ஹலோ ஃப்ரெண்ட்ஸ்
அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்…
படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க… கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்…
நன்றி
உங்கள் பிரவீணா…
நாயகன் :
அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்
ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
எல்லோா்க்கும் காதல்
வரும் என்றாலும் கல்யாண
வைபோகம் சில போ்க்கு தான்
நாயகி :
பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது
புயல் காற்று அடித்தாலும் அணையாதது
புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது
நாயகன் ஆடிடும்
நாடகம் தான் யாருக்கு
யாா் என்று எழுதி வைத்தாா்
அத்தியாயம் 10
அதிகாலை சூரிய வெயில் சுள்ளென்று அறைச் சன்னலின் வழியே… முகிலனுக்கும் இப்போது விழிப்பு வந்திருந்தது…
கடந்த ஒரு வாரமாக அவன் ஊரில் இல்லை… வியாபார விசயமாக வெளியூர் சென்றிருந்தவன்… நேற்று நள்ளிரவு தான் ஊர் திரும்பியிருந்தான்… வந்தவன்… சாப்பிடக்கூட இல்லை… அப்படியே உறங்கியும் விட்டவன் இப்போதுதான் எழுந்தான்… இவன் எழுந்தது எப்படி அவன் தங்கை வனிதாவுக்குத் தெரிந்ததோ சரியாக அவளும் வந்தவளாக…
“அண்ணா… டிபன்.. மதிய சாப்பாடு எல்லாம் இருக்கு… நீங்களே எடுத்துப் போட்டுக்கங்க… நானும் அம்மா அப்பா எல்லோரும் கிளம்புறோம்” வனிதா சொல்ல… முகிலனோ பாதித் தூக்க கலக்கமும்… கொஞ்சம் கேள்வியாகவும் தங்கையை நோக்கியபடி….
“என்ன விசயம்… அதுவும் எல்லோரும்… இவ்ளோ சீக்கிரமா… என்ன” எழுந்து அமர்ந்தவன் சோம்பல் முறித்தபடியே கேட்க
”அண்ணே… நம்ம தனாவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்கன்னா… அதுக்குத்தான் கல்யாணப் புடவை எடுக்கப் போறோம்… ” இதுவரை ஆராதனா வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சொல்லியபடி இருக்க…
“ஆராதனாவுக்கு மேரேஜ்…” அந்த ஒரு வார்த்தையிலேயே முகிலன் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்க…. அடுத்து ஏதும் பெரிதாக அவன் காதில் விழவில்லை..
“ஒரு மூன்று நாட்கள் ஊரில் இல்லை… அதற்குள் இப்படியெல்லாம் நடக்கும் என்று கனவிலும் யோசிக்க வில்லையே…” தலையிலடித்துக் கொண்டவனுக்கு..
“பெரியப்பாவுக்கு இப்போதானே உடம்பு சரியாச்சு… ஹாஸ்பிட்டல்…வீடுனு… அலஞ்சு முடிச்சோம்… அதுக்குள்ள விசேஷம்… எப்படி…” வாய் ஏதேதோ தங்கையிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும்…
“செழியனுக்கு எப்படி இந்த விசயத்தைச் சொல்வது… முதலில் அவன் தாங்குவானா…”
அதை எல்லாம் விட அவன் என்ன செய்வான் என்று நினைக்கும் போது அவன் கோபம்… அதை விட ஆராதானா மேல் வைத்திருக்கும் காதல்… காதல் என்பதை விட பைத்தியம் இதையெல்லாம் நினைக்கும் போதே முகிலனுக்கே அடிமனம் நடுங்கியது…
“அவ்வளவு சுலபமாகவெல்லாம் செழியன் ஆராதனாவை விட மாட்டான்… இவர்களது ஒன்பதாம் வகுப்பில் காதல் என்றறியாமலேயே ஆரம்பித்தது தன் நண்பனின் காதல்… இந்த நாள் வரை அவளை மனதில் சுமப்பவன்… அவனது காதலை அன்றிலிருந்து இன்று வரை அவன் நண்பனாகிய முகிலனான தான் மட்டுமே உணர்ந்திருப்பது…” முகிலனுக்கு முகமெங்கும் வேர்க்க…. அதே நேரம்… வெளியே பெண்களின் சிரிப்புச் சத்தம் கேட்க… வேகமாக வெளியே வந்தான் முகிலன்…
ஆராதனா… செல்வி… வனிதா… ஆராதனா குடும்பம்…. இவன் குடும்பம்… இன்னும் சில பேர் எனக் கும்பலாக இரண்டு வேன்களில் ஏற…
முகிலனைப் பார்த்த ராஜசேகர்…
“யப்பா முகிலா! உன் தங்கச்சிக்கு கல்யாணம் பேசி இருக்கோம்… நீ ஊர்ல இல்ல… அதான் உன்கிட்ட சொல்லமுடியல… கோச்சுக்காத… நீதான் கார்த்திக்கு எல்லா வேலையிலயும் ஊடமாட ஒத்தாசையா இருக்கனும்… ”
முகிலன் வேறு வழியில்லாமல்… தலையே ஏதோ பேருக்கு அசைத்து வைக்க…. இராஜசேகரும் புன்னகையுடன் அவனுக்குட் தலை அசைத்துவிட்டு…. வாகனத்தில் ஏறி அமர்ந்திருக்க…. வேனும் கிளம்பியது….
