Hi friends...
எப்டி இருக்கீங்க மக்களே.... சோ மறுபடியும் எழுத ஆரம்பிச்சுட்டேன்.... சீக்கிரம் ‘உறவான நிலவொன்று சதிராட’ அடுத்த எபியோட வர்றேன்...
நன்றி
பிரவீணா
-----
இரண்டு குடும்பமும் இனி ஒட்டுவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைக்கு வந்திருக்க… செழியன் மட்டும் நம்பினான்… தன்னால் அது முடியும் என்று… அப்போது கூட கார்த்திகேயனைப் பற்றி கவலைப்படவில்லை… “படிக்காத காட்டுமிராண்டி” என்றைய எண்ணம் தான் அவனுக்கு இருந்தது…
அவனைப் பொறுத்தவரை “ஆராதனா” மட்டுமே அவனின் வெளிச்சமாக இருக்க… அவளையும் அவனால உடனே அணுக மனம் வரவில்லை… 18 வயதுதான் அவளுக்கு ஆகி இருக்க…. அவள் மனதை இப்போது இந்தச் சூழ்நிலையில் குழப்ப அவனுக்கு விருப்பமில்லை…
அதே நேரம் கிணற்று தண்ணீர்தானே யார் கொண்டு செல்வார்கள் என்று அலட்சியமாகவும் அவன் இருக்க வில்லை…. இருந்ததும் இல்லை… இத்தனை வருடமாக முகிலன் மூலமாக தன்னவளின் விசயங்களைத் தெரிந்து கொண்டவன்…. இப்போது இன்னும் தீவிரமாகவவே தன்னவளை தன் வளையத்திற்க்குள் கொண்டு வந்திருந்தான்.
---
“என்ன அவங்க ரெண்டு பேரையும் என்கிட்ட இருந்து காப்பாத்திட்ட்டோம்னு நினைப்பா… நிம்மதியா இருக்க விட மாட்டான் … இந்த கார்த்திக்… உன் மக பெத்த பொண்ணயும் விட மாட்டேன்… அந்த சுள்ளானையும் விட மாட்டேன்… அவன்லாம் என்னை அடிக்கிற அளவு வளந்துட்டானாமா… இனி இந்த ஊர் பக்கம் கால் வைக்கட்டும்…… அவனுக்கு இருக்கு ” என்று கர்ஜித்தவன்… கண்களில் இப்போது கமலி என்று பெயர் கண்களில் பட்டுத் தொலைக்க…
இதுவரை சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவனின்… அப்படியே அமர்ந்து விட்டான்….
----
முகிலனிடம் அவன் வேறெதுவும் பேசாமல்…
“டேய் ’ஆராவுக்கு’ கைல அடிப்பட்டுச்சே… ஹாஸ்பிட்டல் போனாளா… ப்ச் அவ எங்க சொல்வா… அவங்க வீட்லகூட்டிட்டு போனாங்களா….” என்றே அடுக்கியவனின்…
“டேய் டேய் நிறுத்துடா…அவளுக்கு லைட்டா அடிப்பட்டதுதான் இப்போ முக்கியமா என்ன…. கார்த்திக் பற்றி கேட்டியாடா…” என்றவனிடம்
---
“எமோசனல் இடியட்…. டாமிட்…” என்றான் இயலாமயையோடு சேர்ந்த கோபத்தை... அவனுக்கு புரியவில்லை… கார்த்திக்கின் வருத்தம் புரிந்தாலும்... அவன் இப்படியெல்லாம் நடந்துகொள்வது... குடிகாரனாக மாறியது என எரிச்சலையும் ... கோபத்தையும் தான் செழியனுக்குக் கொடுத்தது...
“தன்னை வேண்டாம் என்று சொன்னவளை... ஒதுக்கியவளை... போடி என்று விட்டு விட்டு அவளுக்கு முன் நன்றாக வாழ்ந்து காட்டலாமே…அதிலல்லவா அவன் பெருமை…” ஏன் அந்த கார்த்திக்குக்கு இது புரியவில்லை இதுதான் செழியனின் எண்ணமாக இருந்தது....
Waitng for you a long time
Waiting pravee
Waiting😍
Eagerly waiting dear
We are waiting sis