/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி... இந்த ஸ்டோரில பவித்ரா அர்ஜூன் பார்ட்லாம்... லைட்டா சொன்னாலே போதும்... கண்டிப்பா அவங்க ஸ்கோர் அள்ளுவாங்க... கஷ்டமான பார்ட்டே ரிஷியோடதுதான்... என்னால முடிந்த அளவுக்கு எழுத ட்ரை பண்றேன்..
அண்ட் சாங்க் இது நாள் வரை போட முடியல... ரிஷி கண்மணிக்கு பெருசா சீன் இல்லை... அதுனால போடலை... அவங்க டெலிஃபோன் கான்வர்சேஷன் சீன் இல்லாமலேயே எபிஸ் எழுதி இருக்கலாம்... ஆனால் 20 எபில நான் என்னதான் எழுதினாலும்... உங்க ஃபோகஸ் ரிஷி-கண்மணி பார்ட்லதான் இருக்கும்னு எனக்கும் தெரியும்...
இனி R-K அவங்களோட எமோசனல் சீன்ஸ் மட்டும் பெரும்பாலும் வரும்... சாங்க் இருக்கானு பார்க்கலாம்...
நேற்று எபிக்கு சாங்க் போட்ருக்கலாம்... இந்த மூணு எபிக்கும் சேர்த்து விளக்கத்தோட அடுத்த எபில போட்றேன்...
அண்ட்... .... இன்னும் பேச நினைக்கிறேன்... ஆனால் லேட் நைட் ஆகிருச்சு... சோ... பேச முடியல... சாரி சாரி... உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் மறக்காமல் போடுங்க... நானும் அடுத்தடுத்து கொடுக்க வேகமாக எழுத ட்ரை பண்றேன்.. அட்லீஸ்ட் ஒருநாள் விட்டு ஒரு நாளாவது.. கொடுக்க ட்ரை பண்றேன்...
கமெண்ட்ஸ் அண்ட் லைக் க்குக்கு மீண்டும் மீண்டும் நன்றி... அப்புறம் சைலண்ட் ரீடர்ஸுக்கும் நன்றி ....நன்றி நன்றி... */
அத்தியாயம் 61
கண்மணி வீடு வந்த சேர்ந்த போது… மணி 7.30… ‘கண்மணி’ இல்லத்துக்குள் நுழைந்தாளோ இல்லையோ… பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினாளோ இல்லையோ… எதுவுமே ஞாபகத்தில் இல்லை… தானாகவே இல்லை… சந்தோஷத்தில்…
அதை விட ரித்விகா வீடு வந்து சேர்ந்து விட்டாளா… அந்த எண்ணமே இல்லை… அவள் அவளாகவே இல்லை எனும் போது ரித்விகாவைப் பற்றி எல்லாம் எண்ணம் வருமா என்ன… ஒரு வேளை அர்ஜூனோடு போயிருக்கின்றாள்… என்ற நம்பிக்கையிலும் ரித்விகாவைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லையோ??!!!…
ரிஷி இருந்த அறையின் மாடிப்படிகளில் ஏறிய போதே… அவன் சற்று சொன்னது ஞாபகம் வந்தது….
”மேல என்னோட ரூம்ல… “ என்று ஆரம்பித்தவன்… அவளுக்காக தான் வைத்து விட்டு வந்திருந்த பிறந்த நாள் பரிசு இருக்குமிடத்தை சொல்ல…
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன்னரே… தன் பிறந்த நாளைக் குறித்து யோசித்தானா… அதுவும் எனக்காக…. கண்கள் விரிந்தது ஆச்சரியத்திலும்… இதுவரை அனுபவிக்காத சந்தோஷத்திலும்… எதிர்பார்க்கவில்லை… ஆனால் எதிர்ப்பார்க்காமல் கிடைத்த போது… அதுவும் அவளுக்கு பிடித்தமானவனிடமிருந்து…. அவள் அடைந்த ஆனந்த்தத்திற்கு அளவில்லை… வானம் தொட்டு வர வேண்டும்… என அவளது கால்கள் எம்ப ஆவல் கொண்டதுதான்… ரிஷிக்கு வேண்டுமென்றால் அவள் தேவதையாக இருக்கலாம்… ஆனால் கண்மணி ஒரு சாதாரண மானுடப் பெண்தானே... அதனால் அது முடியாமல் போக… தன்னை அடக்கி அமர்ந்திருந்தாள்
இவள் இப்படி இருக்க….
“ஒண்ணு… உன் ரிஷியோடது… இன்னொன்னு உங்க அம்மாவோடது… “ அவன் குரல் இப்போது சற்று தளர்வாக வந்திருக்க…
அவன் குரலின் தளர்வு ஏன என புரிந்து கொண்டவளாக… அமைதியாக இருந்தவள்… பொறுமையை தக்க வைத்துக் கொண்டு அவன் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள் இப்போது….
