ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்....
படிச்சுட்டு சொல்லுங்க... அண்ட் செழியன் ஆராதனா கதைதான் இது... ஆனாலும் செல்வி கார்த்திக் இனிஷியல் எபிசோட்ல டாமினேட் பண்ணுவாங்க... தவிர்க்க முடியாத கதைக்களம்... இதுவரை வந்த கதைல செகண்ட் ஹீரோ ஹீரோயினுக்கு... ஆன் த ஸ்பாட் சீன் தான் யோசிப்பேன்... அவங்களுக்கான எமோஷனலுக்காகலாம் பெருசா யோசிக்க மாட்டேன்... இவங்கதான் ஜோடி... ஜோடின்னு சொன்னதுக்காக ரெண்டு பேஜ் ... அப்படியே அவங்க காட்சில வந்தாலும்... அப்போதும் நாயகன் நாயகனைப் பற்றி தான் பேசுற மாதிரு இருக்கும் .... அந்த மாதிரிதான் என்னோட செகண்ட் ஹீரோ ஹீரோயின்ஸ் இதுவரை வந்திருப்பாங்கா...
ஆனால் இந்தக் கதைல அப்டியே அது உல்ட்டா... செல்வி... கார்த்திக் இவங்களச் சுற்றி கதை ஆரம்பிச்சு... அவங்களச் சுற்றியே கதை போகும்... நம்ம ஹீரோவும் ஹீரோயினும்...சைட் ஆர்டிஸ்ட் மாதிரி தான் போகும்.... இன்னும் சொல்லப் போனா... ஆராதனா செழியன் காட்சிகளே இருக்காது... தென் எப்படி இந்தக் கதை அவங்கள நோக்கி போகும்... அதுதான் கதையே...
முக்கியமா ஆராதனா கேரக்டர் அண்ட் செழியனோட காதல் இந்தக் கதையோட அடிப்படை......
அதாவது ஆராதனா கேரக்டர் என்னன்னு கேள்விக்குறியோட கதை நகரும்... ஒவ்வொரு எபிசோட்லயும் ஒவ்வொரு விதமா அவளோட கேரக்டர் மாறிட்டே இருக்கும்.... அவ இப்படித்தான்னு ஜட்ஸ்மெண்ட் பண்ணவே முடியாது... இதுவரை நான் எழுதின ஹீரோயின்ஸ்க்கு இதுதான் இவங்க இப்படித்தான்னு ஒரு நிலையான கேரக்டரைசேஷன் இருக்கும்.... இந்தக் கதைல அந்த மாதிரி இருக்காது.... செழியன் அண்ட் ஆராதனா இவங்க காதல்... அதோட உணர்வுகள்
அடுத்து செழியனோட காதல் ... அதன் பாதை... அதுல அவன் சந்திப்போகிற ஏமாற்றங்கள்... படிக்கிற நீங்களும் ஃபீல் பண்ணனும்... நாயகியின் திருவிளையாடலால் அழிந்த அவனின் காதல் மீட்கப்படுமா... நாயகனும் நாயகியும் சேர்வார்களா...
தொடர்வோம் இனி வரும் அத்தியாயங்களில்...
குறிப்பு... ‘நீ முதல்ல கண்டினியூவா அப்டேட்ஸ் குடும்மா... நாங்க செழியன் ஆராதனாவை பார்த்துக்கிறோம்...’ உங்க மைண்ட் வேர்ட்ஸ் கேட்ச் பண்ணிட்டேன்.... எனிவே மீண்டும் ஒரு மன்னிப்பு... சாரி... அப்பாலஜி... எல்லா மொழியிலயும் கேட்டுக்கிறேன் உங்க பொறுமைக்கும்... ப்ரைவேட்டா மெஜேஜ் பண்ணவங்க... கமெண்ட்ஸ்ல என்னைத் தேடினவங்க....... எல்லார்கிட்டயும் சாரி அண்ட் தேங்க்ஸ்... உங்க ஆதரவை வழக்கம் போல எனக்கு கொடுங்க... எனக்குத் தெரியும்... கதை மாந்தர்க்கெல்லாம் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க... அதுனால இந்த முறை பிரவீணாக்கு சப்போர்ட் பண்ணுங்க... அவங்க லேட்டா அப்டேட் போட்டாலும் திட்டாதீங்க...
பை பை... அப்டேட்ஸ் படிக்கலாம்...
நன்றி பிரவீணா விஜய்.....
அத்தியாயம் 13:
ஆராதனா மற்றும் செல்வி படிக்கும் மகளிர் கல்லூரி…
”ஆராதனா….” அப்புறம் “காவேரி…” ரெண்டு பேருமே இந்த சுத்து வட்டாரத்துல செல்வாக்கான குடும்பத்திலருந்து வர்றவங்க.. அரசியல்லயும் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு பேர் இருக்கு… ஹ்ம்ம்ம்… அதெல்லாம் இருக்கட்டும் ரெண்டு பேர்ல யாருக்கு வின் பண்ற சான்ஸ் இருக்கு நீங்க நினைக்கறீங்க…’” கல்லூரி முதல்வர் தன் முன் அமர்ந்திருந்த கல்லூரித் தேர்வுக் குழுவிடம் விசாரிக்க ஆரம்பித்தார்…
அவர் அந்த கல்லூரிக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் கல்லூரியின் சேர்மன் பதவிக்கான தேர்தல்…
அவர் பொறுப்பில் இருக்கும் போது ஏதும் அசம்பாவிதம் ஆகி விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு சூழ்நிலைகளை ஆராய ஆரம்பித்திருந்தார்… அதன் விளைவே ஆராதனா மற்றும் ஆராதனாவோடு போட்டி போட்ட காவேரி பற்றி விசாரணை
