ஹலோ ஃப்ரெண்ட்ஸ்
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்…
இது செழியன் ஆராதனா ஸ்டோரிதான்... ஆனாலும் இனிஷியல் எபிசோட்ஸ் செல்வி கார்த்திக் ஹீரோ ஹீரோயினவிட கொஞ்சம் டாமினேட் பண்ணுவாங்க... ஆனால் அவங்களைக் கடந்தால் தான் கதையே...
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்…
நன்றி
உங்கள் பிரவீணா…
அத்தியாயம் 9:
நாயகன்:
வஞ்சியே உன் மனம்
என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை
துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை
யாரிடம் நான் சொல்வது
நாயகி :
நெஞ்சமல்ல நெஞ்சம்
வெறும் வஞ்சம் அது வஞ்சம்
அன்று நீ கொடுத்தது
அடுத்த நாள் காலை… மணி ஏழுமணி ஆகி இருக்க… வழக்கம் போல் அல்லாமல் அதன் முதல் ஒலியிலேயே எழுந்திருந்தாள் செல்வி… எழுந்தவள் அடுத்த அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வந்தவளாக
“அம்மா… தனா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்… “
“என்னடி… நேத்து தனா வீட்டுக்கு போயிட்டு வந்து சாப்பிடக் கூட இல்லை… இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமா அவ வீட்டுக்குப் போறேன்னு சொல்ற… காலேஜ் போகலையா… வர வர உன் இஷ்டத்துக்கு நடந்துகிட்டு இருக்க… ஒரே பொண்ணுனு செல்லம் கொடுத்தது தப்போன்னு யோசிக்க வச்சுறாத” செல்வியின் அம்மா அவளைக் கண்டித்துக் கொண்டிருந்த போதே
அவளது தந்தை அங்கு வந்தவராக
“இப்போ அவ என்ன பண்ணிட்டான்னு… அவளைத் திட்டிட்டு இருக்க”
செல்வி இப்போது
“இல்லப்பா… காலேஜ் லீவ் போடப் போறேன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கனும்… என் தப்புதான்” செல்வி தயங்கிய குரலில் சொன்னவளாக…
“ம்மா… சாரிம்மா… நேத்து ஒரு மாதிரி குழப்பத்துலயே தூங்கிட்டேன்… அதுனாலதான் ஏதும் சொல்லல” செல்வி முகத்தை ஒரு மாதிரியாக வைத்தபடி சொன்னபோதே…
”என்னம்மா… உனக்கும் தனாக்கும் இடையில பிரச்சனையா…”
செல்வியின் தாய்… இப்போது
”உனக்கு எப்போதுமே அவதான் முக்கியம்… தனா தனான்னு… மெடிக்கல் சீட் கெடச்சு கூட போக மாட்டேன்னு சொல்லிட்டு… ஆராதனா கூட படிக்கிறேன்னு சொன்னப்போதே உன்னை கண்டிச்சுருக்கனும்… எவ்ளோ நாள் நீயும் அவளும் ஒண்ணாவே இருப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன்… ஆனால் இப்போலாம் பழைய மாதிரி இல்லை… அது மட்டும் தெரியுது” கடுப்போடு தன் மகளிடம் தாயாகச் சொல்ல…
தன்னைப் பற்றி தன் தாய் சொன்ன மற்றதெல்லாம் விட்டவளாக…
“ப்ச்ச்… நீங்க சொன்னது கூடிய சீக்கிரம் நடக்கப் போகுது…” செல்வியின் கண்கள் இலேசாக கலங்கியிருக்க… அவ்வளவுதான் மகள் கண்ணீரில் அவள் தாய் கலங்கிவிட்டார்…
”என்னாச்சு செல்விடா..”
“அவளைப் பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா… பொண்ணு பார்க்க வர்றாங்கன்னா… பார்த்துட்டு போய் சொல்றது அந்த மாதிரிலாம் இல்லை… கிட்டத்தட்ட நிச்சயம் மாதிரிதான்… மேரேஜ் டேட் கூட ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம்… அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம்…”
அதிர்ச்சியுடன் செல்வியின் தாயும் தந்தையும் செல்வியைப் பார்த்தவர்கள்…
“ஏன் இவ்வளவு அவசரம்… சின்னப் பொண்ணு… “ பெரியவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே
“உங்களுக்கே இப்படினா… எனக்கு எப்படி இருக்கும்” கண்களில் கண்ணீர் கரைபுரண்டிருக்க… வேகமாகத் துடைத்தவள்…
“எனக்கும் தெரியும்… எங்கள்ள யாருக்காவது முதல்ல மேரேஜ் நடக்கும்… நாங்களும் அவங்கவங்க வாழ்க்கையை நோக்கிப் போயிருவோம்னு… ஆனால்… இவ்ளோ சீக்கிரம்… அதுவும் அவளோட குடும்பத்துக்காக… என்னால ஏத்துக்கவே முடியலம்மா… அவ நல்லாத்தான் இருக்கா… சந்தோசமாத்தான் இதை எல்லாம் ஏத்துக்கிறா… ஆனா எனக்குத்தான்மா வலிக்குது… மனசெல்லாம் என்னமோ பண்ணுது… இதே மாதிரி சடன்னா இப்படிலாம் எனக்கு நடந்தா… சத்தியமா அவள மாதிரி ஏத்துக்கிட்டு இருப்பேன்னா தெரியல…”
இப்போது செல்வியின் மகளைத் தேற்றிக் கொண்டிருந்தனர்…
“இதுல உனக்கு என்னடா வருத்தம்… அவளை காலேஜாவது படிக்க விட்ருக்கலாம்… ஹ்ம்ம் சரி விடு… நாம என்ன பண்றது… ”
“நான் அவ்ளோ அட்வைஸ் பண்ணேன்மா… அவ கொஞ்சம் கூட கேட்கலை… கேட்டா அண்ணன்… ஆட்டுக்குட்டினு” இப்போது செல்வி வார்த்தைகளை பல்லைக் கடித்தபடி சொல்ல… அவளது பெற்றோர் அவளின் குரல் மாற்றத்தைக் கவனிக்கவில்லை….
