ஒரு கையில் இருந்த கண்ணாடிக் குவளையும் மறு கையில் இருந்த பார்த்த ரிஷியின் இதழ்கள் அவனையுமறியாமல் ஏளனத்தில் வளைந்தன…
”இந்த வீட்டில் விக்கி இருந்திருந்தால் இவை இரண்டும் கையில் வந்திருக்குமா… கையில் என்ன இந்த வீட்டுக்குள் வந்திருக்குமா” அந்த எண்ணத்தில் வந்த ஏளனம் தான்…
*******
ஆரம்பித்தான்....
தயார்செய்வது என்றால் சுத்தப் படுத்தும் பணி இல்லை… மது பாட்டில்கள்… சிகரெட் டப்பாக்கள் என ஏதாவது கிடந்து தன் மானத்தை அவன் தன் குடும்பத்தினரின் முன் வாங்கிக் கொள்வானா…
அது இரண்டு மாதம் முன்பு கண்மணி ரொக்கமாக கொடுத்த பணம்… வங்க்கியில் போட வேண்டுமென்று வைத்திருந்தவன்… இன்று வரை போடவில்லை
*******
“அண்ணா… இன்னும் என்ன பார்க்கிற…. எங்க கம்பார்ட்மெண்ட்ல.. அழகான பொண்ணு யாரும் வரலை…. நீ பார்க்கிறது வேஸ்ட்” என்று தன் அண்ணனை மீண்டும் கலாய்க்க…
“நாங்களும் வந்திருக்கோம்” என்று இடுப்பில் கைவத்து முறைத்தவளை தள்ளி நிறுத்தியவன்…
“தெரியுது தெரியுது…” என்று மகிளாவின் கையில் இருந்த பெட்டியை வாங்க… ரிதன்யா கடுப்போடு…
“தின்னு தின்னு உடம்பை வளர்த்து வச்சிருக்கேல்ல… எடுத்துட்டு போ…. மகி பாவம்… அவளே ஒல்லி… இந்த லக்கேஜ்லாம் எடுத்து வந்தா அவ காலிதான்”
“சரிங்க சூப்பர்வைசர் மேடம்… உட்காருங்க…” என்றபடியே…. முன்னால் இருந்த கண்ணாடியை மகி தெரியும்படி சரி செய்து வைத்து… தன் தங்கைக்காக சிறு மன்னிப்பைக் கண்களால் வேண்ட… மகியும் இப்போது சாதரணமாகி இருந்தாள்…
*******
மகிளாவின் அருகாமை அதையெல்லாம் சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்க…. ஏனோ ரிஷிக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்க… சட்டென்று இரண்டு சூயிங்கம்மை வாயில் போட்டவன் அதை மென்றபடியே மகிளாவைப் பார்க்க…
*******
“தனியாகவா போகிறாய்.... நானும் வருகிறேன்....” என்ற போதே மகளின் கண்களில் தெரிந்த நக்கல் கலந்த சூடான பார்வை நடராஜின் இதயத்தை கூறாகத்தான் தாக்கியது....
*******
“அர்ஜூன் வந்திருக்கான் கண்மணி” தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்து போக…
*******
உள்ளுக்குள் கனல் பற்றி எறிந்த போதும்…. மகள் வார்த்தைக்குப் நடராஜன் மறுத்து ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியபடி ... “பத்திரம்” என்று சொல்லப் போனார்...
Nice