சந்திக்க வருவாயோ?? 30

அத்தியாயம் 30

/*கண்ணாளனே எனது கண்ணை

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு

ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ*/


”இனி வாழ்நாள் முழுதும் நான் சொல்றதை மட்டும் தாண்டி நீ கேட்கனும்…. “ என்று திமிரான குரலில் கர்வத்துடன் சொன்ன ராகவை எதிர்த்து பேச ’நா’ நினைத்த போதிலும்…. மனம் அவனிடம் எதையோ எதிர்பார்த்து…. அவனிடம் அது கிடைக்காமல் போன ஏமாற்றம் சந்தியாவை அடியோடு கொல்ல….ஏனென்று தெரியாத மனவலி… “தன் தாயின் நிலைதான் இனி நமக்குமோ” என்றெல்லாம் யோசித்தவள் தன்னையுமறியாமல் “ரகு” என்றாள்… மெல்லிய குரலில் விசும்பலாக…. தன் சம்மதம் இன்றி தன்னை ஆள நினைத்தவனை… தடுக்க முடியாமல் அவளையும் மீறி குரல் நடுங்க… கண்களில் ஈரம் கசிய… ஆனால் அவனோ எதையும் கண்டு கொள்ளாமல்… அவளை வலுக்கட்டாயமாக தன் கீழ் கொண்டு வந்தவன் அவளை நோக்கி குனிய… ”ரகு… நோ” என்று அலறியபடி கட்டிலில் இருந்து எழுந்தவளின்… முகமெங்கும் வியர்வை முத்துக்கள்… பயத்தில் உலர்ந்த உதடுகளை ஈரமாக்கிக் கொண்டவள் “ஊப்ப்ப்ப்… கனவா” என்று நெற்றி வியர்வையைத் துடைத்தவளின் இதயமோ தாறுமாறாக அதன் லப்டப் ஓசையை பதிவு செய்ய… அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே கவிழ்க்க… அப்படியும் நடுக்கத்தை குறைக்க முடியவில்லை… சற்றுமுன் நடந்ததெல்லாம் கனவுதான்.. நிஜமல்ல என்று மூளை உணர்ந்தாலும்… அவள் மேனி உணரவில்லை போல … அவள் தேகம் நடுங்கிக் கொண்டிருப்பதை அவளால் நிறுத்த முடியவில்லை.. கனவின் தாக்கம் இன்னும் இருக்க படபடப்பு அடங்கவில்லை… மூச்சு விடவே முடியாதது போல் இறுக்கமாக இருப்பது போல தோன்ற… அருகில் அடித்துப் போட்டாற் போல படுத்திருந்த வசந்தியை தொந்திரவு செய்யாமல்… பார்த்து கவனமாக எழுந்தவளுக்கு சற்றே வெளிக்காற்று படும்படி… வெளியில் போய் நின்றால்…. சற்று இந்த நிலைமை மட்டுப்படும் என்று தோன்ற… வேறு எதையும் யோசிக்காமல்… அறையில் இருந்து வெளியே வந்தவள்… ஹாலைப் பார்க்க… அப்போதுதான் மண்டையில் சுளீரென்று உரைத்தது…. திருமணம் நடக்க 2 நாட்களே இன்னும் இருக்க… அங்கும் இங்குமாக பொருட்கள் பரப்பிக் கிடக்க… கிராமத்திலிருந்தும் வெளியூரில் தங்கி இருந்த உறவினர்கள் கூட்டம் வேறு… மிரட்டிய கனவில் இருந்து தப்பிக்க நினைத்து வெளியில் வந்தவள்… உறவினர்கள் கூட்டத்தைப் பார்த்ததும்… அப்படியே பின்வாங்கினாள்… அர்த்த ராத்திரியில் இப்படி இவள் உலாவுவதைப் பார்த்தால் வேறு வினையே வேண்டாம்… உணர்ந்தவள்… மீண்டும் தன் அறைக்குள்ளேயே போய் முடங்கியவள்… நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு… அலுப்பில் உறங்கிக் கொண்டிருந்த தாயைப் பரிதாபமாகப் பார்த்தபடியே இருந்தாள்.. அதிலும் இத்தனை பேர் முன்னிலையில்… தன் தந்தை ஏவும் ஏவல்களை எல்லாம் சலிப்பின்றி மற்றவர் அறியாவண்ணம் புன்னகை முகமூடி அணிந்து செய்து முடிக்கும் பாங்கு… தாய் உறங்கும் போது அந்த புன்னகை முகமூடி இல்லை… அருகில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் தன் தாயையே