அத்தியாயம் 101-2
/*ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வருவது ஏனோ ஏன்
ஓ காதலே உன் பேர் மௌனமா நெஞ்சோடு பொய்
சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா
தொலைவில் தொடுவாய் கரையை தொட தொட
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனது ஏனோ வலம் வர வர
உருவம் காற்றாய் ஊடல் உடைபட
ஏய் பெண்மையே கர்வம் ஏனடி
வாய்வரை வந்தாலும் வார்த்தை மறிப்பது ஏனோ
ஓ சுவாசமே உடல்மேல் கூடவா என் ஜீவன்
தீண்டாமல் வெளியே சொல்லாத நீ வெற்றிக்கொள்ள
உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்*/
ஆதவனின் தாய்… கண்மணி இருவருக்குமே ஆதவன் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டிருக்க… இரவு வேளை என்பதாலும் மகளிர் என்பதாலும் இருவரும் நீதிபதி முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தனர்…
அர்ஜூனின் நிலை கவலைக்கிடமாக இருக்க நாராயணனால் கண்மணியின் அருகில் இருக்கமுடியவில்லை…
ஒரு புறம் உயிருக்குயிரான பேத்தி… மறுபுறம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பேரன்… யாரைப் பார்ப்பது என்று மருகிக் கொண்டிருந்தவரை ரிஷிதான் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்குச் செல்ல வைத்தான்……
கண்மணியை பார்த்துக் கொள்வதாக ரிஷி சொல்லியிருந்தாலும் மனம் தாங்காமல் மருத்துவமனையில் இருந்தபடியே… நொடிக்கொரு முறை ரிஷிக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார் நாராயணன்…
“ஜாமின் கிடைச்சிரும்னு சொல்லியிருக்காங்க ரிஷி நான் பேசினவரை… இரண்டு உயிரு… என் பேத்தியை விட்டுட்டு என்னால இங்க இருக்கவே முடியலை…” என்று தழுத்தழுத்தவர்…
“நீ முடிந்தவரை பாரு… ஆனால் என் பேத்தி ஜெயிலுக்கு மட்டும் போகக் கூடாது… எப்படியாவது அவ இன்னைக்கே வீட்டுக்கு வரனும்…” நாராயணன் ரிஷியிடம் உறுதியாகவும் கூறி இருக்க
“நான் பார்த்துக்கிறேன் தாத்தா… லாயர்கிட்ட பேசிட்டு இருக்கோம்… அவர் சொல்லிட்டார் கண்மணிக்கு ஈஸீயா பெயில் கெடச்சுரும்னு… அது மட்டுமில்லை… இந்தக் கேஸ்லருந்து கண்மணியும் வெளில வந்துரலாம்னு சொல்லியிருக்கார்… கண்மணியைப் பற்றி கவலைப் படவேண்டாம்… நான் இருக்கேன்ல… இன்னைக்கே வீட்டுக்கு வந்துருவா…” என்றவன் அர்ஜூனைப் பற்றியும் விசாரித்து விட்டு போனை வைத்தவன்… தன் அருகே நின்றிருந்த கண்மணியைப் பார்வை பார்க்க அவள் பார்த்தால் தானே… ரிஷி தன் உணர்வுகளை எல்லாம் வழக்கம் போல அடக்கிக்கொண்டு… வழக்கறிஞரிடம் பேச ஆரம்பித்தான்…
”ரிஷி… ஒண்ணும் கவலைப்படாதீங்க…. மேடம் அவங்க தற்காப்புக்காகத்தான் அந்த ஆதவனைத் தாக்கியிருக்காங்க… அதுக்கு சாட்சியா ஆதவனின் அம்மா இருக்காங்க… அவங்களே கண்மணிக்கு ஆதரவா இருக்காங்க… ரெண்டாவது கண்மணியால அந்த ஆதவன் சாகலை… அவங்க அம்மா கத்தியால குத்தினதாலதான் ஆதவன் இறந்திருக்கான்… மூணாவது கண்மணிக்கு ஆதவனைக் கொலை பண்ணனும்னு எந்த ஒரு மோட்டிவேஷனும் இல்லை… அப்புறம்… அவங்க வீட்டு சிசிடிவி ஆதாரம் இருக்கு… எல்லாமே ஜட்ஜ்கிட்ட காட்டிட்டோம்… இது எல்லாவற்றையும் விட… ஆதவன் மேல ஆயிரம் கேஸ் இருக்கு… அதுல முக்கியமான கேஸ் சின்னப் பொண்ணுகளை கடத்தி மிரட்டின கேஸ்… சோ கவலைப்படாதீங்க… மேடம் என்ன நடந்ததுன்னு உண்மையை மட்டும் சொன்னால் போதும்… இப்போதைக்கு பெயில் கிடைச்சிரும்…”
“அவங்க கன்சீவா இருக்காங்கன்னு சொன்னாலே… அந்த ரிப்போர்ட் காண்பித்தால் இன்னும் ஈஸியா கிடைச்சிரும் தானே சார்… எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்” ரிஷி கவலையோடு கேட்க
