இதயம்-21
மகன் ரத்தினவேலிடம் ஆத்திரத்தில் குதித்துக்கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர்! தங்கவேலு.
“நீ வேலைக்கே ஆகமாட்ட ரத்தினம். போனைப் போட்டு மாப்பிளையை உடனே இங்கே வரச்சொல்லு” என்ற அவரது வார்த்தைகளால் ரத்தினவேலுவின் மனதில் இருந்த வன்மம் எகிறிக்கொண்டே கொண்டே போனது.
“என்ன பெரிய மாப்பிள்ளையைக் கண்டீங்க. என்ன இருந்தாலும் நம்மகிட்ட சம்பளம் வாங்கிட்டு இருந்தவன் தானே.
நாம இப்ப இருக்கும் நிலைமையில் அப்படி என்ன தலைபோகும் வேலைனு அமெரிக்கால போய் உட்கார்ந்து கொண்டிருக்கானாம் உங்க மாப்பிள்ளை?
நம்ம ரெண்டுபேரையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டு மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம்னு நினைக்கறானா அவன்”
அவனது மனதில் இருந்த வெப்பம் வார்த்தைகளில் தகித்தது.
மகனது கேள்வியில் சில நொடிகள் அமைதி காத்த தங்கவேலு, “காரணம் இல்லாமல் மாப்பிள்ளை எதையும் செய்ய மாட்டார்! நம்ம கிட்ட சம்பளம் வாங்கினவர்தான். ஆனாலும் உன்கிட்ட இல்லாத புத்திசாலித்தனம் அவரிடம்தான் இருக்கு. முதலில் வீடியோ காலில் அவரைக் கூப்பிடு” என்று அழுத்தமாகச் சொல்லவும்,
“இப்ப அங்க நடு சாமம் தெரியுமா? உங்க மருமகன் கூப்பிட்ட உடனே போனை எடுத்துறப்போறாரு!” எனச் சலித்தவரே, லேப்டாப்பை எடுத்து வினோத்தை வீடியோ சாட்டிங்கிற்கு அழைத்தான் ரத்தினம்.
அடுத்த நொடியே அழைப்பை ஏற்ற வினோத், ரத்தினம் என்ற ஒருவன் அங்கே இருப்பதையே கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், நேரடியாகத் தனது மாமனாரிடம் பேசத்தொடங்கினான்.
“என்ன நடக்குது மாமா அங்க? இப்பதான் டிவி நியூஸ்ல பார்த்தேன். அந்த மீடியேட்டர் கோபாலை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க! அவன் பொண்டாட்டியே அவன் பெயரில் போலீசில் கம்ளைண்ட் செஞ்சிருக்கா!” என அவன் பொரிந்து தள்ளவும்,
“அதைப் பற்றி பேசத்தான் மாப்பிள்ளை உங்களைக் கூப்பிட்டேன்” என்ற தங்கவேலு,
“அந்த கோபால் நம்மை மீறி எதுவும் பேசமாட்டான்! ஆனால்” என்று இழுத்தவர்.
“அந்த பொண்ணுதான் ஏதாவது பிரச்சினை செஞ்சா செய்யணும். அதனால அந்த குணாவைப் போட்ட மாதிரி அந்தப் பொண்ணையும் போட்டுத் தள்ளிடலாம்ன்னு ரத்தினம் சொல்றன்! நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று கேட்க,
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, “வேண்டாம் மாமா! எதோ பெரிய சப்போர்ட்லதான் அந்த பொண்ணு துணிஞ்சு போலீஸ்க்கு போயிருக்கு. அது யாருன்னும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு! அதைத் தெளிவு படுத்திட்டு, பிறகு என்ன செய்யலாம்னு முடிவு பண்ணுவோம்!” என்று தெளிவாகச் சொன்னான் வினோத்.
ஏளனமாக மகனைப் பார்த்த தங்கவேலு, “இப்ப புரிஞ்சுதா ஏன் மாப்பிளையை கூப்பிடச்சொன்னேன்னு?” என்று கூறிவிட்டு,
மடிக்கணினியின் திரையில் ஒளிர்ந்த வினோத்தை நோக்கி, “நீங்க எப்ப இங்க வரீங்க மாப்பிள?” என அவர் கேட்க,
“சீக்கிரம் வந்திடுவேன் மாமா. நம்ம ஹாஸ்பிடலில் முதல் முதலில் அன்னம் என்ற பெண்ணின் பெயரில், கிட்னி... கண்... லங்ஸ்... லிவர்... என நாம நாலு பேருக்கு பொருத்தினோம் நினைவிருக்கா?” என அவன் கேட்க,
சில நிமிடங்கள் ம