/* Hai friends...
எனக்குமே இந்த எபி எழுத பிடிக்கலைதான்... எப்படியோ எழுதிட்டேன்... என்னால முடிந்த அளவு குறைந்த அளவு அழுத்தத்தில சொல்ல முடியுமோ.. அந்த அளவு.. சொல்லி முடிச்சுருக்கேன்...
*/
அத்தியாயம் 64-தொடர்ச்சி
எந்தச் சூழ்நிலையிலும் தான் தடுமாற மாட்டோம் என்று உணர்ந்து கொண்டதாலோ என்னவோ… அறையை விட்டு வெளியேறி வந்தவன் மனதில் அவனை நினைத்து பெரிய கோபம் எல்லாம் இல்லை… மாறாக அவனுக்குள் ஒரு விதமான நிமிர்வு வந்திருந்தது… அதே போல மகிளா விசயத்திலும் தெளிவான முடிவெடுக்க வேண்டும்… என எதை எதையோ யோசித்தபடி… மூடப்பட்டிருந்த அறைகளின் கதவுகளைப் பார்த்தபடியே அந்தக் காரிடரில் நடந்து வந்து கொண்டிருந்தவன் கண்களில்… 771 – எண் அறை பட்டது…
மூடி இருந்த அறைக் கதவைத் தட்ட நினைத்தவன்… என்ன நினைத்தானோ… அவனின் நண்பனின் அலைபேசிக்கு தான் போவதாக செய்தியை மட்டும் அனுப்பி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்த போதுதான் அவன் கண்ணில் பட்டான்…
சில மணி நேரங்களுக்கு முன்… அந்தக் வெளிநாட்டு சிறுமியின் அருகில் நின்றவன் இவன் தானே…
”ப்ச்ச்… இவனுங்க மட்டும் எதுக்கு வந்துருக்க போறானுங்க…” தனக்குள் சொல்லிக் கொண்டே… அந்த அறையை கடக்க முயல… அவனால் முடியவில்லை…
“போகாதே” உள்ளுணர்வு சொல்லிய குரலில்… முதல் முறை நடுங்கியது… அவன் தேகம்… அவன் அறையில் பெண் வந்து சென்ற போது கூட அவன் இவ்வாறு நடுங்கவில்லை… அவன் மனதில் மின்னல் போல் தோன்றி மறைந்த அந்த வெளிநாட்டுச் சிறுமியை மீண்டும் நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்க…
”இந்த கிளப்… எல்லாவற்றையும் கண்காணிக்குமே… அவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை…”
என்னதான் தனக்குத்தானே தேற்றிக் கொண்டாலும்… மூடிய அறையின் மறுபுறம் அவனை உறுத்த… அந்தச் சிறுமி மட்டுமே… அவன் எண்ணங்களில்
அவனால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை…
கைகள் இப்போது அவனையுமறியாமல் உயர்ந்து அந்த அறைக் கதவைத் தட்ட… யாருமே திறக்கவில்லை… மீண்டும் தட்ட… தட்டிக் கொண்டே இருக்க… எதிர் எதிர் அறைகள்… அருகருகே இருந்த அறைகளில் இருந்தவர்கள் கூட அவர்கள் அறைக் கதவைத் திறந்து இவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு மீண்டும் மூடிக் கொள்ள… ரிஷி இப்போது மீண்டும் வேகமாக அறைக்கதவை தட்ட… இம்முறையும் திறக்கவில்லை என்றால்… கிளப்பின் அலுவல் அறைக்குச் சென்று முறையிட வேண்டும் என்று நினைத்தபோதே…
உள்ளே சென்றவன் வரவில்லை… அவனோடு பார்த்த மற்றொருவன் வர… வந்தவனும் ஹிந்தியில் இவனிடம் பேச கத்த ஆரம்பித்து இருக்க…
