ஹலோ ஃப்ரெண்ட்ஸ்
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்… பெரிய அத்தியாயம்... சோ திட்டாதிங்க
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்
நன்றி
உங்கள் பிரவீணா…
அத்தியாயம் 12 :
நாயகன்
வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாரதா
கல்லிருக்கும் ரோசப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆன உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சொடு தாங்கினேனே
நிலவ நாளும் தேடும் வானம் நான்
நாயகி
அத்தை மகன் கொண்டாட
பித்து மனம் திண்டாட
அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ
மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே கீதம் பாடுதே வாசல் தேடுதே
”திலகா…. நான் ஆஃபிஸ் கிளம்பறேன்… செழியன் கிட்ட சொல்லிட்டேன்…பை…” முத்துராம் திலகாவிடம் சொல்லியபடியே
“நீ அவனைக் கவனிக்கிறேன்னு நீ டேப்லட்ஸ் எடுத்துக்க மறந்துறாத…” என்று மனைவியின் உடல்நலனையும் சுட்டிக்காட்டியவராக கிளம்பியிருக்க…
“ஏங்க மதியம் வீட்டுக்கு வந்துருங்க… “ திலகா சொன்னபோதே… முத்துராமும் தன் மனைவி ஏன் சொல்கிறாள் என்று புரிந்தவராக
“முகிலன் வர்றான்ல இன்னைக்கு… அதை மறந்துட்டேன்… சரி சரி வந்துறேன்” என்று புன்னகையுடன் கிளம்பியிருக்க…. திலகா தலையை மட்டும் ஆட்டி வைத்தார்…
முகிலன் வருகிறான் என்பதற்கே இவர்கள் வீட்டில் தடபுடலான விருந்து… தன் அண்ணன் ராஜசேகரை… தங்கள் குடும்பத்தை நினைத்தவளின் கண்கள் கலங்கத் தவறவில்லை… இருந்தும் சமாளித்தவளாக…
“நம்ம ஊர்ல இருந்து வர்ற பஸ் இந்நேரம் வந்திருக்கும்…. புள்ள பசியோட வந்துட்டு இருக்கும்” திலகா தனக்குள் சொல்லிக் கொண்டபடி… சமையலில் கவனம் வைக்க ஆரம்பித்தார் திலகா…
சமையல் செய்தபடியே மணியைப் பார்த்தவர்…
“செழியனுக்கு சூப்பைக் கொண்டு போய்க் கொடுப்போம்… காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடலயே” மகனின் அறைக்குச் செல்ல…
வெகு தீவிரமாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த செழியன்…. தாயைப் பார்த்தவனாக…
“10 மினிட்ஸ்… நானே வர்றேன்” கைசைகையிலேயே தன் தாய்க்கு பதில் சொன்னவனாக மீண்டும் கணினியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்…. திலகாவும் கிளம்பியிருந்தார்…
“பூஜா… நீ அனுப்பின மெயில்… ரிப்போர்ட்ஸ்… கிளைண்ட் மீட்டீங் சம்மரிஸ் எல்லாம் பார்த்துட்டே இருக்கேன்… ப்ரணவ் உனக்கும் க்ளைண்ட் ஃபீட்பேக் ரொம்ப நல்லா இருந்தது…” தொடர்ந்தான் செழியன்
”தேங்க்ஸ் கைஸ்… எனக்கு இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் என்னமோ… தொழில் ரீதியா எனக்கு எந்த ஒரு ஒரு இறக்கமும் நடக்கக் கூடாதுன்னு கடவுளே உங்க ரெண்டு பேரையும் அனுப்பியிருப்பார் போல… நான் ஆக்ஸிடெண்ட் ஆகி கான்ஷியஸ் இல்லாமல் படுத்த படுக்கையா கிடந்த போது சப்போர்ட் பண்ணினதுக்கு… இப்போ வரை சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிறதுக்கு….. நம்ம க்ளைண்ட்ஸ்லாம் நம்ம விட்டு போகாமல்… அவங்களுக்கு நம்மகிட்டருந்து அஷ்யூரண்ஸ் கொடுத்ததுக்கு… தேங்க்ஸ்னு சொல்லி… இல்ல ஏதாவது காம்ளிமெண்ட்னு கிஃப்ட் பண்ணி உங்களை பிரிச்சுப் பார்க்க விரும்பல… சீக்கிரமே இதுக்கான அவுட்புட் என்னன்னு தெரியவரும் உங்களுக்கு” செழியன் தன் மகிழ்ச்சியை அவர்களிடம் வெளிப்படுத்தி… அதன் பின் சில நிமிடங்கள் இருவருடனும் அலுவலகம் தொடர்பான மற்ற விசயங்களைப் பேசி முடித்து அந்த கான்ஃபெரென்ஸ் அழைப்பை முடித்த போதே… பூஜா அவனுக்கு தனிப்பட்ட வீடியோ அழைப்பில் அழைக்க ஆரம்பித்திருக்க… இவனும் அதை அட்டெண்ட் செய்தான்
“செழியா..” பூஜாவின் குரல் முந்தையை அழைப்பில் இருந்தததுபோல இல்லாமல் நெகிழ்ந்திருக்க
செழியன் அவளிடம்
“என்னாச்சு… இவ்ளோ நேரம் நல்லாதானே பேசுன… இங்க பாரு பூஜா… நான் நல்லாத்தான் இருக்கேன் பூஜா… இந்த அழுமூஞ்சி பூஜா இன்னும் உனக்குள்ள இருக்கான்னு எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன பின்னாடிதான் தெரிஞ்சது” செழியன் பூஜா இருவரும் தொழில் ரீதியான முறையில் பேசாமல் நண்பர்களாக நட்புடன் பேச ஆரம்பித்திருக்க
“இல்ல… நான் எங்க அழறேன்… “ என்று சட்டென்று சமாளித்தவள்…
“முகில் எப்போ வருவான்… அவன் இன்னைக்கு வர்றேன்னு சொல்லியிருந்தானே… நான் ஒண்ணும் உன்கிட்ட பேச வரலை… அவன் கிட்ட பேசலாம்னுதான் போன் பண்ணினேன்”
“நல்லா நடிக்கிற பூஜா… ஆனா என்ன உனக்கு நடிப்புதான் வரலை… இல்லை உன் நடிப்பு என்கிட்டலாம் செல்லலைனு சொல்லலாம்” என்றவன்
“உன்னை என்ன பண்ணச் சொன்னேன்… அதை நீ முதல்ல பண்ணுனியா…. எங்க சித்தப்பா பாவம்… கதறுராறு… டேய் கரடித் தொல்லை விட்டதுன்னு பார்த்தா… அதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் பண்ணி விட்டுட்டு போயிருக்குனு… பார்த்து பண்ணும்மா… பாவம்மா அவர்… ஒரு வாரத்துல பூஜா கிளம்பிருவான்னு சொல்லிட்டு வந்தேன்… ஒரு மாசமாச்சு அழ ஆரம்பிச்சிருவாரு பூஜா “ செழியனின் மதிவாணனைப் பற்றிய வார்த்தைகளில் இப்போது பூஜா சிரித்தவளாக்…
“பார்த்துட்டு இருக்கேன் செழியா… ஆனால் உன்னை இப்படி பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…”
அவள் சொன்னவுடன் தன்னையே ஒரு முறை குனிந்து பார்த்தவனாக
”உட்கார்ந்திருக்கிறது வீல் சேர்… நெத்தியில கட்டு… ஆர்ம் ஸ்லிங்… நடக்கிறதுக்கு ஸ்டிக்… இதெல்லாம் பார்க்கிறதுக்கு சந்தோஷமாவா இருக்கும்… கஷ்டமாத்தான் இருக்கும்…” செழியன் நக்கலாகக் சொல்ல
முறைத்தாள் பூஜா…
“உன்னல்லாம்… இந்த சிச்சுவேஷன்லயும் நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…. உடம்பைப் பார்த்துக்க… முகில் வந்தா கால் பண்ணு…. தூங்கிற மாட்டேன்… சரியா வைச்சுறவா” என்றபடி பூஜா திரையில் இருந்து மறைந்த போதே… வரவேற்பறையில் முகிலனின் குரல் கேட்க… தான் உட்கார்ந்திருந்த சக்கர நாற்காலியை இடது கையால் உருட்டியபடி… வெளியே வந்திருக்க… முகிலன் இவனைப் பார்த்த அடுத்த நொடியே
