ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
ஹாலிடேஸ்... சோ லேப்டாப் பக்கம் வர முடியல... என்னைத் தேடினவங்களுக்கெல்லாம் நன்றி...
தேங்க்ஸ் ஃபார் த கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ்
ஹேப்பி ரீடிங் ஃப்ரெண்ட்ஸ்...
நன்றி
பிரவீணா
அத்தியாயம் 26
நாயகி
/* தங்க மனசு கொண்ட
புருஷன்... நல்ல மனுஷன்.... எனக்கரசன்...
தப்பா புரிஞ்சிகொண்டு
தனி மரமா இதுவரையில் இருந்தேன்...
நாலும் தெரிஞ்சபின்பு
நெழலா... அவன் நினைவா... உயிர் உறவா...
காலம் முழுதும், இங்கு உறுதுணையா
இறுதி வரையில் இருப்பேன்...*/
ஆராதனா தனது கிராமத்திற்கு வந்து ஒரு நாள் கடந்திருக்க… இதோ இன்று செல்விக்கு ஐந்தாவது மாத மருந்து கொடுக்கும் விழா… இந்த விழாவே வளைகாப்பு நிகழ்வு போல அத்தனை பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு… தடபுடல் விருந்து என விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர் இரு வீட்டாரும்….
“செல்வி… ஓகேவான்னு பாரு… எல்லாம் பெர்ஃபெக்ட் தானே… ” கண்ணாடி முன் செல்வியைத் திருப்பி… ஆராதனா கேட்க… செல்வியும் அவளைப் பார்க்க… ஆராதனாவும் தன் தோழியை திருப்தியுடன் பார்த்தவள் அவளுக்கு நெட்டியும் எடுத்தபடி…
“ஆனா உன்னைப் பார்த்தால் கன்சீவா இருக்கிற மாதிரியே தெரியலடி… வயிறே தெரியல… ஏன்… இப்படித்தான் இருக்குமா…” ஆராதனா உண்மையிலேயே நம்ப முடியாத பாவனையில் கேட்க
“ஐந்து மாத ஸ்டார்ட் தானே… இனிமேலதான் தெரிய ஆரம்பிக்கும்…” செல்வி ஆராதனாவுக்கு விளக்கம் கொடுத்தபடியே…
“எல்லாம் ஓகேடி… இந்த நகைலாம் போடனுமா… அண்ணா வேற சபைல நகை கொடுப்பாங்க… ஹெவியா இருக்கும் தனா” செல்வி கேட்க
“ஹலோ… ஹெவிலாம் இல்ல… சிம்பிளாத்தான் இருக்கு…. நேத்து நான் அப்பத்தாகிட்ட திட்டு வாங்கினதா பார்த்தேல… அது உனக்கும் வேணுமா… ஜஸ்ட் ஒரு 2 ஹவர்ஸ் தானே அதுக்கப்புறம் கழட்டிறலாம்டி… “ ஆராதனா சொல்ல… செல்வி அவளையுமறியாமலேயே தலையை ஆட்டி வைத்தாள்… முந்திய நாள் இரவு ஆராதனாவுக்கு கிடைத்த அர்ச்சனையை நினைத்தவளாக
“உன்னப் படிக்க அனுப்பினா…. முடியை வெட்டிட்டு வந்து நிக்கிற… இந்த ஸ்டைலு… அழகு இதெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு உன் புருஷன் கிட்ட வச்சுக்கோ… எவ்ளோ நீள முடி… ஒவ்வொரு இன்ஞ்ஜும் உனக்கு வளர்க்க… நான் என்ன பண்ணி இருக்கேன்… சர்வ சாதரணமா கட் பண்ணிட்டு வந்திருக்க… கேட்டா ஏதோ பேர் சொல்ற… இன்னொரு தடவை கத்தரிக்கோல தலைல வை… அதுக்கப்புறம் இருக்கு உனக்கு…” சென்னையிலிருந்து ஆராதனாவை கூட்டி வந்ததில் இருந்து… நேற்று இரவு வரை வறுத்தெடுத்தது நீலவேணிப் பாட்டி ஆராதனாவை ஞாபகம் வர…
“உங்க அப்பத்தா ஒரு முடி வெட்டினதுக்கு இந்த திட்டு திட்டுவாங்கன்னு நினைக்கக் கூட இல்ல தனா… நீயே இப்போதான் ஊர்ல இருந்து வந்திருக்க… அதுவும் தலையில அடிபட்டு… அப்போ கூட பாவம் பார்க்காமல் யப்பா என்ன திட்டு…”
“விடு… திட்டத்தானே செஞ்சாங்க… எனக்கு இன்னொரு பயம்… பக்கத்துல வேற துடப்பக்கட்டை கிடந்தது… அப்பத்தா கண்ல பட்ருமோன்னு… “ ஆராதனா கண் சிமிட்டிச் சொல்ல…
“அடிப்பாவி… உண்மையிலேயே அடி வாங்கிருக்கியா… “ செல்வி கண்கள் விரியக் கேட்க…
“சும்மா சொன்னேன்டி… திட்றது அவங்க உரிமை… திட்டிட்டு போறாங்க… உரிமைலதானே திட்றாங்க… ஊர்ல வேற யாரையாவது திட்டிற முடியுமா… நான் அவங்க பேத்தி… அந்த உரிமை…” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னவள்…
“எங்க அப்பத்தா அத்தனை திட்டையும்… சமைச்சுப் போட்டு சாப்பாட்ல சமாளிச்சிருவாங்க… அவ்ளோ திட்டியும் எனக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் பண்ணி என்னைத் திகட்ட திகட்ட சாப்பிட வச்சாங்கள்ள… அதுதான் எங்க அப்பத்தா…” என்ற ஆராதனா
“ஹேய் அதெல்ல்லாம் விடு… உங்க வீட்டுக்கு போனியே… உங்கண்ணா வாங்கின ஜுவல்ஸ பார்த்தியா… பிடிச்சிருந்ததா…” என்றவள் செல்வியைப் பேச விடாமலேயே
“உங்க அண்ணன் முன்னமே உனக்கும் சேர்த்து எடுக்கப் போறேன் தனான்னு ஒரு.. ஒரு வார்த்தை சொல்ல்யிருந்தாங்கன்னு வச்சுக்க… சின்ன சின்னதா எடுக்காம…. இதான் சான்ஸுனு பில்லத் திட்டிருக்கலாம்… ” அவள் சொன்ன வேகத்திலேயே..