பார்த்தபடி இருந்தவளுக்கு… தாயின் நினைவுகள் மனதை பின்னோக்கி இழுத்துச் செல்ல… முயன்று அடக்கினாள்… இப்போதைய தன் நினைவுகளில்…. இன்னும் ஒரே இரவுதான்… தன் தாயுடன்… இந்த வீட்டில்… அதன் பிறகு… நினைத்தபோதே உள்ளுக்குள் கிலி பரவியது சந்தியாவுக்கு… இந்த இலட்சணத்தில் சற்று முன் வந்த கனவு வேறு… கனவா… இல்லை இந்த ஒரு வாரமாக… அதாவது ராகவ்வை பார்த்துவிட்டு வந்த பின்னர் அவன் நடந்த விதத்தில் இவளுக்கிருந்த மனநிலையில்… வந்த எண்ணங்களோ… திருமணப் பெண்ணாக சந்தோஷ கற்பனைகளில் உறக்கம் தொலைக்க முடியாமல்… ராகவ் பற்றிய கவலையான எண்ணங்களில்… தனது நிம்மதியைத் தொலைத்து… அதன் தொடர்ச்சியாக உறக்கத்தையும் தொலைத்து… மேலும் யாரிடமும் சொல்லமுடியாமல் தனக்குள்ளே வைத்து வேறு மனம் புழுங்கிக் கொண்டிருக்க… அதுவே அவளை முற்றிலுமாக களை இழக்க வைத்திருந்தது… இதில் காதம்பரிக்கு வேறு திடிரென்று பிரசவ வலி வந்துவிட… அதில் சிக்கல் ஏற்ப்பட்டு… அறுவைச்சிகிச்சை , குறைமாதக் குழந்தை என.. அந்தப் பிரச்சனைகளும் வேறு அவளுக்கு இன்னும் மன அழுத்தத்தை அதிகப்படுத்த…. குறைந்தபட்சம் காதம்பரியிடம் சொல்லியாவது மனதை இலகுவாக்கியிருப்பாள்… ஆனால் அதற்கும் வழி இல்லை.. நிரஞ்சனாவிடம் அந்தரங்கங்களை எல்லாம் சொல்லும் அளவிற்கு பழகவும் இல்லை… அதிலும் ராகவ் நடந்து கொண்ட முறையை அவளிடம் சொல்லி ஆறுதல் தேடவும் சந்தியாவுக்கு விருப்பம் இல்லை… நினைவுகள் சற்று முன் வந்த கனவுக்குத் தாவ…. அது அவளை அன்றைய தினத்தில் ராகவ் நடந்து கொண்டதை விட மூர்க்கத் தனமாகவே காட்சி அளிக்க… அன்று அவனைத் தள்ளி விட்டு ஓடி வந்து விட்டாள்… ஆனால் இனி… அதாவது தன் வாழ்நாள் முழுவதும்… எப்படி அவனைச் சமாளிப்பது… ”மனைவி ஆகி விட்டாய்… இனி என்ன சொன்னாலும் நீ கேட்க வேண்டும்…. என்ற ஆண் வர்க்கத்தின் அடிமைத்தனமாக அவளை ஆட்க்கொண்டால்… இதுவரை ராகவ்வை அவள் விளையாட்டுத்தனமாகவே எதிர்கொண்ட காட்சிகள் கண்களில் தோற்ற பிம்பமாக தோன்றி மறைந்திருக்க… கண்களை மூடி அந்த விளையாட்டுத்தனம் நிரம்பிய ரகுவை தன் கண்களுக்குள் நிரப்ப முயன்று தோற்றுப் போனாள் என்றே சொல்லலாம்… அன்று அவளை தனக்குள் கொண்டு வந்து அடக்கிய அவனின் வலியகரங்கள்… கனல் விழி… கணப் பொழுதில் தன்னை ஆக்கிரமித்த விதம்… மூடிய கண்களில் விழி நீரை வெளியேற்ற ஆரம்பித்து இருக்க… இவள் விலக்கிக் கொள்ளவே முடியாமல்… ஆட்கொண்ட விதத்தை நினைக்க.. இலகுவானவன் என்று இதுநாள் வரை இவள் நினைத்து வைத்திருந்த மாய பிம்பத்தை அவனின் வலிய உதடுகளின் அழுத்தமான முத்தம் உடைத்தெறிந்த அந்த கணத்தை நினைத்தவளுக்கு உயிர் மொத்தமும் கருகியது…. எவ்வளவோ போராடினாள்.. ஆனால் அவன் இதழ் சிறையிலிருந்து தன்னை விடுவிக்க.. விடாமல்… தன் தேவை தீரும் வரை அவளை தனக்குள் சிறைப்படுத்தி இருந்தானே … அவனின் ஒரு கரம் லாவகமாக அவளைத் தன்புறம் இழுத்து தன்னோடு அணைக்க… மறு கரமோ அவள் இரு கைகளையும் சேர்த்துப் பற்றியபடி இருக்க.. அவன் வசம் இருந்த தன் இதழ்களை மீட்கவே முடியாமல் தொய்ந்தவள் அவனிடமே சரணடந்த