/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி...
ரிதன்யா விக்கிக்கு எபிசோட் முடிச்சுட்டேன்...
ரிஷி கண்மணி... எபிசோட் தான் இனி...
அண்ட் ஆண்ட்ரூஸ் அண்ட் ரிஷி எபிசோடுக்கும்... கரண்ட் எபிசோடுக்கும் கண்டினியூ இல்லை மிஸ்ஸாகிற ஃபீல் இருக்குனு ஃபீல் பண்ணீங்கன்னா... கரெக்ட் ஃப்ளோல தான் போயிட்டு இருக்கீங்கன்னு தெரியுது... யெஸ்... ஸ்கிப் பண்ணிட்டேன்... என்ன நடந்ததுன்னு.... டெலிகாஸ்ட் அப்போ கண்மணி மூலமா ரீடர்ஸுக்கும் தெரிய வரும்... அந்த ஃபீல் கண்மணிக்கிட்ட இருந்து வந்தால் நல்லா இருக்கும்னு கட் பண்ணிருக்கேன்...
தேங்க்யூ....
அண்ட் ஒன் மோர் இன்ஃபார்மேஷன்... இந்த லேப்டாப்பை ஷெட்யூல் போட்டு நானும் என் ஹஸ்பண்டும் யூஸ் பண்ணிட்டு இருக்கிறதால... அப்டேட் டைப் பண்ண மட்டும் தான் கரெக்டா இருக்கு... கொஞ்சம் செக் பண்ணி போடறேன்.... ஸ்பெல் மிஸ்டேக் கரெக்ஷன் பெருசா பார்க்க முடியலை... அதுனாலதான் லாக் இன் ஆப்ஷன் வச்சுருக்கேன்... மொபைல்ல கரெக்ட் பண்ண கடியா இருக்கு... நெக்ஸ்ட் வீக் லேப்டாப் எனக்கே எனக்குனு என் கைக்கு வந்துரும்னு நினைக்கிறேன்... அதுவரை ஸ்பெல் மிஸ்டேக்... லாக் இன் ஆப்ஷனை பொறுத்துக்கங்க....
நன்றி... நன்றி....
I’ve posted the 59-2 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
*/
அத்தியாயம் 59-2
”இந்தா மணி அக்கா… உனக்கு பாப்கார்ன்… ரித்வி…. இதைப் புடி” என ரித்விகாவிடம் ஐஸ் கிரிமை நீட்டிய தினகரிடம்…
“வேலண்ணா படம் பார்த்துட்டு சீட்டை விட்டு நகரவே இல்லை பாருங்க… பேய்னா அவ்ளோ பயமா வேலண்ணா “ தினகரிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்த வேலனையும் நேரடியாக ரித்விகா ஓட்ட.. தன்னை ஓட்டிய ரித்விகாவிடம்
“அது சரி… எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்… ’ஆர் கே’ அண்ணாத்த பழி வாங்கிட்டாரு எங்களை….. ஒரு காலத்துல…. அவர நாங்க தியேட்டர் தியேட்டரா கூட்டிட்டுப் போனதுக்கு… வச்சு செஞ்சுட்டாரு… மனுசன் ரொம்ப நாள் காத்திருந்தார் போல” சலிப்பாக சொல்லி முகத்தைத் தூக்கி வைத்தவனிடம்
“கர்சீப் இருக்குதானே…. கட்டிட்டு தூங்குங்க… எங்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு பேய்ப்படம் பிடிக்காதுன்னு… எங்க அண்ணன் தான் சொன்னாரு,… உங்களுக்கும் படம் பார்க்க பிடிக்கும்னு… உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து டிக்கெட் போட்டு கூட்டிட்டுப் போகச் சொன்னாரு… உங்களை கூட்டிட்டு வரணும்னு எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன…. அப்படித்தானே அண்ணி… ” ஐஸ்கிரிமை சாப்பிட்டபடியே… அசால்ட்டாகச் சொன்ன ரித்விகா… அவள் அண்ணியையும் தன் துணைக்குச் சேர்த்துக் கொண்டாள்…
