/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி...
இந்த எபி படிச்சுட்டு செம காண்டாகுவீங்கன்னு தெரியும்.... வேற வழி இல்லை... அது என்னமோ தெரியல.... ஹீரோ ஹீரோயின் தவிர மற்ற கதாபாத்திரத்துக்கு ரொமான்ஸ் எபிசோட்... எழுதுறது மொக்கையாத்தான் வருது...
அதே வார்த்தைகள்... அதே உணர்வுகள் தான்.... ஆனால் கனெக்ட் பண்ணிக்க முடிய மாட்டேங்குது.... எழுதுற எனக்கே அந்த ஃபில் வருதுன்னா... உங்களுக்குமே அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்...
எந்த கதை எழுதினாலும்... ஃபர்ஸ்ட் எபிசோட் எழுதும்போதே ஹீரோ-ஹீரோயினூக்கான எல்லா சீன்ஸுமே A to Z... அல்ரெடி ஃபிக்ஸ் பண்ணிட்டுத்தான் எழுதவே ஆரம்பிப்பேன்... ஸோ அவங்க சீக்வன்ஸ் எழுத எனக்கு சிரமமே இருக்காது... அதே போல ரொமான்ஸ் எபிசோட்ஸுமே எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன்... எந்த எபிசோட்... காரணம்... இடம் , உணர்வுகள்னு... அவங்களுக்கான சீக்வன்ஸ் ... என்னோட நாயகன்- நாயகி கதாபாத்திரங்களுக்கான மரியாதை குறையாமல்... டோட்டல் ப்ளானோடத்தான் கதை எழுதவே ஆரம்பிப்பேன்... கண்டிப்பா இந்தக் கதைக்கும் அதாவது ரிஷி கண்மணிக்கும் அப்படித்தான் எழுதுவேன்....
ஆனால் இந்த மாதிரி மற்ற ஜோடிகளுக்கான பார்ட் எழுதுறதுதான் கஷ்டமே... ஆன் தெ ஃப்ளோல அப்போ மைண்ட்ல வருகிற சீன்... மே பி திணிக்கிற ஃபீல் கூட வரலாம்... இவங்களுக்கு இவ்ளோ ஃபீல் கொடுத்துதான் தான் என்னால எழுத முடியுது.... எனிவே ஒரு எபிசோட் அதிகம்னாலும்... 60 எபிசோட்ல விக்கி-ரிதன்யாக்கு ஒரு எபிசோட்னு கொஞ்சம் மன்னிச்சு விட்ருங்க
*/ I’ve posted the 59-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
அத்தியாய 59-1
ஆஸ்திரேலியா - டிசம்பர் 29
அந்த அறை – கிட்டத்தட்ட ரிஷி தங்கியிருந்த ஹோட்டலின் அறையைப் போலத்தான் இருந்தது…. நிசப்தம்… தூய்மை என. ஆனால் இவற்றோடு மருந்துகளின் வாசமும் கூடுதலாக வர… அதுதான் சொன்னது அவன் மருத்துவமனையில் தங்கியிருக்கின்றான் எனபதையே…
நேற்றில் இருந்து இப்படியே படுத்திருந்தது வேறு அவனுக்கு கடுப்பாக வந்தது…
தலையில் போடப்பட்டிருந்த கட்டை இலேசாக தொட்டுப் பார்க்க… இலேசான வலி மட்டுமே… நேற்றைய வலி போல் இன்று இல்லை….
என்ன செய்வது என்று தெரியாமல்…. மீண்டும் கண் மூடி படுத்தவனுக்கு…. நட்ராஜ் ஞாபகம் வந்து… நட்ராஜைத் தேட… அவரோ அங்கில்லை… இரண்டு நாட்களாக தான் இல்லாமல் எப்படி தனியாகச் சமாளித்தார் என்று அவரை நினைத்து மனம் சுணங்கியதுதான்… என்னதான் தமிழ் பேசும் உதவியாளர்கள் இருந்தாலும்… நட்ராஜ் அவர்களிடம் அவ்வளவாக ஒட்ட மாட்டார்… கார்லாவோடு இந்த இரண்டு நாட்களாக நட்ராஜ் பேச ஆரம்பித்திருக்க… கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்திருந்தது ரிஷிக்குமே…
அதோடு மட்டுமல்லாமல்…. நியூ இயர் ஈவ் பார்ட்டிக்கும் நட்ராஜ வர சம்மதித்திருந்ததும் ஆச்சரியமே… மருத்துவமனையில் இருந்து நேராக கார்லா வீட்டுக்கு போவதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது…. அதற்கும் நட்ராஜும் மறுப்பு சொல்லவில்லை….
