ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
ஹேப்பி நியூ இயர் எல்லோருக்கும்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்.... பெரிய அத்தியாயம்.. அண்ட் அடுத்த எபியோட செல்வி கார்த்தி கேரக்டர்க்கு ஹேப்பி எண்டிங் அண்ட் அவங்க பார்ட்ஸும் அதிகமா இருக்காது... அடுத்து ஆராதனா செழியன் போர்ஷன்ஸ் ஆரம்பம்... சொல்லப் போனால் ’உறவான நிலவொன்று சதிராட...” ஆக்சுவல் கதையும்... ஆராதனா ஆட்டமும் இங்க இருந்துதான் ஆரம்பம்....
ஹேப்பி ரீடிங்...
நன்றி
பிரவீணா
உறவான நிலவொன்று சதிராட 18:
அழகான வெள்ளிநிலா இரவு… மணி பதினொன்றைத் தொட்டிருக்க… அந்த மொட்டை மாடியில் இந்த ரம்மியமான இரவில்… புத்தகங்கள் மற்றும் காகிதங்களின் சத்தம் மட்டுமே… கூடவே வளையோசையும்
வேறு யார்… நாம் நாயகிகளே…
“ஏன் செல்வி… இந்த பார்ட் இம்பார்ட்டண்ட்டா… கண்டிப்பா படிக்கனுமா.. தேவை இல்லதானே” ஆராதனா கேட்க… கேட்ட போதே… இது முக்கியமானது இல்லை என்று தோழி சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே… அந்த அளவு கடினமாக இருந்தது அந்தப் பகுதி…
“எல்லாமே படிக்கனும் தனா… இது முக்கியம் அது முக்கியம் அப்டினு விட்றக் கூடாது” செல்வி ஆராதனா எண்ணத்திற்கு மாறாகச் சொல்லி முடித்திருக்க…
ஆராதனா சின்ன சலிப்போடு…
“சரி படிக்கிறேன்… எப்டியாவது என்ட்ரென்ஸ் எக்ஸாம் எலிஜிபிலிட்டிக்கு மார்க் ஸ்கோர் பண்ணிறனும்.. என்ட்ரென்ஸ் எக்ஸாம்லாம் தட்டிருவேன்… அதெல்லாம் எனக்கு ஜுஜூபி…” ஆராதனா செல்வியிடம் சொல்ல
“ஹ்ம்ம்… அதுசரி… இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல என் ஃப்ரெண்டுக்கு…” செல்வி அவளைக் கலாய்த்த போதே
“ஹலோ உன்னை மாதிரி மாங்கு மாங்குனு படிச்சு 100க்கு 100 வாங்குற கோஷ்டி நான் இல்லம்மா… செலெக்டிவா படிச்சு… நோகாமலேயே 90 பெர்சண்டேஜ் வாங்குற கோஷ்டி… யூ நோ ஸ்மார்ட் கூட்டம்…” இல்லாத காலரைத் தூக்கிவிட்டபடியே தன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து ஆராதனா கவனத்துடன் படிக்க ஆரம்பித்திருக்க… செல்வியின் கவனமோ புத்தகத்தில் இல்லை… நொடிக்கொரு முறஒ அருகில் இருந்த அலைபேசியிடம் சென்று வந்து கொண்டிருந்தது…
“செல்வி… இது படிச்சுட்டதானே… அப்டியே ஒருதடவை ரஃப்பா சொல்லுடி… நான் அதை மனசுல வச்சுக்கிறேன்…” ஆராதனா செல்வியிடம் கேட்டபடி அவளைத் திரும்பி பார்க்க… செல்வியோ இப்போது அலைபேசியில் யாரையோ அழைத்துக் கொண்டிருக்க… ஆராதனாவும் செல்விக்கு நேரம் கொடுத்து காத்திருந்தாள்…
சில நொடிகளில் செல்வி சலிப்போடும் கவலையோடும் அலைபேசியை வைத்தாள்.. பின் மீண்டும் புத்தகத்தைப் பார்த்தவள் மீண்டும் அலைபேசியை எடுத்து காதில் வைக்க…அனைத்தையும் பொறுமையுடன் பார்த்தபடி இருந்த ஆராதனா… இப்போது
“என்ன செல்வி… யாருக்கு போன் பண்ற… ”
“உங்க அண்ணனுக்குத்தான்… மணி 11 ஆகிருச்சு… இன்னும் வரலை… போனும் எடுக்க மாட்டேங்கிறாரு” செல்வி குரலில் பரிதவிப்பும் கடுப்பும் கலந்தும் இருக்க…
“ப்ச்ச்… அதெல்லாம் அண்ணே வந்திருக்கும்… நாம 8 மணிக்கே சாப்பிட்டு மேல வந்துட்டோம்ல… அதான் தெரியல… நீ படிப்பேன்னு உன்னைத் தொந்தரவு பண்ணாம அண்ணனும் தூங்கப் போயிருக்கும்… அம்மா சாப்பாடு போட்ருப்பாங்க… நீ படி…” ஆராதனா இலகுவாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“ப்ச்ச்… அவர் இன்னும் வரலடி… அவர் பைக் சத்தம் தெப்பக் குளத்துக்கிட்ட வரும்போதே எனக்கு கேட்ரும்… இன்னும் கேட்கலையே.” செல்வி கவலையுடன் ஆராதனாவிடம் தன் சொல்ல
“அடேங்கப்பா… என்ன ஒரு பதிபக்தி… இங்க பாரு இங்க பாரு… என் கையெல்லாம் புல்லரிக்குதுடி… ” ஆராதனா நக்கலாகச் சொன்னபோதே செல்வி அவளை முறைக்க…
“முறைக்காத படி… எங்க அண்ணன்லாம் காட்டாறு மாதிரி… இல்லேன்னா சூப்பர் ஸ்டார் மாதிரி… எப்போ வருவார்.. எப்டி வருவார்னு தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்துருவாரு… ” என்ற போதே…
செல்வியின் முகத்தில் மகிழ்ச்சி கலந்த பரபரப்பு..
“தனா தனா… உனக்கு சவுண்ட் கேட்குதா… உங்க அண்ணன் புல்லட் சவுண்ட்..”
ஆராதனாவுக்கு அப்படி ஏதும் கேட்கவில்லை…
“எனக்கு ஒண்ணும் கேட்கலையே…” எனும் போதே… அவர்கள் வீட்டருகே… கார்த்திக்கின் புல்லட் சவுண்ட் அதிகமாகவே கேட்க…
“அட ஆமாம் செல்வி… இப்போதான் கேட்குது.. அது எப்படிடி உனக்கு மட்டும் அவ்ளோ தூரத்துல இருந்து வரும் போதே கேட்டது… இதுக்குப் பேர்தா லவ் டெலிபதியா” ஆராதனா ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதே செல்வி அவளின் பேச்சை எல்லாம் கவனிக்காமல்… வேக வேகமாக எழ…
ஆராதனா சட்டென்று அவளைப் பிடித்து நிறுத்தினாள்…
“ஏய் எங்க போற… அதுவும் இவ்ளோ அவசரமா… படிச்சிட்டு இருக்கிறதை பாதியிலயே விட்டுட்டு…” ஆராதனா சாதாரணமாகத்தான் செல்வியை நிறுத்தினாள்… அதே நேரம் செல்வியின் முகம் மாறியதை அவள் கவனிக்கத் தவறியிருந்தாள்..…
“அவருக்கு சாப்பாடு போடப் போகனும் தனா…” சொன்னபடியே செல்வி அங்கிருந்து விலகப் போக… அவளை அப்போதும் விடவில்லை ஆராதனா
“அட…அண்ணனுக்கு சாப்பாடுதானே அம்மா போட்டுப்பாங்க… நீ படி… வா…” என்று அவளை மீண்டும் இழுத்திருக்க… செல்வி இப்போது சட்டென்று ஆராதனாவின் கையை உதறிபடி…
“என்ன நினச்சுட்டு இருக்க நீ… உனக்குனு ஒரு லிமிட் இருக்கு… அவர் வந்திருக்கார்னு நான் போகனும்னு சொல்றேன்… நீ போகக் கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்…” செல்வி கடுகடுத்தபோதே… ஆராதனா தானாகவே அமைதி ஆகி இருந்தாள்…
”சாரிடி… நீ போ” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு… மீண்டும் தன் புத்தகத்தில் கவனம் வைத்திருக்க… செல்வி அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை… அவளின் எண்ணமெல்லாம் கணவனிடம் இருக்க… இங்கிருப்பாளா என்ன?…
----
இங்கு கூடத்தில் கார்த்திக் சாப்பிட்டபடியே மனைவியைப் பார்க்க… அவளோ அமைதியாக அமர்ந்திருந்தாள்… எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பவள்… இல்லை இவனை வம்பிழுத்துக் கொண்டிருப்பவள் இன்று அமைதியாக இருக்க.. கார்த்திக் வாய் திறந்தான்…
“மேடமுக்கு என்னாச்சு… அதான் சொன்னேன்ல போன் கீழ விழுந்ததுல டச் ஸ்கிரீன்ல ரிப்பேர் போல… ரிங் அடிச்சாலும் எடுக்க முடியல… என்னாலயும் திரும்ப டையல் பண்ண முடியல்… அதுக்காக இப்டியே உம்முனு இருப்பியாடி… சாப்பாடு சாப்பிடும் போது உன் குரலைக் கேட்டு கேட்டு அதுவும் ஒரு சைட் டிஸ் ஆகிருச்சு போலடி… சாப்பாடு உள்ள இறங்க மாட்டேங்குது… ஏதாவது பேசுடி… கோபம்னா திட்டக் கூட செய்டி… ஆனால் பேசுடி” கார்த்திக் மனைவியிடம் கொஞ்சலாகக் கெஞ்ச
“ப்ச்ச்… அதுக்காக இல்ல…”
“அப்புறம் என்ன… ஓ படிக்கனுமா… படிக்கிறதை பாதியில விட்டுட்டு நானா வரச் சொன்னேன்…. அம்மா கூட உன்னை போன்னுதானே சொன்னாங்க…” கார்த்திக் அக்கறையான மென்மையான குரலில் சொன்ன போதே
“தனாவைத் திட்டிட்டேன்…” என்றவள் நடந்ததைச் சொன்னவளாக…
”அவ என்ன அர்த்ததுல சொன்னான்னு தெரியும்… ஆனாலும் நீங்க ஃபோன் எடுக்காத கடுப்புல அவளைத் திட்டிட்டேன் மாமா…” என்ற போதே செல்வியின் கண்களில் நீர் கசிந்திருக்க…
பதறியதோ அவள் கணவன் …
“ஏய்… லூசு இதுக்கு போயா அழற… என் தங்கச்சி உன்னை மாதிரிலாம் இல்ல… எதையும் மனசுல வச்சுக்கவே மாட்டா… நாங்கள்ளாம் அவளை எவ்வளவோ திட்டி இருக்கோம்… ஆனாலும் ‘தனா’ன்னு கூப்பிட்ட உடனே அடுத்த நிமிசம் வந்து நிப்பா.. அவளை பத்தி உனக்குத் தெரிஞ்சது இவ்ளோதானா…” என்றபடியே… செல்வியின் போனை எடுத்தவன்… தங்கைக்கு அழைக்க… ஆராதனாவும் உடனே எடுக்க
“இங்க ஒரு லூசு உன்னைத் திட்டிட்டு வந்துட்டேன்னு அழுதுட்டு இருக்கு… அதுகிட்ட பேசு…” என்றபடி அலைபேசியை ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றியிருக்க…
செல்வி இப்போது வேகமாக
“சாரி தனா… எனக்குத் தெரியும் நீ ஏன் அப்படி சொன்னேன்னு… ஆனான் நான் தான் ரொம்ப பேசிட்டேன்… சாரிடி… கோபமா இருந்தா என்னை அடிச்சிருடி ஆனா… பேசாம இருந்துறாத..”