வாகன்ம் எப்போதடா புறப்பட்டுச் செல்லும் என காத்திருந்தவனாக வேகமாக அலைபேசி இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்… செழியனுக்கு விசயத்தைச் சொல்ல…
----
இங்கு செழியன் அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்… “ஓரளவு எல்லா வேலையும் முடித்தாகி விட்டது… பூஜாவும் திறமையுடன் பணி ஆற்றுகிறாள்… அவளை நம்பி இனி இந்தியாவிலேயே இருக்கலாம்… “ ஒரு மாதிரியான மனநிறைவு அவனுக்குள் வந்திருக்க…
வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே…. நேராக அவன் சித்தப்பாவிடம் தான் சென்றான்
“சித்தப்பா… ஊருக்கு கெளம்பலாம்னு இருக்கேன்… பூஜா இனி இங்க பார்த்துப்பா… சீக்கிரமே அவ ஃபேமிலியும் வந்துருவாங்க… அவளும் இங்க இருந்து கிளம்பியிருவா… “ என்றவன்
“அப்புறம் நான் இனிமேல முதல்ல மாதிரி அடிக்கடி இங்க வர மாட்டேன்னு நினைக்கிறேன்…” என்றவன் மதிவாணனின் முகம் மாறிப் போனதில்… அதில் இருந்த வருத்தத்தைக் கவனித்தவனாக
“யோவ் சித்தப்பா.. கரடித் தொல்லை விட்டுச்சுனு சந்தோசப்படுவீங்கன்னு பார்த்தா என்ன முகம் சோகமாகுது…” சூழ்நிலை உணர்ந்து செழியனின் கிண்டல் மதிவாணன் உணர்ந்தான் தான்…. ஆனாலும் மதிவாணனின் முகம் மாறவில்லை…
“விளையாடாத செழியா… திடீர்னு இங்க அந்தப் பொண்ணு பூஜாவை கூட்டிட்டு வந்தது… அவளுக்கு ட்ரெயின் பண்ணினது… இப்போ இனி இங்க அடிக்கடி வரமாட்டேன்னு சொல்றது… நீ ஏதோ ப்ளான் பண்ணி பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்… ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லுடா… ஆனால் இப்பலாம் நீ பெரிய மனுசன் ஆகிட்ட… அதான் கமலி கல்யாணத்தையே நாங்க இல்லாமல் முடிச்சவன் ஆச்சே… அதுக்கே உன் மேல எனக்கு அவ்வளவு கோபம்…” மதிவாணன் பேசிக் கொண்டு இருக்கும் போதே…
“அப்படிச் நல்லா கேளுங்க… ஏண்டா கமலி மேரேஜ் இப்படியாடா நடக்கனும்… நாங்க யாருமே இல்லாம… அக்கா மனசு நொந்து போய்க் கிடக்காடா… உங்களுக்கெல்லாம் எங்கக்காவைப் பற்றி என்ன கவலை…” பூர்ணிமாவும் இப்போது செழியனிடம் தன் மனவருத்தத்தைக் கொட்ட ஆரம்பிக்க… செழியனுக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை…
தன் தந்தையைத் தவிர உறவினர் அனைவருக்குமே செழியன் மேல் கோபம் தான் … என்ன இவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்… அவ்வளவுதான்…
அவனால் யாருக்குமே தங்கள் பக்க நியாயத்தை புரியவைக்க முடியவில்லை என்பதே உண்மை… கமலியின் நியாயத்தை அவன் அண்ணனாக இவன் புரிந்து கொண்டதை வேறு யாரும் புரிந்து கொள்ளத் தயாராகவில்லை…
செழியனுக்குமே…. கமலியா… மற்றவர்களா என வந்த போது கமலியின் பக்கம் நின்றுவிட்டான்… அவனுக்கும் தெரியும்… இந்தத் திருமணம்…. அவன் ஆராதனா மேல் கொண்ட காதலுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும் என்று… அதற்காகவெல்லாம் அவன் தன் அக்கா கமலியை விட்டு விட முடியுமா… என் காதல்… அது உண்மையானது… ஆழமானது… எவ்வளவு பிரச்சனை… யார் மூலம் வந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து விட்டு…. ஆராதனாவோடு தான் சேர்வோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருக்க… கமலியின் திருமணத்தை அத்தனை பேரின் எதிர்ப்பிலும் நடத்தினான்…
செழியன் அமைதியாக அமர்ந்திருக்க…
“உன்னை அத்தனை பேருக்கும் பிடிக்கும்… கார்த்திக் கூட பாசக்காரனா இருந்தாலும் கொஞ்சம் முன்கோபக் காரன்… ஆனால் நீ புத்திசாலி… குடும்பத்துக்கு எது நல்லது கெட்டது… சின்ன வயசுலேயே அவ்வளவு அனுபவசாலியா நடந்துக்கிறது… கண்டிப்பும்… அக்கறையும்… இப்படி உன்னை அவ்வளவு பிடிக்கும்… ஆனா கமலி மேரேஜ்ல அவசரப்பட்டுட்டதான்…”
இப்போது செழியன் மௌனமாக இருக்கவில்லை… அதே நேரம் ஆக்ரோஷமாகவும் பேசவில்லை…
“சித்தி எனக்கு மட்டும் ஆசை பாருங்க… கமலிக்கு இப்படி ஒரு மேரேஜ் நடத்தனும்னு… யார் யாருக்கு என்ன எப்படி நடக்கனுமோ அப்படித்தான் நடக்கும்… கமலிக்கு அப்படி நடந்ததை இனி மாத்த முடியாது…. என்ன பண்ண… எத்தனை தடவைதான் எத்தனை பேர்கிட்டதான் என்னை புரியவைக்க பேசுறது… மாமா… தாத்தா… பாட்டி என்னை கெட்டவனாத்தான் நினைக்கிறாங்க… ஏன் என் அம்மா கூட அவங்க பிறந்த வீட்டுக் குடும்ப மானம் மரியாதை எல்லாவற்றையும் குழிப்பறிச்சு மூடிட்டேன்ற கோபம் … அந்த ஒரு வாரம் நான் பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும் சித்தி… “
“இதுல எனக்கு எந்த ஒரு சேதாரம் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்… ஆனால் எங்கக்கா நல்லாருக்கனும்… அது மட்டும் தான் அன்னைக்கு நான் யோசிச்சேன்… அவ பாவம் சித்தி… சத்தியமா சொல்றேன்… கார்த்திக்… குடும்ப மானம் அது இதுன்னு நாம கமலியைக் கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தோம்…. அதை விட ஒரு நரக வேதனை அவளுக்கு கிடையவே கிடையாது… கார்த்திக் எங்க மாமா பையந்தான்… இரத்த சொந்தம் தான் அதுக்காக சொந்தக்காரன்… குடும்பமானம்னு சொல்லிட்டு… காதலிச்சவனோட வாழாம… மனசுக்குப் பிடிக்காத ஒருத்தவனோட ஒரு நரக வாழ்க்கையை என் அக்கா வாழனுமா… சொல்லுங்க… ”
“அப்படி ஒரு வாழ்க்கையை அவ வாழ எப்படி சித்தப்பா நான் விடுவேன்… அவ தம்பி நான் இருக்கிற வரை அது நடக்கவே நடக்காது.. விடவும் மாட்டேன்… உங்களுக்கு எப்படி உங்க அக்கா… உங்க அண்ணா முக்கியம்மோ அப்படித்தான்… எனக்கு என் அக்கா முக்கியம்” செழியன் ஒரு மாதிரி களைத்துப் போயிருந்தான்… விளக்கம் சொல்லிச் சொல்லியே….