கண்மணி வழக்கம் போல… கன்னக் குழி விழும் மென்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தவள் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை… பேசவும் விரும்பவில்லை அவள்…
“அதான் எங்க அண்ணாத்த பழி வாங்கிட்டாருன்னு சொன்னேன்ல” என்று பல்லைக் கடித்தபடி சொன்ன தினகர்…. கண்மணியைப் பார்க்க…. ரித்விகாவுக்கே பதில் சொல்லாதவள் இவனுக்கா பதில் சொல்வாள்…
இடைவேளை முடிந்து… மீண்டும் படம் திரையில் ஓட ஆரம்பித்து இருக்க…
“ரித்வி படம் போட்டாச்சு….” என்று சொல்லி விட்டு திரையில் கவனத்தை வைக்க…
“எங்க அண்ணி அடுத்து எனக்காக பேய்க்கதை எழுதித் தரப் போறாங்க… சோ… டிஸ்டர்ப் பண்ணாதிங்க” ரித்விகா… வேலன் மற்றும்தினகரிடம் கிசு கிசுப்பாக சொன்னவள்…
“இந்தக் காமெடியப் பாருங்க அண்ணி…” என்று ரித்வி கண்மணியுடன் சிரித்துக் கொண்டிருக்க…. பின்னால் அமர்ந்திருந்த தினகரும்…. வேலனுமோ கொலை வெறியுடன் அவர்களைப் பார்த்தபடி இருந்தனர்… படத்தைப் பார்க்காமல்
அதே நேரம் சரியாக ரிஷியும் கால் செய்திருந்தான்…
“அண்ணாத்த… பழி வாங்கிட்டதானே… ஆனாலும் அண்ணாத்த நீ இருக்கியே… நாங்க கேட்டோமா என்ன படம் பார்க்கனும்னு்… பல நாள் கடுப்பைத் தீர்த்தாச்சு அப்படித்தானே” எடுத்த எடுப்பிலேயே ரிஷியிடம் தினகர் ஆரம்பிக்க
ரிஷி…. தனக்குள் புன்னகையை அடக்கியபடி…
“எத்தனை நாள் என்னை வச்சு செஞ்சுருப்பீங்க…. ஓரமா உட்கார்ந்து கண்ணை மூடிட்டு தூங்கிட்டு வரல…. ஆனால் நீங்க தூங்கக் கூடாது… ரெண்டு பேரையும் பத்திரமா வீடு கொண்டு வந்து சேர்க்கிற வரை ” என்ற போதே
”இவங்க ரெண்டு பேரையும் பத்திரமா… நாங்க… நீ வேற… கடுப்படிக்காத….. எங்களை இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டா பத்தாது” நக்கல் கலந்த கடுப்போடு சொன்னவன்
”ஆனா அண்ணாத்த…. பேய்ப்படம் தான் வேணும்னு அடம் பிடிச்சு வந்தாங்க ரெண்டு பேரும்… அது கூட ஓகே… தாங்கிக்கலாம்…. ஆனால் பேய்ப்படம் பார்த்துட்டு… இவங்க ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிக்குறதுதுதான் தாங்க முடியலை…” மனம் நொந்து சொன்ன வேலனிடம்
“ஏண்டா புள்ளைங்களா கண்ணு வைக்கிற… சிரிச்சுட்டு போகுதுங்க… உங்களுக்கு ஏண்டா கடுப்பு” என்றவன்தான் மனைவி மேல் நிமிடத்தில் வந்து சென்ற தன் கடுப்பை எல்லாம் தனக்குள் மறைத்து வைத்தபடி பேசிக் கொண்டிருந்தான்….
“இங்க ஒருத்தன்…. என்ன பாடு பட்டுட்டு இருக்கான்… நீ அங்க ஜாலியா இருக்க…. “ பொருமிக் கொண்டிருந்தவன்… அதை வெளியே காட்டிக் கொள்ளவா முடியும்….
வெளியே காட்டிக் கொள்ளாமல்….தினகரிடம்
“டேய்… ரித்வி இப்போ வெளிய வருவா…. கவனம்… அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்று சொல்ல வந்த விசயத்தை சொல்லி விட்டவனாக வைத்தும் விட்டான்…
அவன் வைத்த அடுத்த நொடி….