“டேய் பார்த்துடா… நான் தான் வருவன்ல… அதுக்குள்ள என்ன அவசரம்” செழியனை நோக்கி வந்திருக்க…
“இந்த அவசரம் உன்னைப் பார்த்துட்டுனு நினைக்கிறியாடா….” கண்களைச் சிமிட்டிய நண்பனை பொய்யாக முறைத்த முகிலன்…
“தெரியாதா… யாருக்காக இந்த அவசரம்னு… எல்லாம் தெரியாமத்தான் நண்பன்னு உங்கூட குப்பை கொட்றேனா” என்ற போதே திலகா அங்கு வந்திருக்க…
“முகிலா குளிச்சுட்டு வந்துறியா… நெஞ்செலும்பு சூப் சூடா இருக்கு… “ திலகா சமையலறையில் இருந்தபடியே கேட்க
“அத்தை… குளிக்கிறதா!!! முதல்ல சூப்பைக் கொடுங்க… குளிக்கவாம் குளிக்க… பஸ்ஸை விட்டு இறங்கின உடனேயே பிரஷ் பண்ணி… மூஞ்சி முகரைலாம் கழுவிட்டுத்தான் வந்தேன்… நீங்க எடுத்து வைங்க…”
”ஹான் அப்புறம்… ஆட்டுக்கால் வாங்கிட்டு வந்துருக்கேன்… டெய்லி இவனுக்கு வச்சுக் கொடுங்க…. நம்ம ஊர் ஆட்டுக் கால் மாதிரி கிடைக்காது… “ முகிலன் திலகாவிடம் சொன்னபோதே…
“டேய் முகில்… நடக்கனும் போல இருக்குடா… உன்னைப் பார்க்கிற அவசரத்துல ஸ்டிக்கை ரூம்ல விட்டுட்டு சேரைத் தள்ளிட்டே வந்துட்டேன்… எடுத்துட்டு வர்றியா” செழியன் சொல்ல…
“ஸ்டிக் எதுக்குடா மச்சான்…. நான் எதுக்கு இருக்கேன்…. வாடா… “ என நண்பனை எழுப்பியவன்… தன் தோளைக் கொடுக்க… அவன் உதவியுடன் டைனிங்க் டேபிள் வரை வந்திருந்தான் செழியன்…
உதடுகளை பற்களால் கடித்தபடி தன் வலியை மறைத்தபடி அமர்ந்தவன்… நண்பனின் கவலை படிந்த முகத்தைப் பார்த்தவனாக
“முன்னைக்கு இப்போ பரவாயில்லடா… இந்த ரெக்கவரியே ஃபாஸ்ட்டுனுதான் சொல்றாங்க டாக்டர்ஸ்… பிசியோதெரபி கொடுக்க கொடுக்க… சீக்கிரம் இந்த வீல்சேர்… ஸ்டிக்… இந்த கை ஊஞ்சல் எல்லாத்துக்கும் விடுதலை கொடுத்துறலாம்… பாவம் இதுங்க எல்லாம் இந்த செழியனைக் கட்டிகிட்டு ரொம்ப அவஸ்தைப் படுதுங்க”
”என்னது அதுங்க அவஸ்தைப் படுதுங்களா… நல்லா பேசுறடா… மதுரக்காரனுக்கு நக்கல் பேச்சு பேசவா கத்துக் தரனும்”
திலகாவும் இப்போது இருவருக்கும் சூப்பைப் பறிமாறி இருக்க
“அம்மா… எனக்கெதுக்கு… முகிலனுக்கு மட்டும் கொடுங்க” செழியன் தன் முன் வைத்த சூப்புக் கிண்ணத்தை தள்ளி வைத்திருக்க
“ஏண்டா… ஏன்… இதெல்லாம் குடிச்சாத்தானே சீக்கிரம் சரி ஆகும்… நீ சீக்கிரம் சரி ஆகிட்டு இருக்கிறதுக்கு என்ன காரணம்… மருந்து மாத்திரையா என்ன… எங்கத்த வச்சுக் கொடுக்கிற நெஞ்செலும்பு… ஈரல்…. ஆட்டுக் கால் சூப்பு… இரத்தப் பொறியல்னு உன்னை தேத்துறதே அவங்கதான்… இதே நீ நம்ம ஊர்ல இருந்திருந்த ஒரே வாரத்துல தேத்திருப்போம்…. நடக்க வச்சிருப்போம்…. என்னத்த நான் சொல்றது சரிதானே” திலகாவையும் கூட்டு சேர்க்க
“குடிப்பான் முகிலா… ஆனால் இன்னைக்கு திங்கட்கிழமைல… அவன் விரதம் இருக்கிற நாளாச்சே…. இந்தச் சமயத்துல கூட விட மாட்டேங்கிறான்… நானும் ஒவ்வொரு வாரமும் இவன் கூட மல்லுக் கட்டிட்டு இருக்கேன் … இன்னைக்கு இவன் மீட்டிங்க் பேசிட்டு இருக்கும் போதே… இதான் சாக்குனு சாப்பிட வச்சுறலாம்னு பார்த்தா… முடியலயே… அப்படி என்ன விரதமோ” திலகா தாயாக கடுப்பாக சொல்ல
“இவன்லாம் திருந்த மாட்டான்…. விடுங்க… ஒன்பதாவதுல ஆரம்பிச்சது… விட்ருவானா என்ன…. ”
சொல்லிக் கொண்டிருந்தபோதே…
“ஆஹ்ஹ்ஹ்…. ஆஹ்ஹ்…”
செழியன் உணவு மேசைக்கு கீழாக முகிலனின் காலை நோக்கி விட்ட உதையில் முகிலன் கத்த ஆரம்பித்திருக்க… திலகா பதட்டத்துடன் முகிலனைப் பார்க்க
“அம்மா… ரொம்ப காரமா இருக்கும் போல… அதான் பையன் வாய்லயே டான்ஸ் ஆட்றான்… நீங்க போய் நல்லெண்ணெய் எடுத்துட்டு வாங்க…”
“அவ்ளோ காரமா இருக்கு… மிளகுத்தூள் கொஞ்சமாத்தானே போட்டேன்” திலகா யோசித்தபடியே
“முகிலா… இந்தக் காரத்துக்கே இப்படியா… சரி சரி விடு ஆயில் எடுத்துட்டு வர்றேன்… ஆனால் செழியன் இப்போதான் ஆஃபிஸ் ஸ்டார்ட் பண்ணின பின்னாடிதானே விரதம் இருக்கான்… ஸ்கூல் காலேஜ் டேஸ்ல எல்லாம் இந்த விரதம் லாம் இருக்க மாட்டான்” என்றபடியே உள்ளே போக…
“மண்டே மண்டே… ஸ்கூல்ல உன் சாப்பாடையும் சேர்த்து சாப்பிட்டவன் நான் தானே… சென்னை வந்தப்புறம் ஸ்கூல்ல… காலேஜ்ல எந்த அப்பாவி மாட்டினானோ… இதெல்லாம் பாவம் திலகா அத்தைக்கு அது எங்க தெரியப் போகுது…” தனக்குள்ளே புலம்பியபடியே சூப்பில் கவனை வைக்க…
“சீக்கிரம் சாப்பிட்டு வாடா…. இல்லை சாப்பிடவே விடாமல் இழுத்துட்டு போய்ருவேன்” தான் இருந்த நிலையிலும் செழியன் முகிலனை மிரட்ட…
”இந்த மிரட்டலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல… அவ்ளோதாண்டா…. இதோ முடிச்சுறேன்” என்றவனை… அதோடு தொல்லை பண்ணாமல் அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தவன்… அடுத்த சில நிமிடங்களில் தன் நண்பனோடு தன் அறையிலும் இருந்தான்…
---
சற்று முன் வரை வரவேற்பறையில் பொறுமையுடன் …. புன்சிரிப்புடன்… கிண்டலும்… நக்கலுமாக பேசிக் கொண்டிருந்தவன்… முகத்தில் இப்போது எள் போட்டால் வெடித்துவிடும் அளவுக்கு உக்கிரமாக இருக்க
“பார்த்தியாடா அவனை…”
“பார்த்தேன்டா…” என்ற முகிலன்…
“ஆனா… அவன் இந்த விசயத்தைப் பற்றியே பேச மாட்டேங்கிறான்… அந்தப் பொண்ணு மேல தப்பில்லை… அது நல்லாவே எனக்குத் தெரியும்… ஆனா இவ்வளவு நடந்த பின்னால அந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணிக்க விருப்பம் இல்லை… இதோட இந்த பிரச்சனையைப் பற்றி யாரும் பேச வராதீங்க அந்த வீட்டு சைட்ல இருந்து…. நான் அந்தப் பொண்ணைப் பற்றி தப்பா ஏதும் சொன்னேனா… என் மேல பழி போட்டுத்தானே விலகிகிட்டேன்னு… இப்படித்தாண்டா பேசினான்…”
”ஆரா மேல பழி போட்டுட்டு அவன் உயிரோட வேற இருந்துருவானா என்ன… சாவடிச்சுற மாட்டேன்… எல்லா என் மாமனைச் சொல்லனும்… கைல மட்டும் அவர் சிக்கட்டும் அப்புறம் இருக்கு அவருக்கு”
கடுப்பாக அங்கிருந்த சுவற்றில் ஓங்கிக் குத்திக் கொண்டவன் செழியன்….