“என்னமோடா… இந்தப் பக்கம் எங்க அண்ணன்… அந்தப் பக்கம் என் அக்கான்னு நான்தான் ஊசலாடிட்டு இருக்கேன்…” பூர்ணிமா இப்போ கண்கள் கலங்கி இருக்க… சித்தப்பாவின் முகவாடலையே பொறுக்க முடியாதவன்… தன் சித்தியின் கண்ணீரைப் பொறுப்பானா… சட்டென்று தன் முகத்தை மாற்றி கலகலப்பானவனாக…
”அட விடுங்க சித்தி… என் மேரேஜ்ல எல்லாத்தையும் சமாய்ச்சுரலாம்… உங்க அக்கா உங்க அண்ணன்… எல்லோரையும் சேர்த்துறலாம்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் அலைபேசி அடிக்க…
அவனே எதிர்பார்க்காமல் அந்த அலைபேசி அழைப்பு ஒலி ஒரு நல்ல சகுனமாகவே பட… அந்த மகிழ்ச்சியில் வேகமாக செழியன் சொன்னான்…
“பார்த்தீங்களா… எப்படி… சொல்லும் போதே மணி அடிக்குதுன்னு…” செழியன் சிரித்தபடி கண் சிமிட்டியவனாக… அலைபேசியைப் பார்க்க… அது முகிலனாக இருக்க…
“ஒகே… நான் டிக்கெட் இருக்கான்னு பார்க்கிறேன்…” என்றபடியே அவர்களிடமிருந்து நழுவியவன்… தன் அறைக்கு வந்து முகிலனின் அலைபேசி அழைப்பை ஏற்றான் ஒரு வித குஷியான மனநிலையில்… கூடவே ஹம்மிங்கும் அவனிடமிருந்து வந்திருந்தது…
”ஹ்ம்ம்ஹ்ம்ம்ம்…ஹ்ம்ம்ம் வினோதம்காதல் கவிதா விலாசம்படித்துப் படித்து ஹ்ம்ம்ம்ம்”
பாடியபடியே ஓய்வாக படுக்கையில் சாய்ந்தபடியே…
”சொல்லுடா மச்சான்…. வேல முடிஞ்சிருச்சா… நம்ம ஊருக்குப் போயிட்டியா என்ன…. வழக்கம் போல அவ காலேஜ் கிளம்புற நேரத்துக்கு கால் பண்ற… தேவதை தரிசனம் கிடைக்குமா… வீடியோ கால் போட்றியா…” நிலைமை அறியாமல் உற்சாகக் குரலில் கேட்டபடியே… எதிர் முனையில் இருந்து பதிலை எதிர்ப்பார்க்காமலேயே பேசிக் கொண்டிருந்தவன்… ஒரு கட்டத்தில் தானாகவே நிதானத்துக்கு வந்தவன்…
“காலேஜ்க்கெல்லாம் மறுபடி போக ஆரம்பிச்சுட்டாளா… மாமாக்கு உடம்பு சரியில்லைனு லாஸ்ட் வீக் ஃபுல்லா போகாமா இருந்தாளே…” யோசனையோடு நிறுத்தியிருந்தான் செழியன் இப்போது
“டேய் செழியா…” செழியனிடம் பேச ஆரம்பித்த போதே முகிலனின் குரலில் நடுங்கியது…
செழியன் சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தான் இப்போது… நண்பனின் குரல் மாறுபாடுகள் அனைத்தும் அத்துபடி அவனுக்கு
தன் விளையாட்டு பேச்செல்லாம் விட்டுவிட்டு
“டேய்… முகிலா… என்னடா ஆச்சு… மாமா… அம்மாச்சி… தாத்தா… எல்லோரும் நல்லா இருக்காங்களா..” படபடவென விசாரித்தவன்
“கார்த்தி… கார்த்திக்னால ஏதாவது பிரச்சனையா…”
“இல்லடா…. டேய் செழியா… ” முகிலன் அவனிடம் பேச முடியாமல் அவன் பேரை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க
“ஆராக்கு ஏதாவது…” ஆரம்பித்தவன்… அடுத்த நொடியே
“என்னடா… அவளுக்கு ஏதும் மாப்பிள்ளை பார்க்கிறாங்களா…” சட்டென்று நிலவரத்தை உணர்ந்து கேட்க
“டேய் மச்சான்”
“சொல்லுடா… கேட்கிறேன்ல… சொல்றியா இல்லையா இப்போ… ஏண்டா பேசமா இருக்க சொல்லுடா” செழியனின் குரல் உச்சஸ்தாயில் சென்றிருக்க… அவன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்ட விதமே… முகிலனுக்கு குளிர் விட்டிருக்க…
“செழியா கோபப்படாம நான் சொல்றதைக் கேளு… நிலைமை மோசமாகலை… அதே நேரம் ஒண்ணும் சொல்றதுக்கும் இல்லை…” முகிலன் நடந்து கொண்டிருந்த விசயங்களை எல்லாம் சொல்ல…செழியன் பொறுமையாக அவனிடம் கேட்டும் முடித்திருந்தான்… ஆனால் பதில் ஏதும் பேசவில்லை…
“டேய் செழியா… செழியா… செழியா..” முகிலன் கத்தி குரல் கொடுக்க
“லைன்லதாண்டா இருக்கேன்…” என்ற போது செழியன் இயல்பாகி இருந்தான்
“தை கடைசி முகூர்த்தமா… இன்னும் ஒரு வாரம் இருக்குதானே… நான் பார்த்துக்கிறேன்… நீ ஏதும் பதட்டப்பட்டு சொல்லிறாத… நான் வந்த பின்னால பேசலாம்” இப்போது முகிலனுக்கு அறிவுரை வழங்க ஆரம்பிக்க
