-----
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
கரெக்ஷன் சரியா பண்ணலை.... மிஸ்டேக்ஸ் இருந்தா மன்னிச்சு... மார்னிங்க் கரெக்ட் பண்றேன்.... வெயிட் பண்ணவங்க படிக்கலாம்... அவங்களுக்காக போட்டேன்...
படிச்சுட்டு மறக்காமல் கமெண்ட்ஸ் போடுங்க... எனக்கும் பூஸ்டப்பா இருக்கும்...
அடுத்த அப்டேட் விரைவில்...
நன்றி நன்றி... கமென்ட்ஸ்... லைக் போட்ட அனைவருக்கும்...
நன்றி...
பிரவீணா விஜய்
----------
அத்தியாயம் 76-2
அந்த ஏரியா மருத்துவமனையில் செவிலியர் முன்… கண்மணி அமர்ந்திருக்க
”மணி… ட்யூட்டி டாக்டர் மட்டும் தான் இருக்காங்க… அது மட்டும் இல்லாமல் எக்ஸ்ரே எடுக்கனும்… இங்க எந்த ஃபெசிலிட்டியும் இல்ல… இப்போதைக்கு நான் ஃபர்ஸ்ட் எயிட் மட்டும் பண்றேன் கண்ணு… “ என்று சொல்லிவிட… அதற்கு சரி என்று சொல்லியவளுக்கோ வலி தாங்க முடியவில்லை…
“கொஞ்சம் சீக்கிரம்க்கா… ரொம்ப பெயினா இருக்கு” வலியைத் தாங்க முடியாமல்… பல்லைக் கடித்தபடி சொன்னவள்… அங்கிருந்த மேஜையில் தலைசாய்க்க… அதே நொடி… அர்ஜூன் புயலென அங்கு வந்திருந்தான்… அவனோடு அவளது தாத்தா பாட்டியும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்…
கண்மணி வலி ஒருபுறம்… ஒன்றும் பேச முடியாத இயலாமை ஒருபுறம் என தன் அத்தையைப் பார்க்க…
“நான் தான்… ரித்விகிட்ட போன் பண்ணச் சொன்னேன்” என்றார் இலட்சுமி…
“அவங்க சொல்லலைனாலும்… நாங்க வந்திருப்போம்… “ அந்த அறைக்குள் முதலில் நுழைந்திருந்தான் அர்ஜூன்…
அவளருகில் சென்றவன் முறைத்தபடியே… அவளது கைகளைப் பிடித்துப் பார்த்தவன் மனம் தாங்கவில்லை… அதைவிட அவளது தவிக்கும் நிலையைப் பார்க்கமுடியவில்லை… கண்கள் கலங்கிவிட… தன்னைக் காட்டிக் கொள்ளாமல் விலகி நிற்க…
“கண்மணி…. என்னடா… இப்படி இருக்க… அய்யோ என் பேத்திக்கு என்ன ஆச்சு…” இலட்சுமியிடம் விசாரித்தபடி…. உள்ளே வந்த வைதேகி பதற
“ஒண்ணுமில்ல பாட்டி” என்று சொல்ல ஆரம்பித்தவளுக்கு முடியவில்லை…
“ஆனால் வலிக்குது பாட்டி…” இப்போது கண்களில் கர கரவென கண்ணீர் மழை பொழிய ஆரம்பித்திருக்க… வைதேகி துடித்து விட்டார்… தன் ஒரே பேத்தியின் கண்ணீரைப் பார்த்த நாராயண குருக்கள் மட்டும் தாங்குவாரா என்ன…
”ஏன் பேத்தி கண்ல ஒரு நாள் கூட இப்படி அழுகையைப் பார்த்ததில்லையே… என்ன ஆச்சுமா… ” கைகளைப் பிடித்தபடியே பார்க்க…
அடுத்த நொடி… கண்ணீரை உள்ளிளுத்துக் கொண்டவளாக…
“தாத்தா நீங்க வெளில போங்க…உங்களுக்கு இதெல்லாம் பார்க்க முடியாது… சின்னதா காயம்தான்… லைட்டா வலிக்குது… அவ்ளோதான்… “ என அவரிடம் சமாளித்தவள்… வெளியே நின்று கொண்டிருந்த தன் தந்தையையும் பார்த்துக் கொண்டாள்…
நட்ராஜுக்கு பதட்டம் ஆனால் அவருக்கு வேறு தனியாக சிகிச்சை செய்ய வேண்டும்… தன் அப்பாவை சற்று முன் தான் அங்கிருந்து அனுப்பி இருந்தாள்…. இப்போது இவர்கள்… அவளால் பேசக் கூட முடியாத வலியில் இருக்க… இவர்களைச் சமாளிப்பது அதை விடப் பெரிதாக இருந்தது…
தள்ளி நின்ற அர்ஜூன் கண்மணியின் அருகில் வந்தபடி…
‘கெளம்பு… நம்ம ஹாஸ்பிட்டல் போகலாம்… ” அவள் சம்மதம் எல்லாம் அவன் எதிர்பார்க்கவே இல்லை… கண்மணியைத் கைத்தாங்கலாக அணைத்தபடி எழ வைக்க… அடுத்த நொடி நட்ராஜ் அங்கு இருந்தார்… வேகமாகத் தன் மகளைத் தன்புறம் இழுத்துக் கொண்டவர…
“என் பொண்ண பாத்துக்க எனக்குத் தெரியும்… நீங்க கெளம்புங்க” என்று அர்ஜூனிடம் சண்டைக்கு நிற்க
“ஒழுங்கா போயிரு…. இவளாலதான் உன்னை உயிரோட விட்டு வச்சுருக்கேன்… “ அர்ஜூன் மிரட்டிய போதே
“என்னடா மிரட்டுற… எப்போ சமயம் வாய்க்கும்னு என் பொண்ண என்கிட்ட இருந்து பிரிக்க பார்த்துட்டுதானே இருக்கீங்க… எப்போதும் அது முடியாது” நட்ராஜின் உரத்த குரல் மருத்துவமனையின் வெளியே வரை கேட்க ஆரம்பித்திருக்க… அப்போதுதான் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்திருந்தான்…
உள்ளே நுழைந்த போதே… அவன் மாமாவின் குரல்… கூடவே அர்ஜூனின் அதிகாரக் குரல்… பைக்கை நிறுத்தியும்… நிறுத்தாமலும்.. அப்படியே போட்டுவிட்டு வேக எட்டுக்கள் எடுத்து வைத்தவனுக்கோ… மனமெங்கும் சஞ்சலம் மட்டுமே…
சற்று முன் காற்றுக்கு தவித்த நெஞ்சம்… இப்போது படபடக்க ஆரம்பித்திருந்தது… ஏனோ எல்லாமே திடீரென்று மாறினார் போல ஒரு எண்ணம்… சில மணி நேரம் முன்தான் விக்ரமிடம் பெருமையாக பேசியிருந்தான்… அவன் போட்ட கணக்குகள் எல்லாம் சரியாக நடந்ததென்று..
