ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ்... இந்த எபிக்கும் உங்க கமெண்ட்ஸை மறக்காமல் போடுங்க...
லவ் யூ ஆல்.... பை...
பிரவீணா...
அத்தியாயம் 73:
அந்த அறையின் நடுவில் இருந்த மேஜையின் மேல்… ரிஷி கொண்டு வந்திருந்த பத்திரங்கள் மின் விசிறியின் மெல்லிய காற்றில் படபடத்துக் கொண்டிருக்க… ரிஷியும் ஆதவனும் அந்த மேசையைச் சுற்றி எதிர் எதிர் புறமாக அமர்ந்திருக்க… ஆதவனின் அருகிலோ இருபுறமும் காவலர்கள்…
“ரிஷி… கோர்ட் உத்தரவுப்படி அரை மணி நேரம் தான் உங்களுக்கான டைம்… உங்க பிஸ்னஸ் மூவ் ஆக முடியாத சிச்சுவேஷன்னு சொன்னதுலாதன் இந்த டைம்… ரொம்ப லேட் ஆக்கிராதிங்க” என்று அந்த காவலர் சொல்ல..
“யெஸ் சார்… ஜஸ்ட் ஃபார்மல் கான்வர்சேஷன் தான்… என்னோட லீகல் அட்வைசரும்… மிஸ்டர் ஆதவனோட லீகல் அட்வைசரும் பேசி ஃபைனல் டாக்குமெண்ட்சோட வந்திருக்கேன்…” என்று அவர்களிடம் சொல்ல… ஆதவன் கைகளில் விலங்கை மாட்டி விட்டு காவலர்கள் இருவரும் வெளியேறி இருக்க.. ஆதவனிடம் திரும்பியவன்… தொண்டையைச் செறுமியவனாக…
“மிஸ்டர் ஆதவன்… ரெண்டு ஆப்ஷன் இருக்கு…. ஒண்ணு உங்க அம்மாவை பார்ட்னரா போட்டு நம்ம ஃபேர்மை… நம்ம பார்ட்டனர்ஷிப்பை கண்டினியூ பண்ற மாதிரி… சோ உங்க ஃபேமிலில உங்க அம்மா மட்டும் தான்… அவங்களத்தான் சேர்த்திருக்கேன்… இல்லை வேற யாராவது இல்லீகலா… சாரி சாரி லீகலா இருந்தாங்கன்னா சொல்லுங்க” என்ற போதே ஆதவன் மூக்கை விடைத்துக் கொண்டு அவனை முறைக்க… ரிஷியோ மிதப்பான பார்வை பார்த்தபடியே
அடுத்த ஆப்ஷன்…
“விக்கிக்கு உங்க கூட பார்ட்டனர்ஷிப் வைக்க இஷ்டம் இல்லை… சோ அவன் விலகுறேன்னு சொல்லிட்டான்… ஆர் கே இண்டஸ்ட்ரீஸ்க்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை…. அதுனாலதான் நான் முதல்ல சொன்ன ஆப்ஷன்… ஆனால் விக்கி எங்க கூட பார்ட்னர்ஷிப் வைக்க ஒத்துகிட்டான்… சோ… உங்க ஃபேர்மை குளோஸ் பண்ணிட்டு… நாங்க புதுசா ஸ்டார் பண்ண போகிறோம்… இது அதுக்கான டீட்… ஐ மீன் நீங்க உங்க வழில போங்க நாங்க எங்க வழில போகிறோம்…”
அடுத்த நிமிடம்… மேஜையின் மேல் இருந்த காகிதங்கள் அறை முழுவது விசிறி அடிக்கப்பட்டிருக்க… ரிஷியோ எந்த ஒரு அதிர்வுமின்றி இயல்பாக அவனை பார்த்து அமர்ந்திருக்க… அதில் இன்னும் கடுங்கோபத்திற்கு உள்ளான ஆதவன்… ரிஷியை ஒன்றும் செய்ய இயலாத தன் நிலையை எண்ணி இன்னுமே கடுப்பாக… அதன் உச்சக்கட்டமாக…
”கான்ஸ்டபிள்… “ ஆதவன் உச்சஸ்தாயில் ஃகத்த… வேகமாக உள்ளே வந்த காவலர்கள்…
“என் லீகல் அட்வைசர் எங்கடா… வரச் சொல்லுடா அவனை… என்னை வச்சு… அவ்வளவு பிஸ்னஸ்லயும் அவங்க கம்பெனிக்கு மாத்திட்டு… இப்போ என்னை நடுத்தெருவுல விடப் போறிங்களா…” இன்னும் ஆவேசம் குறையாமலே பேச
“ரிலாக்ஸ் ஆதவன்… இது நான் எழுதின டாக்குமெண்ட் இல்லை… உன்னோட சைட்ல உன்” என்ற போதே
“நிறுத்துடா… என் அம்மாவையே எனக்கு எதிரா மாத்தினவன் நீ… இந்த பணத்துக்கு அலையுற கூட்டத்தை மாத்த முடியாதா என்ன…”
காவலர்கள் ரிஷியிடம்…
