I’ve posted the 46-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
/* Though incomplete and small update, sure you guys would enjoy this update... I will try to post the continued part ASAP within this week. Thank you so much for all your comments and supports 💛💛💛💛 */
அத்தியாயம் 46-1
நிசப்தம் மட்டுமே ’கண்மணி’ இல்லத்தில் குடி கொண்டிருக்க… நொடிக்கொரு முறை தனது அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்மணி… கணவனின் அழைப்பை எதிர்பார்த்து…
ஒருபுறம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு வராமல் ஏமாற்றம் அளித்தபோதே மற்றொரு புறம் தங்கள் வீட்டின் அமைதியும் அவளையும் உறுத்த… ஹாலை எட்டிப் பார்த்தாள் கண்மணி…
வழக்கத்திற்கு மாறாக மிக மிக அமைதியாக தன் வீட்டுப் பாடங்களையும் செய்து கொண்டிருந்தாள் ரித்விகா...
ரித்விகாதான் அந்த வீட்டில் அனைவரையும் இணைக்கும் ஆதார ஸ்ருதி… இன்று அவளும் அமைதி ஆகி இருக்க…
“ரிதிம்மா… ஒரே ஆச்சரியமா இருக்கு… என்ன ஒரு அமைதி… ஒரு சந்தேகமும் வரலையா உனக்கு இன்னைக்கு…”
“சரி சாப்பிட வா ” என்றபடியே… அவள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் கண்மணி
“பசிக்கலை”
தன் கவனம் முழுவதும் எழுதுவதில் மட்டுமே என்பது போல் கண்மணியைப் பார்க்காமலேயே பதில் சொன்ன ரித்விகாவின் உரிமைக் கோபத்தின் அழகை ரசித்து புன்னகைத்தவாறே
”நான் ஊட்டி விடறேன்… எழுதிட்டே வாங்கிக்கங்க” என்று அவளைத் தொந்தரவு செய்யாமல் சாப்பாடைத் தட்டில் போட்டு எடுத்து வர…
“நான் பசிக்கலேன்னு சொன்னேன் அண்ணி… எழுதிட்டு இருக்கிறதுனால சாப்பிட வரலைன்னு சொல்லல…” கடுப்பாகச் சொன்னவளிடம்
“சரிங்க மேடம்… தெரியாமல் எடுத்துட்டு வந்துட்டேன் மேடம்” என்று கண்மணி இன்னும் ரித்விகாவிடம் வம்பிழுக்க… எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து தன் அண்ணியை முறைத்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள் ரித்விகா
”பாப்பாக்கு… என்ன கோபம்…” கண்மணி அவளருகில் அமர…
“பாப்பான்னு சொல்லாதிங்க அண்ணி… பத்திட்டு வருது… அந்தாளும் இப்படித்தான் கூப்பிட்டாரு என்னை” அர்ஜூனை தன் வார்த்தைகளில் கொண்டு வந்த ரித்விகாவுக்கு… அடுத்து என்ன பேசுவது… எப்படி பேசுவது எனத் தெரியாமல் போக.. மௌனித்தாள்…
”அது எந்த ஆளு” கண்மணி புன்சிரிப்புடன் கேட்க…
“அதான் இன்னைக்கு வந்தாங்கள்ள அந்த அங்கிள் தான்” வேண்டுமென்றே அர்ஜூனை வயதான ஆண்மகனாக ரித்விகா உருவகப்படுத்திச் சொல்ல…