பெற்றோரின் தேற்றலில் ஒருவழியாக சமாதானமாகி… பின்… செல்வி… ஆராதனா வீட்டிற்கும் வந்து சேர்ந்திருந்தாள்… ஆராதனா வீட்டு முன்பு பைக்கை நிறுத்தியபோதே…
“என்னப்பா கார்த்தி…. சமையல் ஏற்பாடெல்லாம் தடபுடலா போயிட்டு இருக்கு…” யாரோ கேட்ட வார்த்தைகள் எங்கிருந்தோ கேட்க…. அவளையுமறியாமலேயே கார்த்திக்கின் புறம் திரும்பியிருந்தாள் செல்வி… அருகிலேயே ஆராதனாவின் ராஜசேகரும் இருந்தார்…
ராஜசேகர்… தங்களிடம் பேச்சுக் கொடுத்த வயதானவரைப் பார்த்து புன்னகைக்க…
“என்ன ராஜா… உன் தங்கச்சிங்க வந்தா தானே உங்க வீடு களை கட்டும்… பொண்ணு கொடுக்கலைன்னு பெரிய தங்கச்சியோட சண்டை போட்டுட்ட… அது வராதுன்னு தெரியும்… அப்போ என்ன அமெரிக்கால இருந்து பூர்ணி வருதா…”
வந்தவர் அவர்கள் குடும்ப விசயத்தையும் சேர்த்து சொல்லியபடி இலேசாக பற்ற வைக்க முயற்சிக்க… கார்த்திக் அவ்வளவுதான்…
”போற போக்குல எப்படி வம்பை இழுக்கிறாரு பாருங்கப்பா… நான் சும்மா இருந்தாலும்” கார்த்திக் இப்போது…. கோபமாக வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்த போதே… இராஜசேகர் மகனைப் பார்வையால் அடக்கியவராக… அந்தப் பெரியவரை நோக்கியவராக
”மாமா… தெரிந்த சொந்தக்காரங்க வர்றாங்க... எல்லாம் நல்ல விசயம் தான்… சீக்கிரம் சொல்றேன்” அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல முடித்துவிட..
”தெரிந்த சொந்தக்காரங்கன்னா… அது யாரு எனக்குத் தெரியாம. என்ன நல்ல விசயம்” என்று விடாமல் அந்தப் பெரியவர் தொணதொணத்த போதே… இராஜசேகர் அவ்வளவுதான் கேட்டதற்கு பதில்… உனக்கும் மரியாதை என்பது போல்… அந்தப் பெரியவரின் கேள்விகளை எல்லாமல் கண்டுகொள்ளாமல் வேறு புறம் சென்று விட…வேறு வழியில்லாமல்.. அந்தப் பெரியவரும் சென்று விட… செல்வியும் தன் பைக்கை விட்டு சாவியை எடுத்திருந்தாள்… அதை எடுக்கும் பாவனையோடு கார்த்திக்கையும் பார்த்தபடிதான் இருந்தாள்…
“சரி சரி வேடிக்கை பார்க்காமல் வேலையைப் பாருங்க… பதினொரு மணிக்குள்ள சமையல் முடிச்சுறனும்… இலேட்டா ஆனா அவ்ளோதான்..” கார்த்திக்கின் கம்பீரமான குரல்…
இப்போது தான் செல்வி கார்த்திக்கை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கிறள்… அதாவது பழைய மாதிரியான கம்பீரத்தோடு….
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கார்த்திக்கும் எதார்த்தமாகத் திரும்ப… அவன் பார்வையும் இப்போது செல்வியின் பார்வையைச் சந்தித்திருக்க… இப்போது செல்வியின் பார்வை மாறி இருந்தது.. அதாவது… பார்வையாலே அவனை எரித்தபடியே… தன் கோபத்தைக் காட்டியபடி அங்கிருந்து வீட்டுக்குள் செல்ல… கார்த்திக்கின் புருவங்களோ நெறிந்தது… அவள் கோபப் பார்வையில்
---
”தனா…”
“ஏய் தனா…”
“எங்கடி போயிட்ட…” வீடு முழுக்க செல்வி ஆராதனா பெயரைச் சொல்லியபடி தேடியவள் மீண்டும் தனாவின் அறைக்கு வந்தவளாக…
“பாட்டி… தனா எங்க…” அங்கு தன் பாட்டுக்கு ஏதோ புலம்பிக் கொண்டிருந்த கண்ணாத்தாள் பாட்டியிடம் கேட்க… அவர் இவளை எல்லாம் கண்டு கொண்டாள் தானே
“நான் எங்க போய்ச் சொல்லுவேன்… யார்கிட்ட சொல்லுவேன்… என் பேத்தி இங்க வந்து விளக்கேத்த முடியலை… இப்போ என் குடும்ப குத்து விளக்கும் யார் வீட்டுக்கோ போகப் போகுதே” செல்வியின் வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல் கண்ணாத்தாள் பாட்டி புலம்பிக் கொண்டிருக்க…
”ஆஹா… இப்போ இந்த பாட்டிகிட்ட மாட்டினேன்… அவ்ளோதான்… என்கிட்ட ஒப்பாரி பாட்டு பாட ஆரம்பிச்சிருவாங்களே.. எஸ்கேப் செல்வி… “ ஆராதனாவின் அறையை விட்டு வெளியே வந்தவள்
”என்னைக் காலங்காத்தால வரச் சொல்லிட்டு இவ எங்க போயிட்டா…” யோசனையுடன் வந்தவள்… பின்னால் கொல்லைப் பக்கமும் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவளுக்கு… பூட்டி இருந்த கார்த்திக்கின் அறை கண்ணில் பட….
“போலாமா… வேண்டாமா… ஒரு வேளை இந்த ரூம்ல இருப்பாளோ…. ஆனால் நம்ம குரல் கேட்கலையா… “ என்றபடி கார்த்திக்கின் அறையை நோக்கி தன் அடியை எடுத்து வைத்த போதே
“ஏய்… நில்லு” கார்த்திக்கின் குரலேதான்… திடீரென்ற கேட்ட அவனின் அதட்டல் குரலில் திடுக்கிட்டு… சட்டென்று நின்றவள் திரும்பிப் பார்த்து… பேசும் முன்னேயே…
”’தனா’ வைக் கூட்டிட்டு அம்மன் கோவிலுக்கு போயிருக்காங்க… வந்துருவாங்க… அதுவரை அவ ரூம்ல வெயிட் பண்ணு…” கார்த்திக் அதட்டிய குரலில் சொல்ல…
அவன் அதட்டல் குரலில் கடுப்பானவளாக…
“அதை கொஞ்சம் அமைதியா சொன்னால் தான் என்ன…” தனக்குள் முணங்கினாள் தான்… என்ன கொஞ்சம் சத்தமாகச் சொல்லி விட்டு அவனைக் கடந்து போக
இப்போது கார்த்தி்க்…
“ஏய் நில்லு…” அவன் சொல்ல… நின்றாள் செல்வியும்
”என்ன பார்வைலாம் ஒரு திணுசா இருக்கே…” கார்த்திக் அவள் முன் வந்து நிற்க…
செல்வியும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்… சற்று முன் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு வந்ததைத்தான் அவன் சொல்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது…
“ஏன்… நான் ஒண்ணும் உங்களை சைட்…” அவன் முறைப்பில் சட்டென்று நிறுத்தியவளாக
“முறச்சுதானே பார்த்தேன்… அப்படியும் பார்க்கக் கூடாது… முறைக்கவும் கூடாதுன்னா என்ன அர்த்தம்… என் கண்ணு… என் பார்வை… அதை எப்படி வேணும்னாலும் நான் பார்ப்பேன்… அதை கேட்கிறதுக்கெல்லாம் உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது…” செல்வியும் படபடவென்று சொல்ல
“உன் பார்வைதான்… ஆனா அது என்னைப் பார்க்குது… என்ன தைரியம் இருந்தா முறச்சுப் பார்த்துட்டுப் போவ…” கார்த்திக் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க
“நீங்க பார்க்கிறதுனாலதான் நான் பார்க்கிறது தெரியுது…. அப்போ நீங்க என்னைப் பார்க்காதீங்க… நான் என்ன பண்றேன்னும் உங்களுக்கும் தெரியாது… என்ன பார்வை பார்க்கிறேன்னும் கடுப்பும் ஆகாது…” செல்வியும் பேசாமல் எல்லாம் இல்லை… பேசிவிட..