“டேய் நீ தனாகிட்ட பேசுடா… பாவம்டா அந்தப் பொண்ணு… பெரியப்பா பெரியம்மா கை காட்டின பையனை கல்யாணம் பண்றதைத் தவிர வேற வழி இல்லையே அவளுக்கும்… அவ மேல கோபப்படாதடா”
“ஹ்ம்ம்… புரியுதுடா… அவ சின்னப் பொண்ணுடா… அவ மேல நான் ஏன் கோபப்படப் போறேன்…”
“என்னடா பண்ணப் போற… நீ வேற அங்க இருக்க… நான் என்ன பண்ண…. சொல்லு…”
“நீ ஒண்ணும் பண்ண வெண்டாம்… நீ அமைதியா இரு… அது போதும் எனக்கு… இன்னைக்கே இங்கயிருந்து கிளம்பறேன்… நேரா மாமாகிட்ட வந்து பேசுறேன்… இந்த மேரேஜ் ஏற்பாடெல்லாம் நிறுத்திருங்கன்னு எனக்கு அவளைப் பிடிச்சுருக்குனு… மேரேஜ் கூட இப்போ வேண்டாம்… ஆனா அவ எனக்கு வேணும்னு… எனக்கு மட்டும் தான் அவ வேணும்னு… நேரே அவர்கிட்டயே கேட்கப் போறேன்…” செழியன் தீர்மானமான குரலில் பொறுமையுடன் சொல்ல
“உனக்குத் தருவாராடா… “ என முகிலன் முடிக்கவில்லை…
“பொண்ணை பெத்தவரு அந்த மரியாதையை அவருக்கு கொடுக்க நினைக்கிறேன்… அதே நேரம் அவர் பொண்ணுனாலும் ஆராதனாகிட்ட எனக்குத்தான் முதல் உரிமை… அப்புறம் தான் மத்தவங்கள்ளாம்… “ என்றவன்…
“என்கிட்ட… எங்க அம்மாகிட்ட…. தாய்மாமனா அவர் கேட்ருக்கனும்லடா… என் பொண்ணுக்கு நாங்க கல்யாண ஏற்பாடு பண்ணப் போறோம்னு… உங்களுக்குலாம் இதுல சம்மதமான்னு… நாங்க சரின்னு சொன்னாதானே அவர் மாப்பிள்ளையே பார்த்திருக்கனும்…. ஏன் ஜாதகக் கட்டையே தொட்டிருக்கனும் “ இப்போது செழியன் உணர்ச்சி வசப்ப்பட்டிருக்க
முகிலன் இப்போது
“இதேதானடா கார்த்திக் கேட்டான்” சட்டென்று கேட்க
“டேய் நீயும் மத்தவங்க மாதிரி முட்டாள்தனமா பேசாத…. கமலிக்கு நாங்க மாப்பிள்ளை பார்க்கலை… அவளே பார்த்துகிட்டா… அவளுக்கு நடந்தது லவ் மேரேஜ்… அவ மனசுக்கு பிடிச்ச பையன்…” செழியனும் பதிலடி கொடுக்க
“சரி நானும் உன் பாயிண்டுக்கே வர்றேன்… வீட்ல பார்த்த பையன்னாலும் ஆராதனாவுக்கும் இந்தப் பையன பிடிச்சுருக்கும் தானே… பிடிச்சதுனாலதானே கல்யாணம் வரைக்கும் போயிருக்கு”
நண்பனின் வார்த்தைகளைக் கேட்டபோதே செழியனின் இரத்தம் சூடாகத்தான் செய்தது… இருந்தும் தன்னை அடக்க முயற்சித்தவனாக
“யாரா இருந்தாலும்… இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னா… வீட்டுல கையைக் காட்டினா… வேறென்ன செய்வாங்க… தலையாட்டத்தான் செய்வாங்க… அதுக்காக அது காதல் ஆகிருமா” அவனின் தொண்டைக்குழி பேச முடியாமல் தவித்ததுதான்…
“இதெல்லாம் காதல் இல்லடா… நான் பார்த்துக்கிறேன்… மாமாகிட்ட பேசுவேன்.” சமாளித்து பேசினான் செழியன்
“சப்போஸ் பெரியப்பா பிரச்சனை பண்ணினாங்கன்னா என்னடா பண்ணுவ… பயமா இருக்குடா எனக்கு…”
“வேற வழியே இல்லை…. அவர் பொண்ணா இருக்கிற வரைக்கும் தானே பிரச்சனை பண்ணுவார்… செழியனோட பொண்டாட்டிகிட்ட பிரச்சனை பண்ண மாட்டார்தானே…” செழியன் அதிரடியாகச் சொல்ல… நண்பனின் அதிரடி வார்த்தைகளைக் கேட்ட முகிலனுக்கு இதயம் வெளியே வருவது போலத்தான் இருந்தது…
“சாரிடா மச்சான்… நான் ஊர்ல இல்லாத மூணு நாள்ல இவ்ளோ நடந்திருக்கு… பூர்ணி சித்திக்கு கூட இன்னும் சொல்லலையாம்… இன்னைக்கு புடவை எடுத்துட்டு வந்துதான் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்…” என்றவன்…
”டேய் எல்லாம் ஓகேடா… தனா என்ன சொல்வாடா…” முகிலன் தன் சந்தேகத்தைக் கேட்க
“அதுதாண்டா எனக்கும் கவலையே… என் லவ்வைச் சொன்னா அவ மறுக்க மாட்டான்னு ஒரு நம்பிக்கைடா எனக்கு… ஆனால் இப்போ சொன்னா அப்பாவா நானானு பார்ப்பாதானே… என்னதான் இருந்தாலும் அவ அப்பாதானே அவளுக்கு முக்கியமா இருக்கும்… பரவாயில்லை… எப்படியாவது என்னைப் புரிய வைக்க ட்ரை பண்ணுவேன்… இல்லைனா”