நட்ராஜ் மாற்றத்தை தனக்குள் யோசித்தபடியே இருந்த போதே… அவனது அலைபேசி அடிக்க… எடுத்துப் பார்க்க சத்யா…
சத்யா ஒருவனுக்கு மட்டுமே மருத்துவமனையில் ரிஷி இருக்கின்றான் என்பது தெரியும்…
இந்தியாவில் வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று ரிஷி நட்ராஜிடம் சொல்லிவிட அவரும் யாருக்கும் சொல்லவில்லை…. ரிஷி சத்யாவுக்கு மட்டும் அவனாகவேத் தெரியப்படுத்தி இருந்தான்…
“எப்படி இருக்கு ’ஆர்கே’… இப்போ” கேட்டான் சத்யா
“இப்போ ஓகே… லைட்டா பெயின்… அதுகூட தொட்டால் மட்டும் தான்… ஆனால்… நான் ஓகேன்னு சொன்னால் கூட விட மாட்டேங்கிறாங்க…. ” என்று சிரித்தபடியே… ஆரம்பித்தவன்… அடுத்த நிமிடமே … தொழில் ரீதியான அதன் சம்பந்தபட்ட விசயங்களைப் பேச ஆரம்பித்திருக்க… அரை மணி நேரம் கடந்திருந்தது…
கிட்டத்தட்ட எல்லாம் பேசி முடித்து… போனை வைக்கப் போன சத்யா… வைக்கப் போகும் முன்
“ஆர் கே” என்று தயங்கிய போதே… ரிஷி அவனிடம்
“என்ன சத்யா… என்ன தயக்கம்… எதையும் என்கிட்ட மறைக்காதிங்க…” என்று அவனிடம் என்ன விசயமென்று கேட்க… சத்யா தனக்குள் யோசித்து பின் ஆரம்பித்தான்….
“ரிதன்யா… பற்றிதான் ’ஆர் கே’”
“சொல்லுங்க” என்ற போது ரிஷியின் குரலும் மாறியிருந்தது
“ரிதன்யா விக்ரமை… தினம் மீட் பண்ணிட்டு இருக்காங்க… இந்த நாலு நாளா தொடர்ந்து…” என்று சத்யா சொல்லிவிட்டு அமைதி காக்க
“ஹ்ம்ம்” என்று மட்டும் சொன்னவன்… சில நொடிகள் நிதானித்து
“நான் தான் ஃபாளோ பண்ண வேண்டாம்னு சொன்னேன்ல… பின்ன ஏன்…” சத்யாவிடம் கேட்க
”பாப்பாவும்… மேடமும் நாங்க ஃபாளோ பண்றதில்ல… ஸ்கூல்… வீடுன்னு சேஃபெஸ்ட் ப்ளேஸ்… ரிதன்யா அப்படி இல்ல ’ஆர் கே’…. ஆஃபிஸ் வீடு இல்லாமல் நிறைய ப்ளேஸ் போறாங்க… இதுல மகிளாவையும் வேற அவங்க கூட கூட்டிட்டு போயிட்டு இருக்காங்க…. இப்போதான் விக்ரம் வந்த பின்னால…. மகிளா கூட அதிகம் போறதில்லை”
எல்லாம் கேட்டவன்….
“விட்ருங்க…. விக்கி பார்த்துப்பான்” என்று ரிஷி முடிக்க… அதுவே சொன்னது தன் நண்பன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையை…
ரிதன்யா விசயத்தை முடித்தவன்….
