“அடேங்கப்பா… என்ன ஒரு பதிபக்தி… இங்க பாரு இங்க பாரு… என் கையெல்லாம் புல்லரிக்குதுடி… ” ஆராதனா நக்கலாகச் சொன்னபோதே செல்வி அவளை முறைக்க…
“முறைக்காத படி… எங்க அண்ணன்லாம் காட்டாறு மாதிரி… இல்லேன்னா சூப்பர் ஸ்டார் மாதிரி… எப்போ வருவார்.. எப்டி வருவார்னு தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்துருவாரு… ” என்ற போதே…
----
“தனாவைத் திட்டிட்டேன்…” என்றவள் நடந்ததைச் சொன்னவளாக…
”அவ என்ன அர்த்ததுல சொன்னான்னு தெரியும்… ஆனாலும் நீங்க ஃபோன் எடுக்காத கடுப்புல அவளைத் திட்டிட்டேன் மாமா…” என்ற போதே செல்வியின் கண்களில் நீர் கசிந்திருக்க
----
”படிக்கிற வயசுல எல்லா வேலையும் பார்க்கிறது… நீ மட்டும் இல்லாமல் என் தங்கச்சியையும் சேர்த்து கெடுத்து வச்சிருக்க…” கார்த்திக் நக்கல் கலந்த புன்சிரிப்போடு தன் மனைவியைத் திட்ட…
செல்வி இப்போது வேகமாக
“ஹலோ… உங்க தங்கச்சியை நாங்க கெடுத்து வச்சிருக்கோம்… நடத்துங்க… உங்க வீட்டுக் குழந்தைக்கு விரலைக் கொடுத்தா கடிக்கக் கூடத் தெரியாது… செழியன்னாவும் இப்படித்தான் பில்டப் கொடுப்பாரு…” எனும் போதே.. செல்வி தான் யாரைப் பற்றி யாரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தவளாக… சட்டென்று தன் பேச்சை நிறுத்தியவளாக… கணவனின் முகம் மாறியதையும் உணர்ந்தவளாக… வேக வேகமாக
---
“செல்வி…” படிகளில் ஏறி வரும் போதே ஒலித்த ஆராதனா குரலைக் கேட்ட அடுத்த நொடி… இருவருமே சட்டென்று விலகி நின்றிருக்க…
“என்னோட ஃபோன்… வச்சுட்டு போயிட்டேன்… நீ இனிமே படிக்க வர மாட்டதானே… நான் தூங்கப் போகவா… இல்ல “ என்றபடி இருவரையும் பார்க்க… வார்த்தைகளே இல்லாமல் இருவரும் நின்றிருக்க…
“என்ன செல்வி… ஏன் ஒரு மாதிரி இருக்க…” தன் அண்ணனைப் பார்த்தவாறே ஆராதனா கேட்டவளாக தன் அலைபேசியை எடுத்துக் கொண்டவள்…
---
“ப்ராமிஸா ஒண்ணுமில்லைதானே… அண்ணன் சும்மா பேசினாலே அதட்ற மாதிரிதான் இருக்கும் செல்வி… நீ ஏதும் தப்பா எடுத்துக்காத…” என ஆரம்பித்தவள்…
---
“உன்கிட்ட என் மனசை… அதுல இருக்கிற எல்லாம் கொட்டனும்னு துடிச்சிட்டு இருக்கேன் செல்வி… ஆனால் நேரம் காலம் என்னைத் தடுக்குது… “ என்றவனின் கைகளைத் தனக்குள் வைத்துக் கொண்டவள்…
“மாமா… நான் ஒண்ணு சொல்லவா… ஆனால் திட்டக் கூடாது“ என்று பீடிகை போட… கார்த்திக் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க…
---
“டேய் மாப்பிள்ளை இதெல்லாம் தற்காலிகம்டா…. நீ அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையான பின்னால… இதென்ன இதை விட பிரமாதமா உன்னைக் கொண்டாடப் போறாங்க... “
செழியனின் முகம் அவனையுமறியாமல் புன்னகையை பூசிக் கொண்டதுதான்…
“இருந்தாலும்… அந்த ஃபீல் வேற… இந்த ஃபீல் வேற… இது தாய் மாமன் வீட்டு உபசரிப்பு… அது வேற ஃபீல்டா…” செழியன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தவன்… மலரும் நினைவுகளை நண்பனிடமும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்…
---
செழியன் கார்த்திக்கையேதான் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான்… கார்த்திக்கின் இந்த மாற்றம்… அதிலும் அவனின் அந்த பொறுமை என மனம் கார்த்திக்கையே சுற்றிக் கொண்டிருக்க… செல்விக்கு மனம் தானாகவே நன்றி உரைத்தது….