“இல்லைனா… “ முகிலனுக்கு நா வறண்டிருக்க
“லவ்வரா லவ்வை புரிய வைக்க முடியலேன்னா… ஹஸ்பண்டா என் அன்பை என் பொண்டாட்டிக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்… எவ்ளோ காலம் இருக்கு… என்னைக்காவது புரிஞ்சுக்க மாட்டா…” மனக்கண்ணில் செழியன் – ஆராதனா கணவன் மனைவியாக ஒரே அறையில் இருப்பது போல நிழலாட ஆரம்பித்திருக்க… அதே மனநிலையில் செழியன் இப்போது மறுபடியும் கட்டில் சாய்ந்தான்…
மீண்டும் அவன் இலகுவான மனநிலைக்கு மாறியவனாக…
”சரிடா… இன்னைக்கு நைட்டே நான் கிளம்பறேன்… ஓகேடா… வைக்கவா “ என்ற போதே
“டேய் பதட்டப்படாம வா… நான் இருக்கேன்… பார்த்துக்கலாம்” முகிலன் நண்பனை தேற்றும் விதத்தில் பேச…
“ப்ச்ச்… மச்சான் எனக்கு ஒரு பதட்டமும் இல்லை… வரும் போதே… தாலியோடத்தான் வருவேன்… சமாதானமா போனா யாருக்கும் சேதாரம் இல்லை…. அவங்க பொண்ணும் அவங்களுக்குத்தான்… இல்லைனா… செழியன் பொண்டாட்டி மட்டும் தான் அவ…”
“சோ எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை… அவங்களுக்குத்தான் அவங்க பொண்ணு அவங்களுக்கு வேணுமா வேண்டாமான்னு பயம் வரனும்…” அலைபேசியை வைத்தவன்… அடுத்த நொடியே… தன் பொருட்களை எல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தவன்…. தன் சித்தப்பா… சித்தியிடம் சென்றவன்
”சித்தி… இன்னைக்கே டிக்கெட் இருக்கு… நான் கிளம்புறேன்… பூஜாகிட்ட போன்ல பேசிட்டேன்… அவ இன்னைக்கு லேட்டா வருவா… பை ..” சாதாரணமாகச் சொல்ல
“டேய்… என்னடா இவ்ளோ அவசரம்…” மதிவாணன் கேட்க…
“ப்ச்ச்… அவசரம்லாம் இல்லை…. இன்னைக்கு விட்டா நெக்ஸ்ட் வீக் தான் டிக்கெட் இருக்கு… எனக்கு வேலை இருக்கு சித்தப்பா…. அதுனாலதான்…”
”சரி வா நான் ட்ராப் பண்றேன்” மதிவாணன் கார்ச் சாவியை எடுக்க…
“இல்ல வேண்டாம்… கேப் புக் பண்ணிட்டேன்… நியூயார்க் போய்த்தான் போகனும்… உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்… “ செழியன் அவர்களிடமிருந்து விடைபெற்றிருந்தான்…
---
மதுரையில் மிகப்பெரிய ஜவுளிக்கடையில் இருந்தனர்… ஆராதனா வீட்டினர்…
“அந்தப் புடவை.. அதைப் பாரும்மா… நல்லா இருக்கு… உன் கலருக்கு எடுப்பா இருக்கும்… “ ஷண்முகத்தின் பெரிய அக்கா சொல்ல…
“இல்ல எனக்கு… அந்தப் புடவை பிடிச்சிருக்கு… அதைப் பார்க்கலாமா” வேறொரு புடவையைக் காட்டி ஆராதனா மெல்லியக் குரலில் கேட்க…. ஆராதனா காட்டிய புடவையை விற்பனையாளரும் எடுத்துப் போட…
போட்ட அடுத்த நிமிடமே ஷண்முகத்தின் குடும்பத்தான் முகம் சுருக்கினர்
“தனா…. ரொம்ம ரொம்ப சீப்பா இருக்குமா… இது வேண்டாம்…” அவர்கள் சொல்ல
“ஆனால் எனக்கு அதுதான் பிடிச்சிருக்கும்… பரவாயில்லை… விலை குறஞ்சிருந்தா என்ன அண்ணி… நீங்க எடுத்துக்கொடுத்தா அதுவே போதும்” ஆராதனாவும் பிடிவாதம் பிடிக்க
மேகலா இப்போது இடையிட்டவராக
“தனா.. இதை நாம எடுத்துப்போம்... அவங்க எடுக்கிறதை எடுக்கட்டும்…” சொல்ல
ஆராதனா முகத்தில் மெல்லிய கவலை இழையோட தலையாட்ட….
“அக்கா… அந்தப் புடவையை எடுங்க… தனாவுக்கு அதுதான் பிடிச்சிருக்குனு சொல்றாள்ள.. அதையே முகூர்த்தப் புடவையா எடுத்துக்கலாம் “ ஷண்முகம் சட்டென்று சொல்ல… ஆராதனா அவளையுமறியாமல் ஷண்முகத்தைப் பார்க்க… ஷண்முகம் அவளிடம் புன்னகையை வீச… சட்டென்று குனிந்தாள் ஆராதனா…
”பார்றா… அதுக்குள்ள வரப்போற பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா… நீங்களும் தான் இருக்கீங்களே… உங்க தம்பி ஷாம்கிட்ட பார்த்து கத்துக்கங்க…” அடுத்த நிமிடம் அங்கு குபீர் சிரிப்பு வந்திருக்க… சந்தோசமாகவே புடவை எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க..