”ரித்வியும் கண்மணியும் இன்னைக்கு மூவி போவாங்கன்னு நினைக்கிறேன்…. கண்மணி பார்த்துப்பாதான்… சோ ஒண்ணும் பிரச்சனை இல்லை… ஆனால் நம்ம பசங்க யாராவது போய் அதை அவப் பார்த்துட்டா… அப்போதான் பிரச்சனை…சோ அவங்களையும் ஃப்ரியா விட்ருங்க… அவங்க பாதுகாப்புக்கு என்ன பண்ணனுமோ…. அதை பண்ணிட்டேன்” என்று தகவல் சொன்னவன்… சத்யாவுடனான அழைப்பையும் கட் செய்திருந்தான்….
ஆனால் அலைபேசியைத்தான் வைக்கவில்லை… கை தானாகவே அலைபேசியின் புகைப்படத் தொகுப்புக்குள் போய்… மனைவியின் சிறு வயது புகைப்படத்தை எடுத்தவனின் பார்வை அந்தப் புகைப்படத்தில் நிலைத்திருந்தது….
அவன் கண்களுக்கு… குறும்புத்தனமான கண்மணியின் முகமே முழுவதுமாக நிறைந்திருக்க… அந்த ஆண்ட்ரூஸின் வார்த்தைகள் இப்போதும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது…
“இந்த புகைப்படத்தில் தன்னவளைப் பார்த்த போது… கணவனான அவனுக்கே… அவளை சிறுமியாக மட்டுமே பார்க்கத் தூண்டும்… ச்சேய்…. என்ன மனிதர்கள்….” என தனக்குள் நினைத்த போதே…. கார்லாவின் ஞாபகம் வர… நிச்சயமாக இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை… அழுக்கும்… குப்பையும்… அசிங்கமும் மட்டுமே ரத்தமாகவும்… சதையாகவும் படைக்கப்பட்ட உள்ள கேவலமான ஜந்துக்கள்… மனித ஜென்மங்களே இல்லை….
அன்று நிகழ்ச்சியின் போது நடந்த அடிதடி கலவரம்… இவனுக்கு மருத்துவமனை வாசம் கொடுத்திருக்க… ஆண்ட்ரூஸ் மற்றும் அவனது நண்பனுமோ விதிமுறை மீறலின் காரணமாக… போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்…
ரிஷியின் மனநிலையே மாறி இருக்க… அலைபேசியை வைக்கப் போனவனுக்கு வைக்க மனமே இல்லை… கண்மணியின் இப்போதைய புகைப்படம் அப்போதே அவனுக்கு வேண்டும் என்று தோன்ற… ரித்விகாவுக்கு அடித்தான்… அவள் அண்ணியின் தற்போதைய புகைப்படங்களை அனுப்பச் சொல்லி…
ஆனால் அவளோ போனை எடுக்கவே இல்லை…
---
சென்னை டிசம்பர் 29 நன்பகல் பொழுது…. கடற்கரை
ரிதன்யாவும் விக்கியும் காரில் அமர்ந்திருந்தனர்… விக்கியின் கவனம் முழுவதும்… ரிதன்யாவின் அலைபேசியிமல் ஓடிக் கொண்டிருந்த ரிஷி-நட்ராஜ் பேட்டி கொடுத்த வீடியோவில் மட்டுமே….