“யார் மேல இருந்த வஞ்சத்தையோ யார் மேலயோ காட்டிட்டாரு… என் அண்ணன் பொண்ணு என் பொண்ணு மாதிரினு வாய் ஓயாமல் சொன்ன ஆளு… இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்லைடா… “ செழியன் சொல்லிக் கொண்டிருந்த போதே
“இப்போ கூட அந்தாளை ’மாமா’ ன்னு சொல்ல மனசு வருதாடா உனக்கு… தனா மேல பழி போட்ட அந்த மாப்பிள்ளைப் பையனை உயிரோட விட மாட்ட…. ஆனா உன் சின்ன மாமாவை விட்டு வைப்பியாடா…”
செழியன் அமைதியாக நின்றிருந்தவனாக பின் முகிலனிடம் நிதானமாகவே பேசினான்…
“அவருக்கு எங்க குடும்பத்து மேல அதுவும் முக்கியமா ஆரா அம்மா மேல கோபம்டா… அதை எப்படி தீர்த்துகிறதுன்னு அவங்க பொண்ணு வாழ்க்கைல விளையாடிட்டார்டா…”
சட்டென்று அவன் முன் வந்து நின்ற முகிலன்
“டேய்… எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லு… “ முகிலனின் குரல் இப்போது உடைந்திருக்க
“என்னடா… எனக்குப் புரியலையே நீ என்ன சொல்ல வர்ற… நான் என்னடா பண்ணினேன்” புரியாமல் விழித்தான் செழியன்
”அது எப்படிடா… தனாவோட மேரேஜும் நிக்கனும்…. அதே நேரம் அவளோட மானத்துக்கும் பங்கம் வந்துறக் கூடாது… எல்லாமே ப்ளான் போட்டு நடந்த மாதிரி இருக்கு… சொல்லுடா… நீ இதுக்கு காரணம் இல்ல… நீயா சொல்வேன்னு எதிர்பார்த்தேன்… ஆனா என்கிட்டயே மறைக்க நினைக்கிறேல… உங்க சுகுமார் மாமாவை வச்சு நீதானே இவ்வளவும் பண்ணின…” இப்போது முகிலன் அவனையும் மீறியவனாக செழியனின் சட்டையைப் பிடித்திருக்க…
அதே வேகத்தில் செழியன் முகிலனை தள்ளி விட்டவனாக… அதே நேரம் அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தவனாக… செழியனின் கண்கள் சிவந்திருக்க…
“நீ என்னை அவ்ளோ கேவலமானவனாவா நெனச்ச… நான் ஆராவை லவ் பண்றேன் தான்…. அதுக்காக இப்படி ஒரு கீழ்த்தரமான… குறுக்கு வழில போற அளவுக்கு மானங்கெட்டவன் இல்லடா…”
முகிலன் அப்போதும் விடவில்லை
“பின்ன யாருடா இருப்பா… அவ மேரேஜ் நடக்கக் கூடாதுன்னு… எவனோ ஒருத்தவனோட அவ கையைப் பிடிச்சுட்டு தியேட்டர் முன்னாடி நிற்கிற மாதிரி இருக்கிற போட்டோ வேற யார் கொடுத்திருப்பாங்க…. அதுவும் சுகுமார் சித்தப்பா மூலமா இத்தனையும் பண்ணிருக்கிறது… நீன்னு எனக்கு நல்லாவே தெரியும்… இவ்ளோ நாள் இதை உன்கிட்ட கேட்க முடியாத சூழ்நிலை… அதே நேரம் ’தனா’ குடும்பத்திலயும் இதை வேற மாதிரி டீல் பண்ணி… பிரச்சனை வெளிய தெரியாத மாதிரி முடிச்சுட்டாங்க… பத்திரிக்கை அடிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் நடந்துருச்சு…. நல்ல வேளை தனாக்கு மேரேஜ்னு வெளிய அவ்வளவா சொல்லாததும் நல்லதா போயிருச்சு… நீ ஏண்டா இப்படி பண்ணினன்னு உன்னையும் குத்தம் சொல்ல முடியாத நிலை எனக்கு… ஆனால் இதுல தனாவைச் அவ தைரியத்தைச் சொல்லனும்டா… செம்ம போல்டுடா… கார்த்திக்லாம் அசந்தே போயிட்டான்… தங்கச்சியோட தைரியம் பார்த்து அவனுமே இப்போ கமலி விவகாரத்துல தான் நடந்துகிட்டது எவ்வளோ பெரிய முட்டாள்தனம்னு உணர்ந்துகிட்டான்… நீ பண்ணின கலகம் நல்லதாத்தான் முடிஞ்சிருக்கு… இருந்தாலும்… கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் தனாவோட மானம் என்னாகிருக்கும்… “ முகிலன் பொறிய ஆரம்பித்த போதே
“நிறுத்துடா… லூசு மாதிரி புரியாமல் பேசாதடா… யோசிக்கவே மாட்டியா… நீ என்கிட்ட விசயத்தை சொன்ன அடுத்த நிமிடம் நான் இங்க வர்றதுக்குத்தான் யோசிச்சேனே தவிர வேற எதுவும் யோசிக்கல… அதே நேரம் அவ மேரேஜ் நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்… என்னத்த சொல்ல…. இந்த ஆக்ஸிடெண்ட் மட்டும் நடக்கலேன்னா நானே வந்துருப்பேனே… சுகுமார் மாமாகிட்ட நான் ஏன் ஹெல்ப் கேட்கனும்….… ”
“அதைத்தான் நானும் சொல்றேன்… ஒரு வேளை வர முடியலேன்னா… தனாவுக்காக நீ 360 டிகிரியும் யோசிப்பியே… நீ உங்க சுகுமார் மாமாகிட்ட நீ பேசிட்டுத்தான் அங்க இருந்தே கிளம்பியிருக்க… நீ உன் ஆரா வேணும்னுன்றதுக்காக எந்த அளவுக்கு கீழ்த்தரமா இறங்கினேன்னு நானும் பார்த்தவன் தான்… ” முகிலன் இன்னுமே ஆவேசப்பட்டவனாக மாறி இருக்க
“வாய மூடுடா… ஒரு காலத்துல… உணர்ச்சி வசப்பட்டு என்னையுமறியாமல் ஆராகிட்ட எல்லை மீற நெனச்சேன் தான்… அப்போ நீ என்னைத் திருத்துனதான்… அந்தச் செழியன் விபரம் தெரியாத சின்னப்பையன்டா… ஆனால் அந்த செழியனாவேவா நான் இன்னும் இருப்பேன்… என்னை ஏண்டா நம்ப மாட்டேங்கிற… என்னோட காதலுக்கு சோதனை வர்ற ஒவ்வொரு கட்டத்திலும் முடிஞ்ச அளவு பொறுமையோட அந்த சோதனை எல்லாம் முறியடிச்சுட்டு வந்துட்டு இருக்கேண்டா…” செழியன் இப்போது தன் உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்தியவனாக
”முகிலா நீயும் நானும் சண்டை போட்டு என்னாகப் போகுது… நான் பெரிய மாமாகிட்ட பேசி இந்தக் கல்யாணத்தை நிறுத்துவேன்னுதான் சொன்னேன்…. ஒத்துக்கிறேன்… அவருக்கு சம்மதம் இல்லைனா அவர் பொண்ணை நான் எடுத்துக்குவேன்னு சொன்னேன்… அது தப்புதான்… ஆனால் இந்த போட்டோ மார்ஃபிங்லாம் நான் பண்ணவே இல்லடா… நம்புடா… என்னைப் பற்றி ஆரா விசயத்துல எல்லாம் தெரிஞ்சவன்… உன்கிட்ட நான் ஏன் மறைக்கனும் சொல்லு…”
“அப்போ எப்படிடா…” முகிலனும் அமைதிக்கு வந்திருக்க
“அதுதாண்டா… அந்த யோசனைதான் எனக்கு…. அதுனாலதான் அந்த ஷண்முகம் கிட்ட அந்த போட்டோல மார்ஃபிங் பண்ணி இருந்த பையன அடையாளத்தைக் கேட்டுட்டு வரச் சொன்னேன்…”
“அது மட்டும் இல்லடா… யாரோ ’ஆரா’ வைப் ஃபாளோ பண்றாங்க… ஆராவுக்குத் தெரிஞ்சவங்க… அதுவும் அவ பக்கத்துல இருக்கவங்கதான் இது எல்லாத்துக்குமே காரணம்… ஆராவோட மேரேஜ் அரேஞ்மெண்ட் தெரிஞ்சவங்கதானே இதைப் பண்ணிருக்கனும்… அப்போ அவளை நெருங்கி இருக்கிறவங்க யாரோ இல்ல அவங்களோட தொடர்பு உடையவங்க… ”
வேகமாக முகிலன் அதிர்ந்த பார்வை பார்த்தவனாக
“டேய் என்னடா சொல்ற… எங்க குடும்பத்துக்கு… அப்புறம் வீரா சித்தப்பா இவங்களுக்கு மட்டும் தான் ’தனா’ திருமண ஏற்பாடே தெரியும்டா… வேற யார்டா இதெல்லாம் பண்ணியிருப்பா… நான் உன்கிட்ட சொன்ன மாதிரியே… நம்ம ஃபேமிலில யாராவது வெளில சொல்லி… என்னென்னமோ சொல்றியேடா…” பரிதவித்து பதட்டமாகச் சொன்னவன் இப்போது செழியனை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தவும் ஆரம்பித்திருந்தான்…
“ஆமாடா… யோசிச்சுப் பாருடா… இந்த மேரேஜ் நடக்கக்கூடாது… ஆராக்கும் பேர் கெடக்கூடாதுனு யோசிச்சு பண்ணியிருக்காங்க… அவனுக்கு ஆரா மேரேஜ் பற்றி தெரிஞ்சிருக்கு… யார் மாப்பிளைனும் தெரிஞ்சிருக்கு… சுகுமார் மாமாவைப் பற்றியும் நல்லா தெரிஞ்சிருக்கு… இது எல்லாவற்றையும் விட… அந்த மாப்பிள்ளைப் பையனோட பேசிக் கேரக்டர் என்னன்னு ஜட்ஜ் பண்ணியும் இருக்கான்…”