“ஆ… அவுச்” என்று கைகளைத் தடவிக் கொண்டிருந்தாள்… காரணம் செல்வி அவள் கைகளைக் கிள்ளியிருக்க…
“சொன்னாங்க… சொன்னாங்க… மேடம் அப்படியே உடனே அக்செப்ட் பண்ணிகிட்டத… பேச வந்துட்டா…” செல்வி தன் தோழியை முறைக்க
“ஹலோ நான் உன்னைத் திட்டனும்… முறைக்கனும்… நீ சொல்லித்தான் அத்தை உங்கண்ணா கிட்ட சொல்லிருக்காங்க… போனா போகுது புள்ளத்தாச்சி புள்ள… அதுனால திட்டாம விட்றேன்…” என்ற படியே…
“இங்க பாரு… எனக்கு நீ ஃப்ரெண்டா இருக்கலாம்… எங்க அண்ணன மீட்டெடுத்த தெய்வம் நீ… இந்த வீட்டோட குலசாமி… கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் உனக்கு ஈடாகாது ஏதும்… உனக்குத்தான் நாங்க கால காலமா பணி செய்யனும்… உன்னைத்தான் நாங்க திருப்திப் படுத்தனும்… அதுனால இன்னும் இன்னும் நாங்க உன்கிட்ட கடன்பட்டுட்டே இருக்கிற மாதிரி… இனிமேல இந்த மாதிரி பண்ணாத… ” ஆராதனா சொல்லி முடிக்க
“அம்மா தாயே போதும்…. 90 வயது பாட்டி மாதிரி பேசாதடி…” தன் தோழியை செல்லமாக செல்வி திட்டிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் உள்ளே வர…
ஆராதனா தன் அண்ணனைப் பார்த்த அடுத்த நொடியே… அவர்களுக்கு தனிமை கொடுத்தபடி… செல்வியை விட்டு தள்ளி வந்தவளாக… அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்… அறையை விட்டு வெளியே செல்லும் பொருட்டு…
ஆனால் வந்த கார்த்திக்கோ… செல்வியிடம் பேச வில்லை… மாறாக ஆராதனாவை விசாரித்தான்
“தனா… இன்னும் வலி இருக்கா… இப்போ பரவாயில்லதானே…” என்று கேட்க…
“ஹான்… ஓகேண்ணா… வலி இல்ல இப்போ… பேன்ட் எயிட் மட்டும் இரண்டு நாளைக்கு இருக்கனும்னு சொன்னாங்க… அவ்ளோதான்…” என்றபடியே நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்க்க… சட்டென்று ஆராதனா தன் பார்வையை அவனிடமிருந்து எடுத்து தான் பார்த்த வேலையில் கவனம் வைக்க ஆரம்பித்தாள்..
அவள் அண்ணன் அவளிடம் வாய் வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தாலும்.. அவன் கண்களோ அவன் மனைவியோடு காதல் காவியம் தீட்ட ஆரம்பித்திருக்க…
அடுத்து தன் தோழியைப் பார்க்க… அங்கு அதை விட… காதல் காதல் மட்டுமே அங்கு…. காற்றை விட அந்த அறையை அவர்கள் காதலே சூழ ஆரம்பித்திருக்க
“ஒகே ஆராதனா… மூச்சு முட்டுதே… நமக்கு இந்தக் காதல் காத்து ஒத்து வராதே… எஸ்கேப் ஆகு…
ஆராதனா இப்போது தனக்குள் சொல்லிக் கொண்டவளாக…
“செல்வி… அம்மா தேடிட்டு இருப்பாங்க… நான் வர்றேன்” நாசுக்காக நழுவியவளாக… தன் அலைபேசியை எடுத்து… செல்விக்கு மட்டும் மெசெஜைத் தட்டிவிட்டவளாக…. வெளியேற…
தன் தங்கையின் தலை மறைந்த அடுத்த நொடி… கார்த்திக்… மெல்ல தன் மனைவியை நெருங்க… அதே நேரம்… செல்வியின் மொபைல் சத்தம் கொடுக்க… வேகமாக அலைபேசியை எடுக்க… அதை விட வேகத்தில் அவள் கார்த்திக்கின் அணைப்பில் இருக்க… செல்வி அவன் மார்பில் சாய்ந்தபடியே அந்த அலைபேசி மெசேஜை படிக்க ஆரம்பித்தாள்…
“செல்வி… ரொமன்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும்… மேக்கப்… புடவைலாம்… ஹேர்டூ … அதுலயும் கவனம் வச்சுக்க… கஷ்டப்பட்டு பண்ணி விட்ருக்கேன்….”
செல்வி பக்கென்று சிரித்தபடி… அவள் கணவனிடம் அந்தச் செய்தியைக் காட்ட… கார்த்திக் செல்வியை முறைக்க… அந்த முறைப்பையும் மீறு தன்னவளின் அன்றைய பிரத்யோக அழகில் மயங்கி நிற்க… செல்வியோ
“உங்க தங்கச்சிதான்… நான் இல்ல… அங்க முறைப்பைக் காட்டுங்க…” என்க
“உன்னை முறைக்கலடி… என் பொண்டாட்டி எவ்ளோ அழகுன்னு பார்க்கிறேன்… அது உனக்கு முறைக்கிற மாதிரி தெரியுதா…” என்றவன்… அவள் கையில் இருந்த அலைபேசியை வாங்கி கீழே வைத்தபடி… அவளைச் சிறை செய்யும் பணியைத் தீவிரப்படுத்த ஆரம்பித்திருந்தான்…
---
செல்வி அறையை விட்டு… வெளியே வந்த ஆராதனாவோ…
“ஹப்பா… நல்ல வேளை ஆரா… தப்பிச்சு வந்துட்ட… விட்டா நம்மளையே லவ் மூடுக்கு செட் பண்ணி விட்ருவாங்க போல… ” தன்னையுமறியாமலேயே சொல்லிக் கொண்ட ஆராதனாவின் மனதில் ஆராவாகவும் மாறிக் கொண்டிருக்கின்றாள் என்பது அவளுக்கே தெரியவில்லை…
”அவங்க லவ்ல நமக்கே… நமக்கே ஒரு மாதிரி உடம்பெல்லாம் சிலிர்க்குதே… என்னவா இருக்கும்… ” என்ற நினைத்தபடியே வெளியே முற்றத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த போதே கொண்டிருக்க… அந்த முற்றத்தின் இன்னொரு புறம் நரேன்… செல்வி-கார்த்திக் அறையை நோக்கிச் செல்வதைப் பார்த்தவள்…
“ஹையோ இவர் எங்க போறாரு… பாசமலர் தங்கச்சியை பார்க்கப் போறாரா?… பாசமலர்… அங்க காதல் டூயட் பாடிட்டு இருக்குதே”
“என்ன பண்றது… தடுத்து நிறுத்தலாமா… “
மனதில் பலவித யோசனை நொடிக்கு நொடி வந்த போதே…
“ப்ச்ச்.. பரவாயில்ல தனா… அவர் போனா போகட்டும்… செல்வி வேற புலம்பிட்டு இருக்கா… எங்க அண்ணா கல்யாணப் பேச்சை எடுத்தாலே தட்டிக் கழிக்கிறார்னு… சோ.. போகட்டும்… அட்லீஸ்ட் செல்வியண்ணாக்கு இந்த மாதிரி ஜோடியப் பார்த்தாவது லவ் மூட் ஸ்டார்ட் ஆகட்டும்…” என முடிவுக்கு வந்தவளாக… நரேன் செல்வி அறைக்குச் செல்வதைக் தடுக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டபடியே
“நம்ம ஒன் அண்ட் ஒன்லி எனிமிக்கு பேசலாமா… ஆனா எப்படி பேசுறது…” செழியனின் ஞாபகம் வந்தது மட்டுமல்ல… அவனோடு பேச வேண்டுமென்றும் தோன்றியதற்கு காரணம் அவளின் காதல் அணுவில் ஏதோ ஒரு அணுவில் செழியனின் பெயர் மட்டுமே இருந்ததோ
”அவ்ளோ ஈஸியா விடக் கூடாது… நாம எங்க இருந்தாலும் அவன் மேல ஒரு கண் இருக்கனும்… ஹ்ம்ம் என்ன பண்ணலாம்… “ யோசித்துக் கொண்டிருந்த போதே… நரேன் போன வேகத்திலேயே திரும்பி வந்து கொண்டிருக்க… அதுவும் அவன் வந்த வேகம்… அதைப் பார்த்த… ஆராதனாவின் இதழ்களில் மெல்ல மெல்ல புன்னகை விரியத் தொடங்க… அதே நேரம் அவள் மனதிலோ செழியனிடம் எப்படி பேசலாம் என்ற யோசனை விரியத் தொடங்கியிருந்தது…
----
சென்னை…
தன் அலுவலகத்தில் தன் அறையில் முகிலனுடன் பேசியபடி தன் வேலைகளை ஆரம்பித்திருந்தான்…
முகிலனும் ஊரில் நடந்து கொண்டிருந்த செல்வி-கார்த்திக் விழா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை முடித்தபடி…