முழுவதுமாக பார்த்து முடித்தவன்… அதை அணைத்து வைத்து விட்டு ரிதன்யாவை நோக்கி நிமிர்ந்தான்
அவன் முகம் முழுவதும் நண்பனின் இந்த வளர்ச்சியைப் பார்த்த பெருமை மட்டுமே
”ரிஷி யாரையும் ஈஸியா ஹேண்டில் பண்ணுவான்னு எனக்கு அப்போதே தெரியும் ரிது… அதுதான் இன்னைக்கு அவனை இங்க கொண்டு வந்திருக்கு… அவனுக்கு ஸ்முத்தா இருக்கனும் எல்லாமே… அந்த கம்ஃபர்ட் ஸோன் அவனுக்கு வேண்டும்… சோ… அதுக்காகவே மத்தவங்களையும் ஈஸியா காம் பண்ணிருவான்… ” என்று புன்னகைத்தவன்
“ஆனால் இப்போ அவனுக்கு… அந்த அமைதி இல்லை… அதை அவனுக்கு கொடுக்கவும் யாரும் இல்லை…” என்று எங்கேயோ பார்த்தபடி சொன்னவன்…
“நட்ராஜ் மேல அன்பு… மரியாதை எவ்ளோ வச்சிருக்கான்… ஆச்சரியமா இருக்கு…. உங்க அப்பா ஸ்தானத்துல வச்சிருக்கான்… அவருக்காக… அவர் சந்தோசத்துக்காக எதுவுமே பண்ண தயாரா இருக்கான்… இதுனால கூட அந்தக் கண்மணி அவன் வாழ்க்கைல வந்துருக்கலாம்… “
என்ற போதே ரிதன்யா… அவனின் கடைசி வாக்கியத்தை தவிர்த்தவளாக
“அண்ணாவுக்கும்… அந்தக் கண்மணிக்கும் இடையில உங்களால பிரச்சனைனு நினைக்கிறேன் விக்கி… அம்மா சொன்னாங்க” ரிதன்யா சொல்ல
நெற்றி சுருக்கியவனாக
“சொல்லாதேன்னு சொன்னேன் நான்…. சொல்லச் சொல்ல… ரிஷிகிட்ட சொன்ன… இப்போ என்ன ஆச்சு…” ரிதன்யாவைக் கடிந்தவனாக அவளை முறைக்க…. அவளோ முகம் வாடி அமைதி காக்க…
“என்கிட்ட அவ மன்னிப்பு கேட்கனும்… அதுக்காகத்தானே சொன்ன” விக்ரம் ரிதன்யாவைப் புரிந்து கேட்க…. குனிந்தபடியே ரிதன்யா தலை ஆட்டினாள்… கண்மணி மன்னிப்பு கேட்காத ஆதங்கம் வேறு… ஆத்திரம் வேறு… குற்ற உணர்ச்சி வேறு என தனக்குள் மருகிக் கொண்டிருக்க
”ரிஷி திட்டிட்டான்னு… ஓடி வந்து மன்னிப்பு கேட்டுட்டாளா என்ன… அவளாவது மன்னிப்பு கேட்கிறதாவது… அவள்ளாம் யாருக்கும் அடங்க மாட்டா... அது எனக்கு நல்லாவேத் தெரியும்” விக்கியின் முகம் அவமானத்தில் முகம் சுருங்கினாலும்… குரல் மாறினாலும்…. சட்டென்று மாற்றிக் கொண்டான் தான்
ஆனாலும்ரிதன்யாவுக்கு புரியாமல் இருக்குமா என்ன!!…
”சாரி விக்கி… என்னாலதான்… எல்லாமே… அன்னைக்கு நீங்க கூட பிரச்சனை பண்ணாமல் தான் ஒதுங்கிப் போக நினைத்தீங்க… ஆனால் நான் தான்”
“விடு… “ என்று பேச்சை மாற்ற நினைத்தான் தான் ஆனாலும் முடியவில்லை… அன்றைய நிகழ்வை நினைத்தபோது இரத்தம் கொதித்ததுதான்… தன் அருகில் நின்று பேசவே பயப்படுவார்கள்…. அப்படிப்பட்ட தன்னை… கண்மணி அறைந்த காட்சி… இப்போது வந்து நிழலாட…. உடல் விறைத்து கைகள் இறுகியது விக்ரமுக்கு
“ரிஷிக்காக…. உனக்காக மட்டுமே… அன்னைக்கு அவள திருப்பி அடிக்கலை… இல்லை” எனும் போதே… அவன் தனக்குள் அடக்கிய கோபம் கண்களில் வந்து நிற்க…. ரிதன்யாவோ அவனை விட ஒரு படி மேலே இருந்தாள் கோபத்தில்…. அது அவள் வார்த்தைகளிலும் வந்திருந்தது
“ஆனால் அவ உங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும் விக்கி… கேட்க வைப்பேன்… விட மாட்டேன் விக்கி…. உங்கள அடிச்சதுக்கு அவ கண்டிப்பா பதில் சொல்லனும்… …” ஆவேசமாக ரிதன்யா சொல்ல…. இப்போது விக்கிதான் ரிதன்யாவை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தான்