“ஏய்…” கார்த்திக் அவள் அருகில் வந்த போதே
“அடேய் கார்த்தி… இங்க வாயேன்… பாட்டி நான் சொல்றதைக் கேளேன்… இந்த கெழவியோட ஆசைய யாரும் ஏண்டா கேட்க மாட்டேன்கறீங்களே… என் பேரன் செழியனைக் கூட்டிட்டு வாங்களேண்டா… என் பேரன் நான் சொல்றதைக் கேட்பாண்டா… ராஜா மாதிரி என் பேரன் இருக்கும் போது… “ கண்ணாத்தாள் பாட்டியின் புலம்பலைக் கேட்டவனாக
”இவங்க வேற… கடுப்படிக்கிறாங்க… அவங்க வந்துட்டு போற வரைக்கும் முகிலன் வீட்ல கொண்டு போய் படுக்கப் போடுவோம்…. ஹ்ம்ம் அவன் இருந்திருந்தா இந்த வேலையையாவது அவன்கிட்ட கொடுத்திருக்கலாம்…. இப்போ பார்த்து ஊருக்கு போயிட்டான்” முணங்கியபடியே… அறைக்குள் சென்று கண்ணாத்தாள் பாட்டியைத் தூக்கிக் கொண்டு முகிலன் வீட்டில் கொண்டு போய் விடப் போய்விட…
இப்போது யாருமின்றி ஒரே நிசப்தம்… செல்வி அமைதியாக அங்கு அமர்ந்து விட்டாள்தான்… ஏதுமே சரியாகப் படவில்லை அவளுக்கு…
எங்கோ எதிலோ தவறு நடக்கிறது மனம் சொன்னாலும்… புரியவில்லை அவளுக்கு… அவள் மனம் ஆராதனா… கார்த்திக் என்றுதான் யோசித்ததே தவிர… செழியன் எல்லாம் அவள் மனதில் தோன்றவில்லை…. இது ஒரு புறமிருக்க… ஆனால் அவள் உள்ளமெங்கும் நேற்று இங்கு வந்தபோது ஆராதனா அவளிடம் பேசியதுதான் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது…
---
”கட்டாயக் கல்யாணம்லாம் இல்ல செல்வி… என் மனசுக்கு ஓக்கேன்னு பட்டதுனாலதான் நான் சம்மதம் சொன்னேன் செல்வி…”
“என்னது கட்டாயக் கல்யாணம் இல்லையா…” செல்வி தோழியை கடுமையாகப் பார்த்துக் கேட்க
“ஆமாம் செல்வி…எனக்குப் பிடிக்காத ஒரு விசயத்தைச் செய்யச் சொல்லி… என் பாட்டி… என் அப்பா அம்மா ஏன் கடவுளே வந்தால் கூட நான் செய்ய மாட்டேன்… அது உனக்கே தெரியும்…”
”அப்போ உனக்கு இந்த மேரேஜ் பிடிச்சுருக்கா… இதை என்னை நம்பச் சொல்றியா” செல்வி கோபமாகவே கேட்க… ஆராதனாவோ அமைதியாகப் புன்னகைத்தாள்..
“நான் எப்படியும் என் அப்பா அம்மா சொல்ற பையனத்தான் என்னைக்கோ மேரேஜ் பண்ணிக்கப் போகிறேன்… ஆனால் அதுல என்னோட நிபந்தனை ஜெயிக்க முடியுதுனா… நான் ஏன் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கக் கூடாது… என் குடும்பம் நல்லா இருக்கப் போகுதுனா நான் ஏன் இந்த மேரேஜுக்கு ஒத்துக்கக் கூடாது”
செல்வி கேள்வியாக தன் தோழியை நோக்க…
“ரெண்டு விசயம்… அது நடக்கப் போகுது… என் குடும்பம் மறுபடியும் பழைய மாதிரி ஆகனும்” ஆராதனா செல்வியைப் பார்த்தபடியே…. அவள் யோசனைப் பாவத்தைப் பார்த்தபடியே
“ஹ்ம்ம்… என் அண்ணன் எங்களுக்கு பழையபடி மாறனும்… என்னோட மேரேஜை அவர்தான் நடத்தனும்… அப்பா அண்ணா செய்த தப்பை எல்லாம் மன்னிக்கனும்… பழைய மாதிரி ரெண்டு பேரும் பழகனும்… “ ஆராதனா சொல்லி விட்டு தன் தோழியைப் பார்த்தவள்…
“என் அப்பா பாசக்காரரு செல்வி… ஆனால் பாவம் அதே பாசத்தினால அவருக்கு வேதனைதான்… முதல்ல சித்தப்பா… அப்புறம் அத்தை… இப்போ அண்ணான்னு… அடுத்தடுத்து அவரோட பாசத்துக்கு அடி விழுந்ததை அவரால தாங்க முடியல… சித்தப்பா மேல அவர் எவ்ளோ பாசம் வச்சிருந்தார் தெரியுமா… அவர் போனப்போ அதை என்னால தடுக்க முடியல… அவங்க பிரிஞ்சப்போ எனக்கு சின்ன வயசு… இப்போ வரைக்கும் என்ன காரணம்னு எங்களுக்கு ஒழுங்கா தெரியாது… அது மாதிரி என் அண்ணனையும் என் அப்பா பிரிஞ்சுடக் கூடாது… ஏன் எங்க திலகா அத்தையும் பாவம்தான்… கண்டிப்பா ஒருநாள் அவங்களையும் என் அப்பா கூட சேர்த்து வைப்பேன்….” ஆராதனா முடித்திருக்க
செல்வி குழம்பியவளாக…
“எல்லாமே சரி தனா… உன் அப்பா… அண்ணா… உன் குடும்பம்… இதெல்லாம் இருக்கட்டும்… உனக்கும் மனசு இருக்குதானே… அதுல கனவு கற்பனை இருக்கும் தானே.. நீ லவ் பண்ணலதான்… ஆனாலும் உனக்குனு எதிர்பார்பு…. ஆசை இதெல்லாம் உனக்குனு வரப்போறவங்ககிட்ட இருக்கும்ல…”
ஆராதனா அவள் முன் வந்து நின்றாள்….