“ஆனா மச்சான்… இப்போலாம் உன் பேச்சில ஒரு மாற்றம் தெரியுதே… என்கிட்ட பேசினாலே ஆரதனா பற்றி பேசுவ… இப்போ அவளைப் பற்றியே கேட்க மாட்டேங்கிறீயே…என்ன விசயம்… ஏதோ மறைக்கிற மாதிரியே இருக்கே… நீ இப்படிலாம் இருக்க மாட்டியே… இனி இவன் வேலைக்காக மாட்டான்னு… வேற தூதுக் கிளி பிடிச்சிட்டியா…”
“டேய் அப்படிலாம் ஒண்ணுமில்லடா…”
“இல்லையே… எனக்கு என் நண்பனையும் தெரியும்… அவன் ஆரா பைத்தியமும் தெரியுமே… சொல்லு… என் இடத்துல உன்கிட்ட மாட்டிகிட்ட அந்தப் பாவப்பட்ட ஜென்மம் யாருப்பா…” முகிலன் நண்பனைக் கிண்டல் செய்ய…
“ப்ச்ச்… நீ இன்னும் என்னை அந்த டீன் ஏஜ் செழியனாவே நெனச்சுட்டு இருக்க… நான் மெச்சூர்ட் ஆகிட்டேண்டா… நீதான் புரிஞ்சுக்க மாட்டேங்கிற… ஆரா பற்றியே நெனச்சுட்டு இருந்த… இங்க வேலை பார்க்கிற யாரு… இந்தக் கம்பெனிக்கு நான் 20 பெர்சண்டேஜ் தான் உரிமையாளர்… முதலாளி எங்க அப்பாடா… கம்பெனிக்கு துட்டுக் கொடுத்திருக்கவர் அவர்தான்…” செழியன் நண்பனிடம் பட்டும் படாமலும் பேசி எப்படியோ தப்பித்திருக்க
“அப்போ நீ இன்னும் என் தங்கச்சியப் பார்க்கல… இதை நம்பச் சொல்ற…” முகிலனும் விடாமல் கேட்க
“அப்படியும் சொல்ல முடியாது… பார்த்தேன்… ஆனால் அவ பேசல…” செழியன் சமாளிக்க முயல
“அதெல்லாம் முன் வினை… எங்க வீட்டுப் பிள்ளைய மிரட்டி மிரட்டியே பயமுறுத்தி வச்சுட்ட… உன்னைப் பார்த்தால் பேசுவாளா என்ன… பயந்துதான் ஓடுவா…”
“அதேதான் மச்சான்… விட்டுப் பிடிப்போம்னு இருக்கேன்… சரி அதெல்லாம் விடு… நீ கொஞ்ச நாள் மலேசியா போறேன்னு சொன்னியே… உன்னோட நகைக்கடை பிஸ்னஸ் எப்படி போகுது…” செழியன் அப்படியே பேச்சை மாற்றி இருக்க… முகிலனும் அவன் வியாபாரத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்க… நண்பர்கள் இருவரும் பேசி முடித்த போது அரைமணி நேரம் கடந்திருந்து…
அதன் பிறகு தன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் தான்… ஆனாலும் கண்கள் அவனுக்கு வந்திருந்த மின்னஞ்சல்களில் இருந்தாலும்… அவன் எண்ணம் முழுவதும் அவனை ஆக்கிரமித்திருந்தவளோ ஆராதான்…
முதலில் எல்லாம் ஆராதனா நினைவுகளை மறக்க அலுவலக வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்வான்… ஆனால் இப்போது அது கூட முடியவில்லை…. இப்போதெல்லாம் ஆராவின் நினைவுகள் என்பதையும் தாண்டி மாறாக அவனோடு அவள் பேசிய காட்சிகள்… இருந்த காட்சிகள் தான்… ஏதோ ஒரு மாதிரியான போதை… அவனை முற்றிலுமாக ஆக்கிரமித்தது போல… ஆராதனா அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்க… கணினியை அணைத்து வைத்து விட்டு விட்டு… இருக்கையில் சாய்ந்து கண்களை மூடியவனை முற்றிலுமாக ஆராதனா ஆள ஆரம்பித்திருக்க… சுகமாக அவளிடம் தன்னை இழக்க ஆரம்பித்திருந்தான்…
“அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கின்றது… தன்னை மட்டும் தான் பிடித்திருக்கின்றது… ” அவள் அவனோடு பழகும் விதத்தில்…. பேசும் விதத்தில்… அது மட்டும் நிச்சயமாகத் தோன்றியது செழியனுக்கு…
“ஆனால் எப்படி..” எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை அவனுக்கு… கைகள் தன் கழுத்தில் இருந்த அவள் கொடுத்த டாலரை மென்மையாகத் தடவ ஆரம்பித்திருக்க
“குடும்ப ஒற்றுமை… அத்தை மகன்… இதை மீறி… தன்னிடம் அவளுக்கு ஈர்ப்பு இருக்கின்றது… முதலில் எல்லாம் தன்னிடம் நேருக்கு நேராக நின்று பேசுவதையே தவிர்ப்பவள்… இப்போது தன்னிடம் சரிசமமாக பேசுவதே அவனுக்கு அப்படி சந்தோசத்தையும் நிம்மதியையும் கொடுக்க… முதலில் காதல் கடலின் பேரலையில் நிலையில்லாமல் தத்தளித்த அவன் காதல் மனது இப்போதெல்லாம் சீராக தன் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருத்ததையும் அவன் உணரத்தான் செய்தான்… அவன் காதல் ஓடம் அதற்கான சரியான பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டதே… நிம்மதிப் பெருமூச்சு விட்ட போதே… அதற்கு இடையூறு போல… தொலைபேசி அழைப்பு வந்திருந்தது…
ஆராதனாவின் நினைவுகளிலில் இருந்து விடுபட்டு… தொலைபேசியை எடுக்க… எதிர்முனையில் இருந்து வந்த பதிலில் முகம் சட்டென்று மாறியவனாக…
”ஹ்ம்ம்… வரச் சொல்லுங்க…. கிளைண்ட் மீட்டிங்க் ரூம்ல வெயிட் பண்ணச் சொல்லுங்க” என்று சொன்னவன்…
“உதவிக்கு அவரோட கூட யாராவது அனுப்பி வைங்க… லிஃப்ட்ல தனியா அனுப்பாதீங்க… “ என்று வைத்தான்… வந்த நபரின் வருகை பிடிக்காவிட்டாலும்… அவர் மீதான் அக்கறை… நலனில் செழியன் குறை வைக்கவில்லை…
“இவர் இவ்ளோ நாள் வீட்டுக்குத்தான் வந்துட்டு இருந்தார் இப்போ ஆஃபிஸ்கேவா…” யோசித்தபடியே தன் அறையில் இருந்து வெளியேறியவன்… தன்னைப் பார்க்க வந்தவரை வரச்சொன்ன அறைக்கும் வந்து சேர்ந்திருந்தான் செழியன்
----
அடுத்த பத்து நிமிடத்தில் அறைக்கதவு திறக்கப்பட… மற்றதெல்லாம் மறந்து…
“வாங்க மாமா… “ என்று செழியன் மரியாதை நிமித்தமாக எழுந்து வந்தவரை வரவேற்க…
“மாப்பிள்ளை… நல்லா இருக்கீங்களா… இந்த மரியாதை.. இதான் நம்ம ஊர் பையன்றதுக்க்கே அடையாளம்.. “ என்று புன்னகையுடன் உள்ளே வந்தவர் வேறு யாருமல்ல காவேரியின் தந்தை ரத்தினமே…
அவரின் மாப்பிள்ளை என்ற அழைப்பைல் செழியன்… உள்ளுக்குள் கடுப்பு ஏற்பட்டாலும்… வெளியே காட்டிக் கொள்ளாமல் புன்னகைக்க… உள்ளே வந்த இரத்தினம்… தானாகவே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவராக…
“உட்காருங்க மாப்பிள்ளை… மரியாதையெல்லா மனசோடு இருந்தா போதும்” என்ற போது… செழியனும் என்ன செய்வதென்று தெரியாமல்.. அமர்ந்தவன்… பின் தானாகவே…
“சொல்லுங்க… மாமா… எப்போதும் வீட்டுக்குத்தானே வருவீங்க… “ செழியன் ஆரம்பிக்க…
“ஆமாம் மாப்பிள்ள… வீட்டுக்கு வந்து பேசியிருக்கலாம்… ஆனால் என் சின்னப் பொண்ணு காவேரி படிப்பு விசயம்.. அதான் ஆஃபிஸ்க்கு வந்தேன்…” என்றவர்…
“பெரிய பாப்பா உங்களுக்குத் தெரியும்… இங்க கூட வந்து வேல பார்த்துச்சே… நான் கூட என் பெரிய பொண்ணுக்கு உங்கள மாப்பிள்ளையா கேட்டேனே… “
செழியன் கிட்டத்தட்ட கடுப்பான பாவனையுடன் அவரைப் பார்க்க
“நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க… சரி விடுங்க… அதுக்கு வேற இடத்தில முடிஞ்சிருச்சு.. இனி பேசி என்ன பயன்..”