”அண்ணாக்கும் அவளப் பற்றி தெரிய ஆரம்பித்திருக்கும்… பிரச்சனை ஸ்டார்ட் ஆகி இருச்சுதானே… அந்த வகையில எனக்கு கொஞ்சம் ஆறுதல்” சொன்ன போதே… விக்ரமுக்கு கண்மணியைப் பற்றி பேசவே பிடிக்கவில்லை…. தான்தான் மீண்டும் மீண்டும் கண்மணியைப் பற்றி அவனிடம் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்தவளாக… அமைதியாகி சில நிமிடங்கள் இருந்தவள்…. இப்போது தன்னையே மாற்றி… மலர்ந்த முகத்தோடு
‘மகிளாகிட்ட சொன்னேன் விக்கி.…. உங்களப் பார்த்தேன்னு.. ரொம்ப சந்தோசப்பட்டா விக்கி…. உங்கள பார்க்க அவளும் ஆர்வமா இருக்கா… எப்போ பார்க்கலாம்… ரித்வியும்… அம்மாவும் கூட… வீட்டுக்கு வாங்க விக்கி…” என்றவள்… அவளே மறுத்தபடி
“இல்லல்ல… அந்த வீட்டுக்கு வேண்டாம்… அண்ணா இன்னும் 2 வீக்ஸ்ல வந்துருவாங்க… அதுக்கப்புறம் நேட்டிவ்வா… இல்லை இங்க சென்னையிலேயே வேற ஏதாவது வீடான்னு தெரியல… ஆனால் நிச்சயமா அந்த கண்மணியோட வீட்ல மட்டும் இல்லை… ப்ரேம் அண்ணாகிட்ட சொல்லி வீடு பார்க்கச் சொல்லனும்… எப்போடா அண்ணா இந்தியா வருவான்னு இருக்கு… மறுபடியும்… நாங்க எங்க வாழ்க்கைக்கு திரும்பப் போறோம்னு நினைக்கும் போது அவ்ளோ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா… இந்த வேலை கூட அந்தக் கண்மணியை அவாய்ட் பண்ணத்தான்… சீக்கிரம் ரிசைன் பண்ணிருவேன்… அம்மா சரியாயிட்டாங்க… இன்னும் அந்த கோர்ட் கேஸ்தான்… எங்க கம்பெனி கிடச்சுட்டா… அவ்ளோதான்… எங்க குடும்பம் மறுபடியும் அதே இடத்துக்கு போயிரும்” என்ற ரிதன்யாவின் முகத்தில் அத்தனை குதூகலம்…
விக்கி அவளை… அவள் பேசுவதை…. அவள் முகம் காட்டும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பார்த்தபடியே இருந்தவன்… இடையிட்டுப் பேசவே வில்லை… ரிதன்யாவைப் பேசவிட்டு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…
இவனை எல்லாம் ரிதன்யா கவனிக்கவில்லை…. மடை திறந்த வெள்ளம் போல விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்க…. இப்போது விக்கியின் அலைபேசி அடிக்க ஆரம்பித்து இருந்தது… ஆதவன் தான் அழைத்திருந்தான்…
அழைப்பை எடுத்தானோ இல்லையோ… வேகமாக ரிதன்யாவின் புறம் திரும்பி…
“ஷ் ஷ் ஷ்” என்று ரிதன்யாவிட சைகை காட்ட…. அவளும் பேச்சை நிறுத்த… இவனும் அழைப்பை எடுத்திருந்தான் விக்ரம்
இப்போது ரிதன்யா “யார்” எனக் கேட்கப் போக… எங்கே அவள் குரல் கேட்டு விடுமோ என்ற பதற்றத்தில் விக்கி வேக வேகமாக… தன் ஆள்காட்டி விரலை… அவள் உதட்டில் வைத்து… அவளை பேசவிடாமல் அமைதி ஆக்க…
தான் தொட்டிருந்த ரிதன்யாவின் இதழ்களின் மென்மையை விக்கி உணர்ந்தானோ இல்லை… விக்கியின் விரல் சூட்டை ரிதன்யா உள்வாங்கியிருக்க… அவளையும் மீறி ஒரு பதற்றம்… அவளுக்குள் வந்திருந்தது…. விக்ரம் அதை எல்லாம் கவனிக்காமல்
”ஆதவன்… நான் இங்க பக்கத்திலதான் இருக்கேன்… பத்து நிமிசத்துல வந்துருவேன்…. மீட் பண்ணலாம்… வெயிட் பண்ணுங்க” என்று ஆதவனிடம் மட்டுமே கவனம் வைத்து பேசி முடித்து வைத்தவன்…. ரிதன்யாவிடம் திரும்ப…
அப்போதுதான்… அவனே உணர்ந்தான்…
தன் விரல் அவளது உதட்டின் மேல் இருப்பதை… அதுமட்டும் இல்லாமல் ரிதன்யாவின் முகத்தில் இருந்த… அந்த அழகான படபடப்பையும்… இது எல்லாவற்றையும் விட… அவளின் இதழின் சிறு ஸ்பரிசம்…
சிறகடிக்கப் பறக்கத் தொடங்கியிருந்தது இதயம் இவனுக்குமே….
