--
ஆதவன் ஈசி ஆர் பங்களா-
அங்கிருந்த ஹாலில் இருந்த சோபாவில் தனிமையில் அமர்ந்திருந்தான் விக்ரம்…
ஆதவனும்… அவனின் தற்காலிக பெண் நட்பும்… அங்கிருந்த மற்றொரு அறையில் இருக்க… பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக ஆதவன் சொல்லிவிட்டு சென்றிருக்க விக்கி மட்டும் தனித்து விடப்பட்டிருந்தான்… கையில் இருந்த ரிமோட்டினால்.. அங்கிருந்த டிவியில் சேனல்களை மாற்றி மாற்றி விளையாடிக் கொண்டிருந்தான் விக்கி… நேரத்தைக் கடத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில்
சரியாக பத்தே நிமிடம்… ஆதவனும் வெளியே வந்திருந்தான்… அந்தப் பெண்ணும் வெளியேறி இருந்தாள்… அவளும் சாதாரணமானவள் இல்லை… மிகப் பெரிய புள்ளியின் மகள் தான்…
“சாரி… விக்ரம்… ஆக்சுவலா இன்னைக்கு அவங்க டைம்… பேசி சரி பண்ணிட்டு வருகிறேன்” என்றபோது… ஆதவனின் கன்னங்களில் இருந்த இலேசான உதட்டுச் சாய இதழ் பதிவு… சமாதானத்தின் முத்திரையாக இருக்க… விக்கியும் அதைக் கண்டு கொள்ள வில்லை… அது அவனுக்கு தேவையுமில்லை என்பது போல தங்கள் வியாபார பேச்சு வார்த்தைகளை பேச ஆரம்பித்திருந்ததனர்…
ஆனால் அதற்கும் குறுக்கீடு ஆதவனின் உதவியாளர் ரூபத்தில் வந்திருந்தது…
“சாரி… சார்… “ ஆதவனிடம் பணிவாக வேண்டியவன்…
“அந்தப் பசங்கள மீட் பண்ணனும்னு சொல்லி இருந்தீங்கள்ள… வந்துருக்காங்க… ஒரு தடவை மீட் பண்ணிட்டீங்கன்னா… நான் மற்றது எல்லாம் பார்த்துக்குவேன்” என்ற போதே.. அர்ஜூன் நெற்றியில் விரல் வைத்து யோசிக்க ஆரம்பித்து இருக்க…
“மருது…” என அவன் காரியதரிசி இழுத்த போதே…
“ஓ… ஒகே… ஞாபகம் வந்திருச்சு… வெயிட் பண்ணச் சொல்லு… வர்றேன்” என்றவாறு எழுந்தவன்… விக்கியிடம் காத்திருக்க சொல்லிவிட்டு எழ… மீண்டும் விக்கி தலையசைத்துவிட்டு ஆதவனை விடுத்து தொலைக்காட்சியில் பார்வையை ஓட விட்டான்…
“சார்.. லிப்ஸ்டிக் மார்க்…” இதைச் சொல்ல அந்த உதவியாளரும் தயங்கவில்லை… ஆதவனும் அலட்டிக்கொள்ளவில்லை…
“ஹ்ம்ம்…” என்றவாறு… துடைத்தபடியே
“நமக்கு செட் ஆவாங்களா…” என விசாரித்தபடியே செல்ல ஆரம்பிக்க
“நம்ம விசயத்துக்கு… கரெக்டான ஆளுங்க சார்… பொண்ணுனு எழுதியிருந்தா போதும்… ஜெயிலுக்கு போன அனுபவம் லாம் இருக்கும்… பக்காவான ஆளுங்க… அடிதடிக்கு ஆயிரம் ஆளுங்க கிடைப்பாங்க… இந்த மாதிரி விசயத்துக்கு அடியாளுங்க.. தேட வேண்டியதா இருக்கு” சலிப்பான குரலில் ஆதவனின் காரியதரிசி சொல்லிக் கொண்டிருக்க….