”உங்க அம்மாவோட டைரியப் படிச்சுட்டு… உன் ரிஷிக்கண்ணாவோட கிஃப்ட்ட அக்செப்ட் பண்ணிக்கலாமா.. இல்லை வேண்டாமான்னு டிசைட் பண்றது உன்னோட கைல… உன்னோட விருப்பம் எதுனாலும்…. எனக்கு ..” வார்த்தைக்கு வார்த்தை ‘உன்’ என்பதில் அழுத்தம் கொடுத்தவனோ… வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்திவிட
“சம்மதம்… இதுதானே ரிஷிம்மா…. “ கண்மணி எரிச்சலாகக் சொன்னவள்…
“இவ்ளோ நேரம்… நீ இல்லாமல் ஏதும் இல்லை அந்த டைலாக் எல்லாம் … யார் சொன்னது… அது ஏன் அப்புறம்… ”
“ப்ச்ச்… அதெல்லாம் என் விருப்பம்…. உன் விருப்பம் அது இப்போ எனக்கு முக்கியம்…” ரிஷி தடுமாற
“ஹ்ம்ம்… இப்போ….???? அடேங்கப்பா… கண்மணிக்குத் தாலி கட்டினப்போ தெரியலையா ரிஷிகேஷுக்கு… “
“அப்போ யாரோ கண்மணி… இப்போ என்னோட கண்மணி…” விரக்தியாகச் சொல்ல….
தலையிலடித்துக் கொண்டவள் கண்மணிதான்….
“இந்தக் கேவலமான லாஜிக்கை எங்க இருந்து கண்டுபிடிச்சீங்க… திட்டக் கூடாதுன்னு பார்க்கிறேன்.. இல்ல… என் பாசைல ஆரம்பிச்சேன் தாங்க மாட்டீங்க… அதுனால இந்த டைலாக் லாம்…. வேற ஏதாவது அப்பாவி பொண்ணுகிட்ட போய் சொல்லுங்க…ஆனால்…. இனி அது கூட முடியாது…” திட்ட முடியாத கடுப்போடு கண்மணி முடித்திருக்க
தன்னவளின் வார்த்தைகளை ரசித்தபடியே…. நெஞ்சம் நிறைந்த நிம்மதியோடு…. கண்களை மூடிப் புன்னகைத்தான்…. கண்மணியின் ரிஷியாக…
“ரவுடி… என் ரவுடியப் பற்றி எனக்குத் தெரியாதா… அவ என்னை எக்காரணத்துக்காகவும் விட மாட்டான்னு… உங்க அப்பா மாதிரி… பொண்ணு விட்டுட்டு போயிருவாளோன்ற பயம்லாம் இல்லை… ஆனால் ஒரு வேளை நான் இந்த ’கண்மணி’ இல்லத்துக்கு நட்ராஜ் சாரைப் பார்க்க வராமல் போயிருந்தால்… “ என்ற போதே
“ரிஷின்னு ஒருத்தன் பிறக்கும் போதே கண்மணின்னு ஒருத்தி… அவனுக்காக பிறக்கனும்னு எழுதி வச்சுட்டாங்க… அவன் அவளைத் தேடி வரணும்னு இருக்கும்போது வராமல் ஏன் இருக்கப் போறிங்க…. ஏன் ரிஷி இவ்ளோ கஷ்டப்படுத்திகிறீங்க உங்கள… இதுதான் டெஸ்டினி… no accidental meetings between soul அவ்ளோதான் எனக்குத் தெரிந்தது…. ” மிகச் சாதாரணமாகக் கண்மணி சொல்ல
“ப்ச்ச்…. இந்த டெஸ்டினி… அஸ்ட்ராலஜி… ஏன் சாமி… கடவுள்… இது எது மேலயும் எனக்கு நம்பிக்கை இல்லை…. சும்மா கதை விடாத ஓகேவா… அதெல்லாம் நீ எழுதுற கதைல காட்டு“ ரிஷி அவளை விடச் சாதரணமாகச் சொல்ல
“இல்ல ரிஷி… உண்மையாவே… ஹ்ம்ம்ம்…. எப்படி சொல்றது…. ”