அந்த வழக்கறிஞர் கண்மணியைப் பார்த்துவிட்டு…
“மேடம் அதைச் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க ரிஷி” என இழுக்க… ரிஷி கண்மணியைக் கோபத்தோடு பார்த்த போதே
“நமக்கு இவ்ளோ விசயங்கள் சாதகமா இருக்கும் போது… அது வேண்டாம்… ஜாமின் கிடைக்காத பட்சத்துக்கு இந்த மாதிரி காரணங்களை புரடியூஸ் பண்ணினா… மனிதாபிமான அடிப்படைல நமக்கு சாதகமா கேஸ் நடக்கும்… இப்போ அது கூட தேவையில்லை…” ரிஷியிடம் வழக்கறிஞர் எடுத்துச் சொல்ல… ரிஷியும் அமைதியானான்…
தங்கள் வக்கீல்…. நீதிபதி என இவர்களிடம் நடந்ததைச் சொல்ல கண்மணி, தயங்கவே இல்லை… உண்மையைச் சொல்ல அஞ்சாத அவளது கணீரென்ற குரல்… நிமிர்ந்த பார்வை… தைரியமான பாவனை என எல்லாமே அவளுக்குச் சாதகமாக அமைந்திருக்க… சுலபமாக ஜாமினும் கிடைத்துவிட… ரிஷிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது… கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக கண்மணியோடு கூடவே நின்று அவளுக்காக காவல்துறை… வழக்கறிஞர்… நீதிபதியின் வீடு என அலைந்து திரிந்து எப்படியோ தன் மனைவிக்கு ஜாமின் வாங்கியிருந்தான்…
அதே நேரம் எப்படி முயன்றும் ஆதவனின் தாய்க்குத்தான் பெயில் கிடைக்கவில்லை… அவர் முதல் குற்றவாளி என்பதால்…
ரிஷி அவர்கள் வக்கீலிடம் சகுந்தலாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த போதே…
கண்மணி அங்கிருந்து வெளியேறும் பொருட்டு.. சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்… கழுத்தைச் சுற்றி புடவைத் தலைப்பால் போர்த்தியபடியே…. ரிஷியிடம் ஏதும் சொல்லக் கூட இல்லை…
“ஏய் கண்மணி…” வக்கீலோடு பேசிக் கொண்டிருந்தவன்… அவளை அழைத்தபடியே அரக்கப் பரக்க வேகமாக அவளை நோக்கி ஓடிவர… கண்மணி இப்போது நின்றவளாக…. அவனைப் பார்க்க… ரிஷி பரிதவிப்போடு அவனைப் பார்த்தான்…
‘நன்றி’ என்ற மூன்றெழுத்து வார்த்தையை சொல்லி தன்னை அந்நியப்படுத்தி விடுவாளோ என்ற எண்ணம் தான் அந்தப் பரிதவிப்புக்கும் காரணம்.. நல்ல வேளை கண்மணி அப்படி ஏதும் சொல்லவில்லை… நன்றி சொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை என்பது போல…
“ஃபோன் வேணும்… தாத்தாகிட்ட பேசனும்” என்றபடி அவனிடம் கை நீட்ட… ரிஷியும் அவனது அலைபேசியைக் கொடுக்க… வேகமாக வாங்கியவள் அவளது தாத்தா நாராயணனுக்கு அழைத்தாள்… அர்ஜூனைப் பற்றி கேட்க ஆரம்பித்தவளின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அதன் சுருதியை இழந்திருக்க… ஒரு கட்டத்தில் முற்றிலும் தழுதழுத்திருக்க… ரிஷி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்… அவளையே பார்த்துக் கொண்டிருந்தாலும்… அவள் அருகேயே நின்று கொண்டிருந்தாலும்… அவன் உள்ளத்தின் அடியில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது… காட்ட முடியாத சூழ்நிலை… அமைதியை மட்டுமே கடைபிடித்துக் கொண்டிருந்தான் ரிஷி…
கண்மணி பேசி முடித்துவிட்டு… அலைபேசியை மீண்டும் அவனிடம் கொடுத்த போதே கண்மணியின் கன்னங்களில் கண்ணீர் கோடுகள்… அர்ஜூனுக்காக மட்டுமே… இந்தக் கண்ணீர் துளிகள்…
ரிஷியோ கண்டுகொள்ளாமல்…
“மாமாவையும் சத்யாவையும் வரச் சொல்லியிருக்கேன்… நீ அவங்க கூட கிளம்பலாம்” என்ற ரிஷியிடமும் இந்த வார்த்தைகள் மட்டுமே வெளிவந்தது… ஏன் தான் அவளுடன் மருத்துவமனைக்கு வரவில்லை என்ற காரணம் கூட அவன் சொல்ல வில்லை… அவளும் கேட்கவில்லை… ஏன் இருவரின் பார்வைகள் கூடச் சந்திக்கவில்லை…