செல்வியும் தோழியுடன் இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்… அப்போது திடிரென்று செல்வியின் அருகில்… அதுவும் மிக அருகில் யாரோ நிற்பது இருக்க… திரும்பிப் பார்க்க ஷண்முகம் தான்…
“செல்வி… சாரிம்மா…” என்ற ஷண்முகம்…
“தனாகிட்ட பேசனும்… கீழ கார்ப்பார்க்கிங்கு கூட்டிட்டு வர முடியுமா… உன் அண்ணாக்கு இந்த ஹெல்ப் பண்ண முடியுமா… ப்ளீஸ்…” யாரும் அறியாதவாறு சொல்லிவிட்டு வேகமாக ஷண்முகம் அங்கிருந்து சென்று விட… செல்விதான் இப்போது இக்கட்டில் மாட்டியிருந்தாள்…
சுற்றி முற்றி பார்க்க… வந்திருந்த அனைவரும் புடவை எடுக்கும் மும்முறத்தில் இருக்க… ஆண்களும் இப்போது இல்லை…. அவர்கள் அனைவரும் வேஷ்டி எடுக்கும் பிரிவிற்கு சென்றிருக்க… இதுதான் நல்ல சமயம் என முடிவெடுத்தவளாக…. ஆராதனாவிடம் கிசுகிசுத்தாள்…
“தனா… ஷாம் அண்ணா உன்கிட்ட பேசனுமாம்… கீழ கார்பார்க்கிங்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க…”
ஆராதனா திடுக்கிட்டு விழித்தவளாக
“எப்படிடி போறது… யாராவது பார்த்துட்டா என்ன பண்றது…” ஆராதனா படபடப்புடன் கேட்க..
“அடேங்கப்பா… நீயும் பயந்தவதான்..” ஆராதனா தோழியை முறைக்க
“ஷாம் அண்ணாகூட நீ பேசனுமா வேண்டாமா”
“முடியுமா…” கண்களில் நிராசையுடன் ஆராதனா கேட்ட வார்த்தையிலேயே ஆராதனாவுக்கும் அவனிடம் பேச விருப்பம் இருக்கிறது என்பதை செல்வி உணர்ந்தவளாக…
“வாஷ் ரூம் போறோம்னு சொல்லிட்டு எஸ்ஸாகிறலாம் வா” செல்வி சொல்ல… தோழியர் இருவரும் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்றிருந்தனர்
---
“என்னடி… உங்க ஷாம் மாம்ஸைப் பார்க்க அவ்ளோ ஆசையா” தோழியை ஓட்டியபடி வந்த செல்வி… இப்போது கிண்டலை எல்லாம் விட்டு விட்டு…
“எனக்கு கூட முதல்ல இந்த மேரேஜ்ல கோபம் இருந்துச்சு… ஷாம் அண்ணனைப் பார்த்துட்டு… அதுவும் அவர் உன் மேல வச்சிருக்கிற காதலைப் பார்த்துட்டு… வருத்தம்லாம் இல்லை இப்போ… சொல்லப் போனா உனக்கும் ஷாம் அண்ணாக்கும் அவ்ளோ பொருத்தம்டி…”
மனதாற செல்வியும் தோழியிடம் சொல்ல… ஆராதனாவும் புன்னகைத்தபடியே
“அன்னைக்கு அவர் கொடுத்த ரிங் வேற போடலைடி… அதுவே அவருக்கு வருத்தம்… இன்னைக்கும் அவர் கூப்பிட்டு போகலைனா டென்ஷன் ஆகப் போறாரு… அதுனாலதான் வர்றேன்னு சொன்னேன்” ஆராதனா தன் வரும் காரணத்தைச் சொல்ல
“ஆமாடி…. அன்னைக்கு நீ கையை நீட்டினவுடனே… அவரைப் போடச் சொல்லிருவியோன்னு உங்க அண்ணன் ஓடி வந்தாரு… நல்ல வேளை… எல்லோர் முன்னாடியும் சபையில போட்டு விடுங்கன்னு சொல்லிட்ட… இல்லை உங்க அண்ணன் அங்கேயே தகிட தத்தம்னு டான்ஸ் ஆடிருப்பாரு…”
“கண்டிப்பாடி… அண்ணாவைப் பார்த்தவுடனே தான் நானுமே நிலைமையை உணர்ந்தேன்… ஆனால் பாவம்… சபையில இவர்தான்… அவர் சபைல கேட்டப்போ என்ன சொன்னாங்கன்னு பார்த்தேல்ல… நிச்சயம் ஆகிறதுக்கு முன்னாடி நகையெல்லாம் போடக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லிட்டாங்கதானே…”’
“ஹ்ம்ம்… அட்லீஸ்ட் உன்கிட்ட கைல கொடுக்கவாவது விட்டாங்களே… பாவம்டி ஷாம் அண்ணன்…” செல்வியும் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தபடி சொல்ல
“எனக்குத் தெரியும்…இப்படித்தான் ஆகும்னு… யோசிச்சுப் பாரு.. சபைலயே அப்படின்னா… நான் மட்டும் கை நீட்டி ரிங்க வாங்கியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு…. ரிங் கிஃப்ட்டா கொடுத்ததுக்கே இன்னும் திட்டிட்டு இருக்காங்க…”
“பாவம் அவங்க… இன்னைக்கு எனக்கு பிடிச்ச புடவையை எடுக்கச் சொன்னாங்களே… அதுக்கு அவங்க வீட்லயும் கிண்டலை வாங்கிக் கட்டிக்கிடாங்களே…” ஆராதனா கவலையாகச் சொல்ல… வேகமாக செல்வி ஆராதனாவைப் பார்த்தாள்…
“என்ன…” ஆராதனா கேட்க…
“உனக்கும் ஷாம் அண்ணாவைப் பிடிச்சிருக்கு தானே” செல்வி தோழியின் முகத்தை ஆராந்தபடியே கேட்க… ஆராதனா பதில் சொல்லாமல் நேரத்தைக் கடத்த
“நீ சொன்னாத்தான் தெரியுமா… அதெல்லாம் நாங்க கண்டுபிடிச்சுட்டோம்” செல்வி ஓட்ட… அதே நேரம் கார்ப்பார்க்கிங்கும் வந்து சேர்ந்திருக்க…