ரிஷியின் பார்வை… அவசர அவசரமக அந்த அறைக்குள் வட்டமடிக்க ஆரம்பித்து இருந்தது… இவன் பார்த்த போது உள்ளே நுழைந்தவன் மேல் சட்டையின்றி கட்டிலில் அமர்ந்திருக்க… அங்கு பெண் என்ற வார்த்தைக்கே இடமே இல்லாமல் இருக்க… ரிஷியின் மனம் ஏனோ இன்னும் சமாதானம் அடைய மறுத்ததுதான்… அதே நேரம்… ரிஷியின் சட்டையை பிடித்திருந்தான்… அறைவாயிலில் இருந்தவன்…
அந்தக் கைகளில்… “ம*ரு*து*ரை…” எனப் பச்சை குத்தி இருக்க… முதன் முதலாக ரிஷிக்குமே அப்போதுதான் புரிந்தது… அவர்கள் யாரென புரிந்ததால் இப்போது ஓரளவு சமாதானம் அடைந்த பாவனையை முகத்தில் கொண்டு வந்தவன்…
”சாரி பாஸ்… டிஸ்டர்ப் பண்ணதுக்கு…” என்றபடியே விடைபெறும் நோக்கில் அவனிடம் கை நீட்ட… இப்போது துரையும் கொஞ்சம் தளர்வாகி இருக்க… அந்த நொடியை தனக்குச் சாதமாக்கிக் கொண்டு… ரிஷி அந்த அறைக்குள் நுழைந்திருந்தான்…
துரையும் இதை எதிர்பார்க்கவில்லை… உள்ளே இருந்த மருதுவும் எதிர்பார்க்கவில்லை… ரிஷியின் இந்த அதிரடி நடவடிக்கையை… உள்ளே நுழைந்த தன்னைத் தாக்கிய அவர்களின் தாக்குதலை தடுத்தபடியே… ஒவ்வொரு இடமாக அவன் தேடியபடியே… குளியலறைக் கதவைத் திறக்க…
ரிஷியின் கண்கள் நிலை குத்தி நின்றிருந்தது… அவன் கண்ட காட்சியில்… அவனால் நிற்கக் கூட முடியவில்லை… நிற்க முடியாமல் அவனுக்கே நடுங்க ஆரம்பித்திருக்க…
அந்தக் குழந்தை இவனைப் பார்த்த பார்வை…
அவனும் இவர்களோடு சேர்ந்து வந்த இன்னொரு காமுகனே… அதைத்தான் அந்தப் பெண்ணின் பார்வை உணர்த்தியது…
இவன் அவளை நோக்கி நடக்க முயல… அந்தச் சிறுமி நடுங்கியதில் அவள் தேகம் மொத்தம் குலுங்க ஆரம்பிக்க…. அப்போதுதான் ரிஷி அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தான்… அவனது கண்கள் முழு போதையில் காட்சி அளித்திருக்க… நடந்தது கூட தடுமாறித்தான்…
எப்படி அவனை அந்தக் குழந்தை நம்பும்….
ரிஷிக்கே ஆதியும் அந்தமும் நடுங்க…. என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாத நிலை… ஆனாலும் அவன் இப்போது உறுதியாக இருக்க வேண்டிய நிலைமை… வேகமாக அவள் அருகே போனவனை… பயந்து பார்த்தபடியே இருந்த அந்தச் சிறுமியால்… அந்த இடத்தை விட்டு… நகர்ந்து செல்லக் கூட முடியாத நிலை… மெல்ல மெல்ல கண்கள் சொருக ஆரம்பித்திருக்க…
”Baby… Don’t Scare… don’t lose your hope baby…” என அவளிடம் பேசியபடியே… அவள் அருகே அமர்ந்தபடியே. வேகமாக தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து…. தெளிய வைக்க… தன்னை அணைத்திருந்தவனின் இதயத்துடிப்பின் அதிவேகமான படபடப்பை… அந்தக் குழந்தையால் உணர முடிய…
”இவன் தன்னைச் சீரழிக்க வந்த காமுகன் இல்லை…. காக்க வந்த ஆபத்பாந்தவன்…”
அவள் கண்களில் ஒளி வந்திருந்தது… கைகளை அவனை நோக்கி குவிக்கத்தான் நினைத்தாள்… ஆனால் அவள் உடல் எதற்குமே அவள் பேச்சைக் கேட்கவில்லையே….