“ஏன் மேடம் ஏதாவது பிரச்சனை வரும்னு யாராவது ஏதாவது சொன்னாங்களா…” குழுவில் இருந்த மூன்று பேராசிரியைகளில் இருவர் பதட்டத்துடன் விசாரிக்க… மூன்றாமவரோ அமைதியாக அமர்ந்திருந்தார்
“அப்படிலாம் இல்ல… முதல்ல இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் நடத்துற கல்லூரி… அதுல இந்த இரண்டு பொண்ணுங்களோட அப்பாக்களும் முக்கியமான பதவில இருக்காங்க… அது மட்டுமில்லாமல்… இரண்டு குடும்பத்து ஆளுங்களும் கட்சில வேற இருக்காங்க… ஒருத்தவங்க தோத்து இன்னொருத்தர் ஜெயிக்கும் போது நம்ம காலேஜ்ல ஏதாவது ப்ராப்ளம் வருமோன்னு பயப்பட்றேன்… அண்ட்… அந்தப் பொண்ணு ஆராதனாதான் ஜெயிக்கும்னு நல்லாவே தெரியுது… சோ காவேரி சைட்ல இருந்து பிரச்சனை வருமோன்னு பயப்பட்றேன்…”
“ஆமாம் மேடம்… ஆராதனா காலேஜ் சேர்ந்த நாள்ல இருந்தே இந்த சேர்மன் போட்டிக்கு தயார்படுத்திக்க ஆரம்பிச்சிட்டாளோனு இப்போ தோணுது… அதாவது ஆராதனா காலேஜ்ல சேர்ந்த ஆரம்பத்தில இருந்தே அவளை தனியா காட்டிக்க ஆரம்பிச்சா… முக்கியமா அவளோட ட்ரஸ் கோட் எல்லார்கிட்டயும் இருந்து தனித்துவப்படுத்துச்சு… சொல்லப்போனா இந்த காலத்துல தாவணியானு கேட்டவங்க… அவளைப் பாளோ பண்ணவே ஆரம்பிச்சுட்டாங்க… கிட்டத்தட்ட ட்ரெண்ட் செட்டர் மாதிரி… சைலண்டா இங்க பாதிப்பேரை அவளைப் பாளோ பண்ண வச்சுட்டா மேடம்… ஸ்போர்ட்ஸ்… கல்ச்சுரல்ஸுனு எல்லா பக்கமுமே தனக்கு சாதகமா முதல்ல இருந்தே ப்ளான் பண்ணின மாதிரி இருக்கு”
“நானுமே அதை நோட் பண்ணியிருக்கேன்… ஹாஃப் சாரினாலும் அதுலயும் அவளோட யூனிக்னெஸ், கிராண்ட், எலகெண்ட் அண்ட் ரிச்னெஸ்ஸும் தெரியும்…”
“கல்ச்சுரல்ஸ்… ஸ்போர்ட்ஸ்… எல்லாத்துலயும் ஆராதனாதான் ஃபர்ஸ்ட்… அண்ட் லீட் பண்றவளும் அவதானாமே… அகாடெமிக்ல மட்டும் ஆவரேஜ்னு கேள்விப்பட்டேன்… அது மட்டும் இல்லாம அவளுக்குனு ஒரு கூட்டமே இருக்கு அவளை வின் பண்ண வைக்கிறதுக்குனு.... எல்லாம் கேள்விப்பட்டுதான் இந்த கூட்டமே... அதுலயும் இது ஆராதனா பற்றி இல்ல காவேரி எப்படினு உங்ககிட்ட விசாரிக்கவே வரச்சொன்னேன்” என முதல்வர் எதற்காக இந்த சந்திப்பு என்று விளக்கி இருக்க
“காவேரிலாம் ஒண்ணுமில்ல… சொல்லப் போனாஅல் இந்த ஆராதனாதான் பிரச்சனையெ…. அவ அண்ணன் போதும் மேடம்… மிரட்டியே எல்லாரையும் அவளுக்கு ஓட் போடச் சொல்லிருவான்… பாவம் அந்தக் காவேரிப் பொண்ணு… ஆராதனா நீங்களாம் நினைக்கிற மாதிரி ” என ஆரம்பித்த போதே
“மேடம்…. நான் உள்ள வரலாமா” கேட்டது யாருமில்லை… ஆராதனாவே…
---
”ஏய் என்னடி… மாடல் எக்ஸாம் மார்க்ஸ் கண்டிப்பா இன்னைக்கு வந்துருமா… நாம ஒண்ணுமே ஒழுங்கா எழுதலையே… அந்த லதா மேடம் என்ன ப்ளேடு போடப் போறாங்களோ” ஆராதானா-செல்வியின் கல்லூரித் தோழி காயத்ரி சலிப்பாக ஆராதனாவிடம் சொன்னபடியே…. செல்வியுன் புறம் திரும்பியவளாக
“செல்வி… நீ ஏன் முகத்தை கவலையா வச்சிருக்க… உனக்கென்ன ராஜாத்தி க்ளாஸ் டாப்பர்… நானும் ஆராதனாவும் அப்படியா… இந்தப் பக்கமா அந்தப்பக்கமானு பார்டர்ல பாய் விரிச்சு படுக்க முடியாமலும் தடுக்கி விழவும் முடியாமலும் லோல் பட்டுட்டு இருக்கோம்”
செல்வி அடுத்த வகுப்பிற்கான புத்தகத்தை எடுத்தபடியே
”தெரிஞ்ச விசயம் தானே…. என்னமோ புதுசா நடக்கிற மாதிரி அலுத்துக்கிற… நம்ம தலையைப் பார்த்தியா… என்ன நடந்தாலும் தில்லா அசால்ட்டா சமாளிக்கும்… கத்துக்கோ… செமெஸ்டர் எக்ஸாமேனாலும் படிக்காம வந்து கடைசி நேரத்துல நான் சொன்னதை வச்சு எழுதி ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி பார்டர்லயே பேலன்ஸ் பண்ணி அரியர் வைக்காம சமாளிச்சுட்டு இருக்கு தெரியுமா…” செல்வி ஆராதனாவைக் காட்டி கிண்டல் அடிக்க…
ஆராதனாவோ இவர்கள் பேச்சைக் கேட்டபடி இருந்தாலும்… பேச்சில் கலந்து கொள்ளாமல் மும்முறமாக தனது நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்க… செல்வி எட்டிப் பார்த்தாள்…