“ஹ்ம்ம்… இல்லைனு சொல்லல… எனக்கும் ஆயிரம் கனவு கற்பனை எல்லாம் இருக்கு… ஆனா அதை எல்லாம் விட… எப்படி சொல்றது உனக்கு” என முகவாயில் கை வைத்து யோசித்தபடியே….
“ஹான்… இது புரியும் பாரு… கேளு” தன் தோழியைத் தன் முன்னால் நிறுத்தியவளாக
“எனக்கு பிடிச்ச விசயம் ஆயிரம் இருக்கலாம்… ஆனால் எனக்குப் பிடிக்காதது ஒண்ணே ஒண்ணுதான் இருக்குனு வச்சுக்கோ… அப்போ நான் செலெக்ட் பண்ற பொருள்கிட்ட… பிடிச்ச ஆயிரம் விசயத்தை டிக் பண்றதுக்குப் பதிலா… எனக்குப் பிடிக்காத அந்த ஒரு விசயம் இல்லயான்னு பார்க்கிறது ரொம்ப ஈஸி இல்லையா…”
செல்வியின் புருவங்கள் சுருங்க…
“சிம்பிள் லாஜிக்டி… ஐஸ்கிரீம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்… பாகற்காய் பிடிக்காது… ஆனால் எனக்கு சாக்லேட் கிடச்சா என்ன பண்ணுவேன்… ஐஸ்கிரீம் கிடைக்கலதான்… ஆனால் எனக்கு பிடிக்காத பாகற்காய் கிடைக்கலேயே… அப்போ நான் லக்கிதானே…. …” ஆராதனா இயல்பாகச் சொல்லி தோளைக் குலுக்க…
செல்வியும் விடவில்லை….
”எனக்குப் புரியுது தனா… நானும் கேட்கிறேன்… அப்போ உனக்கு பிடிச்ச விசயம் இருக்குதானே… ப்ளீஸ்டி… எனக்கு உனக்குப் பிடிக்காத விசயம் தேவையில்லை… பிடிச்ச விசயம் எனக்குத் தெரியனும்… ஒரு வேளை என்னால முடிந்தால் அதை” செல்வி தன் தோழியின் திருமண விசயத்தை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் பரிதவித்தாள்.. அவளின் பரிதவிப்பைப் பார்த்து ஆராதனாவும் புரிந்து கொண்டவளாக… எங்கோ பார்வையை வைத்தவள்..
”ப்ச்ச்… செல்வி… இனி ஒண்ணும் ஆகப் போறதில்லை… ஷண்முகம் அவர் தான் என்னோட கணவர்… நான் செட் பண்ணிகிட்டேன்… கொஞ்சம் கொஞ்சமா அந்த ஷண்முகன்ற அலைவரிசைக்கு என்னோட மனசும் ட்யூன் ஆகிரும்… “ என்றபோதே ஆராதனாவின் குரல் தடுமாறியதோ எனும்படி இருக்க… செல்வி அவளை கவலையோடு பார்க்க ஆரம்பித்தாள்…
ஆனாலும் தோழியிடம் பேசாமல் செல்வி மௌனமாக சில நொடிகள் நின்றிருந்தவள்… பின் என்ன நினைத்தாளோ…
“ஆல் த பெஸ்ட்… கங்கிராட்ஸ்” என்று கைகளை நீட்ட… ஆராதனாவும் புன்னகையுடன் கைகளை நீட்டினாள்…
இப்போது செல்வி…
“நீ ஒரு தெளிவான முடிவோட இருக்கும்… நான் உன்னைக் குழப்புறேனோன்னு தோணுது… நீ ஓரளவு முடிவெடுத்து வருங்கால வாழ்க்கை எதுன்னு திங்க் பண்ற அளவுக்கு வந்துட்ட… கண்டிப்பா அதுவே உன்னை ஜெயிக்க வைக்கும்” இப்போது செல்வியின் முகமும் இயல்புக்கு மாறி இருந்தது….
”அதெல்லாம் சரிடி… ஆனால் ஏதோ எனக்கும் கனவு கற்பனை எல்லாம் இருக்கும்னு சொன்னியே அது என்னன்னுனாச்சும் சொல்லித் தொலை… இல்லேனா எனக்கு நைட் தூக்கமே வந்து தொலையாது… லவ்வா.. என் குடும்பத்துக்கும் லவ்வும் காத தூரம்னு சொல்றவளுக்கும்… ஏதோ இருந்திருக்கு போல…” செல்வி மெல்ல போட்டு வாங்க…
ஆராதனா சிரித்தபடி … தோழியை செல்ல அடி அடித்தவளாக
“அதெல்லாம் கனவுல மட்டும் தான் நடக்கும்டி… ரியலா நடக்க சான்சே இல்லை…” சொல்ல
“சொல்லு பார்க்கலாம்…. அப்படி என்ன கற்பனைனு… எங்களை எல்லாம் விடவா… மேடம் நீங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கரான்னு பார்ப்போம்… ” அமரும் நாற்காலியை இழுத்துப் போட்டு தோழியைப் பார்த்தபடி இலகுவான பாவனையுடன் கிண்டலடித்தபடி அமர்ந்தாள் செல்வி….
