/* கண்மணி என் கண்மணி - கண்மணி 1 பார்ட் 2ண்ட் பார்ட் அண்ட் தேர்ட் பார்ட்னு வேற வேற ஷேட்ஸ் இருக்கும்... பார்ட் 1 அண்ட் பார்ட் 2 ல இருக்கிற கண்மணிய கண்டிப்பா பார்க்க முடியாது... இங்க ரொம்ப பேருக்கு கண்மணி கேரக்டர் பிடிக்கும்... இனி வருகிற எபிசோட்ஸ்ல எவ்வளவு தூரம் அவளை அக்செப்ட் பண்ணுவீங்கன்னு தெரியலை... கண்மணி கேரக்டருக்கு முடிந்த அளவு ஜஸ்டிஃபிகேஷன் இருக்கு... கண்டிப்பா புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்... அண்ட் ரிஷி-கண்மணி எபிசோட்ஸ்... நேர்ல பார்க்கிற வரை வேற வழி இல்லை... ஃபோன் கான்வெர்சஷேசன் தான்... சீக்கிரம் ரிஷிக்கு இல்லையில்லை கண்மணிக்கு ஆஸ்திரேலியா டிக்கெட் போட ட்ரை பண்றேன்...
பை...
வாருணி விஜய் (பிரவீணா) */
அத்தியாயம் 53:
இடம் ஊட்டி…
அந்த மிகப் பெரிய ரெஸிடென்சியல் கான்வென்ட்டின் மாணவர் தங்கும் விடுதியின் விருந்தினர் அறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர் யமுனாவும், பார்த்திபனும்
கண்மணியும் அர்ஜூனுமோ இருக்கையில் அமராமல்… யமுனா பார்த்திப்பனுக்கு எதிர்புறம் நின்றிருந்தனர்…
இலேசான மழைத்தூறல்… எங்கும் பசுமை… பார்ப்பதற்கே அழகாக இருக்க… விஸ்தாரமான கண்ணாடி ஜன்னல் திறப்பின் அருகே நின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவருமாக…
பள்ளி வளாகம்… விடுதி என அனைத்தையும் ஒரே பரப்பில் உள்ளடக்கியிருந்தது அந்த வளாகம்… எங்கு திரும்பினாலும் பணக்காரத்தனமே… செழுமை… அங்கு இருந்த மாணவர் மாணவியரிடம் அதே தோற்றம்…
அனைத்தையும் பார்த்தபடியே அர்ஜூன் கண்மணியிடம்… குனிந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசிக் கொண்டிருந்தான்…
“இந்த மாதிரி நாமளும் நம்ம ட்ரஸ்ட்ல இருந்து எஜுகேஷனுக்காக பண்ணனும்… தாத்தா எஜுகேஷன் பக்கம் வந்ததே இல்லை… உனக்காகத்தான் அந்த ட்ரஸ்ட் கிரியேட் பண்ணி அந்த ஸ்கூலையே அவர் வசம் கொண்டுவந்தார்… ஆனால் நீ பெருசா அச்சீவ் பண்ணனும்.. எனக்குத் தெரியும் உன்னோட கனவு அதை பேஸ் பண்ணித்தான்” அர்ஜூன் தீவிரமாகப் பேசியபடி கண்மணியைப் பார்க்க… அவளோ… மழைநீரினால் நனைந்திருந்த கண்ணாடிக் கதவில் நட்சத்திரத்தை வரைந்தபடி தன் பெயரை எழுதிக் கொண்டிருந்தாள்… சிறு குழந்தை பாவத்தோடு…
”அடிப்பாவி” சொன்னவனின் இதழிலும் புன்னகை மலரத்தான் செய்தது… கண்மணியின் செய்கையைப் பார்த்த போது…
”நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்… நீ” என்றபோதே கண்மணியின் மலர்ந்த முகம் அவனையும் உற்சாக மனநிலைக்கு மாற்ற… கண்மணி வரைந்த நட்சத்திரத்தின் மறுபுறம் அர்ஜூன் என்று எழுத ஆரம்பித்திருந்தான்…
கண்மணி சிரித்தபடி… தனது பெயரை அழித்தவளாக…
“FIND UR SUBHADHRA SOON” என எழுதியபடி ”எப்புடி” என அவள் புருவத்தை உயர்த்தி கேட்க…
அர்ஜூன் திகைத்து நிமிர்ந்தான் ஒரு நிமிடம்… அவன் முகமெங்கும் சந்தோஷ கீற்று மட்டுமே… ஆயிரம் மின்னல்கள் அவன் முகமெங்கும் பரவ… அவன் இதயத்தில் சந்தோஷ இடி முழங்க ஆரம்பித்திருக்க…. அதே சந்தோஷத்தோடு
“found and am Seeing….” அவன் எழுதிக் காட்ட… அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பதை புரிந்தவளாக முறைத்தவள்…
தான் ஆரம்பித்தது தானே என வேகமாக அந்தக் கண்ணாடிக் கதவில் எழுதி இருந்த அனைத்தையும் அழிக்கப் போக… அது ஏற்கனவே அடுத்தடுத்த மழைநீரின் சாரல்களின் தொடர்ச்சியில் அழிந்திருக்க… கண்மணிக்கு எதையும் அழிக்கும் வேலை வைக்கவில்லை… மழைநீர்
அர்ஜூனுக்கு எழுதியவை அனைத்து அழிந்தது பற்றி எல்லாம் கவலை இல்லை… அதைப் பற்றியும் யோசிக்கவில்லை… மாறாக… கண்மணி… சுபத்ரா என்று எழுதியதிலேயே மனம் நின்றிருக்க…