”என்னடி… நோட்டு ஃபுல்லா முட்டையும் கோடுமா போட்டு வச்சிருக்க…. இதைத்தான் புதுசா போற கம்ப்யூட்டர் க்ளாஸ்ல சொல்லிக் கொடுத்தாங்களா” அவர்களின் தோழி கேட்ட போதே…
“அது முட்டையும் கோடும் இல்ல… “ என செல்வி ஆரம்பித்த போதே…. அவர்களின் வகுப்பு பேராசிரியை வந்து விட… செல்வியும் பேச்சை நிறுத்தியிருக்க… ஆராதனாவும் நோட்டை மூடி இருந்தாள்…
“லதா மேம்… ” வகுப்பறையில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட மாணவிகளின் அலறல் தானாகவே வந்திருந்தது… அவர் எடுத்த தேர்வுமுடிவுகளின் பட்டியலைப் பார்த்து
“என்னாச்சு” லதா என்று அழைக்கப்பட்ட அந்த பேராசிரியை புன்சிரிப்புடன் மாணவிகளைப் பார்த்துக் கேட்க
“செமஸ்டர் மார்க்கா இது… இல்லதானே…. ஜஸ்ட் மாடல் எக்ஸாம் தானே மேம்… அந்த மார்க்கைச் சொல்லி எக்ஸாமுக்கு மும்முறமா படிச்சுட்டு இருக்க எங்க மைண்ட் செட்டை காலி பண்ணிறாதிங்க மேடம்… “ ஒரு மாணவி எழுந்தே சொல்லி விட
“அடேங்கப்பா… நீங்க எல்லோரும் செமெஸ்டர் எக்ஸாமுக்கு மும்முறமா… நம்பிட்டேன் நம்பிட்டேன்” லதா மேடமும் ராகமாய் இழுக்க
“ஆமாம் மேடம்… மாடல் எக்ஸாம்ல நாங்கள்ளாம் அம்பியா இருப்போம்… செமஸ்டர் எக்ஸாம்னு வந்துட்டா ரெமோ இல்ல அந்நியன் தான் மேம்… நம்புங்க மேடம்… ஸ்மார்ட் அண்ட் ஹைபர் ஆக்டிவிட்டி தான்”
“ஹான்… அம்பியோட பெர்ஃபார்மன்ஸையும் விட்றக் கூடாதுல்ல…. பார்க்கனும்ல… ரெடி ஆகுங்க பார்க்கலாம்” லதாவும் விடவில்லை…
மாணவிகள் மத்தியில் மயான அமைதி…
“வழக்கம் போல… இந்த மாடல் எக்ஸாம் வச்சுதான் யார் யார் எந்த லெவல்ல இருக்கான்னு அதுக்கேத்த மாதிரி உங்கள எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ணுவோம்… இந்த முறையும் அதே போலத்தான்…” என்றபடியே… செல்வியின் பெயரை உச்சரித்து அவளை அழைத்திருக்க… செல்வி எழுந்த போதே
“வழக்கம் போல க்ளாஸ் டாப்பர்….” லதாவின் குரல் பெருமையுடன் ஒலித்தது…
“மிருதுளா… செகண்ட்…” இப்போது மாணவிகளிடமிருந்து ஒலித்த குரல் தப்பாகவில்லை… அவர்கள் சொன்ன அந்த மாணவியே இரண்டாவது தரம் … லதா மேடம் முதல் பத்து இடங்களைச் சொல்லி முடிக்க…
இப்போது செல்வியின் தோழி காயத்ரி எழுந்தாள்…
“மேடம்… ஃபர்ஸ்ட் 10 டாப்பர் சொன்ன மாதிரி… லாஸ்ட் ஸ்டார்ஸையும் சொல்லிருங்க… இடையில இருக்கிற நாங்கனாச்சும் நிம்மதியா இருப்போம்ல… ப்ளீஸ் ரிக்வெஸ்ட் பண்ணி கேட்கிறேன் மேம்… இருபது நிமிசம் ஹார்ட்டை நிறுத்தி வைக்கிறது பெரிய காரியம்… அட்லீஸ்ட் ஐந்து நிமிசத்துல… நாங்க அந்த பார்டர்ல இல்லைனு தெரிஞ்சுகிட்டு நிம்மதி ஆகிருவோம்ல… ப்ளீஸ் மேம்… இந்த சின்ன வயசுலயே எங்க ஹார்ட் இவ்ளோ பாதிக்கப்படலாமா… நாங்க எவ்வளோ பார்க்கனும்ல… “
“ஆமா… ஆமா” வகுப்பறை முழுவதும் குரல்கள் சேர்ந்து காயத்ரிக்கு சேர்ந்து ஆர்ப்பரிக்க
“சரி சரி உட்காரு… அடுத்தவங்களை மடக்குற மாதிரி பேசுற பேச்சுக்கு மட்டும் குறச்சல் இல்ல” என்றவர்…
”ஃபெயில் மார்க் எடுத்தவங்க லிஸ்ட்…” என ஆரம்பித்து சொல்லி அவர்களைச் சொல்லி முடித்தவர்…
“உங்க எல்லாருக்கும் இன்னைலைருந்து மார்னிங்-ஈவ்னிங் எக்ஸ்ட்ரா கோச்சிங்க்… அப்போ உங்க எல்லார்கிட்டயும் பேசுறேன்” என்று முடித்து விட்டு…
“மத்தவங்க மார்க்ஸ்லாம் செல்வி சொல்வா…” என்று செல்வியிடம் அந்த லிஸ்ட்டை நீட்ட அந்தப் பட்டியல் இருந்த அட்டையை வாங்கிய செல்வி அனைவருக்கும் மதிப்பெண்களைச் சொல்ல ஆரம்பித்திருக்க… லதா மேடமின் பார்வை ஆராதனாவிடம் மட்டுமே இருந்தது…
ஆராதனா சாந்த சொரூபியாக தன் தோழி வாசிப்பதில் கவனம் வைத்திருந்தாள்…. ஆராதனாவின் அமைதியான முகத்தை ஏளனமாக பார்த்தபடி லதா இருந்த போதே
”மேம்… ஆராதனாவும் டாப் டென்ல வர்றா… நீங்க அவளை விட்டுட்டீங்க…” செல்வி வேகமாக லதாவைப் பார்த்துச் சொல்ல… மொத்த வகுப்பறையும் ஆச்சரியத்துடன் ஆராதனாவைப் பார்க்க…
லதா சற்றும் முகம் மாறாமல்….
