Hai friends..
/* அடுத்த எபி போட்டுட்டேன்... போன எபிக்கு கருத்துகளை பகிர்ந்து கொண்ட அன்ட் லைக் போட்ட அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்...
சாரி... கொஞ்சம் வேலைப்பளு அதிகம்... லேப்டாப் வேற லிமிட்டட் டைம்ல கிடைக்குது... நியூ இயர்ல... நெக்ஸ்ட் ஹேப்பி எபிசோட்ல அதாவது ரிஷி கண்மணி மீட் எபிசோட்ல பேசறேன்... இந்த எபி... எல்லோரையும் கவர் பண்ணி... முடிச்சுருக்கேன்... இதுக்கும் மேல பெருசா எழுத தோணல.... epi spell mistakes irunthaa please forgive me...
then இந்த எபில யூஸ் பண்ணிருக்க சாங்க்ஸ்... வீடியோவா போட்ருக்கேன்...
படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க….
Happy New Year 💐💐💐💕💕💕
நன்றி நன்றி
பிரவீணா..
அத்தியாயம் 65
ஆஸ்திரேலியா - டிசம்பர் 31, இரவு மணி 11:30
முகமெங்கும் இரத்த வரிகளோடு…. மூச்சுக் காற்றுக்கு திணறிக் கொண்டிருந்தார் நட்ராஜ்…
ரிஷி அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வதுதான் அவர் உயிர் வாழத் ஒரே தகுதி என்பது போல… இப்போது அவர் உயிர் அவன் கையில் மட்டுமே இருப்பது போல… தன் அருகே கிடந்த இன்ஹேலரைக் கூட எடுக்காமல் பிடிவாதமாக ரிஷியையே பார்த்துக் கொண்டிருந்தார் நட்ராஜ்….
ரிஷிகேஷோ இத்தனை நாள் அவர் மீது வைத்திருந்த மரியாதை… அன்பு … நட்பு.. இவையெல்லாவற்றையும் விட… மனிதன் என்பதை மறந்து அவர் துடிப்பை மிருக வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…
இதே போல் தான் என் மனைவியும் அவள் தன்னைக் காக்க… கடைசி நிமிடம் வரை உன்னிடம் போராடி இருப்பாள்…. உன் உதவி வேண்டி… என்ன செய்தாய் நீ… துரும்பைக் கூட அசைக்கவில்லையே… அவளாக அவளைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தும்… அப்போதும் போக முடியாமல்… மீண்டும் அவளை அந்த ராட்சசன்களின் கைகளில் சிக்க வைத்தாயே… துடித்துச் சாகு என்று அப்படியே கல் நெஞ்சக்காரனாக அமர்ந்திருந்தான் ரிஷிகேஷ்….
வெறித்தபடி அமர்ந்திருந்தவன் எத்தனை நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியவில்லை… அவன் மனைவியிடமிருந்து அழைப்பு வந்த போதுதான் அவன் கண்களின் மணியே அசைய ஆரம்பித்து இருந்தது…
இதுவரை வெறுமை மட்டுமே சூழ்ந்திருந்த அந்த கண்கள் மெல்ல கலங்க ஆரம்பித்திருந்தது…
என்னவென்று பேசுவேன் அவளிடம்… என்ன ஆறுதல் சொல்வேன்… இத்தனை நாட்களாக தன் வேதனைகளை எல்லாம் மறைத்து உனக்காக நான் இருக்கிறேன் என்று தாயாகத் தாங்கியவள் கடந்து வந்த வேதனைகளை தாங்க இயலாமல் இவன் துடிக்க ஆரம்பித்திருக்க…
“என் பொண்டாட்டி… என் பிறந்த நாளுக்கு கால் பண்றா… என்ன பேச… அவகிட்ட… ஏன் இப்படி பண்ணின நீ… “ துடித்துக் கொண்டிருந்த நட்ராஜை உலுக்கி பைத்தியக்காரன் போல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க…
குருதியோடு.... நட்ராஜின் கண்ணீரும் வழிய ஆரம்பித்து இருந்தது...