“இந்தக் கண்ணாடி வழியா பார்க்கும் போது உனக்குத் தெரியலை என்னோட சுபத்ரா யாருன்னு… ஆனால் நீ தினம் முகம் பார்க்கிற கண்ணாடில போய்ப்பாரு… நீயும் புரிஞ்சுக்குவ பிரின்சஸ்…” உணர்ச்சி வசப்பட்டு சொன்னான் அர்ஜூன்…
எரிச்சலாகப் பார்த்தவளுக்கு அவனுக்கு என்ன பதில் சொல்லி அவன் வாயை அடைப்பது என்று தெரியாமல் வேகமாக மீண்டும் வெளியே தெரிந்த காட்சியில் தனது கவனத்தை வைக்க…
“என்ன… ரிஷிகேஷ்னு எழுதி என்னை எரிச்சல் படுத்தப் போறியா” சீண்டலாக கேட்டவனிடம்
புன்னகைத்தவள்…
“என் பேரை எழுதினபோதே… ரிஷி பேரை ஏன் எழுதலைன்னு நீங்க யோசிச்சுருக்கனும் அர்ஜூன்… “ கண்மணி கொக்கி போட்டு நிறுத்த…
அர்ஜூன் முகம் மாறினாலும் காட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்க்க…
கண் சிமிட்டியவள்…
“எழுதி இருந்தால் அழிஞ்சுருக்கும் அர்ஜூன்… அதுனாலதான் அர்ஜூன் எழுதல… அது கூட தெரியாமல்… ” தலை சாய்த்து கண்மணி அர்ஜூனை ஓட்ட…
பொதுவாக கண்மணி இப்படி எல்லாம் பேச மாட்டாள்… இன்று பேசிக் கொண்டிருக்கின்றாள்.. அவளது பேச்சு அவனை ஒருபுறம் எரிச்சல் படுத்திய போதும்… அவளது குறும்புத்தனத்தை ரசித்தபடிதான் இருந்தான் அர்ஜூன்…
அதே நேரம்… பார்த்திபனோ தன்னைப் நிமிர்ந்து கூடப் பார்க்காது அமர்ந்திருந்த யமுனாவை… அவளது மௌனத்தை பொறுக்க முடியாமல் உச்சக்கட்ட கடுப்போடு அமர்ந்திருந்தான்… இருவருக்கும் பொதுவான தோழியின் திருமணம் என்று கண்மணிதான் யமுனாவின் தாயிடம் அலைபேசியில் பேசி அழைத்து வந்திருந்தாள்… பார்த்திபனைப் பார்த்து தயங்கினாலும்… கண்மணி, அர்ஜூன் என இருவரும் இருந்ததால்… இதோ ஊட்டி வரை வந்து விட்டாள் யமுனா…
மெழுகு பொம்மை போல் அமர்ந்திருந்த யமுனாவின் மௌனம் பொறுக்கமாட்டாது…. ஒருகட்டத்தில் பார்த்திபன் பொறுமை இழந்தவனாக….
”நான் போன் பண்ணினால்… எடுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிருப்ப போல…” பார்த்திபன் நக்கலாகக் கேட்க
நிமிர்ந்தவளின் கண்களிளோ மிரட்சி மட்டுமே…
“அப்… அப்டிலாம் இல்லை… நீங்க போன் பண்ணினப்போதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்…” தடுமாற்றமாக யமுனா சொல்ல…
”ஓ…. நான் கூட தப்பா நினச்சுட்டேன்… என்னைப் பார்த்து பயந்துட்டேன்னு… இப்போதான் தெரியுது… வந்த மிஸ்ட் கால் பார்த்து அந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணக் கூட தெரியாதுன்னு… இது கூட தெரியாத பாப்பாக்கு எதுக்கு இவ்ளோ காஸ்ட்லி மொபைல்… “ இப்போது யமுனா முறைக்க
சிரித்தவன்…
“முறைக்கிற அளவுக்கு பெரிய ஆளாகிட்ட… ஹ்ம்ம்ம்… நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்… அல்ரெடி உன்கிட்ட என் மனசத் திறந்து சொல்லிட்டேன்… பதிலுக்கு வெயிட்டிங்… நீ பதில் சொன்னாத்தான்… எங்க அப்பா அம்மாகிட்ட நானும் ஒரு பதில் சொல்ல முடியும்… நீ ஓகேன்னா உடனே மேரேஜ்… இல்ல”
“இல்லைனா… என்ன பண்ணுவீங்க” யமுனா கடுப்பாகக் கேட்க
“அந்த ரிஷிகேஷ மர்டர் பண்ணிட்டு… ரிஷிகேஷ் போய் செட்டில் ஆகிறலாம்னு ப்ளான்… அவனாலதான் உன்னைப் பார்த்தேன்… இவ்ளோ கஷ்டப்படுறேன்… அர்ஜூன் சார்க்கும் என்னாலான ஹெல்ப்…“ பார்த்திபன் சாதரணமாகச் சொல்ல
கண்கள்… ரெண்டும் பெரியதாக விரிய… அர்ஜூனோடு பேசிக் கொண்டிருந்த கண்மணியை வேகமாகத் திரும்பிப் பார்க்க... தன்னைப் பார்த்த யமுனாவை எதேச்சையாக பார்த்த கண்மணி… என்னவென்று கேட்க
வேகமாக ’ஒன்றுமில்லை’ என்பது போல தலையை ஆட்டிய யமுனா… இப்போது பார்த்திபனிடம் திரும்பி
“மிரட்றீங்களா…“
“சீரியஸா யமுனா…“ என்று ஆரம்பித்த போதே….