“சைண்டிஃபிக்கா.. சொல்லனும்னா… இந்த ஸ்பேஸ் அண்ட் யுனிவெர்ஸ் ஹூயுமன் பாடியோட கனெக்ட் ஆகுதுன்றதுதான் உண்மை… மனுஷங்கன்னு கூட இல்லை… இங்க இருக்கிற அத்தனை ஜீவராசிகளோடயும்… அதுமட்டும் இல்லாமல்… சின்ன சின்ன மாற்றங்கள்… நாம அதை ஃபீல் பண்ண முடியாது… அது தொடர்ந்து நடக்கும் போது… எல்லாமே மாறும்… அப்போ புரியாது... நாம கனெக்ட் பண்ணிப் பார்த்தால் புரியும்… இன்னும் எப்படி சொல்றது… மேத்ஸ் வைசா சொல்றதுன்னா அஸ்ட்ராலஜியே ஒரு அட்வான்ஸ்ட் அண்ட் காம்ளக்ஸ் கால்குலஸ் தான்… அந்த ஃபார்முலா முழுமையா தெரிஞ்சா அவங்கதான்… ” என்று கண்மணி ஆரம்பித்த போதே
காதில் இருந்து சட்டென்று போனை எடுத்தவனுக்கு… கண்மணி என்பவள்… விக்கியின் மறு உருவமாகத்தான் காட்சி அளித்தாள்…
விக்கி மட்டும் இவர்களின் பிரச்சனையாக இல்லையென்றால்…
“உன்னை மாதிரியே அவன் தான் பேசுவான்… அவன உன்கிட்ட கோர்த்து விடறேன்… ரெண்டு பேரும் மணிக்கணக்கா கால்குலஸ்… இண்டெக்ரல்… அது ரியல் லைஃப்ல கனெக்ட் ஆகுதுன்ற தீஸிஸ்ல இறங்குங்க… நீங்க ரெண்டு பேரும் தான் அதுக்கெல்லாம் செட் ஆவீங்க… இண்டலிஜெண்ட் வெர்சஸ் இண்டலிஜெண்ட்…. என்னை ஆள விடுங்க…” என்று கண்மணியை ஓட்டி இருப்பான்… இன்றைய நிலைக்கு விக்கி பேரை இழுக்க முடியுமா…
கையெடுத்து கும்பிட்டவனாக
“ஸ்டாப் ஸ்டாப்… ஷப்பா…. அம்மா… தாயே நிறுத்துறியா… ஹப்பா… என் காதுல ரத்தம் தான் வருது…. டாக்டரம்மா பொண்ணு டீச்சரம்மா அறிவாளின்னு எல்லாருக்கும் தெரியும்… உன் ஃபிலாசஃபி அண்ட் டேர்ம்ஸ்லாம் உன்னை மாதிரியே அறிவாளியா யாராவது மாட்டுவாங்க… அவங்க கிட்ட காட்டும்மா… நாங்கள்ளாம் பாவப்பட்ட அடி மட்ட கடைசி பெஞ்ச் காரங்க… என்னை விட்ரும்மா தாயே”
என்று கதறி நிறுத்தியவன்…. காலை எழுந்ததும் ஃபேபியோ வீட்டில் வைத்திருக்கும் விருந்துக்கு… நட்ராஜோடு கிளம்புவதை செய்தியாகக் கூறி… வைத்தும் விட்டான் ரிஷி…
கணக்குப் பாடம் என்றவுடன்… கணவன்… கதறி போனை வைத்த விதத்தை நினைத்து சிரித்தபடியே மாடி ஏறியவள்… அறையைத் திறக்க… முதலில் கண்களில் பட்டது… அவனது இருசக்கர வாகனத்தின் தலைக்கவசமே…
”கணக்கே பிடிக்காதுன்னு சொல்லிட்டு திரிஞ்சவர்தான்… கணக்கு டீச்சரையே கரெக்ட் பண்ணிட்டாராம்மா…” என்று அதன் தலையில் செல்லமாக அடித்தவள்… பின் தடவிக் கொடுத்தபடியே…
“ஓய்… ரிஷிக்கண்ணா… எப்போ என் கிட்ட என் ரிஷிக்கண்ணாவா உன்னை ஒப்படைக்கப் போற…” என அந்தத் தலைக்கவசத்தோடு பேசியவள்… தன் துப்பட்டாவை… கழட்டி… ரிஷி அவன் தலையில் கட்டுவது போல் அதற்கு கட்டி விட்டவள்… ரிஷி சொன்ன இடத்தில் அவன் வைத்துவிட்டுப் போனதாகச் சொன்ன பரிசுப் பொருளைத் தேட ஆரம்பித்திருந்தாள்…
---
ரிஷியைப் பொறுத்தவரை… கண்மணி அவள் அம்மாவின் ஆசையை தெரிந்து கொள்ள வேண்டும்… அவ்வளவுதான்…