“செல்வி… அப்டியே கீழ வந்து கன்னத்துலயே வைக்கப் போறேன் பாரு… ஒரு கோபமும் இல்லை… அண்ணனுக்கு சாப்பாடு போட்டுட்டு வா… போதுமா..”
“ஹ்ம்ம்… சாரிடி… ஆனால் நீ என்னை மன்னிச்சுட்டேனு சொல்லவே இல்ல…” எனும் போதே… ஆராதனா அலைபேசியை வைத்திருக்க
“பாருங்க பாருங்க… அவளுக்கு என் மேல கோபம் தான்… அதான் மன்னிச்சுட்டேன்னு சொல்லாமலேயே வச்சுட்டா…” செல்வி மீண்டும் கணவனிடம் மனக்குமுறலைக் கொட்டியிருக்க… அதே நேரம் அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது… இவளும் எடுக்க
“மேடம்… உங்களுக்கு ஒரு பாட்டு அனுப்பி இருக்கேன் … கொஞ்சம் கேட்கறீங்களா…” சொன்னபடி பட்டென்று ஆராதனா வைத்து விட… செல்வி வேகமாக அந்தப் பாடலைப் போட ஆரம்பித்தாள்….
”குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று”
பாடல் துணுக்கு முடிந்திருக்க… செல்வி இப்போது மனம் விட்டு சிரித்தபடி…
“தனா குழந்தைனு சொல்றாளா… இல்ல தெய்வம்னு சொல்றாளா… ஆனாலும் சந்தடி சாக்குல மேடம் அவங்கள குழந்தைனு சொல்லிட்டா உங்க தங்கச்சி…” தன் தோழியை அவள் அண்ணனிடமே கிண்டல் செய்ய…
கார்த்திக்கோ தன் மனைவியிடம்
“இதான் என் தங்கச்சி… சொன்னாலும் சொல்லலைனாலும் அவ இன்னும் எங்களுக்கு குழந்தைதான்” கார்த்திக்கும் தீவிரமான குரலில் சொல்லி முடித்திருக்க… அடுத்து ஆராதனாவே மீண்டும் அழைத்தாள்…
”செல்லம் இப்போ நம்புறியா… அப்டியே… அடுத்த சாங் அனுப்பி இருக்கேன்… உன்னோட பேவரைட்…. தான்… கேளு” என்றவளின் குரலில் குறும்பு மட்டுமே…
’பாம்பின் கால் பாம்பறியாதா…’
அவள் குரலியேயே குறும்புத்தனத்தைக் கண்டுகொண்ட செல்வி இப்போது சுதாரித்தவளாக… அந்தப் பாடலைப் போடாமல் இருக்க…
கார்த்திக்கோ மனைவியைக் கண்டுகொள்ளாமல்.. வேகமாக அதைப்போட ஆரம்பித்திருக்க…
“பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து”
இது மட்டுமே வந்திருக்க… கார்த்திக்கும் அந்தப் பாடல் தெரிந்திருக்க… மனைவியைப் பார்த்து முறைத்தான்… அது கூட பொய் முறைப்பே…
”படிக்கிற வயசுல எல்லா வேலையும் பார்க்கிறது… நீ மட்டும் இல்லாமல் என் தங்கச்சியையும் கெடுத்து வச்சிருக்க…” கார்த்திக் நக்கல் கலந்த புன்சிரிப்போடு தன் மனைவியைத் திட்ட…
செல்வி இப்போது வேகமாக
“ஹலோ… உங்க தங்கச்சியை நாங்க கெடுத்து வச்சிருக்கோமோ… நடத்துங்க… நடத்துங்க… அடேங்கப்பா உங்க வீட்டுக் குழந்தைக்கு விரலைக் கொடுத்தா கடிக்கக் கூடத் தெரியாது… செழியன்னாவும் இப்படித்தான் அவளுக்கு பில்டப் கொடுப்பாரு…” எனும் போதே.. செல்வி தான் யாரைப் பற்றி யாரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தவளாக… சட்டென்று தன் பேச்சை நிறுத்தியவளாக… கணவனின் முகம் மாறியதையும் உணர்ந்தவளாக… வேக வேகமாக
“இப்பவே அவளைப் போய் நான் என்ன பண்றேன்னு பாருங்க…” சொன்னவள்… அடுத்த கணமே தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து நகர்ந்து மொட்டை மாடியை நோக்கியும் சென்று விட்டாள்…
“அராத்து…. அவன் பேரைச் சொல்லிட்டு…. எங்க நான் திட்டிருவேன்னு எஸ்கேப் ஆகுறா…” கை கழுவியபடி எழுந்த கார்த்திக்கின் முகம் இப்போதும் புன்சிரிப்பை மட்டுமே தழுவி இருந்தது
---
செல்வி மாடிப்படியின் கடைசிப் படியில் ஏறி வந்தபடியே…
“தனா… ஏண்டி… உன்னை…” என்றபடியே… அங்கிருந்த கல்லைத் தூக்கி ஆராதனாவை நோக்கி எறிய…
ஆராதனா சிரித்தபடியே
”சேதி என்ன வண்ணக்கிளியே..”
சத்தமாக தோழியைப் பார்த்து பாடி கிண்டல் செய்ய…
“தோ வர்றேண்டி… உன்னை…” என்று செல்வி மட்டும் மேலே ஏறி வர… அவளுக்கு பின்னால் கார்த்திக்கும் வந்திருக்க… அவன் தலை தெரியாததால்… ஆராதனா தன் அண்ணனும் வருவதை அறியாமல்… தன் கிண்டலைத் தொடர்ந்தாள் தன் தோழியிடம்
”ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே..”
”உனக்கு நான் என்ன இந்த வரியையா அனுப்புனேன்… வை திஸ் கொலைவெறி பேபி…” என்று பாடி முடித்தவள்…
”என்ன எங்க அண்ணாகிட்ட பார்வையாலே லவ்ஸ் பண்ணிட்டு வந்துட்டியா” என்றபடியே
”பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே”
என்று ஆராதனா முடிக்கவில்லை…. அவள் அண்ணன் வந்து நின்றிருக்க… அண்ணனைப் பார்த்த அடுத்த நொடி… ஆராதனா… வார்த்தைகளில் தந்தி அடிக்க ஆரம்பித்திருந்தாள்…
“அண்ணே… நீ… எ… எப்போண்ணே .. இ… இங்க வந்த… ச… சரி நீங்க பேசிட்டு இருங்க… நான் போறேன்..” அடுத்த நிமிடம் தன் அண்ணனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் சிட்டாக ஆராதனா பறந்திருக்க… செல்வி கார்த்திக் மட்டுமே இப்போது
---
செல்வியும் இப்போது தன் புத்தகங்களைச் சேகரிக்கும் பொருட்டு அங்கிருந்து விலக நினைத்த அதே நொடி… கார்த்திக்கோ தன்னவளை அவன் தன் இரு கைசிறைகளால் சிறைப்படுத்தியிருக்கோ… செல்வி அவனிடமிருந்து விலகிச் செல்ல முடியாத நிலை… கார்த்திக்கின் உதடுகளின் சிறு புன்முறுவல் மட்டுமே…
செல்வி அவனது ஆளுமையில் குழம்பியவளாக… அவனை நிமிர்ந்து பார்த்து பின் அவனைப் பார்க்க முடியாமல்…
”கீழ போகலாமா” அவள் குரல் அவளுக்கே புதுவிதமாக ஒலித்திருக்க…
”போலாம்… போலாம்” கார்த்திக் அவளையே பார்த்தபடி சொல்லிக் கொண்டிருக்க…
இப்போது செல்வி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு…
”என்ன என் மாமாக்கு தீடீர்னு பொண்டாட்டி மேல காதல் பொங்கி வழியுது…” செல்வி சாதாரணமாக பேசுவது போல குரலில் காட்டிக் கொண்டாலும்… கணவனின் கண்களில் கண்ட காதலில் செல்வி சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள் தான்…
”ஹ்ம்ம்ம்… ஒண்ணுமில்ல… எனக்குத் தெரிஞ்சு செல்வினு ஒரு பொண்ணு இருந்துச்சு… என் கண்ண நேருக்கு நேராப் பார்த்து … திமிரா… என்னை மிரட்டுவா… அதுவும் காதல்னு ஆயுதத்தால என்னைத் தாக்குவா… அந்தப் பொண்ணை ரொம்ப நாளா காணோம்… அதான் நானே அவளைத் தேடிட்டு இருக்கேன்… நீ பார்த்தியா…” கார்த்திக்கின் குரலில் நக்கலா… காதலா… பெருமையா… உணர முடியாத பாவம்…
செல்வி இப்போது…
“அந்தப் பொண்ணு இங்கதான் இருக்கு… சார்க்குதான் தெரியல” சொல்லும் போதே அவள் பார்வை அவனை விட்டு வேறெங்கோ சென்றிருக்க..