”உனக்கு அர்ஜூன் கிட்ட என்ன பிரச்சனை… அந்தாளுன்ற… அப்புறம் அது என்ன அங்கிள்… அவரைப் பார்க்கிறதுக்கு அங்கிள் மாதிரியா இருக்காரு … எங்க அர்ஜூன் ஸ்மார்ட்டா இல்லையா என்ன…” என்று யோசித்த பாவனையோடு கண் சிமிட்டிக் கேட்க… அவ்வளவுதான் அதற்கு மேல் ரித்விகா பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்திருப்பாளா என்ன
“அவர்னா உங்களுக்குப் பிடிக்குமா” பட்டென்று கேட்டவள்…
“எங்க அண்ணாவை விடவும் அவரை உங்களுக்குப் பிடிக்குமா???” ரித்விகாவின் மனதை உறுத்திய எண்ணங்கள் வார்த்தைகளாக வெளியே வந்திருந்தது…
ரித்விகா இப்போது கண்மணியை நேரடியாகப் பார்க்க… கண்மணி… புன்னகைத்தாள்…
“ஹான்.... அர்ஜூன் எனக்குப் பிடிக்கும்…” என்றவள்
”ஆனால் நீ அடுத்து கேட்ட கேள்வி தப்பு ரிதிம்மா… அர்ஜூனை ஏன் உன் அண்ணா கூட கம்பேர் பண்ற…” ரித்விகாவிடம் கொண்டிருக்கும் போதே…
ரித்விகாவின் அருகில் இருந்த அவளது மொபைல் ஒலிக்க… வேகமாக தன் அலைபேசியை எடுத்து காலை அட்டெண்ட் செய்த ரித்விகாவுக்கு… சற்று முன் இருந்த கோபம் எல்லாம் எங்கு போனதென்று தெரியாத அளவுக்கு முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது தன் அண்ணனின் முகம் பார்த்த அந்த நொடி…
தன் அண்ணியின் மேல் இருந்த கோபம் எல்லாம் மறந்தவளாக
“அண்ணி…. அண்ணா” உற்சாகக் குரலில் பேசியபடியே அவளது அலைபேசியை கண்மணியின் புறம் திருப்ப… ரிஷியும் கண்மணியைப் பார்த்து கைகளை அசைத்தான்…
கையில் வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டோடு அவனைப் பார்த்து புன்னகைத்தாள் கண்மணி… வேறு எதுவும் பேசவில்லை…
ரித்விகாவும் தன் புறம் மொபைலைத் திருப்பிக் கொண்டவளாக…
“அண்ணா… ஏன் இவ்ளோ லேட்… உன் காலுக்காகத்தான் வெயிட்டிங்…. ஸ்கூல் விட்டு வந்ததிலருந்து வெயிட்டிங்… அக்கா கூட… அம்மாவும்” சொல்லியவளிடம்
“இன்னொரு ஆள் மிஸ்ஸிங்… உங்க அண்ணிய விட்டுட்ட…. ஏன் அவங்க என்னை தேடலையா ” ரிஷி இதழோரச் சிரிப்புடன் கேட்ட போதே… ரித்விகா ஏதும் பேசாமல்…
“உன் குரல் என்னண்ணா… இப்டி இருக்கு”
“ஜலதோஷம்டா “ என்றவன் அடுத்து தன் தாய் இலட்சுமியைக் கேட்க… ரித்விகா தன் தாய் இருந்த அறைக்குச் சென்று விட்டாள்… கண்மணியும் சமையலறைக்குச் சென்று கையில் இருந்த தட்டை வைத்து விட்டு… தன் அத்தையின் அறைக்குச் செல்ல… ரிதன்யா தவிர தன் குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க… மூவரிடமும் பொதுவாகப் பேச ஆரம்பித்தான்..