“அண்ணி… ஃப்ரெண்ட்… மிஸ் அனுப்புன நோட்ஸ் கேட்கிறா… இங்க என் போன்ல சிக்னல் கிடைக்கல…. வெளில இருந்து அனுப்ப முடியமான்னு பார்க்கிறேன்” சொன்னபடியே எழுந்தவளிடம்… கண்மணி அவளோடு செல்ல எழ…
“நீங்க வேண்டாம் அண்ணி”
ரித்விகா வேகமாக மறுக்க…. அதே நேரம் தினகர் அவளோடு தான் செல்வதாகக் கூற… கண்மணி தினகரையும் அனுமதிக்கவில்லை…. அதே போல் ரித்விகாவையும் தனியே விடவில்லை…. அவளே ரித்விகாவோடு செல்ல…. இப்போது ரித்விகா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி அவள் பின்னே சென்றாள்…
ரிஷிதான் ரித்வுகாவுக்கு செய்தி அனுப்பி இருந்தான்… கண்மணியின் தற்போதைய புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் அனுப்பி வைக்கச் சொல்லி… அதுவும் கண்மணிக்குத் தெரியாமல்…
“இப்போது என்ன செய்வது… அண்ணா ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்கப் போறான் போல… அண்ணிக்குத் தெரியாமல்… ஆனால் அண்ணியும் எங்கூட வர்றாங்களே” என்று யோசித்தபடியே…. வெளியே வந்தவள்… எப்படியோ சமாளித்து தன்னிடமிருந்த கண்மணியின் புகைப்படங்களை கண்மணிக்குத் தெரியாமல் அனுப்பி்க் கொண்டிருக்க… ரித்விகா என்ன செய்கிறாள்… என்றெல்லாம் நோட்டம் விடாமல் தனியே சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள் கண்மணி…
அவள் எப்போதும்!!! அமைதிதான்… இதோ இப்போதும் அமைதிதான்…. ஆனால் இந்த ஒரு வார அமைதிக்கு காரணம் இருந்தது… ரிஷியோடு பேசாமல் இருப்பதுதான் அந்தக் காரணம் என்பதும் தெரியாமல் இல்லை அவளுக்கு… வீம்புக்காக எல்லால் அவள் பேசாமல் இருக்க வில்லை… அதே போல… அவன் தான் முதலில் பேச வேண்டும் என்று காத்திருக்க வில்லை…. இப்போது கூட பேசி விடுவாள் தான்… ஆனால் இவள் பேசியதும்… அவன்… ‘விக்கி’… ’மன்னிப்பு’ என்று ஆரம்பித்தால்…. மீண்டும் பிரச்சனையே…
கண்மணி மீண்டும் பேசும் போது… அவன் ’விக்கி’ பெயரையே இழுக்காதபடி பேச வேண்டும்… அதற்கு சரியான நாள் தன் பிறந்த நாள் மட்டுமே… தன் பிறந்த நாள் அன்று தன்னைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற பிறந்த நாளுக்கான தன் கோரிக்கையை வைத்தபடிதான் அவனிடம் பேச வேண்டும்… என முடிவு செய்திருக்க… கணவனோடு பேசும் நாளுக்காக பொறுமையாக காத்திருந்தாள்…
அவன் விக்கியைப் பற்றி பேசாமல் இருப்பானா… அது வேறு கதை… அது தெரியாது… ஆனால் ஒன்று மட்டும் உறுதி… ரிஷி தனக்காக…. தான் அவனிடம் பேச வேண்டுமென்று ஒவ்வொரு நொடியும் காத்துக் கொண்டிருப்பான் என்று கண்மணி நன்றாகவே உணர்ந்திருந்தாள்… அதே நேரம் அவனாக முதலிலும் பேச மாட்டான்… இறங்கியும் வர மாட்டான்… ஆனால் மனதோடு வைத்து போராடிக் கொண்டிருப்பான்… அது நிச்சயம்… கணவனை நினைத்து கவலையும்… அதே நேரம் கோபமும் ஒரு சேரத்தான் வந்தது…
ஆனாலும்… அவள் மனம் அவனுக்கே ஆதரவாக பேசிக் கொண்டிருந்தது
“அவன் அப்படித்தான்…. அவன் என்று அவனாக வந்து இவளிடம் சமாதானமாகி இருக்கின்றான்… ஆயிரம் ’ரிஷிக்கண்ணா’ என அழைத்து இவள் தான் அவனை மலை இறக்குவாள்… இப்போது மட்டும் புதிதாக அவனிடம் எதிர்பார்க்க முடியுமா…” என தனக்குள் பெருமூச்சு விட்டவள்…
“எப்போதடா… டிசம்பர் 31 …நள்ளிரவு 12 மணி வரும்…” என இந்த நான்கு நாட்களாக ஏங்கி காத்திருந்தது போல… இப்போதும் காத்திருக்க ஆரம்பிக்க…
அதே நேரம்… அங்கு நின்று கொண்டிருந்த துரையின் கண்களில் ரித்விகா பட்டாள்… கண்மணியின் முகம் சரியாகத் தெரியவில்லை என்பதை விட… துரையின் பார்வை முழுவதும் ரித்விகாவிடம் மட்டுமே… கண்மணி அவனது கவனத்திலேயே வரவில்லை
அங்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த துரையின் கண்களில் ரித்விகா பட…. அவனின் மூளை… அன்று ஏர்போர்ட்டில் பார்த்த ரித்விகாவை அவனுக்கு ஸ்கேன் எடுத்து அனுப்ப அவனது கண்கள் வேகமாக தன் பார்வையைக் கூர்மை ஆக்கி….. ரித்விகாவை மெல்ல அலசத் தொடங்கியிருந்தது வழக்கம் போல….