“புரியலடா… என்னடா இவ்ளோ நடந்திருக்கா…” முகிலனின் கண்களில் கலவரத்தைத் தேக்கி நோக்க…
“ஆமாடா… அந்த ஷண்முகம் ஆராவை நம்பாமல் இந்த மேரேஜை நிறுத்தல. ’ஆரா’ நல்ல பொண்ணுதான்… அந்த போட்டோ ஒரிஜினல் கிடையாதுன்னு அடிச்சுச் சொன்னான் தானே… அவன் மேரேஜ் வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் சுகுமார் மாமா காட்டின போட்டோ ரீசனா இருந்தாலும்… விசயம் வேற… அவனுக்கு வரப்போகிற மனைவியை யாரும் கனவுல கூட நெனச்சுப் பார்த்திருக்கக் கூடாதுன்னு… ’ஆரா’ அப்படிப்பட்ட பொண்ணா இருப்பான்னு நெனச்சானாம்…” சொன்னபோதே
“என்னைப் பத்திலாம் தெரிஞ்சிருந்தா… உயிரையே விட்ருப்பான் போல” நக்கலாகச் சொன்ன செழியன்
“அந்த ஷண்முகத்தை விடு… அந்த யாரோ ஒருத்தனுக்கு சுகுமார் மாமாவை எப்படி கரெக்ட் பண்றதுன்னும் தெரிஞ்சிருக்கு… பணம் கொடுத்தால் அவர் என்ன வேணும்னாலும் செய்வார்னு… ஆனால் ’ஆரா’க்கு எதிரா எப்படி பண்ணினார்னுதான் என்னோட பெரிய கேள்வி… அவருக்கு நான், ஆரா… கார்த்திக் கமலின்னா ரொம்பப் பிடிக்கும்… ” யோசித்தவன்
“பணத்துக்காக இவ்ளோ கீழ்த்தரமா.. நான் பெறாத பொண்ணுனு பாசம் வச்ச அண்ணன் பொண்ணு வாழ்க்கையை கெடுப்பாராடா… அங்கதான் எனக்கு டவுட்டா இருக்குடா… அந்த போட்டோவை அந்த மாப்பிள்ளப் பையன்ட்ட நேர்ல காமிச்சுருக்காரு…. ஆனால் அவன்கிட்ட கொடுக்கலை…. அடுத்த நாளே தலை மறைவாகிட்டாரு…. எங்க மாமா வீட்லயும் அந்த போட்டோ பார்க்கல… எனக்கென்ன பிரச்சனைனா… சுகுமார் மாம யார்கிட்ட காசு வாங்கினாரோ அவன் போட்டோவைத்தான் ’ஆரா’வோட சேர்த்து வச்சிருப்பார்னு தோணுது… ரெண்டாவது ஆராவுக்கு அந்தப் பையன் சரியா இருப்பான்னும் எங்க மாமா நெனச்சிருக்கலாம்… “
“இப்போ அவன் யார்னு கண்டுபிடிக்கனும்டா… கண்டிப்பா நல்ல வசதியானவன்… பணம் இருக்கிறவனாத்தான் இருப்பான்… ஒருவேளை அவன் ஆராவை லவ் பண்றானோன்ற சந்தேகம் இருக்கு… அதே நேரம் இப்போதைக்கு அவளை டிஸ்டர்ப் பண்ணவும் அவன் விரும்பலை… அந்த யாரோ ஒருத்தவனால ஆராக்கு பிரச்சனை வருமோன்னு நினைக்கும் போதே… எனக்கு பெரிய தலைவலியா இருக்கு” செழியன் சொன்ன போதே
“இதெல்லாம் நூத்துக்கு நூறு உனக்கு மட்டும் தானேடா பொருந்தும்… நீ அந்த யாரோன்னு சொல்ற அடையாளம் எல்லாம் எனக்கு மட்டும் நீ தான்ன்னு நினைக்கத் தோணுதேடா” முகிலன் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லி… செழியனின் முறைப்பையும் அலட்சியப்படுத்தியவனாக
“சுகுமார் மாமா கைல காசு தீர்ந்த உடனே எங்கே வருவாரு… எங்க கிட்ட தானே அப்போ இருக்கு அவருக்கு… “
“அதெல்லாம் இருக்கட்டும்… நீ சொல்டா… யாராச்சும் ’ஆரா’ கிட்ட நெருங்கிப் பழக ட்ரை பண்ற மாதிரி உனக்கு ஏதாவது தெரிஞ்சதாடா…. நீ என்கிட்ட பேசும் போதெல்லாம்…. செல்வி… ஆரா இவங்க ரெண்டு பேரும் தான் க்ளோஸ்…. செல்வியைத் தவிர வேற யாரும் ஆரா கிட்ட நெருங்க முடியாதுன்னு சொல்வியேடா… நம்ம குடும்பம் தவிர வெளியாள் வேற யார் கூடவும் ஆரா நெருங்கிப் பழகலேன்னும் சொல்வியே… ”
”ம்க்கும்… கமலி விசயத்துக்கு அப்புறம் ’செல்வி’கிட்ட கூட தனா அவ்வளவா பேசுறது இல்லை…. நல்லாவே எனக்கு அது தெரியும்…. செல்வி கூட என்கிட்ட வருத்தப்பட்டு சொன்னுச்சு… இந்த மேரேஜ் ஏற்பாட்டுக்கு அப்புறம்தான் செல்விகிட்ட தனாவே பேசுச்சாம்… அதையும் செல்வி சொன்னுச்சு…”
“ஹ்ம்ம்… ஒரே யோசனையா இருக்குடா… அந்த முகம் தெரியாத நபர் யாரா இருக்கும்னு…”
“எனக்கு உன்னை மாதிரி கிரிமினலா யோசிக்கவெல்லாம் தெரியலடா… அந்த போட்டொ ஆபாசம்லாம் இல்லாம ஜஸ்ட் பக்கத்துல நிக்கிற மாதிரின்னு சொன்னவுடனே… நீ பண்ணிருக்கலாம்னு நெனச்சேன்… ஆனால் இப்போ நீயும் இல்லைனு சொல்லிட்ட… எனக்கென்னவோ சுகுமார் சித்தப்பா மேலதான் டவுட்டா இருக்கு… என்னமோ அந்தக் குடும்பத்துக்கும் முக்கியமா ஆரா அம்மா மேல அவருக்கு ஏதோ ஒரு கோபம் இருக்குன்னு நினைக்கிறேன்… சரியா தனா விசயத்துல யூஸ் பண்ணிகிட்டாரு… மத்தபடி நீ யோசிக்கிற அளவு ஆராவை லவ் பண்றவன்… அவளைப் ஃபாளோ பண்றவன்னு ஒருத்தன் இருப்பான்னு தோணலை… ராஜசேகர் பெரியப்பா உங்க சித்தப்பாக்கு இடையில ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு… அதுவும் உங்க அத்தையோட சம்பந்தப்பட்டதுதான்… நம்மகிட்டலாம் ஏதோ மறைக்கிறாங்கன்னு தோணுதுடா… “
இப்போது செழியன் சுதாரித்தவனாக
“சரி அதை விடு… வேற என்ன சொன்னான்… அந்த ஷாம் …”
“அந்த போட்டோல இருக்கிறவன் நம்ம ஊர்க்காரன் மாதிரிலாம் இல்லையாம்… ஐடில வேலை பார்க்கிறவன் மாதிரி செம ஹேண்ட்செம்மா இருந்தானாம்… மீசைலாம் இல்லையாம்… ”
“ஃபோட்டோ மார்ஃபிங் பண்ணினவனுக்கு… மீசை எடுக்கத்தான் தெரியாது பாரு… அட போடா… ஆராவைச் சுற்றி ஏதோ நடக்குதுனு எனக்குத் தோணுதுடா… ஆராவுக்கு என்னமோ ஏதோன்னு பயம் வருதுடா… ஆனா ஏண்டா என்னால அதைக் கண்டுபிடிக்க முடியல… இதுல என்னை நானே பார்த்துக்க முடியாத ஒரு நிலை… “ செழியனின் குரலில் கவலையும் வருத்தமும் கூடவே அதில் கலக்கமும் சேர்ந்திருக்க
“டேய் செழியா… நீ எதைப் பற்றியும் கவலைப்படாதடா… நீ ஓவர் திங்கிங் பண்ற…. ’தனா’வே அவனுக்கு நான் வேண்டாம்னா எனக்கு அவனும் வேண்டாம்னு தைரியமா அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டா… அது மட்டும் இல்லாமல் அவ பிஜி படிச்சு முடிக்கிற வர இனி அவ மேரேஜ் விசயத்தையே பேசக் கூடாதுனு வேற சொல்லிருக்காளாம்… இதுதான் இந்த வார தகவல் உனக்கு” முகிலன் கண் சிமிட்ட
“உண்மையாவாடா… பிஜியா… படிப்பா… அவளா… செழியா உன் ’ஆரா’-வாடா அவ….” செழியனின் குரலில் வெகுநாட்களுக்குப் பிறகு துள்ளல் வந்திருக்க
“அதேதான்… நான் என்ன சொல்றேன்னா…. இனி ’ஆரா’ மேரேஜ்… இந்த போட்டோ அது இதுன்னு போட்டு அதிகமா குழப்பிக்காத… உன் சின்ன மாமாதான் அந்தக் குடும்பத்தை பழிவாங்குறதுக்கு இவ்வளவும் பண்ணியிருக்கார்… இதான் உண்மையில் நடந்தது… நீயும் ரொம்ப தோண்டாத… மேரேஜ் நின்றுச்சு… உன் ’ஆரா’ உனக்கே… உன் ஆராவும் நின்னு போன மேரேஜை நினச்சு ஃபீல் பண்ணலை…. அவ்ளோதான்னு சந்தோசப்பட்டுட்டு வழக்கம் போல அவளோட கனவுலயே டூயட் பாடு…” என்றவன்…. இப்போது முகத்தை மிரட்டும் பாவத்தோடு வைத்தபடி…
“டூயட் மட்டும் பாடு… அதுவும் எட்டடி தள்ளி நின்னு… அவ்ளோதான் உனக்கு பெர்மிஷன்… என்னடா புரியுதான்…”
”மச்சான்… உன் தங்கச்சிகிட்ட என் எல்லை எதுன்னு நீ சொல்லாத… எட்டடி பத்தடியா… அதெல்லாம் படி தாண்டி பலநாள் ஆகியாச்சு… அதெல்லாம் எங்களுக்குள்ள… எங்க ஸ்பேஸுக்குள்ள நாங்க மட்டும் தான்… யாருக்கும் இடமில்ல”