ஆனால் அவனுக்கு இருந்த ஒரே ஒரு உறுத்தல்… ரிஷி என்பவன் கணவனாக வருவதற்கு முன் இந்த டைரியை அவள் படித்திருந்தால்…. கண்மணி என்ன முடிவெடுந்திருப்பாள்… இதுதான் இத்தனை நாள் அவனை நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டிருப்பது… எந்தக் காரணத்திற்காகவும்… யாருக்காகவும் கண்மணி அர்ஜூனை விட்டுக் கொடுத்திருக்க மாட்டாள்… நட்ராஜோடு போராடி இருப்பாள்… அது திண்ணம்… கண்மணியின் விலைமதிப்பில்லா பேரன்பை உணர்ந்தவன் அல்லவா ரிஷி… விலைமதிப்பில்லா அந்த பேரன்பு… யாரிடமிருந்தோ தட்டிப் பறித்த அன்பா… தனக்கே தனக்கானது இல்லையா…. அதுதான் அவன் வலியே…
இப்போது இதோ அந்த டைரியைப் படிக்கப் போகிறாள்… படித்தபின் அவள் மனம் என்ன முடிவு எடுக்கும்… தன்னை விட்டு போக மாட்டாள் தான்… ஆனால் அர்ஜூனை விட்டு விட்டோமே என்று யோசிப்பாளோ…??? அர்ஜூன் கண்மணிக்காக ஆயிரம் செய்வான்… செய்திருக்கின்றான்… பிரின்சஸ்.. இளவரசி…. என்று வாய் வார்த்தையாக அவன் சொல்லவில்லை… பவித்ராவின் ஆசை என்ன என்று தெரியாமலேயே அவன் இந்த அளவு பாசம் வைத்திருந்தான் என்றால்…
இந்த இடத்தில் தான் ரிஷிக்கு அர்ஜூன் மேல் வந்த தேவையில்லாத பொறாமைக்குக் காரணம்… தன் மீதே வந்த வெறுப்புக்கு காரணம்…
பவித்ராவின் டைரி கண்மணியின் கைகளில் சிக்காமல் போனதுதான் ரிஷி என்றோ செய்த புண்ணியம்… கர்மா… என்றாலும்…. தனக்கு கிடைத்த கண்மணியின் அவளின் அன்பு… அர்ஜூனிடமிருந்து தட்டிப் பறித்த அன்பாக அமைந்து விட்டதே… என்ற ஆவேசம் அவனுக்குள் இப்போதும் இருந்தது…
அடிபட்டிருந்ததென்னவோ தலையிலும் கையிலும்… வலி என்னமோ நெஞ்சில் மட்டுமே…. உறக்கம் வராமல்… அவனையும் மீறி ஏதேதோ நினைக்க வைக்க… வேகமாக அந்த மருத்துவமனையின் இரவுப்பணி செவிலியை அழைத்தவன் உறக்கத்திற்கான மாத்திரையை வாங்கிப் போட்டுக் கொண்டான் தான்… ஆனாலும் உறக்கம் தான் வரவில்லை…. அவனுக்கு... உறங்காமல் வெறித்திருந்தான்...
---
கண்மணி ரிஷியைப் போல் எல்லாம் இப்போது குழம்பவில்லை... தன்னைக் குழப்பிக் கொள்ளவும் விரும்பவில்லை… தன் தாயின் பரிசைப் பார்க்கும் முன்னரே…. அதைத் தெரிந்து கொள்ளும் முன்னரே… ரிஷி தனக்காக வாங்கி வைத்திருந்த சிறிய பரிசுப்பெட்டியைத்தான் திறந்தாள்…
சிறு வைர மூக்குத்தி… இளம் ரோஜா நிற வண்ணத்தில்…
புன்னகையில் இதழ் விரித்தபடியே… மூக்குத்தியை கையில் எடுத்தாள்…
தான் ஏற்கனவே அணிந்திருந்த மூக்குத்தியை அதாவது தாயின் மூக்குத்தியை கழட்டியவள்… கணவன் முதன் முதலாகத் தனக்கு பரிசாகக் கொடுத்ததை அணிந்தவளாக… அதைக் கண்ணாடியில் அழகும் பார்த்துக் கொள்ள… அவளையுமறியாமல் மூக்கு நுனி சிவந்ததில்… மூக்குத்தி இருந்த இடத்தைத் தேடித்தான் பார்க்க முடிந்தது…