“இங்க பேசுறதுக்கு முன்னால ரிதுவுக்கு தான்மா பேசினேன்” என அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தவனிடம்…
“அப்பா எங்கே?...” கண்மணி இடையிட்டுக் கேட்க… தனது வீடியோவின் காட்சியை நட்ராஜ் புறம் திருப்பினான் ரிஷி…
“சார் தூங்கிட்டு இருக்காங்க கண்மணி… கொஞ்சம் இந்த க்ளைமேட் ஒத்துக்கலை… வீசிங்… உன்கிட்ட பேசிட்டு தூங்கறேன்னுதான் சொன்னார்… நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டு… டேப்லட் கொடுத்து தூங்க வச்சுட்டேன்” என்றவன்… கண்மணியின் முகம் மாறிய விதம் கண்டு
“பயப்பட ஒண்ணும் இல்லைமா… வழக்கமா அவருக்கு இருக்கிற மாதிரிதான்… எனக்கே இந்த கிளைமேட் ஒத்துக்கலை… அப்போ அவருக்கு எப்படி இருக்கும்” ரிஷி எடுத்து சொல்ல
“பார்த்துக்கங்க” என்றவளின் குரலில் கவலை தோய்ந்து ஒலிக்க… ஏனோ ரிஷிக்கு அது பிடிக்கவில்லை…
“உன்னை விட நான் அவரை நல்லாவே பார்த்துப்பேன்… உன் அளவு அசால்ட்டாலாம் சாரை வச்சுட்டு ரோட்ல வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” அவள் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாளோ என்ற எண்ணத்தில் ரிஷி வேகமாகச் சொல்ல
“சரிப்பா… நான் எதுவும் கேட்கலப்பா… உங்க பாடு உங்க சார் பாடு” கண்மணியும் சொல்லி விட… ரித்விகாவும் இலட்சுமியும் கண்மணியையும் ரிஷியையும் பார்த்த பார்வையை என்னவென்று சொல்வது…
அதன் பிறகு மூவரிடமும் சாதாரணமாக பேசிவிட்டு ரிஷியும் வைத்து விட்டான்… ரித்விகா… இலட்சுமியும் அதன் பிறகு உறங்கி விட… கண்மணிக்கோ உறக்கம் இல்லை…
மடிக்கணிணியை எடுத்துக் கொண்டு… கதை எழுத ஆரம்பித்திருந்தாள்… வெகுநாட்களுக்குப் பிறகு… கதை எழுத நினைக்க... அவள் நினைவிலோ.... அவளை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது
காலையில் அர்ஜூன் இவளிடம் பேசிய விசயங்கள்… கண்மணியை யோசிக்க வைத்தனதான்… குழம்ப வைத்தன் தான்… ஆனாலும் கொஞ்சம் யோசித்த போது… கண்மணிக்கு ரிஷியின் நடவடிக்கைகள் ஏதுமே தவறாகப் படவே இல்லை…
காற்றில் ஆடும் பெண்டுலம் போலத்தான்… கண்மணி என்பவளின் நிலைப்பாடு ரிஷி என்பவனிடத்தில்… அது சீரான நிலைப்பாட்டில் தன் அலைவரிசையை எப்போதும் மாற்றிக் கொள்ளாது…
ஆக கண்மணியும் ரிஷியின் உணர்வுகளை தனக்குள் அசை போட… அவன் மேல் தவறே இல்லை என்றவளாக அதாவது ரிஷியின் கண்மணி என்ற சீரான இசைவுக்கு மீண்டு வந்திருந்தாள்...
’ரிஷி கணவனாக தன்னிடம் உரிமை எடுக்காமல் இருந்தானா??… ஆம்.. அவனின் நிலையில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்… தான் மட்டுமல்ல… வேறு யார் அவன் மனைவியாக வந்திருந்தாலும்… ரிஷி இப்படித்தான் இருந்திருப்பான்…’
”கண்மணி என்பதால் அவன் அவளிடம் நெருங்க முடியவில்லை… ” -அர்ஜூனின் வார்த்தைகள் இந்த இடத்திலேயே தோற்று விட… அவனிடம் பேசி விட்டு வந்த போது இருந்த குழப்ப மனநிலை இப்போது இல்லை.... தானாக தெளிவாகி இருந்தவள்… கணவனுக்கும் தனக்குமான உறவின் நிலைப்பாட்டை… குழப்பத்தோடு இப்போது யோசிக்கவில்லை… நிதானமாக யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்…