இப்போது செழியனின் முகம் மாறி இயல்புக்கு வந்திருக்க…
”சின்ன பொண்ணு எம்சிஏ படிக்குது… மதுரைல…”
“அதுக்கு ஒரு பிராஜெக்ட் பண்ணனுமாம்… “
செழியன் இப்போது சுதாரித்தவனாக…
“ஃபைனல் இயர்ல தானே…இண்டர்ன்ஷிப்…” எனும் போதே
“இல்ல தம்பி… என் சின்னப் பொண்ணு பெரிய பொண்ணு மாதிரி இல்ல… படிப்புல படு சுட்டி… கற்பூரம் மாதிரி… அது தனியா ஏதோ ப்ராஜெக்ட் பண்ணுது… ஏதோ ஏயோ ஐனு என்னமொ சொன்னுச்சு…”
“அது AI மாமா…” செழியன் திருத்தினான் தான்… ஆனாலும் மனதுக்குள்…
“இவருக்கு குஷி விஜயகுமார்னு நினைப்பு போல… கடவுளே என்னைக் காப்பாத்தேன் இவர்கிட்ட இருந்து” செழியன் வேண்டியது வேறு விசயம்
”அது என்னமோப்பா… பாப்பா சொன்னது உங்களுக்கு புரியுதுல… அவ்ளோதான்… நமக்கு அது புரியல… விட்ருங்க… உங்க பாடு… பாப்பா பாடு…”
“அப்புறம்… நீங்க அது காலேஜுக்கு போனிங்களாமே… அது பண்ற ப்ராஜெக்ட்லதான் இங்க வேலை கொடுக்கிறீங்களாமே சொன்னுச்சு…”
செழியன் புருவம் சுருக்க
“அதான்பா…உங்க மாமா பொண்ணு ஆராதனா படிச்ச காலேஜ்… என் பொண்ணும் உங்க மாமா பொண்ணும் ஃப்ரெண்ட்ஸ்… அது தெரியாதா உங்களுக்கு… ”
அவ்வளவுதான் செழியனுக்கு வேறு ஏதும் சொல்ல வேண்டுமா என்ன…
“ஆராதனா ஃப்ரெண்டா… “ என்ற போதே அவன் முகம் பழைய உற்சாகத்தை மீட்டெடுத்திருக்க
“நீங்க உங்க பொண்ணுகிட்ட என் மெயிலுக்கு அவங்க ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் அனுப்பச் சொல்லுங்க…” செழியன் பேசியபோதே…
“அட இருங்க மாப்பிள்ள… நானே போன் போட்றேன்… நீங்களே பேசுங்க…” என்றபடி காவேரிக்கு அடித்தவர்… ஸ்பீக்கரில் போட… நல்ல வேளை காவேரி எடுக்க வில்லை… பின் தன் மனைவிக்கு அழைத்து காவேரியைப் பற்றிக் கேட்க
“காவேரி … ராஜசேகர் அண்ண வீட்டுக்கு போயிருக்காளே… அந்தப் பொண்ணு செல்வி கூப்பிட்டிருந்துச்ச… ” காவேரியின் தாய் சொல்ல…
“ ஓ சரி… சரி” என்றபடி போனை வைத்து விட்டு செழியனைப் பார்த்தவர்….