---
“அந்த செல்விப் பொண்ணும் நல்ல பொண்ணுதான்… கமலி தனா மாதிரியேதான் கவனிச்சுக்கிறா… ஆனாலும் மனசு ஏத்துக்கிற மாட்டேங்குதுயா…” செழியனிடம் கண்ணம்மாள் பாட்டியின் கண்களில் நீர் வழிந்திருக்க..
“அய்யா… ராஜா எனக்கு ஒரே ஒரு ஆசைதான்… ஆனா உன்கிட்ட கேட்டா கிடைக்குமான்னு தெரியலய்யா… கேட்கிறது சரியான்னும் தெரியலய்யா… ஆனாலும் இந்த கிழவி மனசு அடிச்சிக்குது” என்று கண்ணாத்தாள் பாட்டி அவனிடம் விரக்தியாகச் விரக்தியாகச் சொன்னார்….
---
வேஷ்டியைத் மடித்துக் கட்டியபடி செழியனை முறைத்தபடி நின்றிருந்த கார்த்திக்கின் கண்களோ தீம்பிழம்பாக காட்சி அளித்திருக்க…
“கார்த்தி...“ எனச் செழியன் தடுமாறிய போதே
அடுத்த நிமிடம் … செழியனின் சட்டையின் காலரைப் பிடித்து இழுத்திருந்தான் கார்த்திக்…
--
”ஓ… ஓ… தாய்… மாமா… என்ன என்ன சார் சொன்னீங்க… ஆனால் பாரு நரேன்… தாய் மாமனைப் பற்றி… அந்த உறவு முறைப் பற்றிலாம்… இந்த மாமா பையன் பேசுறான் பாரு… ஆனா பாரு மாமா வேலையை இப்போ புரோக்கர் லேபிளா மாத்திட்டான்… பொண்ணு மாப்பிள்ளைனு நல்லா செட் பண்றாண்டா… செழியன் செழியன்னு ஒரே புகழாரம் தான்” கார்த்திக் நரேனிடம் நக்கலடிக்க…
---
“இப்போ உனக்கு என்ன கோபம் அவன் வீட்டுக்குள்ள வந்ததுதானே… அதுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணு… தேவையில்லாதத பேசாத… இல்ல உனக்கு கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலேன்னா… நகரு… நான் அவனை பிடிச்சு வெளிய தள்ளுறேன்..” நரேன் இதுதான் சாக்கென்று வந்திருக்க
--
”அவன் கிடக்கிறான்… ஆரத்தி எடுத்து வரவேற்க… என் தங்கச்சியவா கல்யாணம் பண்ணப் போறான்…” கார்த்திக் கடுப்போடு சொல்ல…
“ஏன் பண்ண மாட்டானா…” நரேன் கேட்க
--
“தனாக்கு ஆஃபர் லெட்டர்லாம் ரெடி… ஆக ’தனா’ சென்னை வர்றது உறுதிடா... என் ஆஃபிஸ்ல அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் ரெடி... மேல்படிப்பா, வேலையா... அவதான் செலெக்ட் பண்ணனும்” சொன்ன நரேனை ஆச்சரியமாகப் பார்த்த கார்த்திக்
“என் தங்கச்சி இவ்ளோ விவரமாடா… நம்பவே முடியலேயே படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே… உன்கிட்ட ஆஃபர்லாம் வாங்கி வச்சுருக்கா…”
---
“அண்ணா நல்லா இருக்கீங்களா… கமலியக்கா நல்லா இருக்காங்களா… அத்தை மாமாலாம் நல்லா இருக்காங்களா…” தானாகவே பேச ஆரம்பித்தாள் செல்வி... கணவன் அருகில் இருந்தாலும்... செழியனிடம் எப்போதும் போலவே பேசினாள் செல்வி...
”சாரி சாரி… சித்தி சித்தப்பான்னுதானே சொல்லனும் இனிமே…” செல்வி தானாகவே உறவு முறையை மாற்ற… கார்த்திக் தன் மனைவியை முறைத்தானே தவிர வேறதுவும் சொல்லாமல் இருக்க…
Waiting ud
Waiting for ud👍
Waiting for the ud for long......
Waiting for ud. Nice teaser
Teaser sema...
Ud padikka aavaloda wait pannurom.
Kathirunthu kathirunthu kalangal ponathadi😊