"எனக்கு அவகிட்ட பேசனும்... எப்போதும் போல பேசனும்... உனக்காக நான் இருக்கேன்னு சொல்லனும்... ஆனா முடியலையே..." ரிஷி புலம்ப ஆரம்பித்திருந்தான்... நட்ராஜைப் பிடித்தபடியே
மீண்டும் மீண்டும் கண்மணியின் அழைப்புகள்… இந்த முறை நட்ராஜின் அலைபேசியிலும்...
நட்ராஜ் அலைபேசி மற்றும் இவன் அலைபேசி என மாற்றி மாற்றி இரண்டு அலைபேசிகளிலும் கண்மணி அழைத்துக் கொண்டே இருக்க… இறுகியிருந்த அவன் மனமும்… கைகளும்… மெல்ல இளகத் தொடங்கி இருந்தன… நட்ராஜை விட்டு தள்ளி அமர்ந்தவன்... வேறு வழி இன்று போனை எடுத்து விட்டான்....எடுத்தவனுக்கு பேச முடியவில்லை தான்…
ஆனாலும்… அழைப்பை எடுத்து விட்டானே…. வாயைத் திறந்து பேச முயன்றான்தான் ஆனாலும் முடியவில்லை… எப்படியோ தன்னைச் சமாளித்தபடி…
“சொல்... லு...மா" வழக்கமாக அவன் விளிக்கும் வார்த்தையில் பேச ஆரம்பிக்க நினைத்தான்தான்… தொண்டையிலேயே சிக்கிக் கொண்ட வார்த்தைகள் கரையைக் கடக்கத் தவறி இருக்க…
“ரிஷிக்கண்ணா ஹேப்பி பர்த்டே டூ யூ அண்ட் ஹேப்பி நியூ இயர்” சந்தோஷமான உற்சாகமானக் குரலில் அவன் மனைவி… அவன் பிறந்த நாள் மற்றும் புது வருட வாழ்த்தை சொல்ல… அவன் கண்களின் கண்ணீர் குளம் கரை கடக்க ஆரம்பித்திருந்தது... கன்னம் தாண்டி வழிந்தோடி அவனது கழுத்தை நனைத்திருந்தது…
”என்ன பதிலக் காணோம்… 27 ஏஜ்ஜுக்கும் தனித்தனி விஷ்ஷஸ் வேணுமா ரிஷிக்கண்ணா” குறும்பாகக் கேட்ட கண்மணியின் குரலில் சந்தோசம்… மகிழ்ச்சி மட்டுமே… இவன் புறமோ வார்த்தைகளில் விளக்க முடியாத கனங்களின் மௌனம் மட்டுமே... ஊமையாக அழுது கொண்டிருந்தான்…
”ரிஷி… ரிஷிக்கண்ணா… ரிஷிம்மா” அவளின் ஒவ்வொரு அழைப்பிலும் இவன் மெல்ல மெல்ல அவளின் ரிஷியாக மாற ஆரம்பித்து இருக்க…
“தேங்க்ஸ்டா” என்று எப்படியோ முயன்று பேசி விட்டான் தான்… ஆனால் அவன் குரல்…
நைந்து ஒலிக்காமல் தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பாகப் பேச முயற்சித்தான்… அதிலும் தோல்விதான் கிடைத்தது
”உங்க ஊர்ல நியூ இயர் பிறந்திருச்சு ரிஷிக்கண்ணா… எனக்கு ஹேப்பி நியூ இயர் விஷ்… கிடையாதா... பிறந்த நாள்க்கு மட்டும் தானா... விஷ்.... சொல்லுங்க சொல்லுங்க... சீக்கிரம் சீக்கிரம்... ஃபர்ஸ்ட் விஷ்... உங்களோடதாதான் இருக்கனும்” என்ற போது…
“ஹேப்பி நியூ இயர்டா பே.. பி” என்று முடித்தபோது அவன் குரல் தழுதழுத்திருக்க… கண்மணி குரலில் நிதானம் வந்திருந்தது இப்போது
”என்னாச்சு ரிஷிக்கண்ணா… இப்போ எதுக்கு இவ்ளோ ஃபீல்… ஆறு வருசமா… இந்த சந்தோசத்தை எல்லாம் மிஸ் பண்ணிட்டீங்கன்னா… இனி எல்லாமே உங்களுக்கு நல்லதாவே நடக்கும்… அப்பா எங்க“ கேட்டபோதே
அவளுக்கு பதில் என்ன சொல்வது என்று இவன் யோசிக்க ஆரம்பித்த
“பார்ட்டில இருக்காரா… நீங்க தூரமா தள்ளிவந்து பேசறீங்களா" கண்மணியே அவனுக்கான பதிலைச் சொல்லி இருக்க
“ஹான்” ரிஷி வேகமாகத் தலை ஆட்ட
”ஓ… சரி… சரி நீங்களும் போங்க…. என்ஜாய் டிஸ்டர்ப் பண்ணலை… எனக்கு ஒரே ஒரு கில்டி ஃபீல் தான் ரிஷி…. இந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்லாம் கொடுத்து பழக்கமில்லை… உங்க மாதிரி நான் ஏதும் யோசிக்கலை… இவ்ளோதான் எனக்குத் தெரிஞ்சது… அடுத்த வருசம்... கண்டிப்பா நான் ரிஷியோட கண்மணியா ட்ரை பண்றேன்...”