ஆராதனா அமைதியாக யோசித்தபடி இருக்க
“என் ஃப்ரெண்ட் யோசிக்கிறதைப் பார்த்தா… கற்பனைலாம் வேற லெவல்ல இருக்கும் போல… இவ்ளோ நாள் ஹீரோயின் நான்… நீ ஹீரோயின் ஃப்ரெண்ட் கேரக்டர் நெனச்சுட்டு இருந்தெனே… அப்டி இல்லையா… சொல்லுடி…ப்ளீஸ்டி… ”
ஆராதனா இப்போது முறைக்க…
“ நீதானடி அப்படி சொல்வ...” என்ற செல்வியிடம்
“எனக்கு எப்போதுமே என் அண்ணன் ஒரு ஹீரோ… அதுனால நீ அவரைப் பற்றி சொல்லும் போது உன்னைக் கிண்டல் அடிச்சேன்… என்னை அப்படி சொல்வேன்…” என்றவள்…
“இப்போவும் நான் ஹீரோயின் இல்லதான்…” இதைச் சொன்னபோது ஆராதனாவின் முகம் மாறினாலும் சட்டென்று மாற்றியவளாக… பேச்சையும் மாற்றியவளாக
“நீ என்ன கேட்ட.. “
“எனக்கு பிடிச்சவன் எப்படி இருக்கனும்னு உனக்குத் தெரியனுமா...” ஆராதனா இழுக்க…
“சொல்லித் தொலைடி பொறுமையச் சோதிக்காம…” செல்வி பொறுமை இழந்து கேட்க
“எனக்கு பிடிச்சவன் எப்படி இருக்கனும்னா… எனக்கு அவனைப் பிடிக்கவே கூடாது… அவனுக்கும் என்னைச் அறவே பிடிக்கக் கூடாது… அவன் கூட சண்டை சண்டை போட்டு… ஒரு கட்டத்துல அவனை எனக்குப் பிடிக்கனும்… அதுக்கப்புறம் என் காதலுக்காக அவனோட சண்டை போட்டு போட்டு… என்னைப் பிடிக்க வைக்கனும்… அது ஒரு மாதிரி ஃபீல்டி… இந்த மாதிரி நெஜத்துல நடக்குமா…”
செல்வியின் பார்வை கண்ணாடியில் தன்னையேப் பார்த்திருக்க… ஆராதனா அவள் பார்வை புரிந்தவளாக
“உன் பார்வை எனக்குப் புரியுது… சைட் அடிக்கிறவங்க லிஸ்ட்லாம் இதுல வராது… அதுனால நீ இந்த லிஸ்ட்ல வர மாட்ட” சட்டென்று செல்வியின் எண்ண ஓட்டத்தை மாற்றி இருந்தாள் ஆராதனா…
செல்வியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள்… ஆராதனாவை…. அவள் வார்த்தைகளை எல்லாம் மறந்தவளாக… தன்னைப் பற்றியும் கார்த்திக்கைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்…
“இவள் அண்ணனை தான் சும்மா மட்டும்தான் பார்க்கிறேன் என்று சொல்கிறாளா… ஆனால் அதுதானே உண்மை… நானும் காதல் திருமணம் என்றெல்லாம் ஆசை வளர்க்க வில்லையே… ஆனாலும் மனம் ஏன் அவனை நோக்கியே சுற்றுகிறது… அவன் நினைவோடே அலைகிறது…” மனதில் குழப்பம் சூழ்ந்த போதும்… தோழியுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தவள்… அதன் பின் வீட்டுக்கு கிளம்பியும் சென்றாள்..
அனைத்தையும் இப்போது யோசித்தபடி இருந்தவள்… ஏன் இன்று கூட கார்த்திக்கைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு உரிமையான கோபம் வந்ததுதான் உண்மை…
“இவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால்… ஆராதனாவுக்கு இப்படி ஒரு அவசர திருமணம் நடக்க இருக்குமா… “ அந்தக் கோபத்தில் தான் கார்த்திக்கையும் முறைத்தது…
பெருமூச்சு விட்டவளாக… விடை தெரியாத எதிர்காலத்தை யோசிக்க முடியாமல்… அப்படி கூட சொல்ல முடியாது… அதை நினைக்க பயந்தவளாக… ஆராதனாவின் அறைக்குள் சென்றாள்….
அடுத்த சில நிமிடங்களில்… பரவலான பேச்சு சத்தம் கேட்க ஆரம்பிக்க… ஊகித்தது போலவே ஆராதனா, அவள் அப்பத்தா மற்றும் அம்மாவுடன் வந்திருந்தாள்… செல்வியும் பேச்சுக் குரல் கேட்டதால் அவளும் அறையை விட்டு வெளியே வந்திருக்க
“ஹேய் செல்வி…” வேகமாக இவளைப் பார்த்து ஆராதனா ஓடி வர… தன்னை நோக்கி ஓடி வந்த ஆராதனாவைப் பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டாள் செல்வி…
கிட்டத்தட்ட மணப்பெண் அலங்காரம்… அதுவும் ஒரு சாதாரண பெண் பார்க்கும் படலத்திற்கு…
தோழியின் அலங்காரத்தைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்து தன்னைச் சமாளித்தவளாக… செல்வி நின்றிருக்க…
“வா… வா… என்ன அப்படியே நின்னுட்ட…” வேகமாக தான் கொண்டு வந்திருந்த பிரசாதத்தை எடுத்து தோழியின் நெற்றியில் வைத்துவிட… கண்கள் கலங்கியது செல்விக்கு தன் தோழியைப் பார்த்து….
“அம்மன் ஸ்பெஷல் அலங்காரம்… அம்மா ஐயர்கிட்ட சொல்லிருப்பாங்க போல… மனசுக்குத் திருப்தியா இருந்ததுடி இன்னைக்கு அம்மன் பூஜை… நல்லா வேண்டிக்கிட்டேன்… அப்புறம் நான் எப்படி இருக்கேன்… அப்பாத்தாதான் எல்லா நகையும் போடனும்னு சொல்லிட்டாங்க… அப்போ மேக்கப் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்காதுல… ஓகே தானே… நல்லா இருக்கேனா…” படபடவென பேசிய தோழியைப் பார்த்தவள்…
“உனக்கென்னடி… அழகு ரதி…” செல்வி தன் தோழியைச் சுற்றி நெட்டி எடுத்தபடி…
“அப்புறம் அம்மன் கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் வேண்டுதல்… வர்ற மாப்பிள்ளைக்கு உன்னைப் பிடிக்கனும்… உனக்கு அவரைப் பிடிக்கனும்னா… இதுதானே வேண்டுன” செல்வி தோழியிடம் இயல்பாக ஆராதனாவைப் பார்த்து கண்சிமிட்டிக் கேட்க… தோழியிடம் ஏதும் சொல்லாமல் அறைக்குள் சென்றவள் … நிலைக்கண்ணாடி முன் நின்றாள்… வெறித்தபடி…
”என்ன உன் ஆளு தெரியுறாரா… கண்ணாடியையே மொறச்சுப் பார்த்துட்டு நிற்கிற… மொறச்சுப் பார்க்கக் கூடாதும்மா… ரொமாண்டிக் லுக் விடனும்…. சரி சொல்லி என்ன வேண்டு்ன…” செல்வி தன் தோழியின் முன் நிற்க
ஆராதனாவோ பதிலேதும் சொல்லாமல் இப்போது ஆளுயரக் கண்ணாடி முன் தன்னைப் பார்த்தபடியே இருக்க… அந்தப் பார்வையில் இருந்தது என்னவோ…
செல்வி இப்போது தோழியை உலுக்க… ஆராதனாவும் தன் நிலை மீண்டவளாக…
“நான் வேண்டிகிட்டது நடக்க இன்னும் கொஞ்ச நாளாகும்… லேட்டானாலும் நான் நெனச்சது நடக்கனும்னு வேண்டிகிட்டேன்… அவ்ளோதான்” ஆராதனா சொல்லி முடித்து விட்டு… செல்வியைப் பார்க்க… செல்வி புரியாமல் ஆராதனாவைப் பார்க்க…
“ரொம்ப நாளைக்கப்புறம் நாம பேசுறதுனால நாம என்ன பேசினாலும் நான்சிங்க்லயே போகுதுன்னு நினைக்கிறேண்டி…” ஆராதனா தானாகவே சரண்டராகி இருக்க… அதே நேரம் வெளியே பரபரப்பு வந்திருக்க… மேகலா உள்ளே வந்திருந்தார்…
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க செல்வி… நான் சொல்லும் போது தனாவைக் கூட்டிட்டு வா “ வேக வேகமாகச் சொல்லிவிட்டு அதே வேகத்துடன் வெளியேயும் போயிருக்க…
செல்விக்குள்ளும் இப்போது ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது…. அதாவது தோழியின் வருங்காலக் கணவனைக் காணும் பரபரப்பு அவளையுமறியாமல் தொற்றிக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்… அந்த ஆவலில்…
“தனா… தனா நான் போய் உன் ஆளைப் பார்த்துட்டு வர்றேன்… நீ பார்க்கிறதுக்கு முன்னாடி நான் பார்த்துட்டு உனக்கு ஓகேவான்னு சொல்றேன்” என வெளியே கிளம்ப எத்தனிக்க… ஆராதனாவோ செல்வியைப் போகவிடாமல் அவளின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் கொண்டு வந்தவள்…
“என்னடி… இன்னும் எயிட்டிஸ் நைன்ட்டிஸ்லயே இருக்கியா என்னா…. இங்க பாரு… லைவ் வீடியோ…” தன் அலைபேசியைக் காட்ட…
”அடிப்பாவி…” செல்வி வாயில் கை வைத்து நம்ம முடியாத பாவனையுடன் தன் தோழியைப் பார்க்க..