கேவலமான அந்த நிகழ்வு இப்போதும் இவளை இம்சிக்க… அவமானத்தில் குன்றினாள் சந்தியா… தலை விண் விண்ணென்று வலியில் தெரித்தது…. மனம் இணைந்தால் தான் தேகம் இணைய முடியும் என்ற எண்ணம் மூன்றாவது முறையாக சுக்கு நூறாக்கப்பட்டிருக்க…. அதிலும் இப்போது அது தனக்கே நடந்திருக்க… அந்த உண்மை அவளை துண்டு துண்டாக கிழித்திருக்க…. அது தந்த விரக்தியில் மொத்தமாக தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந்தாள் சந்தியா… திவாகர், முரளி என அவள் கண்ட ஆண்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்… அந்த வகையில் தனக்கும் ஒருவன் அது போல கிடைக்க வேண்டும் என்ற பேராசை எல்லாம் படவில்லை அவளுக்கு கிடைத்த அனுபவங்களில்… ராமன் போல் வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை இன்றைய சூழலுக்கு… வரப்போகிறவன் எப்படி இருக்கவேண்டும் என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை… குறைந்த பட்சம் அவளைத் திருமணம் செய்யும் போதாவது அவளுக்கானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே… இந்த எண்ணங்கள் தான் ராகவ்வை திருமணம் செய்ய எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் சம்மதம் சொல்ல வைத்தது எனலாம்… தன் கண்முன்னே ராகவ் ஏற்கனவே ஒரு பெண்ணிடம் அதுவும் தன் சகோதரியிடமே காதல் என்று கண்களில் ஏக்கம் வழிய சுற்றித் திரிந்தது தெரிந்தும், ஒரு பெண்ணை அணைத்து நின்றதைப் பார்த்த போதும்… அவனைச் சூழ்ந்து… அவன் கன்னங்களில் இதழ் பதித்த பாவையரைப் பார்த்த போதும்…. அவன் அடிக்கடி மாடல்களை அழைத்துக்கொண்டு போட்டோ ஷூட் என்று வெளியூர்.. வெளிமாநிலம் ஏன் வெளிநாடு வரை போவது அவன் தொழிலில் வழக்கம் எனத் தெரிந்தும் திருமணம் செய்ய சம்மதித்தாள் என்றால்… அதன் காரணம் அவள் மட்டுமே உணர்ந்தது… ஆனால் இப்படிப்பட்ட ஒருவனை ஏற்றுக்கொள்ள முடிந்த அவளால் வலுக்கட்டாயமாக அவன் தன்னை ஆக்கிரமிப்பதை அவளால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடிய வில்லை … எல்லாவற்றையும் சமரசம் செய்து வாழும் முறைக்கு பழகியவள்.. இல்லை பழக்கப்படுத்திக் கொண்டவள்தான்… அதற்க்காக எல்லாவற்றையுமே இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்… அது முடியாது என்று அவளுக்கு உணர்த்தி இருந்தான் ராகவ்வே அவனது நடவடிக்கைகளால்… இவளுக்கே இவளுக்கான பிரத்யோக… நுண்ணிய உணர்வுகள்… இன்று அவனால் தட்டி எழுப்பப்பட்டு… அதைச் சமரசம் செய்ய முடியாமல் உணர்வுகளின் அழுத்தத்திற்கு முற்றிலும் மூழ்கி இருந்தவளை… அருகில் இருந்த அவர்களது திருமணப் அழைப்பிதழில்… இருந்த மணமகன் ’ராகவரகுராமன்’ மணமகள் ’சந்தியா’ என்று அந்த விளக்கு ஒளியிலும் மிளிர்ந்த எழுத்துக்கள்… அவளை நோக்கி… மினுமினுத்து புன்னகைக்க… அதை எடுத்தவளின் விரல்கள்… அவளை மீறி… ’ராகவரகுராம்’ என்னும் எழுத்துக்களை தடவியதை அவளால் தவிர்க்க முடியவில்லை… “நீயாவது என்னோட முகத்தில உண்மையான புன்னகையை கொண்டு வருவேனு எதிர்பார்த்தேன் ரகு…. ஆனால் நீதான் என்கிட்ட இருக்கிற போலியான முகமூடியை