வேகமாம உள்ளே வந்தவன்… வரும் போதே கண்மணியைப் பார்க்க… அவளோ அப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை… அர்ஜூனிடம் பேசிக் கொண்டிருந்தாள்…
“அர்ஜூன்… அப்பா கூட பிரச்சனை பண்ணாதீங்க… நான் அங்கேயே வர்றேன்… ஆனால் இங்க ஃபர்ஸ்ட் எயிட் மட்டும் பண்ணிக்கலாம்… சொல்லுங்க தாத்தா” எனும் போதே நட்ராஜ் மகளை ஆதங்கமாகப் பார்க்க… ஆனால் கண்மணியோ அர்ஜூன், நாராயண குருக்களிடம் மட்டுமே தன் கவனத்தை வைத்திருக்க… அவ்வளவுதான்… அவருக்கும் எல்லாமே சுற்ற ஆரம்பித்திருந்தது…
“இல்லடா… இங்க ஏதும் வேண்டாம்… நீ ஏன் அங்க வரலை… 10 மினிட்ஸ்தானே…. போய்றலாம்… அங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத்தான் வந்திருக்கேன்…. ஒரு நர்ஸ் கூட நம்ம கார்ல வந்திருக்காங்க… நான் பார்த்துக்கிறேன்… இங்கலாம் வேண்டாம்டா… உனக்கு இதெல்லாம் ஒத்துக்காது… புரிஞ்சுக்கடா” என்ற அர்ஜூனின் குரலில் பதட்டம் மட்டுமே…
“ஆமா கண்மணி… எழுந்திரு நீ… பிடிவாதம் பிடிக்காதாடா…” பேத்தியைப் பிடித்திருந்த நாராயண குருக்களின் கைகள் நடுங்க ஆரம்பித்திருக்க… நேரம் ஆக ஆக வலி தாங்க முடியவில்லை கண்மணியால்… பல்லைக் கடித்துக் கொண்டு… தனக்குள் வலியை அடக்க ஆரம்பித்தவள்… அப்படியே தலை சாய்த்து கண்களை மூடும் போதே… ரிஷியும் அங்குதான் நிற்கிறான் என்பதும் தெரியாமல் இல்லை…
”அவன் தங்கைக்கு அன்று எண்ணெய் பட்டது என்று… எப்படி துடித்தான்… இவளிடம் பதறி ஓடி வந்தானே…” அவள் கண்முன் அன்றைய அவனின் பதற்றம் இப்போதும் வந்து நின்றது… அதே போல அவளது அன்னைக்கு உடல்நிலை சரியில்லாத போதெல்லாம்… ரித்விகாவோடு ஊட்டி சென்று திரும்பிய தினம் எல்லாம் வந்து நின்றது… எப்படி துடித்துப் போனான்…ஆனால் இன்று… அவன் முகத்தைப் பார்க்கவில்லைதான்… அருகில் கூட வரவில்லையே… மனம் இப்படி நினைத்த போதே… கைகளின் வலி குறைந்து… மனதில் பாரம் ஏறி இருந்தது…
அவன் அருகில் வந்தால்… கண்டிப்பாக அவளை அருகில் அனுமதிக்க மாட்டாள் தான் அவன் மீதிருந்த கோபத்தில்… அதே நேரம்… அவன் அருகில் வராமல் நின்றதும் ஆத்திரத்தைக் கிளப்ப… அவளுக்கே அவள் என்ன நிலையில் இருக்கின்றாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை…
காயம் பட்ட வேதனையைக் காட்டிலும் இது அதிகமாக வேதனையைக் கொடுக்க…
”என்னை எங்கேனாலும் கூட்டிட்டுப் போங்க… என்னால தாங்க முடியலை” கண்மணி சத்தமாக சொல்ல…
இவை எல்லாவற்றையும்… ஏதோ ஒரு மூன்றாவது மனிதன் போல… சம்பந்தமே இல்லாத நபர் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி…
இப்போது நாராயண குருக்களிடம் திரும்பி…
“தாத்தா… சீக்கிரம் கூட்டிட்டு போங்க…” ரிஷி சொல்லி முடிக்கவில்லை… அவனது வார்த்தைகளில் நட்ராஜ் அடிபட்ட புலி போல துடித்து நிமிர…
“மாமா… அவளால முடியல… துடிக்கிறா மாமா… இப்போ உங்க ஈகோலாம் முக்கியமா… போகட்டும் விடுங்க…ப்ளீஸ்” என்று ரிஷி நட்ராஜை தன் பக்கம் வைத்துக் கொண்டவன்… கண்மணி… நாராயண குருக்களோடு போக அனுமதி அளிக்க.. கண்மணி ரிஷியைத் தாண்டிச் சென்றாள் தான்… ஆனால் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை…
ரிஷிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை… தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலவில்லை தான்… மிருகமாக மாறிக் கொண்டிருந்தான்… அவளுக்கு கையில் அடிபட்டிருக்கின்றது… என்பதால்… அவளை ஒன்றும் சொல்லாமல் விட்டுக் கொண்டிருந்தான்… அவள்தான் அவனைப் பார்க்கவில்லை…. இவனோ அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்…
