ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
நெக்ஸ்ட் எபி போட்டுட்டேன்... புயலுக்கு முன் அமைதி... அது போல... இந்த எபி ஒரு கூல் எபி...
நெக்ஸ்ட் எபி... ????? என்ன ஆகும்... சீக்கிரம் வருகிறேன்... பை... ..
படிச்சுட்டு கமென்ட்ஸ் போடுங்க...
கமெண்ட்ஸ் அண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி....
அத்தியாயம் 74-2
/* நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே
காதல்சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல்சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு */
“ஹாய் ரித்வி பேபி…. என்ன சீக்கிரம் வந்துட்ட… லேட்டா வருவீங்கன்னு நினைத்தேன்” என்ற படியே உள்ளே ரிஷியின் முகமெல்லாம் சந்தோசம் மட்டுமே…
பைக்கை நிறுத்திவிட்டு… மாடிக்குச் செல்லாமல் வீட்டுக்கு…. அதுவும் சமையலறைக்குத்தான் நேரடியாக வந்தான்…
இவன் சந்தோசமாகக் கேட்க ரித்விகாவோ உம்மென்று இருக்க…
“ஏன் முகமெல்லாம் டல்லா இருக்கு… அம்மா ஸ்வீட் செய்யுறாங்கனு பார்த்த உடனேயே இங்கேயே ஹால்ட் போட்டுட்டியா… அதுதான் டோஸா “ என்று தங்கையை வம்பிழுத்தபடியே கேட்டவனின் கண்கள்… அவளிடம் இல்லாமல்… கண்மணியைத் தேட ஆரம்பிக்க…
ரித்விகா அவனிடம்
“என்கிட்ட பேசுறீங்களா அண்ணா… இல்லை வேற யாரையும் தேடறீங்களா” என்ற போதே…
“உன்கிட்டயும் பேசுறேன்… என் ஓனரம்மாவையும் தேடறேன்…” அவனின் உரிமை அப்பட்டமாக குரலில் வெளிவந்திருக்க…
“ப்ச்ச்…. ரொம்ப ஓவரா பண்ணாதண்ணா… நீ வந்த உடனேயே அண்ணி தரிசனம் தந்துறனும்… அப்புறம் உன் கண்ணு முன்னாலேயே சுத்தனும்…” என்று கடுப்போடு சொன்னவள்… தன் அன்னையின் உடனடி முறைப்பில்… உடனே அவரிடம் திரும்பி…
“ரொம்ப பேசுறேன்… வயசுக்குத் தகுந்த மாதிரி பேசனும்… எதை எங்க பேசனுமோ பேசனும்… ப்ளா… ப்ளா… இதுதானே… இப்போதான் கேட்டு முடிச்சேன்… ஆரம்பிச்சாராதீங்க…” என்று படபடத்த ரித்விகா…
”என் வாய் வேற… சும்மாவே இருக்க மாட்டேங்குது… அடங்கவே மாட்டியா ரித்வி… இப்போதானே திட்டு வாங்கின…” இப்போது தன்னையே திட்டிக் கொள்ள… ரிஷியின் இன்னும் முகம் விஸ்தாரமானது புன்னகையில்
“சரியான டோஸ் போல குட்டிம்மா… அம்மாகிட்ட ரொம்ப நாளைக்கப்புறம் வாங்கி இருக்க போல… “
“ம்மா… இவ ரொம்ப பேசுறாம்மா… நல்லா கவனிங்க” என்று தன் பங்குக்கு ரிஷி இன்னும் வேறு போட்டுக் கொடுக்க… அவன் தங்கையோ மூக்கை விடைத்து முறைத்தபடி இவனைப் பார்க்க….
”அம்மா… இவ முறைக்கிறாம்மா…” என்று தன் தங்கைக்குப் பயந்தவன் போல் அவன் அம்மாவின் அருகில் போய் நிற்க… இலட்சுமி சிரித்தார்தான்… இருந்தாலும்
“ரிஷிக்கண்ணா… இவ கூட விளையாட ஆரம்பிக்காமல்… விக்கியப் போய் பாரு… மாடில இருக்கான்… இருக்கார்” என்ற போதே
”ம்மா… உங்க ரிஷிக்கண்ணா… இன்னொருத்தவங்க வாய்ல இருந்து வர்ற ரிஷிக்கண்ணா வார்த்தையைக் கேட்காமல் வேற எங்கேயும் போக மாட்டாரு… “ என்று சொல்லிவிட்டு அன்னையைப் பார்க்க… அங்கு வேறென்ன கிடைத்திருக்கும்…
அதையெல்லாம் கண்டுகொள்வாளா???... அவள் யார்???… ரித்விகா ஆயிற்றே!!!!...