“இல்லையே… இப்போ கூட அவ என்னைப் பார்க்கலையே…” என்றவன் அவன் அருகில் நெருங்கிய போதே…
செல்வியும் மெல்ல கண்களை மூடியபடி… அவன் அருகாமையை ரசித்தபடியே…
“இந்த செல்விகிட்ட மட்டும் காதல்ன்ற ஆயுதம் இருந்தப்போ… நான் பலசாலியா இருந்தேன்… அது எப்போ என் மாமாகிட்ட வந்துச்சோ… நான் மொத்தமா தோத்து அவர்கிட்ட சரணடைஞ்சுட்டேன்…” என்றவளின் குரல் மெல்ல மெல்ல தேய்ந்திருக்க.. கார்த்திக்கின் அருகாமை… அவன் மீசையின் தீண்டலில்…. செல்வி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருக்க... கார்த்திக்கோ எப்போதோ செல்வியிடம் தொலைந்திருக்க… காதலில் தொலைந்த இருவரும் தொலைந்த புள்ளியிலேயே தங்களை மீட்டெடுத்து இதழ் சங்கமத்தில் மீண்டும் இணைய ஆயத்தமாகப் போக
“செல்வி…” படிகளில் ஏறி வரும் போதே சத்தமாக ஒலித்த ஆராதனா குரலைக் கேட்ட அடுத்த நொடி… இருவருமே சட்டென்று விலகி நின்றிருக்க…
“என்னோட ஃபோன்… வச்சுட்டு போயிட்டேன்… செல்வி நீ இனிமே படிக்க வர மாட்டதானே… நான் தூங்கப் போகவா… இல்ல” நிறுத்தாமல் தொடர்ந்து பேசியபடியே… இருவரையும் பார்க்க… அந்த இருவருமோ வார்த்தைகளே இல்லாமல் நின்றிருக்க… ஆராதனாதான் குழம்பியவளாக
“என்ன செல்வி… ஏன் ஒரு மாதிரி இருக்க…” தன் அண்ணனைப் பார்த்தவாறே ஆராதனா கேட்டவளாக தன் அலைபேசியை எடுத்துக் கொண்டவள்…
”இந்தப் புக்சை எல்லாம் எடுத்துட்டுப் போகவா… “ என்று கீழே கிடந்த புத்தகங்களையும் தோழியைப் பார்த்தபடியே எடுத்தவள்… பின் அண்ணனைப் பார்த்து
“என்னாச்சுண்ணா… ஏன் செல்வி பேச மாட்டேங்கிறா… நீ ஏதாச்சும் திட்னியா…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நாங்க வர்றோம்… நீ போ…” கார்த்திக்கின் குரலில் மெலிதான கடுமையுடன் அதட்டல் வந்திருக்க… இருந்தும் அந்த அதட்டலுக்கு பயப்படாமல்… தன் தோழியைப் பார்த்தவள்…
“செல்வி நான் போகவா… ஒண்ணும் பிரச்சனை இல்லதானே… “ ஆராதனாவின் பார்வை தன் அண்ணனிடம் தன் தோழியிடமும் மாறி மாறி நிலைத்திருக்க…
“நீ போ தனா… நாங்க பேசிட்டு வர்றோம்…. கொஞ்சம் லேட் ஆகும்” செல்வி இப்போது வாய் திறக்க… அந்த வார்த்தைகள் கூட பாதிதான் வெளியே கேட்டது…
கேட்டது செல்வியின் குரலா எனும்படி ஆராதனா மீண்டும் மீண்டும் அவளைப் பார்த்தவள்…
“ப்ராமிஸா ஒண்ணுமில்லைதானே… அண்ணன் சும்மா பேசினாலே அதட்ற மாதிரிதான் இருக்கும் செல்வி… நீ ஏதும் தப்பா எடுத்துக்காத…” என ஆரம்பித்தவளிடம்… இடைமறித்த கார்த்திக்... இப்போது புன்னகை முகத்துடன்
“இந்த அட்வைஸ் நீ உன் ஃப்ரெண்டுக்குச் சொல்லக் கூடாது… உன் அண்ணனுக்கு சொல்லனும் தனா… உன் ஃப்ரெண்ட் தான் என்னை மிரட்டிட்டு இருக்கா…” ஆராதனாக்கு பதிலாகச் சொன்ன போதும் அவன் பார்வை அவன் மனைவியிடம் மட்டுமே நிலைத்திருக்க…
“செல்வியா… உங்களத் திட்டினாளா… நம்பவே முடியல்” என்று செல்வியைப் புரியாமல் பார்க்க… அவளோ அவள் கணவனிடம் பார்வையை வைத்திருக்க… ஆராதனாக்கு அப்போதுதான் புரிந்தது… ’பூஜை வேளைக் கரடி’ என்ற உவமைக்கு தான் சொந்தாக்காரி ஆகிக் கொண்டிருந்ததை…
தன்னையே தலையில் குட்டிக் கொண்டவளாக… நாக்கைக் கடித்துக் கொண்டவளாக…
”சாரி…” அவர்களின் நிலைமையைப் புரிந்து கொண்டவளாக... அவர்களது தனிமையை கெடுத்த தர்மசங்கடமான பாவனையில் சொன்னவள்
”நான் குட்நைட்… உங்களுக்கும் குட்நைட்” அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் ஆராதனா உளர ஆரம்பித்த போதே…
“குட்நைட்…” செல்வியும் கார்த்திக்கும் சேர்ந்து அவளுக்கு சொல்லி முடித்திருக்க..
“ம்க்கும்… அவங்க ரெண்டு பேரும் என்னைப் பார்க்கவே இல்லை… குட்நைட் எனக்கு சொல்றாங்களா… இல்ல அவங்களுக்கே சொல்லிக்கிறாங்களா… ஆராதனா உன்னைச் சொல்லனும்… இந்த ஃபோன் அவ்ளோ முக்கியமா என்ன… ஆனாலும் இப்போலாம் நம்ம செல்வி ஃபுல் லவ் மோட்லயே இருக்காளே… ஆனால் அவங்க லவ்ஸப் பார்த்து எனக்கு ஏன் ஹார்ட் பீட் இவ்ளோ இன்கிரிஸா ஆகுது… எனக்கே இப்படினா… பாவம் என் அண்ணா… அண்ணே நீ நல்லா மாட்டின போல என் ஃப்ரெண்ட்கிட்ட… உனக்குலாம் செல்வி மாதிரி ஆளுதான் வேணும்… நல்லா வேணும் உனக்கு…” ஆராதனாவுக்கு அவர்களின் காதல் மொழி விளங்காமல் தனக்குள்ளாகவே படபடத்துக் கொண்டும்... புலம்பிக் கொண்டும் திட்டிக் கொண்டும் போனவள்… தன் அறைக்குள் சென்று உறங்கியும் இருந்தாள்..