இதோ இப்போது… தன்னை இலட்சியமே செய்யாமல்… அவள் தன்னைக் கடந்து செல்ல… அதையும் பார்த்துக் கொண்டிருந்தான்… கண்களில் கோபத்தோடு… மனதில் வலியோடு…
“அவ்ளோ பிடிவாதமாடி என்கிட்ட.. நீயும் எவ்ளோ நேரம் இப்படி இருக்கேன்னு பார்க்கிறேன்.. வருவேல்ல… ரிஷிக்கண்ணா… செல்லம்னு.. அப்போ இருக்கு… அப்போ நான் யாருன்னு உனக்கு காட்றேன்…” நினைத்த போதே…
“வருவாளா…” மனசாட்சி அவளிடம் கவலையாகக் கேட்க… மனம் துணுக்கென்றது ரிஷிக்கு… பாறாங்கல்லை அழுத்தினார்போல… நெஞ்சில் வலி வந்திருக்க… கண்கள் சட்டென்று கலங்கி விட…
”அவ என் கண்மணி… அவ ரிஷிக்கண்ணாவை விட்டுட்டு அவளால இருக்கவே முடியாது…” மனம் தைரியமாக எடுத்துச் செல்ல… இப்போது கொஞ்சம் ஆசுவாசமாகி இருந்தான்… அதில் ஓரளவு சரியும் ஆகி இருந்தான்…
---
இதற்கிடையே அர்ஜூன் அழைத்து வந்திருந்த நர்ஸ்… கண்மணியை வந்து அழைத்துப் போக…
ரிஷியும் நட்ராஜ் கூடவே அந்த ஏரியாவில் இருந்து இவர்களோடு வந்த சில பேர்… தினகரும் வேலனும்… அங்குதான் இருக்க…
“டேய்… கூட்டம் கூடாதீங்க… நீங்களும் வீட்டுக்கு போங்க… காலைல போன் பண்றேன்..” என ரிஷி அவர்களிட்ம் சொல்லி… அவர்களை எல்லாம் அங்கிருந்து கிளப்பிவிட்டு… நட்ராஜைத் தேடிச் செல்ல… அவரோ அங்கிருந்த சுவரில் சரிந்திருந்தார்… புலம்பியபடி…
“மாமா… என் இப்படி பண்றீங்க…” வேகமாக ரிஷி அவர் அருகில் போய் அமர….
“என் பொண்ணை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க ரிஷி… உனக்குத் தெரியலையா… ” உச்சஸ்தாயில் கத்தியவர்… அடுத்த நொடியே… மூச்சிறைத்தபடி மௌனித்தார்… ஆனாலும் அமைதியாக இருக்க முடியவில்லை
”நீயும் அவங்க கூட அனுப்பி வச்சுட்ட… என் பொண்ண என்கிட்ட கூட்டிட்டு வந்துரு ரிஷி… என்னால அவ இல்லாமல் இருக்கவே முடியாது ரிஷி“ மூச்சுத் திணறலோடு சொல்ல…
“ப்ச்ச்.. மாமா… சின்ன விசயத்தை பெருசாக்குறீங்க… இன்ஹேல் பண்ணுங்க…. இப்போ என்ன நடந்துச்சுனு… இவ்ளோ எமோஷனல் ஆகறீங்க.. அவங்க சொந்த ஹாஸ்பிட்ட… சோ அங்க நல்லா பார்ப்பாங்க… இதுல என்ன உங்க பொண்ணைப் பிரிச்சுட்டாங்க…” என மெல்லிய குரலில் அதட்டியபடி தன் மேல் சாய்த்துக் கொண்டவன்… இன்ஹேலரை அவருக்கு கொடுக்க…
அவரோ… அப்போதும் சமாதானமாகவில்லை… மாறாக
“நான் அங்க வரக்கூடாதுன்னு… வர முடியாதுனுதானே… வேணும்னே பண்றாங்க… என் பொண்ண கட்டம் கட்றானுங்க ரிஷி… ஏதோ ஒரு ஸ்கூல்னு என் வசதிக்கு கொண்டு போய் சேர்த்தேன்… அதை வாங்கினாங்க…. அப்புறம் இந்த ஏரியால இருக்கிற ஒவ்வொரு இடத்தையும் அவங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தாங்க… இப்போ ஹாஸ்பிட்டல்… அவளை கொஞ்சம் கொஞ்சமா அவங்க கண்ட்ரோலுக்கு கொண்டு போறாங்க ரிஷி… உனக்குப் புரியலையா… இல்லை உன்னையும் விலைக்கு வாங்கிட்டாங்களா” நட்ராஜ் ஆவேசமாக கத்த ஆரம்பிக்க…
ரிஷியும் தன் பொறுமையை கடந்திருந்தான்…
“இப்போ நான் சொல்றதை கேட்பீங்களா மாட்டீங்களா… உங்ககிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கவா… இல்லை என் பொண்டாட்டிய போய்ப் பார்க்க போகவா… சொல்லுங்க… ” என்று ரிஷி சத்தமாக அவரிடம் அதட்டல் போட… அதில் நட்ராஜ் சற்று அடங்க… அவரது முகத்தைத் அழுந்தத் துடைத்தவன்