”நீ டாப்பரா இருக்கும் போது அவ உன்னைப் பார்த்து எழுதி டெந்த் ப்ளேஸ்ல கூட வரலேன்னா எப்படி… இந்த தடவைதான் உன்னைக் கரெக்டா பார்த்து எழுதியிருப்பா போல… அதான் உன்னை பாராட்டினேனே… அதுல மேடமுக்கும் போய் சேர்ந்துரும்” நக்கலாக ஆராதனாவை குத்திக் காட்ட
“மேம் நான் இந்த தடவை அவளுக்கு காட்டவே இல்லை மேம்… ” செல்வி அடிக் குரலில் சொன்ன போதே
எழுந்த ஆராதனா… லதாவை அலட்சியமாகப் பார்த்தபடி…
“நான் ஏதும் பார்த்து எழுதலேன்னு நிருபிக்கனுமா என்ன…”
“தேவையில்ல… நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்றேன்னு சொல்லிட்டியே… இதுக்கு மேல நீ என்ன பண்ணினாலும்… என்ன மார்க் எடுத்தாலும் எனக்கு அது தேவையில்ல…” ஆராதனாவிடம் அவளது வகுப்பு பேராசிரியை லதா சொல்லி முடிக்க ஆராதனாவும் அதற்கு மேல் விவாதம் செய்யவில்லை… உட்கார்ந்து விட…
மொத்த வகுப்பறையும் அமைதியாக இருக்க…
“செல்வி… நீ கண்டினியூ பண்ணு….” என்று தன் கையில் வைத்திருந்த புத்தகத்தில் கவனம் வைக்க… செல்வி பட்டியலை மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்…
“உனக்கும் லதா மேமுக்கு அப்படி என்னடி கோல்ட் வார்… ஒரு தடவை செல்வியும் நீயும் மாட்டின மேட்டர்ல இருந்தா…” காயத்ரு கிகிசுத்த குரலில் ஆராதனாவிடம் பேச ஆரம்பிக்க…
”காயத்ரி….” லதா மேடமின் குரல் உயர்ந்திருக்க… அடுத்த நொடியே காயத்ரியின் குரல் சட்டென்று நின்றிருந்தது… அதன் பின்
“ஓகே மார்க்ஸ்லாம் கேட்டுட்டீங்களா… எல்லாரும் படிங்க… டவுட் இருந்தா கேளுங்க…” என்றபடி லதா மேடம் அனைவரையும் பார்த்தபடி அமர…
செல்வி… ஆராதனா காயத்ரி தோழிகள் கூட்டம் படிக்கவா செய்திருப்பார்கள்…
“ஆராதனா எப்படிடி இப்படி… டாப் டென்ல வர்ற அளவுக்கு மார்க் எடுத்திருக்க…” காயத்ரி வாயைப் பிளக்க
செல்வியோ
“அவளப் பற்றி உனக்குத் தெரியாது… 10த் படிக்கும் போது ஃபெயில் ஆகிருவாளோன்னு நான்லாம் பயந்தேன்… ஆனா 82 பெர்சண்டேஜ் எடுத்தா… அவளுக்கு படிக்க முடியும் ஆனா படிக்க நினைக்க மாட்டா… அதான் அவளோட வீக்னெஸே”
”அவ இந்த மார்க் எடுத்தது எனக்கு ஆச்சரியம் இல்லை… லதா மேடமுக்கு இவளுக்கும் என்னமோ நடந்திருக்கு… அதுனாலதான் லதா மேம் காண்டுல இவ டாப்பர்னு சொல்லல…. ஏய் சொல்லுடி என்ன ஆச்சு… எனக்குத் தெரியாமல் என்னவோ நடந்திருக்கு…”
“ப்ச்ச் ஒண்ணும் இல்லடி… விடேன்” ஆராதனா விட்டேற்றியாகச்
“இப்போ சொல்றியா இல்லையா’ செல்வி பொய்மிரட்டலை கையில் எடுக்க… ஆராதனாவும் சொல்ல ஆரம்பித்தாள்
“உனக்கு ஏன் என் அண்ணனைப் பிடிச்சது சொல்லு… நீ அடிக்கடி ஒரு சம்பவம் சொல்லுவியே…”
செல்வியின் முகம் மாறி பின்
“அது உங்க அண்ணன் என்னை மிரட்டினாங்க… நான் உனக்கு அட்வைஸ் பண்ணின்னேன்னு… என் தங்கச்சி அப்படித்தான் … அவளுக்கு அட்வைஸ் பண்ண நீ யார்… அப்படினு கேட்டாங்க… ஏன் அதுக்கென்ன”
“அதேதான்… உன்னை என் அண்ணன் மிரட்டனதுல இருந்து… உனக்கு என் அண்ணனைப் பிடிச்சது… மேடமுக்கு பிடிக்கலை… என் அண்ணனையும் என்னையும்…”
”என்னடி சொல்ற” செல்வி ஒரு மாதிரியானக் குரலில் கேட்க
“ஆமா.. அவங்க வீட்டுக்காரர் வேற ப்ளேஸ் ட்ரான்ஸ்ஃபெர் வாங்கிப் போனாரே… யாரால? அண்ணனால தான்… அதுல இருந்து… லதா மேடம் என் மேல செம்ம காண்ட்ல இருக்காங்க… அதோட ரிசல்ட் தான் இது…”
செல்வி ஒன்றும் சொல்லவில்லை… அமைதியாக தன் புத்தகத்தில் கவனம் வைத்த போதே… அவர்களது வகுப்பில் மைக்கில் அறிவிப்பு வந்தது….
“தேர்தல் நடத்தப்படாமலேயே…. இந்த வருடத்தின் மாணவர்களின் சேர்மனாக காவேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்… ” அறிவிப்பு இப்படியாக ஆரம்பித்து அதன் பின் காவேரிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு… மாணவிகள் இனி காவேரிக்கு ஆதரவாக இருக்கவேண்டுமென்றும்… குறைகள் என்று வரும் போது கல்லூரியின் மாணவிகள் தலைவியாக காவேரியிடம் முறையிடலாம் என ஆரம்பித்தி சில நிமிடம் உரையாற்றி விட்டு கல்லூரி முதல்வர் வைத்திருக்க…
ஆராதனாவை செல்வியும் …. காயத்ரியும் முறைக்க ஆரம்பித்திருந்தனர்….