“சார் கிளம்புங்க… இன்னொரு நாள் கூட வாங்க” என்ற போதே ஆதவன் ரிஷியின் அருகில் வந்தவனாக
“என்னடா மிரட்டுறீங்களா…. என் மேல பொய்க் கேஸ் போட வச்சு… அதுவும் என் அம்மா மூலமாகவே… இருக்குடா உனக்கு… இதெல்லாம் சுக்கு நூறா உடச்சு எறிஞ்சுட்டு உன்னை பார்க்க வர்றேன்…
“ஷ்ஷ்… 40 வயசுக்கு மேல டென்ஷன் ஆனா… ஆயுசு குறஞ்சுடுமாம்… பார்த்து ஆதவன்… நீங்க இன்னும் சின்னப் பையன் இல்லை… இப்போதே பிபி சுகர் லாம் இருக்குனு கேள்விப்பட்டேன்… உடம்பை பார்த்துக்கிறது இல்லையா” ரிஷி பாசமான குரலில் நீட்டி முழங்க…
“நடிக்காத… இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்… என் பிளானை எனக்கே திருப்புறீயா…உன் அப்பாவை நாங்க பிளாக்மெயில் பண்ண மாதிரி… என்னை பண்றியா… என்னை என்ன உன் அப்பன்னு நெனச்சியா…பயந்துகிட்டு சைன் போட… “ ஆதவனும் பிடிவாதம் பிடிக்க…
“ஓகே… அப்போ சரி… தானாகவே இந்த ஃபேர்ம்… டிஸ்சொலுஷன் ஆகிவிடும்… ஜஸ்ட் ஒரு எத்திக்ஸ்காக வந்தேன்… ஃபேர்ம் டிசால்வ் ஆர்டர் கோர்ட் மூலமாகவே வரும்… அப்போ அதுல சைன் போட்ரு… என் அப்பா மாதிரி நீ முட்டாளா என்னா… கம்பெனிய காப்பாற்ற அவரே வெளில வந்த மாதிரி…” என்று ஒரு இக்கு வேறு வைத்து எழுந்து நிற்க…
இப்போதோ ஆதவன் இறங்கி வந்திருந்தான்… வேறு வழியே இல்லாத நிலையிலே அல்லவா அவன் இருந்தான்… எல்லாமே தன்னை விட்டு போய் விடுமோ… பணம் மட்டுமே அவன் குறிக்கோள்… அவன் பலம்.. அது இல்லையென்றால்… இரத்தம் ஏனோ குளிரெடுத்ததுதான்…
“என் அம்மா… ” தடுமாறியவனாக
“அவங்க மேல எனக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை வரும்… என் அப்பாவை நான்தான் கொலை பண்ணேன்னு சொல்லி கேஸ் போட்டவங்களை எப்படி “ என்ற போதே ஆதவனின் குரல் உடைந்திருக்க…
“அது உன் குடும்ப விசயம்… உன் அம்மாகிட்ட பேசு… என்கிட்ட பேசுற… அம்மாவை மகனும் நம்பலை… மகனை அம்மாவும் நம்பல“ எகத்தாளமாக ரிஷியின் குரல் வெளிப்பட்டாலும்… அவனும் அந்த நிலையில் தானே இருந்து வந்தான்…சொல்லி முடித்த போது… ரிஷிக்கு இப்போதும் உள்ளம் கதறத்தான் செய்தது… சும்மாவா என்ன… ஐந்து வருடங்கள்… தாயை விட்டு தள்ளி நின்றானே…
ஆதவனின் கண்கள் இடுங்கியது…
“எல்லாத்துக்குமே காரணம் நீதான் ரிஷி… முதல்ல இருந்தே நான் தான் உன் டார்கெட்… எனக்குத் தெரியும்… அன்னைக்கே யோசிச்சுருக்கனும்… மருது சொன்னான்… நம்ம ஆள் ஒருத்தன் ரொம்ப நாளா காணாம்னு… முதல்ல துரை… இப்போ இன்னொருத்தன்னு சொன்ன போதே நான் சுதாரிச்ச்சுருக்கனும்… இன்னைக்கு எல்லாம் கை மீறி போயிருச்சு..” என்றவனிடம்
“ஹலோ… ஹலோ மிஸ்டர் ஆதவன்… கொஞ்சம் நிறுத்தறீங்களா… நான் என்ன பண்ணேன்… எனக்கு என் அப்பா கம்பெனி வேணும் அவ்ளோதான்..
மற்றபடி… உன் அப்பா… என் அப்பா செத்ததை விட வேதனையை அனுவவிச்சு சாகனும்… என் அம்மா என்னை தள்ளி வைத்த மாதிரி உன் அம்மா உன்னைத் தள்ளி வைக்கனும்… இதெல்லாம் நான் யோசித்ததே இல்லை…” என்றவனின் குரலில் வன்மம் மட்டுமே….