அந்த பதினான்கு வயது சிறுவன்… சிறுவன் என்று கூட சொல்ல முடியாது.. இலேசாக மீசை அரும்ப தொடங்கி சிறுவன் என்று சொல்ல முடியாமலும்… இளைஞன் என்று சொல்ல முடியாத அளவுக்கும் இரண்டும் கெட்டான் தோற்றத்தில் இருந்தான்… ஹர்ஷீத்….
வரும் போதே… அவனது பார்வையில் ஒரு அலட்சியம்…
அமர்ந்திருந்த கண்காப்பாளரிடம் பேசி விட்டு வந்தவன்… கண்மணியின் அருகில் வந்த போதுதான்… தெரிந்தவர்களைப் பார்க்கும் போது விரியும் புன்னகை முக பாவம் வந்திருக்க… கண்மணியிடம் புன்னகை செய்தவன்… அவளிடம் பேசவில்லை
“மிஸ்டர் அர்ஜூன்… மிஸ்டர் பார்த்திபன்…. அண்ட்… “
“திருமூர்த்தியோட பொண்ணு…. யமுனா…. “ என்றவன்
”ஃபோட்டோல பார்த்துருக்கேன்…” என்றபடி கண்மணியின் புறம் திரும்பி
“சோ நீங்கதான் கண்மணி அண்ணி… ” தானாகவே அனைவரிடமும் அறிமுகம் ஆகிக் கொண்டவன்…
“கார்டன்ல பேசலாம்ல” என்றவன் தன் பின்னால் அவர்களை வரச் சொல்லிவிட்டு…. முன்னால் சென்றபடி…. தன் அலைபேசியை எடுத்தவனாக…
“அண்ணா… அண்ணி வந்திருக்காங்க… பேசிட்டு உங்களோட பேசுறேன்”
“யா…யா… தட் யமுனா ஆல்சோ… தட் கைஸ் ஆல்சோ..
“ஷ்யூர்… ஷ்யூர்… நான் பார்த்துக்கறேன்” என்றபடி வைக்க… பார்த்திபனும்… அர்ஜூனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…
---
அதன் பின் இரண்டு மணி நேரம் கழித்து….
“சோ… இதுதான் எனக்கும் ரிஷி அண்ணாக்குமான தொடர்பு… “
“யெஸ் என் அண்ணா… எல்லாமே கால்குலேஷன்லதான் பண்ணினாங்க… பண்ணிருக்காங்க… பண்ணுவாங்க… அவங்க ஒரே ஒருத்தவங்களுக்கு மட்டும் வித்தவுட் கால்குலேஷன்… லட்சுமி அம்மாக்கு மட்டும் தான்… அவர் அம்மாவைத் தவிர வேறு யாரும் முக்கியம் கிடையாது அவருக்கு… மகிளாக்கா… ஏன் அவங்க தங்கச்சிங்க கிட்டயும் கூட… நல்ல விதமா இருந்தால் கூட… அவங்க நிரந்தமா அவர் கூட இருக்கப் போறதில்லன்னு… விலகிட்டார்னு தான் சொல்லலாம்… நான் முதற்கொண்டு அவருக்குத் தேவை… எனக்கு நல்லது பண்ணினாலும்… அது கூட காரணமாகத்தான்… என்கிட்ட அவர் எல்லாவற்றையும் ஓபனா சொல்லி… இந்த அளவுக்கு மெச்சூர்டா ஹேண்டில் பண்ற அளவுக்கு மாத்தினத்துக்கும் காரணம் இருக்கு… நாளைக்கே நானும் கோர்ட்ல கேஸ் ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கும்… தெரிந்தோ தெரியாமலோ… தனசேகர் அப்பா குடும்பத்தோட வாரிசா எனக்கும் பங்கு இருக்கு…. அதை அவர் குடும்பத்துக்கு திரும்ப கொடுக்கும் போது… என்னோட இந்த மெச்சூரிட்டி லீகலாகவும்… பெர்சனலாகவும் ரிஷி அண்ணாக்குத் தேவை… இதை அவர் என்கிட்டயே சொல்லி இருக்கார்… நான் எடுப்பார் கைப்பிள்ளையா யார் கண்ணுக்கும் தெரியக் கூடாது… ரிஷி அண்ணா இதுல தெளிவா இருக்கார்… “ என்ற போதே
யமுனாவைப் பார்த்தவன்
