/*என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்*/
அத்தியாயம்-70-3
நட்ராஜின் தாய் கந்தம்மாள் வீட்டில் ரிஷி அமர்ந்திருக்க… எதிர்பாராத ரிஷியின் வருகையில் கந்தம்மாளுக்கு கையும் ஓட வில்லை… காலும் ஓடவில்லை… பேத்தியின் கணவன் என்பதை விட மகனின் மருமகன்… அதுமட்டுமல்லாமல் கண்மணிக்கு கந்தம்மாளை பிடிக்காவிட்டாலும்… ரிஷி அவரிடம் அந்த வெறுப்பை எல்லாம் காட்டாமல் பிரியமாக பழகி இருக்க… தன் உறவு ரிஷியின் மேல் கந்தமாளுக்கு தானாகவே பிணைப்பு வந்திருந்தது…
“அடியே… மீனா… என் மகன் மருமகன் வந்துர்க்கு… இந்த நைட்ல என்ன பண்றதுன்னு என்க்கு ஒண்ணுமே தோன்லியே… இந்த ஆடுகாலி வேற எப்போதுமே வீட்ல இருக்க மாட்டா… இப்பவும் வெளியதான்… வந்தாளே மாப்பிள்ளை கூட வந்தாளா… அவர் கூட இருக்காளா… ஊர் சுத்த கிளம்பிட்டா” என்றபடி புலம்பலாக அடுத்த வீட்டு பெண்மணியிடம் சொல்லிக் கொண்டிருக்க… ரிஷியும் இப்போது கந்தம்மாளின் வீட்டை விட்டு வெளியே வந்திருந்தான்…
இப்போது தாங்கள் வசித்துக் கொண்டு இருக்கும் ’கண்மணி இல்லம்’ அமைந்திருந்த ஏரியாவே வசதிகள் அற்ற பின் தங்கிய ஏரியாதான்… அதையும் விட இது மிக மிக மோசமான ஏரியாவாக இருந்தது… ஏரிக்கரை ஓரத்தில் இருந்த புறம்போக்கு நிலத்தில் வீடுகள்.. எப்போது வேண்டுமென்றாலும் அரசாங்கம் விரட்டி விடும் நிலை… அப்படிப்பட்ட ஏரியா…
பார்வையைச் சுழற்றியவனின் கண்களில் சற்று தூரத்தில் யாரோ ஒரு வீட்டின் படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கண்மணி பட்டாள்… கைகளை அசைத்தபடி… தலையை ஆட்டியபடி… உற்சாகமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தவள்… இவன் தலை கண்டதுமே இன்னும் முகமெல்லாம் மலர்ந்து… இவனைப் பார்த்து அவளருகே வருமாறு சைகை காட்ட… அவள் அழைத்த மறு நிமிடம் ரிஷியும் அங்கு நிற்க
தன் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியின் கைகளைப் பிடித்துக் கொண்டபடி…
“ரிஷி…. இவங்கதான் விசி அக்கா… இவங்க வீட்லதான் நான் பாதி நேரம் குந்தினு இருப்பேன்… இவங்க சாப்பாடுனா போதும் எனக்கு… இங்கேயே பாய் விரிச்சு படுத்துருவேன்… அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்… அதுமட்டும் இல்லை ரிஷிக்கண்ணா… இவங்க என்ன பேசினாலும் எனக்கு சிரிப்பா வரும்… அது ஏன்னு எனக்கே தெரியாது… வீட்டுக்குப் போய் இவங்க பண்ற கூத்தை நினைத்து தனியா லூசு மாதிரி சிரிச்சுனு இருப்பேன்… ”