“இன்னைக்குனு பார்த்து மருது மிஸ் ஆகிட்டானே… மணி மணின்னு புலம்பிட்டு இருந்தவனுக்கு அப்ப்போப்ப இப்படி ஏதாவது தீனி போட்டா… அடங்கி நம்ம கூட இருப்பானே… இப்போதும் என்ன…. ஆள கடத்திட்டு அப்புறமா.. நம்ம மேல கோபமா இருக்கிற மருதுக்கு கால் பண்ணுவோம்… கூல் ஆக்குவோம்…”
திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தான் துரை
”எப்போதுமே என் கூடத்தான் இருக்கனும் மருது…. அதுக்காகத்தான் அந்த மணியை உன் கூட இருந்து பிரிச்சேன்… உனக்கு அவளுக்கும் உள்ள வயசு வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காட்டி… சொல்லி உனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை வளர்த்தேன்… இன்னும் என்னன்னமோ செய்தேன்… செஞ்சுட்டு இருக்கேன்… ஆனால் இப்போதும் கண்மணி கண்மணின்னு சொல்றதைத்தான் தாங்க முடியல… சென்னையே வரக் கூடாதுன்னு நினைத்தேன்… இங்க வந்து உனக்கும் எனக்கும் பிரச்சனை வந்ததுதான் மிச்சம்” என்று தனக்குள் மருதுவைப் பற்றி யோசித்தபடியே… முகத்தை தன்னிடம் கைக்குட்டையால் மறைத்து கட்டியபடியே… மெல்ல ரித்விகாவை நோக்கி முன்னேறியவன்… கண்களில் இப்போது கண்மணியின் முகம் நன்றாகவே தெரிய… அப்படியே ஆணி அடித்தாற் போல அந்த இடத்திலேயே நின்று விட்டான்
“நட்ராஜ் பொண்டாட்டியா… ச்சேய் இல்லை அந்த மணியோட அம்மா சாயல் அப்படியே இந்தப் பொண்ணுக்கு…” புகைப்படத்தில் தான் பவித்ராவை பார்த்திருக்கின்றான்… ஆனாலும் நன்றாக ஞாபகம் இருந்தது அவனுக்கு… நம்ப முடியாமல் பார்த்தவனுக்கு
அடுத்த நொடி…
”மணியா இது… ச்சேசே அவளா… இருக்காது… அதுவே ஒரு லூசு… இந்தப் பொண்ணுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லை “ என்று முடிவெடுத்த போதே…
“மணியக்கா… இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க…. உள்ள வாங்க” என்று துரையின் பின்னால் இருந்து ஆண் குரல் கேட்க…
ஆக அந்தக் ’கண்மணி’ தான் இங்கிருப்பது… என கிட்டத்தட்ட முடிவு செய்திருந்தான் துரை…
இப்போது ரித்விகாவின் அருகில் செல்வதா…. வேண்டாமா… அவனுக்கே குழப்பம் வந்திருந்தது… ரித்விகாவைக் கடத்தினால்… கண்டிப்பாக கண்மணியும் சம்பந்தப்படுவாள்… மருது கண்மணியைப் பார்த்து விட்டால்???… குழம்பியவனாக… அடுத்த அடி எடுத்து வைக்கக் கூட மறந்தவனாக… அவர்களையே பார்த்தபடி இருக்க
“ஏய் யார் நீ… ஏன் அவங்களயே பார்த்துட்டு இருக்க” தினகர் துரையை கேள்வி கேட்ட போதே
”தம்மடிக்க வந்தேன்…. பொம்பள புள்ளைங்க நிற்குதுங்கன்னு” தலையைச் சொறிந்தவாரே அந்த இடத்தை விட்டு துரை நகர்ந்து விட… தினகரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…
---
ஆஸ்திரேலியா - டிசம்பர் 30 அதிகாலை
“சொல்லுங்க சத்யா” ஒலித்த அலைபேசியை உடனே எடுத்து பேசினாலும்… ரிஷியின் குரல் கரகரப்புடன் ஒலித்த போதே… அவன் தூக்க கலக்கம் இன்னும் போகவில்லை என்பது நன்றாகவேத் தெரிந்தது சத்யாவுக்கு
“ ‘ஆர் கே’…நட்ராஜ் பக்கத்தில இல்லைதானே” சத்யா கேட்ட விதமே ரிஷிக்கு உடனடியாக எச்சரிக்கை மணியை ஒலிக்கவைக்க… வேகமாக எழுந்தவன்… சற்று தள்ளி… அட்டெண்டர் படுக்கையில் படுத்திருந்த நட்ராஜின் உறக்கத்தைக் கலைக்காமல்… அவர் அறியாமல் அந்த மருத்துவமனை அறையின் குளியலறைக்கு செல்ல நினைக்க….