“இனி இறந்தாலும் கவலை இல்லை” நம்பிக்கையோடு மெல்ல மெல்ல கண்களை மூடியவளின் நிலை பார்க்க சகிக்கவில்லை ரிஷிக்கு…
”என்னடா… கொடுத்து… இப்படி பண்ணி வச்சுருக்கீங்க… ஏண்டா“ அவன் கதறின கதறலைக் கேட்டபடியே… ரிஷியின் கைகளில் துவண்டு மயங்கி இருந்தாள் கார்லா… மூடியிருந்த அவள் கண்களின் கண்ணீர் கோடுகள் ரிஷியின் கரங்களோடு இணைந்து தன் பயணத்தை நிறைவு செய்திருந்தது…
அவள் அணிந்திருந்த ஆடைகளில் பெரிதும் வித்தியாசம் இல்லாமல் இருக்க… அந்தச் சிறுமிக்கு ஒன்றும் ஆகவில்லை… ஆகி இருக்கக் கூடாது… தனக்குள் சமாதானம் செய்து கொண்டான்தான்… ஆனால் சற்று தாமதமாக வந்திருந்தாலும்… யோசிக்காமால்... வேகமாக அவளைக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்தியவன்… அவளது உடைகளைச் நன்றாகச் சரி செய்து போர்வையை போர்த்தியபடி காவல் துறைக்கான அவசர எண்ணுக்கு அழைக்க ஆரம்பித்திருந்தான்…
துரை அறை வாயிலில் தான் இப்போதும் இருந்தான்… ரிஷி தப்பித்து போக முடியாதவாறு….
ரிஷி செய்ததை எல்லாம்… பார்த்த பார்த்துக் கொண்டிருந்த மருதுவும் துரையுமோ நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டனர் அவர்களுக்குள்
“தமிழா… போலிஸ்ல மாட்டிக் கொடுக்கப்போறியா….”
“எங்களுக்கு ஜெயில் புதுசு இல்லை…. ஆனால் உனக்கு… யோசிச்சுக்கோ… அவ சாப்பிட்டு இருக்கிற ட்ரக்ஸ் பவர்ஃபுல்… கொஞ்சம் அதிகமாக வேற உள்ள போயிருக்கு… பொழைக்கிறதுக்கு சான்ஸ் இல்லை… ஆனால் நீயும் மாட்டுவ… நீயும் எங்க ஆளுதான்… மூணு பேரும் சேர்ந்துதான் இதை எல்லாம் பண்ணினோம்னு சொல்வோம்… இதெல்லாம் இங்கு சகஜம்…”
சொல்லி முடிக்கவில்லை… துரை கீழே விழுந்திருக்க… அவனைத் தூக்கி நிறுத்தியவன்… அவன் கைகளைக் காட்டியபடி
“மருது துரை… அதான் கருமம் பிடிச்ச ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்கள்ளடா… அப்புறம் ஏண்டா… அப்பாவி குழந்தையை” என்ற போதே…
“என் பார்ட்னரை… சேட்டிஸ்ஃபை பண்ண வேண்டாமா” துரை மருதுவைப் பார்த்த காதல் பார்வையில் ரிஷியே அதிர்ந்து தான் போனான்…
”என் பார்ட்டனர் ஆசைப்பட்ட பொண்ணு ஞாபகம் வரும் போதெல்லாம் என் பார்ட்னருக்கு நான் கிஃப்ட் கொடுப்பேன் ” துரை சொன்ன போதே மருதுவைத் திரும்பிப் பார்க்க… அவன் நெஞ்சில்… ”மருது மணி”… எனப் ’ம’ எழுத்தை பொதுவாக வைத்து இதய சின்னத்துடன் பச்சைக் குத்தி இருக்க… அவன் மேலேயே காறி உமிழ்ந்திருந்தான் ரிஷி
“நா*… அதுதான் உனக்கு இன்னொரு நா* இருக்கே… அதுகிட்டயே போக வேண்டியதுதானே…” திட்டும்போது அவனைச் சார்ந்த பெண்ணையும் சாடும் வழக்கம் உள்ளதே... ரிஷியும் விதிவிலக்கல்ல... திட்டி விட