“இந்த பூமியில இந்த பிறப்புக்கு காரணம்…. யாரா வேணும்னாலும் காரணமா இருக்கலாம்… அதை நாம தேர்ந்தெடுக்க முடியாதுதான்… அதுக்காக அவங்கதான் என் அடையாளாமா இருக்கனும்னு எனக்கு அவசியம் இல்லை… எனக்கு அம்மா இருந்தாங்க… அவங்களே என் அப்பா யாருன்னு சொல்ல விரும்பாத போது… நானும் அந்த உறவை விரும்பலை… ப்ச்ச்… தனசேகர் அப்பா இந்த ட்ராப்ல மாட்டிட்டாரு… இப்போ கூட அவரை அப்பான்னு சொல்றது… ரிஷி என் அண்ணா… என்னோட வெல்விஷர்… அவரோட குடும்பம் என்னோட குடும்பம்… அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான்… அதுக்காக அவங்க குடும்பத்தோடும் பழக விருப்பம் இல்லை… அது தேவையும் இல்லை… இந்த இடம்… இந்த வாழ்க்கை என்னோட விருப்பம் போல வாழ்ந்துட்டு இருக்கேன்… எனக்குனு வாழ்க்கை… என்னோட ஆம்பிஷன்.. எனக்குனு ஒரு குடும்பம்… என்னோட எதிர்காலத்தை நோக்கி இப்போதே என்னோட பயணத்தை இங்க இருந்து ஆரம்பிச்சுட்டேன்… ரிஷி அண்ணா அவர் அவரோட வயசுல எப்படி இருந்தாரோ… அதுக்கு ஆப்போசிட்டா நான் இருக்கேன்னா அவரோட வேதனைகளோட, வலிகளும்… அனுபவமும் கேட்டு… நான் என்னை இப்படி மாத்திருக்கலாம்… இல்லை அவர் மாத்திருக்கலாம்… ஆனால் எனக்கு இது பிடிச்சுருக்கு…” யமுனாவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்… வேறு யாரையும் பார்க்கவே இல்லை…
“என் ரிஷி அண்ணா இப்படித்தான்… உங்க அப்பாவை பழி வாங்க நீங்க பலிகடா ஆகிட்டீங்க… ஆனால் நீங்க உலகத்தை புரிஞ்சுக்க வாய்ப்பு கிடச்சுருக்குதானே… முன்னேறி வாங்க… நீங்க உங்க மனசால யாருக்கும் துரோகம் செய்யலேன்னா… உங்களுக்கான வாழ்க்கை… உங்களுக்கு வசந்த காலத்தைக் காட்டும்… அதை விட்டுட்டு… அவரை பழிவாங்கி என்ன பண்ணப் போறிங்க… அவரே சொல்வார்… என்னோட தவறுக்களுக்கான தண்டனைகள் எனக்கும் கிடைக்கும்னு… சோ விட்ருங்க…” என்று மேலே கை காட்டியவன்…
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குதானே… எனக்கு இருக்கு… அவர்கிட்ட விட்ருங்க… அவர் பார்த்துக்குருவாரு… ஆனால் என் அண்ணாக்கு ஏதும் ஆகக் கூடாதுன்னு நானும் அதே கடவுள் கிட்டதான் வேண்டுவேன்… எதுக்கு அவர் தலை சாய்க்கிறார்னு பார்க்கிறேன்” என்றவன்
பார்த்திபன் அவனிடம் ஏதோ கேட்க ஆரம்பிக்கப் போக… அவனை கை மறித்து நிறுத்தியவன்
“சாரி… நீங்க ரெண்டு பேரும்… இவங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா வந்திருக்கீங்க… அந்த மைண்ட் செட்டோடத்தான் உங்கள அளோ பண்ணினேன்… பேசுற எண்ணம்லாம் இல்லை… ” என்றபடி அலைபேசியைப் பார்த்தவன்…
“டைம் ஆகிருச்சு… படிக்கனும்… ” என்றவன்…
“தென்… அடிக்கடி இந்த மாதிரி வந்து டிஸ்டர்ப் பண்ணாதீங்க… நான் உங்க யாரையாவது டிஸ்டர்ப் பண்றேன்னா… “ என்றபடி அடுத்த நிமிடம் அவன் யாருடைய பதிலையும்… ஏன் கண்மணியிடம் கூட பெரிதாக பேசாமல் சென்று விட… அதுவே சொன்னது… அனைவரையுமே விட்டு அவன் தள்ளி நிற்கிறான் என்பது…
அவன் சென்று விட… இவர்களும் வெளியே வந்திருந்தனர்… இன்னும் மழை விட்ட பாடில்லை… சொல்லப் போனால் அதிகமாகவே பெய்ய ஆரம்பித்திருக்க..