“சொன்னேனே… உங்க மாமா வீட்டு விசேசத்துக்குத்தான் போயிருக்கு பாப்பா”
செழியனுக்கு என்ன சொல்வதென்று புரியாத நிலை.… அதிலும் காவேரிக்கு நேரடியாக போனைப் போட்டு இவனையும் பேசச் சொல்லி அவனை நிர்பந்தபபடுத்தியது வேறு அவனுக்கு உச்சக்கட்ட எரிச்சலைத் தந்திருக்க
“மாமா… இப்போதைக்கு என்னால உங்க பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண முடியாது… அது இல்லாம இப்போ கம்பெனியிலருந்து நான் இன்டர்ன்ஷிப் எடுத்துட்டேன்… உங்க பொண்ணுக்கு ப்ராஜெக்ட் ஹெல்ப் வேணும்னா… என்னோட ஃப்ரெண்ட்ஸ் மதுரைல இருக்காங்க… அவங்க ஃபோன் நம்பர் தர்றேன்… அவங்கள காண்டாக்ட் பண்ணச் சொல்லுங்க…” என்றவன் அடுத்த நொடியே இரண்டு எண்களை அவரிடம் கொடுத்து விபரம் சொல்ல
“சரி மாப்பிள்ள… நான் என் பொண்ணுகிட்ட கொடுக்கிறேன்” என்றபோது அவர் குரல் மெலிதாகி இருந்ததோ…
அமைதியாக சில நிமிடங்கள் இருந்தவர்… பின் என்ன நினைத்தாரோ… செழியனைப் பார்த்து
“என் பொண்ணு படிப்புக்காக மட்டும் வரல மாப்பிள்ள… எனக்கு உங்க வீட்டோட சம்பந்தம் வைக்க ஆசை… நீங்க எனக்கு மாப்பிள்ளையா வரனும்னு மனசு முழுக்க விருப்பம்… பெரிய பொண்ணுக்குத்தான் முடியல..” என முடிக்க வில்லை… செழியன் நெற்றிக் கண்ணைத் திறக்காத குறைதான்…
”சார்… என்ன சார் இப்படிலாம் பேசுறீங்க… ஒரே ஊர்காரர்… தூரத்து சொந்தம்… அந்த மரியாதை இருக்கிறதுனாலதான் இன்னும் மரியாதையோட பேசுறேன்… ஏற்கனவே சொல்லிட்டேன்… “
“அது பெரிய பொண்ணுக்குத்தானே… என் சின்னப் பொண்ணப் பாருங்க… உங்களுக்கும் பிடிக்கும்” என இரத்தினமும் விடாமல் பேச
“புரிஞ்சுக்க மாட்டீங்களா… எங்க அம்மா அப்பாவுக்கே என்னோட மேரேஜ் விசயத்துல உரிமை இல்ல… நீங்க யார் சார்.. என்கிட்ட மேரேஜ் விசயம் பேச… ப்ளீஸ் கெளம்புங்க” செழியன் இப்போதும் கோபத்தை அடக்கியபடி எழுந்தவனாக அவரைப் பார்த்து கிளம்பிப் போகச் சொல்ல…
அவரோ இவனைப் போல கோபப்படவெல்லாம் வில்லை…
“கோபப்படாதீங்க மாப்பிள்ள… என் மனசுல இருக்கிறத சொல்லிட்டேன்… உங்க அம்மா அப்பாக்கும் கூட சம்மதம் தான்… நீங்க மட்டும் மனசு வச்சீங்கன்னா உங்க விருப்பப்படி எப்படி சொல்றீங்களோ அப்படியே மேரேஜ் பண்ணிறலாம்… ஏன் ரெண்டு வருசம் கூட தள்ளி வச்சுக்கலாம்… ஆனால் எனக்குத் தேவை உங்க சம்மதம் தான்..” என்ற போதே செழியனுக்கு இப்போது புரிந்தது… இதற்கெல்லாம் காரணம் யாரென்று…
தன் பெற்றோருக்குத் தெரிந்தே இவர் இங்கு வந்திருக்கின்றார் என்று… இவரிடம் கோபப்பட்டு என்ன பிரயோசனம்… கோபத்தில் கண்கள் சிவந்தவனாக… கை முஷ்டியை இறுக்கியவன்
“சார் என் அக்கா மாதிரி நானும் லவ் பண்றேன்… அந்தப் பொண்ணு வீட்டு சம்மததுக்காக வெயிட் பண்றேன்…” கத்திச் சொல்லி அவரை வெளியேற்ற நினைத்தான்தான்… ஆனால் வாய் வரை வந்தாலும் அவனால் சொல்ல முடியவில்லையே… காரணம் ஊர் முழுவதும் பரப்பி விடுவாரே… தன் தாய்மாமன் குடும்பமும் இதை நம்பி விட்டால்… அவ்வளவுதான்…
தன்னை முயன்று எப்படியோ பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டவனாக… தனக்குள் பொறுமையை எப்பாடு பட்டோ கொண்டு வந்தவனாக
“இங்க பாருங்க மாமா… இந்த மாதிரி விசயம் பேசுறதுனா இனி இங்க வராதீங்க… இப்பொ என்ன உங்க பொண்ணுக்கு ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் பண்ணனுமா… நானே ஒரு ஆறு மாசத்தில சொல்றேன்… போதுமா…”
“கோபப்படாதீங்க மாப்பிள்ள…” எனும்போதே அவனது அலைபேசி அடிக்க… அந்த அலைபேசி ஒலியே எதிர்முனை யாரென்று சொல்ல… அதுவரை அவன் முகத்தில் இருந்த கோபமெல்லாம் மாறியவனாக…. வேகமாக… அலைபேசியை எடுத்தவன்…
“நீங்க கெளம்புங்க… முக்கியமான கால்” என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறி வந்தவனுக்கு… மூச்சும் சீராக வந்திருந்தது…
---
”ஹலோ ஊர்விஷா… ஆரா ஏதாவது சொல்லச் சொன்னாளா…” செழியன் குரலில் துள்ளல் மட்டுமே… சற்று முன் இரத்தினம் மூலம் ஏற்பட்ட கடுப்பு…எரிச்சல்… கோபம் எல்லாமே ஒரே அலைபேசி அழைப்பில் அடங்கி இருந்தது… ஊர்விஷாவின் அழைப்பு என்ற போதும்… ’ஆரா’ என்பதே அவனின் எண்ணம்… அந்த எண்ணம் தந்த உற்சாகத்தோடு பேச
“ஹலோ… நான் ஊர்வி இல்ல… ஆரா…” ஆராவின் குரல் ஒலிக்க… செழியனின் நாடி நரம்பெங்கும் சூடான ரத்தம் கரை புரண்டோட ஆரம்பித்திருந்தது…
“ஏய் ஆரா… நீ எப்படிட்டா… ஊருக்கு வந்துட்டியா… சேச்சே… நீ ஊர்ல தானே இருக்க… முகிலன் சொன்னானே… ஊர்வி ஊருக்கு வந்திருக்காளா…” செழியன் படபடப்பாக பேச… அந்தப் படபபடப்பு முழுக்க சந்தோசம் மட்டுமே…
“இல்லல்ல.. ஊர்விலாம் ஊருக்கு வரல”
”பின்ன” செழியன் குழம்பிய பாவனைக்கு மாறியிருக்க
“பாஸ்… கான்ஃப்ரென்ஸ் போட்ருக்கேன்… “
“என்னடி சொல்ற…” செழியனுக்கே நம்ப முடியாத பாவனை… அவனின் ஆராதனாவா இது… தன்னிடம் பேச… அவளாகவே அலைபேசியில் அதுவும் கான்ஃப்ரென்ஸ் அழைப்பில்…
“ஹ்ம்ம்ம்… எனக்கு உங்ககிட்ட பேசனும் போல இருந்துச்சு… வேற வழி தெரியல” ஆராதனா சொன்ன பாவனையில் செழியன் மொத்தமாக க்ளீன் போல்ட் ஆகியிருக்க… அவன் எந்த நிலையில் இருக்கின்றான் அவனுக்கே தெரியவில்லை… பேசக் கூடத் தோன்றவில்லை அவனுக்கு
“உங்களுக்குத் தெரியுமா… நான் பஸ்லயே போகல.. அம்மாவும் அப்பாவும் அன்னைக்கே கார்ல அவங்களே வந்து என்னைக் கூட்டிட்டு போயிட்டாங்க… அதுனாலதான் அத்தைகிட்ட அவங்க செஞ்ச ஐட்டமெல்லாம் வாங்கிட்டு போக முடியல..”