இவன் நடமாட்டத்தில் நட்ராஜ் எழுந்து விட்டார் தான்… ஆனாலும் எப்படியோ சமாளித்து… உள்ளே வந்தவன்… அடுத்த நிமிடம் சத்யாவோடான தன் அழைப்பை வீடியோ காலாக மாற்றியிருந்தான்
“ஆர் கே… நீங்க சந்தேகப்பட்டது போல… அவன் ரித்வியையும்… கண்மணியையும் ஃபாளோ பண்ணினான் தான்…. நம்ம ஏரியா வரை வந்தான்…”
முகம் சுருக்கியவனாக….
“தினகர் சொல்லும் போது பெருசா சந்தேகம்லாம் படலை… ஆனாலும் தோணுச்சு… அதான் உங்ககிட்ட சொன்னேன்…. சோ வந்திருக்கான்… எங்க ஏரியா பையனா… விசாரிச்சீங்களா” என்ற போதே
“ஆளையே தூக்கிட்டோம்” சத்யா சொன்னபடியே…. முக்கால் வாசி மயக்கத்தோடு நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த துரையைக் காட்ட…
ரிஷியின் முகத்தில் பல்வேறு உணர்வுகளின் அதிர்வலைகள்… சத்தியமாக அவன் துரையை எதிர்பார்க்கவே இல்லை… தியேட்டரில் நடந்ததை தினகர் சொல்லி இருக்க… ரிஷியால் தினகரைப் போல்… இலேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை… சத்யாவிடம் சொல்லி…. கண்மணி ரித்விகா இருந்த இடத்திற்கு ஆட்களை அனுப்பச் சொல்லி இருந்தான்….
இங்கு துரை செய்த தவறு என்னவென்றால்…
தான் பார்த்த பெண்… கண்மணியா… என்பதை முற்றிலுமாக உறுதி செய்து கொள்ள துரை கண்மணியை பின் தொடர நினைத்தவனாக அவள் பின்னே செல்ல… அதே போல் அந்தப் பெண்ணும் அவள் ஏரியாவுக்கு இல்லையில்லை அவனது பழைய முதலாளி நட்ராஜ் வீட்டுக்கேச் செல்ல… தான் பார்த்த பெண் கண்மணிதான் என்று நூற்றுக்கு இருநூறு சதவிகிதமாக தனக்குள் உறுதி செய்தபோதுதான்…. யாரோ தெரியாத நபர்களால் துரை மயக்கமாக்கப்பட்டிருந்தான்….