’முதன் முதலாக அவனோடு உறவாடியவனின் இதழ் வரிகள் அவள் தனக்கானவள் என்று அவளின் தேகத்தில் உரிமை கொண்டாட வில்லை… மாறாக இனி இவள் எனக்கானவள்… என்று அவளைச் சுற்றி இருந்த காற்றுக்கு எச்சரிக்கை விடுத்து அவள் மீதான காற்றின் உரிமையைக் கூட பறித்தது போலத்தான் தோன்றியது கண்மணிக்கு…’
’அடுத்து தன் தந்தையிடம் கையெழுத்து வாங்கும் போது அவன் நடந்து கொண்டதை அவள் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை… ஆனால் அதே நேரம் கந்தம்மாள் பாட்டி வீட்டிற்கு வந்த போது அவள் இடையில் அழுந்திய கரங்கள்… மென்மையும்… சிறு அழுத்தமும் போதுமே அவனின் காதலையும் காமத்தையும் அறிந்து கொள்ள…. ’
’அதன் பிறகு பெரிதாக அவன் தன் எல்லைகள் மீற வில்லை… இல்லை… ஒரு வேளை தான் கண்டுகொள்ள வில்லையோ… இப்போது கண்மணிக்கு தன்னைக் குற்றவாளிக் கூண்டுக்குள் வைத்து நிறுத்திப் பார்க்க… இப்போது அவளின் நிலைதான் கேள்விக் குறியாக இருந்தது.... அவனை புரிந்து கொண்ட நல்ல தோழியாக அவனுக்கு தோள் கொடுத்திருந்த போதிலும் மனைவியாக என்றாவது நடந்திருந்திருக்கிறோமா.... யோசித்துப் பார்த்தால் கிடைத்த பதில் அப்படி ஒன்றும் அவளுக்கு சாதகமாக இல்லை...விடை வெறுமை தான்…’
’ஆனால் தான் எப்போதுமே அவனை தள்ளி நிறுத்தியதில்லையே…’ யோசித்த போதே…
’அவன் தான் சொல்லி இருக்கின்றானே… அவனுக்காக கடமைகள்… பொறுப்புகள் என… அதுவரை தொந்தரவு செய்யக் கூடாது என்று விலகி இருந்தோம்’ என அவளே சமாதானம் செய்து கொண்டாலும்… தான் அவனிடம் நெருங்கி பழகி இருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்ற…
”குறைந்த பட்சம் காதல் வார்த்தைகள்…” உதட்டைப் பிதுக்கினாள் கவலையோடு…
“ஹார்மோன்கள் சுரப்பி… ஃபெர்டிலிட்டி பார்முலான்னு வேற மேதாவித்தன பேச்சு வேறு” மனசாட்சி அவளை பந்தாடிக் கொண்டிருக்க… அவன் தள்ளி இருக்க அவனுக்கு ஆயிரம் காரணம் இருக்க… தான் ஏன் அவனை நெருங்கவில்லை… தன்னையே திட்டிக் கொண்டவள்… தன்னையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள தீர்மானித்திருந்தாள்… அதாவது ரிஷி இந்தியா வரும் போது அவனிடம் தான் அவன் மனைவியாக நெருங்கிப் பழக வேண்டும் என முடிவு செய்திருந்தாள்…
ஒருவாறு முடிவுக்கு வந்த போது மிக மிக தெளிவாக மாறி இருக்க... வழக்கம் போல தொலைக்காட்சியில் பாடல்களை ஓட விட்டு… அதைக் கேட்டபடியே.. கதை எழுத ஆரம்பித்தவளுக்கு… நாயகனுக்கான நாயகியின் உணர்வுகள்… அவளை அறியாமலேயே வார்த்தைகள் அபிநயம் பிடித்திருக்க… அதில் மூழ்கப் போனவளை… இப்போது அலைபேசி அழைக்க ஆரம்பிக்க… எடுத்துப் பார்க்க ரிஷி தான்…
மெலிதான படபடப்பு கண்மணிக்குள்ளும்… சற்று முன் தான் பேசி வைத்தான்… மறுபடியும் அழைத்திருக்கின்றான் என்றால்… ஏதேதோ எண்ணங்கள் அவளுக்குள்… எழுதிக் கொண்டிருந்த கதையின் கதை மாந்தர்களை அப்படியே கிடப்பில் போட்டவள்… தன் நாயகனின் அலைபேசி அழைப்புக்கு தன் நிமிடங்களை தாரை வார்த்திருந்தாள்…
போனை எடுக்க…
”கண்மணி” ரிஷியின் கரகரத்த குரல் அவளை வந்தடைய… அதிலும் ஜலதோஷத்தில் அவன் குரல்… இன்னுமே வேறொரு பாவத்தைக் கொடுக்க… ஒரு குரல் அவளின் இரத்த ஓட்டத்தை தாறுமாறாக ஓடச் செய்யுமா… முதன் முதலில் உணர்ந்தாள் கண்மணி… அவளின் இதயத்துடிப்பு அவள் காதருகே ஒலித்தது போல் பிரமை….