டைரியைப் படித்த பின்னால் தான் தன்னோடு பேசவேண்டும் என்று சொல்லி இருக்க… ரிஷி கட்டளையிட்டபடி…. தாயின் டைரியைப் படிக்க ஆரம்பித்தாள்…
கண்மணிக்காக மட்டுமே பவித்ரா எழுதவில்லை…. சில பக்கங்கள்… நடந்த நிகழ்வுகளின் சுருக்கங்கள்… சில பக்கங்கள்… அவள் கணவன் நட்ராஜுக்காக சில பக்கங்கள்… அவள் மகள் கண்மணிக்காக
தாயின் தோழி கிருத்திகா மூலம் தன் பெற்றோரின் கதை எல்லாம் அறிந்தவள்தான்… ஆனால் பவித்ராவின் உணர்வுகளை அவள் வாயிலாக எழுத்துக்களாக படிக்க… கைகளில் ஆரம்பித்திருந்த நடுக்கம் படித்து முடித்த போதோ கண்மணியின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் வியாபித்திருந்தது
”எனக்குள்ள ஒரு வாரிசு உருவாகும் போதுதான்… என் அம்மா அப்பாவோட வலியே புரிய வருது…. அம்மா அப்பாவை நான் நாளை பார்க்கலாம்னு இருக்கேன்…”
----
”ஏன் இவ்வளவு வெறுப்பு என் மேல… அவ்வளவு பாசம் என் மேல வச்சுருந்தவங்களா அவங்க… அவங்க ஞாபகமா இருந்த ஒரே பொருள்… அந்த மூக்குத்தி… அதையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டேன்… எனக்கு என் ராஜ்… என் கண்மணி மட்டும் போதும்னு…”
”ஆசை ஆசையா சொல்லப் போனேன்… அவங்க பொண்ணோட குழந்தை இல்லையாம்… இது ராஜ் குழந்தையாம்… அவங்களுக்கு இந்தக் கரு அசிங்கமாம் ”
---
”ஆனால் என் ’கண்மணி’- ய கருவிலேயே கலைக்கச் சொன்னதைத்தான் தாங்கவே முடியல… ”
“ஆனால் அர்ஜூன் ஏன் பாப்பாக்கு சுபத்ரான்னு பேர் வைக்கனும் ராஜ்… ” நட்ராஜிடம் கேள்வி கேட்டிருந்தாள் பவித்ரா…
“நான் கண்மணின்னு பேர் வைக்கப் போறதில்ல… சுபத்ரான்னு பேர் வைக்கப் போறேன் நம்ம பாப்பாக்கு… ஓகே தானே ராஜ் “
”அர்ஜூனுக்குத்தான் என் பொண்ணு…. அவன்கிட்ட நான் சொல்ல மாட்டேன்… என் பொண்ணுகிட்ட இப்போ சொல்லி வளர்ப்பேன்… ஆனால் பிறந்த பின்னால சொல்லி வளர்க்க மாட்டேன்… ஆனால் என் ஆசை கண்டிப்பா நடக்கும்… என் பொண்ணு கண்டிப்பா அர்ஜூன் கிட்ட போய்ச் சேர்வா… யார் தடுத்தாலும்… எது தடுத்தாலும்… அப்போ என் அம்மா அப்பாக்கு இருக்கு…”
“ராஜ்… சுபத்ரான்னு பேர் வைக்க மட்டும் அனுமதி கொடுங்க… மத்ததெல்லாம் தானாகவே நடக்கும்… அர்ஜூனுக்குத்தான் நம்ம பொண்ணு… அதுக்கு நீங்க தடையா இருக்கக் கூடாது… அதை மட்டும் எனக்கு பிராமிஸ் பண்ணிக் கொடுங்க… இதுதான் என் ஆசை… ”
படித்து விட்டு மூடி வைத்திருந்த டைரியை வெறித்தபடி அப்படியே எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தாளோ…
தன் தாயின் குணம் ஓரளவு அறிந்தவள்தான் கண்மணி… தன் உள்ளுணர்வு… தன் முடிவுகள் எப்போதும் தவறாகவே இருக்காது என்பது பவித்ராவுக்குள் இருக்கும் ஆணித்தரமான எண்ணம்… அது பெரும்பாலான விசயத்தில் உண்மைதான்… கிருத்திகா மூலம் கேள்விப்பட்டவரை….