வேகமாகத் தன் அண்ணன் புறம் திரும்பி
“அண்ணி ரூம்ல இருக்காங்க” என்று முடிக்கவில்லை…. ரிஷி அடுத்த நொடி… அறையில் இருந்தான்…
….
“அ…ம்…மு” என்று உல்லாசமாக அழைத்தபடி உள்ளே வந்தவனின் கண்களில் கண்மணி பட்டாளோ இல்லையோ… அவள் சூடியிருந்த ஒற்றை மல்லிகையின் மணம் அவன் நாசி உணர… சட்டென்று அப்படியே நின்று விட்டான்…
அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை… அப்படியே… அறையின் வாசலில்… கதவின் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு…. அதைத் திருப்பி அமர்ந்தவன்
“ரிஷிக்கண்ணா… இந்த ரூம் ஏற்கனவே சின்னது… இந்த டிஸ்டன்ஸ கீப் அப் பண்ணிக்கோ… அதுதான் உனக்கு நல்லது…” என்று தனக்குள் சொன்னபடி… நாற்காலியின் பின்புறத்தில் சாயும் பகுதியில் முகத்தை வைத்தபடி…
“அம்மு” என்று மீண்டும் அழைக்க… கண்மணி இவன் புறமே திரும்பவில்லை… மும்முறமாக குனிந்து எதையோ தேடிக் கொண்டிருக்க…. இவனோ அவளை ரசிக்க ஆரம்பித்திருந்தான்…
”ஓய்… திரும்ப மாட்டீங்களா மேடம்…” என்றவன்…
“சரி விடு… அந்த முதுகுல இருக்கிற மச்சம் லைட்டா தெரியுது… நமக்கு அதுவே போதும்… “ வேண்டுமென்றே ஆணாக இப்போது வம்பிழுக்க… பெண்ணாக அவளிடம் எதிர்பார்த்த எதிர்வினை வராமல் இருக்க… ரிஷிக்கு இன்னுமா புரியாமல் இருக்கும்… அவன் நினைத்தபடியே… கண்மணி… அவன் மனைவி அவன் மீது கோபமாக இருக்கிறாள்…
புரிந்தவன்… ஆழப் பெருமூச்சு விட்டவனாக… மூச்சை இழுத்து விட்டவன்…
“அம்மு… நீ கோபமா இருப்பேன்னு தெரியும்டா…”
“ப்ச்ச்… திரும்பு அம்மு”
“அம்மு”
கண்மணியோ திரும்பாமல் பிடிவாதமாக… இன்னும் தன் தேடுதலை மும்முறப்படுத்த
“கண்மணி” மெல்ல அழுத்தம் கொடுத்து அழைக்க… அவள் திரும்ப வேண்டும் என்ற அழுத்தம் அவன் குரலில் ஒலிக்க… கண்மணியோ அசரவில்லை… திரும்பவும் இல்லை…
”உன் கோபம் நியாயமானதுதான்… நான் விக்கியப் பற்றி சொல்லாதது தப்புதான்… இல்லைனு ஆர்க்யூ பண்ணப் போறதில்லை… ஆனால்.. இப்போ பேச வேண்டாம்… நைட் பேசலாம் இதைப் பற்றி…” அவளை பார்த்தபடியே சொல்ல… கண்மணி இப்போது திரும்பினாள்…
வார்த்தைகளால் இல்லாவிட்டாலும்… அவள் பார்வையே அவனை பஸ்பமாக்க… அவனுமே அவளை எதிர் கொண்டான் தான் சளைக்காமல் இவனும் அவளைப் பார்க்க
அவனது அருகில் வந்தவள்…
“எனக்கு எப்போதுமே சீன் கிரியேட் பண்ண பிடிக்காது ரிஷி… அதுனால நீங்க தப்பிச்சீங்க… இல்லை… எனக்கிருந்த கோபத்துக்கு” என எச்சரித்தவள்…
”இப்போ போறேன்… ஆனால் நைட் இருக்கு உங்களுக்கு கச்சேரி…” வார்த்தைகளைக் கடித்து துப்பியவளாக… அவனைக் கடந்தவள்… போகும் போதே ஏதோ வாய்க்குள் முனங்கியபடி போக… அடுத்த நிமிடம்… அவள் உணர்ந்தது என்ன… சட்டென்று கதவு மூடப்படும் சத்தமா?…. இல்லை கதவு மூடப்பட்டதா?… இல்லை ரிஷியின் இரும்புக்கரங்கள் அவள் இடையை சுற்றி வளைத்ததா?…