“அய்யே கண்ணுமணி… ஏன்… இப்படி…” கண்மணியால் விசி என விளிக்கப்பட்ட விஜி என்ற அந்தப் பெண்மணி வெட்கப்பட்டு இழுக்க…
கண்மணி இப்போது விழுந்து விழுந்து சிரித்தவள்…
“கண்ணுமணின்னு இவங்க சொன்னாலே போதும்… நான் சிரிக்க ஆரம்பிச்சுருவேன் ரிஷி… அக்கா அக்கா ப்ளீஸ் ப்ளீஸ்… இன்னொரு தடவை சொல்லுங்க… கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு…” கண்மணியா எனும் அளவுக்கு அவள் குரலில் கலகல சிரிப்பு மட்டுமே…
ரிஷியின் கண்கள் அவனையுமறியாமல் கலங்க சட்டென்று திரும்பி விட்டான்… கண்மணி அறியாமல் தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்... மீண்டும் அவள் புறம் திரும்ப…. இவனை எல்லாம் அவள் கவனித்தால் தானே…
“நீ ஏன் கண்ணுமணி…. இங்க வரவே மாட்டேங்கிற… நீ பெரிய இடத்து பொண்ணாம்… நாமளாம் அவளுக்கு இனி தேவையில்லனு உன் கந்தம்மாள் பாட்டி சொல்லிட்டு இருக்கும்… நீ நல்லா இருக்கதானே கண்ணு….” கண்மணியின் கன்னத்தைப் பிடித்து கவலை பாதி அக்கறை பாதி என இரண்டுமாக கலந்து கேட்க
கண்மணியின் முகம் சில நொடி மாறி… பின் மாறியது…
“இப்போ நான் நல்லா இருக்கேன்கா….” விஜிக்கு பதில் என்றாலும் பார்வை ரிஷியிடம் இருக்க…
”உன் வெகுளிதனமான குணத்தை நினைக்கும் போதெல்லாம் நீ எப்படி இருக்கியோன்னு உன்னை நினைக்கும் போதெல்லாம் நினைப்பேன்… கண்ணு… எனக்கு இந்த வீடு அதை விட்டா வாசல்னு வாழ்க்கையே போச்சு… இதுல உன்னை எங்க வந்து பார்க்கிறது” என புலம்ப ஆரம்பிக்க்க
“அய்யே யக்கா… அதெல்லாம் விடு…. ‘சின்ன மணிக் குயிலே..ன்னு ‘ ஒரு பாட்டு பாடுவியே…. அதுலயும்… ‘கண்ணுமணி’ கண்ணுமணி… பதிலு சொல்லு நீ சொல்லு நீ’ ந்னு பாடுவியே… அதைப் பாடேன்… “ என்று ஆரம்பித்தவள்… பேசிக் கொண்டே இருக்க.. நின்று கொண்டிருந்த ரிஷி அமர்ந்து விட்டான் கண்மணியின் அருகிலேயே…
ஒரு கட்டத்தில்
“விசியக்காவ்… உனக்கு ஊட்ட உன் ஊட்டுக்காரருதான் வரனுமான்னு கேட்பேல்ல… உன் வாய் முகூர்த்தம் .. அதே மாதிரி… என் ஊட்டுக்காரருதான் எனக்கு ஊட்டி விட்டாரு முதன் முதல்ல..” சொன்னவள்…ரிஷியிடம் திரும்பி…
“ரிஷி.. ரிஷி… இவங்க வீட்ல இன்னைக்கு சாப்பிடறேன் ரிஷி… இவங்க கையால வச்சா… கஞ்சி கூட செம்ம டேஸ்ட்டா இருக்கும்…” - சம்மதமாக தலை ஆட்டியவன்…
“நான் இல்லாமல் சாப்பிடத் தெரியுமா அம்மு… இல்லை “ என்று ரிஷி யாரும் அறியாமல் கண்மணியிடம் கல்மிஷமாக கேட்க… விஜி அக்கா கண்டுகொண்டவராக
“கண்ணுமணி… அவருதான் ஊட்டி விடனுமா…. இல்லைனா சாப்ட மாட்டியா” அந்தப் பெண் வெகுளியாகக் கேட்க…