இதெல்லாம் விக்ரமின் காதுகளில் விழவில்லை… விழுந்திருந்தாலும் பெரிதாக எடுத்திருப்பானா என்றும் தெரியவில்லை…
ஆதவனின் கன்னங்களில் இருந்த உதட்டுச் சாயம் பார்த்த போதே அவன் கண்டு கொள்ளவில்லை… அவன் கண்டு கொள்ளாமல் இருக்க காரணமும் இருந்தது… வியாபரத் தொடர்பு இது மட்டுமே ஆதவனுக்கும் விக்ரமுக்கு உள்ள ஒரே தொடர்பு… விக்ரம் ஆதவனோடு தனிப்பட்ட முறையில் சம்பந்தம் ஆகியிருக்க வில்லை… ஆகவே ஆதவனின் தனிப்பட்ட அந்தரங்க விசயங்கள் அவனுக்கு உறுத்தலாக இல்லை…
விக்கியும் நினைத்துப் பார்த்தான்…
”ஏன் ஆதவனோடு அவனுக்கு பெர்சனலாக கனெக்ட் பண்ணிக் கொள்ளத் தோன்றவில்லை” யோசிக்கும் போதே அர்ஜூனின் ஞாபகமும் வர…
“அர்ஜூனோடு அவனுக்கிருந்த தொடர்பு… மரியாதை மட்டுமல்லாமல்… நிவேதா மூலமாக கொஞ்சம் தனிப்பட்ட முறையிலும் பேசுவான்… அர்ஜூனை விடுத்து அவன் யோசித்த போது… தொழில் முறையில் அவன் யாரிடமும் அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்ததில்லை… ஆதவனோடு எப்படி இருக்கிறானோ அதே போல் தான்… தாமரை இலைத் தண்ணீர் போல் தான்” சோபாவில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தவனின் எண்ணங்களில்… ஒருவனைப் பற்றி நினைக்கக் கூடாது என்றுதான் நினைத்தான்… எந்த அளவுக்கு தன் உயிர் நண்பன் என்று நினைத்திருந்தானோ… அந்த அளவுக்கு அவனை இப்போது வெறுக்கிறான்… ஆனால் அவன் மட்டுமே அவன் மனதோடு நெருங்க முடிந்த நண்பன்… வேறு யாராலுமே விக்ரமிடம் அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை… ஒரு வேளை இருவருமாக இரண்டு வருடம் ஒரே அறையில் தங்க நேர்ந்ததா என்றும் தெரியவில்லை… அவனிடம் தன்னைப்பற்றி பகிர்ந்து கொண்ட அளவு வேறு யாரிடமும் விக்ரமால் நெருங்க முடியவில்லை…
ரிஷி… வேண்டாம் என்று நினைத்த போதும் வாய் உச்சரித்து விட்டதுதான்…
“இவன் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும்… ரிஷி எப்படியாவது பேச்சை மாற்றி அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடுவான்… எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது ரிஷிக்கும் விக்ரமுக்குமே பொருந்தும்… ரிஷியை நண்பனாக மட்டுமின்றி… அவனுக்கு பல விசயங்களில் தட்டிக் கொடுத்தும் மிரட்டியும் அவன் பெரிதாக திசை திரும்ப விடாமல் பல சமயங்களில் தன்னோடு அரவணைத்துக் கூட்டி வந்திருக்கின்றான் விக்ரம்… அதே போல் ரிஷியும்… இவனைப் புரிந்து கொண்டு… அவனின் இயல்பை மாற்றாமல்… இவனின் இயல்புகளையும் அனுசரித்து வாழ்ந்தவன்… அப்படிப்பட்டவன்… தன் தந்தை இறந்த பிறகு… தன்னிடம் எப்படி அலட்சியமாக நடந்து