ஆராய்ச்சி செய்யப் போனவள்… சூழ்நிலை உணர்ந்தவளாக
“ப்ச்ச்… ரிஷி… விடுங்க… அத்தை, ரித்விலாம் இங்கதான் இருக்காங்க” என்று அவன் கரத்தை விடுவிக்க முயற்சித்தபடியே படபடத்தவளை கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல்… தன்னருகே கொண்டு வந்தவன் இப்போதும் நாற்காலியில் இருந்து எழவில்லை…
அவனுக்கும் அவளுக்கும் இடையே நாற்காலியின் சாயும் பகுதி இருக்க… அதோடு சேர்த்து கண்மணியை இழுத்து அணைத்து பிடித்திருந்தவனைப் பார்த்து முறைக்க
“எனக்கும் தெரியும்… அவங்களாம் இங்க இருக்காங்கன்னு… வாய்க்குள்ளேயே என்னமோ சொல்லிட்டுப் போனியே… அது என்ன… அதைச் சொல்லு… விடறேன்…” என்றவனின் கரங்கள் அவளை இறுக்க…
“ஒண்ணுமில்ல…”
“ஓகே…. நானும் கம்பல் பண்ணல… அதே போல நீயும் என்னைக் கம்பல் பண்ணாத” வசதியாக அவளைச் சுற்றி வளைத்தவனாக… அவளை இறுக்கி அணைக்க… ரிஷியின் பிடிவாதம் அவனவளிடம் வழக்க போல… கண்மணியும் பெரிய எதிர்ப்பெல்லாம் காட்டாமல்… பேசாமல் அப்படியே நின்றாள்.. தன் பிடிவாதம் தனக்கு முக்கியம் என்பது போல
நிமிடங்கள் கடக்க… ரிஷி செருமியவனாக... அவளிடம் பேச ஆரம்பித்தான்...
“அம்மா… உன்னைத்தான் தேடிட்டு இருந்தாங்க…. போகனுமா…. வேண்டாமா…” மெதுவான மிரட்டலாக கேட்டவன்… இப்போது தன் வன்மையை விட்டு விட்டு.. மென்மையாக அவள் இடையில் கோலமிட… சட்டென்று தட்டி விட்டவளைப் பார்த்து… கண் சிமிட்டியவன்…
“எவ்ளோ நல்ல பையனா… சமத்தா… டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணிப் பேசிட்டு இருக்கேன்… நான் எவ்ளோ கெட்ட பையன்னு… என்னோட எக்ஸ்ட்ரீம் தெரிஞ்ச என் பொண்டாட்டியா பிஹேவ் பண்ண மாட்றீயேடி” தன் கோபம் புரியாமல் சரசமாடியவனின் கண்களைப் பார்த்து முறைத்தவள்…
“அதுதான்… என் கோபம் என்னன்னு தெரிஞ்சுருச்சுதானே… பேசுவோம்னு சொல்லிட்டீங்களே… சரி… பார்க்கலாம்… என்ன சொல்லி…” கண்மணி சொன்ன போதே அவளது தேகத்துக்கு பழகிய அவன் விரல்கள்… அனிச்சையாக அன்னியோன்ய உரிமையுடன் அதன் எல்லைகளை கடக்க ஆரம்பிக்க… இப்போது கண்மணி தடுமாற ஆரம்பித்தாலும்… தன்னை சுதாரித்துக் கொண்டவள்… அவனது கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டவளாக
”பேசுவீங்களா… இல்லை இந்த மாதிரி… என்னை பேச விடாமலேயே சமாதானப்படுத்துவீங்களா” இந்த வார்த்தைகளை கோபத்துடன் கேட்க நினைத்தாள்தான்… ஆனால் முடியவில்லை… குரல் சன்னமான வருத்தத்தை மட்டுமே வெளிப்படுத்த...
