top of page
Writer's picturePraveena Vijay

சந்திக்க வருவாயோ?? 29

அத்தியாயம் 29:

/*பூ வைத்தாய் பூ வைத்தாய்

நீ பூவைக்கோர் பூ வைத்தாய்

மணப்பூ வைத்துப் பூ வைத்த

பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..

நீ நீ நீ மழையில் ஆட

நான் நான் நான் நனைந்தே வாட

என் நாளத்தில் உன் ரத்தம்

நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ*/

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ராகவ்… ஹரி மற்றும் சந்தியா விசயங்களை… நிரஞ்சனா வாயிலாக…

நிரஞ்சனாவும் முதலில் தயங்கி பின் அனைத்தையும் சொல்லிவிட

”ஹ்ம்ம்ம்… அவரோட கோபமும் தப்பா தெரியலை நிரஞ்சனா… உங்க ஃப்ரெண்ட் பண்ணினது தப்புதான.. இவ பிடிச்சிருக்குனு நேரடியா சொல்லல… பட் அவளுக்கு ஓகேன்றதுனாலதான் வீட்டுல வந்து பேசச் சொல்லிருக்கா… நான் இந்த இடத்தில இருந்தாலும் இப்படித்தான் மே பி ரியாக்ட் பண்ணிருப்பேன்” என்றான் ராகவ்…. நிரஞ்சனா ஒப்பித்தவற்றை முழுமையாக கேட்டபின் புரிந்தவனாக…

நிரஞ்சனா அவனைக் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்க்க…

இவனோ சிறு புன்னகையுடன்….

“உங்க ஃப்ரெண்ட் இருக்காளே… அவளால ரொம்பப் பேர் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கும் போல… நான் கூட எனக்கு மட்டும்தான்னு நெனச்சுட்டு இருந்திருக்கேன்.. ” என்றவன்… சில வினாடி அமைதிக்குப் பின்…

“அனேகமா... என் கதை தெரிஞ்சுருக்குமே உங்களுக்கு.. ” அன்றைய ஞாபகங்களில் திளைத்தவனின் முகம் முழுவதும் புன்னகை.. புன்னகை… மட்டுமே…. தன்னவளின் அருமை பெருமையை நினைத்து…

நிரஞ்சனாவின் முகத்திலும் அவன் புன்னகை தொற்ற… அதில் இருந்தே ராகவ்வுக்கும் புரிந்தது… தன் விசயம் அனைத்தும் நிரஞ்சனாவுக்கும் தெரிந்திருக்கிறது என்று…

நிரஞ்சனா இப்போது… ராகவ்விடம்

“ரொம்ப ஃபீல் பண்ணினா சந்தியா.. நீங்க அன்னைக்கு வரலைனு” நிரஞ்சனாவும் தன் தோழியின் வருங்காலக் கணவன் என்ற உரிமையில் ராகவ்வோடு இயல்பாக பேசத் தொடங்கியிருந்தாள்…

“நானும் ட்ரை பண்ணினேன் நிரஞ்சனா… ஆனால் முடியலை… ஆனால் வேண்டும் என்றே பண்ணலை “ என்றபடி நிச்சயதார்த்த தினப் பேச்சைத் தவிர்த்தவன்… நிரஞ்சனாவிடம் பேசுவதை தவிர்த்து விட்டு… சந்தியாவைக் கவனிக்க ஆரம்பித்தான்..

சந்தியா ஹரி பேச்சுவார்த்தை எவ்வளவு தூரம் போகும்… சந்தியா எந்த அளவிற்கு அவனோடு தாக்குப் பிடிப்பாள் என்ற கேள்வியோடு… அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்

-----

அதே நேரம் சந்தியா… ஹரியிடம்

"இதுக்கு மேல உங்களுக்கு எனக்கும் தனியா பேசற அளவுக்கு ஒண்ணும் இல்லைனு நான் நினைக்கிறேன்… இவ்வளவு தூரம் இன்னைக்கு வந்து உங்களுக்கு விளக்கியிருக்கேன் என்றால்… நீங்க எங்க அப்பாகிட்ட பட்ட அவமானம் மட்டும் இல்லை… அன்னைக்கு நான் சொன்ன வார்த்தையால… அதாவது எங்க வீட்ல வந்து பேசுங்கன்னு சொன்ன அந்த வார்த்தை... அதுக்காக மட்டுமே…. நீங்க புரிஞ்சுக்குவீங்கனு நம்பறேன் ஹரி….. உங்க லைஃப லவ்ன்ற பேர்ல ஏமாத்திக்கிற முட்டாள் நீங்க இல்லைனு எனக்குத் தெரியும்... "

நிதானமாக… தன் பக்க விளக்கங்களை எல்லாம் சொல்லி அவனுக்கு புரியவைத்தவள்… ஹரியின் பதிலை எதிர்பார்க்க…

அவனோ… சந்தியா சொன்னதை எல்லாம் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்….

"சந்தியா நான் உன்னை லவ் பண்றேன்… லவ் பண்ணிட்டு இருக்கேனு உனக்குத் தெரியும்... உனக்கும் என் மேல லவ் இருந்துச்சு அது எனக்கும் தெரியும்” என்ற போதே சந்தியா ஏதோ சொல்ல ஆரம்பிக்கப் போக … ஹரியோ அவளைப் பேசவிடவில்லை…

“உன்னோட என்கேஜ்மெண்ட்டுக்கு வந்த ஃப்ரெண்ட்ஸ் கூட சொன்னாங்க... அன்னைக்கு நீ சந்தோசமா இல்லைனு ..... எனக்குத் தெரியும்...... . உன் அப்பாவுக்காகத்தான் இந்த மேரேஜுக்கு சம்மதம் சொல்லிருப்பேன்னு எனக்கு நல்லா தெரியும்... நீ யாருக்காகவும் பயப்படாத.... உனக்காக நான் இருக்கேன்… உன் அடி மனசுல நான் தான் இருக்கேன் சந்தியா…. அது எனக்கு எனக்கு மட்டுமே தெரியும் " என்றவன்… பேசிக் கொண்டிருக்கும் போதே... மெஹந்தி பாதி அழிந்திருந்த அவள் மென் கரங்களை பற்ற...

சட்டென்று தன் கரங்களை அவனிடமிருந்து பறிக்க நினைக்க..... அவளால் முடியாமல் போக… முகம் தானாக அஷ்ட கோணலாக… அனிச்சையாக நிரஞ்சனா புறம் திரும்ப… அங்கு ராகவ் இருக்க… அவனைப் பார்த்தவள் மனதில்… தன்னவன் அருகில் இருக்கின்றான் என்ற நிம்மதி சட்டென்று விரவியது……

சந்தியாவின் மனதில் பாதுகாப்பு உணர்வு வர... அது தந்த வேகத்தில்…. தைரியமும் வந்திருந்தது...


"ஹரி... திஸ் இஸ் த லிமிட்… கைய விடுங்க.....இல்லை … சத்தியமா அறஞ்சுருவேன்.... உங்க மேல எனக்கு எப்போதும் காதல் இல்லை... அதைப் புரிஞ்சுக்கங்க… என் வாழ்க்கையிலேயே என் அப்பா பண்ணின உருப்படியான காரியம்… ஒண்ணு. உங்களை வேண்டாம்னு சொன்னது… இன்னொன்னு எனக்கு ரகுவை ஃபிக்ஸ் பண்ணினது....... " என்று ஆக்ரோசமும் கோபமுமாக சொன்னவளால் இப்போதும் அவனிடமிருந்த கைகளை விடுவிக்க முடியாமல் போக…. அங்கிருந்த அத்தனை பேரும் இவர்களையே பார்ப்பது போல ஓர் உணர்வு… அவமானத்தில் அவள் குரலும் கமறியது

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல்… அவள் சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் ஹரியோ விடாக் கொண்டனாக இருந்தான்...

“முடியாது சந்தியா… உன்னை என்னால விட முடியாது… உனக்கு உன் அப்பாதான் பிரச்சனைனு தெரியும்…. நீ கவலைப்படாத... உன் அப்பாகிட்ட நான் வந்து பொண்ணு கேட்கிறேன்… அந்தஸ்துதான பிரச்சனைனு சொன்னார அப்போ… ஒரு கம்பெனியோட முதலாளி நான் இப்போ… இனி அவர் என்னை வேண்டாம்னு சொல்ல ஒரு காரணமும் இல்லையே… இதுல இடையில வந்த ரகு… அவன் இவன்லாம்னு நீ ஏன் கன்ஃப்யூஸ் பண்ணிக்கிற.. நான் பார்த்துக்கிறேன்.. “ என்றவன் இப்போதும் இன்னும் இறுக்கமாக கைகளை பற்றி இருக்க...

