சந்திக்க வருவாயோ?-33

அத்தியாயம்:33

/*ராமன் பின்னே மங்கை சீதை எந்தன் வாழ்வோ உந்தன் பாதை காதல் மாலை சூட வா திங்கள் கூட தேய்ந்து போகும் உண்மை காதல் என்றும் வாழும் காற்று வீசினால் பூக்கள் சாயலாம் காதல் மாளிகை சாய்ந்து போகுமோ*/

அடுத்த நாள்…. ஆதவன் தன் கரங்களை விரித்து பூவுலகை அணைக்க ஆரம்பிக்கலாமா… வேண்டாமா.. என்று தயங்கிக் கொண்டிருக்க….. பூவுலகில் அமைந்த அந்த புது மணத் தம்பதியினரின் அறையிலோ…. ராகவின் கரங்களால் மொத்தமாக அணைக்கப்பட்டிருந்தாள் அவன் மனையாள்…. அவன் மார்போடு துஞ்சி துயில் கொண்டிருந்த சந்தியாவுக்கு… விழிப்பு தட்ட… கண் திறந்தாள்.. இத்தனை நாள் அரண், கோட்டை என்று எதை நினைத்து கொண்டிருந்தாளோ.. தன் கணவன் ஒரே நாளில் அதைத் தகர்த்து… தன்னைச் சுற்றி அரண் அமைத்தது நினைவில் வர… அவனோடான இந்த பந்தம் ஜென்ம ஜென்மாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப் போல இருக்க… அதை நேற்றிரவு உணர்த்தியவனை புன்னைகையோடு பார்த்தபடி அவனோடு இன்னும் ஒன்றியவள்… ’இது தான் தானா…’ என்று நினைத்தபோதே வெட்கப்புன்னகையில் இதழ் விரிய.. ’இந்த அறைக்குள் அவள் வந்த போது இருந்த மனநிலை என்ன… இப்போது தான் இருக்கும் நிலை என்ன…’ மனதுக்குள் மகிழ்ச்சி மட்டுமே சுழன்று கொண்டிருக்க…. ராகவ்வைப் பார்த்தவள் கண்களில் நீர்… ஆனந்தமாக வழிந்தது…. அவன் நெற்றியில் அவளையுமறியாமல்… அவனும் அறியாமல் அவன் உறக்கம் கலைக்காமல் இதழ் பதித்து எடுத்தவள்… இன்னும் விடியவில்லை என்பதை உணர்ந்து… மீண்டும் உறங்கப் போக நினைக்க… கணவனின் அணைப்பில் இலேசாக இறுக்கம் வர… நிமிர்ந்து ரகுவைப் பார்க்க… இன்னும் கண்கள் மூடியிருக்க.. யோசித்தபடியே அவனையே பார்க்க.. அவன் குறுஞ்சிரிப்பில் துடித்த உதடுகள் அவனும் விழித்து விட்டான் என்பதை உணர்த்த “அடப்பாவி இவனும் முழிச்சுட்டானா” … மாட்டிக்கொண்ட கள்வியாக இவள் விழிக்க… “சகி பேபி… ஏன் ஸ்டாப் பண்ணிட்ட” என்றவன் அவளின் ஆரம்பத்திற்கு அவகாசமே கொடுக்காமல் சந்தியா விட்ட முத்தப் பணியைத் தொடர ஆரம்பிக்க… வேகமாக விலகினாள்… சந்தியா.. ”ஆளவிடு .. ஃபர்ஸ்ட் இந்தப் புடவையக் கழட்டனும்.. செம்ம கடுப்பாகுது… இந்த மூவிஸ்ல எல்லாம் ஃபர்ஸ்ட் நைட்ல வெயிட்டான பட்டுப்புடவை கட்டிட்டு வருகிற சீன் வைக்கிறப்போ பார்கிறதுக்கு சூப்பரா இருக்கும்… ஆனா இதோட கஷ்டம் இப்போத்தான் புரியுது… இதைக் கட்டிட்டு நைட் ஃபுல்லா எப்படி மேனேஜ் ப