இன்னும் இலகுவாக அமர்ந்தபடி… முன்னே வந்து அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன்… முகத்தில் கள்ளச் சிரிப்பா... வெற்றிச் சிரிப்பா... அவளால் உணர முடியவில்லை
“அது… உன் கோபத்தைப் பொறுத்து அம்மு… வாய் வார்த்தையா… இல்லை வேற மாதிரியான்னு பார்க்கனும்… “ இலேசாக சீண்டியவனின் இதழ்கள் குறும்பாக வளைந்தது…அதே நேரம் மனைவியின் முறைப்பை பார்த்து
“எதுக்குடி முறைக்கிற… அதெல்லாம் அப்போ டிசைட் பண்ணிக்கலாம்… இப்போ பிரச்சனை அது இல்லை… நீ வாய்க்குள்ளேயே என்ன சொல்லிட்டு போன.. அதுதான் இப்போ எனக்கு வேணும்” மீண்டும் வந்த இடத்திற்கே வர…
“ப்ச்ச்” இதழ் சுழிக்க... அவளின் கன்னக் குழிகள் அவனை பந்தாட ஆரம்பித்திருக்க
“ஏய்… இப்டிலாம் டெம்ட் பண்ணாதடி… அம்மாவும்… தங்கச்சியும் வெளிய இருக்காங்க… ஃப்ரெண்ட் வேற வந்திருக்கான்…” ரிஷி உண்மையிலேயே படபடத்துதான் சொன்னான்… அவனின் பலவீனம் அவனுக்குத் தெரியாதான்... அதனால் அவனை அப்படி பேச வைத்திருக்க… கண்மணியின் இதழ் கர்வத்துடன் குவிந்தது… இப்போது கண்மணி அவன் அருகே…
---
அவன் அருகே வந்து… அவன் முகம் நோக்கி குனிந்தவள்… அவன் சட்டைக் காலரை பிடித்தபடி… புருவம் உயர்த்தியவளாக…
“ஏன்… அவ்ளோ பயமா… ஃப்ரெண்ட் கிட்ட… “ அவனது செவிகளில் கிசுகிசுத்தவள்… ரிஷியின் அருகே இன்னும் வர… அவன் அருகே கண்மணியின் வாசமும்… கூடவே அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூவின் மணமும்…
எல்லாம் மறந்து… அவனையுமறியாமல் அவன் கைகள் அவளிடம் தன் தேவையை வேண்டி நிற்க…
“நான் என்ன சொன்னேன்னு தெரியனுமா ரிஷிக்கண்ணா” அவள் குரலின் கிசுகிசுப்பு… அவனைப் பல லட்சம் சிதறல்களாக அவனைச் சிதறடித்து… ஒவ்வொரு சிதறலும்… பல மடங்காக பெருகி... அது மொத்தமும்… அவன் கண்களிலேயே தாபமாக வந்து பெருகியிருக்க... தாங்காமல் அவள் மார்பில் சரணடைந்தவனை அடுத்த நொடியே அவன் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து... அணைத்துக் கொண்டவள்…
“எவ்ளோ நீங்க தள்ளிப் போனாலும்…. இல்லை என் மேல கோபப்பட்டாலும்… கடைசியா… உங்க கிட்ட உங்க முன்னாடி… உங்க காலரைப் பிடிச்சுட்டு… ஏன் ரிஷிக்கண்ணா இப்படி பண்ணீங்கனுதான் நான் வந்து நிற்கப் போறேன்…” இப்போது அவள் குரலில் கிண்டல் இல்லை… அதட்டல் மிரட்டல் எதுவுமில்லை… தழுதழுத்த அவள் குரல் அவனுக்கான அவளின் நிலையை அப்பட்டமாக சொல்ல.. ரிஷியோ இன்னும் அவளிடம் ஆழமாக மூழ்க ஆரம்பிக்க
”அந்த தைரியம் தானே... இவ எங்க போகப் போறா… நம்மளத்தானே சுத்தி வருவா… இவதானே… மெதுவா சொல்லிக்கலாம்னு நினச்சுருப்பீங்க… அப்படித்தானே ரிஷிக் கண்ணா” என்றவளின் மென் குரலில் இருந்த வேதனையைப் புரிந்து கொண்டாலும்… அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை… மாறாக… அவளைப் பார்த்தவன் கண்களில் பெருமையும் கர்வமும் மட்டுமே…
அவளையேப் பார்த்தபடி இருந்தான்… வார்த்தை இல்லாமல்… நிமிடங்கள் கடந்தும்
“இந்த அன்புதான்… இது மொத்தமும் எனக்காக… என் ஒருவனுக்காக மட்டுமே… இந்தக் கண்மணியின் இந்தப் பாசம் யாருக்கும் கிடைக்காத தன் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்த வரம்… ஜீரோவாக இருந்தவனை…. ஹீரோவாக உயர்த்திக் காட்டிய அன்பு… எத்தனை பேருக்கு கிடைக்கும்… எனக்கும் கிடைத்திருக்கின்றது… அனுபவிக்கின்றேன்… அடிமை ஆகிக் கிடக்கின்றேன்” மனதோடு பேசிக் கொண்டிருந்தவனைப் புரியாமல் பார்த்தவளை… இவனோ போதையுடன் பார்க்க…
“யாரோ… ஃப்ரெண்ட் வந்துருக்கான்… நல்ல பையன் இமேஜ மெயிண்டைன் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாங்க… ஆனால் அவங்க பார்க்கிற பார்வை... அப்படி சொல்ற மாதிரி இல்லையே” இப்போது கண்மணி சீண்ட…
“ஹ்ம்ம்… நான்தான் உன் பக்கத்துல வரலையே… அந்த பூ வாசம் கூட என் மேல படாம எவ்ளோ சமத்தா இருக்கேன்… “ கிறக்கத்துடன் கிசுகிசுத்து முடிக்கவில்லை அவள் கணவன்…
நாற்காலியைச் சுற்றி… வந்து… முந்தானையைச் சொருகியபடி… இடுப்பில் கை வைத்தபடி… அவனை முறைத்தவள்… சட்டென்று அவனை இறுக அணைத்து விட்டவள்….