இதோ இங்கு ரிஷியின் பார்வைக்கும் காட்டப்பட்டுக் கொண்டிருந்தான்
“சத்யா… இவன் தான்… அந்த துரை… போட்டோல பார்த்த முகம் தெரியலையா சத்யா… இவனும்… இவன் ஃப்ரெண்டும்… அவன் எங்க… கண்டிப்பா ரித்வியத்தான் ஃபாளோ பண்ணிருக்காங்க…. நான் சொன்னேனே” படபடத்தான் ரிஷி…. அவனால் கத்திக் கூடப் பேச முடியவில்லை… எங்கு இவன் சத்தமாகப் பேசினால் நட்ராஜ் வந்து விடுவாரோ என்று…
ரிஷி அப்படி இருக்க… சத்யா… குழம்பியவனாக…
“நானும் போட்டோல பார்த்துருக்கேன்தான்…. ஆனால நேர்ல பார்க்கும் போது கண்டுபிடிக்க முடியலை….அடையாளம் தெரியல ’ஆர் கே’… யாரோன்னுதான் கடத்துனோம்… எனக்கே இப்படின்னா… ரித்விகாவை எப்போதோ உங்க மொபைல்ல பார்த்த அடையாளத்தை வச்சு ஃபாளோ பண்றதுக்குலாம் சான்சே இல்லை… ஒருவேளை இப்படி இருக்கலாம்… ரித்வியோட உங்கள சேர்த்து பார்த்திருக்கலாம்… “ சத்யா தன்பக்க விளக்கத்தைக் கொடுக்க…
“எது எப்படியோ… அவனுங்க என்னைத் தேடி வந்துருக்காங்க சத்யா…. அதுமட்டும் இல்லை… இன்னொருத்தன் அவன் எங்க… துரை ரித்விகாவைப் பாளோ பண்ணிட்டு வந்துருக்கான்னா… அவன் அந்த மருது ரிதன்யா… இல்லையில்ல ரிதன்யாவையும் இந்த துரைதான் பாளோ பண்ணிருக்கனும்… அப்போ அந்த மருது மகிளாவை டார்கெட் பண்றானா” ரிஷி வேகமாக தனக்குள் ஆராய்ந்தபடி சத்யாவிடம் பேச ஆரம்பித்தவனாக
“சத்யா… மகிளாக்கு ஏதும் ஆகக் கூடாது… அவ கன்சீவா வேற இருக்கா… ” என்ற போதே
“அவ நல்லா இருக்கனும்னுதான் அவள விட்டே நான் விலகினது… இப்போ என்னால ஏதாவது ஆனுச்சுசுன்னா… “ என்றவனின் குரல்… கம்ம ஆரம்பித்து இருக்க
“நான் பார்த்துக்கறேன்… ’ஆர் கே’… இவனை வச்சே அவனையும் பிடிச்சுறலாம்” என்ற போதே ரிஷியும் தன் இயல்புக்கு வந்திருக்க…
“சத்யா… நான் சொல்றதை மட்டும் நல்லா கேட்டுக்கங்க… இவனைத் தேடி அவன் வருவான்… அந்த மாதிரி பந்தம் இரண்டு பேருக்கும்… மருதுவையும் சுலபமா நம்ம கஸ்டடிக்கு கொண்டு வந்துறலாம்… அதுக்கும் முன்னால… இவன் ஏன் கண்மணியையும் ரித்வியையும் ஃபாளோ பண்ணிட்டு வந்தான்னு… சரியான காரணம் கண்டுபிடிங்க… ரித்வி என்னோட தங்கைனு தெரிஞ்சு வந்தானா…இல்லை… தெரியாமலா… அதைக் கண்டுபிடிங்க… கண்மணி அவனோட டார்கெட்டா இருக்காது…. சின்னப் பொண்ணுங்க அவங்கதான் இவனுங்க டார்கெட்…. இவனுங்க இன்னும் திருந்தலை… இன்னும் இப்படியேதான் சுத்திட்டு இருக்காங்க… அது மட்டும் நல்லா தெரியுது… ஃபேபியோ கைல மட்டும் மாட்டினானுங்க… அவர் கையாலயே இவனுங்களுக்கு சங்கு ஊதிருவாரு” என்று பல்லைக் கடித்தவன்…