“ஹ்ம்ம்… அம்மாக்கு ஒரே வருத்தம்” செழியன் சொன்னவனாக
“அடிபட்டது எப்படி இருக்கு… ட்ரெஸிங் பண்ணதை மாத்திட்டியா… எப்படி இருக்கு…” செழியன் இப்போது தன்னை நிதானப்படுத்தியிருந்தான்…
“ப்ச்ச்.. அதெல்லாம் ஓகே… “ சலிப்பாகச் சொல்ல…
“அப்போ அம்மணிக்கு என்ன ஓகே இல்ல… ஒரே சலிப்பா இருக்கீங்க…” செழியன் இலகுவாக பேச ஆரம்பிக்க
“சலிப்பெல்லாம் இல்ல… அப்பத்தா திட்டிட்டாங்க… அந்தக் கவலைல பேசுறேன்… நீங்க வேற…”
“ஏன் செல்லத்தை திட்டுனாங்க” செழியன் தன்னையுமறியாமல் சொன்ன போதே என்ன சொன்னோம் என்று உணர்ந்து திடுக்கிட்டவனாக பின் சமாளிக்கப் பார்க்க… எதிர்முனையில் இருந்த ஆராதனாவோ… சர்வ சாதாரணமாக
“நான் அவங்க செல்லம்னு உங்களுக்கும் தெரியும் தானே… ஆனாலும் என்னைத் திட்டிடாங்க… ஏன் தெரியுமா… நான் ஹேர் கட் பண்ணியிருக்கேன்ல… அதுக்குத்தான் திட்டிட்டாங்க… திட்டினா கூடப் பரவாயில்ல… இந்த கட் பண்றது,… ட்ரிம் பண்றது… இதையெல்லாம் உன்னை ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுத்த பின்னாடி… அவனுக்கு பிடிச்சா அவன் சொன்னா பண்ணிக்கோ… இங்க இருக்கிற வரை பண்ணாதேன்னு ஒரே லெக்சரர்…”
செழியன் அவனையுமறியாமல் சிரிக்க
“உங்க அம்மாச்சிக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆகிருச்சு…”
“எங்க அம்மாச்சிக்கு… அது சரி…” செழியன் நக்கலாகக் கேட்க
“அது என்ன கட்டிக்கிட்டவனுக்கு ஓகேனா என்ன கருமத்தைனாலும் பண்ணிக்கோன்னு சொல்றாங்க… அப்போ இப்போ நல்லால்லையா… நீங்களே சொல்லுங்க… எனக்கு நல்லா இருக்கா இல்லையா… உங்களுக்கு ஓகே வா இல்லையா… அவ்வளவு கேவலமாவா இருக்கேன்”
“இவ தெரிஞ்சு பேசுறாளா… இல்ல இவ மனசுல இருக்கிறத நான் தெரிஞ்சுக்கனும்னு பேசுறாளா…” இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு கூட செழியனுக்கு பிடித்திருந்தது…
ஆக மொத்தம், செழியன் என்ன பேசுவது… என்ன பதில் சொல்வது… பேச்சு வராமல் திணற ஆரம்பித்திருந்தான் சந்தோசத்தில்
“நீ எப்படி இருந்தாலும் எனக்கு அழகிதான் ஆரா…” இருந்தும் செழியன் திக்கித் திணறி சொல்லி முடித்திருக்க
“தேங்க்ஸ்… அப்போ வைக்கவா… அப்பத்தா வர்றாங்க… போன் பேசறதுக்கும் திட்டு வாங்கப் போறேன்“ என்றவள் காத்திருக்காமல் அடுத்த நிமிடமே வைத்தும் விட…
“என்னாச்சு இவளுக்கு… ஏற்கனவே என்னைப் பைத்தியம் பிடிக்க விடுவா… இனி என் நிலைமை…” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே… மீண்டும் அழைப்பு
”உங்களுக்கு எப்போவாது பேசத் தோணுச்சுனா… ஊர்விக்கு போன் பண்ணி எனக்கு கால் ஆட் பண்ணச் சொல்லுங்க… நான் பேசுறேன்… பை…” படபடவென்று சொல்லி விட்டு அழைத்த அதே வேகத்தில் ஆராதனா மீண்டும் அலைபேசியை வைக்க… செழியனோ சந்தோசத்தில் வானத்தில் பறக்காத குறைதான்…
---
வரவேற்பறையில் நடுநாயகமாகப் போடப்பட்ட இருக்கையில்… செல்வியும் கார்த்திக்கும் அமர வைக்கப்பட்டிருக்க… அந்த ஐந்து மாதத்தில் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க்…. ஆராதனா செல்வியின் அருகில் நின்று அனைத்தையும் சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்க… அவளது அலைபேசி ஒலி எழுப்ப… இவளும் பார்க்க அது ஊர்விஷா என்று இருக்க… செழியன் என்பதெல்லாம் அவளுக்கு ஞாபகத்திலேயே இல்லை…
“ஹேய் ஊர்வி..” எனும் போதே
“ஹலோ பாஸ்… நான் செழியன்…”
ஆராதனாவுக்கு நாடி நரம்பெல்லா அடங்கிய உணர்வு… குப்பென்று வியர்க்க ஆரம்பித்திருக்க…
“நீ தானே சொன்ன… எனக்கு எப்போ பேசத் தோணினாலும் ஊர்வி போன்ல பேசலாம்னு…”
“நான் அப்புறமா பேசவா… ஃபங்ஷன்ல இருக்கேன்…” ஆராதனாவையே செழியன் திணற வைக்க…
“எனக்கு இப்போ பேசத் தோணுதே… பேசு ஆரா” செழியன் குறும்போடு அவளிடம் வம்பிழுக்க
“ப்ளீஸ்…” ஆராதனா தடுமாற…
“அப்போ நைட் பேசுறியா…”
“ஹலோ…” ஆரதனா மிரட்டும் தொணியில் பேச
“நைட் பேசுறேன்னா வைக்கிறேன்… இல்லேன்னா கட் பண்ணினாலும்… அடிச்சுட்டே இருப்பேன்…. உனக்கு இல்ல… ஊர்விஷாக்கு… பாவம் உன் ஃப்ரெண்ட்… பார்த்துக்கோ…”
“சரி… நைட் நானே கால் பண்றேன்….” ஆராதனா பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல…
“இன்னைக்கு நைட் மட்டும் இல்ல… ஊருக்கு வர்ற வரை… எப்போ எனக்கு பேசனும்னு தோணினாலும் பேசனும்… டீல் ஓகேன்னா வைக்கிறேன்…”
உள்ளுக்குள் எரிந்தாலும்… வேறு வழி இல்லாமல்…
”நான் போன் பண்ணேன்ல என்னைச் சொல்லனும்” மனதுக்குள் தன்னையேத் திட்டிக் கொண்டவள்
“சரி. சரி… பேசுறேன்” சட்டென்று வைத்தவள்… மீண்டும் அந்த விழாவின் உற்சாகத்தில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்…
---
செல்வி மற்றும் ஆராதனாவின் கல்லூரித்தோழிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்க… அனைவரும் வந்து கலந்திருக்க… அந்த விழா… கல்லூரி தோழமைகளின் நீண்ட கால சந்திப்புக்கும் வழிவகுத்திருக்க… ஆராதனா செல்வி இன்னுமே அந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்…
அதில் முக்கியமாக காவேரியும் வந்திருந்தாள்… ஒரு வழியாக அனைவரும் கிளம்பியிருக்க… காவேரி மட்டும் சற்று தாமதமாகக் கிளம்புவதாகச் சொல்லி… ஆராதனா வீட்டில் தங்கி விட்டாள்…
மற்ற தோழியர்களை பத்திரமாக அவரவர் வீட்டிற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்ப… இப்போது அவளின் தோழி காயத்ரி குழந்தையோடு இருந்தாள் செல்வியின் அறையில்…
காயத்ரியை முறைத்தபடியே உள்ளே வந்த ஆராதனா…
“வாங்க மேடம்… இப்போதான் எங்கள எல்லாம் தெரியுதா உங்களுக்கு” என்றபடியே அவளின் குழந்தையை வாங்கிக் கொண்டவள்…
“அப்படியே ராஜா அண்ணா மாதிரியே இருக்கான்ல செல்வி…”
காயத்ரி அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருக்க… காவேரி மற்றும் செல்வி அவளிடம்
“விடுடி… அவளே இன்னைக்குத்தான் நம்மளப் பார்க்க வந்திருக்கா… “
“சரி சரி… நான் ஒண்ணும் சொல்லலப்பா… அவங்கவங்க வாழ்க்கை… அவங்கவங்க முடிவு…” என்றபடியே
“ராஜா அண்ணாவை நான் சென்னைல அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன்… அவங்க அம்மா ராஜாண்ணாவுக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க… ஆனா இவ டைவர்சும் கொடுக்க மாட்டேங்கிறா… அவங்க வீட்டுக்கும் போக மாட்டேங்கிறா… என் புள்ள வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்னு புலம்புறாங்களே… அதுக்கு என்ன பதில் சொல்றாங்களாம் மேடம்… அதைக் கேட்டுச் சொல்லுங்க” காவேரி செல்வியிடம் சொல்வது போலச் சொன்னாலும்.. காயத்ரியை நேருக்கு நேராகப் பார்த்து ஆராதனா கேட்க..