அவன் சொல்லி முடித்த அடுத்த ஐந்தே நிமிடத்தில் நட்ராஜும்… சத்யாவும் காரில் அவர்கள் முன் வந்து நின்றிருக்க… கண்மணியும் அவனிடம் ஏதும் சொல்லாமல் காரில் ஏறி இருந்தாள்… நட்ராஜும் மகளின் அருகில் போய் அமர்ந்தவராக… மகளின் கைகளைப் பிடித்து ஆறுதலோடு பேச ஆரம்பித்திருக்க… தந்தை மகளை தொந்தரவு செய்யாமல்… ரிஷி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த சத்யாவை அழைத்தவனாக…
”சத்யா… ஆதவன் அம்மா மட்டும் தனியா இருக்காங்க… யாருமே இல்லை… கொஞ்சம் டைம் எடுக்கும் போல… அவங்க ப்ரொசீஜர்லாம் முடியுறதுக்கு…. நான் அதெல்லாம் முடிச்சுட்டு வர்றேன்” என்றவன்…
இப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த கண்மணியிடம் ஒரு பார்வை வைத்தபடியே…
“மருது போஸ்ட்மார்ட்டம்லாம் முடிந்ததா…” சத்யாவிடம் கேட்க…
“நட்ராஜ் சார் தான் அங்க போனாரு… நான் அர்ஜூன் கூட போய்ட்டேன்… “
நட்ராஜ் இப்போது வாய் திறந்தார்… நட்ராஜ் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்… ரிஷியும் அதை உணர்ந்தான் தான்… கண்மணியின் வழக்கு.. மருது என அவரும் உணர்வுகளின் தாக்கத்தில் இருப்பதால் அப்படி இருக்கிறார் என ரிஷி நினைத்துக் கொண்டான்…
”ஹ்ம்ம்… எல்லாம் முடிஞ்சது ரிஷி… அனாதைப் பொணம்னு அங்கேயே எரிச்சுறச் சொல்லிட்டேன்…” நட்ராஜ் சொன்னபோதே கண்மணியின் கண்களில் சட்டென்று நீர்த்துளி விழுந்தது… அழ வேண்டுமென்று நினைக்கவில்லை… ஆனாலும் ஏன் வந்தது என்று தெரியவில்லை…
“நீ அனாதை இல்லை என்று உறவின் வெளிச்சத்தை அவளுக்குக் காட்டியவன்… இன்று அனாதையாக கிடக்கின்றான்”
“தன் தாய் சிதையில் எரிந்த போது… தந்தை ஜெயிலில் இருந்த போது… இவள் குழந்தையாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில்... கிருத்திகாவும் இல்லாத சமயங்களில்… அவன் மட்டுமே உறவாக இவளுக்காக அவள் இருந்த அறை வாயிலில் காத்துக் கொண்டிருந்தவன்…”
இதயம் பாறையாக கனத்தது…. இதழ்களைக் கடித்து அழுகையை அடக்க முயன்றாள்தான் கண்மணி… முடியவில்லை…
கண்மணியின் அடுத்த கண்ணீர் துளி மீண்டும் கன்னத்தைத் தாண்ட ஆரம்பிக்க… அடுத்த நிமிடமே அதைத் துடைத்தும் இருந்தாள்…
கண்ணீரைத் துடைத்த போதே அவளையும் மீறி காட்டாற்று வெள்ளமாக வெளிவரத் துடித்த மருதுவின் நினைவுகளையும் அணை போட்டு நிறுத்தியிருந்தாள் கண்மணி… இப்போது அவளது அழுகையும் நின்றிருக்க… ரிஷி அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்…
“அப்பா…” வேகமாக கண்மணி தன் தந்தையை அழைத்தவள்…
“மருதுவோட பாடியை நீங்க கார்டியன்னு சொல்லி வாங்கி அவனோட இறுதிச் சடங்கை முடிச்சிருங்க…” என்றவள் அதன் பிறகு மருதுவைப் பற்றிய பேச்சுகளைத் தவிர்ப்பது போல…
”அர்ஜூனைப் பார்க்கனும்… வேகமா காரை எடுக்கறீங்களா…” என்று சத்யாவிடம் சொல்ல…
“இதோ மேடம் “ என்ற சத்யா…
“ரிஷி… நீ கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா… அர்ஜூனுக்கு பிளட் கிடைக்கல… ரேர் ப்ளட்… AB +Ve… ப்ளட் பேங்க்ல ஒரு பாட்டில் மட்டும் கிடைச்சிருக்கு… “ சத்யா சொன்ன போதே ரிஷி தன் மாமாவைப் பார்த்தான்
”எனக்கு கொடுக்க இஷ்டம் இல்லை ரிஷி… வற்புறுத்தாத” நட்ராஜின் பிடிவாதம் ரிஷிக்கு வித்தியாசமாக இருக்க.. கண்மணியோ தன் தந்தையைக் கோபமாகப் பார்த்து பேச ஆரம்பித்த போதே…. ரிஷி வேகமாக சத்யாவைப் பார்க்க… சத்யாவின் கண்கள் சொன்ன செய்தியையும் புரிந்து கொண்டபோது… ரிஷியின் முகமும் இறுகியது…
பற்களைக் கடித்து… தன் கோபத்தை அடக்கிக் கொண்டவனாக…
“சத்யா நீங்க இறங்குங்க…… இங்க இருந்து ஆதவன் அம்மாவைப் பார்த்துக்கங்க… ரொம்ப டைம் ஆகாதுன்னு நினைக்கிறேன்… நான் ஹாஸ்பிட்டலுக்கு போகிறேன்” என்றவன்… அடுத்த நொடியே ஓட்டுனர் இருக்கையில் அமர்திருக்க… அப்போது நாராயணனின் அழைப்பு வந்திருக்க… தன் அலைபேசியே நாராயணன் என்பதை உணர்ந்து ரிஷி அதை முறைத்தபடி… அந்த அலைபேசி அழைப்பையும் துண்டித்திருந்தான்…
