அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரிஷி… கையில் வைத்திருந்த சிகரெட்டின் கடைசி நுனியைக் கீழே போட்டு விட்டு… அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க ஆரம்பித்திருக்க… கண்மணி இப்போது அவன் அருகில் வந்து… அடுத்த சில நொடிகளில் அவனை விட்டும் கடந்திருக்க…
**********
“நட்ராஜ்… என்னைப் பொறுத்தவரை… அந்த இடம் தான்… யார் வந்து சொன்னாலும்… நீயே சொன்னாலும்…” என்று சொன்னபோதே ஸ்டியரிங்க் பிடித்திருந்த அவன் கரங்கள் இறுக…
**********
“அப்போ இதைப் பிடிங்க” கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்தாள்…அர்ஜூனும்… அவள் சொன்னவுடன் அதை வாங்கியும் கொண்டு… இரண்டு அடிகள் கூட இருவருமாக சேர்ந்து எடுத்து வைத்திருக்க மாட்டார்கள்…
“கண்மணி” கர்ஜனையுடன்… அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது நடராஜின் குரல்…
**********
நடராஜ்தான் விக்கித்துப் போனார்… தன் மகளை இது வரை யாருமே.. யாரும் என்ன தானே இந்த அளவுக்கு உரிமையுடன் கண்டித்தது இல்லை… கண்மணியும் வேறு யாரையும் அவள் உரிமை வட்டத்தில் விட்டதில்லை…
தன் மகள் முன் குரல் உயர்த்தி யாராவது பேசினாலே… வெட்டு ஒன்று துண்டு ஒன்றாகப் பேசி எதிராளியை வாயடைக்கச் செய்யும் தன் மகளா இது… ஆடித்தான் போனார் நட்ராஜ்…
**********
அர்ஜூன் மனமெங்கும் உற்சாகமே… எப்படியோ தன் மனதில் இருந்த காதலை அவளிடம் நேரடியாகச் சொல்லாவிட்டாலும்… அவள் தந்தை முன்னிலையில் சொல்லி விட்டோம்… அதிலும் என் மனைவி என்ற வகையில் தன் மனதில் அவளை வைத்திருக்கும் உரிமையின் அளவு வரை சொல்லி விட்டோம்… இனி பொறுத்திருப்போம்… இன்னும் காலம் இருக்கின்றது… என்றெல்லாம் நினைத்தபடி வந்தவனின் கையும் காலும் இறக்கை கட்டி பறக்க… அந்த சாதாரண கார் அவன் உற்சாகத்துக்கு ஏற்ப அதுவும் வேகமெடுக்க…
**********
தன் சட்டையை கொத்தாகப் பிடித்திருந்த ரிஷியின் கைகளை விலக்கியபடியே
“ப்ரோ… சண்டை போட்ற மூட்லலாம் இல்லை… வேற மூட்ல இருக்கேன்.. இப்போதான் ஒரு வாக்குவாதம் முடிச்சு… அதுல பாதிப்பு இல்லைனு ஹேப்பி மூட்ல வந்துட்டு இருக்கேன்… இப்போ என்ன… உங்க கார் ஆன சேதாரத்துக்கு பணம் தருகிறேன்… ” என்ற போதே
**********
ரித்விகா வராமல் பிடிவாதம் பிடிக்க… இவனோ மசியாமல் நிற்க… கடைக்காரர்… ரித்விகாவைப் பாவம் போல் பார்த்தவராக…
“இந்தா பாப்பா” என்று சாக்லேட்டை நீட்ட
**********
ரிஷி மட்டும் தனியே நடந்தான்… ஆனால் அவன் காதுகளில் அபஸ்வரமாக ஒலித்தன அந்த வார்த்தைகள்…
“என்னைய போலிஸ்ல மாட்டி விட்டுட்டேல்ல… இந்த மருது யாருன்னு தெரியாம என் மேல கையை வச்சுட்ட… நான் யாருன்னு கூடிய சீக்கிரம் காட்டுகிறேன்… நீ எங்க இருந்தாலும் உன்னை வந்து தேடி அடிப்பேன்டா”
**********
அதே நேரம் நல்ல உறக்கத்தில் கண்மணிக்குள்… முன் தினம் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் அவளை அவளின் இளம் வயதுக்குள் இழுத்துப் போக…
“அப்பா… எழுந்திருங்கப்பா… இந்த மருதுகிட்ட இருந்து காப்பாத்துங்க” என்று அலறியபடி படுக்கையில் இருந்து கண்மணி எழ முயற்சிக்க…. அது அவளால் முடியவே இல்லை
**********
Teaser Super. Waiting for the episode