இருந்தும் அருகில் இருந்த காவலர்களை நினைவில் கொண்டவனாக…
”உன் மேல உன் அம்மா மட்டும் இல்லை… உன் அம்மா கேஸ் கொடுத்த பின்னால… எத்தனை கேஸ் உன் மேல ஃபைல் ஆகி யிருக்குனு உன் வக்கீல் கிட்ட கேளு…பெரிய பெரிய தலை எல்லாம் உன் மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கு… என்னமா பிஸ்னஸ் பண்ணியிருக்க நீ… நீ ஒரு கேஸ்ல தப்பிச்சால் கூட… அடுத்த கேஸ்ல மாட்டுவ… உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகனும்… பார்ப்போம்… வெளில வந்தால்… அப்படியே வந்தால் கூட நீ ஃபேர்ம்… கம்பெனிலாம் ரன் பண்ண முடியாது… உன் ஹெல்த்துக்காக மார்னிங் மார்னிங்…க்ரவுண்ட்ல வேணும்னா ரன் பண்ணலாம்… வர்றட்ட…” என்றபடி நாற்காலியை விட்டு நகர்ந்தவன்…
“அப்புறம் ... என்ன சொன்ன… என்ன சொன்ன… பெரிய கண்மணி… இல்லை.. சின்ன கண்மணி… ஒரு இரண்டரை வயசு குழந்தையை வச்சு பிஸ்னஸ் டீல் பேசுனியே… அப்போதே உன் ஸ்டேட்டஸ் என்ன… உன் பலம் என்னன்னு தெரிஞ்சிருச்சு…. நீ அடுத்த ஸ்டெப் தான் யோசிப்ப… நான் நாலு ஸ்டெப் அஹெட்டா யோசிப்பேண்டா…”
”ப்ச்ச்… அதெல்லாம் விடு… அப்புறம்… இன்னொரு விசயம்… நெக்ஸ்ட் வீக்… என் அப்பாவோட கம்பெனி… என்னோட கைக்கு வரப் போகுது… நீ இல்லைனா அது நடந்திருக்காது… அந்த நன்றிக்கடன் எனக்கு எப்போதுமே இருக்கு… தேங்ஸ் ப்ரதர்… அதோட பார்ட்ன்னர்ஸ் டீலிங்கா கொஞ்சம் பிஸி ஆகிருவேன்.. நீ யோசிக்க அந்த டைம எடுத்துக்கோ… இப்போ டைம் முடிஞ்சுருச்சு… நான் கிளம்பவா… பை” என்றபடி ரிஷி வெளியேற…
கதவை நோக்கிச் சென்ற அவனை வெறித்தபடி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தவன்…
“ரிஷி… ஜெயிச்சுட்டேன்னு நினைக்காத… ஆடுறியாடா… உன் ஆட்டம் சீக்கிரம் அடங்கும்… நானும் பார்க்கத்தான் போறேன்…” அவன் சாபம் விடுவது போல கத்த
நிதானமாகத் திரும்பியவன்
“ப்ரோ… லேட்டா வந்து டைலாக்ஸ் சொல்றியே… லாங் பேக் அகோ… அதெல்லாம் நடந்துருச்சு… இப்போ நீ கதறுரியே… அந்த அந்த உன் இடத்துல இருந்துதான் இப்போ… இங்க வந்து நிற்கிறேன்… அதாவது அடங்கி இருந்தது அந்தக் காலம்.. அது மாறிருச்சு… இது என்னோட டைம்… சோ… நான் ஆடத்தான் செய்வேன்… பட்… கூல்… அதெல்லாம் பார்த்து டென்சனாக நீ வெளில இருக்க மாட்ட… நாலு சுவருக்குள்ள… இந்த ஜெயில்ல இருப்ப… சந்தோஷப்பட்டுக்கோ” என்றவன் அடுத்த நொடி விருட்டென்று வெளியேறி இருந்தான்…
----
ஆதவன் நான்கு சுவர்களுக்குள் ஓய்ந்து அமர்ந்திருந்தான்… அவனது எண்ணமெங்கும் ரிஷி மட்டுமே…
அவனுக்குமே தெரியும்… கேசவன்… திருமூர்த்தி… தனசேகர்… என நன்றாகத்தான் இருந்தனர்… இவன் என்று அந்த ஃபேக்டரியைப் பார்த்தானோ… அப்போதே அதன் மீது கண் வைத்தவன் இவன் தானே… அதன் பின் இவன் போட்ட திட்டங்களின் படிதானே எல்லாம் நடந்தது… தனசேகர் கம்பெனி மட்டுமல்ல… அது போல இன்னும் மூன்று நான்கு… அங்கெல்லாம் ரிஷியை விட புத்திசாலிகள் இருந்தும் அவர்களால் அவர்களது கம்பெனியைக் காப்பாற்ற முடியவில்லை…
இந்த ரிஷி… எப்படி… எங்கு நிமிர்ந்தான்… தன்னைக் குறி வைத்து தாக்கி இருக்கிறானே… இன்னும் என்னவெல்லாமோ… யோசித்த போதே அவனின் வருங்காலம் அவனுக்கு பூதாகரமாக இருக்க… பணம் பணம் பணம் …. இப்போதும் அவனிடம் இருக்கிறது... ஆனால் அவனது பணம் என்றாலும்… அவன் அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையை என்ன சொல்வது…
தாங்க முடியவில்லை… சுவற்றில் கைகளை… அடுத்தடுத்து குத்திக் கொண்டவனின் வலி அவன் இன்னும் அவனை வெறி ஏற்ற….