“இப்போ… என் வாசம்… என் பூ வாசம் எல்லாம்… உங்ககிட்ட பாஸ் பண்ணிட்டேன்… யாரா இருந்தாலும்… அந்த சோ கால்ட் ஃப்ரெண்டா இருந்தாலும்… இந்த ரிஷிகிட்ட அவன் கண்மணியை ஃபீல் பண்ணனும்… ஓகே” என்றவளின் உரிமையான கோப மிரட்டலில்… புன்னகைத்தவன்… தன்னவளைப் பார்க்க… அவள் இழுத்துச் சொருகிய முந்தானை… அவன் உளவாளியாகி… அவன் கண்களுக்கு அவள் இடையை தரிசனம் காட்டி… அவன் உரிமையை எடுத்துக் காட்ட…
திரும்பி அமர்ந்தவன்… அவளின் வெற்றிடையில் கை வைத்து இழுத்து… தன் மடியில் அமர்த்திக் கொள்ள… கண்மணியும் வாகாக அமர்ந்தபடி… அவன் கழுத்தில் தன் வளை கரங்களை சுற்றி போட
”அம்மா… இருக்காங்க… ரித்வி இருக்காங்க…” ரிஷி வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க…
“இருக்கட்டும்… யார் இருந்தால் எனக்கென்ன… என் புருசன்… என் ரிஷிக்கண்ணா” என்று சொன்னவளின்… இதழ் வரிகளில்…. இதம் பரவத் தொடங்க… விலக நினைக்கும் முன்னரே… கணவனின் இதழ் சிறையில் மாட்டிக் கொள்ள… அவனை ஏமாற்றாமல் சில வினாடிகள் அவனிடம் சிறை பட்டவள்… வேகமாக எழுந்தபடி….
“நைட் மட்டும்… எனக்கு சரியா விளக்கம் கொடுக்கலை… அப்புறம் இருக்கு… “ என்றவளிடம்…
“அதெல்லாம் சரியா உனக்கு புரியுற மாதிரி… அட்லீஸ்ட் விடியுறதுக்குள்ள விளக்கம் கொடுத்துருவேன்டி… ப்ராமிஸ்டி” என்றவனின் கள்ள வார்த்தைகளில்
“உங்கள உங்கள…” என்று சுற்றி முற்றி தேட ஆரம்பிக்க…
”எதுக்கு அம்மு வெளிய தேடற” என்றவன் எழுந்தபடி… எழுந்த வேகத்தில் அவளை இழுக்க… அதே வேகத்தில் அவன் மேல் விழ…
அவள் கன்னங்களைக் கடிப்பது போல பாவனை மட்டும் செய்தவன்…
“இந்த மாதிரியும் தண்டனை கொடுக்கலாம் அம்மு” என்றபடி… அவள் கை விரல்களோடு தன் கைவிரல்களை அழுத்த ஆரம்பிக்க…
”ஷ்ஷ்… ஆ…” மெதுவாக என்று கைகளை இழுத்துக் கொள்ள… சட்டென்று புருவம் சுருக்கியவனாக… விலகியவன்… அவளது விரலைப் பார்க்க… சிறு இளம் சிவப்புக் கீறல்… அவள் இடது கை ஆள் காட்டி விரலில்
”என்னாச்சு” ஆராய்ந்த படியே கேட்டவன்
“பேண்ட்-எய்ட் போடலையா… போட்டுக்கோ…. இரு எடுத்துட்டு வர்றேன்” என்று சொன்னபடியே… அவளை விட்டு விலகி… அதை எடுக்கப் போனவனைத் தடுத்தவள்
“வேண்டாம் ரிஷி… அத்தைக்கு ஹெல்ப் பண்ணிட்டு… அப்புறமா… போட்டுக்கறேன்… இல்லைனா… அத்தை என்னை வேலை பார்க்க விட மாட்டாங்க… ஒண்ணுமில்லை… இரத்தம் நின்றுச்சு… .. சோ பிரச்சனை இல்லை… ”
“ஷுயர்…” அவளிடம் கேட்க..