“கார்லாவைத் திரும்பப் பார்க்கக் கூடாது… என்னைப் பார்த்தால் அன்னைக்கு நடந்த தேவையில்லாத நிகழ்வுகளும் அவளுக்கு வரும்னுதான் நானே அவளையே தவிர்த்தேன்… ஆனால் கார்லா சோ மெச்சூர்ட்… லைஃப ஹேண்டில் பண்ணக் கத்துக்கிட்டா… ஃபேபியோ அப்படி இல்லை… … கார்லோவோட அப்பாவா இன்னும் அவர் துடிச்சுட்டு இருக்காரு….“ என்றவன்… மௌனமாகியும் இருந்தான் சில நிமிடம்
“ஆர் கே” என்று சத்யா நிதானப்படுத்த
“2 நாள் அவன் கிட்ட எவ்வளவு தகவல் கிடைக்குதோ… அதெல்லாம் வாங்கப் பாருங்க… மருதுவையும் பிடிங்க… அண்ட்… நான் இந்தியா வரும் போது… அவங்க இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாது… இந்த மாதிரி கேவலமான நாய்களுக்கு இந்த உலகம் தேவையே இல்லை…” என்றவனிடம்…
”புரியுது ஆர்கே… ஆனால்… இப்போ இது தேவையா… இவனுங்க நமக்கு முக்கியமா… நமக்கு ’ஆதவன்’… அவன் தான் இனி முக்கியம்… இனிமேலதான் நமக்கு பிரச்சனையே”
“எல்லாமே முக்கியம் சத்யா… எதுவுமே சின்னது பெரியதுன்னு இல்லை… ஆதவன் என்னை பொருட்டா மதிக்காததுனாலதான்… நாம அவனுக்கே தெரியாமல்… அவனே உணர முடியாத அளவுக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்கோம்… சோ இங்க பிரச்சனை பிரச்சனைதான்… தியேட்டர்ல தினகர் சொன்னத நானும் சாதாரணமா விட்ருந்தேன்னா… துரை இப்போ நம்ம கண்ட்ரோலுக்கு வந்திருக்க மாட்டான் தானே… “
“ஹ்ம்ம்…புரியுது… நான் பார்த்துக்கறேன் ’ஆர் கே’”
“மருதுவை எப்படியாவது கண்டுபிடிக்கனும் சத்யா… அப்போதான் மகிளா விசயத்துல பெருசா கவலைப்பட தேவையிருக்காது…” மீண்டும் ரிஷி சொல்ல… அதையும் கேட்டுக் கொண்டான் சத்யா…
“அடுத்து ஆதவன்… அர்ஜூன்… விக்கி மீட்டிங் பற்றி சொன்னேனே… அதை யோசிச்சிங்களா… ஆதவன் எவ்வளவு டேஞ்சர்னு தெரியும் உங்களுக்கே…. “
“ப்ச்ச்… இந்த அர்ஜூன் ஏன் அவனை மீட் பண்ணப் போனான்… விக்கிக்கு அர்ஜூனைத் தெரியமா என்ன… அந்த அர்ஜூன் வேற… என் பிரின்சஸ்… தேவதைனு… எதையாவது அந்த ஆதவன் கிட்ட சொல்லி வைக்கப் போகிறான்… “ எரிச்சலாக நெற்றி சுருக்கியவன்…
“எனக்கும் அதே பயம் தான்… மேடம் அர்ஜுனோட வீக்னெஸ்னு தெரிந்தால்… ஏதாவது பிரச்சனைனா… மேடத்தைத்தான் அவன் குறி வைப்பான்” சத்யா சொல்லிக் கொண்டிருந்த போதே… உச்சியில் சுர்ரென்று ஏறி இருந்தது ரிஷிக்கு
…
“சத்யா…” ரிஷியிடமிருந்து வந்த உறுமல் குரலே… சத்யாவை நிறுத்தி இருக்க
“உங்களுக்குனு மரியாதை என்கிட்ட இருக்கு… ஆனால் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… இன்னொரு தடவை… அர்ஜூனோட பலவீனம்… அது இதுன்னு… என் கண்மணி பேரை இழுத்தீங்க… என்ன சொல்வேன்னு எனக்கே தெரியலை” ஆக்ரோஷம் அவனுக்குள் வந்திருக்க… அதில் அவன் முகம் சிவந்திருந்தது… இருந்த இடம் அத்தனையும் மறந்து ரிஷி உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்திருக்க..