“யாரைப் பார்த்து நாய்னு சொன்ன… என்னைய என்ன வேணும்னாலும் சொல்லு… நான் நாய்தான்… என் ’மணி’ யப் பற்றி ஏதாவது சொன்ன” சொன்னபடியே ரிஷியை நோக்கி பாய்ந்திருக்க… துரை வெறித்தான் மருதுவை…
புதிதாக வந்தவன் தன்னை அடித்தபோதெல்லாம் … பார்த்துக் கொண்டிருந்தான்… ஆனால் ’மணி’ என்று சொன்னவுடன் மருதுவுக்கு வந்த ஆவேசம்… துரையை ஆயாசம் கொள்ள வைக்க…
"மருது... இவன் உன்னை டைவர்ட் பண்ண பார்க்கிறான்...." மருதுவிடம் துரை பேச ஆரம்பித்திருக்க
இங்கு ரிஷிக்குமே அவர்களோடு சண்டை போடவெல்லாம் எண்ணமே இல்லை… வேகமாக… தன் அலைபேசியை எடுத்து… எப்படியோ காவல் துறைக்கு அழைத்தும் விட்டான்… அங்கிருந்து வெளியேறியும் விட்டான்...
அவனுக்கு நம்பிக்கை இருந்தது… தன்னை எப்படியும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை… என்ன முதலில் தன் பெயர் கெடும்… பார்த்துக் கொள்ளலாம்… ஆனால் எப்படியும் உண்மை வெளிவந்துதானே ஆக வேண்டும்… கார்லாவின் கடைசிப் பார்வை அவன் நம்பிக்கையை இன்னுமே கூட்டியிருந்தது…
---
ஆஸ்திரேலியா நாட்டின் முக்கியப் பெரும் புள்ளி… அவரின் பத்து வயது மகள்… பெற்றோருடன் கோபப்பட்டு… அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து… வெளியேறி இருக்க… அவளைத் தேடச்சொல்லி காவல்துறைக்கும் தகவல் இரகசியமாக சொல்லப்பட்டிருக்க.. எல்லா இடங்களும்… காவலர்களின் கண்காணிப்புக்குள் வந்திருக்க… அதே நேரம் ரிஷியும் தகவலும் அவர்களுக்கு கிடைக்க…. ரிஷி இருந்த நைட்கிளப் காவலர்களால் முற்றுகை இடப்பட்டு… மற்றவர்கள்… சட்டத்திற்கு புறம்பான முறையில் இருந்தவர்கள் எல்லாம் மாட்டிக் கொள்ள… ரிஷியின் நண்பர்களும் அதில் அடங்க… அவர்களும் காவல் துறையில் மாட்டிக் கொண்டனர்… கல்லூரி மாணவர்களாக…
இங்கு ரிஷி… மருது… துரை மூவரும் காவலர்களால் தனியாக கைது செய்யப்பட்டு… இரகசியமான விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தனர்… ரிஷி எவ்வளோ எடுத்துச் சொல்லியும் அதை எல்லாம் கேட்காமல்… அவனையும் மருது, துரையோடு… ஒரே சிறையில் வைத்திருக்க…
“துரை நான் என் ’மணி’ கிட்ட போகனும்… அது என்னைப் பற்றி தப்பா நினைச்சுட்டு இருக்கும்டா… நீ கூட்டிட்டு போறேன்னு சொன்னதானடா… எனக்காக காத்துட்டு இருப்பாதானே… “
ரிஷிக்கு அவன் புலம்பல் எல்லாம் கேட்கவே இல்லை… மனமெங்கும் கார்லாவின் நினைவே… அவளுக்கு சரி ஆகி இருக்குமா… என்னை இதில் இருந்து விடுவிப்பாளா…அப்படி இல்லையென்றால்… யோசித்த போதே… கார்லாவுக்கு ஒன்றும் ஆகாது… மனதுக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டான்….