ரிஷியின் எகத்தாளமான சிரிப்பும்… பேச்சும் அவன் கண்களில் வந்து போன போதே… அவனுக்குள் இன்னும் வெறி அதிகமானதே தவிர அடங்கவில்லை…
அவனெல்லாம் தன்னைப் பார்த்து எக்காளமிடுகிறானே… அந்த அளவு அவன் சந்தோசமாக இருக்கின்றானா… ரிஷியின் புன்னகை அவன் கண் முன் வந்த போதே… கண்மணியின் உருவம் தானாகவே வந்து போனது… அலைபேசியில் முதன் முதலாக அன்று கேட்ட கம்பீரமான அதட்டலான குரலும்… அதன் பின் அவளை நேரில் பார்த்த போது… யாருக்கும் பதிலடி கொடுக்கும் அவளது நிமிர்ந்த தோற்றமும் ஞாபகம் வர… அதே நேரம்… ரிஷியிடம் அவள் பேசும் பாங்கும் பார்த்தானே…
“உன் புருசன் என்கிட்ட நான் யார்னு தெரியாம விளையாடிட்டான்… உன்னை வச்சு நான் யார்னு அவன்கிட்ட காட்றேன்… கதறிட்டு என் கால்ல அவனை விழ வைக்கலை… அவன என்ன… யோசித்த போதே… அந்த நட்ராஜ்… நாராயண குருக்கள்… அடுத்து அர்ஜூன் என அனைவரும் அவன் கண்களில் வந்து போக…
ஆதவனின் இதழில் குரூரப் புன்னகை…
”இதை எப்படி மறந்தேன்… அவ புருசனுக்கு கண்மணி கேடயமா இருக்கானு தோணின எனக்கு… அவளையே தூக்கனும்னு ஏன் தோணலை….
நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான்… ரிஷி அவனிடம் கேட்டானே… எப்போதுமே நாலு ஸ்டெப் தள்ளி யோசிக்கனும்… அவ்வாறே இவனும் திட்டமிட்டான்…
தன்னை ஏமாற்றியவர்கள் அத்தனை பேரையும்… துவம்சம் செய்யும் ஆவேசம் கொண்டவனாக… அத்தனையையும் அடக்கியபடி… தான் வெளியே வரும் நாளை நோக்கி காத்திருந்தான்…
--
எல்லாம் ஓய்ந்து ஒரு வாரம் கடந்திருக்க… சத்யாவும் ரிஷியும் ரிஷியின் அலுவலக அறையில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்… ரிஷி அவனது இறுக்கமெல்லாம்… பழி உணர்வெல்லாம் துடைத்து… புத்தம் புது பிறப்பெடுத்தது போல பொதுவான விசயங்களைப் பேசிக் கொண்டிருக்க சத்யாவிடம் பேசிக் கொண்டிருக்க… பார்த்திபனும் அப்போது அங்கு வர…
”வாங்க பார்த்தி… சாரி சாரி… எங்க ஊர் மாப்பிள்ளை… ” என்றபடி அவனை கிண்டலடிக்க ஆரம்பிக்க… பார்த்திபனும் அதை ரசித்தபடியே உள்ளே வந்து அமர்ந்தான்… ரிஷி மட்டுமல்ல… அனைவருக்கும் பார்த்திபன்-யமுனா விசயம் தெரிய வந்திருக்க…
கண்மணியிடமும் ரிஷி சொல்லியிருக்க… கண்மணி கேட்டுக் கொண்டாள் அவ்வளவுதான்… அவள் எப்போதுமே பொதுவாக அடுத்தவர்கள் விசயத்தில் தலையிடுவது இல்லை… அதிலும் ரிதன்யா-பார்த்திபன் விசயமாகப் பேசி, அனைத்தும் தவறாகப் போன பின்னால்… ’ஓ அப்படியா’ என்ற மட்டோடு முடித்துக் கொண்டாள்…
உள்ளே வந்த பார்த்திபன்…
”ஆதவனுக்கு பெயில் மனு ரிஜெக்ட் ஆகியிருச்சு… “ சந்தோசமாகச் சொல்ல … ரிஷியோ முகம் மலர புன்னகைத்தான்…
“அவன் எல்லா கேசையும் உடச்சு வெளிய வர்றதுக்குள்ள… நாம ஸ்ட்ராங்க் ஆகனும் ஆர் கே” சத்யா சொல்ல… ரிஷியும் அவன் புறம் திரும்பி அதை ஆமோதிப்பது போல அவனுக்கு பதிலாக தலையை மட்டும் அசைத்தவன்… சத்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்…