இசைக்கு மட்டுமல்ல… ஆண் பெண் உறவுக்கும் எண்ணங்களின் ஒரே ஒத்திசைவு தேவை... என்று கண்மணியும் உணர்ந்த கணங்கள்... அதுவும் ரிஷியிடம் மட்டுமே உணர்ந்த அந்த கணங்கள்… காதல் என்றால் என்ன... அது வார்த்தைகளில் இல்லை உணர மட்டுமே முடியும் என்று உணர்ந்த நொடிகள்... ரிஷி இங்கு இருந்த வரை உணர முடியாத... அவஸ்தையான படபடப்பான உணர்வு இன்று ஏன் தோன்றியது என்று அவளுக்குமே தெரியவில்லை... ஆனாலும் பிடித்திருந்தது...
இருந்தும் நொடியில் தன்னை எப்படியோ சரிபடுத்திக் கொண்டு…
”சொல்லுங்க ரிஷி” என்ற போது கண்மணியின் குரலில் என்ன உணர்ந்தானோ… இப்போது ரிஷியிடமும் அமைதி… தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாடலில் பாடல் வரிகள் அற்ற இசை மட்டுமே அவன் காதுகளை அடைந்திருக்க… அந்தப் பாடலில் சில்லென்று கண்ணாடி சிதறும் இசை இப்போது கேட்க… அங்கு ஓடிக் கொண்டிருந்த பாடலை அதன் இசையை வைத்தே… அது என்ன பாடலென்று ரிஷி சட்டென்று கண்டுபிடித்து விட்டான்…
இசைப்புயலின் முதல் இசை… ரோஜா திரைப்படத்தில் இருந்து - புது வெள்ளை மழை…இப்போது ரிஷியையும் நனைத்திருந்தது
”என்ன பண்ணிட்டு இருக்க கண்மணி” கண்மணியின் காதுகளில் கிசுகிசுத்த அவன் குரல்… இன்னுமே மென்மையைப் பூசி இருக்க… கண்மணிக்கு காற்றுதான் வருகிறது என்ற உணர்வு…
அவன் எப்போதும் போலத்தான் பேசுகிறானா… இல்லை தான் தான் அதிகப்படியாக நினைக்கிறோமோ என்ற சந்தேகம் கண்மணிக்கு வந்திருக்க… தன் நினைவுகளில் இருந்தவளை… ரிஷிதான் மீண்டும்
‘ஹேய் ரவுடி’ என்று சத்தமாக அழைக்க… மீண்டும் நினைவுக்கு வந்தவளாக
“தூக்கம் வரலை… கதை எழுதிட்டு இருந்தேன்” என்ற போதே பல அடுக்குகளை தாண்டி வந்தது போல அவள் குரல் நைந்து ஒலிக்க
”என் ஞாபகமா கண்மணி… பாட்டெல்லாம் பலமா இருக்கு” என்ற அவன் கரகரத்த குரலில் ... வேகமாக திரும்பி கண்மணி தொலைகாட்சியில் ஒலித்த பாட்டில் கவனம் வைக்க…
"நீ அணைக்கின்ற வேளையில் உயிா்ப் பூ திடுக்கென்று மலரும் நீ வெடுக்கென்று ஓடினால் உயிா்ப் பூ சருகாக உலரும்"
திரையில் ஓடிய காட்சியில் கண்மணி திடுக்கிட்டு சட்டென்று ரிமோட்டை அணைத்து விட்டவள் தன்னையே நொந்துகொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்…
’ரிஷி என்ன நினைத்திருப்பான்… தான் இந்தப் பாடலை அதுவும் இந்த இரவு நேரத்தில் கேட்டுக் கொண்டிருந்ததை வைத்து என்ன நினைத்திருப்பானோ…’
’என்ன நினைக்க… அதுதான் கேட்டும் விட்டானே… ‘
‘என் ஞாபகமா” என்று வேறு….