“ப்ளீஸ் தனா… எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுனே தெரியல... அவர் கூட போய் வாழவும் தைரியம் இல்ல…”
“அப்போ… வீட்ல சொன்ன பையன கட்டிக்கிட்டு ஒழுங்கா ஒரு ஓரமா இருந்திருக்கனும்… தைரியமா அன்னைக்கு மேரேஜ் மட்டும் பண்ணத் தெரிஞ்ச உனக்கு… வாழத் தைரியமில்லையா… அப்படி என்ன பிரச்சனை வந்திறப் போகுது உனக்கும் உன் பையனுக்கும்…”
காயத்ரி கண்ணீரை வடிக்க ஆரம்பித்திருக்க…
“ஏய் அழாதடி… உன் வாழ்க்கையையும் கெடுத்து… இன்னொரு அப்பாவி வாழ்க்கையையும் கெடுத்து… இதோ இந்தக் குழந்தையோட வாழ்க்கையும் சேர்த்துதான்… இதுல அழுகை வேற…”
“உனக்குத்தான் அண்ணா கூட வாழப் பிடிக்கலைல… அப்போ லீகலா பிரிஞ்சிரு… உன்னை யாரும் சேர்ந்து வாழச் சொல்லி கம்பெல் பண்ணல… உனக்கும் உன் பிள்ளைக்கும் உன் அம்மா அப்பா போதும் தானே… ராஜாண்ணா வேற வாழ்க்கையைப் பார்த்துட்டு போகட்டும்”
”ஒரு நிமிசம்” என்றபடி எழுந்தவள்… கையில் சில காகிதங்களோடு வந்தவள்…
“இதுல சைன் போட்டுக் கொடு… ராஜாண்ணா அம்மா கொடுத்து விட்டாங்க… அட்லீஸ்ட் இந்த நல்ல விசயத்தையாவது அவங்களுக்குப் பண்ணு… “
செல்வியும் காவேரியும் அதிர்ச்சியோடு ஆராதனாவைப் பார்க்க…
“என்னைப் பார்க்காதீங்க… அவளுக்கு அட்வைஸ் பண்ணுங்க…” என்ற போதே…
காயத்ரி… வேக வேகமாக அந்தக் காகிதங்களில் தன் கையெழுத்தைப் போட ஆரம்பித்தவள்.. அதே வேகத்தில் அழவும் ஆரம்பித்திருக்க
ஆராதனா அவளைத் தடுக்கவில்லை… மாறாக அவளை அழவிட்டவள்… நிதானமாக அந்தக் காகிதங்களை வாங்கியபடி…
“இப்போ கூட உன் முடிவு மாறல… ஹ்ம்ம்… அதுக்கப்புறம் உன் தலை எழுத்து…” மீண்டும் அந்தக் காகிதங்களைப் பத்திரப்படுத்திவிட்டு தோழியரிடையே வந்து அமர்ந்தவள்… காயத்ரியிடம் வேறு ஏதும் பேசவில்லை… செல்வி காவேரியிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்…
”காவேரி… அக்கா சென்னைலதானே இருக்காங்க… நீ வரும் போது சொல்லு… நானும் பார்க்க வர்றேன்…” என கேசுவலாக பேசிக் கொண்டிருக்க
“நானும் சீக்கிரமா சென்னைக்கு வருவேன்னு நினைக்கிறேன் தனா… பிராஜெக்ட் ஒண்ணு ப்ளான் பண்ணியிருக்கேன்… செழியன் அத்தான் கம்பெனிலதான் கேட்ருக்கேன்… அப்பாகிட்ட சொல்லியிருக்கேன்…” என்ற போதே
“அந்த ப்ராஜெக்ட்… சப்ஜெக்ட்டா.. இல்ல செழியன் அத்தானா காவேரி… “ செல்வி… இப்போது ஆராதனாவைப் பார்த்து கண் சிமிட்ட…
“செல்வி… இன்னமுமா இவ லவ் ஸ்டோரி ஓடிட்டு இருக்குடி… உங்க செழியன் அண்ணாக்குத் தெரியுமா” ஆராதனாவும் இயல்பாகக் கிண்டல் செய்ய
“நான் வீட்லயே சொல்லிட்டேன்… எனக்கு செழியன் அத்தானைப் பிடிச்சிருக்குனு…” காவேரி மிகச் சாதாரணமாகச் சொன்னவள்…
“வீட்லயும் கிட்டத்தட்ட சம்மதம் தான்.. அப்பா அவங்க வீட்ல பேசுறேன்னு சொல்லியிருக்காங்க…” இப்போது காவேரியின் முகத்தில் வெட்கம் பரவியிருக்க…
ஆராதனா அமைதியாக யோசனையுடன் அமர்ந்திருக்க…
செல்வி இப்போது…
“என்ன தனா… யோசனைலாம் பலமா இருக்கு… எங்க செழியன் அண்ணாவை உனக்கு மட்டும் தான் பிடிக்காது…”
“எனக்கென்ன… சொல்றதெல்லாம் சொல்லியாச்சு… புத்தியோடு பொழச்சுக்கிறது அவங்கவங்க இஷ்டம்… ஒருத்தியப் போய் நல்ல மனுசனோட வாழுன்னு சொல்றேன்… அதுவும் நம்ம பேச்சை கேட்க மாட்டேங்குது… இன்னொன்ன பாழுங்கிணறு வேண்டாம்னு சொல்றேன்… அதுவும் கேட்க மாட்டேங்குது… கஷ்டப்படனும்னு முடிவு எடுத்த பின்னால என்னத்த சொல்றது” ஆராதனா பெரிதாக அறிவுரை எல்லாம் கூறாமல் முடித்து விட்டிருக்க
காவேரி இப்போது…
“இல்ல தனா… எனக்கு செழியன் அத்தானைப் பிடிச்சிருக்கு…”
“அது சரி… அந்த சட்டைப் பொத்தானுக்கு உன்னைப் பிடிக்கனுமே…” ஆராதனா அதிகபட்ச கிண்டலோடு பேச… செல்வி அவளை முறைக்க… அதை எல்லாம் ஆராதனா கண்டுகொள்ள வில்லை
“கண்டிப்பா அவருக்கும் என்னைப் பிடிக்கும்.. நான் அவர் ஆஃபிசுக்குப் போறதே அவர் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுகிறதுக்குத்தான்… ”
“ஒரு வேளை நான் சொன்ன மாதிரியே அவர் மனசுல வேற பொண்ணு இருந்தா என்ன பண்ணுவ…”
இப்போது காவேரியின் கண்களில் கண்ணீர் வந்திருக்க
“எனக்கு அவர் இல்லாமல் வாழ்க்கை இல்ல…”
“ம்க்கும் பண்றது ஒன் சைட் லவ்… இதுல இப்படி ஒரு டையலாக்… எங்க செல்வி கூட இப்படிலாம் பேசினது கிடையாது…”
”என்னமோ பண்ணுமா… உன் பாடு உன் சட்டை பொத்தான் பாடு… உங்க குடும்பக் கதை உங்களோட… ஆனால் எங்க அத்தையை மட்டும் விட்றாதிங்க… அவ்ளோதான்” ஆராதனா முடித்துக் கொண்டாள்.. அதற்குப் பிறகு தோழியர் அவரவர் நடப்பு கால வாழ்க்கையினைப் பேச ஆரம்பித்திருக்க… அதன் பின் கலகலப்பும் திரும்பியிருந்தது… காயத்ரி கூட சகஜமாக பேசியபடி அன்றைய தினத்தை கடத்தியிருந்தனர்…