--
மாடியிலோ… செல்வி அவள் கணவனின் கைவளைவுக்குள் இருந்தபடி…
”இந்த வீட்ல எல்லோரும் என் மேல ஏன் இவ்ளோ பாசமா இருக்காங்க மாமா…” கார்த்திக்கின் மார்பில் சாய்ந்தபடி அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டவள்…
“ஒண்ணொன்னும் பார்த்து பார்த்து பண்றாங்க… என் முகத்துல சின்ன மாறுதல் வந்தா கூட அவ்ளோ பதறுறாங்க… அத்தை… மாமா… அம்மாச்சி… தாத்தா… எல்லாரையும் விட தனா…” என்று எங்கோ பார்த்து சொன்னவள்… மீண்டும் தன் கணவனைப் பார்த்தவள்…
“இதெல்லாம் செல்வின்றதுனால இல்ல… கார்த்திக்கின் மனைவின்றதுனாலதான மாமா.. இந்த வீட்டுக்கு நீங்க அவ்ளோ முக்கியம்… ஆனால் இப்படிப்பட்டவங்களை எல்லாம் மறந்துட்டு… ஏன் மாமா அன்னைக்கு சாகத் துணிஞ்சீங்க… தனாகிட்ட கிட்ட இதப் பற்றி கேட்ட இப்போதும் நடுங்குறா… “ செல்வி.. தன் கணவனிடம் கேட்க
கார்த்திக் அமைதியாக நின்றிருந்தவன்…
“தெரியலடி…. முட்டாளா இருந்துட்டேன்…. அவங்கள எல்லாம் கஷ்டப்படுத்திட்டேன்…” மனம் வருந்திச் சொன்னவன்…
“ஆனால் நாம ரெண்டு பேரும்…வாழப் போற வாழ்க்கைதான் அவங்களோட மன வேதனைக்கெல்லாம் மருந்து… “ தன் மனைவியைப் பார்த்து சொன்னவன்… மனைவியின் முகத்தில் இருந்த நக்கலைப் பார்த்தபடி
“இங்கயும் லவ் இருக்கு… எப்போ வந்துச்சுனுலாம் தெரியாது… ஆனால் வந்துருச்சு” சொன்னவன்… என்ன நினைத்தானோ… சட்டென்று தன்னை மாற்றிக் கொண்டவனாக…
“உன்கிட்ட… என் மனசை… அதுல இருக்கிற காதலை எல்லாம் கொட்டனும்னு துடிச்சிட்டு இருக்கேன் செல்வி… ஆனால் நேரம் காலம் என்னைத் தடுக்குது… “ என்றவனின் கைகளைத் தனக்குள் வைத்துக் கொண்டவள்…
“மாமா… நான் ஒண்ணு சொல்லவா… ஆனால் திட்டக் கூடாது“ என்று பீடிகை போட… கார்த்திக் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க…
”கமலிக்காக்கு உங்களப் பிடிக்கலைன்றதுன்றது நான் போன ஜென்மத்துல செய்த தவத்தினால கிடைத்த வரம்னு நான் நெனச்சுக்குவேன்… உண்மைதானே…” சிறு குழந்தை போலச் சொன்னவளை…அடுத்த நொடி கார்த்திக் தன்னோடு இன்னும் இறுக அணைத்துக் கொண்டிருக்க… அவன் முகத்தைப் பார்த்தபடி செல்வி சொன்னாள்…
“ஐயோ மாமா.. நான் உங்ககிட்ட ஒரு மூணு வார்த்தை வாய் வார்த்தையாலதான் கேட்டேன்… ஆனால் செயலா காட்றீங்க மாமா... ஆனாலும் உங்க வாய்ல இருந்து செல்வி ஐலவ்யூன்னு கேட்கனும்னு ஆசையா இருக்கு மாமா” அவனுக்குள் இன்னும் நெருங்கியவளை… காதலோடு இறுகி அணைத்துக் கொண்டவனாக
“சீக்கிரமா… தமிழ்…” அவளுக்கு பதில் சொல்லாமல்… தனக்குள் சொல்லிக் கொண்டவன் தன் அணைப்பின் இறுக்கத்தை இன்னும் அதிகரித்திருந்தான்
---
சில வாரங்கள் சென்றிருந்த நிலையில்….
“டேய் செழியா…” முகிலன் அலைபேசியைக் காதில் வைத்தபடி அந்த நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறையில் வந்து நின்றிருந்தான்…
“ஹான் ரிஷப்ஷன்லதான் இருக்கேன்… ரூம் நம்பர் சொல்லு,…” என்றவனுக்கு எதிர் முனையில் இருந்த செழியனும் பதில் சொல்லி முடித்திருக்க… அடுத்த சில நிமிடங்களில் முகிலன் செழியன் தங்கியிருந்த அறைக்குச் சென்றிருந்தான்…
“மச்சான்… மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றவங்களுக்கு எல்லாம் இதே ஹோட்டல்ல ரூம் அரேஞ்ச் பண்ணிட்டேன்… நாளைக்கு இங்க இருந்து ஊருக்கு வந்திருவாங்க…” செழியன் சொல்ல…
முகிலனும் தலையாட்டியவனாக
”தாங்க்ஸ்டா செழியன்… வனிதாவுக்கு இந்த வரனை ஏற்பாடு பண்ணி… அதுக்கு இவ்ளோ தூரம் நீயும் மெனக்கெட்ற…. ரொம்ப நன்றிடா… “ என்ற போதே
”டேய் லூசாடா நீ… எனக்கு கமலி எப்படியோ அப்படித்தான் வனிதாவும்… நீ ஏண்டா பிரிச்சுப் பார்க்கிற…” செழியன் நண்பனை முறைக்க… முகிலனும் இப்போது தன் நிலைக்கு வந்தவனாக
“அப்புறம்டா… காலேஜ்க்குப் போனியா… செமினார்லாம் நல்லபடியா முடிஞ்சதா…” என்ற முகிலன்… நண்பனின் முகம் மாறுதலை உணர்ந்தவனாக… அதன் காரணம் புரிந்தவனாக
“எனக்கே தெரியாதுடா… பெரியப்பா குடும்பம் திடீர்னு ஊருக்கு கிளம்பிப்போவாங்கன்னு… உன்கிட்ட சொன்னா நீ எங்க நீ இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிருவியோன்னு சொல்லலடா…” முகிலன் குற்ற உணர்வில் சொல்ல..
செழியன் சில நிமிடங்கள் மௌனித்தவனாக… பின் நண்பனைப் பார்த்தவன்…
“இன்னும் நீ என்னை பழைய செழியனாவே பார்த்துட்டு இருக்க முகிலா… அந்த பழைய செழியன்னா… இந்நேரம் ’ஆரா’ வைப் பார்க்காத ஆத்திரத்துல என்ன பண்ணிட்டு இருந்திருப்பேனோ தெரியல… இப்போ மனசு முழுக்க ஏமாற்றம் இருந்தும்… நான் வெளிய அமைதியா இருக்கிறதுக்கு காரணம்.. ஒண்ணு காலேஜ்ல நான் செமினார் கொடுக்கிறேன்னு ஒத்துகிட்டதும்… இன்னொன்னு வனிதா மேரேஜை நான் தான் முன்ன நின்னு முடிச்சு கொடுக்கனும்ன்ற கடமையும் தான்…”
“அதாவது பெர்சனல் வேற… கடமை, தொழில் வேறன்னு நான் கொஞ்சம் தெளிவாகிட்டேன்…” என்ற செழியன் சிரித்தபடியே
“இந்த அளவுக்கு தெளிவா இருக்கிறதுக்கு காரணமும் நீதான்… நீ அன்னைக்கு எனக்கு சொன்னியே.. படிப்பு முக்கியம்னு… காதல்னு படிப்பை கோட்டை விட்றக் கூடாதுன்னு… உண்மையைச் சொல்லனும்னா… மூழ்கப்போன படகுல இருந்தவனுக்கு மரக்கட்டை உதவியா கொடுத்து உயிரக் காப்பாற்றின மாதிரிதான் தான் அன்னைக்கு நீ சொன்ன அறிவுரைலாம்… தெரியல அப்போ இருந்த நிலைமல என்னோட அப்பா அம்மா இவங்கள்ளாம் சொல்லியிருந்தா கேட்ருப்பேனான்னு… ஆனா என்னோட சேம் ஏஜ்ல இருக்கிற ஒருத்தவன் நீ சொன்னப்போ நான் அதை யோசிச்சேண்டா…”
முகிலன் இப்போது..
“அந்த பக்குவம் தாண்டா உன்னை இப்போ இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு… இவன் என்ன அட்வைஸ் பண்றது நாம என்ன கேட்கிறதுன்னு நீ நெனச்சிருந்தா”
முகிலனும் தன் நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேச… அன்றைய நாட்களில் காதல் என்ற பெயரில் செழியன் செய்த அடாவடிகள் எல்லாம் இருவருக்குமே ஞாபகத்துக்கு வந்து போக… மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது…
செழியன் அவன் ஞாபகங்களில் அப்படியே இருக்க… முகிலன் தான் அவனைக் கலைத்தான்…
”சரிடா… அப்போ கிளம்பலாமா… “ முகிலன் கேட்க
செழியன் புருவம் சுருக்கினான்…
“என்னடா பார்க்கிற… நம்ம ஊருக்குதான்… நீ எதுக்கு வேஸ்டா இங்க இருக்க… காசுக்கு பிடிச்ச கேடு” முகிலன் நக்கலாகக் கேட்க
“ப்ச்ச்… வரலடா…”
“என்னது வரலையா… டேய் இதெல்லாம் ஒவர்டா… உன் ஆளு இருந்தாத்தான் ஊருக்கு வருவீங்களோ… ஏன் எங்கள எல்லாம் பார்த்தா உங்களுக்கு ஆளாத் தெரியலயா…” முகிலன் முறைக்க
“லூசு மாதிரி உளராதடா…” செழியன் பட்டென்று சொன்னவனாக…
