அத்தியாயம்-21
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை22
சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ…
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…
அம்மாடி நீதான் இல்லாத நானும்…
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…
தாங்காத ஏக்கம் போதும் போதும்!
ராசாத்தி உன்ன காணாத
நெஞ்சு காத்தாடி போலாடுது..
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது…
இரைந்து ஒலித்த பாடலில், அதன் காட்சிகள் வேறு நினைவுக்கு வந்துதொலைக்கவும் ஒரு கையால் காதை பொத்திக்கொண்டவன், "ப்ச்... அண்ணா, கால வேளைல எதுக்கு இந்த மாதிரி சோக பாட்டை போட்டு மூட் அவுட் பண்றீங்க... முதல்வன் கேசட் வெச்சிருக்கீங்க இல்ல, அத போட்டு விடுங்க முதல்ல" என சிடுசிடுத்தான் சத்யா, மற்றொரு கையில் வைத்திருந்த தேநீர் குவளையை வெறித்தவாறே.
அவளின் தரிசனத்திற்காகப் பார்த்துப் பார்த்து அவனது கண்கள் பூத்துப்போயிருக்க, கல்லூரிக்கு வருவதற்காகக் காலை அவர்கள் வழக்கமாக ஏறும் பேருந்தில் அன்று ஏறவில்லை தேன்மொழி.
கூட்டத்தில் முட்டி மோதி பேருந்தினுள் ஏறி மல்லிகா மட்டுமே உள்ளே செல்ல, புட்-போர்டில் தொங்கிக்கொண்டே 'அவள் எங்கே?' என சத்யா ஜாடை செய்யவும், 'தெரியல' என்பதாக கை அசைத்தாள் அவள்.
அந்தக் கணம் முதல் ஏதோ இனம் புரியாத ஒரு பயம் வந்து அடைத்துக்கொண்டது அவனுடைய மனதிற்குள்.
கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன், 'நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன், நீங்க போங்க" என அவனுடைய தோழர்களிடம் சொல்லிவிட்டு அவர்களின் கிண்டலான குறுகுறு பார்வைகளையெல்லாம் புறந்தள்ளி, கல்லூரிக்கு எதிர்புறமிருந்த இந்த தேநீர் விடுதியில் வந்து நின்றுகொண்டான், ஒரு வேளை அவள் அடுத்த பேருந்தில் வந்து இறங்கினாள் என்றால் அவளுடைய தரிசனம் கிடைக்குமே என்கிற நப்பாசையில்.
அவன் மனநிலை புரியாமல் இங்கே என்னடாவென்றால் சோக கீதம் வாசிக்கிறார்கள். அந்த கடுப்பில் அவன் அப்படி எரிந்துவிழவும், "அதான, நல்ல பாட்டா போடுண்ணா" என அவனுக்கு அருகில் நின்று பு