---
”லூசாடி நீ… அப்படி என்ன அந்த காவேரி பெருசா போயிட்டா உனக்கு… உன்னை யாரு எலெக்ஷன்ல இருந்து விலகச் சொன்னது…” காயத்ரி பட படவென்று ஆராதனாவை திட்டிக் கொண்டிருந்தாள்…
செல்வியும் கடுப்பாக நண்பியைப் பார்த்தாள்… வேறெதுவும் பேசவில்லை
“நீயும் திட்டு… ஏன் நீ மட்டும் வாயைத் திறக்க மாட்டேங்கிற… கம்ப்யூட்டர் கிளாஸ் இல்லேன்னு உங்கள இங்க கூட்டிட்டு வந்தா… உங்க அர்ச்சனையா… வேற வழி வாங்கிக்கிறேன்.” என்று செல்வியிடம் ஆராதனா பேச ஆரம்பிக்கும் போதே… காயத்ரியின் முகத்தில் மாறுதல்…
“என்னாச்சு காயு…” செல்வி தோழியின் முக மாறுதலைப் பார்த்துக் கேட்க
“அவன் வராண்டி… என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்…. பிடிவாதமா என் பின்னாலேயே சுத்திட்டு இருக்கான்… ஆராதனா நீ சொன்ன மாதிரி என் அப்பாகிட்ட இதைச் சொன்னேண்டி… அவர் நேத்து மிரட்டிருப்பாரு போல… “
செல்வியும் ஆராதனாவும் இப்போது தங்கள் முன் வந்து நின்றவனிடம் பார்வையக் குவித்தனர்…
“காயத்ரி… உங்க அப்பா வந்து மிரட்டிட்டுப் போனா… நான் பயந்துருவேன்னு நினச்சியா…” நிதானமாக காயத்ரியின் எதிரில் இருந்த இருக்கையில் ஆராதனாவின் அருகில் அமர்ந்தான் ராஜா…
”ஏய் என்ன பிரச்சனை பண்ணனும்னு வந்துருக்கியா… “ செல்வி தன் தோழி காயத்ரியின் பதட்டத்தை உணர்ந்து… அவனை மிரட்ட…
ஆராதனா எதுவும் பேசாமல் நடப்பதை வேடிக்க பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க… காயத்ரியோ அழ ஆரம்பித்திருந்தாள்
“ஏய் இப்போ எதுக்கு அழற…. நான் என்ன வேலை வெட்டி இல்லாம… தண்ணி அடிச்சுட்டு… தம் அடிச்சுட்டு… எப்படி பொழுதைப் போக்குறதுன்னு தெரியாம உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேனா என்ன… ஒரே ஊர்க்காரி டெய்லி கடை முன்னாடி வந்து பஸ்ஸுக்காக வந்து நிப்ப… பிடிச்சது… லவ்வச் சொன்னேன்… உன்னைக் கட்டாயப்படுத்தவும் இல்லையே…” ராஜா காயத்ரியின் முகத்தைப் பார்த்து கத்த ஆரம்பிக்க
“அப்புறம் எதுக்கு பாஸ் என் ஃப்ரெண்ட லவ் பண்ணுனீங்க… “ ஆராதனா நக்கலாகக் கேட்க
“படிக்கிறா… அதுனால தான்… இல்ல…”
“படிக்கிற புள்ளனு தெரியுத்ஹே…. அப்போ ஏன் சார் சொன்னீங்க…” ஆராதனா புரியாத மொழியில் பதில் கேட்பது போல முகத்தை பவ்யமாக வைத்து கேட்க
“நான் சொல்லாமல் இருந்து அந்த கேப்ல வேற யாராவது வந்து சொல்லிட்டா… என் மனசு அவளுக்கும் தெரியனும் தானே… அதுனாலதான் “
“ஓகே… ஓகே… அட்வான்ஸ் புக்கிங்… புரியுது… புரியுது “ என்று ஆராதனா தோழியைப் பார்த்தாள்….
“உனக்கு ஏண்டி பிடிக்கல….” காயதிரியிடம் திரும்பினாள்…
“லூசு மாதிரி கேட்கிற… எனக்கும் என் அத்தை பையனுக்கும் சின்ன வயசுலயே பேசி வச்சுட்டாங்கன்னு உனக்குத் தெரியும் தானே…”
“உனக்குப் பிடிக்குமா… “ ஆராதனா அழுத்தமாகக் கேட்க
“வீட்ல சொல்றதுனால அவரைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்…”
“இவரைப் பிடிக்குமா…”
அமைதியாக காயத்ரி அமர்ந்திருக்க
“பிடிக்குமா… பிடிக்காதா….” ஆராதனாவின் வார்த்தைகளில் அழுத்தம் வந்திருக்க…
“தெ… ரி… யல” காயத்ரி தேம்பலாகச் சொல்ல…
“செல்வி… வா போகலாம்…. “ என்றவாறு செல்வியை அழைத்தபடி ஆராதனா எழ…
”ஏய் இருடி… அவளே அழுதுட்டு இருக்கா… நீ வேற…” என்று ஆராதனாவிடம் கோபித்தபடி…
“தெரியலேன்னா என்ன அர்த்தம்…. ஒண்ணு பிடிக்கும்னு சொல்லு… இல்ல பிடிக்கலைனு சொல்லு… அதை விட்டுட்டு இது என்ன பேச்சு… ” செல்வியும் காயத்ரியைத் திட்ட ஆரம்பித்திருக்க
“என்னை என்னடி பண்ணச் சொல்ற… இவர் எங்க கேஸ்ட் இல்ல… லவ் பண்ணினா வெட்டிப் போட்ருவாங்க… ஆராதனாகிட்ட கேளு கதை கதையா சொல்லுவா….” என காயத்ரி அழுதபடி சொல்ல..
ஆராதனா இப்போது மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தவள்…
“உனக்குப் பிடிச்சுருக்கான்னு சொல்லு… இவர் கூட சந்தோசமா வாழுவேன்னு உன் மனசுல தோணுச்சுன்னா உன் அப்பாகிட்ட சொல்லு… எது எதிர்த்து வந்தாலும் நில்லு… அதை விட்டுட்டு”
ஆராதனா கடுப்பாகச் சொல்ல… காயத்ரி விடுக்கென்று நிமிர்ந்தாள்…
“இப்படி உன்கிட்ட ஒருத்தவன் வந்து நின்னா… நீ என்ன சொல்வ… உன் குடும்பத்தை நினைக்க மாட்ட… “
“முதல்ல என் முன்னாடி வந்து நிக்க அவனுக்கு தைரியம் வேணும்… அப்படி ஒருத்தன் வந்து நின்னு சொன்னா… எனக்குப் பிடிச்சிருந்தா யார் என்னைத் தடுத்தாலும்… அவனோட வாழுவேன்… அந்த தைரியம் எனக்கு இருக்கு…”
“ஓ… அதுதான் மேடம் உங்க வீட்ல பார்த்த பையனுக்கு ஓகே சொன்னீங்களோ…”
”இப்பவும் சொல்றேன்… எங்க வீட்ல சொல்ற பையனுக்குத்தான் ஓகே சொல்வேன்…. ஆனா அதெல்லாம் மீறி எனக்கு ஒருத்தனைப் பிடிச்சா அவனுக்காக போராடுவேன்… யார் சொன்னாலும்… ஏன் அவனே என்னை வேண்டாம்னு சொன்னாலும் அவனை விட மாட்டேன்… ஆனால் அந்த நிலைமை எனக்கு எப்போதுமே வராது… ஏன்னா எனக்குப் பிடிச்சவங்கன்னு யாரும் என் எதிர்ல வந்து நிக்கப் போறதுல்ல…”
“லவ் பண்ணக் கூடாது… லவ் பண்ணனும்னு நினச்சால் வீட்ல சொல்லத் தைரியமும் இருக்கனும்… எது பண்ணா நினச்சாலும்… நல்லதோ கெட்டதோ… அதோட விளைவுகளை ஃபேஸ் பண்ணக் கத்துக்கனும்… முடிவா சொல்லு…இவரை லவ் பண்றியா இல்லையா… உனக்கு உன் குடும்பமா அதாவது பிரச்சனை இல்லாத வாழ்க்கையா … இல்லை இவரோட சேர்ந்து பிரச்சனையை ஃபேஸ் பண்ணினாலும் காதல் தான் முக்கியம்னு வாழ்ற வாழ்க்கையா”
செல்வி… ஆராதனாவை பார்த்தாள்…
“இவ இவனை லவ் பண்ணச் சொல்றாளா… இல்லை வேண்டாம்னு சொல்றாளா…”
காயத்ரி அமைதியாக இருக்க
“பிடிக்கல… பிடிச்சிருக்கு நேரடியா சொல்லு… இவர் கண்ணைப் பார்த்துச் சொல்லு… அவ்ளோதான்…”
இப்போது பரிதவிப்பாக காயத்ரி ராஜாவைப் பார்க்க… அவள் கண்களிலேயே அவனுக்காக காதல் அவளிடம் வந்திருக்க
“செல்வி… வா போகலாம்…. அவங்க பேசட்டும் ” செல்வியை இழுத்துக் கொண்டு தனியே வந்திருந்தாள் ஆராதனா…
---
”ஏய் என்னடி…. காயத்ரியை தனியா விட்டுட்டு வந்துட்டோம்….”