யமுனா தலைகுனிந்து நின்றிருக்க…
“யமுனா… நான் ரிஷி… ரிஷியோட அப்பா… இவங்கள நல்லவங்கன்னு உனக்கு காட்றதுக்காக கூட்டிட்டு வரலை…. ஹர்ஷித் சொன்ன விசயங்களை… நானே சொல்லிருக்கலாம்… ஆனால் ஏன் உங்கள கூட்டிட்டு வந்தேன்னா… வாழ்க்கைனா என்ன… அதை எப்படி பாஸிட்டிவா எடுத்துக்கனும்னு காட்டத்தான்… நம்ம லைஃப் அடுத்தவங்க கைல கொடுத்தோம்னா… நாம அவங்களைப் பொறுத்து… அது மாறிட்டே இருக்கு… உங்களோட லைஃஃப் நீங்கதான் கரெக்ட் பண்ணனும்… வேதனைகளை கஷ்டங்களை அனுபவமா எடுத்துட்டு அடுத்தது என்ன… அதை நோக்கி போகலாமே… சந்தோஷமோ துக்கமோ… இன்னும் எவ்வளவோ இருக்கு… இந்த இடத்தோட நின்னு என்ன ஆகப் போறீங்க… 14 வயசுப் பையன்… அவ்ளோ தெளிவா இருக்கும் போது உங்களுக்கென்ன… ஏன் இப்படி நடந்ததுன்னு யோசிக்காமல்… எதுக்காக நடந்திருக்கும்னு திங்க் பண்ணுங்க…” என்றபோதே யமுனாவின் பார்வை அவளையும் மீறி பார்த்திபனை நோக்கிப் போக… பார்த்திபன் பார்வையும் அவளின் பார்வையில் கலந்திருக்க… அர்ஜூனோ கண்மணியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்…
“பார்த்தி… யமுனாகிட்ட பேசிட்டு இருங்க…” என்றவன் அவர்களிடம் இருந்து கண்மணியை தனியே அழைத்துக் கொண்டு வந்தவனாக…
“சோ… இப்போ நீ ஹேப்பி… “
“என்ன ஹேப்பி… எதுக்காக ஹேப்பி..”
“ரிஷியை யாரும் வெறுக்கக் கூடாது… அவனை கடவுள் மாதிரி கையெடுத்து கும்பிட வைக்கனும்னு ஒரு பெரிய முடிவோட இருக்க போல… ஆனால் நான் ஹேப்பி… உன்னோட ஹோலிஸ்டிக் செர்வீஸ்லாம் சீக்கிரமா முடியப்போகுதுன்னு… கார்டியன் ஏஞ்சல் எப்போதுமே அவங்க செர்வீஸ் முடிந்த உடனே அந்தப் பெர்சன விட்டு விலகிருவாங்களாம்…” அர்ஜூன் மிகவும் எள்ளலாகச் சொல்ல…
முறைத்தாள் கண்மணி… அர்ஜூனின் வார்த்தைகளை எப்போதும் கடந்து விடுபவளால் இன்று… அப்படிக் கடக்க முடியவில்லை…
“அர்ஜூன்… உங்கள எனக்கு பிடிக்கும்… அதுக்காக உங்களைப் பார்க்கும் போதெல்லாம்… பேசும் போதெல்லாம்… உங்களால எனக்கு வருகிற நெகட்டிவ் வைப அக்செப்ட் பண்ணிட்டு… என்னால எப்போதுமே கடந்து போக முடியாது… எனக்கும் பொறுமைக்கு அதிக தூரம்… அதை உங்க கிட்ட மட்டும் தான் கடைபிடிச்சுட்டு வர்றேன்னு நினைக்கிறேன்… அது இனிமேல் முடியாதுன்னு நினைக்கிறேன்… நான் கிளம்புறேன்” என்ற படி அவனை விட்டு கடந்து போகப் போனவளை… சட்டென்று கைகளைப் பிடித்து நிறுத்தியவன்… அவள் முன்னே வர…
அவன் கைகளின் அழுத்தம் உணர்ந்தவள்…
“அர்ஜூன்…” என்ற போதே… கண்மணியே எதிர்பார்க்காமல் தன்னை நோக்கி இழுக்க… கண்மணி எப்படியோ சமாளித்து அவன் மீது மோதாமல் அவனை விட்டு விலகி விட…
“என்னடி… என்னால உனக்கு நெகட்டிவ் வைபா… நல்லா யோசிச்சு பாரு… அன்னைக்கு கோவில்ல நான் பார்த்தேனே அதுல… காதல் இல்லையா… என்னைப் பார்த்து உனக்கு ஒரு ஃபீலும் வரலையா… வராமல் தான்… அந்த லுக்கு விட்டியா… ஏற்கனவே பைத்தியக்காரனா இருந்தவன்… மொத்தமும் பைத்தியமா ஆனது அன்னைக்குத்தான்… அன்னைக்கு நான் உன்கிட்ட ஃபீல் பண்ணின காதல் பொய்னு சொல்லு… நானும் உன்னை விட்டு போயிடறேன்… ஆனால் உன்னால சொல்ல முடியாது… அந்தப் பார்வையை என்னால ஒதுக்க முடியல…. நீ எனக்கானவன்னு என் மனசு சொல்லிட்டே இருக்கு….“ என்றவனிடம்…
”அர்ஜூன்… நான் இன்னொருத்தரோட மனைவி…. இப்படி புரியாமல் பேசிட்டு இருந்தா… நான் என்ன சொல்லி உங்ககிட்ட புரிய வைக்க… யமுனாவைக் கூட மாற்றிடலாம் போல… ” என்றவளிடம் முறைத்தவன்
“நான் இன்னொருத்தன் பொண்டாட்டி… யமுனா… இந்த பேச்சை மாத்துற வேலைலாம் வேண்டாம்.. எனக்கு இப்போ பதில் வேண்டும்… அன்னைக்குப் பார்த்த அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்…“ அர்ஜுனும் விடாப்பிடியாக நிற்க… கண்மணியும் எதிர்பார்க்கவில்லை… அவனின் இந்த அடாவடி நடவடிக்கையை…
