொல்ல முடியாது… சுகுமார் - கணேசன் இருவருக்குமே பொதுவான உறவுதான்… அந்த மூதாட்டி…

”பொண்ணு கொடுத்து பொண்ணை எடுக்கிறதுலாம் சரி… ஒரே நாளில்.. ஒரே மேடைல வைக்கனுமா… நம்ம பழக்கத்தில இப்படி பண்ணவே மாட்டோம்… இதுல ஒரு ஜோடி மட்டும் தான் நல்லாருக்கும்… நாம சொல்றதை யார் கேட்கிறாங்க” என்று நீட்டி முழங்கி அங்கலாய்க்க…

கேட்ட சந்தியாவுக்கு அது இன்னும் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருந்தது அவளிருந்த சூழ்நிலையில்…

நிரஞ்சனா என்று யோசித்தவளுக்கு… இன்னொரு கவலையும் இப்போது சந்தியாவுக்குள் …

நேற்றிரவு….நடந்தது இது….

தள்ளாட்டத்துடன் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவளுக்கு.. கண்களை இருட்டிக் கொண்டு வர… நடக்கவே முடியாதது போல் தோன்ற…. நிரஞ்சனாவின் உதவி கட்டாயம் தேவை என்றே தோன்றியது… வேறு வழி இன்றி

“ரஞ்சி…” என்று வார்த்தைகளைக் கூட உச்சரிக்க முடியாமல் அழைக்க… நிரஞ்சனாவிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போக…

தன் பலத்தை எல்லாம் திரட்டி…

“நிரஞ்சனா” என்று சத்தமாக அழைக்க… பதிலே இல்லை..

நிரஞ்சனாவிடம் இருந்து மறு வார்த்தை எதுவும் வராமல் போக… வேறு வழியின்றி தட்டுத் தடுமாறி… சுவற்றை பிடித்தபடி அறைக்குள் வந்தவள்… அப்படியே அதிர்ந்து நின்றாள்… நிரஞ்சனா… மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து….

இவளே கிட்டத்தட்ட அந்த நிலைமையில் தான் இருக்க… நிரஞ்சனாவும் இப்போது இப்படி கிடக்கின்றாளே… என நினைக்கும் போதே… தான் குடித்துவிட்டு மீதம் வைத்துப் போன குளிர்பானம் நினைவுக்கு வர… சந்தியாவின் பார்வை அனிச்சையாகவே அங்கு செல்ல… அதில் இவள் குடித்தது போக மீதம் அப்படியே இருக்க… நிம்மதி பெருமூச்சு விட்டவளுக்கு… பெண்ணாக எச்சரிக்கை உணர்வு வர…

தாங்கள் இருந்த