”இவ்ளோ நாளும் ஊருக்கு வந்தா… மாமா வீடு… அவங்க உபசரிப்புனு இருக்கும்… இப்போ யோசிச்சுப் பாரு… அதெல்லாம் நடக்குமா என்ன… ஏதோ அனாதை மாதிரி ஃபீல் பண்றேண்டா… ஊருக்கு வர்றோம்னு ஒரு போன் போட்டா போதும்… திருவிழா மாதிரி எங்க மாமா வீடு எங்கள உபசரிப்பாங்க… கொண்டாடுவாங்க… ரொம்ப மிஸ் பண்றேண்டா…”
“டேய் மாப்பிள்ளை இதெல்லாம் தற்காலிகம்டா…. நீ அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையான பின்னால… இதென்ன இதை விட பிரமாதமா உன்னைக் கொண்டாடப் போறாங்க... “
செழியனின் முகம் அவனையுமறியாமல் புன்னகையை பூசிக் கொண்டதுதான்… இருந்தும்
“இருந்தாலும்… அந்த ஃபீல் வேற… இந்த ஃபீல் வேற… இது தாய் மாமன் வீட்டு உபசரிப்பு… அது வேற ஃபீல்டா…” செழியன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தவன்… மலரும் நினைவுகளை நண்பனிடமும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்…
“சாப்பாடு டைம் ஆகிட்டா போதும்… மாமா வந்துருவாரு… என்னதான் அம்மாச்சி பார்த்து பார்த்து பரிமாறினாலும் மாமாவுக்கு திருப்தி ஆகாது… “ என்றவன்
”அதிலயும் கமலிக்கு ஃபுட் அலர்ஜி இருக்கிறதுனால… கமலிக்கு பார்த்து பார்த்து பண்ணுவாங்க…. எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோம்டா… ” பெருமூச்சு விட்டவன்
“அம்மாச்சி தாத்தா கூட எங்கள மறந்துட்டாங்கள்ளா…”
“இதெல்லாம் விட… இந்த சில்வண்டு… என்னப் பார்த்தால் மட்டும்தான் முகத்தை திருப்பிக்கிரும்... ஆனா அத்தை அத்தைனு ஒரு நாளைக்கு மூணு தடவை கால் பண்ணி பேசும்… அவ கூட ” செழியன் ஆராதனாவைப் பற்றி சொன்னபடியே
“அவ என்ன பண்ணுவா… அப்பா அண்ணன் சொல்றதைக் கேட்டுட்டு இருக்கனும்… எதிர்த்து பேச மாட்டா”
“இவள எப்படிடா என்னை லவ் பண்ண வைக்கப் போறோம்னு யோசிச்சது போய்… எப்படிட்டா அவள என்கிட்ட பேச வைக்கிறதுன்னு இப்போ யோசிச்சிட்டு இருக்கேண்டா…”
”காலேஜ்ல எப்படியும் பார்ப்போம்… ஏதாவது எப்படியாவது பேசி சரி பண்ணிறலாம்னு வந்தேன்… அட்லீஸ்ட் செல்வி கிட்டயாவது பேசி இவள பேச வைக்கலாம்னு நெனச்சேன்… ஹ்ம்ம்… எல்லாத்துக்கும் ஆப்பு வச்சிட்டான் அந்த கார்த்திக்… நீ எதுக்கு அவன்கிட்ட நான் வர்றேன்னு சொன்ன…. வீட்ல இருக்கிற எல்லாறையும் அனுப்பிட்டு தலைவர் மட்டும் ப்ரசண்ட்னா… சார் என்கூட சண்டைக்கு வரப்போறாராமா…”
முகிலன் இதற்கு ஏதும் பதில் சொல்ல வில்லை மாறாக கொஞ்சம் கலவரமான முக பாவத்துடன் இருக்க
“நீ பயப்படாத… அவன் பிரச்சனை பண்ண மாட்டாண்டா… ஏன்னா வனிதாவை அவனுக்கு பிடிக்கும்…. ஆரா எப்படியோ அப்படிதான் வனிதாவும் அவனுக்கு… அப்படியே பிரச்சனை பண்ணினாலும்… மாப்பிள்ளை வீடு போன பின்னால பண்ணுவான்… பார்த்துக்கலாம் விடு…. ஆனால் நான் நாளைக்கே… மாப்பிள்ளை குடும்பத்தை கூட்டிட்டு அவங்களோடே வர்றேண்டா…” செழியன் முகிலனிடம் சொல்லி அனுப்பி விட்டிருந்தான்… முகிலனும் சென்றிருந்தான்…
---
ஆராதனாவை கல்லூரியில் பார்க்க முடியவில்லை… இனி ஊரிலும் பார்க்க முடியாது என்று தெரிந்து விட்டது…
அந்த உயரமான கட்டிடத்தின் அறையில் இருந்து சன்னல் வழியாக வானில் தெரிந்த நிலவைப் பார்க்க… களங்கமில்லா ஆராதனா முகம் மட்டுமே… அந்த நிலவு முழுக்க…
“உள்ளங்கை நெல்லிக்கனி போல இருந்தவள்… ஆகாய நிலவாக மாறிக் கொண்டிருக்கின்றாளோ…” ஏனோ மனம் தவிக்க ஆரம்பித்திருந்தது
---
அடுத்த நாள் செழியன் சொன்னது போலவே வனிதாவை நிச்சயம் செய்ய வந்த மாப்பிள்ளை வீட்டினரோடு ஆராதனாவின் ஊரில் வந்திறங்கினான்…
கார்த்திக் முகிலன் குடும்பத்தாரோடு நின்றிருந்தாலும்… கொஞ்சம் கூட செழியனைக் கண்டு கொள்ளாமல்… பெண் வீட்டாராக வந்த மாப்பிள்ளை வீட்டை வரவேற்றவன்… அங்கு முன் நின்று எல்லா ஏற்பாடையும் பார்த்து பார்த்து செய்ய… யாருக்கு நிம்மதி ஆகியதோ இல்லையோ… செழியன் மனம் நிம்மதி ஆகியது…
ஒரு வழியாக வனிதாவுக்கு திருமண நாள் குறிக்கப்பட்டு… பரிசம் போடப்பட்டு நிகழ்வு சுபமாக முடிந்திருக்க… அடுத்து விருந்துக்கும் வந்த உறவினர்கள் தயாராகி இருந்தனர்…
---
”டேய் முகிலா… நான் களத்து வீட்டுக்கு போறேன்… அங்க விருந்துக்கு எல்லாம் ரெடி ஆகிட்டு இருக்கும்… நான் போய் எல்லாம் தயார் பண்ணிட்டு சொல்றேன்… நீ எல்லோரையும் கூட்டிட்டு வந்துரு” கார்த்திக் பொறுப்பாகச் சொல்லி அங்கிருந்து கிளம்ப…
செழியன் கார்த்திக்கையேதான் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான்… கார்த்திக்கின் இந்த மாற்றம்… அதிலும் அவனின் அந்த பொறுமை என மனம் கார்த்திக்கையே சுற்றிக் கொண்டிருக்க… செல்விக்கு மனம் தானாகவே நன்றி உரைத்தது….
இப்படி செழியன் ஆராதனாவை விடுத்து மற்ற விசயங்களில் தன்னை புகுத்திக் கொண்டிருந்த போது…
“முகிலா… கண்ணாத்தா ஆத்தாளுக்கு சாப்பாடு கொடுக்கனும்டா… கஞ்சி தான் வேணும்னு சொல்லிருச்சு… மணி 1 மணிக்கெல்லாம் கொடுக்கனும்… இல்ல மேகலாக்கா திட்டிரும்…” என்ற போதே செழியன் தன் தலையிலயே தட்டிக் கொண்டவனாக
“பாட்டி வீட்ல தானே இருப்பாங்க.. பாட்டிய எப்படி மறந்தேன்…” என்றபடியே…
“அத்தை நான் பாட்டிய பார்க்க போறேன்… நான் சாப்பாடு கொடுத்துறேன்… ஏன் என்கிட்ட சொல்ல மாட்டீங்களா… நானும் பாட்டிய ஒரு காலத்துல பார்த்துகிட்டவந்தான்… அதெல்லாம் சரி… மாத்திரை கஞ்சில கலந்துட்டீங்க தானே… அவங்க தனியா மாத்திரை போட மாட்டாங்க…” செழியன் சொல்ல…
“இல்லப்பா… நீ சாப்பாடு கொடுப்பேன்னு தெரியும்… ஆனால் கார்த்திக் தம்பி வந்துச்சுனா…. அதான்” முகிலனின் தாய் தயங்கி நிற்க…
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை ஆகாது… கார்த்திக்கும் பிரச்சனை பண்ண மாட்டான்… கொடுங்க” என்று பாத்திரத்தை வாங்கிக் கொண்டவன்…
“டேய் முகிலா… நீ போ… நா அப்புறமா வர்றேன்…” என்று முகிலனிடம் சொல்லிவிட்டு தன் தாய் மாமன் வீட்டை நோக்கிப் போனான்…
---
”யப்பா… பேராண்டி.. உனக்கு இன்னைக்குத்தான் கண்ணு தெரிஞ்சதா… என் பேத்தி எப்படி இருக்கா… திலாகவை என் கண்ணெல்லாம் தேடுதுய்யா… புள்ளைய இப்டி ஒத்தையா விட்டுட்டாங்களே… பேத்தி மக இப்படி பண்ணிட்டாளே…” அந்த மூதாட்டி புலம்பியபடியே சாப்பிட்டுக் கொண்டிருக்க..
“ப்ச்ச் பாட்டி… சாப்பிடுங்க…”
“அந்த செல்விப் பொண்ணும் நல்ல பொண்ணுதான்… ’கமலி’ ’தனா’ மாதிரியேதான் கவனிச்சுக்கிறா… ஆனாலும் மனசு ஏத்துக்கிற மாட்டேங்குதுயா…” கண்ணாத்தாள் பாட்டியின் கண்களில் நீர் வழிந்திருக்க..
“அய்யா… ராஜா எனக்கு ஒரே ஒரு ஆசைதான்… ஆனா உன்கிட்ட கேட்டா கிடைக்குமான்னு தெரியலய்யா… கேட்கிறது சரியான்னும் தெரியலய்யா… ஆனாலும் இந்த கிழவி மனசு அடிச்சிக்குது” என்று கண்ணாத்தாள் பாட்டி அவனிடம் விரக்தியாகச் சொன்னார்….