”எப்போதுமே பதில் சொல்லாமல் தப்பிக்கிற மாதிரி இன்னைக்கு உன்னால தப்பிக்க முடியாது” அவள் கையை மீண்டும் பிடிக்கப் போனவனிடம் இருந்து விலகுவதே முக்கியம் என்பது போல் விலக முயற்சிக்க…
பெய்திருந்த மழையின் காரணமாக ஈரமாகி இருந்தது அந்த இடம்…
இவள் விலகிய வேகத்துக்கு கால் அழுத்தமில்லாமல் அங்கிருந்த சேற்றில் வழுக்கி விழப் போக… அதைப்பார்த்த அர்ஜூன் வேகமாகப் பிடிக்கப் போக… அதை விட வேகமாக அவனைத் தள்ளி விட்டு விலகியவள்… கீழேயும் விழுந்து விட… விழுந்ததோடு அவள் அணிந்திருந்த சல்வார் முழுவதும் சேறாகி கறையாகி இருந்தது…
“லூசாடி… நீ “ என்றபடி பதறியவனாக அவளைத் தூக்க குனிந்த போதே…
“பக்கத்தில வராதீங்க அர்ஜூன்… நீங்க என்னைத் தொட நினச்சீங்கன்னா… இந்த இடத்திலேயே இப்படியே உட்கார்ந்துருவேன்…” சொன்னவளின் தீர்க்கமான குரலில்.. அதிர்ந்த அர்ஜூன் தானாக அவளை விட்டு விலகி நிற்க
இப்போது தானாகவே எழுந்தவள்… தன் ஆடைகளைக் காட்டியபடி…
“இதுதான் நான்… போதுமா…” என்றவளின் வார்த்தையில் உக்கிரமாக முறைத்தான் அர்ஜூன்
“என்ன பெரிய பார்வை… ஆமாம் அந்த 16 வயசு… எனக்கும் கனவுகள் இருக்கத்தானே செய்யும்… உங்க போட்டோவை காட்டி… உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்னு சொல்லி சொல்லி.. உங்களப் பற்றி பேசும் போது…. அதைக் கேட்கும் போது… எனக்கும் அந்தப் பிரதிபலிப்பு இருக்கத்தான் செய்யும்… ஆமாம் பார்த்தேன்… அதுக்கென்ன இப்போ… அந்தப் பார்வைல காதல் இருந்துச்சா… இல்லையான்றது பார்த்த உங்களோட பிரச்சனை… அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது… சரி அப்படியே இருந்தாலும் ஒரு பார்வைக்காக நான் உங்ககூட வரணும்னு எதிர்பார்க்கிறது…. என்ன நியாயம்… ”
’கண்மணி’ அர்ஜூன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே
கண்மணி எதையோ நினைத்து சிரித்தவளாக…
“ஏதோ ஒரு பார்வை பார்த்தேன்னு… என்கிட்ட இவ்ளோ எதிர்பார்க்கறீங்களே… அப்போ மருது… அவன் வந்து நின்னா நான் என்ன பதில் சொல்றது அர்ஜூன்…“ யோசித்த பாவனையில் கேட்ட கண்மணி… தன்னையே நினைத்து எள்ளலாக சிரிக்க ஆரம்பிக்க… அதில் அத்தனை வேதனை…
அர்ஜூன்… முகம் மாறியவனாக…
“ஒகேடா… விடு… நான் ஒண்ணும் கேட்கலை…” என்று சமாதான முயற்சியில் இறங்க ஆரம்பித்தான் தான்… ஆனால் கண்மணியோ அவன் பேச்சை எல்லாம் கவனிக்காமல்
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு… கோவில்ல அவன் கையை பிடிச்சு சத்தியம் பண்ணிக் கொடுத்துருக்கேனே… பத்து வயசுல… அப்போ உங்களை விட நியாயம் அவனுக்குத்தானே செய்யனும்… தாலி கட்டினவனை பொருட்டா மதிக்கலை நீங்க… ரிஷி இந்த போட்டில இல்லை… சோ சொல்லுங்க… பார்வையா… கொடுத்த வாக்கா… யாரை செலக்ட் பண்ணலாம்” என்ற போதே அர்ஜூனின் கரங்கள் கண்மணியை அறைய உயர்ந்திருக்க… அதே வேகத்தில் அர்ஜூனைத் தடுத்திருந்தாள்… கண்மணி…
”என்னை அடிக்கிற உரிமை கூட… நான்தான் தீர்மானிக்கனும் மைண்ட் இட்… என்னைக் கண்ட்ரோல் பண்ற உரிமையை நான் யார்கிட்டயும் கொடுத்தது கிடையாது…” என்றவள் அர்ஜூனை நேருக்கு நேராகப் பார்த்தாள்… கோபமாக
இப்போதும் அர்ஜூனுக்கும் அதே அளவு கோபத்தில் முகம் சிவந்திருக்க…
“சோ… உன்னைப் பொறுத்தவரை… மருது… நட்ராஜ்… ரிஷின்னு உன் லைஃப்ல உன் வேல்யூவே தெரியாத கேவலமான மனுசங்களை தூக்கி வச்சுப்ப… ஆனால் என்னை…” பேச முடியாமல் அர்ஜூன் குரலும் இறங்கி விட்டிருக்க..