ரிஷியோ அவளை மாட்டி விட்ட கள்ளப் புன்னகையுடன் கண்மணியைப் பார்க்க… கண்மணியோ என்ன சொல்வதென்று தெரியாமல் சங்கடப் புன்னகையுடன் ’ஈ’ என்று சிரித்து வைத்தபடியே… ரிஷியின் கைகளில் யாரும் அறியாமல் வலிக்காமல் கிள்ள… ரிஷியோ கண்சிமிட்டி சத்தமாகச் சிரித்தான் இன்னும் அதிகமாக…
கண்மணியோ முறைக்க முயன்று தோற்றாள்… அவள் முகத்தை புன்னகை மட்டுமே சூழ்ந்திருக்க… அதில் அத்தனை தேஜஸ்… அதே போல் வெட்கம் கண்மணிக்கும் வருமா… ரிஷி அறிந்தான் அன்று… வாய்ப்பை விடாமல் தன் மனைவியின் வெட்கத்த… புன்னகையை… அவள் குறும்பான பேச்சை… தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான்…
“உன் வீட்டுக்காரரு… ரொம்ப சையுலண்ட்டோ…. நீ வாயாடி ஆச்சே… ஆயிரம் கேள்வி கேட்பியே… உன்னை வச்சு எப்புடி சமாளிக்கிறாரு…” அங்கிருந்த இன்னொரு பெண் கேட்டாள்
கண்மணி இப்போது சிரித்தபடியே…
“நல்லா பேசுவாருக்கா… எங்க வீட்டு கெழவி எப்பேர்ப்பட்ட ஆளு… அதையே சமாளிப்பாரு… என்னா…நான் பேச ஆரம்பிச்சால் வேற யாரும் பேச முடியுமா.. வேற வழி இல்லாமல் அமைதி ஆயிருவாரு… ” வாய் மூடாமல் கண்மணி பேச ஆரம்பித்தவள்…. விஜி அக்கா, அடுத்து பக்கத்து வீடு… அருகில் இருந்த கடை என அதன் பிறகு மொத்த தெருவோடும் உறவாடிக் கொண்டிருந்தவள்… கந்தம்மாள் வீட்டிற்கு வந்தபோது இரவு பத்துமணி ஆகி இருக்க… அந்த வீட்டுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று கொண்டவள்…
“இந்த டைம் கூட வீட்டுக்கு வர மாட்டேன்… கிழவி திட்டிட்டே தூங்கிருக்கும்… சில சமயம் கதவை பூட்டிட்டு தூங்கிரும் கோபத்துல… நான் இதோ இங்கேயே இந்த மறப்புல படுத்து தூங்கிருவேன்… இந்த ஏரியா கொசுவெல்லாம் எனக்கு கும்பகர்ணன்னு பேரே வச்சுருக்கும்… ஆயிரம் கொசு வந்தாலும் அசர மாட்டேனே ” அந்த நாள் நினைவுகளில் தன் பெருமைகளைச் சொன்னவள்…
”ஆனால்… இந்த இடத்தை விட்டு வந்தது எவ்ளோ பெரிய தப்புனு அப்புறம் தான் தோணுச்சு ரிஷி… எப்போதும் சிரிச்சுட்டே இருக்கிற… கள்ளம் கபடம் இல்லாத அந்த கண்மணியை நானே தொலச்சுட்டேன்… இங்கேயே இருந்திருந்தால் நான் சந்தோசமா இருந்திருப்பேனா ரிஷி” என்று நினைவுகளின் தாக்கத்தில் சொன்னவளிடம் பதில் பேசாமல் அவளையே பார்த்தபடி இருந்தவன்...
“நான் உன்னை மிஸ் பண்ணிருப்பேனோ கண்மணி... எனக்காகத்தான் என்னோட சேர்றதுக்காகத்தான்... இவ்ளோ கஷ்டப்பட்டியா கண்மணி... ” அவன் குரல் அந்த இரவு வேளையிலும் மெலிதாக நலிந்து ஒலிக்க...