“எல்லாம் செட் பண்ணிட்டோம்ல… நம்ம தெரு சில்வண்டுகளை எல்லாம் செட் அப் பண்ணி வச்சிருக்கோம்ல… மாப்பிள்ளை எண்ட்ரில இருந்து இங்க இருந்து போகிற வரைக்கும் லைவ் வீடியோ அண்ட் ரெக்கார்டிங்…” ஆராதனா கண் சிமிட்ட… செல்விக்கோ அடக்க முடியாத சிரிப்பு…
“அடிப்பாவி” வாய்விட்டே சொல்லி விட… ஆராதனா தன் தோழியை இழுத்தபடி
”வா வா… இங்க பாரு… கார் வந்திருச்சு பாரு… நான் என் வருங்கால வீட்ல இருந்து வர்றவங்க எல்லோரையும் இண்ட்ரட்யூஸ் பண்றேன்… ” எனத் தோழிக்கு அலைபேசியில் வந்த காணொளி காட்சிகளுக்கு நேரடி வர்ணனை கொடுக்க ஆரம்பித்திருந்தாள் ஆராதனா
செல்வியோ ஆராதனாவைப் பார்த்து
”உனக்கு அவங்களை எல்லாம் முன்னாடியே தெரியுமாடி…” ஆச்சரியமாகக் கேட்க…
“அதெல்லாம் இல்ல… நேத்து அப்பத்தாகிட்ட எல்லாம் கேட்டு வச்சுகிட்டேன்… ஓரளவு தெரியும்… எனக்குத் தெரிஞ்சவங்களைச் சொல்றேன்… “
“அவங்களுக்கு… ரெண்டு அக்கா… ரெண்டு அண்ணா…” ஆராதனா ஆரம்பித்த போதே
“யார் அது அந்த ’அவங்களுக்கு’… ’அவங்க’ யார் தனா” செல்வி ஆராதனாவை தோழியாக உற்சாகத்துடன் கிண்டலடிக்க
“ஷ… ஷண்முகம் மாமாக்கு….” ஆராதனா தடுமாறி பின் சொல்ல
“என்னது மாமாவா… ஹப்பா… என் ஹார்ட் சில்லு சில்லா உடையுதே… இந்த மாமான்ற வார்த்தைல… மாமாவா… இது எப்போலருந்துடி…” செல்வி வேகமாகக் கேட்க… தோழியின் திருமணம் பற்றிய நேற்றைய சஞ்சலம் எல்லாம் இல்லை… செல்வியும் தோழியுடன் ஐக்கியமாகி இருந்தாள்…
”அப்பத்தாதான் அப்படி சொல்லச் சொன்னாங்க…. அவங்க அம்மா அம்மாக்கு தூரத்து சொந்தமாம்… அம்மாக்கு சித்தி முறையாம்… அதுனால எனக்கு அம்மாச்சி முறை வேணுமாம்… அதுனால இவங்க மாமாவாம்… “
“ஹ்ம்ம்… “ செல்வி வீடியோவில் பார்வை வைத்தபடியே கேட்டுக் கொண்டிருக்க…
“இவங்க தான் என் வருங்கால மாமியார்…” காரில் இருந்து இறங்கிய வயதான பெண்மணியை ஆராதனா காண்பிக்க
“என்னடி இவ்ளோ வயசானவங்களா இருக்காங்க…”
“அதுனாலதான் அம்மாச்சி…” ஆராதனா விளக்கம் கொடுக்க…
அடுத்து சில பெண்கள் இறங்கி இருக்க
“இவங்களாம் அவங்க அக்கா… அண்ணி… ஆனால் யார் யார்னு தெரியல…” எனும் போதே… மாப்பிள்ளை ஷண்முகத்தின் ஷூ வீடியோவில் தெரிய…
“எப்படி நம்ம பசங்க… மாப்பிள்ளை இண்ட்ரோ கொடுக்கிறாங்க பாருடி… மெல்ல மெல்ல கேமர உயர… மாப்பிள்ளை ஷண்முகத்தின் முகமும் இவர்கள் பார்வைக்கு வந்திருக்க…
புகைப்படத்தில் இருந்ததை விட… இதில் இன்னும் அழகாக… புன்னகை முகமாக இருக்க… ஆராதனாவைப் பார்த்தபடி…
”போட்டோல விட… இதுல அண்ணா இன்னும் நல்லா இருக்கார்டி… ஸ்டைலாவும் இருக்காங்கடி…” செல்வியிடம் அவளையுமறியாமல் உறவு முறையும் வந்திருக்க…
ஆராதனா புன்னகைத்தாள் திருப்தியான பாவத்தோடு…
---
அடுத்து சில நிமிடங்களில் அனைவரும் உள்ளே வந்திருக்க… ஆராதனாவும்… அலைபேசியை கட் செய்திருந்தாள்…
செல்விக்கு ஒரு மாதிரி இதெல்லாம் புதிதாக இருந்தது… இதுதான் முதல் முறை பெண்பார்க்கும் படலத்தில் கலந்து கொள்வது… ஆராதனாவைப் பார்த்தவள்…
“உனக்கு வித்தியாசமா இல்லையா தனா… இதெல்லாம் பார்த்து..”