கண்மணிதான் எதுவும் அறியாமல் பேச ஆரம்பித்திருந்தாள்… வந்ததில் இருந்து அவள் தந்தையின் முகம் காட்டிய பாவனைகளை கண்டுபிடிக்க முடியாமல்…
“அப்பா… உங்ககிட்ட எதிர்பார்க்கலை இதை… உங்க பிடிவாதத்தை எல்லாம் அர்ஜூன் உயிரோட போராட்றப்போ காட்றீங்களா…” கண்மணி சொன்ன போதே
“மாமா… டிஃபன் வாங்கிட்டு வந்தீங்களா” கண்மணியின் வார்த்தைகளை தடுத்து நிறுத்தியவனாக… நட்ராஜிடம் ரிஷி கேட்க
நட்ராஜும் ஆமாம் என்பது போல… ரிஷி நட்ராஜிடம் கண் சைகை காட்டியபடியே… காரை எடுத்தான்…
நட்ராஜும் அதைப் புரிந்து கொண்டவராக…
“மணிடாம்மா… நீ சாப்பிடு… சாப்பிடாமல் இருக்கிற… டயர்டாகும்… ” மகளிடம் கெஞ்ச…
“நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்கப்பா… இப்போ சாப்பாடு ரொம்ப முக்கியம்… அர்ஜூனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு இங்க துடிச்சுட்டு இருக்கேன்… உங்களுக்கு வேணும்னா அர்ஜூன் முக்கியமில்லாமல் இருக்கலாம்… எனக்கு… ஏன்ப்பா… அவர் மேல உங்களுக்கு ஆயிரம் கோபம் இருக்கலாம்… அதுக்காக மனிதாபிமானத்தைக் கூட கொன்னு போட்டுட்டீங்களா…” எனும் போதே கண்மணி அழ ஆரம்பித்திருக்க…
ரிஷியின் கைகளில் இப்போது வாகனம் வேகத்தை எடுத்திருந்தது... அவளைச் சாப்பிடக் கூடச் சொல்லவில்லை… … ஏன் பின்னால் திரும்பி அவர்களைப் பார்க்கக் கூட இல்லை…
நட்ராஜ் தான் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்… அவள் கேட்பவளா என்ன???…
ரிஷியும் ஏதும் பேசாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்… ஸ்டியரிங்க் வீலைப் பிடித்தபடி சாலையை மட்டும் பார்த்தபடி வந்தவனிடம் கோபம் கோபம் மட்டுமே… அவ்வப்போது அலைபேசியிலும் பேசியபடிதான் வந்தான்… ஒருவழியாக மருத்துவமனை வளாகத்தையும் வந்தடைந்திருக்க…
கண்மணி வேக வேகமாக கதவைத் திறந்து இறங்கப் போக… அந்தோ பரிதாபம்… அவள் திறந்த கதவுகளுக்கு அவளின் வேகம் தெரியவில்லை போல… ரிஷியை வேகமாகக் கோபப் பார்வை பார்த்தவள்…
“ரிஷி டோர் லாக் எடுத்து விடுங்க” கண்மணியின் குரலில் அதட்டல் மட்டுமே ஒலித்தது…
அந்த அதட்டலுக்கெல்லாம் அடங்குவபனா ரிஷி… கைகளை நெட்டி முறித்தபடியே… பின் இருக்கையில் கேட்பாறின்றி கிடந்த சாப்பாட்டைப் பார்த்தபடியே
”அங்க இருக்கிற சாப்பாடை சாப்பிட்டால் கதவு திறக்கப்படும்” என்றபடியே தன் மாமானாரைப் பார்த்தவன்…
”மாமா… நீங்க மட்டும் இறங்குங்க… ப்ளட் டொனேட் பண்ற இடத்துக்குப் போங்க… எவன் உங்களை தடுக்கிறான்னு பார்க்கிறேன்… ரத்த வெறி இன்னமும் கூட அடங்கலை அந்த நாராயணனுக்கு… உயிரைக் காப்பாத்துறதுக்கு வந்ததுக்கே உங்களுக்கு அவமானம்… அந்தாளுக்கு இருக்கு” எனும்போதே ரிஷி பல்லைக் கடித்தான்… இப்போது முற்றிலும் கோபம் மட்டுமே அவன் முகத்தில்
கண்மணி தந்தையைப் பார்த்து அதிர்ந்த பார்வை பார்த்தவள்… அதே நேரம் தன் தந்தையை சில வினாடிகளில் தவறாக நினைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியிலும் தலை குனிய…
நட்ராஜ் மகளைப் பார்த்து தயங்கியபடி பின் மருமகனைப் பார்க்க…
“அவளைப் பார்க்காதீங்க… அதுல நம்ம ரத்தம் இல்லை… அத்தனையும் அவ தாத்தா ரத்தம் தான்… அதுதான் நம்மையெல்லாம் மதிக்க வைக்கல…”
“மாமா நீங்க இறங்குங்க… நீங்க போங்க... விக்கி எல்லாம் பார்த்துப்பான்…” ரிஷி சொல்ல… நட்ராஜும் இறங்கியிருக்க இப்போது கண்மணியும் ரிஷியும் மட்டுமே வாகனத்தில்…