அடுத்து அவளோ ஏதோ பேச ஆரம்பித்திருந்தாள்… அவள் பேசியவற்றுக்கு “ஹ்ம்ம்…” மட்டுமே போட முடிந்திருக்க.... வார்த்தைகள் மறந்து போயிருந்ததோடு… கவனமும் சிதறி இருந்தது…
கண்மணி பேசி முடித்த போது….
“சரியா… அத்தைகிட்ட ஒழுங்கா பேசுங்க… “ என்றபடி… நிதானித்தவள்
“அப்பாவை உங்கள நம்பித்தான் அனுப்பி இருக்கேன் ரிஷி… அவரப் பார்த்துக்கங்க… பார்த்துப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்றவள்… குரலில் அழுத்தம் மட்டுமே
“லைன் ஒழுங்கா இல்லைனு நினைக்கிறேன்… நான் அப்புறமா பேசவா… நீங்க பேசுறது ஏதுமே கேட்க மாட்டேங்குது ரிஷிக்கண்ணா… என்னோட வாய்ஸ் கேட்குதா…” என்று சந்தேகமாக இழுத்தவளிடம்
அதுதான் சாக்கென்று… சட்டென்று கட் செய்திருந்தான் ரிஷி… இன்னும் சில நொடிகள் தாமத்தித்திருந்தால் கண்மணி கண்டுபிடித்திருப்பாள்… அவளும் உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டும் என்றே நினைத்தான் ரிஷி… அவள் அடிக்கடி சொல்வது போல எமோஷனல் கண்மணி… எதையும் ஒழுங்காக யோசிக்க மாட்டாள்…. இன்று தெரிந்தது…
ரிஷியை… அவன் குரலை கண்டுபிடிக்க முடியாமல்… முதன் முறை தவறி இருந்தாளா கண்மணி???….