வேகமாக இல்லையென்று மறுத்து தலை ஆட்டினாள் ஆராதனா…
”வனிதாக்காக்கா இருக்காங்கள்ள… அவங்களுக்கு எத்தனை தடவை நடந்திருக்கு தெரியுமா… நான் அப்போலாம் அவங்க கூட இருப்பேனே… ஆறேழு தடவை… அப்புறம் எங்க சின்னத்தையை ’மதி’ மாமா பார்க்க வந்தப்போ கூட இப்படித்தான் நடந்தது… எங்க மாமாவோட அலப்பறையைப் பார்க்கனுமே.. என் கைலதான் அவர் வீட்டு போன் நம்பரையே எழுதி வச்சுட்டு போனார்… அன்னைக்கு ஃபுல்லா ஒரே ஃபன் தான்… அதுக்கப்புறம் நான் தான் எங்க மதி மாமாக்கும் பூர்ணி அத்தைக்கும் காதல் புறா… தெரியுமா” ஆராதனா அன்றைய நாட்களில் சிலாகித்து பேசிக் கொண்டிருக்க… செல்வியும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருக்க…
”செல்வி தனாவைக் கூட்டிட்டு வாம்மா…” வெளியே இருந்து குரல் கேட்டிருக்க… செல்விக்குத்தான் படபடத்தது… ஆராதனாவைப் பார்க்க… அவளுக்கோ அப்படியெல்லாம் ஏதும் இல்லை… இயல்பாக இருக்க… செல்விக்கே அவளைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது…
“ஏண்டி… கொஞ்சமாச்சும் வெட்கப்படுடி… என்னமோ… மேடைல பேச்சுப் போட்டிக்கு போகிற மாதிரி… போயிட்டு இருக்க”
”அட… என் கையை புடிடி… அடக்கம் ஒடுக்கம் தானே… அதெல்லாம் சபைல தானா வரும்…” தன் கையைத் தோழியிடம் கொடுக்க… ஆராதனாவை செல்வி அழைத்துச் சென்றாளா… செல்வியை ஆராதனா அழைத்துச் சென்றாளா… புரியாத புதிர் தான்…
---
திருமணப் பேச்சு… அதைத் தொடர்பான விசயங்கள் அனைத்துமே ஏற்கனவே பேசப்பட்டிருந்ததால்… பெரிதாக அங்கு மணமகன் மணமகள்… திருமண பற்றி பேசவில்லை… மாறாக… பொதுவான பேச்சுக்கள் மட்டுமே அவர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்க…
மாப்பிள்ளை ஷண்முகம் தான் பொறுமையின் விளிம்பில் அமர்ந்திருந்தான்… ஒரு கட்டத்தில் அந்தப் பொறுமையும் இழந்தவனாக… தொண்டையைச் செரும…
அனைவரும் ஷண்முகத்தைப் பார்க்க…
“நான் ஆரா… ஆராதனாவோட பேசனும்…” பட்டென்று சபையில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டவனை பார்த்த மொத்த கூட்டமும் அவனை வைத்த விழி வாங்காமல் பார்க்க…
“ஜஸ்ட் பத்து நிமிசம் போதும்… ஆரா கூட பேசனும்… ” இப்போது அவன் ஆராதனாவைப் பார்க்க… ஆராதனாவிடமோ சலனமில்லாத பாவம்… அதே நேரம்
ஷண்முகத்தின் ‘ஆரா’ என்ற அழைப்பு… தேவையில்லாத ஞாபகங்களைக் கொண்டு வந்ததன் விளைவு… மனம் கடுகடுத்திருந்தது… ஆனால் முகமோ… அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது…
சில நிமிடங்களுக்கு கூட்டத்தில் சலசலப்பு… பின் அனைவரும் பேசி முடிவெடுத்தவர்களாக
“தனாவோட பேசுங்க மாப்பிள்ளை… ஆனா தனியா வேண்டாம்… கல்யாணத்துக்கு அப்புறம் தனா எங்க போகப் போறா… அப்போ தனியா பேசிக்கங்க….” என்றபடியே…
“அம்மா செல்வி… தனாவைக் கூட்டிட்டு பின்னால கிணத்து மேட்டுக்கு பக்கம் போம்மா… ” ராஜசேகர் சொல்ல… செல்வியும் ஆராதனாவை அழைத்துக் கொண்டு அங்கு செல்ல…
”கார்த்தி… நீ மாப்பிள்ளையைக் கூட்டிட்டுப் போ” என மகனிடம் ராஜசேகர் சொல்லி முடித்தார்..…
---
ஆராதனா ஷண்முகத்திற்கு தனிமையாகப் பேசுவதற்கு ஏதுவாக அவர்களை விட்டு தள்ளி சற்று தொலைவில் வந்து நின்றிருந்தனர்… கார்த்திக்கும் செல்வியும்….
செல்வி அருகில் நின்றிருந்ததாலோ என்னவோ கார்த்திக் எரிச்சலான பாவனையோடு வேறுபுறம் திரும்பி நின்றிருக்க… செல்விக்கு காலையில் இருந்த கோபம் எல்லாம் இப்போது இல்லை… அதனால் கார்த்திக்கை கண்களால் நிரப்பியபடி தன் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள்… இடையே அவ்வப்போது ஆராதனா ஷண்முகத்திடமும் பார்வையை வைத்தபடி தான் இருந்தாள்… கார்த்திக்கும் அப்படியே…
கார்த்திக் செல்வி இப்படி இருக்க…
அங்கு ஷண்முகம் தன் மொத்த காதலையும் ஆராதனாவுக்கு காட்டும் முடிவோடு வந்திருந்தான் போல…
“ஆரா..” ஷண்முகம் ஆரம்பித்த போதே
“ஆராதனா… இல்லைனா… தனா… இது ரெண்டுல ஏதாவது கூப்பிடுங்க… எனக்கு ’ஆரா’ ன்னு கூப்பிட்டா பிடிக்காது…” சட்டென்று ஆராதனா சொல்ல…ஷண்முகம் அவளை ஆச்சரியமாகப் பார்த்தபடி…
“சரி… ஓகே… ’தனா’ ன்னே இப்போ வச்சுக்கலாம்… இவ்ளோ டென்ஷன் ஏன்” தன்மையாகவே அவன் பேச… ஆராதனாவின் பார்வை அவனிடம் இப்போது நிலைத்திருந்தது…
“ஆனால் நீ என்னை ’ஷாம்’ னு கூப்பிடலாம்… நீ அப்படி கூப்பிடனும்னு என்னோட ஆசை…” கண்களில் காதல் மட்டுமே நிரம்பி வழிய அவன் பேச ஆரம்பிக்க… ஆராதனா குழப்பம் பாதி.. ஆச்சரியம் பாதி என அவனையேப் பார்த்தபடி இருக்க… அவனோ தொடர்ந்தான்…