“வாடி பார்த்துக்கலாம்… ”
“என்னடி… கூலா பேசுற….” என்ற போதே காயத்ரியின் முறை மாமனும் அங்கு வந்திருக்க…
“ஏய்… ஏய் தனா… அங்க பாரு… காயுவோட முறைப் பையன்… அவங்க உட்கார்ந்திருக்கிற இடத்துக்குப் போறாரு” செல்வி பதற
“தெரியும்… தெரியும்… “
“நேத்தே அப்பாகிட்ட வந்திருந்தாங்க…. “ ஆராதனா அசால்ட்டாகச் சொன்னவள் செல்வியின் முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்தவளாக…
“காயத்ரி முடிவெடுக்கனும்டி… இல்ல ரெண்டு பசங்களோட வாழ்க்கையும் வீணாகிடும்… அவளுக்கு அந்த ராஜாவைப் பிடிக்கும்… ஆனால் எங்க குடும்பத்துலலாம் வாழ விட மாட்டாங்கன்னு அவ அவாய்ட் பண்ணிட்டு இருந்தா… அவ அப்பாகிட்ட சொன்னா ராஜா வர மாட்டார்ன்னு நான் சொன்னதை வச்சு வீட்ல சொல்லிட்டா… ஆனால் அந்த இராஜா விடாமல் வந்துட்டான்ல… இன்னைக்கு அவ முடிவெடுத்திருவா….”
“தனா… இது உனக்குத் தேவையில்லாத வேலை…. இதெல்லாம் உனக்குத் தேவையா “
“எது தேவையில்லாத வேலை… சொந்தத்துல பேசிட்டாங்கள்ள… அப்போ அவன்தான் இனி வாழ்க்கைனு முடிவெடுத்திருக்கனும்… புதுசா ஒருத்தவன் வந்து நின்னா அது என்ன தடுமாறுறது… ஒண்ணு இந்த பக்கம் இருக்கனும்… இல்ல அந்தப் பக்கம் போயிறனும்…”
செல்வி ஏதோ பேச ஆரம்பிக்கும் போகும் போதே… காயத்ரியின் முறை மாப்பிள்ளை கோபமாக அவர்களைத் தாண்டிச் சென்றான்….
“ஏய் வீட்டுக்குத் தானே வந்து நிப்ப… அப்போ இருக்கு உனக்கு…. டேய் நாயே உனக்கு எங்க வீட்டுப் பொண்ணு கேட்குதா… உன் குடும்பத்துக்கு சமாதி கட்றேன்” என்றவாறு அவன் வெளியேறி இருக்க…
ஆராதனாவும் செல்வியும் இப்போது காயத்ரி ராஜா இருந்த இடத்திற்கு மீண்டும் வந்து நின்றிருந்தனர்…
அந்த ராஜாவின் கையை காயத்ரி இறுகப் பற்றியிருக்க…
“ஹ்ம்ம்… இந்த தைரியம் தான் வேணும்… இங்க பாரு… கடைசி வரை பிடிச்சிருக்கிற இந்தக் கைய விட்றாத… “ என்ற ஆராதனா…
“உன் அத்தைப் பையன நினச்சுலாம் கவலைப் படாத… எங்க அண்ணா சப்போர்ட்லாம் இப்போ இருக்காது… நீ உன் முடிவுல உறுதியா இரு….”
காயத்ரியின் கண்கள் கண்ணீர் மட்டுமே வந்து நிற்க…
“நான் பார்த்துகிறேம்ம்மா…” ராஜா அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க…
செல்வி ஆராதனாவையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்….
----
பேருந்தில் ஏறி அமர்ந்த போதும் செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை….
“என்ன தனா…. ஏன் இப்படி பண்ணுன… காயத்ரிக்கு ஏதாவது பிரச்சனை வந்திரும்மோன்னு பயமா இருக்கு”
“உயிருக்கு கூட ஆபத்து வந்திருமோன்னு பயமா இருக்குடி
”என்ன பண்ணிருவாங்க” ஆராதனா சாதாரணமாகக் கேட்டபடி
”காதல்னு ஒண்ணு வந்திருச்சுல்ல…. அப்புறம் எல்லாத்தையும் சமாளிக்கத்தான் வேணும்… கோழையா… இருக்கிறவங்க லவ் பண்ணவே கூடாது…”
“இல்ல… எனக்கு ஒரே ஒரு டவுட் தான்… நீ எப்படி ராஜா – காயத்ரிக்கு”
”சப்போர்ட் பண்றேன்னு கேட்கிறியா….. நான் என்னடி பண்ணினேன்… அவளுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவங்க கூட வாழப் போற… முடிவெடுக்காம ரெண்டு பசங்க வாழ்க்கையை வீணடிக்கப் பார்த்திருந்தா… இனி… ஒரு முடிவு கிடைக்கும்….”