நட்ராஜ் ஒரு படிக்காத மேதை… தான் அறிந்த.. உணர்ந்த நட்ராஜை இந்த உலகம் அறிய வேண்டும்… என்ற உத்வேகம்… உதவினாள்… போராடினாள் …
காதலும் அதே போல… தனக்கு நட்ராஜ் மேல் வந்த காதல் பருவக் கோளாறினால் வந்த காதல் அல்ல…. உளப்பூர்வமாக நம்ப…. நட்ராஜிடம் மறைக்க வில்லை…
தனக்கும் பவித்ராவுக்கும் இடையே இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமே நட்ராஜை பவித்ராவை விட்டு முதலில் விலக வைத்தது… வயதுக் கோளாறில் ஏதோ வேகத்தில் காதலிப்பதாக கூறுகின்றாள் என்று… அவளை அவர் நம்பவும் இல்லை…
அதைத் தவறென நட்ராஜுக்குப் புரியவைத்து தன் காதலை அவரையும் உணர வைத்தவள்… காதலியாக… மனைவியாக வெற்றியும் கொண்டாள்… நட்ராஜை உலகம் அறியச் செய்யப் போராடினாள்… கிட்டத்தட்ட வெற்றி அடையும் தருவாயில் தான்… அவளின் மரணம்…. நட்ராஜின் உலகமும் ஸ்தம்பித்து நின்று போனது அவர் மனைவியோடேயே…
டிசம்பர் 25
”ராஜ் டெல்லிக்குப் போறாரு… மினிஸ்டர்ஸ் மீட்டிங் இருக்கு… ராஜ் கண்டிப்பா சக்சஸ் ஆவாரு… எல்லாமே மாறப் போகுது… பெப்ருவரி… மந்த் டெலிவரி டேட்… இன்னும் 2 மந்தஸ்… உனக்காக வெயிட் பண்ணனுமாடா”
“உங்க அப்பாக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ எடுத்து அனுப்புவோமா… நம்ம அர்ஜூன் பற்றி அவர்கிட்ட சொன்னதே இல்லை… இன்னைக்கு சொல்வோமா… ஓகேவா”
சொல்லும் போதே அங்குமிங்கும் அசைந்த குழந்தையின் அசைவுகளை உணர்ந்திருக்க
”அர்ஜூன்னா இந்த சுபத்ரா குட்டிக்கு அவ்வளவு பிடிக்குமா… “
---
டிசம்பர் 29
பவித்ராவின் கண்ணீர் கறைகளோடு மட்டுமே அந்தப் பக்கங்கள் எழுதப்பட்டிருந்தன…
மருத்துவரான பவித்ராவுக்கே ஆச்சரியமாக இருந்தது… உயர் ரத்த அழுத்தம் என்பது… சோதனை செய்யும் போது அந்தக் கருவியில் மட்டுமே அளவில் இருந்தது… அவள் நார்மலாகத்தான் இருந்தாள்…
ஏழாவது மாதத்திற்கான வழக்கமான பரிசோதனைக்கு போன போதுதான்… கண்டுபிடிக்கப்பட்டது அவளின் உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து பார்க்க… அவளின் ரத்த அழுத்தம் குறையாமல் போக… அதன் காரணமாக… ஸ்கேன் செய்ய… அதுதான் உச்சக் கட்ட அதிர்ச்சியைக் கொடுத்தது பவித்ராவுக்கு…
பவித்ராவுக்கு பெரிதாக ஆபத்தில்லை… ஆனால் அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு… பவித்ராவின் தொப்புள் கொடி வழியாக உணவும் செல்லவில்லை… சுவாசமும் செல்லவில்லை… அதனால் வளர்ச்சியும் இல்லை… குழந்தை உயிருக்கு இனி உத்தரவாதம் இல்லை… பவித்ராவின் ரத்த அழுத்தமும் குறையாமல் இன்னுமே உச்சக்கட்டமாக மாற… பவித்ராவை மட்டுமாவது காப்பற்ற வேண்டிய நிலை… சுகப்பிரசவம் முடியாது… அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை... உயிரோடோ உயிரில்லாமலோ… குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டும்… இதில் தாய்க்குப் பெரிதாகப் பிரச்சனை இல்லை என்பதால் அறுவை சிகிச்சைதான் சரியான முடிவு என்று மருத்துவர் குழு தரப்பில் சொல்லப்பட்டும் விட்டது
ஒரு வேளை குழந்தை உயிரோடு வெளியே எடுக்கப்பட்டால்… neonatal ஐசியூவில் தான் வைத்து பராமரிக்கப்படவேண்டும்… அதன் பின் வரும் 3 மாதமும் அதாவது டெலிவரி நாட்கள் வரை… இன்குபேட்டரில் தான் வைத்து வளர்க்க வேண்டும்… ஆனால் அது கூட சேயின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… பவித்ரா மட்டுமே… அவளது நலன் மட்டுமே கருத்தில் கொண்டு… உடனடி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்… என்று மருத்துவக் குழு சொல்லி முடித்திருக்க… நட்ராஜுக்கு அழைத்துச் சொல்லவே அவளுக்குப் பயம்…
“ஏன் பாப்பா… உன் அம்மா மேல இவ்ளோ கோபம் உனக்கு… இந்த வயசுலயே உண்ணாவிரதமா உனக்கு… இந்த உலகத்தைப் பிடிக்கலையா உனக்கு… நான் வேண்டும் என் ராஜுக்கு… ராஜுக்காக கண்டிப்பா இருப்பேன்… உனக்காக எவ்வளவோ கனவுக் கோட்டை கட்டி வச்சுருக்கோம்… எனக்காக… உன் அப்பாவுக்காக நீ உயிரோட வர நினைக்க மாட்டியா… வந்துருடா… என் அம்மா அப்பாவோட சேரனும்ன்ற உன் அம்மாவோட ஆசை எல்லாம் நிறைவேத்தனும்னா நீ உயிரோட வருவடா…”
முடித்திருந்தாள் பவித்ரா… அதுவே அவளது கடைசி எழுத்துக்களாக அந்தப் பக்கத்தில்…
---
கண்மணி அமைதியாக அமர்ந்திருந்தாள்… அர்ஜூன் மட்டுமே அவள் ஞாபகத்தில்… வேறு யாருமே இல்லை… பவித்ரா கூட இல்லை
இவள் தாய்… தன் பெற்றோரோடு சேர… அர்ஜூன் தனக்கு மருமகனாக ஆக்க வேண்டுமென்று நினைத்தான்…
ஆனால் அர்ஜூனுக்கு… என்ன தேவை… எந்த ஒரு காரணமும் இல்லையே தன்னை நேசிக்க… அவன் சொன்ன பேரை தன் மகளுக்கு வைக்க தன் அத்தை சம்மதம் சொன்னது மட்டுமே அர்ஜூன் இவளை நேசிக்க காரணமா….