தன்னை மறந்து சிந்தனையில் உழன்று கொண்டிருக்க….
அப்போதுதான் ரிஷியின் அலைபேசி மருதுவின் கைகளில் சிக்கியது… சட்டென்று ரிஷி அலைபேசியை வாங்கி தன் வசம் கொண்டு வந்த போதும்… மருது நக்கலாக
“நாங்க யார் மேல கண்ணு வச்சாலும்… அப்படியே இங்க பதிச்சிருவோம்… நீயே வச்சுக்க…”
ரிஷி கேவலமாக மருதுவைப் பார்த்தான்…
“அங்க பச்சை குத்தி வச்சுருக்கியே… அப்போ அது யாரு…”
“அவ என் பொண்டாட்டி” சொன்ன மருதுவையும் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்த துரையையும்…. சாக்கடையில் இருக்கும் அற்ப புழுவைப் போல கேவலமாகப் பார்த்தனுக்கு… இந்தத் துரை இருக்கும் வரை மருதுவை விட மாட்டான் என்பது நன்றாகவே தெரிய… அவனிடம் அடிமை போல் இருக்கும் மருதுவும் அவன் மனைவியிடம் இந்த ஜென்மத்தில் சேர மாட்டான் என்றே புரிந்தது… இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட அந்த அப்பாவிப் பெண் பாவம் என்று மட்டுமே ரிஷி அப்போது நினைத்தான்
அதற்கு மேல் இவர்களை… அந்தக் குப்பைகளை நினைப்பது தன் தகுதிக்கு அழகில்லை என உணர்ந்தவனாக… இருவரையும் விட்டு தள்ளி அமர்ந்து விட்டான் ரிஷி…
இரண்டு மணி நேரம் தான் அவனின் போராட்டமெல்லாம்… கார்லா கண் விழித்திருக்க… ஃபெபியோ அனைத்துத் தகவலையும் சொல்லி முடித்திருக்க… ரிஷி… காவலில் இருந்து விடுவிக்கப்பட்டான்… அதே போல மருது மற்றும் துரையின்
வெளியேறப் போன ரிஷியிடம்
“நீ தப்பிச்சுட்ட… ஆனால்… என்னைய போலிஸ்ல மாட்டி விட்டுட்டேல்ல… இந்த மருது யாருன்னு தெரியாம என் மேல கையை வச்சுட்ட… நான் யாருன்னு கூடிய சீக்கிரம் காட்டுகிறேன்… நீ எங்க இருந்தாலும் உன்னை வந்து தேடி அடிப்பேன்டா.... ” மருது அவனிடம் எச்சரிக்க…
"சென்னைதானே வர்றோம்டா.. இவள காப்பாத்திட்ட... உன் தங்கச்சிங்களை காப்பாத்துவியான்னு பார்த்துக்கோ" துரையும் சொல்ல…
"நீங்க சென்னைல மாட்டித்தானே இவ்ளோ ஜெயில்ல இருந்தீங்க... இன்னுமாடா திருந்தலை... வெளியவே போக முடியாதபடி எல்லா கேசையும் போட்டு தள்றோம்... நீங்க போங்க தம்பி... இவனுங்க அங்க வர முடியாது... சென்னைல ஒரு பணக்கார வீட்டு பொண்ணுகிட்ட பண்ணின பிரச்சனைல... ஜெயில்லயே வச்சு முடிச்சுருப்பானுங்க...தப்பிச்சுட்டானுங்க..." என அங்கிருந்த காவல் துறை அதிகாரி சொன்னவராக...