போனையே வெறித்தவனுக்கு… கண்மணியை எப்படி எதிர்கொள்வது… ஒன்றுமே புரியவில்லை… அவனுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது… தன்னை நிலைப்படுத்திக் கொள்ள… நட்ராஜ் மூலம் தான் கேட்ட அனைத்தையும் தனக்குள் கிரகித்துக் கொள்ள…
இதில் இவன் செய்த முட்டாள் தனம் வேறு…… கண்மணியை இங்கு வரச்செய்ய வேண்டும் என்று.. கைகளைப் பார்த்து… தன்னையே நொந்து கொண்டவனுக்கு… கண்மணியை பற்றி…. அவளின் கடந்த காலம் பற்றி நட்ராஜ் சொன்னது ஏதும் தன் நினைவுகளிலேயே வராமல் இருக்க பெரும்பாடு பட்டான் தான் ஆனால் முடிய வில்லையே… பெரும் வலியோடு.. கண்களை மூடி அமர்ந்திருக்க… நட்ராஜின் முகமும் வந்து போனது…
கண்மணியிடமும் கார்லாவைப் பற்றி சொல்லி இருக்கின்றேன்… என ரிஷி சொன்னதாலோ என்னவோ… இல்லை கண்மணி கணவனிடம் தன்னைப் பற்றி அனைத்தும் ஓரளவு சொல்லி இருந்திருப்பாளோ என எண்ணியே… நட்ராஜ் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்… ஆனால் ரிஷி கண்மணியைப் பற்றி எதையும் தெரிந்திருக்கவில்லை என்று தெரிந்த போதோ… அதற்கு மேல் அவரும் எதையும் மறைக்காமல் அனைத்தையும் சொல்லி முடித்திருக்க… ரிஷியின் வழக்கமான ஆக்ரோஷமான நடத்தை… நட்ராஜிடமும் வந்திருந்ததுதான்…
ஆனால் அவரை அவனால் அடிக்க முடியவில்லை… அதே நேரம் அவரை அப்படியே விடவும் முடியவில்லை… சுவரோடு அவரை சாய்த்து… இறுக்கி வைத்திருந்தவன்…. ஒரு கட்டத்தில் அவரை தன் கண் பார்வையில் இருந்து விலக்க நினைத்தவனாக தள்ளி விட… நட்ராஜ் அங்கிருந்த மேஜையின் மீது மோத… இவனின் உச்சக்கட்ட ஆக்ரோஷமும்…. அவரின் தடுமாறிய நிலையும்… இன்னுமே நிலைமையை மோசமாக்கி இருந்தது…
அவர் நெற்றியில் இருந்து… இப்போதும் குருதி வழிந்து கொண்டிருக்க… இப்போதும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி…
யாரோ ஒரு நட்ராஜாக இருந்து போது கூட… நடுரோட்டில் அவரைப் பார்த்தபோது... அப்படியே விட முடியாமல்… அவரைக் காப்பாற்ற துடித்தவன்… இன்று அவர் தன் எல்லாமுமாக இருந்த போது முடியாமல் போனது ஏன்?… கண்மணியின் கணவனாக மட்டுமே தான் மாறி போனது ஏன்… மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்து கொண்டிருந்தான்… ரிஷிகேஷ்…
---
சென்னை டிசம்பர் 31 மாலை 7 மணி...
“ரித்வி… லைன் ஒழுங்காவே கிடைக்கலை … ஆனால் விஷ் பண்ணிட்டேன்..” என்றவள்…
“அத்தை… நான் காலையில நேரா ஃபங்க்ஷனுக்கு வந்துறேன்…. ரிஷிக்கு மறக்காமல் 12 மணிக்கு போன் பண்ணுங்க… கண்டிப்பா எடுப்பார்…. உங்க எல்லாரையும் ஒரே இடத்தில் பார்த்தால்... ரொம்ப சந்தோசப் படுவார்… அதை விட பெரிய நியூ இயர் விஷ் அவருக்கு இல்லை... அப்புறம்... சந்தோசமா பேசுங்க... சென்டிமென்ட் ஃபீல்லாம் கொட்டி... அவர மூடை ஸ்பாயில் பண்ணிறாதீங்க...”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… மகிளாவின் கணவன் பிரேம் அங்கு வந்து சேர… வரவேற்றவள்…
“நீயும் வரலாமே கண்மணி…” என பிரேம் அழைக்க…
“நான் மார்னிங்க் வர்றேனே… எங்க பாட்டி வேற ஊர்ல இருந்து வந்திருக்காங்க…” காந்தம்மாள் எதார்த்தமாக வந்திருக்க… பாசமான பேத்தி போல நடித்து தப்பித்திருந்தாள் பிரேமிடமிருந்து…
இலட்சுமியையும்… ரித்விகாவையும் பிரேமோடு வழி அனுப்பி வைத்தவள்… தன் அப்பா வீட்டுக்குள் நுழையப் போக... காந்தம்மாள் பாட்டியும் வெளிய வர...