“ஹலோ பாஸ்” என்று தன் கைகளை நீட்டியபடி ராகவ் ஹரியின் முன் வந்து நின்றான்… புன்னகை முகமாக

முன்பின் அறிமுகம் இல்லாத ராகவ்வைப் பார்த்து ஹரி… புருவம் சுருக்க..

”கையைக் கொடுங்க பாஸ்…எவ்ளோ நேரமா நீட்டிட்டு இருக்கிறது… ” என்று சந்தியாவைப் பற்றி இருந்த கைகளில் அவள் கரங்களை தானே பிரித்து விடுவித்து விட்டு… தன் கரங்களை ஹரியிடம் கொடுத்து கை குலுக்க.. ஹரியோ என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்தான்…

அதிலும் உரிமையோடு சந்தியாவின் கரங்களை பிடித்து அவன் விடுவித்த பாங்கு… குழப்பத்தை ஏற்படுத்த…. இன்னும் புரியாத பாவனையோடு அவனைப் பார்த்தவன்… பின் சந்தியாவையும் பார்க்க… அவள் கண்களிலோ… இந்த புதியவனைப் பார்த்து அந்நியத்தனம் தெரியவில்லை... மாறாக.. இன்னும் கோபம் கூடியிருந்தது போல் இருந்தது… ஆனால் உரித்தாவனிடத்தில் உரிமையோடு கோபம் கொள்ளும் பாவமே இருக்க..

”இவன் யாராக இருக்கும்…” இப்போது சந்தியாவிடமிருந்து ராகவ்விற்கு ... ஹாரியின் பார்வை மாற

ஹரியின் குழப்பமான பாவம் ராகவ்வுக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது…. இருந்தும் அதை அடக்கிக் கொண்டவனாக..

”ஆம் ரகு… ஐ மீன் அந்த இடையில வந்த ரகு…” என்று சந்தியாவின் அருகில் அவளை உரசினார் போல அமர்ந்தவன்.. சந்தியாவைப் பார்த்து புன்னகைக்க… சந்தியா ஹரியை பார்த்து முறைத்த முறைப்பை விட… இவனைப் பார்த்து முறைத்த பார்வையின் வீரியம் தான் அதிகமாக இருக்க… அதைக் கண்டும்.. கண்டுகொள்ளாதது போல்... ஹரியிடம் பேச ஆரம்பித்தான் ராகவ்…

“சின்ன பொண்ணு… அது ஏதோ ஒரு வார்த்தை சொல்லுச்சுனு அதையே பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்கீங்களே பாஸ்…. போனாப் போகுது மன்னிச்சு விடுங்க ஜி…” என்ற போதே… ஹரிக்கும் புரிந்தது… இவன் தான் சந்தியாவுக்கு நிச்சயித்திற்கும் மாப்பிள்ளை என்று…. கோபம் பற்றிக் கொண்டு வந்தது… அதிலும் உரிமையோடு அவன் சந்தியா அருகில் அமர்ந்திருந்த விதம் பார்த்து சொல்லவே வேண்டாம் ஹரியின் மனநிலையை…

ஆனாலும்.. அதை . ராகவ்விடம் காட்டாமல்…

“சந்தியா… நான் உன்கிட்டதான் பேச வந்தேன்… ஆனால் நீ இவருக்கு போன் போட்டு வரச் சொல்லி இருக்க…” என்று அவள் தன் உரிமை என்பது போல… கோபம் கொள்ள…

இடையில் வந்தான் ராகவ்…

”ஹலோ ஹலோ ஹரி சார்… என்கிட்ட பேசுங்க… அங்க ஏன் பாயறீங்க… சின்னப் பொண்ணு பயந்துடப் போறா… ” என்ற போதே சந்தியா இவனை முறைக்க… அதை எல்லாம் ராகவ் கண்டு கொண்டால் தானே… பஸ்பம் ஆக..

அவனோ… ஹரியிடம் மட்டுமே கருமமே கண்ணாகப் பேசிக் கொண்டிருந்தான்

“அண்ட்.. உங்க கிட்ட பேசி உங்க கோபத்தை குறைச்சு… தென் ஃப்ரெண்ட்ஷிப்பாகி… நீங்களும்… இவளப் பார்த்து எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்ற வரை போராடுறதுக்கு... எங்களுக்கும் டைம் இல்லை… பாஸ்… ஏன்னா எங்க ரெண்டு பேருக்கு இடையிலேயே பல விசயங்கள் பேசித் தீர்க்க வேண்டிய நிலைமையில இருக்கோம்… சோ… புரிஞ்சுக்கங்க... சீக்கிரம் இன்விட்டேஷன் வரும்.. முடிந்தால் வாங்க.. இல்லை. உங்க இஷ்டம்…” என்று தோளைக் குலுக்கியவன்….

அதற்கு மேலும் அங்கு உட்காராமல் …

”இஃப் யூ டோண்ட் மைண்ட்… நாங்க இப்போ கிளம்புறோம்.. நிறைய வேலை இருக்கு” எழுந்தவன்…

சந்தியா… வா போகலாம்…” என்று சந்தியாவை கைப்பற்றி இழுக்க… ஹரியின் முன் இவன் வார்த்தைகளை மறுக்கவும் முடியாமலும்… அதே நேரம் ராகவ்வோடு சமாதானம் ஆகவும் முடியாமலும் மனதுக்குள் மட்டுமே பொருமும் நிலையில் இருந்த சந்தியா…ராகவ் இழுத்த இழுவைக்கு வேறு வழியின்றி.. அவனோடு கிளம்ப…

ஹரியோ ஒன்றும் செய்ய இயலாத பாவனையில் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்… ராகவ் கோபப்பட்டிருந்தாலாவது இவனும் கோபப்பட்டிருப்பான்.. ஆனால் தனக்கு பேசவே வாய்ப்பளிக்காமல்… ராகவ் நாசுக்காக இவனை கத்தறித்த விதம்… இவனை செயலாற்றவே விடவில்லை…

சந்தியாவின் வாழ்க்கையில் தனக்கான பக்கங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும்…. அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்க ஆரம்பித்தவன்… மேஜை மேல் தன் புஜங்களை குத்தியவனுக்கு...அது மட்டுமே இப்போதைக்கு முடிய… தன்னோடு வர அவ்வளவு யோசித்தவள்… அவன் வந்து கூப்பிட்ட உடன் மறு வார்த்தை இன்றி அவனோடு கிளம்பிய விதம்… அதிலும் ராகவ் அதிகம் இவனோடு பேசி நேரத்தை வீணடிக்காமல்… தன் உரிமையைக் காட்டிய விதம்… அவனுக்கும் அவளுக்கும் உள்ள இனி வரும் பந்தத்தின் உன்னதத்தை ஹரிக்கு புரிய வைக்க.. அது அவனது ஆறாம் அறிவை உபயோகிக்க வைத்தது…அவன் அறிவுள்ளவன் என்பதை அவனே சொல்லிக் கொள்வானே… யோசிக்க ஆரம்பித்தான்

---

ராகவ் பின்னே வந்த சந்தியாவுக்கு தன் கைகளின் மேல்தான் கவனம் இருக்க.... ஆம் அவளது வளை கரங்கள் இன்னும் ராகவ்வின் கரங்களிடமிருந்து விடைபெறவில்லை….

எரிச்சலாக ராகவைப் பார்க்க... அவனோ போனில் யாரிடமோ பேசியபடியே வந்து கொண்டிருக்க..... கைகளை விட மறந்து விட்டானா.... இல்லை தன் கையைப் பிடித்த நினைவே இல்லாமல் வருகிறானா குழம்பிய மன நிலையில்… ராகவ்வ்வோடு அந்த ரெஸ்டாரெண்டை விட்டு வெளியில் வந்தவளின் ஒரு கையில் கிளட்ஜ் பேகும்… இன்னொரு கையில் மொபைலும் இருக்க… அப்படியே எழுந்து வந்திருந்ததால் இல்லையில்லை ராகவ் இழுத்து வந்திருந்ததால்… புடவை நழுங்கியது போல் அவள் உள் உணர்வு எச்சரிக்க… சரி செய்ய கைகளை எடுக்க முடியாமல் திணறியவள்…

”கையை விடு ரகு… ” என்று சொல்ல… அவள் குரல் மாறுபாட்டில்… இவனும் கைகளை இலகுவாக்க… அவள் பட்டென்று தன் கையை அவனிடமிருந்து விடுவித்தபடி…. போனை கைப்பையில் வைத்து விட்டு…. தன் புடவையை சரி செய்தபடி வர… நிரஞ்சனா இவர்கள் அருகில் வந்திருந்தாள் இப்போது…

நிரஞ்சனா சந்தியாவைப் பார்க்க… கொஞ்சம் சூடாகத்தான் தெரிந்தாள் சந்தியா…. கண்களில் கோபம் மட்டுமே இருந்தது…

தன்னையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனாவிடம்..

