அனைவருக்கும் நரேன் தான் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்…
“நான் பார்த்துக்கிறேன் மாமா…”
“அத்தை எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றீங்க…”
---
ஆராதனா இப்போது செல்வியிடம் வந்தவளாக… அவளிடம் பேசாமல்… குனிந்தவள்…
“ஓய்… பேபி… உனக்காகத்தான் என் ஃப்ரெண்ட விட்டுக் கொடுக்கிறேன்… ஒழுங்கா என் ஃப்ரெண்ட கஷ்டப்படுத்தாம இருக்கனும்… அத்தை படிச்சுட்டு வந்ததும்… அத்தைகிட்ட சமத்தா இருந்துட்டு என் ஃப்ரெண்ட படிக்க அனுப்பனும் ஓகேவா”
---
மேகலாவுக்கு கமலி ஞாபகம் வந்த போதே…. செழியனின் ஞாபகமும் வந்தது… அவன் பேசியதும் ஞாபகமும் வந்து போனது…
“இங்க பாருங்க… உங்க வேலையைப் பார்த்துட்டு இருக்க மாட்டீங்களா… நீங்க சொன்னதாலதான் இப்போ எங்க வீட்ல சென்னைக்கு கிளம்புறாங்க…”
----
“என் தங்கச்சி திலகா இருக்கும் போதே… அரண்மனை மாதிரி வீடு… தங்கமா பார்த்திருக்கும் என் மகளை…. எதுக்கும் கொடுப்பினை இல்லாமப் போச்சு மேகலை… புள்ளையை இப்படி தனியா விட்டுட்டு வந்துட்டோம்னு நினைக்கும் போது கவலையா இருக்கு… கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா கூட இப்படி அழ மாட்டேன்…” அவர் ஒரு புறம் அழ…
--
ராஜசேகருக்கு அப்படி ஒரு பெருமை… மகன் தான் படிக்கவில்லை… மகளும் மருமகளும் படிப்பதில் அவரைப் பிடிக்க நாலு ஆள் தேவைப்பட்டிருக்க… மேகலாவுக்கோ மகள் மதிப்பெண் எடுத்ததில்… மெரிட்டில் தேர்வானதில்… சந்தோஷம் என்றாலும்… சென்னை செல்ல வேண்டுமே… விடுதியில் படிக்க வேண்டுமே… மனம் தயங்கினாலும் மருமகள் செல்வியும் அவளோடு இருக்கின்றாள் என்ற ஒரு ஆறுதலில் மனம் நிம்மதியுடன் இருந்தார்…
--
அப்போதே ஆராதனாவும் செல்வியும் சென்னைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்க… ஆராதனா இப்போது
“இல்லம்மா… நான் படிக்கப் போகனும்… “ அனைவரிடமும் அவர்கள் முடிவை மறுத்துப் பேச…
---
“ஹ்ம்ம்… சரி சீனியர்.. சொல்லிட்டீங்கள்ள சீனியர்… அப்படியே கூப்பிட்றேன்…. சீனியர் லீடர்… உங்கள மட்டும் சீனியர் கூப்பிடனுமா… இல்ல இவங்களையுமா…” கூட்டத்தில் இருந்த மற்றவர்களைக் கைகாட்டிக் கேட்க
“ஏய்… என்ன நக்கலா… ரதி… இவள இப்படி கவனிக்க கூடாது…”
---
“அந்த பிஎம்டபிள்யூ பையன் யாரு… அவன் பேர் என்ன… அவன் நம்பர் கொடு… அதை மட்டும் பண்ணிட்டு கிளம்பு…” ரதி என்ற பெண் அலட்சியமாகக் கேட்க
“யார் எங்க செல்வி அண்ணனா…”
Hero heroine combination yepponga varum
Waiting sis
Put soon. We are waiting
Waiting pravee