“அன்று சுபத்ரா என்று அவன் பெயர் அருகே எழுதியபோது… அவன் கண்கள் மிளிர்ந்ததே”
தனக்குக் கூட கருவில் இருக்கும் போது சொல்லி வளர்த்திருக்கின்றாள் தன் அன்னை… ஆனால் அர்ஜூனுக்கு இப்போது வரை கூடத் தெரியாது… பவித்ராவுக்கு அர்ஜுன் மருமகனாக வர வேண்டுமென்பது…
தனக்கும் தன் தாய்க்கும் உள்ள பந்தத்தை விட… பவித்ராவுக்கும் அர்ஜுனுக்கும் உள்ள பாசம் உயர்ந்ததா என்ன?
கண்மணி என்று கூட சொல்ல மாட்டானே… அர்ஜூனுக்காகப் பரிதாபப்பட்டது… மனம்…
ஆனால்…. அங்கு ஆஸ்திரேலியாவில் உறங்காமல் தவித்துக் கொண்டிருப்பானே… கணவனுக்காகத் துடித்தது மனது
போனை எடுத்தவள்… ரிஷிக்கு அழைக்க… ஒரே அழைப்பில் எடுத்தவனிடம்
“நான் அர்ஜூனை பார்க்கனும்… போகவா” அவள் குரலே சொல்லியது ரிஷிக்கு…. உணர்வுகளினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றாள் என்பதை…
பதிலேதும் இல்லை… வெற்று மௌனம் மட்டுமே ரிஷியிடம்…
“எனக்குத்தான் உங்கள ரொம்ப பிடிக்கும்னு கர்வமா நெனச்சுட்டுருந்தேன் ரிஷி… ஆனால் இப்போத்தான் தெரியுது… என் மேல உங்களுக்கு இருக்கிற பிரியம்… அதோட ஆழம்… ”
”என் அம்மாவோட ஆசை… அர்ஜூனோட காதல் இந்த பூமிக்கு உயிரோட வருவேனான்ற சந்தேகமா இருந்த என்னோட பிறப்பு… இது மட்டும் இல்லை ரிஷி… இன்னும் எவ்வளவோ போராட்டம்… இதெல்லாம் மீறி… என்னை உங்ககிட்ட சேர வச்சுருக்குன்னா… இதுக்கு என்ன அர்த்தம் ரிஷி…”
“உங்களோட உயிரை… என்கிட்ட இப்போ இல்லை… நான் பிறக்கும் போதே கொடுத்துட்டீங்க ரிஷி… இது புரியாமல்… இவ்வளவு நாள் குழப்பமா சுத்திட்டு இருந்துருக்கீங்க..”
தட்டிப் பறித்துவிட்டேனோ என்று தானிருக்க… உனக்கானவள் நான்… என்னை உன்னிடம் சேர்த்துக் கொண்டாய் உன் காதலால் என்று தன்னிடம் சொல்லிச் செல்லும் பாங்கென்ன….
வழக்கம் போல தன்னை அவளது அன்பால் வென்று கொண்டிருந்தவளை… என்ன சொல்வதென்று தெரியாமல் புரியாமல் அவள் காட்டிய காதலால் உறைந்திருந்தான் ரிஷி…
Super
Super sis, semma
Nice..Arjun paavam.. If Arjun would have asked Natraj for marriage with Kanmani, it might happened.. So his mistake only. Now Rishi is also paavam. He is feeling guilty.. Kanmani is good and matured... giving good reasons like it is destiny. As Pavithra said she will be connected with Natraj always because of her unfullfilled wish/promise.. Interesting and very good writing.. Waiting for next episode.
I thought Rishi would have also kept flight ticket to Australia as her birthday gift..
Onething i couldn't accept is how come RK could fell in love again easily.. so whatever feeling he had on mahila wasn't love.. it would have been infatuation, if he had loved her truely then he wouldn't have left her that much easily.. Also, he punished Mahila by pushing her to marry another guy without even consulting anything with .. From my opinion, he is selfish.. if he did something which would affect only him then it won't be an issue but here he decided on behalf of her too and done such things..
