கண்மணி... என் கண்ணின் மணி-52

Updated: Nov 17, 2021

அத்தியாயம் 52


’கண்மணி’ இல்லம்… மணி மாலை 4.30


ரிதன்யா கையில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே… மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவளாக… சரியாக இருந்த தன் நெற்றிப் பொட்டை மீண்டும் சரிபடுத்திக் கொண்டவள் தன்னையே பார்த்தபடி இருந்தாள்…


ஒரு காலத்தில் அலங்காரத்திற்கென்றே பிரத்யோகமாக நேரம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டவள்.. இன்று நினைக்கும் போதே ரிதன்யாவுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது… அதிலும் மகிளாவும் இவளும் போட்டி போட்டுக் கொண்டு மேக்கப் செய்வார்கள்…


“ஹ்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்… ஆனாலும் இதுவுமே அழகாத்தான் இருக்கு…” என்று தனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டவள்....


பாலும் சந்தனமும் கலந்த கலவையாக அவளின் மாசு மருவில்லாத நிறத்தைப் பார்த்தே… அந்த ஏரியாவில் இருப்பவர்கள் எல்லாம் அவள் தெருவில் நடந்து செல்லும் போது ஏதோ தேவலோக மேனகை போல…… இவளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்… இந்த ஏரியாவில் இ