“வா ரஞ்சி கிளம்பலாம்… “ என்று ராகவ் என்ற ஒருவன் இருப்பதையே இல்லாதது போல பாவித்து அவனை அலட்ச்சியப்படுத்தியபடி சந்தியா பேச…

“நிரஞ்சனா… அவ இப்போ ஆஃபிஸ் வர மாட்டா… என் கூட நான் கூட்டிட்டு போறேன்…” என்றவன் வார்த்தைகள் நிரஞ்சனாவுக்கு இருந்தாலும்… பார்வைகள் சந்தியாவிடம் இருக்க..

அதைக் கேட்ட சந்தியா நன்றாகவே அவனை முறைத்து வைக்க… இவனோ.. சளைக்காமல் இன்னும் முறைத்தான்…

“ரஞ்சி… அம்மா தனியா எங்கேயும் மேரேஜுக்கு முன்னாடி போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” நிரஞ்சனாவிடம் சொல்லி முடிக்க வில்லை…

இவன் சீறினான்… நேரடியாகவே சந்தியாவிடம்

“என் கூடயுமா” ..

“முக்கியமா… உங்க கூடத்தான் போதுமா… வழிய விடறீங்களா.. வா ரஞ்சி” என்று அவனைக் கடந்து முன்னேறியவளின் கைகளை சட்டென்று பிடித்து… இழுத்து தன் அருகில் கொண்டு வந்தவன் முகத்தில் சற்று முன் இருந்த நிதானம் எல்லாம் இல்லை….

”அப்படி அம்மா பேச்சை கேட்கிறவ..” என்ற போதே இருக்கும் இடம் உணர்ந்து… வார்த்தைகளை அடக்கியவன்…

”அம்மா பேச்சை கேட்கிற பொண்ணு எதுக்கு மேரேஜ் பண்ற” என்றான் ஆத்திரமாக…

தன்னை விட சந்தியாவுக்கு அவள் அன்னைதான் பிடிக்கின்றது என்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை… தன்னவளை. காதலிப்பதாக இன்னொருவன் சொன்ன போது வராத கோபம் ஏனோ சந்தியாவின் தாய்ப் பாசம் கோபத்தை வரவழைத்திருக்க..

அவனது கோபமோ இல்லை ஆத்திரமோ இவளை இம்மியளவும் அசைக்கவில்லை… கோபப்பட வேண்டியவள் இவள்… மாறாக இவன் கோபப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதில் சந்தியாவும் எகிறிக் கொண்டிருந்தாள்…

“ஹான்…. நான் அப்படித்தான்… மேரேஜ் கூட எங்க அம்மா சொன்னதுனாலதான்… அவங்க வார்த்தைக்காகத்தான் பண்றேன் போதுமா” இவளும் கோபத்தை கட்டுப்படுத்தாமல் பேசிக் கொண்டிருக்க… இடையில் நிரஞ்சனாதான் விழி பிதுங்கிக் கொண்டிருந்தாள்…

தனித்தனியாக இருவரிடமும் பேசி இருக்கின்றாள்… இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடித்திருக்கின்றது என்பதை உணர்ந்திருந்தவளுக்கு… இருவரும் இப்போது பேசிக் கொண்டிருப்பதை பார்த்த போது…. ஒன்றும் புரிய வில்லை… இடையில் தான் என்ன சொல்வது… இல்லை என்ன செய்வது என்றறியாது பார்த்துக் கொண்டிருக்க…

ராகவ் இப்போது சந்தியாவிடம்… ஆணையிடும் தொணியில்...

”இப்போ… நீ என்கூட வரணும்… என்ன … எங்கேனு ஒரு கேள்வி கூட கேட்காமல்” நிறுத்தி நிதனமாகச் சொல்ல… சந்தியா அவனின் அதிகாரத்தில் துணுக்குற்றவளாக அவனை எதிர்த்துப் பேச முயல…

அப்போது நிரஞ்சனா…

“போயிட்டு வா சந்தியா…” என்று ராகவ்வுக்கு ஆதரவாக நிரஞ்சனா சொல்ல…

“உனக்குத் தெரியாது நிரஞ்சனா… அன்னைக்கு கார்ல போய் ஆக்ஸிடெண்ட் ஆகி… ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தப்போ… வசந்திகிட்ட நான் எவ்வளவு திட்டு வாங்கினேன் தெரியுமா… அம்மா என்னைத் திட்டவே மாட்டாங்க… இவன்னாலத்தான் திட்டு வாங்கினேன்…. இனிமே இப்படிலாம் தனியா அதுவும் ரகு கூட போக மாட்டேன்னு... அவங்க கிட்ட ப்ராமிஸ் பண்ணிருக்கேன்…” என்ற போதே ராகவ்வுக்கு சந்தியாவின் அவளது அன்னை புராணம் வெறி ஏற்றிக் கொண்டிருக்க…

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்… இப்போது சந்தியா ராகவ்விடமிருந்து வேகமாக நகர்ந்து.. நிரஞ்சனாவின் அருகில் வந்தவள் … அவள் காதில் குனிந்து கிசுகிசுத்தாள்…

“நான் இன்னைக்கு… பீரியட்ஸ் வேற நிரஞ்சனா… ஃபீலிங் அன்கம்பர்ட்டபிள்” தன் தோழியிடம் தன் நிலைமையை விளக்க…

சற்று தள்ளி நின்ற ராகவ்வின் காதுகளில் விழாமல்தான் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்..

இங்கோ சந்தியாவின் அலட்சியத்தில்…. ராகவோ முற்றிலுமாக பொறுமை இழந்தவனாக மாற… அதற்கு மேல் பொறுக்காமல்… அதிரடியாக… சந்தியாவின் கைப்பையை பறித்து நிரஞ்சனாவிடம் கொடுத்தவன்…

“சந்தியா இன்னைக்கு ஆஃபிஸ் வர மாட்டா… லீவ் சொல்லிருங்க… அப்புறம் அவங்க அம்மா பேசினாங்கன்னா…. அவ 5 ஹவர் மீட்டிங்க்ல இருக்கா… இப்போதைக்கு உங்ககிட்ட பேசமாட்டா.. மீட்டிங் முடிஞ்சு பேசுவான்னு சொல்லிருங்க….” என்று சொல்லியபடி… நிரஞ்சனாவின் பதிலைக் கூட கேட்க்காமல்… நிற்க்காமல்... சந்தியாவை விடுவென்று அழைத்துக் கொண்டு முன்னே செல்ல…

அவன் பற்றி இருந்த கரங்களின் இறுக்கம் அவனது கோபத்தை இவளுக்கு இயம்ப… அவனிடம் மறுத்து பேச முடியாமல்… பரிதவித்தவள்…. ஓரளவு மனதை தயார்படுத்த ஆயத்தமானாள்… அவனோடு செல்ல…

அப்போது…. தன் போன் நிரஞ்சனாவிடம் இருப்பதை உணர்ந்தவளாக…

“என் போன்… அவகிட்ட இருக்கு ரகு”

“அது அங்கேயே இருக்கட்டும்… இப்போதைக்கு நமக்கு அது டிஸ்டர்பென்ஸ்தான்” என்று அசால்ட்டாக சொன்னவன்… நில்லாமல் போய்க் கொண்டிருக்க… நிரஞ்சனாவுக்கும் இவர்களுக்கும் இருந்த இடைவெளி இன்னும் தூரமாக…

இவளுக்கு… வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்… இருந்தும்.. அதை அப்போதைக்கு காட்டிக் கொள்ளாமல்… நிரஞ்சனாவிடம் திரும்பி…

“ரஞ்சி… என்னை மாதிரி என் குரல்ல பேசி அம்மாவை ஏமாத்தாத… நான் மீட்டிங் போயிருக்கேன்னு மட்டும் சொல்லு…” என்றாள் அங்கிருந்தபடியே … சத்தமாக நிரஞ்சனாவின் காதில் விழுமாறு…