“நான் பார்த்துக்கிறேன் மாமா… “ என அவரை எழும்ப வைத்தான்… அவரின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை அவனுக்கு… அப்படி ஒரு பரிதாபமாக… பாவமாக இருக்க…
“நான் கூட்டிட்டுப் போகிறேன் வாங்க… எவன் உங்களத் தடுப்பான்னு பார்ப்போம்… அவ உங்க பொண்ணு… அதுக்கப்புறம் தான் மத்தவங்க எல்லாருக்கும் அவகிட்ட உரிமை… நீங்க தேவையில்லாம ஏன் உங்க மனசையும் உடம்பையும் அலட்டிக்கிறீங்க” என எப்படியோ நட்ராஜை சமாதானப்படுத்தி ’அம்பகம்’ மருத்துவமனைக்கு கிளம்பி தன்னோடு கூட்டிச் சென்றிருந்தான் ரிஷி…
----
அந்த ஏரியாவின் மிகப்பெரிய மருத்தவமனை… சில மாதங்களுக்கு முன் பெயர் மாற்றப்பட்டிருந்தது…. ’அம்பகம்’ மருத்துவமனை…. என
ரிஷிக்கும் தெரியும்… அனைத்துமே பார்த்திபன் மூலம் கேள்விப்பட்டிருந்தான்…
அந்த மருத்துவமனைக்குள் ரிஷி உள்ளே நுழைய… கண்மணி இருந்த தளம் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது… அந்த தளத்தில் கண்மணிக்கென்றே ஒரு தனி அறை… அவளது பெயர் தாங்கி இருக்க… அருகிலேயே அர்ஜூன் மற்றும் நாராயண குருக்களுக்கு பிரத்தியோகமாக தனித் தனி அறை… அதே போல அங்கிருந்த வரவேற்பறையில்… மாலையுடன் பவித்ராவின் ஆளுயரப் புகைப்படம்…
தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தவர்… இன்னும் உணர்வுகளின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்க… அப்படியே அங்கேயே அவளைப் பார்த்தபடி அமர்ந்து விட்டார்
ரிஷி உள்ளே வர… இலட்சுமி… இவனைப் பார்த்தவுடன்… வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தவர்….
“ரிஷி…. சம்பந்திக்கு… லோ பிபி ஆகிருச்சுடா… அவர் அந்த ரூம்ல இருக்கார்டா…”
அதைக் கேட்ட ரிஷி கைகளால் நெற்றியைத் தேய்த்தபடி… நட்ராஜை பார்க்க… அவர் நிலைமையோ அதை விட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்… வேகமாக அங்கிருந்த நர்சை அழைத்தவன்… நட்ராஜின் நிலையைச் சொல்ல… அடுத்த நொடி…. நட்ராஜுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட ஆரம்பித்திருந்தது…
கண்மணி அடிக்கடி சொல்வாள்… அதுவும் சிரித்துக் கொண்டே
“ என் அப்பா … என் தாத்தா பாட்டி… இவங்களுக்கு நான் எப்போதுமே நார்மலா இருக்கனும்… எனக்கு சின்ன தலைவலினா.. இவங்க எல்லாரும் ஹாஸ்பிட்டல்ல ஐசியூல இருப்பாங்க… இதுக்குப் பயந்துட்டே… எதுவுமே சொல்ல மாட்டேன்… ”
இப்போதும் அதே கதைதான் நடந்து கொண்டிருக்கின்றது…. என்ன செய்வதென்று தெரியாமல்… ரிஷி தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்து விட்டான்… அதே நேரம் கண்மணி இருந்த அறையிலும் தன் பார்வையை வைக்கத் தவறவில்லை
----
”மேம்… எக்ஸ்ரே எடுத்தாச்சு… வெயின்ல எல்லாம் பிராப்ளாம் இல்லை… ஜஸ்ட் ஸ்டிச் மட்டும் போட்டால் போதும்… உங்களுக்கு ஏதாவது அலர்ஜி பிராப்ளம் இருக்கா” எனக் கேட்ட செவிலியரிடம்
”இல்லை… ஆனால்… கொஞ்சம் ஆன்சைட்டியா இருக்கு… எனக்கு PTSD(post-traumatic stress disorder) இருக்கு… ஆனால் இப்போ கொஞ்ச நாளா இல்லை“ மெல்லிய குரலில் சொன்னவளின் கண்களில் நீர்த்திரள்கள்…
“அர்ஜூன் சார் சொல்லிட்டாரு மேம்… நாங்க பார்த்துக்கிறோம்…” என்றபடியே கண்மணியிடம் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்திருந்தனர்…
“மேரிட்..” கண்மணி சொன்னவுடன்
அவளது மாதவிடாய் நாள் குறித்தும் தகவல் சேகரித்துக் கொள்ள…
“ஏதாவது பில்ஸ் எடுத்துகறீங்களா…” மறுத்து கண்மணி தலை ஆட்ட அதன் பிறகு அவர்கள் தங்கள் வேலைகளைத் தொடர….