“அப்படில்லாம் இந்தக் கண்மணி மிஸ் பண்ணிருக்க விட்ருக்க மாட்டா அவ ரிஷிக்கண்ணாவை.... அன்னைக்கு அந்த ரோட்ல நீங்க என்னை மிஸ் பண்ணுனீங்க... ஆனால் நான் உங்கள விடலையே... நான் எப்போதுமே என் ரிஷிக்கண்ணா அவனோட கண்மணிய மிஸ் பண்ணவே விடமாட்டேன் போதுமா...” அவன் சோகக் குரலில் தன் சோகத்தை கடந்தவள்...
“ரிஷி… இப்படி நைட் கூட்டிட்டு வந்து… பாதிப் பேரை பார்க்க முடியலை… பாதி இடம் பார்க்க முடியலை… எங்க ஸ்கூல்… எங்க டீச்சர்…” என்றவளிடம்
”இனி அடிக்கடி வரலாம் அம்மு…” ரிஷி சொன்ன போதே நிமிர்ந்து கூர்மையாகப் பார்த்தவள்…
”ரொம்ப தேங்க்ஸ் ரிஷி… ஏனோ இங்க திரும்ப வர மனசே இல்லை… உண்மயைச் சொன்னால்… எனக்குத் தைரியமும் இல்லை… என்னோட சிரிப்பையும்… என்னோட துறுதுறுப்பையும் பார்த்தவங்க மத்தியில கல்லு மாதிரி நிக்க மனசு வரலை… தனியா வந்திருந்தால் எப்படியோ… அழுதிருப்பேனோ என்னவோ…” என்ற போதே கண்மணியின் குரல் தடுமாறி வர…
“ஹேய்… என்னது இது… இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தேனா... மாறி மாறி புலம்பிட்டு... ஜில்...” ரிஷி அவள் தோளை அணைத்து தன்னோடு சேர்த்துக் கொள்ள…”
இப்போது கண்மணி சிரித்தபடியே
“அது என்னமோ தெரியலை… நீங்க என் பக்கத்தில இருந்தால்… காத்துல இறகு பறக்குமே அந்த மாதிரி உணர்வு… எவ்ளோ ஹெவியான ஃபீல் இருந்தாலும்… பறந்து போயிருது” கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போதே … கந்தம்மாள் வெளியே வர… வந்தவர்… கண்மணியைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாமல்… கண்மணியின் தோளோடு கரம் போட்டபடி நின்று கொண்டிருந்த ரிஷியை மட்டுமே பார்த்து புன்னகை செய்தவராக…
”வாப்பா… உங்க தாத்தா வர்ற நேரம் தான்… சாப்பாடு ரெடி பண்ணிட்டேன்…” என்ற போதே
“இல்ல பாட்டி… நாங்க ரெண்டு பேருமே அதோ அந்த விஜி அக்கா வீட்ல சாப்பிட்டோம்…” அவன் முடிக்க வில்ல…
“கெரகம்… முதன் முதலா வீட்டுக்கு மாப்பிளை வந்திருக்காரே… சமச்சு போடலாம்னு பார்த்த… எவ வீட்லயோ சாப்பிட வச்சு கூப்ட்டுட்டு வந்துருக்கா… உன்னை யாரும் இங்க பாக்கு வெத்தலை வச்சு அழைக்கல… மாப்பிள்ளையை விட்டுட்டு போக வேண்டியதுதானே… அவதான் அடங்காதவ… நீங்க ஏன் தம்பி… அவ கூப்பிட்டானு போனீக” கடுகடு முகத்துடன் கந்தம்மாள் கிழவி தன் வழக்கமான முகத்தை கண்மணியிடம் காட்ட… கண்மணி விடுவாளா என்ன…
“நான் ஒன்னும் உன் மாப்பிள்ளைய முடிஞ்சு வச்சுருக்கலையே… இஸ்துகினு போய் சாப்பாடு போட வேண்டியதுதானே…… ஆனால் கெழவி…. இன்னும் உனக்கு வாய் அடங்கல” கண்மணியும் சரிக்கு சரியாக அவரோடு சத்தமாகப் பேச…
ரிஷிதான் இருவருக்கு இடையில் வந்தவனாக…