ரிதன்யாவின் படபடப்பும்… அவள் முகச் சிவப்பும்… அவள் இதழ் தீண்டிய அவன் விரல்களை விலக்காமல் அவள் அனுமதித்த விதமும்… விக்கியையும் மெல்ல மெல்ல… அவனையே மறக்கச் செய்திருக்க… மற்றதெல்லாம் மறந்து… அந்த இதழ்களின் மென்மையும்…. ஈரமும்… மட்டுமே அவனை உள்வாங்க ஆரம்பித்திருக்க… விக்கியின் விரல்கள்… அவள் இதழ் வரிகளை வருடத் தொடங்க ஆரம்பித்திருக்க… ரிதன்யாவோ… கண்களை மூடி இருந்தாள்… தன்னை மறந்து… இவ்வுலகை மறந்து இருந்த நிலையில் அவள்…
ரிதன்யாவின் இந்த ஒப்புதலே… விக்கிக்கு அவளை… அவள் நிலையை அவனுக்குச் சொல்ல… மெல்ல அவன் புறம் அவள் முகத்தை முழுவதுமாகத் திரும்ப… இப்போது மீண்டும் அலைபேசி அழைப்பு…
கடுப்பாகப் எடுத்தவன்…. யாராக இருந்தாலும்…. இப்போதைக்கு எடுக்கப் போவதில்லை எனத் தீர்மானித்தவனாக கட் செய்து அலைபேசியை அணைத்து வைக்க அதை எடுக்க…
அதுவோ ‘அர்ஜூன்’ என்று காட்ட… அவ்வளவுதான்… விக்கி அடுத்த நொடி…. சட்டென்று தன் நிலை மீண்டிருந்தான்… அதே வேகத்தில் ரிதன்யாவிடமிருந்து தன் கைகளை விலக்கியவன்…. காரை விட்டும் இறங்கியிருந்தான்…
அவன் மதிக்கும் ஒரு சில நபர்களில் அர்ஜூன் மிக முக்கிய இடத்தில் இருந்தான்…
“அர்ஜூன் சார்…” தனக்குள் சொல்லியவன்… அடுத்த நிமிடம்… வாகனத்தை விட்டு கீழே இறங்கி இருந்தான்…
“சொல்லுங்க சார்… நிவேதா சொன்னா… நீங்க இந்தியாலதான் இருக்கீங்கன்னு… நானே பேசனும்னு நினைத்தேன்… ஆனால் உங்க பிஸி ஷெட்யூல் எனக்கும் தெரியும்… எப்போ… எப்படி காண்டாக்ட் பண்றதுன்னே கன்ஃப்யூஷன்லயே இருந்துட்டே இருந்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க”
”இப்போ ஃப்ரீதான் சார்… “ என்றவன் ஆதவனைச் சந்திக்கப் போகும் ஹோட்டலின் பெயர் சொன்னவன்…
“அங்க மீட் பண்ணலாமா சார்”
“ஓகே… ஒகே சார்…” என்றபடி வைத்தவன்… இப்போது மீண்டும் காரில் வந்து அமர்ந்திருக்க… ரிதன்யா இப்போதும் குனிந்து அமர்ந்திருந்தாள்… இவன் வந்தது… தன் அருகில் அமர்ந்தது என எல்லாம் உணர்ந்தும்
“ரிது… இப்போ பேசினது… அர்” என்று அவளிடம் சந்தோசமாக பேச ஆரம்பித்த போதே… குனிந்து அமர்திருந்தவளின் மடியில் ஒரு சொட்டு கண்ணீர் விழ… விக்கியோ பதறி இருந்தான்… இப்போது மற்றதெல்லாம் மறந்து போய் ரிதன்யா மட்டுமே அவனை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தாள்…
“ஹேய் என்னாச்சுடா” என்று அவளைக் கட்டிக் கொண்டவனை விட்டு… அவளுமே விலகவில்லை…
கிட்டத்தட்ட பத்து நிமிடம்…. ஏதேதோ சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தவளை இறுக அணைத்துக் கொள்ள… ரிதன்யா வாய் வார்த்தைகளை நிறுத்திவிட்டவள்… தேம்பல்கள் மூலம் தன் ஆறுதலை அவனிடம் தேட