கமலி- இந்தக் குடும்பம்… பாசம் என இருந்தவளே வேறொரு முடிவை எடுத்திருக்க… கண்ணாத்தாள் பாட்டியால் செழியனிடம் என்ன கேட்க முடியும்… அந்த காரணத்தினாலே பாட்டி விட்டேற்றியாகப் பேச
”ஏன் பாட்டி இப்படி எல்லாம் பேசுறீங்க…” செழியனும் தன் பாட்டி என்ன சொல்ல வருகிறார்… என்ன சொல்ல நினைக்கிறார் என்று தெரிந்தும் நேரிடையாகச் சொல்லாமல்
“நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது நடக்கும் பாட்டி… ஆனால் யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாமே… நீங்க தனாவைப் பற்றித்தான் பேசுறீங்கன்னு தெரியும் பாட்டி… அவ படிச்சு முடிக்கட்டும்… அவளை யாரும் தொல்லை பண்ணாதீங்க “ என்று அவர் கைகளோடு தன் கைகளை அழுத்திக் கொடுக்க… கண்ணாத்தாள் பாட்டி என்ன நினைத்தாரோ… வேறெதுவும் பேசாமல் தன் பேரனையேப் கண்ணீர் மலகப் பார்த்தவர்…
“என் பேரன் மகளை விட்றாதய்யா… நம்ம குடும்பத்தைத் தவிர… பாசம் வைக்கிறதைத் தவிர வேறெதுவும் தெரியாதுய்யா என் பேரன் மகளுக்கு… ” என்றவர் அடுத்த நிமிடமே…
“ஆனால் நம்ம நினைக்கிறதா நடக்குது… யாருக்கு எங்க எழுதிருக்கோ அங்கதானே விதி இழுத்துட்டு போகும்… இந்த கெழவி ஏதோ ஒரு ஆசைல புலம்பினேன்… மத்தபடி நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கப்பா… உனக்கு பிடிச்ச வாழ்க்கை வாழு… நீ நல்லா இருப்பா… ” என்றவரிடம் செழியனும் மேற்கொண்டு பேசாமல்
”சரி தூங்குங்க… உங்களுக்கு தூக்கம் வந்திருச்சுனு நினைக்கிறேன்” என்ற போதே பாட்டி தூக்க கலக்கத்தில் இன்னும் ஏதேதோ புலம்ப ஆரம்பித்திருக்க… செழியன் அவரைப் படுக்க வைக்க அடுத்த நிமிடம் அவரும் தூங்க ஆரம்பித்திருக்க…
அமைதியாக அமர்ந்து அவரையேப் பார்த்தபடி இருந்தான் செழியன்…
---
ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும்… செழியனும் அங்கிருந்து கிளம்பத் தயாரானான்… அறையை விட்டு வெளியே வர நினைக்கும் போதே… வெளிவாசலில் அரவம் கேட்க…
கார்த்திக்காக இருக்குமோ என செழியன் யோசித்த போதே…. அவன் யோசனை சரியே என்பது போல கார்த்திக் வந்து நிற்க... கூடவே நரேனும் அவன் அருகே…
வேஷ்டியைத் மடித்துக் கட்டியபடி செழியனை முறைத்தபடி நின்றிருந்த கார்த்திக்கின் கண்களோ தீம்பிழம்பாக காட்சி அளித்திருக்க…
“கார்த்தி… “ எனத் தடுமாறிய போதே
அடுத்த நிமிடம்… செழியனின் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்திருந்தான் கார்த்திக்…
”வெளில போடா… என்ன தைரியம் வீட்டுக்குள்ள வந்து நிப்ப…” செழியனை கார்த்திக் தரதரவென்று நடுக்கூடத்திற்கு இழுத்து வந்திருக்க
“கார்த்தி… நான் பிரச்சனை பண்ண வரல… பாட்டிய பார்க்க வந்தேன்… நான் பார்த்துட்டேன்… போயிட்டே இருக்கேன்” செழியன் பொறுமையாகச் சொல்ல…
“பாட்டியா… எந்த மண்ணாங்கட்டி சொந்தமும் இங்க இல்லை… வந்துட்டாரு.. பாட்டினு…”
‘கார்த்தி… நீ சொன்னாலும்… சொல்லலைனாலும்… வேணும்னாலும் வேண்டாம்னாலும் எந்த சொந்தத்தையும் நீயோ நானோ மாத்த முடியாது”
“அடேங்கப்பா… “ நரேன் நக்கலாகச் சொல்ல… செழியன் அவனை முறைத்தபடி… ஆனாலும் அவனிடம் பேசாமல்…
“கையை எடு கார்த்தி… உன்னை தூண்டி விடவே சில பேர் இருக்காங்க போல…” நரேனைப் பார்த்து முறைத்துக் கொண்டே கார்த்தியிடம் தொடர்ந்தான்
“இவ்ளோ நேரம் பிரச்சனை பண்ணாமத்தானே இருந்த.. இப்போ என்னாச்சு உனக்கு…”
“அது என் வீட்டுக்குள்ள வர்ற வரைக்கும் தான்… தெருவுல வர்றவன் போறவண்ட்ட பிரச்சனை பண்ண நானும் தயாரா இல்ல… ஆனால் என் வீட்டுக்குள்ள வந்தா அப்படித்தான் பேசுவேன்… கழுத்தைப் பிடிச்சு தள்ளுவேன்” கார்த்திக்கின் கரம் இன்னும் இறுகி இருக்க…
இப்போது செழியன்…
“இது உன் வீடு மட்டுமல்ல… என் தாய் மாமா வீடு… எனக்கும் அதுல உரிமை இருக்கு…” செழியன் சொல்லி முடிக்கவில்லை… கார்த்திக் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான்..
”ஓ… ஓ… தாய்… மாமா… என்ன என்ன சார் சொன்னீங்க… ஆனால் பாரு நரேன்… தாய் மாமனைப் பற்றி… அந்த உறவு முறைப் பற்றிலாம்… இந்த மாமா பையன் பேசுறான் பாரு… ஆனா பாரு மாமா வேலையை இப்போ புரோக்கர் லேபிளா மாத்திட்டான்… பொண்ணு மாப்பிள்ளைனு நல்லா செட் பண்றாண்டா… செழியன் செழியன்னு ஒரே புகழாரம் தான்” கார்த்திக் நரேனிடம் நக்கலடிக்க…
நரேன் இப்போது…
“தேவையில்லாம பேசாத கார்த்தி… கமலி வனிதான்னு அவங்களையும் உள்ள இழுக்கிற நீ…”
“அட நீ வேறடா… இவன் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் பிரிக்கிற வேலை பார்த்திருக்கான்…” கார்த்திக் இன்னும் நக்கலாக ஆரம்பித்திருக்க
“இப்போ உனக்கு என்ன கோபம் அவன் வீட்டுக்குள்ள வந்ததுதானே… அதுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணு… தேவையில்லாதத பேசாத… இல்ல உனக்கு கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலேன்னா… நகரு… நான் அவனை பிடிச்சு வெளிய தள்ளுறேன்..” நரேன் இதுதான் சாக்கென்று வந்திருக்க
செழியன் நரேனை முறைத்தபடி…
”நரேன் இது எனக்கும் என் கார்த்திக் மச்சானுக்கும் உள்ள பிரச்சனை…. எங்க குடும்ப பிரச்சனை நீ இதுல தலயிடாதா” என்ற போதே
“யாரு தலையிடக் கூடாது… என் மச்சான் இவன்… இவனுக்கு இல்லாத உரிமையா….” என்ற கார்த்திக்… இப்போது நரேனிடம் திரும்பி…
“டேய் நரேன்… உனக்கு என் மச்சானா வேற வேலை இருக்கு… என் புள்ளைக்கு உன் மடியில உட்கார வச்சு காது குத்த வைக்கனும்… அதை விட்டுட்டு இந்த *யைலாம் தள்ளி விட்றேன்னு உன் உரிமையை தரம் தாழ்த்தக் கூடாது…. நகரு…” என்ற போதே செழியன் கார்த்திக்கின் கையைத் தட்டி விட்டபடி…
“கார்த்தி… உனக்கு என் மேல கோபம் இருக்கிறது நியாயம் தான்… பேசித் தீர்த்துக்கலாம்… இல்லையா என்னை எவ்ளோ அடி வேணும்னாலும் அடிச்சுக்கோ… ஆனால்” என்ற போதே
“அடச்சீ வாய மூடுடா… கூட்டத்தோட கூட்டமா கோழை மாதிரி வந்துட்டு… யாரும் இல்லாதப்போ வீட்டுக்குள்ள ஏதோ நுழையுற மாதிரி நுழஞ்சுட்டு நீ பேசுறியா…. சொல்லப் போனா உன்னை ஊருக்குள்ளேயே காலை எடுத்து வச்சிருக்க விட்ருக்கக் கூடாது… எங்க அப்பா என்னைக் கட்டிப் போட்டுட்டு போயிட்டாரு… உன்கிட்ட பிரச்சனை பண்ணக்கூடாதுன்னு… மனுசனை நோகடிச்சுசுட்டீங்கடா உங்க குடும்பமே சேர்ந்து… அவருக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்னு… இல்லைனு வச்சுக்கோ...” என்று விரல் காட்டி எச்சரித்தவன்…
“போயிரு… ஒழுங்கா…” என்றவனிடம்… செழியன் இப்போது நிமிர்ந்து நின்றான்
”அப்படிலாம் போக முடியாது கார்த்திக்… என்னை இந்த சொந்தத்திலருந்து கழட்டி விடவும் முடியாது… இன்னைக்கு நீ என்னை வீட்டை விட்டு வெளிய தள்ளினாலும்… சீக்கிரமா என்னை… என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையே ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள வரவேற்ப… கூடிய சீக்கிரம் இது நடக்கும்” செழியனும் சவாலாகச் சொல்லிவிட்டு தன் தாய் மாமன் வீட்டை விட்டு வெளியேறியவன்… தனக்குள்ளேயே இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டவனாக முகிலனிடம் கூட இங்கு நடந்த சம்பவத்தைச் சொல்லவில்லை… அடுத்து சென்னைக்கும் சென்று விட்டான்…
---
அன்றிரவு….
”ஏண்டா அவன் அவ்ளோ தெனாவெட்டா சொல்றான்… ஆரத்தி எடுத்து வரவேற்பேன்னு..”