நட்ராஜ் இறங்கிய அடுத்த நொடியே… ரிஷி அந்த வாகனத்தின் அனைத்து கதவுகளின் கட்டுப்பாடுகளையும் தன் வசம் கொண்டு வந்திருக்க… கண்மணி அலட்ச்சியமாக அமர்ந்திருக்க
“ஹ்ம்ம்.. சாப்பிடு.. உங்க அப்பா மாதிரிலாம் நான் கெஞ்சிட்டு கொஞ்சிட்டு இருக்க மாட்டேன்… வாயில திணிச்சு விட்றது எனக்கு ஒண்ணும் புதுசில்ல…” குரலில் எந்த அளவுக்கு கடுப்பைக் காட்ட முடியுமோ…. அந்த அளவுக்கு ரிஷி காட்டி இருக்க
அவன் சொன்ன அடுத்த நொடியே… கண்மணி கண்கள் இடுங்க ரிஷியையும் கார்கதவின் கண்ணாடியையும் மாறி மாறி பார்த்திருக்க
“இந்தக் கார் கண்ணாடியை உடச்சு வெளிய போறதுக்கு எனக்குத் தெரியாதா… இதுதானே உன் மைண்ட் வாய்ஸ்…” ரிஷி இதழ் வளைந்த அலட்சியத்துடன் சொன்னவனாக
”அதை உன்னால உடைக்க முடியும்… அந்த டேஷ் மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கும் தெரியும்டி… உன் வீரத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் அந்தப் பொறுக்கிட்ட சேம்பிள் காட்டிட்டு வந்த… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க... சோ தேவை இல்லாததுக்கு போட்ற எஃபர்ட்டை எல்லாம் விட்டுட்டு சமத்தா சாப்பாட்ல உன் வேகத்தைக் காட்டினால்… எல்லாருக்குமே வேலை சுலபம்… உனக்கு அர்ஜூனைப் பார்க்கனும்… எனக்கு நீ… சாரி சாரி… என் குழந்தை சாப்பிடனும்… அவ்ளோதான் டீல்… சிம்பிள் ஈகுவேஷனை ஏன் காம்ளிகேட் பண்ற… சாப்பிடு பார்க்கலாம்” இப்போது கோபம் கடுப்பெல்லாம் அவன் குரலில் இல்லை…
கண்மணி… அப்போதும் சாப்பிடாமல் இருக்க… விக்கியிடம் இருந்து அப்போது அவனுக்கு அழைப்பு வந்திருக்க பேசி விட்டு வைக்க… அவன் கொடுத்த நிமிடங்களும் கரைந்திருக்க… ரிஷி இப்போது
“சரி ஒகே… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல… பாவம் அர்ஜூனைத்தான் நீ பார்க்க முடியாது போல.. ஒரு நூறு வருசத்துக்கு அப்புறம் தான் மீட் பண்ண முடியும்... ஐ மீன் சொர்க்கத்துல சொன்னேம்மா... ” தோளைக் குலுக்கியபடி நக்கலாகச் சொன்னவன்
அப்போதும் கண்மணி மூக்கை விடைத்துக் கொண்டு அமர்ந்திருக்க
“வாழ்க உன் பிடிவாதம்… வளர்க உன் பிடிவாதம்… ஆனால் ஒண்ணு இந்தப் பிடிவாதமெல்லாம் உன் கூட மட்டும் வச்சுக்க… என் புள்ளைக்கு வந்துறாமல் பார்த்துக்க…”
“நீ இங்கேயே இரு… ஆனால் நான் தானே அர்ஜூனுக்கு இரத்தம் கொடுக்கப் போகனும்… உங்க தாத்தா மிஸ்டர் நாராயணனுக்கு அவர் பேரனுக்கு இரத்தக் கொடுக்கிறதுக்கு கூட தகுதியெல்லாம் பற்றி பேசி இருக்கிறாரே… என்ன பண்ணலாம்… பாவம் அர்ஜூன்… இன்னைக்கு ஒரு மூணு உயிர் போகனும்னு இருக்கு போல... ”
“எனக்குப் பசிக்கலை… நான் போகனும்” கண்மணி வேகமாகச் சொல்ல
“எனக்கு யார் பசி பற்றியும் கவலை இல்லை… என் குழந்தைக்கு சாப்பாடு போகனும்… அவ்ளோதான்… அது நடக்காமல் என்ன ஆனாலும் இங்கயிருந்து போக முடியாது” ரிஷியோ கண்மணியின் வேகத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிதானாமாகச் சொல்ல
ரிஷி இந்த அளவுக்கு நிதானமாகப் பேசிய விதத்திலேயே கண்மணிக்கும் அர்ஜூன் பற்றிய கவலை போயிருந்தது... அந்த தைரியத்தில்
”என்ன சீன் போடறீங்களா… இதெல்லாம் வேற யார்கிட்டயாவது காட்டுங்க… அர்ஜூனுக்கு ஒண்ணும் ஆகாது… கண்டிப்பா அவர் நல்லா வருவாரு… நீங்களும் அதைப் பார்ப்பீங்க ”நம்பிக்கையோடு சொன்ன கண்மணியின் பிடிவாதமும் தொடர…
“ஹ்ம்ம்… அப்படியா ” ரிஷி சிரித்தான்… சிரித்தான்… சிரித்துக் கொண்டே இருந்தவன்…
“உன்னைப் போய்… உனக்காக… அவன்… அந்த அர்ஜூன்… பைத்தியக்காரன்…” என்று விட்டு விட்டு சொன்னவன்… அடுத்த நொடியே