முகிலன் முறைக்க…
“ஆரா-செழியன்… வேற யாருக்கும் அந்த உலகத்தில இடமில்லை”
“ஆனா காவல் காக்க… தூது வர… இதுக்கெல்லாம் நாங்க வேணும்… நல்லா வருவீங்கடா நீங்க… எப்படியோ நல்லா இருந்தா சரி… நீ ஆக்ஸிடெண்ட் ஆகி கிடந்தப்போ… இங்க ஆரா மேரேஜ் ஏற்பாடு நடந்தப்ப… என் மனசு என்ன பாடு பட்டுச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும்டா… இங்க பாரு… ஏதோ அன்னைக்கு நான் சொல்லி நீ என் பேச்சைக் கேட்டு அவளை விட்டு விலகி நிக்க ஆரம்பிச்சாதல இதெல்லாம் பண்றேன்னு நினைக்காத… கொஞ்சம் கொஞ்சமா நீ அவ மேல வச்சிருக்கிற காதலும் எனக்கு புரிய ஆரம்பிச்சதுடா… அதுதான் உண்மை” முகிலன் ஆரம்பித்திருக்க…
செழியன் அவனிடம்
“அவளுக்கும் அது புரியுமாடா… என்னோட காதல் வேற யார் மூலமாவும் அவளுக்குத் தெரியக் கூடாதுடா… நான் அவகிட்ட சொல்லனும்… நான் சொல்ற அந்த நொடி… அவ என்ன சொல்வா… எப்படி ரியாக்ட் பண்ணுவா… என்னென்னமோ கற்பனைடா எனக்குள்ள… என்னோட இத்தனை வருச காதல் தவத்துக்கு அவளோட பதில் என்னவா இருக்கும்டா…”
முகிலன் நண்பனை கவலையோடு பார்த்தவன்…
“நான் இதைச் சொல்லக் கூடாதுன்னுதான் நினைச்சேன்… ஆனாலும் சொல்லி ஆக வேண்டிய சூழ்நிலை… உனக்கு ஆக்ஸிடெண்ட்னு அவங்க வீட்ல… தனாகிட்ட சொன்னப்போ… மத்தவங்க கூட ஓரளவு வருத்தப்பட்டாங்க… ஆனா நீ உன் உயிர்னு சொல்ற அவகிட்ட…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தியவனைப் பார்த்த செழியன்
“என்ன ரியாக்ஷன் கொடுக்கனும்னு நினைக்கிற… அதெல்லாம் மனசுக்குள்ள ஃபீல் பண்ணிருப்பா… அவ அவ்வளவா எதையும் எக்ஸ்ப்ரெஸ் பண்ண மாட்டாடா…” செழியன் ஆராதனாவை விட்டுக் கொடுக்காமல் சொல்ல…
“அப்படியா… அன்னைக்கு அவ அண்ணனுக்கு பிரச்சனைனு சொன்னவுடனே பதறித் துடிச்சாளே… கண்ல தாரை தாரையா கண்ணீர் கொட்டுச்சே… நீ சண்டை போட்டப்போ அண்ணன் பக்கத்தில நின்னு அவனோட போராடினது…. அதெல்லாம் என்னவாம்… அதெல்லாம் விடு… நீ முதல்ல அவகிட்ட பேசு… இல்லை இராஜசேகர் பெரியப்பாட்ட வந்து பேசு… உன் மனசுல என்ன இருக்குதுனு அவங்களுக்கும் தெரிய விடு… பிரச்சனை வந்தா பார்த்துப்போம்… பேசுவோம்… இதுக்கே ரெண்டு வருசம் ஓடிரும்… அவளும் படிச்சு முடிச்சிருப்பா… கல்யாணம் முடிச்சுட்டு உன் விருப்பம் போஅ அவளை மேற்படிப்பு படிக்க வை… நீ என்ன அப்படியே விட்ருவியா என்ன… “
செழியன் அமைதியாக இருக்க
“டேய்… என்னடா அமைதியா இருக்க… வாயில கெட்ட வார்த்தை ஏதும் வந்துறப் போகுது… உன் லவ்னால எனக்குத்தாண்டா இப்போலாம் டென்ஷன் ஆகுது…. பிபி எகிறுது… மவனே எனக்கு ஏதாவது உடம்புல பிரச்சனைனு வரட்டும்…”
“ஏண்டா லூசு மாதிரி பேசுற… உனக்கே தெரியும்… எனக்கு எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி உயிர் பொழச்சு வந்திருக்கேன்… எங்க மாமா வீட்ல இருந்து ஒருத்தவங்க கூட என்னைப் பார்க்க வரல… அட்லீஸ்ட் போன்ல கூட யாரும் விசாரிக்கல… எனக்கும் தெரியும்… அவங்க என்னை நெனப்பாங்க… ஃபீல் பண்ணுவாங்கன்னு… ஆனாலும் அவங்க வந்து பார்க்கலைனு வருத்தம் தாண்டா…” செழியனின் கண்கள் இப்போது சிவப்பேறி இருக்க…
“எனக்கே இப்படி இருக்குனா…. என் அம்மா அப்பாக்கு எப்படி இருக்கும்… ஒரு வேளை நான் செத்துருந்தா வந்திருப்பாங்களாடா…” செழியனின் குரம் தழுதழுத்திருக்க
“அப்படி நான் செத்திருந்தா என் ஆராக்கு கூட என் காதல் தெரியாமலே போயிருக்கும்ல… என்னோடவே என் காதலும் மண்ணோட மண்ணா போயிருக்கும்ல… ”
சட்டென்று நிறுத்தியவன்…
“ஆனால் அப்படி ஏதும் நடக்கலையே… எனக்கு ஏனோ இப்போ சொல்லனும்னு தோணலைடா… ஆரா இப்போதான் அவ சிந்திக்கவே ஆரம்பிச்சிருக்கா… இந்தச் சூழ்நிலைல அவளைக் குழப்ப விரும்பல… அவ படிக்கனும்னு சொன்னாள்ள… படிக்கட்டும்… பி எஸ்சி முடிக்கிற வரை நான் அவளை குழப்ப விரும்பல… என்னையும் என்னோட காதலையும் அவ மண்டைக்குள்ள திணிக்க விரும்பல…”
செழியன் தன் நண்பனோடு இங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க… அதே வேளை… ஆராதனாவும் தன் தோழி செல்வியோடு கணினிப் பயிற்சி நிறுவனத்தில் இருந்தாள்…
----
“இங்க எல்லா கோர்ஸுக்குக்குமே ஃபேகல்ட்டிஸ் இருக்காங்க… நீங்க தாராளமா எந்த கோர்ஸ் வேணும்னாலும் செலெக்ட் பண்ணலாம்….” அந்த கணினி பயிற்சி நிறுவனத்தின் மேலாளர் சொல்லியபடி தன் முன் அமர்ந்திருந்த ஆராதனாவையும்… செல்வியையும் பார்த்தார்…
ஆராதனாவோ தன்னிடம் கொடுக்கப்பட்டிருந்த அந்த சிறு புத்தகம் போன்ற கோப்பைப் பார்த்துக் கொண்டிருக்க… செல்வி வேகமாக ஆராதனாவைப் பார்த்து
“ஏய் தனா… என்னடி இவ்ளோ யோசிக்கிற…. என்ன கோர்ஸ் படிக்கப் போறேன்னு தெரியாமலேயே வந்துட்டியா…” அவள் கேட்ட போதே ஆராதனா நிமிர்ந்து பேச ஆரம்பித்தாள்…
“சார்… க்ளாவ்ட்… டேட்டா பிரிக்ஸ்… AI.. இது எல்லாம் சேர்ந்த மாதிரி காம்போவா கோர்ஸ் இல்லையா… ”
இப்போது செல்வி ஆராதனாவை ஆவென்று பார்த்தபடி இருக்க…
“அதெல்லாம் பண்ணிக்கலாம்மா…. அமௌண்ட் மட்டும் ரீ கால்குலேட் பண்ணனும்… அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீ சூஸ் பண்ணும்மா… கார்த்திக் சார் என்கிட்ட பேசிட்டாரு…. “
சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அங்கு வேலை பார்க்கும் இளைஞன் வந்து சேர
”இவர்தான் அருண்… இங்க க்ளவ்ட்.. டேட்ட பிரிக்ஸ்… ஏஐ… க்கு ஃபேகல்ட்டி…” என்று வந்த அந்த இளைஞனை அறிமுகப்படுத்தியபடி… அவனிடம் ஆராதனாவைக் காட்டியவராக
“இவங்கதான் ஆராதனா இங்க கோர்ஸ் ஜாயின் பண்ண விசாரிச்சுட்டு இருக்காங்க…. அப்புறம் இவங்க யார் தெரியுமா…. உன்னோட குரு செழியனோட மாமா பொண்ணு… “
என்றபடியே…. ஆராதனாவிடம்
“செழியன் தான் இவருக்கு சென்னைல ட்ரெயினிங் கொடுத்தது… செழியன் இவருக்கு சீனியர்… அவர் ரெகமெண்ட் பண்ணித்தான் இங்க இந்த அட்வான்ஸ் கோர்ஸ்லாம் இண்ட்ரடியூஸ் பண்ணினோம்” என்ற போதே ஆராதனா செல்வியிடம் திரும்பியவளாக
“ஏன் செல்வி…… உங்க அண்ணா கம்பெனியோட டெக்னாலஜி ஸ்டேக் இந்த கோர்ஸ்ல அப்படியே இருக்கு… எதுவுமே மாத்த தேவையில்ல இந்த கோர்ஸைப் பாரு… இது சூப்பர்ல”
“சார்……. இந்த கோர்ஸ் பாருங்க… ஃப்ரண்ட் என்ட் … பேக் என்ட்… டேட்டா பேஸ் எல்லாமே கவர் ஆகுது… இதுவே சூஸ் பண்ணிக்கிறேன்” என்றபடி… தன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவரிடம் நீட்டி இருக்க…
”என்னாச்சும்மா… அந்தக் கோர்ஸ் பற்றி அவ்ளோ விசாரிச்சுட்டு சட்டெனு மாத்திட்ட..”