கட்டை விரலை உயர்த்திக் காட்டியவளிடம்…
”என் ஃப்ரெண்ட்… பேர் விக்கி… ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றோம்… பார்க்கப் போகலாமா மேடம்… உங்க பெர்மிஷன் வேண்டும் மேடம்” பவ்யமாக கேட்க
மெல்லிய புன்னகையோடு இவளும் தலை ஆட்ட…
“ஷூயர்… “ ராகமாகக் தலையைச் சரித்துக் கேட்டவனிடம்
சந்தோஷமாக இரண்டும் கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டியவள்…
“இப்போ நான் போகலாமா ரிஷி சார்” குறும்பாகத் தலையைச் சரித்துக் கேட்டவளின் பவ்ய பாவத்தில்… வாய் விட்டுச் சிரித்தவன்... அவளைப் போலவே… இவனும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு… அவளை மீண்டும் அணைத்தபடி…
“முடியலைனா… சொல்லிரு… இழுத்துப் விட்டுக்காத” என்று அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட… அளவாக அடங்கினாள்…
அவனோடு யுத்தமிட நினைத்தவளை முத்தமிட்டு சமாதானப்படுத்திய கணங்கள் முடிவுக்கு வந்திருக்க… அடுத்த நிமிடம் கண்மணியும் அறையை விட்டு வெளியேறியிருந்தாள்… ரிஷியும் புன்னகையோடு… குளியலறைக்குள் சென்றான்…
---
“அம்மா… மாமா வீட்ல இருக்கிற மிக்சில ஏதோ அறைக்கப் போயிருக்காங்க அண்ணி…. இந்தக் கேரட் எல்லாம் கட் பண்ணச் சொன்னாங்க…”
தன் அண்ணி… கிச்சனுக்குள் வந்த உடனேயே… அவளிடம் கத்தியைக் கொடுத்து வேலையை ஒப்படைத்த ரித்விகா… வரவேற்பறைக்கு வந்தவள்… உடை மாற்றி ஸ்லீவெலெஸ் டீ சர்ட்… ட்ராக் என வெளியே வந்த தன் அண்ணனைப் பார்த்தவள்…
“அண்ணா… அண்ணா… என்னையும் கூட்டிட்டு போங்க… இந்த லட்சுமி வர்றதுக்குள்ள” என்றவளின் மூக்கைப் பிடித்து திருகியவன்…
“எங்க அம்மா சும்மா சொல்லல… வாய் சாஸ்திதான் ஆகியிருச்சு உனக்கு” என்று தூக்கி தட்டாமலை சுற்ற ஆரம்பிக்க… வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த தன் அண்ணனின் பாசத்தில்…. அவன் முக மலர்ச்சியில்
“அண்ணா… பைசெப் ஆர்ம் எக்செர்சைஸ் பண்ணும் போது நான் தொங்குவேன்ல… இப்போ ட்ரை பண்ணவா…. நீ உன் ஆர்ம்ஸ் காட்டு… அம்மா வர்றதுக்குள்ள… ஓகேவா… இல்ல... நீ இன்னும் சின்ன பொண்ணா… அது இதுன்னு அட்வைஸ் மழை வந்துரும்… ப்ளீஸ்ண்ணா… ப்ளீஸ்ண்ணா” என்ற தன் கெஞ்சிக் கொஞ்சிய தங்கையின் வேண்டுகோளை மறுப்பானா என்ன??… அடுத்த நொடி தன் கைகளை உயர்த்த… ரித்விகா… ஆர்வமுடன் அவன் அருகே வந்து நின்றவள்.. ஒரு நொடி நின்று… தன் அண்ணியை எட்டிப் பார்த்தாள்…
”அண்ணி… நீங்களும் வர்றீங்களா…” தன் அண்ணனைப் பார்த்து… கண் சிமிட்டியபடி… தன் அண்ணியிடம் கேட்க…
ரித்விகா-ரிஷி இருவரின் உரையாடல்கள் எல்லாம் அவள் காதில் விழ புன்னகையோடு… கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்…….