---
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கழித்து… அதிகாலை ஐந்து மணி அளவில் பேருந்து நிலையத்தில் செழியன் ஆராதனாவுக்காக காத்திருந்தான்…
செழியன் ஒரே ஒரு முறைதான் ஆராதனாவோடு பேசியிருந்தான்… அதுவும் நேற்று இரவு மட்டும் தான்… ஆராதனாவை அடிக்கடி அழைப்பேன் என்று சொன்னதெல்லாம்… சும்மா ஒரு பேச்சுக்குத்தான்… ஆராதனாவை வம்பிழுக்கவே சொன்னானே தவிர.. அவன் மாமா குடும்பம் எப்படி என்று தெரியும்… ஆராதனாவைச் சிக்கலில் மாட்டி விட விரும்பவில்லை அவன்…
அன்று பேசிய பிறகு நேற்று மட்டுமே அவளோடு பேசியவன்… அவளை பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்து செல்ல வருவதாகத் தகவலைச் சொல்லி வைத்து விட்டான்… சொன்னபடி ஆராதனாவுக்காகவும் காத்திருக்க ஆரம்பித்திருக்க… அப்போது… அவன் அலைபேசியில் அழைத்திருந்தார் பூஜாவின் தந்தை…
“சொல்லுங்க சார்…” என்றவனிடம்
“தம்பி ஃப்ரியா இருக்கீங்களா… பேசனும் உங்ககிட்ட… “
“நான் ஃபிரிதான் சார்… பூஜா எங்க…” அவன் கேட்ட போதே…
”என் பொண்ணப் பத்திதான் பேசனும் தம்பி… ” சொன்ன போதே அவர் குரல் கம்மியிருந்தது
“என்னாச்சு சார்… பூஜாக்கு ஏதாவது… பாப்பா எப்படி இருக்கா” செழியனின் குரலில் பதட்டம் வந்திருக்க
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல தம்பி… பூஜா, பாப்பா எல்லாரும் நல்லா இருக்காங்க” அவர் சொல்ல… செழியனுக்கு இப்போது நிம்மதி வந்திருக்க
“தம்பி… என் பொண்ணு உடம்புக்கெல்லாம் பிரச்சனை இல்ல தம்பி…. ஆனா அவ மனசுல ஏதோ போட்டு குழம்பிட்டு இருக்கா… சொல்ல மாட்டேங்கிறா… விரக்தியா இருக்கிறாளோன்னு தோணுது தம்பி… இப்படியே விட்டா அவ நிலைமை என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு… கண்டிப்பா அவ அவளுக்குத் தாலி கட்டின அந்த அயோக்கியன நினைச்சு ஃபீல் பண்ணல… அது எனக்குத் தெரியும்… நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா… அதுக்கு கிடச்ச தண்டனைதான் என்னோட இந்த வாழ்க்கைனு அப்போப்ப சொல்வா… அதுக்கான தண்டனைய ஏத்துக்கிறதுதானே நியாயம்னு சொல்றா… என்ன தப்பு பண்ணினா.. அதான் எனக்குப் புரியல… கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா… அது முடிஞ்சு போன கதைனு சொல்றா…” என்றவர்… இப்போது
“உங்களுக்கு ஏதாவது அதைப் பற்றி தெரியுமா தம்பி… இல்ல விசாரிச்சு சொல்றீங்களா… அதுக்காகத்தான் உங்ககிட்ட பேசுறேன்…”
செழியன் இப்போது யோசனையுடன் இருந்த போதே
“அவ யாரையும் லவ் பண்ணலேன்னு எனக்குத் தெரியும்… மேரேஜ் ஏற்பாடு பண்ணும் போது கூட கேட்டேன்… என் பொண்ணு அந்த மாதிரிலாம் இல்லப்பா… நீங்க யாரைச் சொன்னாலும் மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்னா… பெருமைப்பட்டேன்… ஆனா என் பொண்ணுக்கு என்னாலேயே எல்லா கஷ்டமும்… அவ லவ் பண்ணியிருந்தா கூட நல்லா இருந்திருப்பாளோ.. நான் சின்ன வயசில இருந்தே அவ அம்மாவைப் பற்றி சொல்லிச் சொல்லி… அவளைப் பயமுறுத்தி வச்சுட்டேன்… அவ அதுனாலேயே காதல்னா வெறுத்துட்டாளோன்னு தோணுது…”
“சார்… கவலைப்படாதீங்க… நான் பூஜாகிட்ட பேசுறேன்.. அவ பழைய பூஜா இல்ல… அதை மட்டும் புரிஞ்சுக்கோங்க… அவளுக்குத் தெரியும்…. அவள நம்பி ஒரு ஜீவன் இருக்குனு… அவ அடிக்கடி சொல்வா… அவனோட குழந்தைனாலும்… அது என்னோட குழந்தை செழியா… அவளுக்காகத்தான் இந்த வாழ்க்கைனு சொல்வா… நீங்க எல்லோரும் தான் அவளோட ஆறுதல்… நீங்களே இப்படி பேசினா… அவ என்ன பண்ணுவா… எனிவே… என்கிட்ட சொல்லிட்டீங்கள்ள நான் பார்த்துக்கிறேன்… ஆனால் நான் பேசின வரை… அவ தெளிவா இருக்கிற மாதிரிதான் தோணுது… டைம் பார்த்து நானே அவகிட்ட பேசுறேன்.. சரியா சார் …மனசைக் குழப்பிக்காதீங்க..” செழியன் சொல்ல.. அவரும்… தன் மனக் கவலைகளை இறக்கி வைத்த உணர்வில் செழியனுக்கு நன்றி சொல்லி விட்டு போனைவ் வைக்க… செழியனின் மனதில் இப்போது பாரம்…
“காதல் பற்றிய பூஜாவின் தேவையில்லாத பயம்… அந்தப் பயத்தில் அவள் நரேனைப் பற்றி சொல்லி அழுத விதம்… அதில் தான் கோபம் கொண்டது… அந்தக் கோபத்தில் நரேனை அவமானப் படுத்தியது” என எல்லாம் மனக்கண்ணில் வந்து போக…பூஜாவின் இந்த வாழ்க்கைக்கு தானும் ஒரு விதத்தில் காரணமோ… பழைய நினைவுகள் அவனைச் சூழ்ந்தன…
Hi mam
Enna Achu
Story continue pannunga plz
Long waiting mam
Waiting for Chezhiyan and Aaradhana
Chezian aarathana ena ananga? Vacation podhum sis. Story kulla varasollunga. More than one month wait panrom
Next update please
Very nive. Put soon nect epi
Lovely update pravee
serthu vai Sezhiyan sariya podum
Pooja naren