“இன்னொரு நாள் வர்றோம் பாட்டி… இனி அடிக்கடி வர்றோம்… இந்த அய்யங்கார் மாமியோட இல்லை… என் மாமாவோட… நீங்க கருவாட்டு குழம்பு சூப்பரா வைப்பீங்கன்னு மாமா சொல்வாரு… ரெண்டு பேருமா ஒரு புடி புடிக்கிறோம்… ” கண்மணியின் முகம் அஷ்ட கோணலாகப் போவதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே பெரிதான புன்னகையோடு வேண்டுமென்றே சொன்னான் ரிஷி…
“இப்போ லேட் ஆகிருச்சு… நாங்க கிளம்புறோம்… சொல்லிட்டு போறதுக்காகத்தான் வந்தேன்” என்றவன் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டும் அடுத்த சில நிமிடங்களில் இருவருமாக அவர்களது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம் அருகே வந்திருக்க…
வாகனத்தின் அருகே போய் நின்றவளாக…
“ஓய் ரிஷிக்கண்ணா… ஃபாஸ்ட்டா ரைட் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு… சந்து பொந்துல ஸ்லோவா கூட்டிட்டு வந்துட்டீங்க நான் என்ன கேட்டேனோ… அதைப் பண்ணல… சீட்டிங்… ஆனால் எனக்குப் பிடித்த ஏரியான்றதுனால தப்பிச்சீங்க…” என்று சலிப்பாகக் குறை சொன்னவளிடம்
“ஹலோ அம்மு… நீ சொல்றதை அப்டியே பண்ணிட்டா அதுல என்ன கிக்கு இருக்கும்..” என்றபடியே ரிஷி பைக்கில் ஏறி அமர… அந்த பைக்கின் பின் இருக்கையில் கண்மணியும் பொய்க்கோபத்துடன் அமரப் போக… வேகமாக அவள் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து… முன்னே வர வைத்தவன்…. இப்போது ஓட்டுனர் இருக்கையை விட்டு பின் இருக்கையில் தள்ளி அமர்ந்தவன்… அவளை முன்னால் அமரக் கை காட்டியவனிடம்… கண்மணி நம்ப முடியாத பார்வையை பார்க்க…
”ஓய் அம்மு… பறக்கிற மாதிரி ஃபீல் இருக்குன்னு சொன்னேல்ல… இப்போ நிஜமாகவே அப்படி ஃபீல் பண்ணப் போற… என்ன ஓகே வா” புருவம் உயர்த்தி ரிஷி கேட்க….
’ஓட்டலாமா வேண்டாமா…’ கீழ் இதழைக் கடித்தபடி யோசிப்பது போல பாவனை செய்தவளிடம்
“பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே”
வேண்டுமென்றே ரிஷி பாடலால் சீண்ட… அடுத்த நொடி
“மிஸ்டர் ரிஷிக்கண்ணா… மூவ் பேக்…” என்றபடியே… ஓட்டுனர் இருக்கையில் அமர… அமர்ந்தவளின் துப்பட்டாவை எடுத்து அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டபடி…. அதன் இரு முனைகளையும்… அவள் பின்னால் இருந்து கொண்டுவந்து தன் பின்புற முதுகோடு இழுத்துக் கட்டி முடி போட்டவனாக… அவள் பாதுகாப்பை உறுதி செய்தபடி… காற்றுக்கும் தடையிட்டபடி… நெருங்கி அமர்ந்தவனை… தன் கைகளால் பின்புறமாக வளைத்து அவன் நெற்றியில் முத்தமிட …. எந்த ஒரு பிரதிபலிப்பும் அவனிடம் இல்லை… மாறாக வழக்கமாக நடக்கும் அனிச்சை செயல் போல உள்வாங்கியவன்…