அன்று தான் தலைகுப்புற வீழ்ந்து கிடந்த போது… முதல் வெளிச்சமாக வந்தவன்… ரிஷியின் வெற்றி… தோல்வி என எல்லா நிலைகளிலும் அவன் நிழலாக வந்தவன்…
ஏமாந்து இறந்து போன முதலாளி… அவனது மகன் இவர்களே அவனது வாழ்க்கை என வாழ்ந்து வருபவன்…
தனசேகருக்கு தான் மகனாகப் பிறந்ததை விட… சத்யா என்பவன் அவரது காரியதரிசியாக கிடைத்தது தான் அவர் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்கும் போல…
தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்.. இன்னுமே சத்யாவையேப் பார்த்துக் கொண்டிருந்தவனாக… அந்தப் புன்முறுவலோடே… பார்த்திபனிடம் கை நீட்ட… பார்த்திபனும் அந்தக் கோப்பைக் கொடுக்க…
“வாங்க பிரபு” என்ற போதே… சத்யா வேகமாகத் திரும்பி பார்க்க… பிரபுவும் சத்யாவும் சந்தோசமாக கை குலுக்கிக் கொண்டனர்.. பார்த்த அந்த நொடியே… அவர்களுக்கிடையே இருந்த பரஸ்பர நட்பில்…
மற்றவர்களுக்கும் அவர்களின் நட்பு தெளிவாக விளங்க… ரிஷிதான் இப்போது
“உட்காருங்க பிரபு… “ என்றபடி பார்த்திபனிடம் திரும்பியவன்
“பார்த்தி இவர் தான் பிரபு… கோர்ட்ல ஸ்டே ஆர்டர் போட்டவர்… அப்பா இருக்கும் போது அங்க வேலை பார்த்தவங்கள்ள அப்பாவுக்கு நம்பிக்கையானவர்… எல்லோரும் கேஸ் போடத் தயங்கினப்போ இவர் தான் தைரியமா ஸ்டெப் எடுத்தார்… சத்யாவோட ஃப்ரெண்ட் ” எனக் கூறி பிரபுவைப் பார்க்க… பிரபு இப்போதும் அமரவில்லை…. தயக்கமாக ரிஷியைப் பார்க்க
“ஹலோ… என்ன இப்படி தயங்குறீங்க… என்னோட பார்ட்னர் இவர்னு கை காட்றப்போ கம்பீரமா இருக்கனும் பிரபு…” - ரிஷி மின்னாமல் முழங்காமல் சொன்ன அதிரடி வார்த்தைகளில்…. சத்யாவும்… பிரபுவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் பின் ரிஷியைப் பார்க்க…
“இதைப் படிங்க …. அப்புறம்… என்னைப் பாருங்க… ” என அவர்களிடம் தன் கையில் இருந்த காகிதங்களை அவர்களின் கரங்களில் மாற்ற… அதைப் பார்த்தவர்களுக்கோ… அவர்கள் கண்களையே நம்ப முடியாத பாவனை…
25 சதவிகித ஷேரில் இவர்கள் இருவருக்கும் தலா 15, 10 என பிரித்துக் கொடுக்கப்பபட்டு… தனசேகர் கம்பெனியின் பார்ட்டனராக நியமிக்கப்பட்டு இருக்க… சத்யாவின் கண்களிலோ நீர்த்துளி….
“ஆர் கே… இதெல்லாம் … ரொம்ப பெரிய அங்கீகாரம் எனக்கு…. சார்க்கு நீதி கிடைக்கனும்… அதான் என்னோட ஒரே நோக்கம்…” என்ற போதே
“15 போதாதா சத்யா…” என்று ரிஷி கண்சிமிட்ட…
“ஆர் கே… “ என்று தழுதழுத்தவன் ரிஷியை ஆரத் தழுவிக் கொள்ள… அணைத்துக் கொண்டான் ரிஷி… அதே நிலையிலேயே
“நீங்க அன்னைக்கு கேட்டிங்கள்ள… நீங்க சந்தோசமா இல்லையா ஆர் கேன்னு… இப்போ சொல்றேன்… நான் சந்தோசமா... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் சத்யா… அதை உங்களோட ஷேர் பண்ணாம வேற யார் கூட ஷேர் பண்ணுவேன் சொல்லுங்க… இதுக்கே சொல்றீங்க… ஃபேபியோ அந்த மனுசன்லாம்… அவரோட ஒரு ஸ்தாபனத்தை அப்படியே எனக்காக கொடுத்திருக்கார்… அதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது… நான் பண்றதெல்லாம் அவர் பண்ணினதுக்கு கால் தூசி கூட பெறாது….”
