பெர்சனலா கொஞ்சம் லாக் ஆகிட்டேன்... அத்தைக்கு மைல்ட் அட்டாக்... ஹாஸ்பிட்டல் வீடுன்னு நோ ஃப்ரீ டைம்..
வெயிட் பண்ண வச்சதுக்கு சாரி... இனி அப்டேட்ஸ் போட ஆரம்பிச்சிரலாம்... இப்போதைக்கு அடுத்த அப்டேட்டுக்கான டீசர் உங்கள் பார்வைக்கு...
அண்ட் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
நன்றி பிரவீணா....
----------------
“அப்படிலாம் இல்ல… முதல்ல இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் நடத்துற கல்லூரி… அதுல இந்த இரண்டு பொண்ணுங்களோட அப்பாக்களும் முக்கியமான பதவில இருக்காங்க… அது மட்டுமில்லாமல்… இரண்டு குடும்பத்து ஆளுங்களும் கட்சில வேற இருக்காங்க… ஒருத்தவங்க தோத்து இன்னொருத்தர் ஜெயிக்கும் போது நம்ம காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளம் வருமோன்னு பயப்பட்றேன்… அண்ட்… அந்தப் பொண்ணு ஆராதனாதான் ஜெயிக்கும்னு நல்லாவே தெரியுது… சோ காவேரி சைட்ல இருந்து பிரச்சனை வருமோன்னு பயப்பட்றேன்…”
----
உங்க எல்லாருக்கும் இன்னைலைருந்து மார்னிங் ஈவ்னிங் எக்ஸ்ட்ரா கோச்சிங்க்… அப்போ உங்க எல்லார்கிட்டயும் பேசுறேன்” என்று முடித்து விட்டு… மத்தவங்க மார்க்ஸ்லாம் செல்வி சொல்வா…என்று செல்வியிடம் அந்த லிஸ்ட்டை நீட்ட செல்வி அனைவருக்கும் மதிப்பெண்களைச் சொல்ல ஆரம்பித்திருக்க… லதாவின் பார்வை ஆராதனாவிடம் மட்டுமே இருந்தது….
----
“தேவையில்ல… நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்றேன்னு சொல்லிட்டியே… இதுக்கு மேல நீ என்ன பண்ணினாலும்… என்ன மார்க் எடுத்தாலும் எனக்கு அது தேவையில்ல…” ஆராதனாவிடம் அவளது வகுப்பு பேராசிரியை லதா சொல்லி முடிக்க ஆராதனாவும் அதற்கு மேல் விவாதம் செய்யவில்லை
---
”அவ இந்த மார்க் எடுத்தது எனக்கு ஆச்சரியம் இல்லை… லதா மேடமுக்கு இவளுக்கும் என்னமோ நடந்திருக்கு… அதுனாலதான் லதா மேம் காண்டுல இவ டாப்பர்னு சொல்லல…. ஏய் சொல்லுடி என்ன ஆச்சு… எனக்குத் தெரியாமல் என்னவோ நடந்திருக்கு…”
“ப்ச்ச் ஒண்ணும் இல்லடி… விடேன்”
---
“ஏய் காயத்ரி இப்போ எதுக்கு அழற…. நான் என்ன வேலை வெட்டி இல்லாம… தண்ணி அடிச்சுட்டு… தம் அடிச்சுட்டு… எப்படி பொழுதைப் போக்குறதுன்னு தெரியாம உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேனா என்ன… ஒரே ஊர்க்காரி டெய்லி கடை முன்னாடி வந்து பஸ்ஸுக்காக வந்து நிப்ப… பிடிச்சது… லவ்வச் சொன்னேன்… உன்னைக் கட்டாயப்படுத்தவும் இல்லையே…” ராஜா காயத்ரியிடம் பேச ஆரம்பித்திருக்க
“அப்புறம் எதுக்கு பாஸ் என் ஃப்ரெண்ட லவ் பண்ணுனீங்க… “ ஆராதனா நக்கலாகக் கேட்க
----
“ஏய்… ஏய் தனா… அங்க பாரு… காயுவோட முறைப் பையன்…” செல்வி பதற
“தெரியும்… தெரியும்… “
“நேத்தே அப்பாகிட்ட வந்திருந்தாங்க…. “ ஆராதனா அசால்ட்டாகச் சொன்னவள் செல்வியின் முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்தவளாக…
---
“ஹான் அதை மட்டும் தான் நான் பண்ணேன்… மத்ததெல்லா அதுவாவே நடந்துச்சு…. நான் சொன்னதால என்னாச்சு… அவ அப்பாகிட்ட சொல்ல… அவ அப்பா ராஜாவை மிரட்ட… ராஜா கோபமா இங்க வர… இது ஒரு பக்கம்னா.. காயு வீட்ல விசயம் தெரிஞ்சு… அவ முறைப் பையன்… இந்த ராஜாவை தட்டு தட்டி வைக்க நெனச்சான்… அண்ணாகிட்ட வந்து பேசினான்… அதுக்காக ராஜாவை பாளோ பண்ணிட்டும் இருந்தான்… இன்னைக்கு எல்லாம் ஒரே புள்ளில ஜாயின் பண்ணிட்டாங்க… சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்”
---
”ப்ளான் தான்… ஆனால் உன்னை வச்சு இல்லை… உங்க அண்ணன வச்சு” ஆராதனா கண் சிமிட்ட…
“ஏய் லூசு… எங்க அண்ணாக்கு நெக்ஸ்ட் வீக் பிறந்த நாள் வருது… அதுக்குத்தான்” விளக்கினாள் ஆராதனா… தோழியின் குழப்பமான முகத்தைப் பார்த்து
Very happy to see this teaser after a long gap sis.. Seekaram ud potrunga.. Rrrrrrrrrrrromba naaaaaaaal wait pannitom....