“உங்க அண்ணா… அவன் கைகாட்ற ஆளு… இப்படி லூசு மாதிரி உளறுனேன்னா… நானும் லூசு மாதிரி கேட்டுட்டு போயிருவேன்னு நினைச்சியாடி “
“நீங்க ஏன் இப்போ வந்தீங்க… என்னைப் பார்த்தீங்க…“ அவன் தோள் சாய்ந்திருந்தவள்… அவன் தோளிலேயே அடிக்க…
“சரி விடு… இதுதான் உன் பிரச்சனைனா… நான் போயிடறேன்… “ அவள் காதுக்குள் கிசுகிசுக்க… அதற்கும் விக்கி அவளிடம் அடி வாங்கி இருக்க
”என்னடி… ஏன் வந்தேன்னும் அடிக்கிற… இப்போ போறேன்னு சொன்னாலும் அடிக்கிற…” என்றபடியே அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டவன்…
”நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்… நீ என்னை லவ் பண்ற வேலையை மட்டும் பாரு… அப்புறம் ஒரு நாள் உன் அண்ணன்… உன்கிட்ட வந்து கேட்பான்… என் ஃப்ரெண்ட் விக்கிய மேரேஜ் பண்ணிக்கிறியான்னு… அப்போ மட்டும் வாயத் திறந்து… இல்ல… அது கூட வேண்டாம்… தலையை மட்டும் ’சரி’ ன்னு ஆட்டு…” என்றவன்… இப்போது… அவளை தன்னை விட்டு விலக்கியபடி அவள் கண்களைப் பார்த்து
“சொல்வியா… சொல்லுவதானே…. எனக்காக அதை மட்டும் பண்ணு ரிது… அது போதும்” என்றவனின் குரல் கரகரத்திருக்க…
”ஏண்டா இவ்ளோ லவ் வச்சுட்டு… என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போன…” ரிதன்யாவின் குரலில் மென்மை மட்டுமே
”அது காதலா… இல்லை வயசுக் கோளாறா… குழப்பமா இருந்துச்சு ரிது… உடனே முடிவெடுக்க நான் மட்டும் இதுல சம்பந்தப்படல… நீயும் இருக்க… அதுலயும் ஸ்கூல் போற பொண்ணு… எனக்கு டைம் தேவைப்பட்டது…. “
அவள் கைகளோடு தன் கைகளைக் கோர்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு… அப்போதுதான் ஞாபகம் வந்தது….
அர்ஜூன் மற்றும் ஆதவன் இருவரும் இவனுக்காக காத்துக் கொண்டிருந்ததே…
ஆதவனைக் கூட விட்டுவிடலாம்… அர்ஜூன்… அவனைக் காக்க வைக்க முடியுமா????…
அதே நேரம்… தன் மனதைச் சொல்லி… அவளும் சம்மதம் சொன்னபின் தன்னவளோடு சேர்ந்திருக்கும் முதன்முதலான நிமிடங்கள்… எப்படி அவளை விட்டு போவது… என்ன சொல்லி இப்போது இங்கிருந்து கிளம்புவது…
அவள் விரல் கோர்த்திருந்த தன் கரங்களை அவளிடமிருந்து விலக்குவதே மிகப் பெரும் கஷ்டமாக இருக்க… அவளை விட்டுச் செல்வது என்பது பெரும் பாடாகத்தான் இருக்கும் என்று தோன்றியது விக்ரமுக்கு…
ரிஷி இந்தியா வரும்வரை பொறுத்திருப்போம் என்று முடிவு செய்திருந்தவன்தான் அவன்… அதனாலேயே தன்னைக் கட்டுப்படுத்தி இருக்க… ரிதன்யாவின் இன்றைய இந்த நிலை அவன் எதிர்பாராதது…. தன் தோள் சாய்ந்து இருந்தவளிடம்…
“ரிது…” என்று குரல் கொடுக்க….