ராகவ் மேல் கோபம் இருப்பதாக தன் தோழி காட்டிக் கொண்டிருந்தாலும்…. அவளது மனம் ராகவ்வை தேடுகிறது…. என்று தோழியாக நிரஞ்சனா உணர… அதில் மென் புன்னகை வர… அதேநேரம் சிவாவின் மெஸேஜும் வந்திருந்தது…

“இன்று இரவு டெல்லி கிளம்புவதாகவும்... கிளம்புவதற்கு முன் இவளை சந்திக்க வேண்டும் என்று… வர வேண்டிய இடத்தின் முகவரியையும் தாங்கி வந்திருந்தது” அந்த குறுந்தகவல்

----

யாரோ ஒருவனுடன் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள்… தான் கூப்பிடும் போது மட்டும் வர மாட்டேன் என்று சொன்னது ராகவனின் சுயமரியாதையை சுட்டது… அதிலும் அவள் தாய் என்ன சொன்னாலும் செய்வாளா…. நாளை தான் வேண்டாம் என்று இன்னொருவனை கைகாட்டினால் சரி என்று தலை ஆட்டிக் கொண்டு போய் விடுவாளா…. மனம் எங்கும் சீற்ற அலைகள்… அந்த சீற்றத்துடனே பைக் நிறுத்தும் இடத்திற்க்கு வந்தவன்...

சந்தியாவின் கைகளை விடாமாலேயே … கீயை எடுத்தபடியே

"ஹ்ம்ம் .... ஏறு" என்றான் அருகில் இருந்த பைக்கை காண்பித்து..

அவனது பைக்கோ இந்தியாவின் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களின் வரிசையில் வரும் ரகமாக இருக்க…. அதன் பிராண்ட் பற்றியெல்லாம் அவளுக்கு ஆச்சரியமில்லை…. அது ஆட வைக்கவுமில்லை... அதன் பின் இருக்கைதான் அவளை ஆட வைத்தது….

"என்னது இந்த பைக்லயா" என்றவள் சொன்ன விதத்தில் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை பார்த்தார்ப்போல் என்ற பழமொழி அட்சரம் பிசகாமல் அவளுக்கு பொருந்தும்......இருந்தும் தன்னைச் சமாளித்தவளாக...

"ஹலோ நான் நார்மலா சாதாரண பைக்க்குக்கே காத தூரம் ஓடுறவ..... இந்த பைக்குகெல்லாம்... அமெரிக்காவுக்கே ஃப்ளைட் பிடிச்சு போயிருவேன்..." சொன்னவள் வியப்பில் விழிகளை விரிக்காமல்... அலட்சியமாகச் சொல்ல

அவளைப் பார்த்து.... "அப்படியா....." என்றான் அவள் விழிகளை தன் பார்வையால் துளைத்தபடி...

"ப்ச்ச்... ரகு.... கொஞ்சம் கூட மேட்ச் ஆகாது நான் இதுல வந்தா... என்னைப் பாருங்க.. நான் எப்படி வந்துருக்கேன்" என்று சொன்னவளை அடுத்த வார்த்தை பேச முடியாமல் தடுத்து விட்டிருந்தன அவனின் துப்பறியும் பார்வை....

"ஹ்ம்ம் நல்ல்ல்ல்ல்ல்லா பார்த்துட்டேன்.. எனக்கு எல்லாமே மேட்ச் ஆகிற மாதிரிதான் தெரியுது.. " குறும்பும் நக்கலுமாக… சொன்னவன்… பைக்கின் மீது சாய்ந்தபடி மீண்டும் ஒருமுறை மேலிருந்து கீழிருந்து நிதானமாக பார்க்க… பார்த்து முறைத்தவள்... தன்னையும் திட்டிக் கொள்ளத் தவறவில்லை..

"சந்தியா செல்லம்… ஏன்மா நீ இப்படி சொதப்புற... பாருன்னா.... உன்னை நல்லா பார்த்த்துதானே வைப்பான்......... சொன்னது நீதானே... அப்புறம் என்ன முறைப்பு வேற..." என்று தனக்குள் முனங்கியவளாக.......

"நான் என்ன சொல்ல வந்தேனா... இந்த புடவைக்கும் இந்த பைக்கும்... சத்தியமா... செம காம்பினேசனா இருக்கும்..... " என்றவள் தான் அந்த பைக்கில் பயணிக்கும் விதத்தையும் கற்பனை செய்து பார்க்க... அவளுக்கே அந்த காட்சி வடிவம் ஒரு புறம் சிரிப்பாகவும்... மறுபுறம்... கேவலமாகவும் இருக்க... தன் அருகில் நின்ற அவனைப் பார்க்க..... கம்பீரம் ஒரு புறம்.... நவின இளைஞனாக ஸ்டைல் ஒரு புறம் என இன்றைய கன்னிகைகளின் கனவு நாயகனுக்கான அத்தனை தகுதியையும் மொத்தமாக குத்தகை எடுத்து நின்றவனை பார்த்தவள்

"அட்லீஸ்ட் சல்வாராவாது போட்டு வந்திருக்கலாம்... ஹைய்யோ இவன் ஏன் இன்னைக்கு வந்தான்" என்று தனக்குள் நொந்து கொண்டிருக்க.... அவனோ பைக்கில் ஏறி அமர்ந்தபடி...

"காம்பினேசன் பற்றி எல்லாம் பேசுற....." என்று சொன்னபடி ஹெல்மெட்டை மாட்ட… சொன்னவனின் குரலில் என்ன இருந்தது... இளக்காரமா... என்று யோசித்தவளுக்கு... அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவன் அனுமதி கொடுக்கவில்லை...

"ஏறு... ஏறு... ஏற்கனவே கார்ல போன ராசி செமயா ஒர்க் அவுட் ஆகிருச்சு.... ஃபார் அ சேஞ்ச் இப்போ பைக்... இது என்ன மாதிரி ஒர்க் அவுட் ஆகுதுனு பார்ப்போம் " என்றவன் குரலில் என்ன இருந்தது....

”அது அது... குறும்பா… நக்கலா” என்று யோசித்தவள் சட்டென கண்களைப் பார்த்து… அங்கே குறும்பைத் தேட பதிலாக கூலர் இருக்க...

குழப்பத்தோடே ஏறி உட்கார முடிவெடுத்தாள்... காரிலாவது ப்ரேக் இல்லாமல் ஆக்சிடெண்ட் ஆனது... இந்த பைக்கில் இடமே இல்லை.... அதிலும் ஒருபுறமாகத்தான் அமர முடியும்...... சத்தியமாக இந்த பைக்கைக் கண்டிப்பிடித்தவன் இப்போது அந்தக் காட்சியைப் பார்த்தால் செத்தே போயிருந்திருப்பான்....

சந்தியாவுக்கு சும்மாவே பைக் என்றால் பயம். ஒரே முறை அவள் அப்பாவுடன் பயணித்து... அதில் ஒழுங்காக உட்காரத் தெரியாமல்... கீழே விழுந்து..... அடிபட்டதில் இருந்து... பைக் என்றாலே இவளுக்கு அவ்வளவு பிரியம்.... இன்னொரு முறை சந்தோஷுடன் சென்ற போதும் அதே போல்... விபத்து பெரிதாக இல்லை என்றாலும் .... அடிபட்டதில் அவ்வளவுதான்..... மொத்தமாக பைக் இருக்கும் திசைக்கே கும்பிடு போட்டு விட்டாள். பைக்கில் உட்காரவே தெரியாதவளுக்கு....... ஓட்ட மட்டும் தைரியம் இருக்குமா என்ன.... அப்படிப்பட்டவளை ரகு பின்னே ஏறி உட்காரச் சொல்ல... இப்படியே அலுவலகத்திற்குள் ஓடி விடலாமா என்று கூட நினைத்தாள்...

சந்தியா இன்னும் அமராததை உணர்ந்தவன்… தன்னுடன் வரப் பிடிக்காமல் தான் நிற்கிறாள் என்ற கோபத்துடன் திரும்பிப் பார்க்க... அவளோ… தேமே என்று பைக்கைப் பார்த்தபடி நிற்க.. இப்போது புரிந்து …. கிண்டலாகச் சிரித்தான்… அவள் நிலைமை புரிந்ததுதான் என்றாலும்..

