/* கண்மணி என் கண்ணின் மணி... எழுத மைண்ட் செட் ஆகலை... இங்க வந்துட்டேன்... நாளைக்கு கண்மணி எபிசோட்... போடறேன்... /
அத்தியாயம் 2
தொலைக்காட்சியில் ஒரு கண்ணும்…. தன் அலைபேசியில் மற்றொரு கண்ணுமாக இருந்து கொண்டிருந்தான் நரேன்…. ஆராதனாவின் தோழி செல்வியின் சகோதரன்…
இங்கு தன் குடும்பத்தைத்தை பார்க்க வரும் போது வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தின் அவசரம்… செய்து கொண்டிருக்கும் தொழிலின் அழுத்தம் என அனைத்தையும் மறந்து… தாய் தந்தை தங்கை இந்தக் கிராமம் என நிம்மதியாக… ஓய்வாக நாட்களைச் செலவழிப்பான்…
இந்த முறையும் அப்படித்தான்
அதிகாலையிலேயே எழுந்தவன்… மொட்டை மாடியில் அந்தக் கிராமத்தின் தூய்மையான அமைதியான சூழ்நிலையை அனுபவித்தபடியே உடற்பயிற்சியை முடித்து வந்தவன்… தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த இனிமையான பாடல்களை ரசித்தபடியே.. அலைபேசியில் தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனை…. திசை திருப்பியது ஆராதனாவிடமிருந்து வந்த அழைப்பு….
அவளின் அழைப்பை தனது அலைபேசியில் பார்த்தானோ இல்லையோ….. அடுத்த நொடியே அந்த அழைப்பு யாருக்கானது என்பதைப் புரிந்தவனாக தனது தங்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தவன்… ஆராதனாவின் அழைப்பையும் ஏற்றிருந்தான் இப்போது
”உன் ஃப்ரெண்ட் தானே… இந்த டைம்லாம் அவள் சொர்க்கலோக வாசியாச்சே… வழக்கமா ஏழு மணிக்குதானே மேலதானே எழுந்து காலேஜ் கெளம்புவா… இன்னைக்கு என்ன ஸ்பெஷல் “
எதிர்முனையில் வந்த ஆராதனாவின் பதிலில்….
“அப்போ இன்னைக்கு அவ காலேஜ்க்கு வந்த மாதிரிதான்…. இன்னும் மேடம் எழவே இல்லை…. இதுல இது வேறயா” என்று அலுத்தபடியே செல்வியின் அறைக்குள்… நரேன் நுழைய…
அங்கே செல்வியின் அலைபேசி… தன் எஜமானியை எழுப்பும் விசுவாசத்தின் பொருட்டு தன் இன்னுயிரையும் இழக்க தயாராகிக் கொண்டிருந்தது….
அதாவது வைப்ரேசன் மோடில் இருந்ததால்… செல்வியின் மொபைல் மேசையின் விளிம்பிற்கு நகர்ந்து விழப் போக இருந்தது….
நல்ல வேளை சரியாக அந்த நேரத்திற்கு நரேன் வந்ததால் பார்த்து விட்டான்… சட்டென்று செல்வியின் அலைபேசியை பிடித்து தன் கைகளில் தாங்கி அதை விழாதாவாறு காப்பாற்றியவன்… ஆராதனாவிடம் சரியான நேரத்திற்கு செல்வியை அழைத்து வந்து விடுவதாகக்கூறி…. அவளைக் கிளம்புமாறு சொல்லி ஆராதனாவின் அழைப்பைக் கட் செய்து விட்டு….. தன் தங்கையை எழுப்ப ஆரம்பிக்க…. இப்போது நரேனின் கையில் இருந்த செல்வியின் விசுவாசி….. தன் எஜமானியை மீண்டும் எழுப்பும் பணியை ஆரம்பிக்க….
இடியே விழுந்தாலும் எழுந்துகொள்ளாத செல்வி…. அலைபேசியின் அதிர்வில் எழுவாளா என்ன…. அலார்ம் எல்லாம் சும்மா பேருக்குத்தான் செல்வியைப் பொறுத்தவரை…இத்தனை நாள் செல்வியின் பெற்றோரில் யாராவது ஒருவர்… அவளை வந்து எழுப்புவர்… இன்று அவளது சகோதரன் அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தான்
“செல்வி” என்று சத்தமாக நரேன் அழைக்க…. போர்வையை விலக்கிபடியே.. சோம்பலாக இமைகளைத் திறந்தவள்… தன் அண்ணனைப் பார்த்துவிட்டு…
“குட்மார்னிங் டா அண்ணா” என்று மீண்டும் தூங்க ஆரம்பிக்கப் போக…
.
“தனா கிளம்பிட்டாளாம்… உன்னை காலேஜ்ல ட்ராப் பண்ண சொல்லிட்டா” என்று நரேன் சொல்லி முடிக்கவில்லை…