”அப்படிலாம் இல்ல சார்… அல்ரெடி நான் செலெக்ட் பண்ண டெக்னாலஜிலாம் நான் இவ அண்ணாகிட்ட விசாரிச்சுட்டேன்… தெரியாததுனால ஜஸ்ட் புதுக் கோர்ஸை விசாரிச்சேன் சார்… அவ்ளோதான்… அதுல எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை.. சொல்லப் போனா அந்த டெக்னாலஜிலாம் பிடிக்காததும் கூட” என்று முடித்தபோதே கார்த்திக்கும் அங்கு வந்து சேர்ந்திருக்க… சற்று நேரத்தில் தங்கை சொன்ன கோர்ஸுக்கு பணத்தைக் கட்டி முடித்தவன்… தங்கையையும் அவளின் தோழியையும் தான் வந்த வாகனத்திற்கு செல்லுமாறும் அங்கு காத்திருக்குமாறும் சொல்லி அனுப்பி விட்டு… தங்கையின் வகுப்பு நேரம்… யார் சொல்லிக் கொடுப்பது…. எத்தனை மாணவ மாணவிகள் என விசாரிக்க ஆரம்பித்திருக்க… ஆராதனாவோடு செல்வியும் வெளியே வந்திருந்தாள்…. வாகனத்திலும் வந்து அமர்ந்திருந்தனர்…
செல்வி ஆராதனாவோடு காரில் வந்து அமர்ந்தாளோ இல்லையோ… தோழியை ஆச்சரியமாகப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தாள்…
“உனக்கு என்னடி ஆச்சு… திடீர்னு கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம் போறேன்னு சொல்ற… விசாரிக்கத்தான் வந்திருக்கேன்னு பார்த்தால்… பணம் கட்டி உடனே ஜாயின் பண்ற தூரத்துக்கு வந்துட்ட… “
“இல்ல செல்வி… ரொம்ப நாளா படிக்கனும்னு ஆசை…. உனக்கு இந்த கம்ப்பூட்டர் டேட்டாபேஸ் இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்ட.. வீட்ல கேட்டா செல்வியே போகல உனக்கு என்னன்னு… அவ போனா போன்னும் சொல்லிட்டாங்க… நானும் விட்டுட்டேன்… ஆனா இப்போ இந்த மேரேஜ் நின்ன பின்னால அப்பாகிட்ட கேட்டப்போ உடனே போகச் சொல்லிட்டாங்க…”
செல்வி வேறெதுவும் பேசாமல் இருந்தவள்…
“சாரி தனா… வீட்லயே அண்ணன் சொல்லிக் கொடுக்கும்… அதோட பெருசா இண்ட்ரெஸ்ட் இல்ல…”
“எனக்குத் தெரியும் செல்வி… நீ ஃபீல் பண்ணாத… அதுமட்டுமில்ல நம்ம மனோகரி மேம் வீட்டுக்கும் ட்யூசன் போகப் போறேன்… காலையில 5.30க்கெல்லாம்…. அண்ணன் காலையில கொண்டு வந்து விட்றேன்னு சொல்லிட்டாங்க… அங்கயிருந்து மேமோட காலேஜுக்கும் வந்திருவேன்”
”அப்போ… மார்னிங்… ஈவ்னிங் காலேஜ் பஸ்ல வர மாட்டியா…” செல்வியின் குரல் கம்மியிருக்க…
“ஹ்ம்ம்… உன் வருத்தம் புரியுது செல்வி… உனக்காகத்தான் இவ்ளோ ஏற்பாடும்…” ஆராதனா சொன்னபோதே செல்வி புரியாமல் விழிக்க… ஆராதனா விளக்கமும் கொடுத்தாள்
“உன்னோட இலட்சியம் என்ன… சென்னைல உனக்குப் பிடிச்ச யூனிவெர்சிட்டில மேற்படிப்பு படிக்கனும்னு… அதுக்கான என்ட்ரென்ஸ் எக்ஸாம்ஸ்க்கு நீ பிரிப்பேர் பண்ணப் போறேன்னு சொன்னேல்ல…”
“அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்… அதுனால இப்போதே பிரியுறதுக்கு ரெடி ஆகிட்டியா…”
“லூசு… உன்கிட்ட இருந்து பிரியுறதுக்காக இவ்ளோ மெனக்கெட்றேனா… எனக்காக உனக்கு கெடச்ச டாக்டர் சீட்டைக் கூட வேணாம்னு சொன்ன” ஆராதனா சொன்னபோதே…
“எனக்கு உண்மையிலேயே டாக்டர் கனவு இலட்சியம் இல்ல தனா… ஃபார்மஸி லைன்ல ரிசர்ஸ் அண்ட் சைண்டிஸ்ட் இதுதான் என்னோட இலட்சியம்… உனக்கு தெரியும் தானே… “
“ஹ்ம்ம்… அதேதான் எனக்காக உன்னோட மெடிக்கல்… என்ஜினியரிங் கோர்ஸ்லாம் சேக்ரிஃபைஸ் பண்ணின உனக்கு நான் என்ன பண்ணியிருக்கேன்… அதான் உன் கூட மேல்படிப்பும் படிக்க வரலாம்னு முடிவு பண்ணிட்டேன்… எம்.எஸ்சி என்ட்ட்ரென்ஸ் எக்ஸாம்லாம் எழுதி வரமுடியுமான்லாம் தெரியல… அதே நேரம்… அட்லீஸ்ட் பேமெண்ட் கோட்டாவது கிடைக்குமான்னு பார்க்கிறேன்… சப்போஸ் அதுலயும் கோட்டை விட்டுட்டேன்னா… அதுக்குத்தான் இந்த கம்பூட்டர் கோர்ஸ்… உன்கூட படிக்க முடியலேன்னா… அட்லீஸ்ட் உன்கூட சென்னை வர்றதுக்காகவது இது யூஸ் ஆகும்ல…”
செல்வி நம்பமுடியாத பாவனையுடன்… பார்த்தவளாக…
“சப்போஸ் மேரேஜ் ஆகியிருந்தா… அப்போ கூட என்னைப் பற்றி யோசிச்சியா என்ன” பொய்க் கோபத்துடன் தோழியுடன் சண்டை போட
“யோசிச்சேன்தான்… ஆனால் இப்படி யோசிச்சேன்…. உன்னோட ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப நாள் கிடைக்காதுன்னு… எவ்ளோ நாள் அழுதிருப்பேன் தெரியுமா… எப்படியும் உன்கூடலாம் சென்னை வர்றது… எம் எஸ்சி இதெல்லாம் நடக்காத காரியம்னு தெரியும்… ஒண்ணு என்னோட மேரேஜ்… இன்னொன்னு என்னோட ஸ்டடிஸ் கேபபிலிட்டி…”
என்று செல்வியைப் பார்த்தவள்
“நான்லாம் டென்த் பாசானதே அதிகம் செல்வி… ஆனா இன்னைக்கு காலேஜ் வந்துருக்கேன்னா… நீ தான் அதுக்கு முழு காரணம். ஆனால் அதைவிட ஏதோ ஒரு ஃபோர்ஸ் இவ்ளோ தூரம் என்னை இழுத்துட்டு வந்துருக்குன்றதும் உண்மை… இதுவரை எப்படியோ… படிக்கனும்… இலட்சியம் அது இதுன்னு நான் படிச்சதில்லை… போற போக்குல படிச்சேன்… ஆனால் இனிமேல என்னோட எஃபர்ட்ட போடப் போறேன்… எனக்குத் தெரியும்…. இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு…. என்னோட பெர்சண்டேஜ் க்ரேட்லாம் இன்க்ரீஸ் பண்ணனும்… அப்போதான் என்ட்ரென்ஸ் எக்ஸாம்க்கே எலிஜிபிள் ஆவேன்… அதுக்காகத்தான் மனோகரி மேம்கிட்ட கிளாஸ் போறேன்… கண்டிப்பா அடுத்த மூணு செமஸ்ட்ரலயும் என்னோட க்ரேட ஹையர் ஆக்குவேன்… என்ட்ரென்ஸும் ட்ரை பண்ணுவேன்… உனக்கே புரியும் இது எனக்கு எவ்ளோ பெரிய விசயம்னு… ஆனாலும் ட்ரை பண்ணப் போறேன் செல்வி… வாழ்க்கைல நம்மளால முடியும்னு நினைக்கிற விசயத்தை பண்றதைக் காட்டிலும்… முடியவே முடியாது… நடக்கவே நடக்காதுன்னு நினைக்கிற விசயத்தைப் பண்றதுதான் இலட்சியம்னு நான் நினைக்கிறேன்”
செல்வி இப்போதும் கவலையுடன் ஆராதனாவைப் பார்த்தாள்… ஒரு திருமணம்… அது நடக்காதது இந்த அளவு தன் தோழியை மாற்றி விட்டதா… அவள் பேசுவதெல்லாம் சரிதான்…. அவள் எடுத்திருப்பதும் நல்ல முடிவுதான் ஆனாலும்… இது எல்லாம் ஏன்… ஒரு வேளை அந்த ஷண்முகத்தை அவன் தான் இனி அவளுக்கு எல்லாமே என முடிவு செய்து அந்த முடிவில் நம்பிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஆராதனாவை இப்படி மாற்றி விட்டதா?….