"என்ன மேடம் இங்கயே ஜெர்க் ஆகிட்டீங்க போல.... என் கூட வாழ்நாள் முழுதும் பயணிக்கனுமே..." என்றவனின் இதழ் கடையோரம் இகழ் சிரிப்பு.....

அவன் சொன்ன விதமும்.... அதில் இருந்த இகழ்ச்சியும் சுருக்கென்று தைக்க.. "தன்னை மட்டம் தட்டுகிறானோ”... என்ற எண்ணம் மட்டுமே அவளுக்குள்… மனம் ஏனோ பாரமாகி இருக்க…. அதற்கு மேல் பேச வில்லை அவள்… மெதுவாக ஏறி அமர்ந்தவள்... கால் வைக்கும் இடம் எங்கு என்று தேடிப் பார்க்க.... கண்ணில் பட... இல்லையில்லை காலில் படவே இல்லை ... அவனாவது உதவுவான் என்று பார்க்க.... அவனோ பின்னே ஒரு ஜீவன் இருக்கின்றது என்ற எண்ணம் துளியும் இன்றி எடுத்த எடுப்பிலேயே அதி வேகமாக எடுக்க....

எதிர்பாராத அவன் வேகத்தில்…. அதே வேகத்தோடு மோதியவள் பயத்தில்… வேறு வழியின்றி அவன் இடுப்பைப் பற்றி கண்களை மூடியவளுக்கு ரோலர் ஹோஸ்டர் பயண அனுபவம் தான்... எத்தனை கத்தினாலும்... நிறுத்தும் வரையில் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருக்குமே அந்த நிலைதான் சந்தியாவுக்கு ’

"ரகு ப்ளீஸ் பயமாருக்கு... கொஞ்சம் ஸ்லோ..." என்று கெஞ்சியவளிடம்

"சென்னை ட்ராஃபிக்ல நான் ஸ்லோவாத்தான் இருக்கேன் சந்தியா" என்று சிரித்தவனை முறைக்க முடியாமல் அவன் மீதே மீண்டும் மீண்டும் ஒன்றினாள் சந்தியா...

எப்படியோ சமாளித்தபடி சென்று கொண்டிருத்தவளுக்கு அடுத்த கட்ட சோதனையை வருண பகவான் வைக்க..... முற்றிலும் திணறியிருந்தாள் சந்தியா....

இலேசாக தூவனம் போட ஆரம்பிக்க… சந்தியாவால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை… கண்டிப்பாக விழுந்து விடுவோம் என்று தோன்ற....

"ரகு.... என்னால முடியல... ப்ளீஸ் ஸ்டாப் பண்ணு ..... " என்று கத்த ஆரம்பிக்க.....

“இங்க எங்க நிற்ப்பது... கொஞ்ச நேரம் அட்ஜ்ஸ்ட் பண்ணு” என்றவன் கொஞ்சம் மெதுவாக பயணிக்க ஆரம்பிக்க.....

"பரவாயில்ல... நனையிறதுக்கு… எங்கேயாவது நிற்கலாம் ரகு.." என்றவள் வார்த்தைகளை மதிக்காமல்

"நீ என்னை நல்லா பிடிச்சுக்கோ… அதை மட்டும் ஒழுங்கா பண்ணு" என்றபடி தன் பாட்டுக்கு போக...

நிச்சயத்திற்கு வராத அவன் மீது கோபம் இன்னும் இருக்க… அதைப்பற்றி பேசியாக வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அவனோடு வந்தாள்… ஆனால் அவனோ வெகுதூரமாக அழைத்து வந்து கொண்டிருந்தான்…. ராகவ்வோடு வருவதில் அவளுக்கு பயமோ…. இல்லை வேறு எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லை…

இந்த பைக் பயணம் மட்டுமே அவளுக்கு பிடிக்காமல்… தவிக்க ஆரம்பிக்க… இப்போது கூடுதலாக தூறலும் வேறு சேர்ந்து கொள்ள…

மழையில் நனைவது மற்ற நேரத்தில் எப்படி இருந்திருக்குமோ … தெரியவில்லை… ஆனால் இப்போதோ… அவளின் இந்த மாதவிடாய் நேரம் வேறு இம்சைப்படுத்த… அவஸ்தையின் உச்சகட்டத்தை அனுபவிக்க…

"ரகு இப்போ வண்டிய நீ ஸ்டாப் பண்ணலேன்னா... நான் வண்டிலருந்து குதிச்சுருவேன்" என்று மிரட்டும் தோரணையோடு சொன்னதோடு மட்டும் அல்லாமல்.... அவன் மேல் சாய்ந்திருந்த விதத்தில் இருந்து விலக ஆரம்பிக்க...

அதே நேரம் ராகவும் வண்டியை நிறுத்தி இருந்தான்....

”இறங்கு” என்று கடுமையாகச் சொன்னபடி.. அருகில் இருந்த கடையில் நிறுத்தியவன். இறங்கி... அந்த கடைக்காரரோடு ஏதோ கேட்டுக் கொண்டிருக்க…

சற்று தள்ளி இலேசாக நனைந்த ஈரப் புடவையோடு நடுங்கிக் கொண்டிருந்தவளை அவனைத் தவிர அங்கிருந்த அத்தனை பேரும் பார்க்க ஆரம்பிக்க... வேகமாக ரகுவின் அருகே போய் நின்றவள் அவனோடு அருகில் ஒன்றி நின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ள....

தன் தவறை உணர்ந்தவனாக... "வா போலாம்" என்று இவளை இழுத்துக் கொண்டு நடந்தவனின் முகம் சற்று இறுக்கமாக இருந்தார்ப் போல் இருந்தது....

இப்போது பைக்கை எடுக்காமல் விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்க.... குழம்பிப் போனவளாக...

"வண்டி" என்று ஆரம்பித்தவள்...

"இனி... பைக்ல போக முடியாது ...... அங்க ஏதோ ஒர்க் நடந்துட்டு இருக்காம்... பள்ளம் தோண்டி இருக்காங்களாம்.... மழைல இன்னும் கஷ்டம்" என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தவன்...

"பக்கம் தான்... 5 மினிட்ஸ் வாக் தான்" என்று சொல்ல..

"இன்னொரு நாள் போகலாமே ரகு…“ என்றவளிடம் கோபமெல்லாம் இல்லை… சாதரணமாகத்தான் கேட்டாள்… அவனோ… இப்போதும் இறுக்கமான பாவனையுடன்…

“வருவியா மாட்டியா” என்றான் நேருக்கு நேராக அவளைப் பார்த்து…

”ஓகே… ஆனால் எங்க போகிறோம்… அதைச் சொல்லு” என்று கேட்டவள்… இப்போது முற்றிலுமாக இயல்பு நிலைக்கு வந்திருந்தாள்.... ராகவ்வின் இறுக்கமான முகம் ஏனோ அவளுக்கு பிடிக்கவில்லை.. இந்த சூழ்நிலையில் தானும் கோபம் முகம் காட்ட வேண்டாம் என்று மனம் எச்சரிக்க…வண்டியில் வரும் போது இருந்த மனநிலை இப்போது இல்லை.....

“என்ன புடவை கட்டி நடந்து வருவதுதான் கஷ்டம்” என்று கணுக்காலுக்கு மேலே புடவையை தூக்கியபடி அன்ன நடை நடந்து அவனோடு போனவள்..... சுற்றும் புறமும் பார்க்க… இப்போது… கொஞ்சம் அந்த இடம் பயத்தைத்தான் கொடுத்தது….

ஆனாலும்... ராகவ்வோடு செல்கிறோம் என்பதால் பயமெல்லாம் இல்லை. எங்கு செல்கிறோம் என்ற ஆர்வத்துடன்தான் அவன் பின்னே சென்றாள்...

அப்போது சட்டென்று எங்கோ மின்னல் வெட்ட அடுத்த நொடி இடியும் இடிக்க... மதியம் 3 மணி கிட்டத்தட்ட 6 மணி போல் தோற்றம்... இடிக்கெல்லாம் இவள் பயப்பட மாட்டாள் என்றாலும்.... அந்த ஒதுக்குப் புறமான இடம் தந்த பயம்.... அவளையுமறியாமல் அருகில் வந்து கொண்டிருந்த ராகவ் கைகளை இறுக்கமாகப் பிடிக்க.....

அவன் பார்த்த விதத்தில்… "இடிக்கெல்லாம் பயம் இல்லை... மொத்தமா சரௌவ்ண்டிங் அட்மாஸ்பியர் பயமா இருக்கு... " என்றவளிடம்....