பிரபு இருவரையும் பார்க்க… ரிஷி அவன் நிலை புரிந்தவனாக
“சாரி பிரபு… சத்யா கூடயே ஸ்பெண்ட் பண்ணதுனால… அவர்கூட இவ்வளவு நெருக்கம்… உங்களோட அவ்வளவா பழகினது இல்ல… சத்யா உங்களைப் பற்றி எல்லாமே சொல்லி இருக்கிறார்… உங்க தைரியம், நேர்மை எல்லாம் சத்யா மூலம் கேள்விப்பட்ருக்கேன்… இனிமேலாவது உங்களோட நேர்ல பழகிற வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்… “ எனப் பிரபுவையும் தங்களோடு சேர்த்து பேச ஆரம்பிக்க… பிரபுவும் அவர்களோடு ஐக்கியமாக ஆரம்பிக்க… தினகரும் வேலனும் அங்கு வந்து சேர
“வாங்கடா… எப்போ கூப்பிட்டா எப்போ வர்றீங்க முதலாளிங்க ரெண்டு பேரும்…” என்று ரிஷி எப்போதும் போல் அவர்களிடம் வம்பிழுக்க…
“நக்கல் தானே உனக்கு…அண்ணாத்த… வரச்சொன்னியாமே…. என்ன விசயம் சொல்லு… “ என்றவர்கள் இப்போதும் ரிஷியிடம் அதே போல் தான் பழகிக் கொண்டிருந்தனர்…
ரிஷி எத்தனை உயரம் சென்றாலும்… தினகருக்கும் வேலனுக்கும் அவர்களது ரிஷி அவர்களின் அண்ணாத்த… தலை… தான்
“சீக்கிறம் சொல்லு… தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கு” அசால்ட்டாக அவனிடம் பேச ஆரம்பிக்க… பிரபு ஆச்சரியமாக அவர்களைப் பார்த்தபடி இருக்க… சத்யாவுக்கும் … பார்த்திபனுக்கும் இது வழக்கமான ஒன்று என்பதால்… பெரிதாக ஆச்சரியம் இல்லை…
“ரொம்ப நாள் ஆச்சு உங்க கூட படத்துக்கு வந்து… இந்த வீக் புக் பண்ணிருக்கேன்… அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்… “
“ஹான்… தலை… உச்சாணிக்கொம்புலருந்து இறங்கிட்டியா… எப்போ போறோம்… ஆமாம் மணி அக்காகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டியா… இல்லை உனக்கு பதிலா எங்களுக்கு டின்னு கட்டிறப் போகுது” தினகர் உஷாராகக் கேட்க
“ப்ச்ச்… இருடா தினா… எப்போ தல… வீக் எண்ட் தானே … நீ உன் காரியத்துல கண்ணாயிருப்பியே…” என்ற போதே ரிஷி
“பின்ன.. என் மாமனார் காசென்ன சும்மாவா விளையுது… வீக் எண்ட் தாண்டா… அவர் விட்டாலும் அவர் பொண்ணு… அந்த கறார் ஹவுஸ் ஓனரம்மா பத்தி தெரியுமில்லை… கணக்கு டீச்சர் வேற… நிக்க வச்சு கேள்வி கேட்பா… ஒரு ஒரு பைசாக்கும்… நமக்கு அனுபவம் இருக்கு தானே…” ரிஷி மிரட்சியோடு சொல்லி போல அவர்களுக்கும் அந்த பயத்தைக் கொடுப்பது போல பதவிசாகப் பேச
“நடிக்காத அண்ணாத்த… அப்படியே மணி அக்காக்கு பயந்தவன் தான் நீ… நம்பிட்டோம்….”
அனைவரும் சிரித்து வைக்க… ரிஷியோ
“பாவப்பட்ட ஒருத்தனைப் பார்த்து… இந்த உலகம் இதுவும் சொல்லும் இன்னமும் சொல்லும்…” எனத் தலையில் கை வைத்து பரிதாபமாக அமர்ந்தவனைப் பார்த்து இன்னும் அங்கு கலகலப்பு வந்திருக்க.. அதே நேரம் விக்கியின் அழைப்பும் ரிஷிக்கு வந்திருந்தது…
---
“டேய் மச்சான்…. எங்க இருக்க” விக்கி ’கண்மணி’ இல்ல வாயிலில் நின்றபடி கேட்க… ரிஷியும் அலுவலகத்தில் இருப்பதாகப் பதில் சொல்ல…
“டேய்… இப்போதான் ஏர்போர்ட்ல இருந்து வர்றேன்… நேரா இங்கதான்… உங்க வீட்டுக்கு முன்னாடிதான் நின்னுட்டு இருக்கேன்… உன்னைப் பார்க்க ஓடோடி வந்தால்… என்னைய ஏமாத்திட்டியே மச்சான்”
அதைக் கேட்ட ரிஷியோ கடுப்பான குரலில்
“ஆமாடா… என்னைப் பார்க்க நீயும் ஓடோடி வந்திருப்ப… நம்பிட்டேன்.. நண்பனை பார்க்க வர்றதுன்னா… இங்க தானே வந்திருக்கனும்… நீங்கள்ளாம் யார்னு தெரியாதா.. ஃபிகர்னா ஃப்ரெண்டக் கழட்டி விடற ஆள்தானே…. என் தங்கச்சிய பார்க்க வந்துருப்ப… அதைச் சொல்லாமால் எவ்ளோ சீன் போடற” எனும் போதே
விக்கியின் சிரிப்பு அவன் முகமெங்கும் விரவ…