இங்கு நடந்த கலவரம் ஏதும் அறியாமல்… வெளியே இருந்த… விக்கியும் ரிதன்யாவும் இப்போது அங்கு வந்திருந்தனர்… கண்மணியின் விசயம் கேள்விப்பட்டு… ரித்விகா கண்மணி இங்கு வந்த பின்…தன் அக்காவுக்கு போன் செய்து சொல்ல… இதோ அவர்களும் இங்கே…
ரிதன்யா ரித்விகாவிடம் நடந்ததை விசாரித்துக் கொண்டிருக்க… விக்கி ரிஷியைத் தேடியவனுக்கு… ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த ரிஷி கண்களில் காட்சி தந்திருக்க… வேகமாக அருகில் வந்து அமர்ந்தான்… அதே நேரம்
“சார்… இவர் அங்க இருக்கவே மாட்டேனு அடம்பிடிக்கிறாரு… பார்த்துக்கோங்க… கண்மணி மேடமுக்கு ஒண்ணும் இல்லைனு சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கிறாரு… அங்க சேர்மன் சார் அதை விட… இவங்க எல்லோரும் கண்மணி மேடத்தைத்தான் டென்சன் ஆக்கிறாங்க… பார்த்துக்கங்க”
சொன்னபடியே நட்ராஜை ரிஷியின் அருகில் அமரச் செய்ய…. ரிஷி தான் பார்த்துக் கொள்வதாக அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு… நட்ராஜை அங்கிருந்த நாற்காலியில் படுக்க வைத்தவனிடம்… ஏனோ இப்போது சோர்வு வந்திருந்தது… சோர்வா… இல்லை மயக்கமா அவனுக்கே தெரியவில்லை… ஆனாலும்… தன்னை மீட்டெடுத்துக் கொண்டு அமர்ந்திருக்க…
”என்னடா… ரொம்ப பெரிய காயமாடா… எல்லோரும் டென்சனா இருக்கீங்க… சீரியஸ்லாம் இல்லைதானே ” விக்கி உள்ளே போன குரலில் கேட்க… அதில் குற்ற உணர்வும் இருக்கத்தான் செய்தது…
ரிஷி பதிலேதும் சொல்லவில்லை…. நண்பனைப் பார்த்துவிட்டு… மீண்டும் தன் மௌனத்தில் ஆழ்ந்திருக்க
கண்மணிக்கு தையல் போடப்பட்டதால்… அரை மயக்க நிலையில் இருக்க… அதனால் படுக்க வைக்கப்பட்டிருக்க… அவளுக்குள் பிரளயம் உருவாக ஆரம்பித்திருந்தது… அவளின் கறுப்பு பக்கங்கள்… அவளை அழைக்க ஆரம்பித்திருந்தன
“நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் மருது… அப்பாவை விட்ரு”
“இவனை விடச் சொல்லு மருது… அப்பா… அப்பா… எழுந்துக்கங்கப்பா ” என மயங்கப் போன தன் நிலையை இழுத்துப் பிடித்தபடி… தன்னைச் சுய நினைவிலேயே வைத்திருக்க பெரும்பாடுபட்டவள்… தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த போதை மருந்தோடு போராடியபடியே… தன் தந்தையின் அருகே போக முயல… சட்டென்று அவளை ஒரு கரம் அப்படியே தூக்கிக் கொள்ள… போராட்டமெல்லாம் அவளிடம் ஓய ஆரம்பித்திருந்தது
நினைவுகள் பின்னோக்கி இழுக்க… அதன் வேதனை தாங்க முடியாமல்… கட்டிலில் படுத்திருந்த கண்மணி வார்த்தைகளின்றி அலைப்புற ஆரம்பித்திருந்தாள்…. அமைதியாக படுத்திருந்தாள் தான்… ஆனால் மனதளவில் மட்டுமே கண்மணி போராட ஆரம்பித்திருக்க… அங்கிருந்த யாராலும் அவள் நிலையை உணர முடியவில்லை
---
“இலட்சுமி… எங்க பேத்திய நாங்க கூட்டிட்டு போறோம்… கை சரியான உடனே நாங்களே கூட்டிட்டு வந்து விடறோம்… மாப்பிள்ளைகிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்…” இலட்சுமியிடம் வைதேகி கேட்க… இலட்சுமிக்கும் அதுவே சரி என்று பட…
“இதுல என்ன இருக்கு…. அவன் என்ன சொல்லப் போகிறான்…” என்று சம்மதம் சொல்லிவிட்டார் வைதேகியிடம்… நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்…
---
”சார்… மேடம் நல்லா தூங்கி எழுந்தால் போதும்… ரெஸ்ட் எடுக்க விடுங்க… அவங்க தூங்கி எழுந்ததும்… இந்த டேப்லட் சாப்பிடச் சொல்லுங்க… சாப்பிடலைனு சொன்னாங்க… சாப்பிட்டு போடச் சொல்லுங்க” என அர்ஜுனிடம் நர்ஸ் சொல்லிக் கொண்டிருக்க… எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவன்… கண்மணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தன் அறைக்கு வரச் சொல்லிவிட்டு… தன் பாட்டி வைதேகியிடம் பேசியவன்… அடுத்து… நாராயண குருக்களைப் பார்க்கச் சென்று விட்டான்…
“இலட்சுமி… இப்போ உடனே வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்னு அர்ஜூன் சொல்றான்…. போகலாமா ” வைதேகி… இலட்சுமியிடம் தகவலைச் சொல்ல இலட்சுமி ரிஷியிடம் வந்தார்….