"பட் இதுக்கு நாம பழகிக்கனுமே சந்தியா" என்ற போது அவள் அதிர்ந்து பார்த்த விதத்தில்

"ஆமா சந்தியா… இங்கதான் இருக்கு நாம வாழப் போற வருங்கால வீடு… என்னோட வருமானத்தில் கட்டினது இந்த வீடு… ஆனால் அப்பாக்கு பிடிக்கலை... ." என்று பெருமையாக ஆரம்பித்தவன்… தன் தந்தைக்கு இந்த விசயம் பிடிக்கவில்லை என்பதையும் சொல்லி முடித்தவனாக..

"இந்த ரோடு தான் கொஞ்சம் ப்ராப்ளம்…ஆனால் ரெண்டு மூணு வருசத்துல டெவலப் ஆகிரும்… நமக்கும் பயம் இருக்காது" என்று சொல்லிக் கொண்டான் தனக்குள்ளேயே

அவன் சொன்ன விதமா... இல்லை அவனது குரலில் இருந்த வேறுபாடா அவன் முகம் பார்க்க தோன்ற அவனைப் பார்த்தாள் சந்தியா....

"மாமாக்கு இங்க கன்ஸ்ட்ரக்ஷன் பண்ண ஏன் பிடிக்கலை.. இப்படிப்பட்ட இடத்தில் பண்ணினால் யாருக்குத்தான் பிடிக்கும்" என்று மனதினுள் தோன்ற.. அதே நேரம்

"இங்க வாழப் போகிறோமா... ” என்று மீண்டும் சுற்று முற்றும் பார்த்தவளுக்கு…. அப்போதே பீதி கிளம்பியது…

ஏனென்றால் சந்தியாவுக்கு தனிமை…. பேய்.. அமானுஷயம் என்றாலே பயம்…

’அப்படியே வந்தாலும் மாமா அத்தைலாம் வந்தாத்தான் வரனும்.. தனியாலாம் வரக்கூடாது’

நினைக்கும் போதே…

’ஹையோ இந்த மாதிரி இடம்னு தெரிஞ்சிருந்தால் வந்திருக்கவே மாட்டேனே…’ என்றெல்லாம் குழப்பிக் கொண்டவள் ... சட்டென்று வீசிய ஈரக் காற்றில் உடல் தூக்கி வாரிப் போட... தன்னைச் சமாளித்தவள்… அவன் நடையின் வேகத்தோடு ஈடு கொடுக்க ஓடத்தான் வேண்டியிருந்தது.....

எனவே வேகமாக நடக்க ஆரம்பிக்க… ஆனால் ஈரப் புடவை தடுக்க ஆரம்பிக்க..... ஒரு கட்டத்தில் தடுமாறி விழப் போனவளை ரகுவின் வலிய கரங்கள் கீழே விழ விடாமல் தடுத்து நிறுத்தியது..

அவளை இன்னும் நன்றாக தாங்கிப் பிடித்தபடி "இந்த இடம் கொஞ்சம் ஸ்லிப்பரியா இருக்கும்..... கீழ மேல விழுந்துறாத... அப்புறம்" என்று ஆரம்பித்தவன்

இவள் முகம் போன போக்கில்.. வார்த்தைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு.. தன் நடையைத் தொடர... அவளோ அங்கேயே நின்றாள்... நிறுத்திய வார்த்தைகளை உணர்ந்து…

"இது என் மேல இருக்கிற அக்கறைல சொல்றியா ரகு… இல்லை நான் கீழ விழுந்து பழிய உன் மேல போட்ருவேன்ற பயத்துல பேசுறியா ரகு " என்று நின்ற படியே கேட்க…

பதில் சொல்லவில்லை அவன்… கூர்மையான பார்வையை மட்டுமே பதிலாக வீச.. அவன் பார்வை இன்னும் அவளுக்குள் ஆத்திரத்தை கிளர.... அந்தக் கோபத்தை நடையில் இப்போது காண்பிக்க...

"ஏன் என்கேஜ்மெண்டுக்கு வரலை... மத்தவங்க கிட்ட நீங்க சொன்னது எல்லாம் பொய்னு தெரியும்… என்னை அவாய்ட் பண்ணத்தானே அப்படிச் சொன்ன… மேரேஜ்க்காவது வருவீங்களா… இல்லை அன்னைக்கும் வராம இருப்பதற்கு… ஏதாவது பிளான் வச்சுருகீங்களா… " என்று நக்கலாக கேட்க... நின்றவன்… அவளின் நியாயமான கோபத்தை உணர்ந்ததால் அவளோடு வழக்காடாமல்.... அமைதியாகவே நடக்க…

இவளோ விடவில்லை… மனதில் அடக்கி வைத்திருந்தவை எல்லாம் பீறிட ஆரம்பித்தது….

அடுத்து ஏதோ கேட்க ஆரம்பிக்க வாய் திறக்கப் போக…

”கொஞ்சம் வேகமா வர்றியா…. தூரல் போய் மழை வரப் போகுது… உன் கேள்வி மழையை எல்லாம் நம்ம வீட்ல வந்து கொட்டு…. இல்லை நம்மள இந்த வான மழை நனைச்சுறப் போகுது” என்ற போதுதான் அவள் நிலை அவளுக்குப் புரிய… இந்த நிலமையில மழையில நனையிறதா… கடவுளே” வேகவேகமாக நடந்தவள்… அவளையுமறியாமல்

”ப்ச்… என் நேரம் காலம் தெரியாம நீ என்னை இம்சைப்படுத்துற ரகு” என்று இயலாமைக் குரலில் சொல்லி விட..

சொன்னவளைப் புரியாமல் பார்க்க….

“ஏன் என்னாச்சு…” என்றவனுக்கு… அவள் குரலில் இருந்த வருத்தத்திற்கு… அவளின் தேக நிலைதான் காரணம் எனத் தெரியாமல்…

“ஆபிஸ்ல ஏதாவது முக்கியமான வேலையா” என்று கேட்க..

“அடேங்கப்பா… ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட… இதை அங்க வச்சு கேட்ருக்கனும்… அதை விடு… ” என்ற போதே

கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டின் முன் ராகவ் நிற்க… வீடல்ல அது சிறிய மாளிகை….

அதை வியப்போடு பார்த்தாள்… வேலைகள் எல்லாம் முடிந்து….. 99 சதவீதம் முடிந்த அந்த வீட்டைக் கண்கொட்டாமல் பார்த்தவள்… நம்ம முடியாத பார்வையை ராகவ்வை நோக்கி வீசியபடி

“இது உன்னோட சொந்த சம்பாத்தியத்தில கட்டின வீடுனு சொன்ன ரகு…. இவ்ளோவா சம்பாதிக்கிறியா நீ…… “ என்றாள் யோசனையோடு… ஆனால் அதே நேரம்..

நக்கலாக ”ஆனா க்ரானைட் எங்க மாமாவோடது தானே….. ஓசியா போட்ருப்ப…. அதுனால நீ சம்பாதிச்சு கட்டின வீடுனு சொல்ல முடியாதுதான்” சொன்னவளைப் பார்த்து முறைக்கும் முறை இவனானது இப்போது…

”ஆஹா… சந்தியா… உனக்கு வாயேதான் சத்ரு… இவ்வளவு சின்ன வயசுல வீடு கட்டிருக்கான்னு பாராட்டாம… என்னெனமோ சொல்லி வாங்கில் கட்டிக்கிறோமே…”

தனக்குள் சொல்லிகொண்டே இருவருமாக உள்ளே நுழைய… சந்தியா கவனமாக வலது காலை எடுத்து வைத்து வர… ராகவ் உள்ளுக்குள் அதை ரசித்தபடி… தானும் அதே போல் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தவன்… மனதில் இப்போது போராட்டம் … அவன் போட்டு வைத்திருந்த திட்டங்களை நினைத்து… மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது…

அவனுக்கே பிடிக்காத விசயங்களை செய்யும் நிலை ஏற்ப்பட்டதை எண்ணி மருகியபடியே…. உள்ளே வந்த ராகவ் அமைதியாகி… சோர்வுடன்…. அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட…

சந்தியாவோ.