தன் எண்ணத்தை தோழியிடமே கேட்டும் விட… ஆராதனாவும் அதற்கு பதில் சொன்னாள்…
”இதுதான் உன் பாதை…. உன் வாழ்க்கைக்கான மீதித் தூரத்துக்கான இதில்தான் பயணம்னு எல்லோரும் சொல்லும் போது… அந்தப் பாதையை நோக்கிதானே நம்ம பயணம்… நம்மோட கவனம் இருக்கும்… அந்த மாதிரிதான் அந்தப் பையன் ஷண்முகமும்… எல்லோரும் இவன் தான் மாப்பிளைனு சொல்லும் போது நானும் அவனை நினைக்க ஆரம்பிச்சேன்… அதுதானே இயல்பு… அவ்ளோதானே தவிர அது காதல்லாம் இல்லை… இவன் தான் உன் வருங்காலக் கணவன்னு சொல்லும் போது அவனை நோக்கி என் கவனம் எண்ணம் எல்லாம் திரும்புச்சு…. அது தொடர்ந்திருந்தா அது வேற மாதிரி ஆகியிருக்கும்… ஆனால் நல்லதுக்கோ கெட்டதுக்கோ…. என்னோட சித்தப்பாவால வேற மாதிரி நடந்துருச்சு… யாரோ ஒருத்தனோட நான் சேர்ந்து நிற்கிற மாதிரி என் சித்தப்பா காட்டின போட்டோ எல்லாத்தையும் மாத்திருச்சு… ஜஸ்ட் போட்டோ மார்ஃபிங்க்னு அந்த ஷண்முகத்தால என்னை ஏத்துக்க முடியல… அவனுக்கு ராமன்னு நெனப்பு… ராமனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளா சுத்தமானவளா இருக்கனும்னு அவனோட எண்ணம்… அது என்கிட்ட கிடைக்கல… மேரேஜ் வேண்டாம்னு போயிட்டான்… அதே நேரம் என் மேலயும் பழி போடல… அந்த வகையில நல்லவன் தான் அதுனால அவன் எங்க ஃபேமிலிகிட்ட இருந்து தப்பிச்சான்… சித்தப்பா மாட்டினா என்ன பண்ணுவாங்களோ அதுதான் கவலையா இருக்கு… ஏன் பண்ணினார்னும் தெரியல…” ஆராதனாவின் முகத்தில் மெல்லிய கவலை வரிகள் ஓட ஆரம்பித்திருக்க
செல்வி இப்போது வேகவேகமாக
“விடு தனா… நான் வேற… ஏதேதோ பேசி தேவையில்லாத விசயம்லாம் நீ மறக்க… இல்லல்ல உன்னைப் பொறுத்த வரைக்கும் அது பெருசா இம்பார்ட்டண்டட் இல்லாத விசயம்…. அதைப் பேச வச்சுட்டேன்” செல்வி தன் தோழியிடம் மன்னிப்புக் கேட்க
“இப்போ எதுக்குடி நீ மன்னிப்புலாம் கேட்கிற…. இந்த மேரேஜ் நடக்கலைன்றதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும்… கவலையும் இல்லை… ஆனால் இந்த மேரேஜுக்கு எதுக்காக ஓகே சொன்னேன்… அது நடந்துச்சுனு நான் சந்தோசத்துல இருக்கேன்… என்ன பார்க்கிற… என் அண்ணன் பழையா மாதிரி ஆகனும்… என் அப்பாக்கு அண்ணா மேல இருக்கிற கோபம் தீரனும்… அண்ணாகிட்ட பழையபடி பேசனும்… இது நடந்துச்சா இல்லையா… அப்புறம் என்ன.. அது நடக்கலைனாதான் வருத்தப்பட்ருப்பேன்… சோ இப்போ நான் ஹேப்பிதான்” சந்தோசமாக ஆராதனா சொல்ல…. செல்வியும் புன்னகைக்க…
“இன்னொன்னு தெரியுமா… எங்க அண்ணன் என்கிட்ட வந்து அதுவே பேசுச்சு…. கமலி வேறொரு மேரேஜ் பண்ணிட்டான்னு என்னென்னவோ பண்ணி… நான் இந்தக் குடும்பத்தையே கவலைல தள்ளினேன்… ஆனால் நீ எவ்ளோ ஈஸியா போல்டா இந்த விசயத்தை எடுத்துகிட்ட… உன்னோட மெச்சூரிட்டி… தைரியம் எனக்கு ஏன் இல்லாம போச்சுனு சொல்லி வருத்தப்பட்டாங்க… இனி அந்தக் கமலினால எனக்கு அவமானம் ஆகிருச்சுனு ஒரு துளி கூட என் வாழ்க்கைய வேஸ்ட் பண்ண மாட்டேன்ன்னு சொன்னாங்க தெரியுமா…. எனக்கு எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா… சொல்லப் போனால் எங்க குடும்பம் மறுபடியும் பழைய மாதிரி மாறிருச்சு செல்வி… என்ன!! அத்தை வீட்டோட பேசலை… அவ்ளோதான் வித்தியாசம்… ஆனால் மெல்ல எல்லாம் மாறும்னு நம்புறேன்… பாவம் தானே எங்க திலகா அத்தை… “ கார்த்திக் பற்றி ஆராதனா பேச ஆரம்பித்த போதே செல்வியின் மனம் அங்கு இல்லை… எங்கோ சென்றிருக்க… ஆராதனா பேசிக் கொண்டே இருக்க…. செல்வியும் பாதி கேட்டும் கேட்காமலும் தன் நினைவில் இருக்க…
அதே நேரம் கார்த்திக்கும் வந்தவனாக காரில் ஏறி அமர்ந்து…. “கிளம்பலாமா தனா…” என்றபடி காரை ஸ்டார்ட் செய்யப் போன போதே…
“ஹையோ அண்ணா… ” ஆராதனா திடிரென்று கத்தினாள்…
செல்வி கார்த்திக் இருவரும் பதறி ஆராதனாவைப் பார்க்க….
”என்னோட மொபைல் காணோம்… ஒருவேளை அங்கேயே வச்சுட்டு வந்துட்டேன் போல…. ஒரு நிமிடம்…” கார்த்திக்கின் பதிலைக் கூட எதிர்பாராமல்
“செல்வி… வெயிட் பண்ணு” என்றபடி… ஆராதனா வேகமாக மீண்டும் கம்ப்யூட்டர் செண்டருக்குள் மீண்டும் சென்று விட…
செல்வியும் கார்த்திக்கும் மட்டுமே காரில்… ஆராதனா போன நிமிடத்தில் இருந்து அங்கு அமைதி நிலவ ஆரம்பித்திருக்க… அதைக் கலைக்கும் வண்ணம்… கார்த்திக்கின் அலைபேசி அடிக்க… அழைத்தவள் ஆராதனாதான்…
“அண்ணா போன் கெடச்சுருச்சு… ஒரு ஃபைவ் மினிட்ஸ்…. ’புக்ஸ் கிட்’ உங்ககிட்ட இல்லைனு சொன்னாங்களாமே…. ஆனா நான் சாரோட புக் ஏதாவது இருந்தா சாம்பிளுக்கு தரச் சொன்னேன்…. இன்னைக்கு ஒருநாள் எடுத்துட்டு போய் படிச்சுட்டு வந்து தர்றேன்னு சொன்னேன்… ’சரி’ன்னு புக்கை எடுத்துட்டு வரப் போயிருக்காரு… அவர் கொண்டு வந்து தந்ததும் வாங்கிட்டு நான் வந்துறேன்” என்று நீட்டி முழங்கியவளிடம்… தலை ஆட்டி விட்டு…. பின்னால் திரும்பி… செல்வியிடம் விசயத்தைச் சொன்னவன்… மீண்டும் சாலையில் தன் கவனத்தை வைக்க…. 10 வினாடிகள் செல்வி அமைதியாக இருந்திருப்பாள். இருந்திருப்பாள் என்பதை விட இருக்க முயற்சித்தாள்… ஆனாலும் அவளால் முடியுமா என்ன?…
“சரி ஏதாவது பாட்டு போடுங்க… அதையாவது கேட்கிறேன்…. இப்டிலாம் உம்முனு ரோட்டைப் பார்த்துட்டு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்க முடியாது”
“என்னது… என்ன சொன்ன” கார்த்திக் பின்னால் திரும்பி முறைக்க
“ஹான்… அதாவது பாட்டு போடுங்கன்னு சொன்னேன்… கேட்கலையா…. பாட்டு… ஏதாவது பாட்டு போடுங்கன்னு சொன்னேன்… ஏதாவது பாட்டு இல்லை ரொமாண்டிக்கா பாட்டு போட்டாலும் ஓகே…”
“என்ன திமிரா” வேகமாக கார்த்திக் கேட்க
“லவ் சாங்க்ஸ் கேட்டா திமிரா இருக்கேன்னு அர்த்தமா… எந்த ஊர் லாஜிக் இது… “ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த செல்வி முன்னால் சென்று அவன் சீட்டின் அருகே முன் வந்து கேட்க…
“இவள் வேண்டுமென்றே தன்னிடம் வம்பு வளர்க்கிறாள்” உணர்ந்த கார்த்திக் இப்போது சுதாரித்தபடி
“ஹ்ம்ம்ம்… என் கார்ல செட்டெல்லாம் இல்ல… இருந்தாலும் அது பாடாது… அதுவும் செல்வின்ற பேர்ல யாராவது காருக்குள்ள இருந்தா பாடவே பாடாது….” கார்த்திக் சொல்லி விட்டு வெளியே அலட்சியமாகப் பார்வையை வைக்க
”ஓ…. இந்த காருக்கு ’செல்வி’ கார்ல இருந்தால் பாட்டு பாட பிடிக்காதாமா… ஒரு வேளை இந்தக் காருக்கு செல்வி குரலை மட்டும் தான் கேட்கப் பிடிக்கும் போல… அதான் மத்த வாய்செல்லாம் காருக்குள்ள அளோ பண்ணாது போல… அவ்ளோ பாசம் என் மேல போல” செல்வியும் விடாமல் அவனிடம் வம்பு வளர்க்க… கார்த்திக்கின் பொறுமை பறந்திருந்தது இப்போது