“உன்னைப் போய் லவ் பண்ணான் பாரு… உனக்காக உயிரை பணயம் வச்சு இப்போ போராடிட்டு இருக்கான் பாரு… அவன் சத்தியமா… பைத்தியக்காரன் தான்… ஆனால் ஒண்ணு மட்டும் புரியலை…. கேட்டு சொல்றியா உங்க அர்ஜூன்கிட்ட… நீ ஏன் அந்த ஆதவன் கூப்பிட்ட உடனே ஓடுனேன்னு யோசிச்சிப் பார்த்தானா இல்லையான்னு… அப்படி யோசிக்கலைனா அந்த மரமண்டைகிட்ட சொல்லு… என் புருசன் உயிருக்கு ஆபத்துனு நான் பதறி ஓடுனேண்டா முட்டாள்னு… அவன் நடுமண்டைல நச்சுனு புரியுற மாதிரி சொல்லி வை… புரியட்டும்… நாம யாருக்காக உயிரைப் பணயம் வைத்து படுத்திருக்கொறோமோ… அந்தக் கண்மணி அவ புருசன் உயிருக்காக அவ உயிரைப் பணயம் வச்சுருக்கான்னு… இனிமேலாவது புரியுதான்னு பார்க்கலாம்… ” என்றபடியே… அவளை சில நிமிடம் பார்த்தபடி இருந்தவன்... பின் ஏதும் சொல்லாமல் இப்போது கதவைத் திறப்பதற்கான வசதியை தனது ஓட்டுனர் இருக்கையில் இருந்து மாற்றி அமைத்தவனாக
”இறங்கு இறங்கு… நல்லபடியா உன் மாமா மகனைப் போய்ப் பாரு… நாங்க எதுக்கு இடையில…” கண்மணியைக் கண்டு கொள்ளாத வேண்டா வெறுப்பு பாவனையோடு சொல்லிவிட்டு முன்புறம் திரும்பி அமர்ந்துவிட… கண்மணியோ இப்போது கதவைத் திறக்கவில்லை… வெளியே செல்லவும் இல்லை.
ஐந்து நிமிடங்கள் கழித்தும் கார்க் கதவு திறக்கப்படாமல் இருக்க… ரிஷி இப்போது வேகமாக பின்னால் திரும்பிப் பார்க்க… கண்மணியோ இறங்காமல்அவனைப் பார்த்தபடியே இருந்தாள்… கண்களின் விளிம்புகளில் கண்ணீர் கரை கட்டி இருக்க… இப்போதோ அப்போதோ என கரை தாண்ட காத்திருந்தது அந்தக் கண்ணீரும்
அவ்வளவுதான்... ரிஷியின் கோபமெல்லாம்... நக்கல் எல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை…
“ஏய் என்னடி… ஏன்டி … ஏண்டா… என்னாச்சு அம்மு …” பதறியவனாக ரிஷி வேகமாக இறங்கி பின் இருக்கையில் அவள் பக்கம் இருந்த கதவைத் திறந்தபடி… அவளை நோக்கிப் போன போதே
“வராத… என் பக்கத்தில வராத… என்கிட்ட மறச்சுட்டேல்ல… அந்த மருது கூட பேசிட்டு இருந்ததை என்கிட்ட கூட சொல்லலதானே… எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்து… நீ பண்ணியிருக்கேல்ல…”
கண்மணி கோபமாகக் கத்தியவளாக
“மறச்சுட்டீங்கதானே… அவன்லாம் முக்கியமா போயிட்டான்ல… என்னைப் பொறுத்த வரைக்கும் அவன் அன்னைக்கே இறந்துட்டான்… இன்னைக்குத்தான் பாடி கெடச்சிருக்கு… ” சொன்ன போதே கண்மணியின் குரலும் பழைய நிலைக்கு வந்திருக்க… அதில் இப்போது கோபம் மட்டுமே… அதுவும் ரிஷியின் மீதான கோபம் மட்டுமே…
ரிஷி காரினுள்ளே செல்லாமல் வெளிப்புறமாக நின்றபடியே… அவளைப் பார்த்தபடியே நிற்க…
“நீங்க எப்படி என்கிட்ட மறைக்கலாம்… ” மற்றவை எல்ல பிரச்சனை இல்லை இதுதான் இப்போதைய பிரச்சனை என்பது போல கண்மணி அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவளாகக் கேட்க...
ரிஷி இப்போது மெதுவாக அவள் கைகளைத் தட்டி விட்டவனாக… அவளிடமிருந்து தன்னை விடுவித்தவனாக…
“ஏன் சொல்லனும்… எதுக்காகச் சொல்லனும்” அவன் குரலில் வலி மட்டுமே… அதே நேரம் அவளைத் தூர நிறுத்தினார் போல அவன் குரலில் அந்நியத்தனம்
கண்மணி அவனை நிமிர்ந்து பார்க்க…
“என்ன பார்க்கிற … இவ்ளோ நாள் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தினேன் …. சாரி சாரி… நாய்னா உனக்கு பிடிக்காதுல… ஆட்டுக்குட்டி மாதிரி உன் மடில வந்து விழுந்து கிடந்த ரிஷிக்கண்ணா இனி இல்லை நான்… “
"இன்னைக்குத்தான் புரிஞ்சது… நான்... நான் உனக்கு யார்னு… என் ஃப்ரெண்ட் அப்போவே சொன்னான்… அப்போ புரியல… நீ என்னை எந்த இடத்தில வச்சுருக்கேன்னு இப்போ எனக்குப் புரி்யுது“
ரிஷியின் குரல் தழுதழுப்பாகி இருக்க….