நிரந்தரமாக்கப் போகிறாய்னு எனக்குத் தெரியாம போயிருச்சு ரகு… உன்னை வேண்டாம்னு சொல்லி இந்தத் திருமணத்தை நிறுத்தவும் முடியலை… உன்னோட என்னைக் காம்ப்ரமைஸ் பண்ணி வாழவும் முடியுமானு தெரியல…. எனக்காக என்னை ஏத்துக்க ட்ரை பண்ணவே மாட்டியா ரகு… என் அம்மா வாழாத வாழ்க்கையை எனக்கு வாழ்ந்து பார்க்க ஆசை… அதை அவங்களுக்கு காட்டனும்னு ஆசை…. அது முடியாதா… எனக்குப் பெரிதாகவெல்லாம் ஆசை கிடையாது… என்னை அப்படியே ஏற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும்… அது நீயாக இருக்க வேண்டும் இப்போது” என்றவளின் நினைவுகளில் ஹரி வந்து போக… கசந்தது மனம்… “தன்னை ஏற்றுக் கொள்பவன் இப்போது ரகுவாக மட்டுமே இருக்க வேண்டும் … அவன் மட்டுமே தன்னை புரிந்து கொள்ள வேண்டுமென்று…” என்று ஏன் தன் மனம் ஏங்குகிறது… ” தவித்தாள் சந்தியா விடைதெரியாமல்… மனம் கருகி அவள் மனம் தவிக்க… ’ராகவரகுராமன்’ பெயர் தொட்ட விரல்களோ ஜிகினா முலாம்களை பூசி அவளைப் பார்த்து பளபளத்தது..… ராகவ் பெயர் தொட்ட விரல்கள் பொய் ஜிகினாக்களில்தான் மிளிர்ந்தன… ஆனால் அவன் உளம் தொட்ட பின் இவள் வாழ்க்கையே சந்தோஷ வர்ண முலாம் பூசி ஜொலிக்கப் போவது தெரியாமல்… பேதைப் பெண் கவலையில் தன்னையே முழ்கடித்துக் கொண்டிருக்க… ராகவ்வோ முற்றிலுமாகத் தன்னைத் திருமண வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டிருந்ந்தான்…. இரண்டு திருமணங்கள் ஒரே வேளையில் என்பதால்… தந்தைக்கு வேறு உடல்நிலை சரியில்லாத காரணம் என்பதால் நிற்கவே நேரம் இல்லை… அவன் மீடியா துறையைச் சார்ந்தவர்களில் மிகவும் சொற்பமானவர்களையே அழைத்திருந்தான் பெரும்பாலானவர்களை அழைக்கவில்லை… வரவேற்ப்புக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று தவிர்த்த போதும்… அலைச்சல் குறைந்தபாடில்லை… இடையிடையே சந்தியா ஞாபகம் வந்த போதும்… அவள் கோபத்தில் வைத்துவிட்டுப் போயிருந்த இதழ் அச்சாரம் மட்டுமே அவனின் எதிர்கால திருமண வாழ்க்கையின் நம்பிக்கை அச்சாரத்தைக் கொடுத்திருக்க… நிம்மதியாக தன் திருமண வேலைகளை எதிர்கொண்டான்… தன்னவளை சந்திக்கும் திருமண நாளை எதிர்பார்த்தபடியே… ------- பயந்து கொண்டே இருந்தாள் நிரஞ்சனா… சிவா, சந்தியா விசயமாக என்ன சொல்வானோ… என்ன சொல்வானோ என்று… சிவா டெல்லி கிளம்பும் முன் சந்தியா விரைவில் டெல்லிக்கு வரவேண்டும்… தான் அங்கு சென்றதும்… நிலைமை நமக்கு சாதகமாக இருக்கும் போது அவளை இது தொடர்பாக தொடர்பு கொள்வதாகவும்… என்ன செய்ய வேண்டுமென்று அப்போது சொல்வதாகவும் கூறிவிட்டுச் சென்றவன்… இதுவரை அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை… இதோ சந்தியாவின் திருமண நாள் நாளை.. காலையில் இருந்தே மனம் சஞ்சலமிட்டுக் கொண்டிருந்தாலும்… நாளை வரை சிவாவிடம் இருந்து தப்பித்து விட்டால் சந்தியா ராகவ்வின் திருமதி ஆகிவிடுவாள்…. இன்னும் 24 மணி நேரம் இருக்கிறதே என்ற கவலை தான் அவளுக்கு… நேற்றைய தினம் வரை சிவாவிடம் இருந்து எந்த கட்டளைகளும் வராமல் போக.. இன்று கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் நிரஞ்சனாவுக்கு