“சுத்திக் காட்ட மாட்டியா ரகு” சீண்டல் என்ற போதும் சிரித்தபடிதான் கேட்டாள்…

சோபாவில் சாய்ந்தபடி… கண்களை ஒரு முறை மூடித்திறந்தவன்…

“சந்தியாவா… நல்லவன் என்ற இமேஜா” … சந்தியாதான் தீர்ப்பு சொல்லியது… உள்ளிருந்த மனசாட்சி… எழுந்தான் ஒரு வித முடிவோடு…

“உனக்கு இல்லாததா… வா” என்று… அழைத்துப் போனவன்… வேறு எங்கும் கூட்டிப் போக வில்லை… முதலில் அழைத்துப் போனது பூஜை அறைக்குத்தான்…

”வா…” என்று உள்ளே அழைக்க…

”இவனிடம் சொல்வதா இல்லை வேண்டாமா” என்ற யோசனையில் சந்தியா விழி தெறிக்க நின்றிருக்க… …

இவனோ “இவ ஏன் இப்படி முழிக்கிறா… நாம பூஜை அறைக்குத்தானே கூப்பிட்டோம்… அதுக்கே இந்த ரியாக்‌ஷன் கொடுக்கிறா… இதுல நம்ம திட்டமெல்ல்லாம் கேட்டா…” என்ற யோசனையில் அவன் மூழ்க

என்னதான் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலும்… அவன் இன்னும் அந்நிய ஆடவன் தானே…. தயங்கினாள் பெண்ணாக சந்தியா…. இருந்தும்…

”இ.. இல்ல… நான் வரக்கூடாது” என்று அவனைப் பார்த்தும் பாராமலும் திக்கித் திணறியபடி சொன்னவள்… ஹப்பா எப்படியோ சொல்லி விட்டோம் என்ற நிம்மதியில் பெருமூச்சு விட

அதைக் கேட்ட இவன் முகமோ… புன்னகையில் … விரிந்தது… ஏன் என்ற காரணத்தால்…. சந்தியாவிடம் எதுவும் பேசாமல்…

அதிகமாக படங்களோ இல்லை சிலைகளோ இல்லை… ஒரே ஒரு விநாயகர் புகைப்படம் மட்டுமே அங்கு இருக்க

கைகளை குவித்து.… அர்த்த புன்னகைப் புரிந்தவனாக... அவன் மட்டும் அங்கு நின்று மனமுருக வேண்டிக் கொண்டான்

“நான் கெட்டவனா ஆக நெனச்சாலும் நீங்க ஆக விடமாட்டீங்க போல… உங்கள நம்பித்தான் இருக்கேன்… உங்க தம்பிக்கு ஹெல்ப் பண்ணினது மாதிரி.. எனக்கும் உங்க ஹெல்ப் வேண்டும்… என் சந்தியாவை என் கூட சேர்த்து வைக்க வேண்டியது உங்க பொறுப்பு…” என்றவன் மனம் முழுவதும் சந்தோஷம் மட்டுமே … சுகுமார் யசோதா வளர்ப்பு அவனை தவறு செய்யாத நிலைக்காக சந்தோஷப்பட வைத்தது என்றே கூறலாம்….

இருந்தும்… சந்தியாவை சீண்டும் எண்ணம் மட்டும் மாறாமல் இருக்க…

அடுத்து அவன் அவளைக் கூட்டி வந்தது… படுக்கை அறைக்குத்தான்… சந்தியாவுக்கு தயக்கம் இருந்தது என்றாலும்… வெளிக்காட்டிக் கொள்ளாமல… மறு வார்த்தை பேசாமல் உள்ளே நுழைய… அவள் பின் வந்த இவனோ… உள்ளே வந்து... அறைக்கதவை சாத்த…

சட்டென்று திரும்பினாள் அதிர்ந்த பார்வையோடு சந்தியா…

ராகவ்வோ… கைகளை கட்டியபடி… கதவில் சாய்ந்தபடி…

”சந்தியா… வரும் போது எக்கச்சக்கமா என்கிட்ட கேள்வி கேட்டதானே நீ… அதுக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு முன்னால என்னோட ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லனும்…. ஆனா வார்த்தையால இல்லை… “ என்றான் மிகத் தீவிரமாக…

அவன் முகத்தில் குறும்போ கேலியோ… நக்கல் எதுவும் இல்லாமல் துடைத்து விட்டார் போல இருக்க…

”பயப்படாத…. சிம்பிள் கொஸ்டீன் தான்… உனக்கு என்னைப் பிடிச்சுருக்கா…” என்ற போதே…

ஏனோ அவனின் இந்தக் கேள்வியில் இவள் மனம் திடிரென்று படபடத்தது… அப்போதுதான் ஒரு உண்மை இவளுக்கு உரைத்தது…

’ராகவ்வுக்கு தன்னைப் பிடிக்காது… தன்னை தன் வீட்டில் வேண்டாம் என்று சொல்லச் சொன்னானே… இவள் சொல்லாமல் விட்டதால் தானே.. இந்த திருமணம் இந்த அளவிற்கு வந்திருக்கின்றது… இவள் வாயாலேயே அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்ல வைக்கத்தான் இன்றைய சந்திப்பா… ’

”பிடித்திருக்கிறதா அவனை… ஆம்… அதனால் தானே அவனோடு இவ்வளவு தூரம் தனியே வந்திருக்கிறோம்”

மனம் சரியாகத்தான் சொன்னது…

ஆனால் இந்த மனித மனம் எப்போதுமே மனதில் நினைத்ததை சொல்ல நினைத்தும்… சொல்ல விடுமா என்ன.. ராகவ் கேட்ட கேள்விக்கு பிடிக்கும் என்று சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்குமோ... ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கும் என்ற வார்த்தையைச் சொல்ல ஏன் மனம் வர வில்லை என்று தெரியவில்லை ....

ஒருவேளை அவள் குழப்பத்தில் இருந்து இன்னும் விடுபட வில்லையோ என்னவோ ....

"பிடித்திருக்கிறதான்னு கேட்டால் தெரியலை... ஆனா பிடிக்காமல் இருக்கிற அளவுக்கு எதுவும் இல்லை " மனதில் அடித்துக் கொண்டிருந்த அலையை அடக்கியபடி… சாதாரணமாகச் சொன்னவள்... அவனைப் பார்த்தாள் அவனின் பதிலை எதிர்பார்த்தவாறு....

அவன் பதில் எதும் சொல்லாமல் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்...

“நான் வார்த்தையில்லாமல் சொல்லச் சொன்னேன் சந்தியா…” ஞாபகப்படுத்தினான்…

ஏனோ ராகவ்வை வேறு எப்படியும் நினைக்கவே மனம் வரவில்லை அவளுக்கு… அதிலும் அவளின் தற்போதைய நிலையில் சுத்தமாகவே வேறு எந்த எண்ணமும் வராமல் போக…

”புரியல ரகு…” அவன் முன் அப்பாவியாக வந்து நின்றவளை தன் அருகே வேகமாக இழுத்தான் முரட்டுத்தனமாக......

அவனின் அந்த செயலை எதிர்பார்க்காதவளாக... தன்னை சமாளிக்க முயன்றும் முடியாமல் அவனின் இறுக்கமான பிடிக்குள் மாட்டியவள்... அவனிடமிருந்து விலக முயல... அவனின் கரங்களின் பிடி இவள் இடையை இன்னும் இன்னும் இறுக்க....

முதன் முதலாக அசாதரண சூழ்நிலையை உணர்ந்தவளாக...

"ரகு... இது என்ன பிகேவியர்....." என்று சட்டென்று முகம் சுண்டியவளை...

"என்னைப் பிடிச்சிருக்குன்னா இதை அக்செப்ட் பண்ணிக்கோ... 2 வீக்ஸ்ல மேரேஜ் பண்ணிக்கப் போறோம் தானே… இந்தப் பதில் தான் எனக்கு வேண்டும் எனக்கு" என்றவனை முதன் முதலாக வேதனையுடன் பார்த்தவள்....

அவனிடம் பதில் சொல்லாமல்... அவன் கைகளை அவள் இடையில் இருந்து விடுவிக்கும் முயற்சியிலேயே இருக்க.... அது முடியாமல் போக...

’தான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்… உண்மையிலயே இவன் மிரட்டுகிறானா... இதற்காகத்தான் தனியே கூட்டி வந்தானா...’. மிரட்சியோடு பார்த்தவளுக்கு...

‘ஏனோ நம் வீடு… நாம் வாழப் போகும் விடு என்று அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சுத்தமாக மறந்து போய் விட…

வார்த்தைப் போராட்டத்தில் இறங்கினாள்…

"என்னை ரொம்ப காயப்படுத்துற ரகு... உனக்கு என்னைப் பிடிக்கலைனா மாமாகிட்ட சொல்லி இந்த மேரேஜ நிறுத்திரு… அதுக்காக இப்படிலாம் உன் கேரக்டர அசிங்கப்படுத்திக்காத… " என்றவளின் கண்களில் கண்ணீர் வர... அது அவள் முகம் முழுவதும் பரவ ஆரம்பிக்க...