”ஏய்… என்ன பேச்சுலாம் ஒரு மாதிரி போகுது… நீ நரேன் தங்கச்சினு மட்டுமில்ல… நான் பார்த்து வளர்ந்த புள்ள… உனக்கும் எனக்கும் எவ்ளோ வயசு வித்தியாசம் தெரியுமா… என்னைப் பொறுத்த வரைக்கும் நீ சின்னப் பொண்ணு… அவ்ளோதான் உன்கிட்டலாம் சரிக்கு சமமா நான் பேசுனா எனக்குத்தான் அசிங்கம்… “ என்று சரிக்கு சமமாக அவளிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்த போதே… ஆராதனாவும் வந்திருக்க… கார்த்திக் சட்டென்று செல்வியுடனான வாக்குவாதத்தை நிறுத்தியவனாக
“’தனா’ பாப்பா… புக் வாங்கிட்டியாடா….. போலாமாடா… ஏறுடா பாப்பா” என்று ஆராதனாவை காருக்குள் அமரச் சொன்னவன்… அது மட்டுமல்லாமல்… மீண்டும் அவர்கள் கல்லூரி வந்து சேரும் வரை ஆயிரம் பாப்பா போட்டு அழைத்திருந்தான் தன் தங்கையை…. செல்விக்கும் புரியாமல் இல்லை… நீயும் என் தங்கையைப் போல பாப்பாதான்… என்று சொல்லாமல் சொல்கிறான் என்று… தெரிந்தும் கேட்டும் கண்டு கொள்ளவில்லை செல்வி…
---
செல்வி மாலையில் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய போதே…. நரேன் வந்திருக்க… ஏதோ காரசாரமான விவாதமும் போய்க் கொண்டிருந்தது… செல்வியின் வீட்டில்
“அம்மா… எனக்கு மேரேஜ் வேண்டாம்னா வேண்டாம் தான்……….. அது மாதிரி நான் யாரையும் லவ் பண்ணவும் இல்லை… எனக்கு என்னோட பிஸ்னஸ்லதான் இப்போ ஃபுல் கான்செண்ட்ரேஷனும்…. எல்லோரும் ஏஐ.. அது இதுன்னு போயிட்டு இருக்காங்க நான் இன்னும் அந்த லெவலுக்கு போகலை… என்னோட ஃபோகஸ்… அதுலதான் இருக்கு… இன்னும் 5 வருசம் ஆகும் என்னோட கம்பெனிய இம்ப்ரூவ் பண்ண… இதுல மேரேஜாம்… வயசாகுதாம்” என்ற கோபத்துடன் அறைக்குள் சென்றிருக்க… தான் வந்ததைக் கண்டும் கூட கூட தன்னைப் பார்க்காமல் தன் அண்ணன் அறைக்குள் சென்ற விதமே அவனின் கடுங்கோபத்தை அவளுக்கு பறைசாற்றி இருக்க… தன் பெற்றோரை முறைத்தபடியே தன் அறைக்குள் சென்றாள் செல்வியும்…
யோசனை யோசனை மட்டுமே அவளுக்குள்… தன் அண்ணனைப் பற்றி அல்ல… தன்னைப் பற்றியும் தன் எண்ணங்களைப் பற்றியும்… அதாவது “கார்த்திக்…” பற்றி மட்டுமே…
அவன் மட்டுமே அவள் எண்ணமுமே
“உன்னுடைய வயது… உனக்கும் எனக்கும் உள்ள வயது வித்தியாசம்… நீ இன்னுமே எனக்கு சிறுபிள்ளைதான்… “ இப்போதெல்லாம் கார்த்திக் அவளிடம் மறைமுகமாக உணர்த்திக் கொண்டிருப்பது…
இது எல்லாவற்றையும் விட…
“நீ வேறு பிரிவு… நான் வேறு பிரிவு…. “ இதையும் அவளிடம் காட்டிக் கொண்டிருக்கின்றான் தான்….
இது எல்லாமே இப்போதுதான் அவன் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றான்…. கமலி திருமணத்திற்கு முன்னால் எல்லாம் இப்படி அவன் பேசியதே இல்லை… கோபம் மட்டுமே படுவான்…
”நான் அவனைக் காதலிக்கவே இல்லையே…. சும்மா பார்வை தானே…” இப்படித்தான் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள்… ஆனால் இப்போதெல்லாம் தனக்குள்ளே கூட அப்படி சொல்லிக்கொள்ள முடியவில்லை… அப்படி என்றால் இதற்கு பெயர் ’காதல்’ தானா… தன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருந்தாள் செல்வி
ஆனால் காதல் என்றால் தன் காதல் நிறைவேறாத ஒரு தலைக் காதலாக மட்டுமே இருக்குமே… கார்த்திக்கை நன்றாகப் புரிந்து வைத்திருந்தவளுக்கு அதுவும் நன்றாகவே புரிந்தது
கண்டிப்பாக கார்த்திக் இவளை ஒருபோதும் காதலிக்கவே மாட்டான்… அது சர்வ நிச்சயம்… கண்கள் கலங்கிய போதே…. ஆராதனாவின் வார்த்தைகள் அவள் காதுக்குள் ஒலித்தன…
“இலட்சியம்னா நமக்கு கிடைக்கும்… நாம ஜெயிச்சிறலாம்னு நினைக்கிற ஒரு விசயத்தை நோக்கிப் போறது இல்லை செல்வி… சாரி சாரி உன்னைக் குறை சொல்றேன்னு நினைக்காத… நீ இலட்சியம்னு நினைக்கிற ஃபார்மஸிஸ்ட் உனக்கு கண்டிப்பா சுலபமா நடக்கும்… ஏன்னா உன் அறிவு அப்படி… ஆனா அது இலட்சியம்னு நீ சொல்ற… என்னைப் பொறுத்தவரை உனக்கான இலட்சியம் அது இல்ல…. உன்னால முடியாத ஒண்ணை செஞ்சு காட்றதுதானே… அதை நீ இன்னும் கண்டுபிடிக்கலைனு நினைக்கிறேன்… யோசி… உனக்கும் என்னன்னு தெரியலாம்… சரி உன்னை விடு… உனக்கு எப்படியோ எனக்கு என்னால முடியாதது இந்த என்ட்ரென்ஸ் எக்ஸாம்தான்… உன்கூட வந்து உன்னோட சேர்ந்து படிக்கிறது…. அதை நான் இலட்சியமா எடுத்துகிட்டு அதை நோக்கி போகப் போறேன்”
ஆராதனாவின் வார்த்தைகள் இன்னுமே காதில் விழுந்தபடி இருக்க
“என்னால முடியாதது நடக்கவே வாய்ப்பில்லைன்றது எது… கார்த்திக் மேல காதல் இருந்தும்… அது நடக்க வாய்ப்பே இல்லைனு… சைட் அடிக்கிறேன்… மத்தபடி வேறெந்த ஆசையும் இல்லைனு மேலோட்ட வார்த்தைகள் சொல்லிட்டு இருக்கிறது… அது பொய்… ஆனால் உண்மையிலேயே நான் கார்த்திக்கை லவ் பண்றேன்… அது எனக்கு மட்டும் தான் தெரியும்… அவர் இந்த ஒரு மாதமா அனுபவிக்கிற வேதனையை விட வெளிய காட்டிக்காமல் நான் அனுபவிக்கிற வேதனை அதிகம்” செல்வியின் கண்கள் அவளையுமறியாமல் கண்ணீரை உகுக்க…
“நான் ஏன் அழனும்… ஆராதனா சொன்ன மாதிரி… என்னோட இலட்சியம் ஏன் என் கார்த்திக்கோட காதலை நோக்கி இருக்கக் கூடாது…” எழுந்து அமர்ந்தவள் தன் கண்ணீரைத் துடைத்திருக்க… அவள் கண்ணீரைத் துடைத்த அந்த நொடி… கார்த்திக் மீதான காதலோ அழியாத உணர்வுகளாக அவளுக்குள் ஆர்பரிக்க ஆரம்பித்திருந்தது
ஆக ஆராதனாவின் இலட்சியம் கல்வியை!!!???? நோக்கி செல்ல ஆரம்பித்திருக்க…. செல்வியின் இலட்சியமோ கார்த்திக்கின் காதலை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது
Diwali offer kuda kidaiyaatha🤔
Diwali work ah kuda vitutu vanthu ud vanthathanu check panitu irukom
@praveenavijay Ithu ungalukae aniyayama illaya... Engala ellam paatha paavama illaya... Daily oru 10 times vanthu vanthu check pannitu irukan... aana update ae kuduka maatringa... one month ku maela aaguthu... manda kaayuthu... karunai kaatunga madam
Next ud plz
Sis nxt ud epo? Waiting for a long time🧐🧐🧐
enaku enovo aara mela than doubt iruku.
Nice update
Aara tan marriage ah nipati irukum pola. Payagara alutha karriya irupalo🤔
Lovely update praveee
Ssssappa iva ellathaum minjiduva pola eh Manda kayuthu iva enna nenaikura trla
Thana triyanum unaeanum nu sezhiyan ninapadu nadakuma
Sezhiyan sollikuduthanu trijaduke anda course reject panndrala
Narenum ila pola apo vera yaru anda karuppu
Sezhiyanuku vendapatavanhala
Sugumaranuku too payasam pravee
Idenna ulatava maruthu aara padippa noki
Selvi karthi ah noki hoom
Aarathana kanmanike tough kudupa polaye.. But chezhiana ava luv panra... This is confirm
Aara was great. Sh had take this problem easy. Nice epi
Aara oda boldness pidichu irukku..
Selvi oda kadhal ???
NIce.