“அப்போ…. அவங்க அத்தை பையன இங்க வரவச்சது நீதானா…” செல்வி கோபத்தோடு கேட்க
“ஐயையோ… அது நான் இல்லம்மா… ” ஆராதனா வேகமாகச் சொல்ல… செல்வி புருவம் சுருக்க
“ஏய் நம்புடி …. நான் சொல்லல… அதாவது ஆனால் நான் நேரடியா சொல்லல… ஆனால் தெரியும் அவர் இங்க வருவார்னு….” சொன்னபோதே செல்வி முறைத்திருக்க
“ஏய் முறைக்காதடி… காயத்ரி அந்தப் பையன ராஜா பற்றி நம்மகிட்ட சொன்னாள்ள … அப்போ நான் என்ன சொன்னேன் “
“நீ அவ அப்பாகிட்ட சொல்லச் சொன்ன…”
“ஹான் அதை மட்டும் தான் நான் பண்ணேன்… மத்ததெல்லாம் அதுவாவே நடந்துச்சு…. நான் சொன்னதால என்னாச்சு… காயூ அவ அப்பாகிட்ட சொல்ல… அவ அப்பா ராஜாவை மிரட்ட… ராஜா கோபமா இங்க வர… இது ஒரு பக்கம்னா.. காயு வீட்ல விசயம் தெரிஞ்சு… அவ முறைப் பையன்… இந்த ராஜாவை தட்டு தட்டி வைக்க நெனச்சான்… அண்ணாகிட்ட வந்து பேசினான்… அதுக்காக ராஜாவை பாளோ பண்ணிட்டும் இருந்தான்… இன்னைக்கு எல்லாம் ஒரே புள்ளில ஜாயின் பண்ணிட்டாங்க… விடு… சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்றவள்… அதே உற்சாகத்தோடு
”இந்த அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்துருக்கியா… சின்னதா ஒரு பந்து… அது மிஷன அக்கம்ளீஷ் பண்ணுமே… ஜஸ்ட் பட்டர்ஃப்ளை எஃபெக்ட்…” செல்வியை ஒரு நொடி பார்த்தவளாக
“இன்னொரு கார்த்திக்… தொடர்ந்துகிட்டே இருக்கனுமா சொல்லுடி… “ குரல் மாறி இருந்தது ஆராதனாவுக்கு
“எதுக்குடி இதுல கமலியக்காவை இழுக்கிற” செல்வி கடுப்பாகக் கேட்க
“நான் அவங்களப் பற்றி பேசவே இல்லையே… டைம் ஸ்பான் காயத்ரி விசயத்துல கிடச்சுருக்கு… அவங்ககவங்க நியாயங்கள… காதலை… அன்பை… மன வருத்தங்களை… பேச கால அவகாசம் கிடைச்சிருக்கு… யார் ஜெயிக்கப் போறாங்க அது அவங்கவங்க திறமையைப் பொறுத்தது…. ராஜாவோட காதலா… காயத்ரிக்கு காதலா பாசமா… அந்த முறைப் பையனுக்கும் அவனோட காதலைக் காட்ட… கோபத்தைக் காட்ட டைம் கெடச்சுருக்கு… காதல் … பாசம்… குடும்ப மானம் இதுல எது ஜெயிச்சாலும் ஏத்துக்கனும்… அதான் வாழ்க்கைனு அதை நோக்கிப் போயிறனும்”
“கமலியக்கா உன் அண்ணன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கனும்னு சொல்றியா…” செல்வி நேரடியாக ஆராதனாவிடம் கேட்க
“நம்பினவங்களை ஏமாத்தாதீங்கன்னு சொல்றேன்… கமலியக்காக்கு மட்டுமில்லை… எல்லாருக்குமே… உனக்குமே… நம்பிக்கை துரோகம் முதுகுல குத்துறது… எவ்ளோ வலின்னு என் அண்ணன்கிட்ட பார்த்துருப்பியே”
செல்வி இப்போது ஆராதனாவைப் புரிந்து கொண்டவளாக… வேறொரு புறம் திரும்ப… ஆராதனாவே இப்போது பேச்சை மாற்றினாள்
“சரி சரி… அதெல்லாம் விடு்… ஒரு முக்கியமான விசயம் பேசனும்… என் அண்ணனனப் பற்றி…” ஆராதனா சொன்ன போதே வேகமாக செல்வி பட்டென்று திரும்ப…
“அடேங்கப்பா… எங்கண்ணன்னு சொன்ன உடனே கிழக்க உதிக்கிற சூரியன் சட்டுனு இந்த முகத்துல உதிக்குது”
“என்ன... என்ன… சூரியன் அது இதுன்னு… பேச்ச மாத்தாத… என்ன உங்க அண்ணனைப் பற்றி” செல்வி முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கேட்டவள்…
“இப்போ என்கிட்ட என்ன சொல்லி… அதுனால என்ன நடக்கனும்… என்னை வச்சு என்ன ப்ளான் பண்ணப் போற….”
”ஹலோ” என்று முறைத்த ஆராதானா
”ப்ளான் தான்… ஆனால் உன்னை வச்சு இல்லை… உங்க அண்ணன வச்சு” ஆராதனா கண் சிமிட்ட… செல்வி இன்னும் அதிகமாக முறைக்க
“ஏய் லூசு… எங்க அண்ணாக்கு நெக்ஸ்ட் வீக் பிறந்த நாள் வருது… அதுக்குத்தான்” விளக்கினாள் ஆராதனா… இன்னும் தெளியாத தோழியின் குழப்பமான முகத்தைப் பார்த்து ஆராதனா கேள்வியாகப் பார்க்க
“உங்க அண்ணா என்னைக்குடி பிறந்த நாள் கொண்டாடிருக்காரு… இந்த வருசம் பிறந்த நாள் கொண்டாட… அந்தக் கொண்டாடாத உங்க அண்ணன் பிறந்த நாளுக்கு இவ ப்ளான் வேற போட வந்துட்டா…” செல்வி சலிப்பாகச் சொல்ல
“இல்லடி… இதுவரை அண்ணனுக்கு கொண்டாடினதில்ல… எங்க கார்த்திக் அண்ணாக்கும் அது பிடிக்காது… ஆனால் இந்த வருசம் பிறந்த நாள் சர்ப்ரைஸ் வேணும்டி… எங்க அண்ணாக்க்கு அதுக்காக நாம எல்லோரும் இருக்கோம்னு காட்டனும்டி… என்னதான் பேசினாலும்… சிரிச்சாலும்… கோபமா இருந்தாலும் கெத்தா காட்டிகிட்டாலும் எங்க அண்ணா மனசளவுல உடஞ்சிருக்குடி… அதுக்கு காரணம் காதல் தோல்வி மட்டும் இல்லை… ஏமாற்றம்… அவமானம்… எல்லோருமே இருந்தும் யாருமே தனக்கு இல்லையோன்ற தனிமை இதுமட்டுமே… என் அண்ணாகிட்ட அதை மாத்தனும்… உனக்காக நாங்க இருக்கோம்… நீ எங்க ஸ்பெஷல்னு காட்டனும்… அவருக்கு புரிய வைக்கனும்… அது புரிஞ்சா போதும்…”