“ஒரு வீக் முன்னாலதான் உன்னோட ஃபோட்டோவைக் காட்டினாங்க… அது என்னமோ தெரியலை… என்ன மாயமோ தெரியல… பார்த்த அடுத்த கணமே நான் யோசிச்சு வச்சிருந்த… என்னோட கனவுல இருந்த உருவம் அனைத்தும் நீயா மாறின மாதிரி இருந்துச்சு… அம்மா… அக்கா.. அண்ணி எல்லாருமே உன்னைப் பற்றி சொல்லச் சொல்ல… டோட்டலா சரண்டர் நான்… அன்னைலருந்து… இதோ இந்த நிமிசத்துக்காக… உன்கிட்ட தனியா பேசுறதுக்காக காத்துட்டு இருந்தேன்… என்னோட லவ்வை சொல்றதுக்கு தவிச்சுட்டு இருந்தேன்…”
ஆராதனா தவிப்பான யோசனையுடன் நின்றிருக்க… அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஷண்முகம் பேச ஆரம்பித்தான்…
“என்னதான்…. இலண்டன்… அமெரிக்கான்னு நான் சுத்தினாலும்… இந்தியா… தமிழ்நாடு… அதுவும் என் குடும்பத்துக்கு, எனக்கு ஏற்ற மாதிரி… கலாச்சாரத்துக்கு அடங்கின பொண்ணு தான் நான் தேடினேன்…”
ஆராதனாவின் இதழ்கள் புன்னகையில் இலேசாக விரிந்தன… அவனின் இந்த வார்த்தைகளில்… இப்போது அவள் முகத்தில் குழப்பம் இல்லை… யோசனை இல்லை… தெளிவாக தன் முன் நின்றவனைப் பார்த்து நிற்க…
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… உனக்கு என்னைப் பிடிச்சுருக்கா” ஷண்முகம் சட்டென்று கேட்க…
ஆராதனாவும் நேரம் எல்லாம் எடுக்கவில்லை… அவனைப் பார்க்காமல் தரையைப் பார்த்து குனிந்தபடி… தலையை மட்டுமே ஆமோதிப்பாக அசைத்திருக்க…
ஷண்முகத்தின் முகம் அத்தனை மகிழ்ச்சியையும் பூசி இருக்க…. அதே மகிழ்ச்சியோடு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அந்தப் பரிசுப் பெட்டியை எடுத்தவன்… அதைத் திறந்து அவளிடம் காட்ட…
ஆராதனாவின் கண்கள் விரிந்தது… காரணம் அது வைர மோதிரம்….
“என்னை உன்னை அவ்ளோ பிடிச்சிருக்குது ஆரா.. சாரி சாரி முறைக்காத… தனா… என்னோட லவ்வைக் உன்கிட்ட காட்றதுக்கான சின்னம்…”
“உனக்கும் என்னைப் பிடிச்சிருக்குனு எனக்கு காட்றதுக்கு இதை நீ போட்டுக்கனும்…அதுவும் இப்போதே… ப்ளீஸ்… விரலைக் காட்டு…”
ஆராதனாவுக்கு இப்போது என்ன செய்வதென்று புரியாமல் அவனைப் பார்க்க…
“என்னாச்சு… கையைக் காட்டும்மா…” ஷண்முகத்தின் குரலில் அப்படி ஒரு குழைவு… பரிதவிப்பு… அதில் காதல் காதல் மட்டுமே
ஆராதனா தன்னையுமறியாமல் அவனிடம் தன் கைகளை உயர்த்தி இருந்தாள்…. இப்போது ஷண்முகம் மட்டுமல்ல… கார்த்திக் மற்றும் செல்வியும் ஆராதனாவை அவள் ஷண்முகத்திடம் தன் கரத்தை நீட்டி இருந்ததை… நோக்கியிருந்தனர்…
கார்த்திக்கின் பார்வை கோபத்தோடு தங்கையை நோக்க...
ஷண்முகத்தின் பார்வையோ காதலோடு ஆராதனாவப் பார்க்க....
செல்வியோ ஆச்சரியத்துடன் தன் தோழியைப் பார்க்க....
ஆராதனாவின் பார்வையோ சூரிய ஒளியில் விழுந்திருந்த அவளின் நிழலிடம் பதிந்திருந்தது... அவள் நிழல் மட்டுமே ஆராதனாவின் பார்வையின் உஷ்ணமான உண்மையை உணர்ந்திருந்தது யாரும் அறியாதது....
---
சில துணுக்குகள் அத்தியாயம் 10-ல் இருந்து
“ஒரு மூன்று நாட்கள் ஊரில் இல்லை… இப்படியெல்லாம் நடக்கும் என்று கனவிலும் யோசிக்க வில்லை…” தலையிலடித்துக் கொண்டவனுக்கு..
“செழியனுக்கு எப்படி இந்த விசயத்தைச் சொல்வது… முதலில் அவன் தாங்குவானா…”
----
“என்னமோடா… இந்தப் பக்கம் எங்க அண்ணன்… அந்தப் பக்கம் என் அக்கான்னு நான் தான் ஊசலாடிட்டு இருக்கேன்…” பூர்ணிமா கண்கள் கலங்கி இருக்க
”அட விடுங்க… என் மேரேஜ்ல எல்லாத்தையும் சமாய்ச்சுரலாம்… உங்க அக்கா உங்க அண்ணன்… எல்லோரையும் சேர்த்துறலாம்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் அலைபேசி அடிக்க…
“பார்த்தீங்களா… எப்படி சொல்லும் போதே மணி அடிக்குதுன்னு…” செழியன் சிரித்தபடி கண் சிமிட்டியவனாக… அலைபேசியைப் பார்க்க… அது முகிலனாக இருக்க…
---
“வேற வழியே இல்லை…. அவர் பொண்ணா இருக்கிற வரைக்கும் தானே பிரச்சனை பண்ணுவார்… செழியனோட பொண்டாட்டிகிட்ட பிரச்சனை பண்ண மாட்டார்தானே…” செழியன் அதிரடியாகச் சொல்ல…
---
”பார்றா… அதுக்குள்ள வரப்போற பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா… நீங்களும் தான் இருக்கீங்களே… உங்க தம்பி ஷாம்கிட்ட பார்த்து கத்துக்கங்க…” அடுத்த நிமிடம் அங்கு குபீர் சிரிப்பு வந்திருக்க… சந்தோசமாகவே புடவை எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க..
----
“ஷாம் அண்ணாகூட பேசனுமா வேண்டாமா”
“முடியுமா…” கண்களில் நிராசையுடன் ஆராதனா கேட்ட வார்த்தையிலேயே ஆராதனாவுக்கும் அவனிடம் பேச விருப்பம் இருக்கிறது என்பதை செல்வி உணர்ந்தவளாக…
---
Aarathanavum seziyana luv panala? Ithu yepo nadandhuchu? Sema sis...
Lovely update dear
Sandai sandai samathanam sezhiyanatan soldralo
Nizhal sollum unmai ennavo
Hoom
Familkaga asaya pudsichachu
Inda shanmugam sari ila yo
Overah vazhiurane
Superb episode . .. waiting for next episode
Very interesting
NIce