அதுவே ரிஷியின் கோபத்தின் அளவைச் சொல்லி இருக்க சத்யாவுக்குமே அப்போதுதான்… தான் வார்த்தைகளை விட்ட விதம் புரிய…
“சாரி… ஆர் கே” சத்யாவின் உதடுகள் தானாகவே மன்னிப்பை வேண்டி முணுமுணுக்க… ரிஷியும் ஓரளவு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக
‘விடுங்க… இனிமேல இந்த மாதிரி பேசாதீங்க… பேசவும் கூடாது” மென்மையாக ஆரம்பித்து முடிக்கும் போது ரிஷியின் குரலில் அழுத்தம் வந்திருந்தது… அதே நேரம் அடுத்தும் பேசவில்லை அவன் மௌனமாகி இருந்தான்…
இப்போதைய அவனின் மௌனம் உணர்ந்த போது…. சற்று முன் உச்சக்கட்ட குரலில் கத்தியவனா இவன் என்று தோன்றியது சத்யாவுக்கு…
அர்ஜூனை கண்மணியோடு சேர்த்து பேச வேண்டும் என்றெல்லாம் இவன் நினைக்கவில்லை… பேச்சு வாக்கில் வந்து விட்டது… உணர்வுகளின் கட்டுப்பாடு…. எதிலும் நிதானம்… அலசி ஆராய்வது… என ரிஷி எல்லாம் கற்றுக் கொண்டிருந்தாலும்…. காலம் பழக்கி இருந்தாலும்…. கண்மணி என்று வரும்போது ரிஷி தன் கட்டுப்பாட்டை இழக்கின்றான்… அதுவும் சில நாட்களாக… ரிஷியை முழுவதும் அறிந்தவனான சத்யாவுக்கு… ரிஷியின் நிலை புரிய…
மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டவனாக
”நீங்க எதை நினைத்தும் கவலைப்படாதீங்க…. 2 வீக்ஸ்… அதுவரை நான் பார்த்துக்கறேன்… யாரோட பாதுகாப்பையும் நினைத்து ஃபீல் பண்ண வேண்டாம்… எல்லாரையும் நாங்க பார்த்துக்கிறோம்… மகிளா இருக்கிற ஏரியாக்கு இப்போதே கூடுதலா ஆள அனுப்பறேன்… “ என்றவன்
“கண்மணி மேடத்துக்கு எந்த மாதிரி செக்யூரிட்டி போட்றது…. அவங்களுக்குத் தெரியாமல் போட்றதெல்லாம் சான்சே இல்லை… ஏரியால்ல யாராவது அவங்ககிட்ட சொல்லிருவாங்க” சத்யா தன் சந்தேகத்தைக் கேட்க…
“வேண்டாம்… மத்தவங்கள எல்லாம் நீங்க பார்த்துக்கங்க…. நான் அவளைப் பார்த்துக்கறேன்…” என்றவனிடம்
“நீங்க இந்தியா வந்த பின்னால ஓகே… அதுவரை ” சத்யா இழுக்க…
“உங்க மேடம் சென்னைல இருந்தால் தானே…. இங்க வந்துருவா… என்கூடத்தான் இருக்கப் போகிறாள்… சோ ஒண்ணும் பிரச்சனை இல்லை… மத்தவங்களைப் பார்த்துக்கங்க… அந்த துரையை நம்ம பாஷைல நல்லா விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிச்சுட்டு… எனக்கு சீக்கிரம் கால் பண்ணுங்க… வைக்கவா….” என்றவனிடம்
“மேடத்துக்கு டிக்கெட் போட்டுருக்கீங்களா ஆர் கே” ஆச்சரியமாக சத்யா கேட்க
இல்லையென்று மறுத்து தலையை இட வலமாக ஆட்டிய ரிஷி
“என்னோட கால்குலேஷன் படி…. இன்னைக்கு என்ன டேட் டிசம்பர் 30…. ஜனவரி 3 இல்லை 4 இங்க இருப்பா….” தனக்குள் பேசியபடியே…. இருந்தவன்… சத்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்ந்தவனாக
”அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு…. கண்மணியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்… நான் மட்டும் அவளுக்குப் போதும்….” என்று முடித்திருக்க
“யார் யாரையோ பற்றி எல்லாம்… யோசிக்கிற ஆர் கே…“ மலர்ந்த புன்னகையோடு சத்யா ஆரம்பித்த வார்த்தைகளை… கண்மணியின் கணவனாக ரிஷிகேஷ் நிறைவு செய்திருந்தான்…
“இந்த ரிஷிக் கண்ணாவோட உயிர் அவ… அவளைப் பற்றி யோசிக்காமல் இருப்பானா????”
டிசம்பர் 30 அதிகாலை…
“எப்போதடா… டிசம்பர் 31… நள்ளிரவு 12 மணி வரும்…” கண்மணி போல அவளது கணவனும் காத்திருந்தான்…
Maruthu durai kanmani visayathula sambathapatrukanganu Rishi ku innum trla pola ye
Visaranaila unmai varuma
Lovely update