ஹ்ம்ம்” என்ற அவள் குரலே சொன்னது… இன்னும் அவள் காதல் சொன்ன தருணங்களிலேயே இருக்கின்றாள்… மீளவில்லை என்பதை…
மென்குரலில் மெதுவாக பேச ஆரம்பித்திருந்தான்… காதலனாக
“எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்கடா.. போகனுமே” என்று எப்படியோ சொல்லி முடிக்க…
“நான் கூடத்தான்…. உங்களுக்காக ரொம்ப வருசமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” ரிதன்யா சொன்ன விதத்தில் … புன்னகையோடு கூடிய கர்வமும் விக்ரம் முகத்தில் வந்திருக்க…
இப்போது அவனை விட்டு விலகி அமர்ந்தவள்…
“போயிட்டு வாங்க…” என அவன் நிலை உணர்ந்து ரிதன்யா சொல்ல…. இவனுக்கும் மனம் நிம்மதி ஆகி இருந்தது… பிடிவாதம் பிடிக்காமல் தன்னைப் புரிந்துக் கொண்டாள் என்ற எண்ணத்தில் வந்த நிம்மதி அது…..
”ஆனால்… நான் இங்கேயே வெயிட் பண்ணிட்டு இருப்பேன்…. “ ரிதன்யா சொல்ல விக்கி அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க…
“எனக்கு தனிமை வேண்டும் விக்கி…. சந்தோசமா அந்தத் தனிமையை அனுபவிக்க வேண்டும்… இந்த ஹேப்பி ஃபீலோட அந்த ’கண்மணி’ இல்லத்துக்கு போக போக இஷ்டம் இல்லை… மகி வீட்டுக்கு போனால்… அங்க தனியா இருக்க முடியாது … “ என்றபடி …
“1 ஹவர்… அவ்ளோதான் உங்களுக்கு டைம்… சீக்கிரம் வாங்க…. வரணும்” அதிகாரமாக தன் உரிமையை அவனிடம் காட்டிவிட்டு காரை விட்டு இறங்கியவள்… அவன் அமர்ந்திருந்த ஓட்டுனர் இருக்கையின் புறம் வந்தவள்…. அவன் அருகே குனிந்து…
“உங்களுக்காக ஒருத்தி காத்துட்டு இருக்கான்னு… எப்போதுமே ஞாபகம் இருக்கனும்…” அதிகார உரிமை போய்… காதல் மட்டுமே …
அதே காதலோடு… சட்டென்று அவன் கன்னத்தில் தன் இதழைப் பட்டும் படாமலும் பதித்து நிமிர்ந்தவள்….
“பை விக்கி” என்று கண் சிமிட்டிச் சிரிக்க…
விக்கியே எதிர்பாராத நிமிடங்கள்… விரல் உணர்ந்த அவள் இதழ்களின் மென்மை… இப்போது அவன் கன்னங்களும் உணர்ந்த போது…. அவன் காதல் கொண்ட மனம் கரை கடக்க துடித்ததுதுதான்…. அதே நேரம் ரிதன்யாவின் புத்திசாலித்தனமும் அவன் உணர்ந்தான்
“ரொம்ப சாமர்த்தியம் தாண்டி…. உள்ள வச்சு லாக் பண்ணி கிஸ் அடிச்சுட்ட…. என்னால திரும்ப பதில் கொடுக்க முடியாதுன்னு… உன் அதிமேதாவித்தனத்தை என்கிட்டேயாவா காட்டுற…. காட்டு காட்டு வந்து கவனிச்சுக்கறேன்” என்று சொன்னவனிடம்… கள்ளத் தனம் கலந்த வெட்கப் புன்னகையை மட்டுமே ரிதன்யா… கொடுக்க… அவளின் அந்தக் கள்ளப் புன்னகையை களவாடிய கள்வனாக…. சந்தோஷத்துடன் காரை ஸ்டார்ட் செய்தான் விக்ரம்…
---
Nice update