ஆனாலும் ரிஷிக்கு மனம் எங்கோ எச்சரிக்கை மணியை ஒலிக்க விட… இவனும் அவர்களை பதித்துக் கொண்டான்… இவர்களைப் பற்றி தகவல் சென்னையில் கிடைக்கிறதா என்று விசாரிக்க முடிவு செய்து கொண்டான்…
ஃபேபியோ குடும்பத்தினர் ரிஷியை எப்படி கவனித்திருப்பார்கள்… நன்றி செலுத்தி இருந்திருப்பார்கள் என்பது உலகம் அறிந்ததே…
அவற்றை ஏற்றுக் கொண்ட போதிலும்.... ரிஷி கார்லாவையும் பார்க்கச் செல்லவில்லை… அவள் உயிர் பிழைத்து வந்ததே போதும்… அவள் தன்னைப் பார்க்காமலே இருப்பது நல்லது… அவர்களும் அவளை இந்த நிகழ்வுகள் ஏதும் அவளைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு…. விடைபெற்றும் கொண்டான்…
கோவாவில் நடந்த அன்றைய ஞாபகங்களுக்குச் சென்று திரும்பி வந்த ரிஷி
”கேவலமான ரெண்டு அசிங்கமான ரெண்டு நாய்கள்ட்ட இருந்து அந்தப் பொண்ண காப்பாற்றினேன்… அவ்ளோதான்… எனக்கும் கார்லாக்கும் உள்ள பந்தம் “ என்றபோதே…
புகைப்படத்தை தாங்கிப் பிடித்திருந்த நட்ராஜின் கண்கள் தன் மகளின் சிரிப்பில் வெறித்திருக்க… கைகள் இலேசாக நடுங்க ஆரம்பித்திருந்தன…
அவரின் கைகள் அந்தப் புகைப்படத்தை கை நழுவ வைக்க… ரிஷி இயல்பாக அதை அவரிடமிருந்து தன் கைகளுக்கு மாற்றி இருந்தவன்…
“என்னாச்சு மாமா…” என்று புகைப்படத்தை அவரிடமிடருந்து பத்திரமாக இடமாற்றி வைத்தவன்… அப்போதுதான் கவனித்தவனாக… அவரின் மூச்சுத்திணறலை உணர… வேகமாக அவருக்குத் தேவையான மருந்துகளையும்… இன்ஹேலரையும் அவருக்கு எடுத்து வந்து கொடுத்தவனிடம்… தள்ளி விட…
”ப்ச்ச்… இதுனாலதான் இதை நான் யார்கிட்டயும் சொல்றதில்ல… நீங்க வேற டக்குனு எமோஷனல் ஆகுற ஆளு... நான் ஒரு மடையன் உங்ககிட்ட போய்ச் சொல்றேனே... ஃபர்ஸ்ட் இதை இன்ஹேல் பண்ணுங்க… இப்போ கார்லா நல்லா இருக்கா தானே… ரெகவர் ஆகிட்டாதானே… “ என்றவனிடம்…
“ஆனா என் பொண்ணு… எனக்குத் திரும்ப கிடைக்கலையே... தொலச்சுட்டேனே” என்றவரின் குரல் தேய்ந்து ஒலிக்க… அவரை ஆறுதலாக பிடித்திருந்த ரிஷியின் கைகள் இறுக ஆரம்பித்திருந்தன... அவரின் வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவனாக
”யாரோ கார்லாவை… கடவுள் மாதிரி அந்த மருது துரைகிட்ட இருந்து காப்பாற்றின நீ…. ஏன் என் பொண்ணுக்காக வரலை… மருது கிட்ட இருந்து ஏன் காப்பாற்ற வரலை... நீ கூட வேண்டாம்... உன்னை மாதிரி ஒருத்தன் ஏன் வரலை... ” கேட்கும் கேள்வியில் தர்க்கமே இல்லாமல் கேட்டவராக ரிஷியை பிடித்து உலுக்கியவர்…
“அப்பனா நானே அவ பக்கத்தில இருந்தும் அவளுக்காக போராடலையே… ஆனால் என் பொண்ணு அந்த நிலையிலயும் என்னைக் காப்பாத்துனாளே” தன்னையே அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தவரிடம்…
ரிஷி வார்த்தைகள் இன்றி… உணர்வின்றி… வெறிக்க ஆரம்பித்திருந்தான்… எதையுமே யோசிக்க முடியாமலும்…. யோசிக்க தைரியம் இல்லாமலும்…
---
Solitara super
Ini avanunga nizhai
Nice update dear