“அண்ணா அங்க நிக்கிறாரு பாரு…. போய்ப் பேசிட்டு வா… சீக்கிரமா தனா”
“சரி சரி… யாராச்சும் வந்தா மட்டும் எனக்கு போன் பண்ணிரு” ஆராதனா செல்வியைப் பார்க்காமல்… ஷண்முகத்தைப் பார்த்தபடியே அவனை நோக்கி நடந்தாள்…
---------
விமான நிலையம் செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்த பின் தான் செழியனால் நிம்மதிப் பெருமூச்சே விட முடிந்தது… ஆராதனாவுக்குத் திருமண ஏற்பாடு என்ற தகவலைக் கேட்ட போது அவன் பெரிதாக பதட்டப்படவெல்லாம் இல்லை… அவனை மீறி அவன் மாமன் மகளை அவ்வளவு சுலபமாக எவனாலும் கூட்டிக் கொண்டு போக முடியாது… அந்த ஒரு எண்ணம் தான் அவனை இயல்பாக இருக்க வைத்துக் கொண்டிருந்தது…. இருக்கையில் சாய்வாக அமர்ந்தவன் மனக்கண்ணில் ஆராதனா மட்டுமே இப்போது…
“இந்த ‘ஆரா’ ‘மீரா’னுலாம் கூப்பிட்டீங்க… அதுலயும் நீங்க ஆரான்னு கூப்பிடாதீங்க… நான் ’அத்தான்’னு கூப்பிட்டப்போ பிடிக்கலேன்னு திட்டினீங்கதானே… அதே மாதிரிதான் நீங்க ‘ஆரான்னு’ கூப்பிடறதும் எனக்குப் பிடிக்கலை…”
“நான் எங்க ‘மீரா’ன்னு கூப்பிட்டேன்… ’ஆரா’ ன்னுதானே கூப்பிட்டேன்… ஏன் முகிலா… நீயே சொல்லுடா…” அருகில் அவர்களோடு நின்றிருந்த முகிலனையும் இவர்கள் வாக்குவாதத்தில் இழுத்து விட்டான் செழியான்
”ஆராதனாவை ’ஆராதனா’ன்னு சொல்லலாம்… ’ஆரா’ ன்னு சொல்லலாம்… அப்புறம் நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி ’தனா’ன்னு சொல்லலாம்தானே… எப்படி கூப்பிட்டா என்னடா” நண்பனை இடையில் வைத்துக் கொண்டு… செழியன் சந்தோஷமாக தன்னவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்க
ஆராதனா பல்லைக் கடித்து செழியனை முறைக்க முடியாமல் முகிலனை முறைத்தாள்…
“அண்ணா… ஊர்த் திருவிழாவுக்கு விருந்தாளியா வந்திருக்காங்கன்னு பார்க்கிறேன்… இப்படி கடுப்பேத்துனா… நானும் ஒரு எல்லை வரைக்கும்தான் பொறுப்பேன்… அப்புறம் கடுப்பாகிருவேன்… சொல்லி வைங்க” செழியனிடம் பேச முடியாமல் முகிலனிடம் சொல்ல
“பரவாயில்லை கடுப்பாகிக்கோ… அத்தான்னு நீ கூப்பிட்டது எனக்கு பிடிக்கலைதான் ஆனாலும் நீ கூப்பிட்டுக்கோ… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்… அதே மாதிரி உனக்கு நான் ’ஆரா’ன்னு கூப்பிடறது பிடிக்கலைனாலும் நான் ஆரான்னே கூப்பிட்டுக்கிறேன்… நீயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… எனக்குப் பிடிக்காத ’அத்தான்’ நீ கூப்பிடலாம்… உனக்குப் பிடிக்காத ’ஆரா’ நான் கூப்பிடலாம்… டீல் ஓகேவா ஆகிருச்சு பாரு…”
அன்று ஆராதனா ஒரு புறம் கடுப்பும் கோபமும் குழப்பமுகமாக நின்றதும்… இன்னொரு புறம் முகிலன் முறைத்ததும் ஞாபகத்துக்கு வர… செழியனின் இதழ் விரிந்தது…
’முகிலன்’ செழியனைப் பொறுத்தவரை… நண்பன்… உறவினன்… இதையெல்லாம் விட இன்னும் ஒரு படி மேலேயே நெருக்கமானவன்…
காதல் என்ற பெயரில் தடுமாறி தவறான வழியில் தடுமாறி சென்றிருந்திருப்பான் செழியன்… முகிலன் தான் அவன் தவறுகளைச் சுட்டிக் காட்டி நேர் வழிப்படுத்தியவன்… முகிலன் எப்போதுமே அவன் நன்மைக்காகவே பாடுபட்டவன்… என்றுமே அவன் மேல் தனக்கு நன்றிக் கடன் இருக்கும்… நண்பனைப் பற்றி யோசித்தபோதே இராஜ சேகர் மனதில் வந்தார்
”எப்படி மாமாவைச் சமாதானப்படுத்துவது... நான் கேட்டால் என் மாமா ஆராதனாவை எனக்கு திருமணம் செய்து வைக்கமாட்டாரா… தூக்கி வளர்த்த என்னை விட யாரோ ஒரு மூன்றாம் நபர் அவருக்கு முக்கியமாகப் போய்விடுவானா… கண்டிப்பாக என் மாமா என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்” மனதில் செழியனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது அவன் தாய் மாமன் மேல்…
செழியன் தைரியமாகத்தான்… நம்பிக்கையாகத்தான் இருந்தான்… அந்த நொடியில்… வாகனும் அவன் எண்ணத்தைப் போல சீராகச் சென்று கொண்டிருந்ததுதான்… ஆனால் நொடியில் அனைத்தும் தலை கீழாக மாறியிருந்தது….