அவளின் கண்ணீரைப் பார்த்த… அதே நேரம் ரகுவின் கைகளும் தளர்வாக .... சட்டென்று அவனிடமிருந்து விலகினாள்...

வெளிறிய முகம். குளிரில் நடுங்கிய தேகம்.... திருமண விசயத்தில் என்ன ஆகுமோ குழம்பிய அகம்...

அப்படியே சிலையாக நின்றவளின் பின் வந்து நின்றவன்... தோளில் மெதுவாக கை வைக்க... சட்டென்று தட்டி விட்டவள்... அதே வேகத்தில்

"டோண்ட் டச் மீ... " என்று வேறு சொல்ல... அவள் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் அவளைத் தன் புறம் திருப்பியவனிடம்....

அதே வேகத்தில் அவள் இதழ்களை தன் வசமாக்க....

சந்தியா தன்னைச் சுதாரிக்கும் முன்னரே அவள் அவனால் சிறை செய்யப்பட்டிருக்க… அவனோடு ஒன்ற முடியாமல்… அவனிடமிருந்து பெரும்பாடு பட்டு தன்னை விடுவிக்க போராட முயல... அது முடியவே முடியாமல் போக… அவனே விட்ட போதுதான் அவள் அவனிடமிருந்து விலக முடிந்திருக்க..

கல்லாக சமைந்து நின்றிருந்தாள்… அவமானத்தில்… அதே நேரம்...

அவள் சம்மதம் இன்றி... ஒரு ஆடவன் அவளை நெருங்கி விட்டான்… என்ற அவளின் இயலாமை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்க.... அதில் இருந்தே அவளால் வெளி வர முடியவில்லை… தோற்று விட்டோமா… நாம்… என்னால் என்னை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க நினைக்கும் ஒரு ஆடவனை எதிர்க்க முடியவில்லையா… இவன் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகின்றவன் தான் என்றாலும்… என் சம்மதம் இன்றி என்னை நெருங்கி வந்தவனை… என்னால் விலக்க முடியவில்லையே… மனம் அவள் மீதே எறி கற்களை தூக்கி எறிய… தாங்க முடியவில்லை… அது தந்த வேதனையின் உச்சக்கட்டமாக

"ஒரு பொண்ணுகிட்ட அதுவும் உனக்கு பிடிக்காத பொண்ணுகிட்ட தான் இப்படி நடப்பியாடா..." ஆவேசமாக இவள் கத்த ஆரம்பிக்க.....

மீண்டும் அவன் அருகில் நெருங்கி வந்தான் அவள் கத்தல் களை அலட்சியப்படுத்தியபடி..... இவளோ பின்னே நகர்ந்தாள்.... ஆனாலும் அவன் நீண்ட கரங்கள் அவளை சுலபமாக அவனிடம் இவளைச் சேர்ப்பிக்க...

"எனக்கு பிடிச்சுருக்குனு நீ இன்னும் சொல்லலை சந்தியா… என்னைப் பிடிச்சதால தான … உங்க வீட்ல என்னை பிடிக்கலைனு சொல்லச் சொல்லி அனுப்பியும் சொல்லலை… தேன் ஷோ மி” என்றவனின் வலிய கரங்கள்... மூச்சை நிறுத்தும்படி அவளை தன்னோடு அணைத்து ஆக்கிரமிக்க... அவனோடு வரும்போது ஒரு நொடி கூட இது போல் எல்லாம் நடக்கும் என்ற எண்ணம் துளி கூட இல்லை ....

கோபம்... ஆதங்கம்... அவனிடம் எதிர்க்க திராணியில்லாமல் போனது ஏன்... அது புரியாத கோபம் மொத்தமும் அவளை அவனின் வேகத்தை விட ஆக்கிரமிக்க.... இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது…. அவன் தன்னை திருமணம் செய்யாமல் இருக்க எவ்வளவு பெரிய கீழ்த்தரமான எல்லைக்கும் போவான் என்று…. இப்படிப்பட்டவனை மணந்து….

எண்ணங்கள் தந்த உயிர் வலியில் மொத்தமாக மனதளவில் உயிர் நொடித்துப் போனவள்… உணர்வுகள் மரத்த நிலையில் இருக்க… அவனிடமிருந்து தன்னை விடுவிக்க போராடாமல்...

அவனுக்குத் தேவையான பதிலை கொடுக்க ஆரம்பித்தாள்… ஆம்..

சட்டென்று அவன் தனக்கு கொடுத்த இதழ் முத்தத்தை அவனுக்கு அதே வேகத்தோடு கொடுத்து… தன்னை மீட்டெடுத்தவள்…

"ஐ லவ் யூ... ஐ லவ் யூ… இப்போ போதுமா உனக்கு… பிடிச்சுருக்குனு சொல்லிட்டேன்..” என்றவள் பேச முடியாமல் அழுகையில் வார்த்தைகள் திணற..

“உனக்கு என்னைப் பிடிக்கலைனாலும்… என்னோடதான் உன் வாழ்நாள் எல்லாம்.. இதுதாண்டா உனக்கு தண்டனை… நீ இப்படிலாம் நடந்தா நானே உன்னை வேண்டாம்னு எங்க வீட்ல சொல்வேனு நெனச்சுதானே… இவ்ளோ கேவலமா நடக்கிற… முடிஞ்சா நீ இந்த மேரேஜை நிறுத்திக்கோ… நான் சொல்ல மாட்டேன்… இதை விட கேவலமா நடந்தா கூட…" என்று சொன்னவளின் உடலோ அதற்கு மாறாக நடுங்கி கொண்டிருக்க…

ராகவ்தான் இப்போது அதிர்ச்சியோடு நின்றிருந்தான்… அவளின் உணர்ச்சிவசப்பட்ட நிலை உணர்ந்து…

அதே வேகத்தில் அந்த இடத்தில் இருந்து அழுதபடி ஓடியவளை.... பார்த்தவன்.. இப்போது உணர்வுக்கு வந்து.. அவளைப் பின் தொடரப் போக.....

அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து… ஓடிய வேகத்தில் திரும்பி நின்றவள்....

"என் பின்னால் வராத... ஒருவேளை உனக்கும் எனக்கும் மேரேஜ் நடந்துச்சுனா..... அப்போ மீட் பண்ணுவோம்... அதுவரை என் முன்னால் வராத...... எனக்கு என்ன ஆனாலும் உனக்கு ஒண்ணும் கவலை இல்லைனு தெரியும் இருந்தாலும்... சொல்றேன். என் மேல ப்ராமிஸ். ஐ ஹேட் யூ டா.." வெறித்தனமாக கத்தியவள்... இப்போது ஓடாமால் நிதானமாக நடக்க...

அவளைத் தடுக்காமல்… அவள் போவதையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் ராகவ்…

/*தேவா நான் கேட்பது காதல் வரம்

நீ தந்தது கண்ணீர் வரம்

பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வாழ்கிறேன்

என்னழகு உனது அர்பணம் என்று எழுதி விடுகிறேன்

போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஓ காதல் என்னை காதலிக்கவில்லை

ஓ காற்றும் என்னை ஆதரிக்கவில்லை*/



3,516 views0 comments

Recent Posts

See All

கண்மணி... என் கண்ணின் மணி- 95-3

அத்தியாயம் 95-3 கிருத்திகா வீட்டில் இருந்து கண்மணி நட்ராஜ் வீட்டுக்கு இல்லையில்லை ‘கண்மணி’ இல்லத்துக்கு வந்து பூமி பூசையில் அந்த இடத்தின்...

கண்மணி... என் கண்ணின் மணி- 95-2

அத்தியாயம் 95-2 “கண்மணி” போட்டிருந்த மயக்க மருந்துகள் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்தவில்லை… காதில் எதிரொலித்த அந்தக் குரலின் தாக்கம் அவளை...

கண்மணி... என் கண்ணின் மணி- 94-2

அத்தியாயம் 94-2 நாட்கள் உருண்டோடி இருக்க… மாதமும் ஒன்று கடந்திருந்தது… நட்ராஜ் கண்மணியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்… கல்லோ மண்ணோ என்பது...

Comments


© 2020 by PraveenaNovels
bottom of page