“வழியுது தொடச்சுக்கோ… நீ கண்மணி இல்லத்துக்கு முன்னால நிக்கிற… ஆனா இங்க இருக்கிற எனக்கு தெரியுது... நீ அங்க டன் டன்னா வழியுறது” ரிஷி விக்கியின் நண்பனாக… அவர்களின் வழக்கமான தொணியில் பேச ஆரம்பித்திருந்தான்…
“இருந்தாலும் நீ இப்படி உண்மையப் போட்டு உடைக்கக் கூடாதுடா… வா வா… உன்னைப் பார்க்கனும்… பேசனும்” என்றபடி வைக்கப் போனவன்…
“டே டே மச்சான்… ஒரு டவுட்ரா” என்க…
“என்னடா… உனக்கெல்லாம் டவுட் வருதா என்ன… நீயெலாம் ஜீனியஸ் வழித்தோன்றல் ஆச்சே” ரிஷி நக்கலோடு அவனை வாற
“டேய்… உன் ஃப்ரெண்டா இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கவா… இல்லை உன் மச்சானா காலடி எடுத்து வைக்கவா… வலது கால் எடுத்து வச்சு போகவா… முதன் முதலா வர்றப்போ தான்… எல்லாம் தப்பாகிருச்சு… அப்போ ஒரு வேளை வலது காலை எடுத்து வைக்கலையோ என்னவோ” விக்கி சொல்லிக் கொண்டிருக்க…
”இருக்கலாம்டா… நீ வலது காலை எடுத்து வைக்கலை போல… ஆனால் நான் வச்சுட்டேன் போல… அதான் மாப்பிள்ளையா வந்துட்டேன்… நீயும் இப்போ வச்சுரு… மாத்தி கீத்தி வச்சுறாத… தப்பாகிறப் போகிது…. “
“அது கரெக்ட்டுடா…” என விக்கி அந்தப் பக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… இங்கு ரிஷியின் அருகில் நின்ற வேலன்
“ஏன் அண்ணாத்த… மணி அக்கா வீட்டுக்கு முதன் முதலா போனப்போ… நீ வலது காலை எடுத்து வச்சுத்தான் போனியா என்ன… அப்போவே மணி அக்காவை உஷார் பண்ணத்தான் போனியா… தர்ம அடி வாங்கல அக்காகிட்ட“
வேகமாகப் போனைக் கட் செய்தவன்…
“படுபாவி… நல்ல வேளை… அவங்க எல்லாம் போன் வந்ததும் கிளம்பிட்டாங்க… ஏண்டா… நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்… நீங்க என்னடா சொல்றீங்க… இதை மட்டும் உங்க மணி அக்கா கேட்கனும்… ஏண்டா நீங்க வேற… உங்க பங்குக்கு… சும்மாடா… என் நண்பனை வம்பிழுத்திட்டு இருந்தேன்… ” என்ற போதே
தினகர் கேட்டான்… தயங்கியபடியே… தயங்கிக் கேட்டாலும்… அவன் குரல் கரகரத்திருந்தது
“ஏன் அண்ணாத்த… நீயும் மணி அக்காவும்… நம்ம முதலாளியும் கண்மணி இல்லத்தை விட்டு போகப் போறிங்களாமே… ”
ரிஷியின் முகம் மாறியிருக்க… மௌனம் மட்டுமே… பதில் இல்லை…
இப்போது வேலன்…
“என்ன தல, அமைதியா இருக்க…. அப்போ உண்மையிலேயே போய்ருவியா… இருக்க மாட்டியா தல.. என்னமோ தெரியல தலை… நீ இல்லாத… அதுவும் ’மணி’ அக்கா இல்லாத ஏரியாவை நினச்சுப் பார்க்கவே முடியலை… இத்துனூண்டு சின்னதுல இருந்து… ஏன் நாங்க… எங்க ஏரியால பெரும்பாலான எல்லாருக்குமே… அக்கான்னா பிடிக்கும்… கறாரா இருந்தாலும்… கோபமா பேசினாலும்… எங்க யாரையுமே விட்டுக் கொடுக்காது… எவ்வளவோ ஹெல்ப் பண்ணும்… அது இல்லாத ஏரியாவா... ஒரு மாதிரி இருக்கு அண்ணாத்த” தினகர் பேசிய போது கூட… குரல் மட்டும் தான் கரகரத்தது… வேலனுக்கோ கண்களே சிவப்பாக மாறி இருக்க… ரிஷிதான் சுதாரித்து
”எங்கடா போகப் போறோம்… பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்… உங்க மணி அக்காவை அப்படிலாம் உங்க கிட்ட இருந்து பிரிச்சுற மாட்டேன்.. இந்த ஏரியால தான் இருப்போம்… ” என்ற ரிஷி அவர்கள் இருவர் தோள்களின் மேலும் கை போட்டு அணைத்துக் கொள்ள…
“நீயும் தான் வேணும் எங்களுக்கு… “ என்றவனிடம்…
“ஹான்… அப்படியா… கொஞ்ச நேரம் முன்னாடி… மணி அக்கா மணி அக்கான்னு கண்ணக் கசக்கினப்போ… அப்படி தெரியலையே… உங்க மணி அக்கா மட்டும் தான் உங்களுக்கு வேணும்னு தோணின மாதிரி இருந்துச்சே” ரிஷி நக்கலாக கேட்க..