வந்த காந்தம்மாளை நோக்கி…
“கெழவி நீ இன்னும்…. கிளம்பலையா… கொட்டிக்கிட்டாச்சு… துட்டும் வாங்கியாச்சு… அப்புறம் என்ன… உன் பாசக்கார மவனும் இல்லை… வண்டி கிளம்பட்டும்... நானும் வெளில கிளம்புறேன்... வூட்ட பூட்டனும்...” என்ற போதே
“இது என் மகன் வூடு… நான் இருப்பேன்... எனக்கு எப்போ போகனும்னு தெரியும்… நீ தனியா இருந்தேன்னு தெரிஞ்சால் என் புள்ள என்னத்தான் திட்டுவான்… வந்தது வந்துட்டேன்… நாளைக்குத்தான் போவேன்… ” என்ற போதே…
“அப்போ நீ... போக மாட்ட நீ… ரொம்ப தைரியம் வந்துருச்சு உனக்கு…. ரிஷி ஒருநாள் உன்னை தங்க விட்டதுல… இவ்ளோ ஏறிருச்சு…. பார்த்துக்கறேன் உன்னை…” என்று கந்தம்மாளைப் பார்த்து முறைத்தவள்…
”நான் சமச்சேன்… நீ டெட்பாடிதான்… உன் புள்ள வேற ஊர்ல இல்லை… கொள்ளி போட உடனே வர முடியாது…. பொழச்சுப் போன்னு விடறேன்… அப்புறம் நைட் சாப்பாடு நீயே சமச்சு வை…” என்றபடி தன் பைக்கை எடுக்க பைக் ஸ்டாண்டிற்குப் போனவள்.. அதே வேகத்தில் மீண்டும் திரும்பி வந்தவள்... காந்தம்மாளை மோதுவது போல வேகமாக வந்து காந்தம்மாளை பயமுறுத்தி பின் பிரேக் போட்டவள்
“இந்தாரு… எனக்குப் பிடிச்ச மாதிரி சமச்சு வைக்கனும்… கருவாடு… கறின்னு உனக்குப் பிடிச்சதை ஏதாவது பண்ணி வச்சுருந்தா… கெழவி... செத்த நீ…” என்றபடி கண்மணி… வெளியேறி இருக்க…
“அடங்காபிடாரி… எத்தனை மணிக்கு வருவேன்னு சொல்லிட்டுப் போறாளா… யார் பேச்சையும் கேட்காமல்… அடங்காமல் ஆடறதை இன்னமும் நிறுத்தலையா நீ… என் புள்ளதான் பாவம்னா… அந்த பையன்... அதுவும் உன்கிட்ட வந்து மாட்டிக்கிச்சு… நீ என்ன எனக்கு ஆர்டரு போடறது… கருவாட்டுக் குழம்புதான்.. நீ பட்டினி தாண்டி…” என்றவாறு… காந்தம்மாளும் அவளுக்கு சரிக்குச்சரி போட்டி போட்டவாறு உள்ளே போயிருந்தார்…
---
மருத்துவமனையில் நட்ராஜ் தலைமாட்டின் அருகில் அமர்ந்திருந்தான் ரிஷி… நேற்று அவன் மருத்துவப் படுக்கையில் இருக்க… நட்ராஜ் அவன் அருகே விழித்திருந்தார்… இன்று அவர் படுத்திருக்க.. இவன் அருகே அமர்ந்திருந்தான்…
அவனால் நட்ராஜை வெறுக்க முடியவில்லையே… என்னதான் கோபம் இருந்தாலும் தள்ளி வைக்க முடியவில்லையே… தந்தைக்குச் சமம் என்று தான் நினைத்திருந்தான்… இன்றுதான் புரிந்தது… தந்தையை விட அவர் மேல் அதிக பாசம் வைத்திருக்கின்றான் என்பதை…
தலையில் போடப்பட்டிருந்த கட்டை தடவிப் பார்க்க… நட்ராஜின் கண்கள் வலியால் சுருங்கி… மீண்டும் மூடிக் கொண்டது… கோபத்தில் அவரைத் தள்ளி விட்ட முட்டாள் தனத்தை நினைத்து தன்னையே நொந்து கொண்டவன்… அவர் கண் விழிக்கும் போது அவர் பார்வையை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் மனம் குமுறியவனுக்கும் இப்போது ஓரளவு தெளிவு வந்திருந்ததுதான்… மணியைப் பார்க்க….