“கேவலம்னா என்ன அர்ஜூன்… இப்போ நீங்க நடந்துகிட்ட முறை அதுக்குப் பேர் என்ன… இதுக்கு முன்னாடியும் நீங்க பேசின எல்லாமே வரம்பு மீறிதான்… இருந்தும்… உங்க மேல இருந்த நம்பிக்கை நான் எப்போதுமே விட்டதில்லை… ஒருவேளை அந்த நம்பிக்கை பிரேக் ஆகி இருந்தால் உங்களோட… உங்க முன்னால ஒரு நிமிசம் கூட நின்னு பேசி இருந்துருக்க மாட்டேன்… நான் யாருக்கோ கார்டியன் ஏஞ்சல்னு சொல்வீங்கள்ள… அது நான் இல்லை… நீங்கதான் எனக்கு கார்டியன் ஏஞ்சல்… அதை நீங்கதான் புரிஞ்சுக்கலை”
அர்ஜூன் அவள் பேசியதை எல்லாம் கண்டுகொள்ளாதவனாக… அவனும் தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்ட ஆரம்பித்திருந்தான்
“அப்போ அந்த நட்ராஜ் பொறுக்கி… அவன் உன் எந்த நம்பிக்கைய காப்பாத்தினான்னு… அவன் கூட இருக்க… அப்பான்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவன்… அந்த உறவோட நம்பிக்கையை காப்பாத்தாதவன்தானே… அப்போ அவனை விட்டு விலகி இருக்கனுமே…”
உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்கியவள்… அர்ஜுனைப் பார்த்து நிமிர்ந்தவள்…
“நான் யார் அர்ஜூன் உங்களுக்கு…. ஜஸ்ட் உங்களுக்குப் பிடிக்கும்… அதுக்கே… என்னை இந்த அளவுக்கு விடாமல் எனக்காக உங்க வாழ்க்கையை பணயம் வைச்சுருக்கீங்க… பவித்ரா உங்க அத்தை அவங்க யார் எப்பேர்ப்பட்டவங்கன்னு உங்களுக்கும் தெரியும்… சாதாரண வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்த என் அப்பாக்கு அவங்கதான் உலகம்னு மொத்தமா மாத்தி… அவரை பாதியிலேயே விட்டுட்டு போயிட்டாங்க… ஒருத்தர் வாழ்க்கையே மொத்தமா மாத்திட்டு… அதை சின்னாபின்னாமாக்கி அழிச்சுட்டும் போன பின்னால… ஜஸ்ட் உணர்வில்லாமல் பேருக்கு உயிரோட சுத்திட்டு இருந்த மனுசன்கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்… ” என்றபடியே
“ப்ச்ச் பழைய கதைலாம் எதுக்கு… நான் கிளம்புறேன்….”
”எங்க…” அர்ஜூன் மறித்துக் கேட்க
”சென்னைக்கு…. அண்ட்…”
“இதை சொல்ல இஷ்டம் இல்லைதான்… ஆனாலும் இனி சொல்லாமல் இருக்கிறது தப்பு…. குட் பை… மிஸ்டர் அர்ஜூன்” என்றவளின் அந்நிய வார்த்தைகளில் பதறியவனாக அவள் கரம் பற்ற முயல… அவள் விலக்க வில்லை… அவளின் அந்நியப் பார்வையே அவனை விலக்கி நிற்க வைக்க
”நான் எப்போதுமே… உங்ககிட்ட கவனமா இருக்கனும்னு நினைக்கவே மாட்டேன் அர்ஜூன்… முதன் முதலா நினைக்க வச்சுட்டீங்க… எத்தனை தடவை சண்டை போட்டாலும்… உங்க கூட மறுபடியும் பேசாமல் இருக்கனும்னு நினைச்சுக் கூட பார்க்க மாட்டேன் அர்ஜூன்… ஆனால் இப்போ” என்றவள்… நொடி நேர மௌனத்தில் தன் வருத்தத்தைத் தொண்டைக் குழியோடு விழுங்கியவள்…
“கார்டியன் ஏஞ்சல்… இனி எனக்குத் தேவையில்லைனு விலகிட்டீங்களா அர்ஜூன்…” இதுவரை கேட்காத தழுதழுத்த கண்மணியின் குரலில் அர்ஜூன் முற்றிலுமாக உடைந்திருக்க…
அர்ஜூனால் அதற்கு மேல் அவளை விட்டு விலகி நிற்க முயவில்லை… அவளைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொள்ளப் போனவனை விட்டு வலுக்கட்டாயமாக விலக்கியவள் தானும்… விலகியவள்…
”எனக்காக ஒரே ஒரு ஹெல்ப்… என்னை விட்டு விலகிருங்க… உங்கள நான் இனி பார்க்கவே கூடாது… என்னோட நல்லதுக்கு…. நான் சந்தோசமா இருக்கனும்னா” என்றவளிடம் இப்போதும் கோபமானவன்