“அது அப்படித்தான் அண்ணாத்த…. நீ பெரிய இடம்… நீ இருப்பியா… இல்ல தங்கச்சிங்கதான் இருக்குமா… ஒண்ணு செய்யி… பேசாமல் அக்காவ எங்க ஏரியாவிலேயே இருக்கச் சொல்லிரு… நாங்க முதலாளி… எல்லோரும் பத்திரமா பார்த்துக்கறோம்… நீ அப்போப்பா வந்து… அக்காவைப் பார்த்துட்டு போ… “
ரிஷி இப்போது தன் முன்னால் அவர்கள் இருவரையும் கொண்டு வந்தவன்… இருவரையும் கைகளால் பிடித்தபடியே
“சொல்லு… என்ன சொன்ன… சொல்லு சொல்லு… இன்னொரு தடவை…” ரிஷியின் கை அவர்கள் தோளை முறுக்க… இருவரும் முழித்தபடி
“அண்ணாத்தை இப்போ ஏன் இவ்ளோ காண்டாகுற… நீ ஆஸ்திரேலியா போனப்போ… இன்னாவாம்.. நாங்கதான் பார்த்துகிட்டோம்… அப்போ போனேல்ல… அதே மாதிரி நினச்…” தினகர் சொல்லி முடிக்கவில்லை
“ஆ… அண்ணாத்த… கை வலிக்குது… விடு அண்ணாத்த” என்ற தினகர்…
“இப்போ என்ன… நீ அக்காவை எங்க கூட்டிட்டு போனாலும்…. எழு மலை எழு கடல் கடந்து கூட்டிட்டு போனாலும்… நா.. நாங்க வந்து பார்க்க மாட்டோமா…எங்க மணி அக்காவை” முடித்த போதுதான்…. சிரித்த படியே…
“அது…இப்படியே சொல்லப் பழகிக்கோங்க…” அவர்களை விட
“ஏன் அண்ணாத்த நாங்க என்ன சொன்னோம்னு... இவ்ளோ சீரியஸாகிற... ” என்று ரிஷியின் முக பாவனையில் இருவரும் கேட்ட போதே.... அதற்குப் பதில் சொல்லாதவன்
“உங்களோட பேசிட்டே… எல்லாத்தையும் மறந்துட்டேன் போங்கடா… “ என்று குற்றம் சாட்டியபடியே… தன் அன்னைக்கு அழைத்தவனாக… விக்கியின் வருகை குறித்துச் சொன்னவன்… தயங்கி… பின்…
“அம்மா… விக்கிதான் நம்ம வீட்டு மாப்பிள்ளை… இதைப் பற்றி பேசனும்னு நெனச்சுட்டே இருந்தேன்… ஆனால் அவன் திடுதிப்னு வருவான்னு நினைக்கல… இப்போ ஏன் சொல்றேன்னா… நீங்க அவன்கிட்ட ரிதன்யா மேரேஜ் விசயமா ஏதாவது உளறிடுவீங்களோன்னுதான் சொன்னேன்” என்றவனிடம்
இலட்சுமி… சில நொடிகள் மௌனமாக இருந்து விட்டு…
“என் பையன் வளரனும்னு…. எவ்ளோ நாள் கனவு கண்டுட்டு இருந்தேன்… ஆனால் அவன் இந்த அளவுக்கு வளர்ந்துட்ட்டான்னு நினைக்கும் போது சந்தோச பட்றதான்னு தான் தெரியலை…”
“ம்மா”
“உன் விசயத்துல முடிவெடுக்கும் போது… நான் ஒண்ணுக்கும் உதவ முடியாத கையாலாகாதவளா இருந்தேன்… ஒத்துக்கறேன்.. இப்பவும் அப்படித்தான் என்னை நினைக்கிற போல… “ என்றவரின் மன ஆதங்கத்தில்…
“ம்மா… அப்டிலாம் இல்லம்மா… உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை… விக்கி இங்க வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன்… படுபாவி… என்கிட்ட சொல்லாமல் கூட வீட்டுக்கு வந்து நிற்கிறான்… “ என்ற போதே
“வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கப் பழகு” இலட்சுமியின் அதட்டலில்..
”இது என் அம்மா இலட்சுமிக்கு அழகு…” என்ற போதெ இலட்சுமி மனம் விட்டுச் சிரிக்க…
“இப்படியே என் அழகு அம்மா.. என் நல்ல அம்மா… வீட்டு மாப்பிள்ளைய கவனிங்க பார்ப்போம்” என்றவனிடம்
“இப்டியே பேசிப் பேசி எல்லாரையும் கவுத்திரு… சீக்கிரம் வீட்டுக்கு வா.. மாப்பிள்ளை குரல் கேட்குது… வை வை… நான் அவரைக் கவனிக்கனும்” என்று வைத்து விட…
ரிஷியும் புன்னகையோடே போனை வைத்தான்… அன்றைய இரவில் அவன் அடையப் போகும் வேதனைகளின் அழுத்தங்கள் அறியாமல்…..
Lovely update