Super Super very interesting..
Sis next ud epo? Waiting for Rishi and Kanmani ♥️
Dear Sissy, This site ask me to login each and every time I visit. My browser session is active. Please check this problem.
Acho Arjun pavam than.... Rishiya evalo love panrala kanmani.... Epa Australia pova?
kanmani sema
Semmmaaaaa super
Lovely no words to describe wonderful epi
Very nice
Nice
Ayoo mass!!.I was reading again and again lny for R&K feelings..the way kanmani thinking like"Wherever I go..U r my HOME"..Rishi is mani's home..Yeah..Kanmani is Rishii..Just wanna more to express love to them..But literally rishikanna pavam pa avanta poi scientific universe nu pesuriye ma manii..HAHAA
Nice and emotional episode
Nice episode dear.... Your connecting every character with the story is too good.... I think there must be something strong bond in between RK is there in ur flashback... Am I right??? Ennathan Rishi kanmani I love pannalum namma Vijay, Bala, Ragu alavuku innum ennala feel panna mudiala I don't know y.. mathu kaha 5 ys wait panna Bala va Keerthi dasan a mathina unga magic Rishi kita eppo kondu varuvinga??? I am sure u ll bring the magic again... Expecting next ud eagerly...🥰🥰🥰🥰
Eagerly waiting for rishikannas reaction at the same time feeling bad for
அருமையான பதிவு
Very emotional epi.. Ur words.. Oh my God.. Too soulful... That's d real secret behind d success of kmekm.. 👍👍👍👍👍👌👌👌👌👌👌
Hi sis.
I am tamil roja.
Semma feel intha epi.. Apadiyea avanga love oru kavithai feel koduthuchi.
Eagerly waiting for next epi.. Seekiram podunga. Pls..
Jii.. Amazing epi jii.. The words u've used 'NO ACCIDENTALLY MEETINGS BTWN SOULS🔥"Thatti paritha anba..athu than valiyae.." Rk's emotions are acceptable jii.. But he felt for that.. That I couldn't accept jii.. Bcoz his love towards Mahi everyone knows including RK.. Is RK think as him towards Mahi as he think of Arjun towards Kanmani..? Can't give up Rk but at the same time can't accept just overthinking of RK's love n emotions jii.. See even now she's caring for as she said she's born BECOZ of n for Rk..n so on.. I could realize the justice of the title .. Hats off jii...
அருமை
Waiting for Kanmani reaction in Arjun
Emotional epi
Nice
Wow! Super epi.Pavithra Arjun pathi solli eruthaalum,angeyum Rishi oda anbu thaan theriyuthu.Yes Kanmani Rishikaaga thaan poranthu vanthu erukkaa.
Next epi seekirama podunga sister
பிள்ளைங்க பிறக்க முன்னாடியே இப்படி,இவங்களுக்கு இவங்க தான்னு முடிவு பண்றது பெரிய தப்பு,பிள்ளைங்க நம்ம ஆசைங்கள திணிக்கிறதுக்கான subjects கிடையாது, அவங்களுக்கான உணர்வுகள் வேற,அவங்க வாழ்க்கைய அவங்க வாழனும்,அதுக்கான வழிய கத்து தந்து ஒதுங்கி நின்னு வழி நடத்தனும், அத விட்டு இப்படி அன்புல கட்டி போட்டு emotiinal black mail பண்ண கூடாது. நல்லவேளை டைரிய கல்யாணத்துக்கு முன்னாடி படிக்கல.
அர்ஜுனோட கல்யாணம் ஆகியிருந்தா கண்டிப்பா நட்ராஜ் மகளை இழந்திருப்பாரு, அதோட இப்படி ரிஷி மாதிரி அவர தாங்குற மருமகன் கிடைச்சிருப்பானா?
உணர்ச்சி குவியல் நிறைந்த பகுதி.
wow sema... epi sis, kanmani rishiyoda kannin mani nu, proof pannitta...,
Nice sis enatan arjun easy ah score panalum Rishi tan manasula nikuran.. epdi UEV la madhu perfect ah irunthalum chinna chinna kuraioda normal ah irukura Keerthi ah pidichadho athe mathiri tan Rishi ah romba romba pidikuthu. Kanmani Rishi tan epavum sari♥️♥️♥️. Waiting for their scenes🤗
Pavi ma varthaigal padikkum pothu Feel ayiduchu siss.ethuku aprom kanmani Arjun kitta epadi react pana poranganu padikka waiting sis
semmmmmmmmma sis kanmani Rishi uda valiya Kannama poga vaikura varigal Rishi ya mattum Ella padikira engalayum urayavaikindranthu siss👌👌👌🥰🥰