தர்மசங்கடமான சூழ்நிலை அவளுக்குள்… எதிர்முனையில் ரிஷியும் அவளை புரிந்து கொண்டவனாக
‘ஹல்லோ மேடம்…. படத்துல ஹீரோ பேர் ரிஷி… அதுனால என் ஞாபகம் வந்துச்சான்னு கேட்டேன்… வேற எதுவும் இல்லை… டிவிய ஆஃப் பண்ணின மாதிரி போனையும் கட் பண்ணிட்டு போய்றாத” ரிஷி எதிர் முனையில் இருந்து கண்மணியை கணித்து சரியாக பேச ஆரம்பித்து இருக்க….
இப்போது இயல்புக்கு வந்திருக்க… அவள் பழைய கண்மணியாக அவளது குரலை மீட்டெடுத்தவள்…
“சொல்லுங்க… நான் ஏன் கட் பண்ணப் போகிறேன்…” என்றபடியே… வீட்டை விட்டு வெளியில் வந்து மரத்தின் அடியில் இருந்த திண்டில் அமர்ந்தாள்…
”அதை விடு… இப்போ எதுக்காக நான் கால் போட்டேன்னு தெரியுமா” ரிஷி கேட்க
கண்டிப்பாக ரொமான்ஸ்… காதல் இந்த வார்த்தைக்களுக்கு இடமே இல்லை என்று தெரிந்தவளாக மௌனித்தாள் கண்மணி…
”இந்த அமைதிதான்… மறுபடியும் உன்கிட்ட கால் போடத் தோணுச்சு… நீ நார்மலாவே இல்லை ரித்விகாகிட்ட போன்ல பேசும் போது… உனக்கு போன் போடலேன்னு கோபமா ஆகிட்டியோன்னு இப்போ போட்டேன்” ரிஷி மீண்டும் போன் செய்த காரணத்தைக் கூற…
“போனை எதிர்பார்த்தேன்… ஆனால் கோபம்லாம் இல்லையே ரிஷி” கண்மணியும் அவனோடு பழைய மாதிரி பேச ஆரம்பிக்க
“என் மேல கோபம் இல்லை… ஆனால் உன் முகம் சரி இல்லையே அது ஏன்… என்னைப் பார்க்கும் போதே அதில ஆயிரம் கேள்வி இருந்தது போல இருந்ததே… என்கிட்ட ஏதாவது கேட்கனுமா”
“அப்டிலாம் இல்லை ரிஷி…”
“அப்படியா… சரி வீடியோ கால் போடறேன்… இப்போ எப்படி இருக்கேன்னு பார்க்கிறேன்… சம்திங்க் டிபரண்ட் இருக்கு உன்கிட்ட” என்றவனிடம்
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… வீடியோ கால்லாம் ஒண்ணுமில்ல…” பதட்டமாக வேகமாக சொல்ல…
”கட் பண்ணு” அதிகாரமாக ரிஷியின் குரல் ஒலிக்க
“முடியாது… இங்க இருட்டா இருக்கு… நார்மல் காலே போதும்… வீடியோ கால் போட்டாலும் வேஸ்ட்தான்” கண்மணியும் விடாமல் சொல்ல
“இப்போதான் லேண்ட் ஆனேன்… மறுபடியும் அங்க வர வைக்கனுமா என்னை… நீ இப்போ எடுக்கலேன்னா… அதுதான் நடக்கும்” ரிஷி மிரட்ட…
தானாக காலைக் கட் செய்தவள்… அவளாகவே அவனுக்கு வீடியோ காலையும் செய்ய…
“நீங்க கிளம்பி வந்துருவீங்கன்னுலாம் கால் பண்ணலை…. நீங்க வர மாட்டீங்கன்னு தெரியும்… உங்க பாதையைக் கண்மணிக்காகவெல்லாம் மாத்திக்க மாட்டீங்கன்னு தெரியும்” கண்மணியிடமிருந்து உண்மையான வார்த்தைகள் வர…
“ஏன் டல்லா இருந்த… கேள்விக்கு மட்டும் பதில்” ரிஷி கண்மணியின் வார்த்தைகளை எல்லாம் அலட்சியம் செய்தவனாக தன் பிடியிலேயே நின்றான்…
Lovely update