அதிகாலை 5 மணி… அறையை விட்டு வெளியே வந்து அமர்ந்தவனுக்கும்… களைப்பாக இருக்க… அங்கிருந்த சுவரில் சாய்ந்தபடி கண்களை மூடியவனுக்கு… உறக்கம் என்பதுதான் வரவில்லை…
சத்யாவுக்கு அழைத்தவன்...
"அந்தத் துரையை உயிர மட்டும் விட்டுட்டு... என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுங்க..."
"என்னாச்சு RK... குரல் ஒரு மாதிரியா இருக்கு..."
"என்னாச்சு என்னாச்சுனு யாரும் என்கிட்ட கேட்காதீங்க... உயிரோட இருக்கேனே... அது பத்தாதா... நல்லாத்தான் இருக்கேன் நான்... நல்லாத்தான் இருப்பேன்" என்று கத்த ஆரம்பித்திருந்தவன்... இருக்குமிடத்தின் நிலை உணர்ந்து
"ப்ச்ச்ச்... சத்யா... சாரி... அந்த துரை...என் கையாலதான் அவன் உயிர் போகனும்... அவனை விட அந்த மருது... அவன நான் மட்டுமே அணு அணுவா கொல்லனும்... துரை இங்க இருக்கான்ல ... அவனும் வந்து சேருவான்..." என்று சத்யாவிடம் பேசி விட்டு வைத்தவன்
எண்ணங்களிலும்... நினைவுகளிலும்... கண்மணி கண்மணி… அவள் மட்டுமே… அவள் நினைவுகள் மட்டுமே…
அன்றைய நாளிதழில் குறிப்படப்பட்டிருந்த... அவள் பரிசு வாங்கிய கட்டுரையின் பெயர்... "ஃபீனிக்ஸ் பறவைகளாய் நாங்கள்" தலைப்பும் கருத்தும் இன்று விளங்கியது...
அவள் கடந்த காலம் மட்டுமில்லை... கண்மணியே... நட்ராஜின் மூலம் அறிந்த குண இயல்புகளே மிகப் பெரிய பயத்தைக் கொடுத்திருந்தன... அவனது மூளையில் ஒவ்வொரு நரம்புகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன...
"she has POLYMATH quality... by birth she has this quality"
"இந்த குணமே அவளை சீக்கிரமா நார்மலாக்கும்"
"Capable for handling and dealing the complex matters as easily is her big advantage but... She has a flaws in handling easy things"
"எழுதச் சொல்லுங்க... ஆர்ட்டிக்கிள்... ஸ்டோரி... எதையாவது... அவளால ஈஸியா விசயங்களை கனெக்ட் பண்ணி... அனலைஸ் அன்ட் கரெக்ட் பண்ற குணம்... இமாஜினேஷன் சிச்சுவேஷன்ஸ் ஹேண்டில் பண்ண ஆரம்பிக்கிற பழக்கம்... அவளைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தும்... யாரும் அவளை மாற்ற முடியாது... ஆனால் அவளாகவே மாறிக் கொள்வாள்... "
சாதாரண பள்ளி, கல்லூரி கணிதம்... அதன் சிக்கல்களே சமாளிக்கும் திறன் இல்லாத தான்... கண்மணியை... சிக்கல் நிறைந்த அவள் குண இயல்புகளை... எப்படி சமாளிக்கப் போகிறேன்... தலையைப் பிடித்துக் கொண்டான் ரிஷி சமாளிக்கும் வழி தெரியாமல்… புரியாமல்…
இதை எல்லாம் விட... இதோ இன்னும் சற்று நேரத்தில் இந்தியாவில் புத்தாண்டு ஆரம்பிக்கப் போகிறது... மனைவி இப்போது மீண்டும் பேசுவாளே… எப்படியோ முதலில் பேசி சமாளித்து விட்டோம்… இப்போது அவள் போன் செய்யும் போது எப்படி பேசப் போகிறோம்… கண்டுபிடித்து விடுவாளோ… இந்த பயமே அவனைக் கொல்லாமல் கொல்ல…
கதறி அழ வேண்டும் போல் இருக்க… சாயத் தோள்தான் இல்லை… இத்தனை நாட்களாக மனைவியிடம் தன் சோகங்களை எல்லாம் கொட்டித் தீர்த்து ஆறுதல் தேடியவனுக்கு… இன்று மனைவியே… அவனின் மிகப் பெரும் துயரமாக மாறி இருக்க… யாரைத் தேடுவான் தன் சோகங்களை சொல்லி அழ… மனதின் கனத்தை தாங்க முடியவில்லை ரிஷியால்… பைத்தியம் பிடித்துவிடும் மனநிலையில் இருக்க... வேறு வழி இல்லாமல்... தனது அலைபேசியில்... வைத்திருந்த... பாடல்வரிசைகளில் 'கண்மணி' என்று பாடல்வரிகளை அடங்கிய பாடல்களின் தொகுப்பை ஓட விட... அந்த இசையில்... பாடல் வரிகளில்... மெல்ல மெல்ல தன் மனதை கரைய வைத்துக் கொண்டிருக்க
"காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்...