“இந்த சந்தோசம் இதுக்காகத்தான்… இப்படி ரிஷிக்கண்ணாவோட கண்மணியா எப்போதுமே இருக்கனும்… சரியா…” என்று செல்லமாக அதட்டல் போட்டவனிடம் சிறு குழந்தை போல தலை ஆட்டிய கண்மணி…
“ஸ்டார்ட் பண்ணவா…. உங்க முதலாளியோட… இல்லை இல்லை… இப்போதான் உங்க மாமனார் ஆச்சே… உங்க மாமனாரோட கட்டவண்டி …. என்னோட ஸ்பீடுக்குலாம் ஒத்து வருமா ரிஷிக்கண்ணா… ” நக்கலாகச் சொல்லி அவனைப் பார்த்தவள்… அவனின் முறைப்புக்கு பதிலாக கண்சிமிட்டியபடி… வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்ய… ரிஷி அவளை கட்டுப்படுத்தவில்லை…
கண்மணியை அவள் அறியாமலேயே மேலே மேலே பறக்க விட்டான் அவளது ரிஷி…
அர்ஜூன் போல் அவளைத் தங்கக் கூட்டில் அடைத்து வைக்கவும் இல்லை… மருதுவைப் போல சிறகை ஒடித்து சிறைப் பறவையாகவும் மாற்றவில்லை பாதுகாப்பு, அரவணைப்பு இவற்றை கண்ணுக்கு தெரியாத நூலாக அவளைச் சுற்றி கட்டியவன்… ஒரு முனையைத் தன் கையில் வைத்து கொண்டு…அவள் விரும்பியபடியெல்லாம் அவளை பறக்க வைத்தான்… வாழ வைக்க ஆசையும் பட்டான்…
அவளுக்குப் பிடித்த… ஆனால் மீண்டும் கால் வைக்கப் பயந்த அவளின் பழைய ஏரியாவிற்கு அவளை கூட்டி வந்தவன்… அவள் சிந்திய புன்னகையை தன் கண்களில் தேக்கிக் கொண்டாலும்… மனதிலோ மாலையில் கூம்பியிருந்த அவள் முகமே... அந்த முகத்தை அவன் மறக்கவில்லை… அதற்கு காரணமான அவன் தங்கை ரிதன்யா… அவள் செய்கை… நினைத்த போதே அவன் முகம் சினத்தில் சிவந்தது
இதில் எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை… அவள் கண்மணியை அறைந்தது யாருக்குமே தெரியாததுதான்… கண்மணி சொல்லாவிட்டால் இவனுக்குமே தெரியாமல் தான் போயிருக்கும்…
”இது எல்லாமே என்னால் தானே… எனக்காகத்தானே… இன்று இவள் தன் தங்கையிடம் பட்ட அவமானத்திற்கு எப்படி பதிலடி கொடுப்பது… என்ன செய்வது… யாரோவாக இருந்திருந்தால்… அவன் கதையையே முடித்திருப்பான்… தங்கையாக போய் விட்டாளே… ”
அனலில் தகித்த உணர்வு ரிஷிக்குள்… விடுபட முடியாமல் தவித்த போதே சரியாக அதே சமயம் சத்யாவிடமிருந்து… ”வெற்றி” என்பது போல கட்டைவிரல் உயர்த்திய ஸ்மைலி வந்திருக்க… குளிர்ந்தவனாக… ரிஷி தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்… அடுத்து ஆதவனுடனான தன் செயல்வரிசைகளை பட்டியலிட தயாராக ஆரம்பித்திருந்தான்….
அவள் அவன் அருகே இருக்க… தன் பலம் உணர்ந்து வெற்றிகளை கொய்தான்… இவளோ அவன் அருகில் தன் கனம் விடுத்து கவலை மறந்திருந்தாள்… இவன் அவளுக்காகவே… அவள் இவனுக்காகவே என அவதரித்திருக்கும் போது… ஆதவன்… விக்கி…. ரிதன்யா… இவர்களுக்கு இடையே வர முடியுமா… வந்தார்களா… வர முடிந்ததா… இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்…
/*பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை*/
Super