“நீ என்னை விட்டு பிரிந்து போனது… என்னை அசிங்கபடுத்தினது… அவமானப்படுத்தினது… அதில எல்லாம் எனக்கு வெறுப்பே தெரியலை… சொல்லப்போனால் இன்னும் இன்னும் என்மேல நீ வச்சிருக்கிற காதல் தான் என் கண்ணுக்கு தெரிந்தது.... தெரியுது… அது ஏன்னு எனக்கும் தெரியலை… நீ ஜெயிச்சுட்டுத்தான் இருக்கடி… ஆனால் நான்… தோத்துட்டே இருக்கேன் கண்மணி…. என் காதலுக்கான இடத்தை உன்கிட்ட தேடறேண்டி ... என்னோட காதல் உன்கிட்ட ஜெயிக்காமல் தோத்துட்டே போகுதேடி… வலிக்குதுடி… எனக்காக நீ இருக்கேன்னு எப்போதுமே ஒரு பெருமை இருக்கும் எனக்கு… ஆனால் இப்போ அந்த பெருமைலாம் இல்லை… நான் உன்னோட மனசுல எந்த இடத்தில இருக்கேன்னு சொல்லுடி… ஏன் இப்படி பண்ற அதுவும் புரிய மாட்டேங்குது…. “
ரிஷியும் தன் வார்த்தைகளைத் தொடர முடியாமல் அவளையே பார்த்தபடி இருக்க… அவன் குரலில்… கண்களில் தோற்ற வலி மட்டுமே… நிமிடத்தில் சரி ஆனவன்…
இப்போது தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்தவன்… அவள் கைகளில் கொடுத்தபடியே..
“இதோட அர்த்தமும் எனக்குத் தெரியல… இப்போ நாம புருசன் பொண்டாட்டியான்னும் தெரியலை… எல்லாமே என்னைச் சுற்றி இருந்தும் வெறுமையா இருக்குடி… ப்ச்ச்…புடி.. இதைத் தூக்கிப் போடு… இல்லை என்னமோ பண்ணு…” எனும் போதே கண்மணி அதை வாங்கி தன் வசம் கொண்டு வந்திருக்க…
எதையோ நினைத்தபடி விரக்தியாகச் சிரித்தவன்…
“இது நான் உனக்குப் பிடிச்சு போட்டதில்ல… ஆனால் நான் எனக்குப் பிடிச்சு உனக்கே உனக்கே உனக்குனு வாங்கி கொடுத்ததை தூக்கிப் போட்டுட்டு போனேல…"
“கண்மணி… கண்மணி… கண்மணினு உன்னை நான் சுத்தலைதான்… ஆனால் என்னை ரிஷி ரிஷிக்கண்னான்னு கூப்பிட்டு கூப்பிட்டு … என் உலகத்தையே உனக்குள்ள சுருடிட்டிட்ட … நான் அடுத்த அடி வைக்க முடியாமல் தடுமாறுறேண்டி… இப்போ அந்தக் குரலுக்காக தவிக்கிறேண்டி… ஏண்டி இப்படி பண்ற… “ தழுதழுத்தவன் உணர்வுகளின் தாக்கத்தில் மாற்றி மாற்றி பேச ஆரம்பித்திருந்தான்...
“பரவாயில்ல… நான் பிறந்ததுல இருந்தே… இந்தக் கண்மணி என்ன என் பக்கத்தில இருந்தாளா என்ன… போடி… போ… ஒரு ஆறு வருசம்… அதுகூட இல்லை… இந்த ஒரு வருசம்…. அதுல 4 மாசம்... இவ்ளோதான் புருசன் பொண்டாட்டியா நீயும் நானும் வாழ்ந்தது … ஜஸ்ட் 4 மாத இந்த வாழ்க்கைக்கு நான் ஏன் இவ்ளோ கவலைப்படனும்… “
“திகட்ட திகட்ட காதலைக் கொடுத்த போதே நான் சுதாரிச்சுருக்கனும்… அனுபவிச்சேன் பாரு… என்னைச் சொல்லனும்டி… நான் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுத்துட்டு… இப்போ என்னைத் தெருவுல நிக்க வச்சு கெஞ்ச வைக்கேறல… “
வேகமாகத் திரும்பி… கண்களைத் துடைத்துக் கொண்டவன்… அவள் இறங்குவதற்கு வசதியாக இடம் விட்டு தள்ளி நின்றவனாக…
“போடி… என் கண்ணு முன்னால நிக்காத… “ என்றவன்…. அடுத்த நொடியே ... அவள் இறங்க முடியாயபடி மீண்டும் அவளருகில் வந்து நின்றிருந்தவனாக… அவளைத் தடுத்து நின்ற படி