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்...
உனக்கே உயிரானேன்...
எந்நாளும் எனை நீ மறவாதே...
நீயில்லாமல் எது நிம்மதி...நீதானே என் சந்நிதி"
கேட்டவன்.. அதற்கு மேல் அந்தப் பாடலை கேட்கப் பிடிக்காமல் அடுத்து எனப் போக
"ஓ பாப்பா லாலி... கண்மணி லாலி..
பொன்மணி லாலி... பாடினேன்... கேளடி
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி...
ஏன் செவ்விழி கலங்குது
பூந்தென்றலில் கொதித்தா குளிர்ந்ததா...
இதை காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே "
என அடுத்து ஆரம்பித்திருக்க... இவன் இத்தனை நாள் கேட்ட பாடல்கள் தான்... இன்று அவனால் கேட்க முடியாமல்... கண்களில் நீர் வழிய ஆரம்பித்திருக்க... அதே நேரம் அவனது அலைபேசியும் அழைக்க... கண்களை திறக்கவில்லை அவன்... யாரென்று தெரியாதா... தன்னைத் திடப்படுத்திதான் ஆக வேண்டும்... இயல்பாகத்தான் பேச வேண்டும்... என தன்னைத் தயார் செய்து... கண்களைத் அவசர அவசரமாக துடைத்தபடி... பர பர வென்று தன்னைச் சரியாக்கிக் கொண்டவன்...
"சொல்லும்மா" என்ற போதே...
"ஹேப்பி பேர்த் டே ரிஷி மாமா.... ஹேப்பி பேர்த் டே அண்ணா... ஹேப்பி பேர்த்டே ரிஷிக்கண்ணா... ஹேப்பி பேர்த்டே ரிஷி " கோரஸாக குரல்கள் ஒலிக்க... திடுக்கிட்டு கண் திறக்க...
"வீடியோ கால்... வீடியோ கால்..." என ரித்விகாவும்... ரிதன்யாவும்... விடாமல் தொடர்ந்து கத்த... அந்தக் கத்தலில் வேகமாக போனை எடுத்தவன்... வீடியோ காலையும் ஆன் செய்துவிட்டான்...
நெற்றியில் இப்போதும் பிளாஸ்திரி இருந்ததுதான்... நெற்றியின் காயத்தை மறைக்கும்படி கேசத்தைச் சரி செய்துவிட்டுதான் வீடியோ மோடுக்கு மாறி இருந்தான்... கண்கள்... ஒரு முறை அனைவரையும் சுற்றி வந்து.. கடைசியாக நீலகண்டனிடம்... முடிந்திருக்க... ரித்விகா தான் முதலில் பேசினாள்...
"அண்ணி சொல்லையா... ஃபர்ஸ்ட் ப்ரெஃபெரென்சா அண்ணிக்கு ஆஸ்திரேலியா டைம் கொடுத்தாச்சு... எங்களுக்கு இந்தியா டைம்... மகிளாக்கு வளைகாப்பு நாளைக்கு... சோ எல்லாரும் டேரா இங்கேதான்... அண்ணி நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டாங்க" கடகடவென செய்தி வாசிப்பது போல ரித்விகா பேசி முடித்திருக்க... இப்போது ரிஷிக்குப் புரிந்தது... கண்மணி சொன்ன போது கவனிக்காமல் விட்ட வாக்கியங்கள்...