“ரிஷி… நீ தங்கச்சிங்கள கூட்டிட்டு வீட்டுக்கு போ… நான் கண்மணியோட இருந்துட்டு நாளைக்கு காலைல வருகிறேன்” மகனிடம் அனுமதி எல்லாம் கேட்கவில்லை… தகவலாக மட்டுமே சொல்ல…
தன் அன்னையை கூர்மையான பார்வை மட்டுமே பார்த்தவன்… அன்னையிடம் வேறு ஏதும் சொல்லவில்லை…
பதில் சொல்லாமல்… அமைதியாக எழுந்தவன்… கண்மணி படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவளைப் பார்க்கச் சென்றவன்… அவளருகில் அமர்ந்தான்…
கண்மணியின் இரண்டு கைகளின் விரல்களிலும் காயம்… ஒரு கையில் சின்ன கத்தி கீறல்… அதில் சின்ன பேண்ட் எயிட்… இன்னொரு கையில் அரிவாளால் வெட்டுப்பட்ட பெரிய காயம்… பெரிய கட்டு… மெல்ல அவள் கரங்களை ஏந்தியவன் மனம் எங்கும் ரணம்…
“அவ்ளோ கோபம் என் மேல உனக்கு என்னடி… என்ன கோபம்னாலும் என்னைத் திட்டு… அடிக்கக் கூட செய்… என்னை ஏண்டி பார்க்கவே மாட்டேங்கிற” கண்மணி உறக்கத்தில் இருக்கிறாள் என்றெல்லாம் நினைக்காமல்…. அவளோடு பேச ஆரம்பித்திருக்க…
ரிஷியின் குரல் கண்மணியின் கேட்க ஆரம்பித்திருக்க… என்ன பேசுகிறான் என்றெல்லாம் உணர முடியவில்லை… ஆனால் அவன் குரல் மட்டுமே அவளுக்குள்… அந்தக் குரலின் கவலை… இது மட்டுமே அவள் உணர ஆரம்பித்திருக்கமெல்ல மெல்ல ரிஷியின் குரல் மட்டுமே அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது
ஆனால் அவளின் ரிஷிக் கண்ணாவின் குரல்… ஏன் என்ன ஆயிற்று அவனுக்கு… அவனது கவலையில்மற்றதெல்லாம்… ஆம் அவளின் கடந்த காலமும் அவளை விட்டு தூரச்செல்ல… இப்போது கண்மணியின் அலைப்புறுதல் மெல்ல மெல்ல அடங்க ஆரம்பித்திருக்க… ரிஷியின் குரல் மட்டுமே… அவளுக்கு கேட்டுக் கொண்டிருந்தது… இதெல்லாம் ரிஷியாலுமே உணரவில்லை…. கண்மணியைப் பார்த்தபடியே இருந்தான்
----
அதே சமயம்… அர்ஜூனும் வைதேகியும் உள்ளே வந்திருக்க… அவர்களைப் பார்த்தபடியே எழுந்தான் ரிஷி…
“பாட்டி… நீங்க கண்மணியை கூட்டிட்டு போறிங்கன்னு அம்மா சொன்னாங்க… பரவாயில்ல… நான் பார்த்துக்கறேன்” ரிஷி மென்மையாகத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னான்…
கண்மணிக்குள் மீண்டும் ரிஷியின் குரல்…. அதே நேரம்
“ஏன் உங்க வீட்டுக்கு வேலைக்காரி வேலைக்கு வேற ஆள் உடனே தேட முடியாதா” அர்ஜூனின் ஒவ்வொரு சொல்லும் தேள் கொடுக்காக அவனைக் கொட்ட…
“ஏய்” ரிஷியின் குரலும் உயர… அந்த அறை முழுக்க அவனது குரல் எதிரொலிக்க ஆரம்பித்திருந்தது…
”ரி்ஷிக்கு என்னச்சு… ஏன் இப்படி கத்துகிறான்” அர்ஜூன் குரலோ… வேறு யார் குரலோ அவளுக்குத் தெரியவில்லை… ரிஷி மட்டுமே அங்கிருப்பது போல் அவன் குரல் மட்டுமே கண்மணிக்கு…
ஒரு கட்டத்தில் எந்த ஒரு நினைவுகளின் துரத்தல் இன்றி கண்மணி முற்றிலும் விடுபட்டு வந்திருக்க… இப்போது ரிஷியின் குரலும் கேட்கவில்லை… நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்…
“என்ன… .. அமைதியா இருக்கேன்னு பார்க்கிறியா… … ஏதாவது ஏடாகூடம் பண்ணனும் நெனச்ச… காலி பண்ணிருவேன்…. இடத்தைக் காலி பண்ணு… கண்மணிக்கு சரியான பின்னால நாங்களே அனுப்பி வைக்கிறோம்…” அர்ஜூன் அவனை துச்சமாகப் பேச
ரிஷி… ஏதும் பேசவில்லை… அவனிடம் பேசாமல் கண்மணியை நோக்கிச் செல்ல…
எங்கு செல்கிறான்..
சட்டென்று அர்ஜூனுக்கு ரிஷியின் நோக்கம் புரிந்து விட… வேகமாக… ரிஷியைப் பிடித்து நிறுத்த…. திமிறிய ரிஷி… ஆவேசத்துடன் அர்ஜூனுடன் மல்லுக் கட்ட ஆரம்பித்திருந்தான்….
“டேய் எங்கடா இருக்கீங்க எல்லாரும்… உள்ள வாங்கடா… இவனை இழுத்து வெளிய போடுங்க…” அலைபேசியில் ஆக்ரோஷத்துடன் அர்ஜூன் கத்த ஆரம்பிக்க… அவனது சத்தத்தில் வெளியே நின்றிருந்த அனைவரும் உள்ளே வர… ரிஷியை கண்மணியின் அருகே விடாமல்… வெளியே பிடித்து இழுத்து வர முயற்சித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்…
“சொன்னேனே ரிஷி… கேட்டியா நீ… இப்போ பாரு”
இவர்களது சண்டைக்கு இடையில் நட்ராஜ் தன் ஆக்ரோசத்தைக் காட்ட…. அனைவரும் உள்ளே வர ஆரம்பித்திருந்தனர்….
ஏன் ரிஷியிடம் அர்ஜூன் சண்டை போடுகிறான் என யாருக்கும் புரியாமல்… அனைவரும் அர்ஜுனை இழுக்க ஆரம்பிக்க… இப்போது அர்ஜூனின் கவனம் சிதற ஆரம்பித்திருக்க… அதைப் பயன்படுத்திக் கொண்ட ரிஷி அடுத்த நொடி… அர்ஜூனை உதறித் தள்ளியவன்… மின்னலென வேகமாகப் பாய்ந்து… கண்மணியின் அருகே போய் அவளைத் தூக்கிக் கொண்டவன்…
“யா… யாராவது…. ஏதாவது பிரச்சனை பண்ணுனீங்க… “ ரிஷியின் குரல் நடுங்க ஆரம்பித்திருக்க… விக்கி வேகமாக ரிஷியின் அருகே போக….