நரேன் கார்த்திக்கிடம் யோசனையாகக் கேட்க
”அவன் கிடக்கிறான்… ஆரத்தி எடுத்து வரவேற்க… என் தங்கச்சியவா கல்யாணம் பண்ணப் போறான்…” கார்த்திக் கடுப்போடு சொல்ல…
“ஏன் பண்ண மாட்டானா…” நரேன் கேட்க
”யாரு இவனா… நல்லவன்னு நம்பின இவன் அக்காவே அப்படி போயிட்டா… இவன்லாம் அப்போவே என் தங்கச்சிய மட்டமா பார்ப்பான்… நானே பார்த்திருக்கேனே… இவன் அவகிட்ட சுள்ளு சுள்ளுனு விழறதை… என்கிட்டயே சொல்லிருக்கான்… தனாவைப் பிடிக்காதுனு… இவனுக்கு எங்கம்மாவையும் பிடிக்காது… எங்க தனாவையும் பிடிக்காது… ஏதோ என்கிட்ட… எங்க அப்பாகிட்ட பாசமா இருப்பான்… இப்போ அதுவும் போச்சு” கார்த்திக் செழியனைப் பற்றி சொல்ல…
நரேன் இப்போது…
“செல்விதாண்டா அவன்கிட்ட அண்ணா அண்ணானு பழகுவா… நான் பேசாதேன்னு சொல்லியும் உனக்கும் செழியன்னாக்கும் உள்ள பிரச்சனைய என்கிட்ட கொண்டு வராதேன்னு அவன்கிட்ட பேசிட்டு இருப்பா…”
கார்த்திக்கும் தலை ஆட்டியவனாக
“செல்விகிட்ட சொல்லி வைக்கனும்… ஆனால் யாரை எங்க வைக்கனுமோ அங்க வைப்பா அவ… அதுனால அவளப் பற்றி கவலை இல்லை… என் தங்கச்சியைத்தான் பார்த்துக்கனும்… அத்தை பாசம் அவளுக்கு அதிகம்… இவன் அதை வச்சு தனாவைத்தான் கார்னர் பண்ணுவான்னு தோணுது… நான் மனசு நொந்த மாதிரி என் தங்கச்சி மனசை யாரும் நோகடிச்சுறக் கூடாதுடா” கார்த்திக்கின் கண்கள் கலங்கி இருக்க
“என்னடா சொல்ற…. தனாவை அவனுக்கு பிடிக்காதுன்னும் சொல்ற…. அப்புறம் இப்படியும் சொல்ற…”
“பிடிக்கலனாலும் நடிக்கலாம்ல…. எங்க குடும்பத்தோட சேர்றதுக்கு… நாங்க இல்லைனா அந்த குடும்பத்துக்கு சொந்தம் ஏதுடா… அந்த முத்துராமுக்கு சொந்தமே இல்லையே… அதான் ஒட்டிக்கிறப் பார்க்கிறாரு இவரு… சொந்தம் வேணும்… ஆனால் சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிற மாட்டாங்க…இந்த ஒரு வருசம் பார்த்திருப்பான்ல… பணம் படிப்பு… இதெல்லாம் எது வரை வரும்னு… அதான் இப்போ சொந்தத்தை தேடி வர்றாரு….” கார்த்திக் எகத்தாளமாகச் சொல்ல…
நரேன் அவன் தோளில் கை போட்டபடி… ஆறுதல் படுத்த
“இந்தப் புள்ளைங்க வேற சென்னைலதான் படிக்கப் போறோம்னு முழு மூச்சா படிச்சுட்டு இருக்குதுங்க… என்ன பண்றதுன்னே தெரியல… அம்மா வேற புலம்புறாங்க… அவங்களுக்கு ’தனா’ சென்னைக்குப் போறதே பிடிக்கலை… அம்மா அவ்வளவா கவலைப்பட மாட்டாங்க… தைரியமா ஃபேஸ் பண்ணுவாங்க எதையும்… அப்படி கவலைப்பட்றாங்கன்னா அதுல கண்டிப்பா ஏதோ இருக்கும்…”
“புலம்பாதடா… சென்னைக்கு தனா வந்தா என்ன ஆகப் போகுது… நான் அங்க இருக்கேன்ல…. நான் பார்த்துக்கிறேன்… போதுமா… படிக்கிறா புள்ளைய ஏன் அடக்கி வைக்கிறீங்க…”
“செல்வியும் தனா கூட தானே இருக்கப் போறா… அதுனால பயம் இல்லம்மா… அனுப்பி வைங்கன்னு சொன்னேன்… ஆனா அம்மா கேட்கலைடா… வேண்டாம்னு நிக்கிறாங்க… செல்வி மட்டும் போகட்டும்னு சொல்றாங்க… பிடிவாதம் பிடிக்கிறாங்க… என்ட்ரென்ஸ் எக்ஸாம் எழுதக் கூட போக வேண்டாம்னு சொல்றாங்க..”
”செல்விக்கு கண்டிப்பா சீட் கிடச்சிரும்… தனாக்கு கிடைக்கனும்ல… சும்மா எழுதிட்டு வரட்டும்… அது கெடச்சா பார்த்துக்கலாம்னு சொன்ன பின்னாலதான் அம்மாவும் அமைதியா இருக்காங்க… “
“டேய் உன் தங்கச்சி என்னோட ஆஃபிஸ்ல ட்ரெயினிங் வர்றேன்னு சொல்லிருக்காடா… பிஜி சீட் கெடச்சா பிஜி… இல்லைனா… உங்க ஆஃபிஸ் …. இந்த என்ட்ரென்ஸ் எக்சாம் ரிசல்ட் வந்த பின்னால அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வேணும்னு என்னையே மிரட்டுறா… இது உனக்கும் உங்கம்மாக்கு தெரியாதாடா… ”நரேன் கிண்டலடிக்க
”இவ ஏன் சென்னைக்கு போகனும்னு ஒத்த கால்ல நிக்கிறான்னு தெரியலடா…” கார்த்தி யோசனையோடு சொல்லிக் கொண்டிருக்க
“தனாக்கு ஆஃபர் லெட்டர்லாம் ரெடி… ஆக ’தனா’ சென்னை வர்றது உறுதிடா... என் ஆஃபிஸ்ல அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் ரெடி... மேல்படிப்பா, வேலையா... அவதான் செலெக்ட் பண்ணனும்” சொன்ன நரேனை ஆச்சரியமாகப் பார்த்த கார்த்திக்
“என் தங்கச்சி இவ்ளோ விவரமாடா… நம்பவே முடியலேயே படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே… ஆஃபர்லாம் வாங்கி வச்சுருக்கா…”
நரேன் இப்போது தீவிரமாகவே பேசினான்
“இல்லடா… சீரியஸாவே ப்ரோகிராமிங்க்லாம் நல்லா பண்றாடா… நானே எதிர்பார்க்கலை... வேற லெவல்லா திங்க் பண்றாடா… நல்ல ஃப்யூச்சர் இருக்குடா அவளுக்கு… அவ திறமைய வேஸ்ட் பண்ணிறாதிங்க … உங்க அம்மா சொன்னாங்கன்னு அவளை இங்கயே அடச்சு வச்சிறாதீங்க ”
கார்த்திக் முதன் முதலாக தன் தங்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தான்…
“படிக்க வைக்கிறேண்டா… ஆனா அதே நேரத்துல அம்மா அப்படி சொல்றாங்கன்னா… ஏதோ ஒரு காரணம் இருக்கும்தான்… இருந்தாலும் நான் அவங்ககிட்ட பேசி புரிய வைக்க ட்ரை பண்றேன்… செல்விக்கு சப்போர்ட் பண்றோம்… அவளப் புரிஞ்சிக்கிறோம்… ஆனா தனாவை இன்னும் நாங்க புரிஞ்சுக்கலையோன்னு தோணுதுடா…” கார்த்திக் தன் தங்கைக்காகவும் யோசிக்க ஆரம்பித்தான்…
----
ஒரு மாதம் கடந்திருக்க… வனிதாவின் திருமண நிகழ்வும் வந்திருந்தது…
”அண்ணே பொண்ணு பார்க்க வர்றப்போ யாருமே இல்லை… அதுவே கஷ்டமா இருந்துச்சு…. கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும்… அண்ணியும் நீங்களும் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தித் தரனும்… ஆனால் அதுக்காக செழியன் திலகா முத்துராமை வரக்கூடாதுன்னு சொல்லிறாதிங்க…” முகிலனின் தாயும் தந்தையும் வேண்டு கோளை வைத்திருக்க
ராஜசேகரும் காரணத்தை விளக்கினார்…
“இல்ல தம்பி… அன்னைக்கு நாங்க ஏன் கார்த்திக்கை விட்டுட்டு போனோம்… செழியன் வந்தால் அவன் எப்படி நடந்துக்குவான்னு பார்க்கனும்னு நினச்சேன்.. ஓரளவுக்கு அனுசரிச்சு நடந்துட்டான்… நாங்க அன்னைக்கு இருந்திருந்தா கார்த்திக் ஏதாவது பிரச்சனை பண்ணியிருப்பான்னு தோணுச்சு… எனக்கு அவனை நம்பவே முடியலப்பா… ஆனால் இப்போ என் மகன் மேல நம்பிக்கை வந்துருச்சு… ஓரளவு பொறுமையா இருப்பான்… சொன்னா கேட்டுப்பான்னு நம்ம்பிக்கை வந்துருச்சு… இனி எனக்கென்ன… என் மகனுக்கு என் மருமக மேல அவ்ளோ பாசம்… முத மாதிரிலாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசுறதுல்ல நடக்கிறதுல்ல.. நாம ஏதாவது பண்ணினா செல்விக்கு பாதிக்குமோன்னு பார்த்து பார்த்து நடக்கிறான்… செல்வி அவனோட இருந்தால் போதும்… அதுனால நாங்க எல்லோருமே வர்றோம்பா… அது மட்டுமில்ல.. வனிதா கல்யாணத்துக்கு அடுத்த நாள்… புள்ளைங்க ரெண்டு பேருக்கும் ஏதோ எக்சாமாம்… அதுல பாஸ் பண்ணினாத்தான் அடுத்து மேற்படிப்பு படிக்க முடியுமாம்… செல்வி அண்ணன் வீட்ல தான் தங்கப் போறோம்…” ராஜசேகரும் சொல்லியிருந்தார்…
இதோ அது போலவே கண்ணாத்தாள் பாட்டிக்கு இரண்டு நாட்களுக்கு வேலைக்கு ஆள் வைத்து விட்டு… மொத்தக் குடும்பமும் சென்னைக்கு கிளம்பத் தயாராகி இருந்தது…
---
அதே நேரம் சென்னையில் வனிதாவின் திருமண ஏற்பாடை செழியன் உதவியுடன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து முகிலன் பார்த்து முடித்திருந்தான்
முத்துராம் மனநிலையோ ராஜசேகர் மனநிலைக்கு நேர்மாறாக இருந்தது… திருமண விழாவில் கலந்து கொள்ள மறுத்தார்…
“அப்பா ஏன்ப்பா வனிதா கல்யாணத்துக்கு வரலேன்னு சொல்றீங்க…”
“இல்லடா… அங்க வந்தா உங்க அம்மா ரொம்ப உடஞ்சிருவா… இவளப் பார்த்துட்டு அத்தனை பேரும் ஒதுங்கிப் போனா… அதுக்கப்புறம் உங்க அம்மாவை நாம ஆளாப் பார்கிறதே கஷ்டம்டா… இப்போ அவ இருக்கிற மனநிலைமைக்கு மேரேஜுக்கு வர்றது ரிஸ்க்டா…”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா.. நான் பார்த்துக்கிறேன்…” செழியன் உறுதியாகச் சொல்லிப் பார்க்க… முகிலனும் கூப்பிட்டுப் பார்க்க…
“இல்ல முகிலா… நாங்க வந்தா வீணா பிரச்சனைதான்… இவன் இருக்கானே… அவனை என்ன சொன்னாலும் பொறுத்துக்குவான்… என்னையோ அவன் அம்மாவையோ ஏதாவது சொன்னா…. இல்ல எங்க மனசை காயப்படுத்தினா இவனும் கோபத்தை அடக்க மாட்டான்… அன்னைக்கு பார்த்த தானே… பொறுமையா பேசிட்டே இருந்தவன் கடைசியா என்ன பண்ணினான்… கார்த்திக்கை தெருவுல இழுத்துப் போட்டு அடிச்சதுதான் மிச்சம்… எதுக்குப்பா… நான் வரலை…”
முத்துராமும் கடைசி வரை…சம்மதிக்கவில்லை….