தன் குடும்பம் மொத்தமும்... அனைவரின் முகத்திலும் சந்தோசம்... இதற்காகத்தானே இத்தனை நாள் ஆசைப்பட்டான்... தன் சோகத்தை எல்லாம் தனக்குள்ளே மறைத்தவனாக... முகம் மலர்ந்தவனாக... தன் அன்னையைப் பார்க்க... இலட்சுமியிடம்
"கண்மணிதான் போகச் சொன்னா" என்று தயங்கிய போதே...
"என்கிட்டயும் சொன்னாம்மா" அவரைச் சமாளித்தவன்... மகிளா பிரேம் தன் அத்தை என அனைவரிடமும் பேசிமுடித்தவன் நீலகண்டனிடம் வந்து நிற்க... அவரும் வாழ்த்தினார்... 'நன்றி' என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டவன்... வேறெதுவும் பேசாமல்... தன் பார்வையை அவரிடமிருந்து திருப்பி தன் அன்னையிடம் மாற்ற...
"ரிஷி..." என்ற நீலகண்டனின் குரலில் எரிச்சல் வந்தாலும் அடக்கிக் கொண்டவனாக...
"சொல்லுங்க" என்றபடி அவரைப் பார்க்க...
"எனக்கு உன் மேல பாசம் இல்லைனு இல்ல... இப்படி இருக்கியேன்ற வருத்தம்... அதை எப்படி காட்றதுன்னு தெரியாமல்... எப்படி எப்படியோ உன்கிட்ட நடந்துகிட்டேன்"
ரிஷி மனதுள் நொந்தவனாக சிரித்தவன்... பதிலேதும் சொல்லவில்லை.... தன் அன்னையிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான்
"அம்மா... மாமாக்கு உடம்பு சரி இல்லை... ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.. பயப்பட்ற மாதிரி இல்லை... வழக்கமா அவருக்கு வர்றதுதான்... கண்மணிக்கு தெரியாது... " என்றவன்...
"நான் வைக்கவா... கொஞ்சம் டையர்டா இருக்கு" என்ற போதே...
"அண்ணா... அண்ணா" என்று ரித்விகாவும் ரிதன்யாவும்... வேகமாய் அவனை இடைமறிக்க... போனை வைக்காமல் அவர்களைப் பார்க்க
"சர்ப்ரைஸ்... அன்ட் கிஃப்ட் ஃபார் யூ.... 5..4..3..2..1 என்றபடியே.. விக்கியை அவன் கண் முன் நிறுத்த...
ரிஷியின் கண்கள் பனித்தன... விக்கிக்குமே...
....
விக்கி ரிஷி மட்டுமே... மற்ற அனைவரும்... அவர்களுக்கான தனிமையைக் கொடுத்து விட்டு அவர்களை விட்டுச் செல்ல...
"எப்டிடா இருக்க..." விக்கிதான் பேசிக் கொண்டிருந்தான்... ரிஷி வாயைத் திறக்கவில்லை...
"பேசுடா... " என்ற போதும் ரிஷி வாயைத் திறக்காமல் இருந்தவன்...
"வாய மூடாமல் பேசுவியேடா... பேசித் தொலையேண்டா... கேட்கிறேனே... பதில் சொல்றியாடா அதுக்கு" வழக்கமான விக்கியாக ரிஷியிடம் மாறி இருக்க...
"பதில் வேணுமா... நல்லா இல்லை.. நான் நல்லாவே இல்லைடா... போதுமா" கத்த ஆரம்பித்தவன்... அடுத்த நிமிடமே
"இப்பவே உன்னை பார்க்கனும் போல இருக்குடா... என்னைப் பார்க்க வர்றியாடா... எனக்கு அழனும் போல இருக்குடா... மனசு விட்டுக் கதறனும் போல இருக்குடா... என்ன ஏதுன்னு கேட்காத... ஆனால் உன்கிட்ட மட்டுமே அழனும் போல இருக்கு..." என்றவனை... அதிர்ந்து பார்த்தபடி இருந்தான்... அவனது தோழன் விக்கி...
.....
Lovely update vikikum