திடிரென… அவன் சென்ற வாகனம் நிலைதடுமாறி இருக்க
“ஏய்.. என்னாச்சு…” என்ன ஏதென்று உணரும் முன்னரே… செழியன் கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தான்…
-----------
திருமணப் புடவை எல்லாம் எடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த வேனின் சன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த ஆராதனாவின் முகம் கவலையுடனும்… குழப்பத்துடனும்… யோசனையுடனும் இருக்க… வெளியிலேயே வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருக்க…
“ஏய் என்னடி ஆச்சு… ’ஷாம்’ அண்ணாகிட்ட பேசிட்டு பின்னால உன் முகமே சரி இல்லையே… ஏதாவது பிரச்சனையா… உன் மூஞ்சியே சரி இல்லையே… சொல்லித் தொலையேன்… உர்ருனு வந்துட்டு இருக்க… சொன்னாத்தானே என்ன ஏதுன்னு தெரியும் எனக்கு ” செல்வி கேட்க
ஆராதனா இப்போது அவள் கைப்பையைத் திறந்து யாருக்கும் தெரியாமல்… அந்த பார்சலை செல்வியிடம் காட்டிவிட்டு… மீண்டும் மூட… செல்வியோ கண்களை ஆச்சரியத்தில் விரித்திருந்தாள்……
“ஏய் என்னடி… ஒரே பரிசு மழையா கொட்றாரேடி… அன்னைக்கு வைர மோதிரம்… இன்னைக்கு ஐ போன்…”
“ப்ச்ச்… நீ வேறடி… நான் வேற பதறிப் போய் வர்றேன்..”
“ஏன் என்னாச்சு… ”
“நாளைக்கு அவருக்கு பிறந்த நாளாம்… இன்னைக்கு நைட் பனிரெண்டு மணிக்கு போன் பண்ணி விஷ் பண்ணனுமாம்… அதுவும் இந்த போன்ல இருந்துதான் பண்ணனுமா… இதெல்லாம் நடக்கிற காரியமா… அதுவும் எங்க வீட்ல… 10 மணிக்கு மேல நான் என் போனை வைச்சிருந்தாலே எங்கம்மா என்னை டின்னு கட்டிருவாங்க…”
தோழியர் இருவரும் கிசுகிசுத்தபடி வந்து கொண்டிருந்தனர்…
“சரி விடு… நாளைக்கு காலைல பேசு… இல்லை இன்னைக்கு பத்து மணிக்கு முன்னால பேசிரு,,,” தோழியின் குடும்ப நிலை உணர்ந்தவளாக செல்வியும் யோசனை சொல்ல…
“ப்ச்ச்… நைட் 12’0 கிளாக் தான் பேசனுமாம்… முடியாதுனு சொன்னாலும் பிடிவாதமா இருக்காரு” ஆராதனா போலியான பாவனையில் அலுத்துக் கொண்டவளாக சொல்ல
“ஏனாம்… அதென்ன இன்னைக்கே 12 மணிக்கே சொல்லனுமாம்” செல்வியும் தோழி போலவே கேட்க
“அவர் மேல லவ் இருந்தா அதை புரூவ் பண்றதுன்னா இன்னைக்கு கண்டிப்பா 12 மணிக்கு நான் பேசியே ஆகனுமாம்…”
“இருக்கா இல்லையா…” செல்வி கண்சிமிட்டிக் கேட்க…
ஆராதனா நேரடியாகப் பதில் சொல்லவில்லை
“எப்படி பேசுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்… குழப்பமா இருக்கேன்” ஆராதனா தன் தோழியைப் பார்த்து சொல்ல…
“ஹ்ம்ம்… ஒரே லவ்ஸ் தான் போல…” செல்வி தோழியை ஓட்ட… ஆராதனா புன்னகைத்து வைத்தாள்… அதே நேரம் அவளாகவே பேசவும் ஆரம்பித்தாள்
“அவருக்கு நான் இன்னொரு சர்ப்ரைஸும் பண்ணப் போறேன்… அன்னைக்கு அந்த ரிங்க் போடலைல… இன்னைக்கு அதை அவர் கண் முன்னால நானே போட்டுக்கப் போறேன்… இதான் அவருக்கான என்னோட பிறந்த நாள் பரிசு” ஆராதனா சொன்னவளாக
“ஆனா அது எப்படினுதான் தெரியலை செல்வி…”
“இப்படிலாம் நான் பேசுறது தெரிந்தால்… அம்மா… அப்பா… அண்ணா என்ன சொல்வாங்கன்னு தெரியலை… ஆனால் அவரும் பாவம் தானே… இதான் இதைத்தான் நினச்சுட்டு வர்றேன்…கொஞ்சம் பதட்டமா இருக்குடி”
இருவருமாகப் பேசியபடி வந்து கொண்டிருக்க… வீடும் வந்து சேர்ந்திருந்தனர்…
செல்வி அங்கிருந்து தன் வீட்டுக்கு கிளம்பும் போது ஆராதனாவிடம்
“சரி நாளைக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு… எப்படியாவது பேசிரு…” செல்வி விடைபெற்று திரும்பியபோதே…
“ஹேய்… செல்வி…. நான் ஒரு சூப்பர் ஐடியா வச்சுருக்கேன்… உனக்கு நான் என் போன்ல இருந்து 11.50க்கு கால் பண்றேன்… உன்னை லைன்ல வச்சுகிட்டே… இந்த போன்ல அவர்கிட்ட பேசுறேன்… சப்போஸ் நான் மாட்டிகிட்டா கூட உனக்குத்தான் போன் பண்ணேன்னு சொல்லி தப்பிச்சுக்கிறலாம்ல… ”
செல்வியும் சரியென்று தலை ஆட்டி விட்டு… தன் வீட்டை நோக்கி சென்றாள்…
Lovely update praveee
Inda aaara pulla edo pannudu puriyala
Sam Sam ntu sezhiyana pazhivanga edum thitamo
Enna ma sezhiyana kavuthuteenga enna achu
Time ku varuvana
செழியனுக்கு என்ன ஆச்சு?
ஆரா அண்ட் செழியன் தானே ஜோடி சேருவாங்க🤔
Nice episode but epdiyavathu aaradhana chezhiyan seathu vachirunga.
Very nice. Wanting for next epi. Put soon
Amazing....Eagerly waiting for next episode.. please update soon..