”வெட்கத்தை விட்டு சொல்றேண்டி… என்னால உன்னை விட்டு இருக்க முடியலடி.. மனசால மட்டும் இல்லை… எல்லா விதத்திலயும்… நான் சொல்றது புரியுதா இல்லையாடி… இப்போ… இப்போ… கொஞ்ச நேரத்துக்கு முன்னால உரிமையோட என் சட்டையைப் புடிச்சியே… அந்த சின்னத் தீண்டலுக்கே நான் சில்லு சில்லு உடையுறேண்டி…. பரவாயில்லை… இது கூட எனக்கு வேண்டாம்… எதுவும் எனக்கு வேண்டாம்… ஏன் ரிஷிக்கண்ணான்னு என்னைக் கொஞ்ச வேண்டாம்… நான் உன் புருசன்… நீ என் பொண்டாட்டி… எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம்… ஜஸ்ட்… இதோ இந்த அளவு தூரத்துல இருந்து என்னைத் திட்டிட்டாவது இருடி…. சரி அது கூட வேண்டாம்… அட்லீஸ்ட் என் முதலாளி பொண்ணா மட்டுமாவது இரு… நம்ம வீட்டுக்கு… இல்லை இல்லை உன் வீட்டுக்காவது வாடி… எனக்குத் தெரியலைடி உன்னை விட்டு எப்படி இருக்கிறதுனு… உன்னை எப்படி என்கூட வரவைக்கிறது எனக்குத் தெரியவே இல்லைடி… பைத்தியம் பிடிக்குதுடி…” கண்மணி இப்போது மீண்டும் கல்லாய் சமைந்திருக்க… ரிஷி கண்களை மூடி தன் நிலையைப் புரிந்து கொள்ள முயலத்தான் செய்தான்… கண்களைத் திறந்த போதோ… கண்மணி அதே நிலையில் இருக்க… ரிஷியின் கோபம் இன்னும் இன்னும் விண்ணைத் தாண்டி இருக்க…
“இவ்ளோ கெஞ்சியும் நீ மனசு மாற மாட்டேல… போ… ஆனால் ஒண்ணு மட்டும் சொல்றேன்டி… இனி… இன்னொரு முறை… எனக்காக… என் உயிருக்கு ஆபத்துனு… என்னைக் காப்பாத்துறேன்னு வந்துராத… அப்படி வந்தால் என் பொணம் தான் உனக்கு கிடைக்கும்… அதைத்தான் நீ எடுத்துட்டு போகனும்… ஏன்னா இப்போதே நான் உயிரில்லாத ஜடம்மாதிரிதான்… அதுனால இனி இந்த உயிருக்காக ரொம்ப மெனக்கெடாத… ”
ரிஷி சொன்னதைக் கேட்டு… அதிர்ச்சியாக கண்மணி அவனைப் பார்த்தபடி இருந்த போதே விக்கி வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்…
கண்மணியைப் பார்த்தவுடன் இன்னும் வேகமாக அவளை நோக்கி வந்தவன்…
“கண்மணி…” என்று மகிழ்ச்சியோடு அவளைப் நோக்கிய விக்கி… பின் ரிஷியிடம் திரும்பினான்…
“ஒண்ணும் பிரச்சனை இல்லைதானே… கேஸ்லாம் பார்த்துக்கலாம் தானே” நண்பனைப் பார்த்து கேட்க…
ரிஷி பேசவில்லை ஆனால் கட்டை விரலை உயர்த்திக் காட்ட…
“அர்ஜூன் அபாயக்கட்டத்தைத் தாண்டிட்டாரு… ரூம் மாத்திட்டாங்க… நட்ராஜ் சார் டைமுக்கு ஹெல்ப் பண்ணிட்டாரு” கண்மணியின் முகத்தைப் பார்த்து சொல்ல
விக்கியின் வார்த்தைகளை காதில் வாங்காதவள் போல... அவனை எரிச்சலான பார்வை பார்த்தவளாக காரை விட்டு இறங்கி இருந்தாள் …
விக்கிக்கும் புரிந்தது... அவளுக்கு தான் அவளிடம் பேசியது பிடிக்கவில்லை என்பது... ஆனாலும் கண்டு கொள்ளாமல் நண்பனிடம் சென்று ... அவன் காயத்தைத் தொட்டுப் பார்த்தவனாக
"டேய் ப்ளட் வந்துட்டே இருக்கு பாரு ... டாக்டர் பார்த்துட்டு போலாம்டா... " விக்கியின் கையை விலக்கியவன்... முன்னால் போன கண்மணியையே பார்த்தபடி
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா... இந்த காயம் மட்டும் இல்லேன்னா நானும் கொடுத்திருப்பேன்… நாளைக்கு நான் ரத்தம் கொடுக்க முடியுமான்னு கேட்போம்… ” என்று சொன்னபடியே ரிஷி காரை லாக் செய்து விட்டு விக்கியோடு சேர்ந்து நடந்தான்….
கண்மணி முன்னால் சென்று கொண்டிந்தாள் வேகமாக… அவளுக்கு எதிர்மாறாக ரிஷியோ தளர்வாக நடந்தபடி சென்று கொண்டிருந்தான் மருத்துவமனையை நோக்கி…
ஆதவன் வீட்டில் நடந்த சண்டையில் அவள் கைகளில் கத்தி பட்டு கீறிய காயத்தை விட…. அவன் மனைவியின் அழுத்தமான மௌனத்தால் உண்டான காயமோ படுரணமாக மாறி அவனுக்குள் தாங்க முடியாத வலியைக் கொடுத்திருந்தது…
வலியின் அழுத்தம் அதிகமாக அதிகமாக அதை அடக்கத்தான் முயற்சிதான் ரிஷி... ஆனால்... அடக்கிய அழுத்தம் வெடிக்காமல் போனால்தானேஅதிசயம் ...?
Enna Karan irundalum Rishi ah ala vaikum inda kanmani