---
அவர்கள் ஊர் முறைப்படி… திருமணம் முடிந்துதான் ரிஷப்ஷன் … இருந்தும் செழியன் மண்டபத்திற்கு முதல் நாள் மாலையே சென்றிருந்தான் முகிலனுடன்
”ஏண்டா ஆரா வர்றாதானே… கன்ஃபார்மா தெரியும் தானே…” செழியன் முகிலனிடம் கேட்க… முகிலன் முறைத்தான்…
“கல்யாண மாப்பிள்ளை கூட… பொண்ணை எதிர்பார்த்து இவ்ளோ டென்ஷனா இருக்க மாட்டார்டா… இதோட எத்தனாவது தடவை இந்தக் கேள்வியக் கேட்ருக்க”
“ஹான்… கல்யாண மாப்பிள்ளைக்கு என்ன… பொண்ணு கன்ஃபார்மா வந்திரும்னு தெரியும்… கூலா இருப்பாரு… எனக்கு அப்படியா… என கஷ்டம் எனக்கு…” செழியனும் விட்டுக் கொடுக்காமல் பேச
“எங்க சித்தி பார்த்தேல்ல…. வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு கடைசில வரலை… எங்க அப்பா என்ன பண்ணினாரு… அந்த மாதிரி எங்க வீட்டாளுங்க எப்போ என்ன டெசிஷன் எடுப்பாங்கன்னே சொல்ல முடியாது… ஆன் த ஃபளை ல டெசிஷன் எடுப்பாங்க…”
“அது என்னவோ உண்மைடா… உனக்கு வந்த தீடிர் காதல்… உங்க அக்காவோட திடீர் திருமணம்… எல்லாம் அப்படித்தானே…” முகிலன் கிண்டலடிக்க செழியன் முறைக்க… அதே நேரம்… முகிலனுக்கு அலைபேசியில் அழைப்பு வர….
“டேய் மச்சான் ஊர்ல இருந்து மஹாலுக்கு வர்ற பஸ்லாம் வந்திருச்சாம்… வா போக்ச்லாம்” முகிலன் சொல்ல…
ஐந்து பேருந்து மற்றும் கார்களில் வனிதாவோடு ஊர் மக்கள் மொத்தமும் வந்திறங்க… வனிதாவை வரவேற்க அனைவரும் சென்றிருக்க… செழியனோ தன்னவளைக் காணும் ஆவலோடு அங்கு செல்ல… ஆராதனா மேகலாவைத் தவிர்த்து அவள் குடும்பத்தார் அனைவரும் அங்கு இருக்க… செழியனின் மொத்த உற்சாகமும் வடிந்திருக்க… இருந்தும் தன்னைச் சமாளித்தவனாக செல்வியைப் பார்த்து புன்னகைத்தான் செழியன்… செல்வியும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள்…
---
”தனா எங்க… அவ வரலையா அவ இல்லேன்னா இங்க எல்லாருக்கும் கை ஒடிஞ்ச மாதிரி இருக்குமே… “யாரோ நீலவேணியிடம் கேட்க…
”தனா வந்துருக்கா… நாளைக்கு ஏதோ பரிச்சையாம்… படிக்கனுமாம் கொஞ்சம் லேட்டா வருவா… செல்வியோட அம்மா அப்பா மேகலா தனா எல்லோரும் செல்வி அண்ணன் நரேன் வீட்ல இருக்காங்க… நைட் வருவாங்க… ஆனால் நம்ம செல்வி கண்டிப்பா இருக்கனும்ல சடங்கெல்லாம் செய்யனும்னு கூட்டிட்டு வந்துட்டேன்…. என் மருமக இருக்கனும்… இல்லேன்னா அவ மருமகள் இருக்கனும்ல…” நீலவேணி சொன்னதெல்லாம் செழியனுக்கும் கேட்டிருக்க…
“அம்மாச்சி” என்றபடி செழியன் பாசத்தோடு அவரிடம் செல்ல… நீலவேணிக்கு மனம் பேரனிடம் பேசச் சொன்னாலும்… மகன் என்ன சொல்வானோ என்ற பரிதவிப்பில் முகத்தைத் திருப்பியபடி சென்றுவிட… ராஜசேகர், வேலாயுதம் என அனைவருமே செழியன் தானாகச் சென்று பேசிய போதும் தவிர்த்து விட்டு சென்றிருக்க… செழியன் செல்வியை நோக்கிச் சென்றான்… அவனுக்கு நம்பிக்கை இருந்தது…செல்வி யாருக்கும் பயப்பட மாட்டாள்… அவளை யாருமே கட்டுப்படுத்த முடியாது என்ற நம்பிக்கையோடு அவளிடம் செல்ல…
கார்த்திக் அருகில் நின்றிருக்க… செல்வியிடம் பேச ஆரம்பித்தான்…
”நல்லா இருக்கியா செல்வி…” செல்வியிடம் கேட்கும் முன்னரே
“அண்ணா நல்லா இருக்கீங்களா… கமலியக்கா நல்லா இருக்காங்களா… அத்தை மாமாலாம் நல்லா இருக்காங்களா…” தானாகவே பேச ஆரம்பித்தாள் செல்வி... கணவன் அருகில் இருந்தாலும்... செழியனிடம் எப்போதும் போலவே பேசினாள் செல்வி...
”சாரி சாரி… சித்தி சித்தப்பான்னுதானே சொல்லனும் இனிமே…” செல்வி தானாகவே உறவு முறையை மாற்ற… கார்த்திக் தன் மனைவியை முறைத்தானே தவிர வேறதுவும் சொல்லாமல் இருக்க…
செழியனும் செல்வியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தவனின் மனம் எங்கும் ஆராதனாவை மட்டுமே தேட… அவன் தேடல் நள்ளிரவில் தான் முடிவடைந்தது… ஆம் ஆராதனா நரேன் காரில் அவனது தாய் தந்தை மற்றும் தன் தாயுடன் வந்திறங்கினாள்…
காரின் பின் சீட்டில் இருந்து இறங்கி ஆராதனா வேகமாக முன் வந்தவளாக…
“செல்விண்ணா… நாளைக்கு நான் தான் முன்னாடி… செல்வியையும் எங்க அண்னாவையும் பின்னால அனுப்பிட்டு…. நான் முன்னாடி வந்துருவேன்… இப்போதே புக் பண்ணிட்டேன்…”
நரேன் சிரித்தபடி…
“என் கீயவே தந்துறேன்… உன் பாடு இந்தக் கார் பாடு” என்று நரேன் கார்க்கீயை ஆராதனாவிடம் நீட்டிய போதே…
“தம்பி அவதான் விளையாட்றான்னா நீங்களுமா… வா தனா உள்ள போகலாம்”
மேகலா ஆராதனாவை அழைத்துக் கொண்டு மஹாலுக்குள் செல்ல… அங்கு நின்றிருந்த செழியனை இருவருமே கண்டு கொள்ள வில்லை… மேகலாவவாது இவனைப் பார்த்தவராக… என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கியபடி உள்ளேஎ சென்றிருக்க… ஆராதனா இவனைப் பார்க்கவே இல்லை….
அவளின் கவனமெல்லாம் மணப்பெண் வனிதாவிடம் மட்டுமே இருக்க… அவளை நோக்கியபடி சென்றும் விட்டாள்…
---
Very nice. We are exapting sexhiysn arathana meeting. Puy soon next epi