யுகங்களாகவே இருக்க… அவளுக்குத் தெரியும்.. … தான் சந்தியாவுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று ஒதுங்கினால் கூட வேறு யாரையோ வைத்து சந்தியாவை தன் கஸ்டடியின் கீழ் சிவா கொண்டு வந்து விடுவான் என்று… நிரஞ்சனா என்று வரும்போது அவள் ஒரு பெண் என்பதை மையமாக வைத்து சிவா திட்டமிடுவான்… அதனால் சந்தியாவுக்கு பெரிதாகத் கஷ்டங்கள் இருக்காது…. இதுவே குகனை வைத்து திட்டமிட்டால் .. சந்தியாவுக்கு இன்னும் கஷ்டம் அதிகம் ஆகுமே… மனதில் பிரார்த்திப்படியே இருந்தாள்.. சந்தியா ராகவ்விடம் சேர்ந்து விட்டால் அப்போதும் பிரச்சனை தீராதுதுதான்… இருந்தும் இருவருமாக சமாளிப்பார்கள் என்று தோன்றியது… வேண்டுதல் இறைவனுக்கு கேட்டதா… நிரஞ்சனாவின் அலைபேசி… சிணுங்க… சாட்சாத் சிவாவே… எடுத்த எடுப்பிலேயே “நிரஞ்சனா… சந்தியாவை டெல்லிக்கு கொண்டு வரணும்…. “ என்ற போதே… “சார் அவளுக்கு … நாளைக்கு மேரேஜ்…” என்று மனசாட்சியோடு பதறியவளிடம்.. மனசாட்சியே இல்லாமல் … அதிகாரத்தை மட்டுமே காண்பித்தான் சிவா “என்ன பண்றது நீ உன் மேலதிகாரிட்ட இவ்வளவு தூரம் பேசுற அளவுக்கு… என் மேலதிகாரிட்ட பேச எனக்கு ரைட்ஸ் இல்லையே… தைரியமும் இல்லையே.. அவங்க சொன்னால் செய்ய வேண்டும்… அப்படித்தான் எனக்கு ட்ரெயினிங் கொடுத்திருக்காங்க…” என்றவனின் குரல் நக்கல் மட்டுமே இருக்க.. இவளது பதட்டத்தை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை…. “சார்..” என்று இப்போதும் தடுமாறியவளிடம் “ஒகே… நான் குகனிடம் பேசிக்கொள்கிறேன்… டெல்லிக்கு கிளம்புவதற்க்கு வழியைப் பார்” என்ற போதே “சொல்லுங்க சார்” சுரத்தில்லாமல் ஒலித்தது நிரஞ்சனாவின் குரல்… சிவாவின் கட்டளைகளை நிறைவேற்றும் விதத்தில்… ---- ராகவ் சந்தியா வரவேற்பு நிகழ்ச்சி… திருமணத்திற்கு பின்னர் 20 நாட்கள் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தபடியால்… மிருணாளினி – சந்தோஷ்.. திருமண வரவேற்பு மட்டுமே அன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது… நிரஞ்சனா சந்தியாவுடனே சுற்றிக் கொண்டிருக்க… சந்தியா தன் மனதின் சஞ்சலங்களை எல்லாம் ஒரு புறம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு… ராகவ்வையும் முடிந்தவரை தவிர்த்தபடி…. அலங்கார பதுமையாக வலம் வர… ராகவ் மணமகன் வீட்டினராக அனைவரையும் உபசரிக்கும் விருந்தோம்பல் ஒருபுறம்… வேலை ஒருபுறம் என ஓய்வின்றித் திரிந்தாலும்.. கண்ணுக்கு விருந்தாக தன்னவளின் காட்சி கிடைக்க உற்சாகமுடன் சுற்றித் திரிந்தவன்… சந்தியாவை நேருக்கு நேராக காணும் காட்சி கிடைக்கும் போதெல்லாம் முத்தத் தூதினை இதழ் குவித்து காற்றில் யாரும் அறியாமல் அனுப்பிக் கொண்டிருக்க… இவளோ அதிலேயே அரண்டவளாக அவன் பக்கமே தலை வைத்து படுக்காமல் தலைமறைவாகும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் ராகவ் சந்தியாவை தன்னோடு சேர்த்து தனிமைப்படுத்தினான் நவீன கால வழக்கமாகிக் போன போட்டோஷூட் என்னும் பழக்கத்தால்… வேறு வழி இன்றி… நிரஞ்சனா மற்