அதே புன்னகையோடு ரித்விகாவின் அழைப்புக்கு... மறுத்து தலையை ஆட்டியவள்… தன் வேலையில் கவனம் வைக்க…
ரிஷி தன் மனைவியைப் பார்த்தபடியே…. ரித்விகாவிடம்
“உன் அண்ணி இதுக்கெல்லாம்… சரிப்பட்டு வரமாட்டாடா… இந்த வாய்சொல் வீராங்கனைனு கேள்விப்பட்ருக்கியா… அந்த மாதிரி… சும்மா பேர்க்குதான் ரவுடி… அவ யார்னு எனக்கு மட்டும் தான்…” என்ற போதே… அவனை நோக்கி கேரட் பறந்து வர… தலையை சரித்து… தன் மீது படாமல் சமாளித்ததோடு மட்டுமல்லாமல் அதை லாவகமாக பிடித்து.. கடிக்க ஆரம்பித்தவன்… தங்கை அறியாமல் தன் மனைவியைப் பார்த்து… குறும்பாகக் கண்சிமிட்ட… கண்மணி இப்போது கையில் வைத்திருந்த கத்தியை உயர்த்திக் காட்ட…
இருவருக்கும் இடையே இருந்த ரித்விகாவோ… கணவன் – மனைவிக்கு இடையே நடப்பதெல்லாம் அறியும் திறனில்லாமல்…
“அண்ணி… அண்ணா சொல்றது கரெக்ட்தான்… நீங்க வேஸ்ட்தான்… அவர் சொன்ன மாதிரி வாய்ச்சவடால் மட்டும் தான்… கைல இருக்கிற கத்திய தூக்கி எறியாமல் கேரட்டை தூக்கி எறியுறீங்க… ப்ச்ச் போங்க அண்ணி… உங்கள இந்த உலகம் ரவுடின்னு சொல்லுது அண்ணி… அதை நிருபியுங்க... கமான்” என்று கண்மணியைக் கலாய்க்க…
”நமக்கு வில்லன் வில்லிலாம் வெளியிலருந்து வர வேண்டாம்… என் கூடப்பிறந்த பிறப்புகளே போதும்…. “ ரிஷி, கண்மணியிடம் சொன்னபடியே…
“இன்னும் கொஞ்ச நேரம் இவளை பேச விட்டால்… உனக்கும் எனக்கும் எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா முடிச்சுருவா…” என்றவன் ரித்விகாவின் கழுத்தைச் சுற்றி கை போட்டு அவளைத் தன் தோளோடு இறுக்கியபடியே…
“அம்மா தாயே… போகலாமா… உன் அண்ணிய எப்டியோ பேசி மலை இறக்கி வச்சுருக்கேன்… உனக்கு அது பொறுக்கலயா”
“அண்ணி காப்பாத்துங்க…. உங்க புருசன் என்னைக் கொல்றான்” என ரித்விகா கதற…. அதே நேரம் இலட்சுமியும் உள்ளே வந்திருக்க....
வந்தவர்…
வளர்ந்தும் குழந்தைகளாகவே இருக்கும் தன் மக்களைப் பார்த்து பொய்யாக முறைக்க
“ஜூட் குட்டிம்மா” என்றவாறு ரிஷி… தன் தங்கையோடு… அந்த இடத்தைக் காலி செய்ய…
இலட்சுமியோ முகம் மாறியவராக… கண்மணியின் அருகில் வந்தவர்…
“என் பிள்ளை… இப்படி அவனைப் பார்த்து எத்தனையோ வருசமாச்சு கண்மணி…” அவரையுமறியாமல் கண்ணீர் முத்துக்கள் சிந்த…
“அத்தை…” என்றபடியே கண்மணி அவர் அருகில் வர…
“உங்க மாமா இருந்திருந்தார்னா… அவன் எப்படியோ இருந்திருப்பான்… புள்ளைங்க முகம் வாடக்கூடாது… அவருக்கு…“ என்று இலட்சுமி தன்னையுமறியாமல் பேசியபடி விசும்பியவர்…
“அவர் இல்லாமல் எப்படி வாழ்றேன்னு எனக்கே தெரியலை… ஆனால் உங்க மாமாக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு கண்மணி… அவர் இல்லாமல் நான் வாழ பழகனும்னு நினச்சிருப்பாரு போல…. இறக்கிறதுக்கு முன்னாடி சில மாதம்… என்னை விட்டு விலகியே இருந்த மாதிரியே ஃபீல் இருந்துச்சு… இப்போதான் அது ஏன்னு தெரியுது…”
கண்மணி ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க… ஏனோ மனக்கண்ணில் தன் தாயின் உருவம் வந்து போனது…
”தன் தாய்… தன் தந்தைக்கு அவகாசமே கொடுக்காமல்… அவரை விட்டு போனதால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன் தந்தை முற்றிலுமாக உடைந்து போய்விட்டாரோ…”
“இழப்பே கொடுமைதான்… அதிலும் இணையின் பிரிவு.. எவ்வளவு துயரம்” அப்போதெல்லாம் புரியவில்லை… இப்போது கண்மணிக்கு புரிய ஆரம்பித்திருக்க…