“வராத…. யாரும் வராதீங்க எங்க பக்கத்தில…” கழுத்து நரம்புகள் புடைக்க கத்தியவனின் கைகளில்… அங்கு வைக்கப்பட்டிருந்த கத்தரிக் கோல்…
“தடுத்து நிறுத்தனும்னு யாராவது குறுக்க வந்தீங்க… சொருகிருவேன்… யாரா இருந்தாலும்… “ எனக் கத்தரிக்கோலை அவர்கள் முன் காட்ட
அத்தனை பேரும் ரிஷியின் ஆவேசத்திலும்… அவனது நடவடிக்கையிலும் விதிர்விதித்துப் போய்ப் பார்க்க… இலட்சுமி அதிர்ச்சியுடன் மகனின் அருகே வந்தார்…
“அம்மா” ரிஷியின் குரல் தழுதழுத்திருந்தது…
“டேய் என்னடா… இப்படியெல்லாம் பண்ற… அவளே வீக்கா இருக்கா… ஏண்டா நடந்துக்கிற“ இலட்சுமி சமாதானப்படுத்துவது போல பேச ஆரம்பிக்க…
“கடைசியில… நீங்க கூட யார்னு காண்பிச்சுட்டீங்கம்மா… உங்களை எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டா உங்க மருமக… ஆனால் உங்களுக்கு அந்த நன்றி இல்லையேம்மா… இவங்ககிட்டலாம்… நீங்க எதுக்கு என் மருமகளைப் பார்க்கனும்… நான் பார்த்துக்கிறேன்னு சொல்ல முடியல தானே… என்ன இருந்தாலும் அவ உங்க பொண்ணு இல்லைதானே… ஆனால் அவ உங்களை அப்படி பார்க்கலையேம்மா…” ரிஷியின் குரல் தழுதழுக்க…
பதறி விட்டார் இலட்சுமி தன் மகனின் ஒவ்வொரு வார்த்தையிலும்…
“ரிஷிக்கண்ணா… அய்யோ என்னடா இப்படி எல்லாம் பேசுற… கண்மணிக்கு இங்க வசதி பத்தலேன்னுதான் நினைத்தேனே தவிர… அவள பார்த்துக்க முடியாம சொல்லல ரிஷி… நீ அவள இறக்கி விடு ரிஷி… உன்னைப் பார்க்கவே எனக்கு பயமா இருக்குடா… அவளை யாரும் உன்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கல ரிஷி… அம்மா சொல்றதைக் கேளுடா ” இலட்சுமி அழ ஆரம்பித்திருக்க..
இப்போது அர்ஜூனின் ஆட்கள் உள்ளே வந்திருக்க… அடுத்த நொடி… ரிஷி அவர்கள் அனைவராலும் சுற்றி வளைக்கப்பட்டிருக்க.. அர்ஜூன் ரிஷியை ஏளனமாகப் பார்த்தபடி…
“அவன மட்டும் வெளிய தூக்கிப் போடுங்க… எங்க வீட்டு பொண்ணு மேல ஒரு கை படக்கூடாது… வெயிட் வெயிட்… நான் அவளைத் தூக்கிக்கிறேன்” என ரிஷியின் அருகே போக…
“அர்ஜூன் சார்… என்ன ஏன் இப்படி நடந்துக்கறீங்க… நீங்களா இது… “ விக்கி கடுங்கோபத்துடன் அர்ஜூனிடம் பேச
“நான் காட்டுமிராண்டி மாதிரி தெரியறேனா… உன் ஃப்ரெண்டா நானா…. எங்க வீட்டு பொண்ணு அவ… அவளக் கூட்டிட்டுப் போக இவ்வளவு போராட்டம்…. இன்னைக்கு இவனா நானான்னு பார்த்துக்கறேன்… ரொம்ப நாள் கணக்கு தீராமலே இருக்கு”
விக்கிக்கு பதில் சொல்லியபடியே… கைமுஷ்டியை முறுக்கியவன்… ரிஷியின் முன் நின்றவன்… கண்மணியைப் பார்க்க…. என்ன நினைத்தானோ… தன் குரலை மாற்றியவனாக
“இங்க பாரு… ஒழுங்க அவள இறக்கி விட்டுரு…. இங்க யாரும்… கண்மணியை உன்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கல… பைத்தியக்காரன் மாதிரி பிகேவ் பண்ணி… என்னையும் அது மாதிரி மாத்தாத “
அர்ஜூன் அவன் அருகில் வந்து கண்மணியின் தோள் மேல் கை வைக்கப் போக… அவன் கை கண்மணியின் மேல் படும் முன்னரே... அதைத் தடுக்கும் விதமாக வேகமாகத் திரும்பி கொண்டவன்…
“மாமா… வாங்க போகலாம்” என்றவாறு… நட்ராஜை நோக்கிப் போக… அதே நேரம் அர்ஜூன் அவனின் ஆட்களுக்கு கண் அசைக்க… அந்த அடி ஆட்கள்… ரிஷியைப் பிடித்துக் கொள்ள… அர்ஜூன் பாய்ந்து கண்மணியை அவனிடமிருந்து பிரிக்க முயல…. அனைவரும் ஒரே நேரத்தில் ரிஷியைத் தாக்க ஆரம்பித்திருக்க…. ரிஷியோ அதை எல்லாம் இலட்சியம் செய்யாமல் கண்மணியை தன்னோடு இறுகப் பிடித்து வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு போராடிக் கொண்டிருக்க… ஒரு நிமிடம் யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை…
ரிஷி ஏன் இப்படி நடக்கின்றான்… அர்ஜுன் ஏன் இப்படி நடக்கின்றான்… யாருக்குமே புரியவில்லை…
விக்கி ரிதன்யா இலட்சுமி நடராஜ் அனைவரும் ரிஷியின் அருகே போய்… அவனை தங்கள் பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள…
‘நிறுத்தறேளா…” என்ற உச்சஸ்தாயில் எழுந்த நாராயண குருக்களின் குரலில் அடி ஆட்கள் அத்தனை பேரும்… ரிஷியை விட்டு விலகியிருந்தனர் இப்போது