“நான் வர மாட்டேன்… ஆனால்… நீ வருவ என்னைத் தேடி… அதுவரை நான் உன் முன்னால வர மாட்டேன்… இது நடக்கும்… நான் இல்லேண்ணா சந்தோசமா இருப்பியா… பார்க்கிறேன் இதே மாதிரி அவன்கிட்டயும் சொல்லிட்டு வருவ….அது கண்டிப்பா நடக்கும்… ஆனால் சந்தோசமா சொல்லிட்டு வரனும்… அதை மட்டும் நான் வேண்டிக்கிறேன்… அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்… “
மன பாரமாகி இருக்க அர்ஜூனிடம் ஏதும் பேசாமல்… அவனை விட்டு விலகி வந்தவள்… யமுனா- பார்த்திபன் இருந்த இடம் நோக்கி வந்தாள்…
இருவரும் கண்மணி இருந்த நிலைமையைப் பார்த்து பதறிப்போய் அவளிடம் கேட்க… சமாளித்தவளாக யமுனாவைக் கிளம்பச் சொன்னாள்…
இவளைப் பார்த்தவுடன்… இருவரும் விலகியபடி கண்மணியிடம் பேச ஆரம்பித்திருந்தனர்…. கண்மணி இருந்த நிலைமையில்… பார்த்திபனின் கரங்களோடு சேர்ந்திருந்த யமுனாவின் கரங்கள் அவள் பார்வையில் படவில்லை…
குற்ற உணர்வோடு கண்மணியைப் பார்த்த பார்த்திபன் …
“சாரி கண்மணி… ரிஷியை நான் தப்பா “ பார்த்திபன் ஆரம்பித்த போதே
“சரி பார்த்திபன்… எனக்கு எதைப் பற்றியும்… யாரைப் பற்றியும்… யாரிடமும் கேட்க விருப்பம் இல்லை பார்த்திபன்… அந்த நிலைமைல நான் இல்லை… யமுனாக்காக மட்டும் தான் வந்தேன்… இனி யமுனா… அவ வாழ்க்கை… யமுனா யோசிக்க ஒரு வாய்ப்பு… அதைக் கொடுத்தாயிற்று… அதை எப்படி யூஸ் பண்றதுன்றது அவ கைல… “ என்ற கண்மணி…
“யமுனா… உங்க அம்மாகிட்ட பேசி கூட்டிட்டு வந்தது நான் தான்… உங்கள பத்திரமா ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் என்னோடது… போகலாமா” என்க… பார்த்திபன் அவளைப் போகச் சொல்லி கண்ணசைக்க… யமுனாவும் கண்மணியும் அங்கிருந்து கிளம்பி அவர்கள் தங்கி இருந்த அறைக்குச் சென்று தங்கள் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு சென்னை நோக்கி கிளம்பி ஆயத்தமானர்
ரிஷி-கண்மணி நன்றாகவே இருப்பார்கள்… ஆகவே கண்மணியை விட்டு விட்டு விலகி அர்ஜூன் தனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பதுதான் அர்ஜூனுக்கு நல்லது என அறிவுரை வேறு சொல்லிக் கொண்டிருக்க….
அர்ஜூனின் காதிலோ அது எல்லாம் ஏற வில்லை… கண்மணி சொன்ன அந்த ’குட் பை’ மட்டுமே அவன் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது… அவள் கடந்த காலம் மட்டும் அல்ல அவள் பிடிவாதம் பார்த்தவன்…உணர்ந்தவன்… அர்ஜூன்…
தன்னை இனி பார்க்கவே வர மாட்டாளா… காதல் மட்டும் அவனிடம் இல்லை… அவள் தன் வீட்டுப் பெண்… அந்த பாசம் மட்டுமே அவனை மொத்தமாக வேதனையில் கொன்று கொண்டிருந்தது.
---
/* சில துளிகள் --- கண்மணி என் கண்மணி அத்தியாயம் 54
“அதெல்லாம் முடியாது… நீதான் போட்டோவும் எடுக்கனும்… நீயேதான் என்னையும் பிடிக்கனும்… “ அடம் பிடித்தவளிடம்… மருது என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்த போதே,,, மருதுவின் நண்பன்…
“நான் ரெண்டும் பண்ணுவேன்… நீ குதி மணி பாப்பா…” என்றவனிடம்…
---
”ஒகே துரை… அழகா எடுக்கனும் ஒன் டூ த்ரீ…” என்றபடி கிளையில் இருந்து மருதுவை நோக்கி குதிக்க தயாராகி அவனைப் பார்க்க..
---
கீழே இறங்க முயற்சிக்க கண்மணியால் முடியவில்லை… அதே நேரம் மருது பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்திருக்க… இப்போது துரை மருதுவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி கண்மணியை இறக்கி விட்டிருக்க…*/
Lovely update