ஒரு பக்கம் பெற்றவர்கள், மறுபக்கம் கணவன் என இவர்களை விட்டுச் சென்றுவிட்ட தன் அன்னையின் மேல் ஏனோ கோபம் கோபமாக வந்தது கண்மணிக்கு…
அப்போது
ரிஷி மற்று விக்கியின் சிரிப்புச் சத்தம்… அதிலும் ரிஷியின் சிரிப்புச் சத்தம் தனியாக இவர்கள் இருந்த இடம் வரை கேட்க…
ரிஷியிடம் அவள் எதைப் பார்க்க விரும்பினாளோ… அந்த புன்னகை… இன்று அவனிடம்
உடனே ரிஷியைக் காண கண்மணியின் மனம் பேராவல் கொண்ட அதே நேரம்… ரிஷியின் இந்த சந்தோசம்… அதற்கு காரணமானவன் அந்த விக்கி… யோசித்த போதே… கண்மணியின் மனம் அலைப்புற ஆரம்பித்ததுதான்… ஆனாலும்… சஞ்சலப்பட்ட மனதை தனக்குள் கடிவாளம் இட்டவளாக… சமையலில் தன் முழுக் கவனத்தையும் திருப்பினாள் கண்மணி…
/* உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் எடையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
காதல்சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு காதல்சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு */
Nice update
Very nice and interesting ud sis😊👍
சூப்பர் சூப்பர் ❤️
Super very Nice..
Nice update
Super
So nice sis❤️❤️❤️ kanmani Rishi love and kanmanioda possessiveness padika semmaya iruku. Next epo lam puyal tana rendu per lifelayum pavam sis kanmani Rishi um... Parthu seinga🤗
Next epi fight ah sis? Suspense thaangala.. Seekaram potrunga nxt
Rithvi pesurathu romba Nalla erukku.kanmani rishi ku edaiyil Ulla kobam kooda kaathalida thaan erukku.super.
Nice ud sis
👌👌👌
பதிவுக்கு நன்றி தோழி அதோடு அடுத்து நடக்க போகும் சம்பவங்கள் நீங்கள் கொடுத்த குறிப்புகள் ஒரு பதைபதைப்பையும் சேர்த்து கொடுக்கிறது ஆனால் இந்த நேரம் ஆசுவாசத்தை தந்த பதிவு என்றே சொல்லலாம்
பதிவிற்கு நன்றி
Suspense is built up.. Waiting eagerly for next epi. Sad for Rishi and Kanmani.. ரிஷி விளையாட்டாக சொன்னது நிஜமாகவே போகும் போல.. ரிதன்யா விக்கியின் கண்மணி மீதான வெறுப்பே அவர்கள் பிரிய காரணமாகிறதா..Their wrong openion about Kanamni and status comparison all lead to Rishi Kanmani misunderstanding. Nicely written..
Nice
இந்த லூசுங்க என்ன வினைய இழுத்து வைக்க போகுதுங்களோ?
ச்ச இவ்ளோ sweetஆ அந்யோன்யமா இருந்தவங்கள எப்படி இந்த லூசுங்க பிரிச்சுச்சுங்களோ!
ஏனோ விக்கியயும், ரிதன்யாவையும் ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல
.
ரித்விகா சொன்ன மூன்று அடுக்கு மல்லிப் பூக்கள்…அதிலொன்று கண்மணிக்கு…லக்ஷுமி ரிஷியின் அப்பா தன்னிடமிருந்து விலகியிருந்து ்தன்னை அவரின் இழப்புக்குப் பழக்கப் படுத்தியிருந்தார் என்று சொல்லியது…wow how well you are weaving this story…but to be honest if you hadn’t revealed the main idea last month it would have been harder to put the two and two together.
ஆனாலும் ரிஷியின் காதலை விட கண்மணியின் காதல் தான் எனக்குப் பிடித்திருக்கிறது…ஏனோ ரிஷயின் காதல் love with benefits போலவும் கண்மணியினது எந்தவொரு எதிர்பார்பில்லாத தூய்மையான அன்பு போலவும் தான் எனக்குத் தோன்றுகிறது.
Can’t wait for the next epi…. Please post it soon.
beautiful epi.