“ஏய் உங்க அண்ணாக்கு என்னடி…. ராஜாடி… சிங்கத்துக்கு எப்போதுமே தோல்வி இல்ல… நான் பார்த்துக்கிறேன்..” செல்வி அவளை மறந்து பேச ஆரம்பித்திருக்க… கண் சிமிட்டாமல் ஆராதனா அவளையே பார்த்திருந்தாள்…
“எனக்குத் தெரியும்… நீ பார்த்துக்குவேன்னு” அந்தப் பார்வையில் சொல்லாத அந்த வார்த்தைகள் மட்டுமே இருக்க
“சொல்லு… என்ன பண்ணனும்… என் அண்ணாகிட்ட என்ன ஹெல்ப் வேணும்…” செல்வி கேட்க… ஆராதனா தன் திட்டத்தைச் சொன்னவள்…
“உங்க அண்ணாக்கு உடனே ஃபோன் பண்ணு செல்வி… ப்ளீஸ்… ப்ளீஸ்… ஓகே வான்னு கேளு ப்ளீஸ்….” ஆராதனா அவளை நச்சரிக்க
செல்வியோ
“ஓகேடி… உன் ப்ளான்லாம் புரியுது… ஆனால் எங்கண்ணன் என்ன சொல்லும்னு தெரியலயே… ஆனா அதுக்கு முன்னால… அதுக்கு இப்போ கால் பண்ண முடியாது… ஆல்வேஸ் மீட்டிங்ல இருக்கும்… நான் போட்டாலும் எடுக்காது…. நைட் தான் கால் பண்ணும்… ”
“ப்ச்ச்ச்… பரவாயில்ல… ட்ரை பண்ணு…. இல்ல நான் ட்ரை பண்றேன்…”
”இருடி இருடி…. மெசேஜ் அனுப்பிட்டேன்….மீட்டிங்கல இருக்காம்டி…” என்று செல்வி ஆராதனாவைத் தடுத்தவளாக
“இதுக்கு மேல போன் பண்ணினால்…. திட்டுவாங்கடி… நானே நைட் பேசிட்டு சொல்றேன்…” செல்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆராதனா நரேனுக்கு செய்தி அனுப்பி இருந்தாள்…
“அவள் அவனிடம் பேச வேண்டுமென்றும்… ஃப்ரியாக இருக்கிறீர்களா என்றும்….”
அடுத்த நொடி…நரேனிடமிருந்து… ஆராதனாவுக்கு அழைப்பும் வந்திருந்தது…
----
உறவான நிலவொன்று சதிராட - 14 Teaser
கல்லூரியில் ஒரு தோரணையோடு வலம் வருபவள்… இங்கு… அப்பத்தா… அம்மா… அப்பா…. அண்ணன்… தாத்தா என அவர்களின் சொல்லுக்கு இணங்கி நடக்கின்றாள்…
செல்வியிடமே அந்த வித்தியாசத்தைக் கேட்க…
“எனக்கு அப்படியெல்லாம் வித்தியாசம் தெரியலையே….” செல்வி சொல்ல காவேரியும் விட்டு விட்டாள்…
---
“உறவு முறைல இதெல்லாம் நடக்கிறது சகஜம் தான் ராஜசேகர்… அதுக்காக தங்கச்சி உறவு இல்லைனு ஆகிருமா… ”
ராஜசேகர் அமைதியாக அமர்ந்திருக்க… அவரின் பாவனையே அவருக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்பது போல இருக்க
---
“உங்க பொண்ணு… நீங்க கொடுக்க நினக்கிறீங்க…. இதுல நாங்க என்ன சொல்ல…” ராஜசேகர் எப்படியோ தடுமாற்றம் இல்லாமல் தோரணை குறையாமல் சொல்லி முடித்திருக்க….
இங்கோ பெண்கள் மூவரும் இருந்த அறையில்
“ம்க்கும்… எங்க அக்கா அப்படியே அந்த செழினுக்கு சரின்னு சொல்லிருவா…” காவேரி இழுக்க…
---
“அது உன் ப்ளான்… என் ஆளுக்கு நான் தனியா ப்ளான் எக்ஸிகியூட் பண்ணிட்டேன்… “
“என்ன செல்வி சொல்ற…” ஆராதனா குழம்பிய குரலில் கேட்க…
“உங்க அண்ணா… எங்க அண்ணா கூட நைட் கரெக்டா வந்திருவேன்…. “
”ஹ்ம்ம்ம்… சொதப்பிற மாட்டியே…. உன் அண்ணாக்கும் உன் ப்ளான் தெரியாதுதானே…” என்றபோதே
---
“ஹலோ…. ஹலோ எங்க அண்ணா வர்றார்னுதான் நான் இன்னைக்கு லேட் பண்ணினேன்… என்ன வேற யார்கூடயோ அனுப்ப ப்ளான் பண்றீங்களா…. எங்க அண்ணா எத்தனை மணிக்கு வந்தாலும் இருந்து அவர்கூடத்தான் போவேன்…”
எப்படியோ அவள் பிடிவாதம் ஜெயித்திருக்க…
“சரி…. கார்ல உட்காரு…. வெளில நின்னு மானத்தை வாங்காத….”
---
“எங்க அண்ணன் எப்போ வரும்….”
“ஹ்ம்ம்ம்… அதை உங்க அண்ணாகிட்ட கேளு….”
”அதான் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கே…. இல்லைனா நான் கேட்ருக்க மாட்டேனா…. சரி… விடுங்க ஏதாவது பாட்டு பாடுங்க… பேசவும் கூடாதுன்னு சொல்லிட்டீங்க… அட்லீஸ்ட் பாட்டாவது கேட்டுட்டு டைமக் கடத்துவேன்ல…”
“அன்னைக்கே சொல்லிட்டேன்…. என் கார் செல்வின்ற பேர் இருக்கிறவங்களுக்கு பாட்டெல்லாம் பாடாதுன்னு”
Lovely update pravee...
Epi inime cndinuva podunga. Break irundha padikka interest varala. Otherwise epi nice
Very nice ud.. Nijamave aara oru puriyatha puthir than... But guessing la story irundha nalla irukathu.. So aara characterization enaku pidichiruku sis. Ud matum continue ah podumpati karunai kaatunga thaaye...
Continue ah ud kudu ma nu nanga tan soluvom. Ungala nengaley kalachikita nanga ethuku irukom
Nice episode.As usual Varuni is rocking with cliffhanger.