“எங்க வீட்டு மாப்பிள்ளை… அவர் மேலேயே கை வைக்கறீங்களா… வெளில போங்க” நாராயண குருக்கள் மிரட்ட…. அடி ஆட்கள் அத்தனை பேரும் இப்போது வேறு வழியில்லாம வெளியே போக
“அர்ஜூன்… உனக்கும் தான்… “ என்ற போதே… அர்ஜூன் அடி பட்ட புலி போல அடங்கி நிற்க…
“அவனோட மனைவி… அதுக்கப்புறம் தான் நம்மோட உரிமைலாம்… இவ்ளோ சீப்பா நடந்துக்கிற…. என் பேத்தி எழுந்து கேட்டா நான் என்ன சொல்வேன்… உனக்கே தெரியும் அவ ரிஷி மேல வச்சுருக்க காதலை… இதுக்கு மேல அவங்க லைஃப்ல வராதேன்னு சொன்னா கேட்க மாட்டிங்கிற… வீட்டுக்கு போ” அர்ஜூனை அதட்ட…
“அன்னைக்கு அத்தையை பொணமா தூக்கிட்டு வந்தீங்களே… அந்த உரிமைதான் தாத்தா… உங்க உரிமையை லேட்டா காண்பிச்சதுனால… அத்தை பொணமா வந்தாங்க… அதே மாதிரி என்…” என ஆரம்பித்தவன் பாதியிலேயே முடித்திருக்க
“என்னடா.. உன்னோட… உன்னை இன்னையோட முடிச்சுறேன்“ என்று ரிஷி இப்போது எகிற… அவனைப் பிடித்து மற்றவர்கள் பிடித்து வைத்துக் கொள்ள
“அர்ஜூன்… நீ இப்போ இங்கேயிருந்து கிளம்புறீயா இல்லை…” நாரயாண குருக்கள் தன் பேரனை வெளியே அழைத்துச் செல்ல… அர்ஜூனும்…ஏதும் செய்ய இயலாமல்…. கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி விட… நாராயண குருக்களோ இப்போது ரிஷியின் அருகே வந்தார்
“ஏன் ரிஷி… எங்க மேல உனக்கு இன்னும் நம்பிக்கை வரலையா… எங்களுக்கு என் பேத்தியை விட… வேற ஏதும் முக்கியம் இல்லைனு உனக்குத் தெரியாதா.. ஏன் எங்களப் இப்படி எதிரி மாதிரி பார்க்கிற…… கண்மணிக்கு நீ முக்கியம்னா எங்களுக்கும் நீ முக்கியம் தானேப்பா” என்றவர்….. இலட்சுமியிடம் அர்ஜூனுக்காக … அவன் செய்த செயலுக்காக மன்னிப்பை வேண்ட….
”சம்பந்தி… எனக்கு எதுவுமே புரியலை… எனக்கு என் பையன் வேணும்… அவனுக்கு கண்மணி வேண்டும்… இவ்ளோ பிரச்சனை ஏன்… எதுக்குனே எனக்குப் புரியலை…. என் பையன் உணர்ச்சி வசப்படுறானா… இல்லை இந்த அந்தத் தம்பியான்னு கூட எனக்குப் புரிய மாட்டேங்குது” எனும் போதே இலட்சுமி உடைந்து அழ ஆரம்பித்திருக்க… ரிதன்யா ரித்விகா என அவர்களும் ஒருபுறம் அழ ஆரம்பித்திருக்க… விக்கிக்கு யாரைத் தேற்ற எனத் தெரியவில்லை…. ஆனாலும் நண்பனின் நிலை தாங்க முடியாமல்… ரிஷியை நோக்கிச் செல்ல...
அவனோ இவனை எல்லாம் கண்டு கொண்டால் தானே…. வேறதுவும் கவனத்தில் இல்லாமல் கண்மணியை விடாமல் தன்னோடு வைத்திருக்கும் கவனம் மட்டுமே அவனிடம்…. கிட்டத்தட்ட இல்லையில்லை.. பைத்தியக்காரனைப் போலவே நின்றிருந்த... நண்பனை அதிர்ச்சியோடு பார்த்தவன்…
“ரிஷி… ரிஷி…” என அவன் தோள் தொட்டு உலுக்க…
“மாமா………… கார் ஏதாவது இருக்கான்னு பாருங்க” விக்கியைப் பார்க்காமல் நட்ராஜை நோக்கி கத்த….
”என் கார் இருக்குடா… வா போகலாம்…” விக்கி…. நண்பனிடம் கேட்க… அவன் கைகளைத் தட்டி விட்டவன்….
“வேண்டாம்…. நீ வேண்டாம்… பக்கத்துல வராத…” ஓங்கி கத்தியபடி அவனை மறுத்தவன்
”உன்னை அவளுக்குப் பிடிக்காதுடா…. அது தெரிஞ்சும் உன்னை உள்ள விட்டேன்… அதுதாண்டா நான் செஞ்ச முதல் தப்பு… உன்னை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேனே அது அடுத்த தப்பு…. இப்போ நான் எங்க இருக்கேன் பாரு… என் நிலைமையப் பாருடா…” அந்த மருத்துவமனை எங்கும் ரிஷியின் குரல் பட்டு எதிரொலிக்க…
இங்கு நடப்பது ஏதுமே அறியாமல்…. ரிஷியின் கைகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கண்மணியை வெறித்தான் விக்கி…
அவனின் வெறித்த பார்வை… கோபத்தில் அல்ல… மாறாக… இந்த பெண்.. தனியாயாளாக எப்படி இவர்கள் அத்தனை பேரையும் இத்தனை நாளாகச் சமாளித்தாள்… என்ற வேதனையான பார்வையில்….
யார் இவள்??… யார் இந்தக் கண்மணி??? இவளே உலகம் என இவளைச் சுற்றி இவர்கள் அத்தனை பேரும் தன் உலகத்தை மாற்றிக் கொள்ள காரணம் என்ன… முதன் முதலாக… விக்கி கண்மணியைப் வேறொரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்திருந்தான்
Enna tha solla
Rishi realise hoom
Viki yosikran