கொண்டான்… அவன் வருத்தத்தில் இருக்கின்றான்… இவனும் நண்பன் என்று ரிஷியின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல் எத்தனை முறை பேசி இருக்கிறான்… ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்… இவனே அவனைத் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டான்… அதே நேரம் ரிஷியாகவே ஒருநாள் பேசுவான் என்று எதிர்பார்த்திருக்க… ”ஹ்ம்ம்ம்…“ அவன் பேசவே இல்லை…
அவனுக்கே அவ்வளவு என்றால் தான் யாரென்று காட்ட நினைத்து… கடைசியில் தொடர்பற்ற நிலை… ஆனாலும் ரிஷியின் இடத்தை யாராலும் நிவர்த்தி செய்ய முடியவில்லை விக்ரமிடம்…
இன்னும் ரிஷியின் எண்கள் அவனிடம் இருக்கத்தான் செய்கிறது… மனம் பேசத்தான் துடிக்கிறது… ஆனாலும் இந்த நீண்ட இடைவெளி… ரிஷியை விட்டு அவனை விலக்கி வைத்து விட்டது என்பதே உண்மை… ஆனாலும் ரிஷியை அவன் தொடர்பு கொள்வான்… ரிஷிக்காக இல்லை அவன் தங்கைக்காக…
ரிதன்யாவை நினைத்த பொதே… அவன் தாத்தா ஞாபகம் வந்தது… கூடவே அண்ணனின் வார்த்தைகளும் ஞாபகத்திற்கு வந்தது…
”தாத்தா அந்தக் கண்மணியைத்தான் உனக்கு மேரேஜ் பண்ணி வைக்கனும்னு சொல்லிட்டு இருக்காரு…” தன் கையில் இருந்த தன் மகளைப் பார்த்தவாறே சொன்னவன்..
”நம்ம மொத்த குடும்பத்தை மீட்டெடுத்து… நம்ம கைல கொடுத்த பொண்ணுன்னு… தாத்தாவுக்கு அந்த பொண்ணுன்னா கடவுள் மாதிரிடா… ஆனால் அந்தப் பொண்ணு கடவுள் மாதிரி காப்பாத்திக் கொடுத்துட்டு மின்னல் மாதிரி மறைஞ்சு போயிட்டா… ’கண்மணி; பேரைத் தவிர வேறு எதையும் அவ அடையாளமா விட்டுட்டுப் போகலை”
“தன் இலட்சியம்… அது இதென்று… தப்பித்துக் கொண்டிருந்தான் விக்கி இதுவரை… இனிமேலும் முடியுமா எனத் தெரியவில்லை… தன் தாத்தா அந்தக் கண்மணி என்ற பெண்ணைக் கண்டுபிடித்து தன் முன் நிறுத்தி விட்டால்… ஒருவேளை தன்னால் தன் தாத்தாவை எதிர்க்க முடியுமா எனத் தெரியவில்லை… இப்படி அவன் யோசித்த போது… சத்தியமாக தான் பார்த்த நட்ராஜின் மகள் கண்மணியை தன் எண்ணத்துக்குள் கொண்டு வரவில்லை… எத்தனையோ கண்மணி… ஆனால் அது அந்த கண்மணியாக இருக்காது… என்று சர்வ நிச்சயமாக நம்பினான்… உலகத்தில் ஆயிரம் கண்மணிகள் இருப்பார்கள்… இதோ என் அண்ணனின் மகள் பெயர் கூட கண்மணிதான்… அடுத்த நிமிடமே அந்த பெயர் அவன் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்திருந்தது….
தன் தாத்தா முடிவெடுத்து தன்னை நிர்பந்திக்கும் முன் ரிதன்யாவை சந்தித்து… தன் காதலை தெரிவிக்க வேண்டும்… ஒருவேளை ரிதன்யா மறுத்து விட்டால்… இல்லை இத்தனை நாட்களில் அவளுக்கு வேறொரு விருப்பம் இருந்தால்… இப்படியும் யோசனை போனதுதான்… எதுவாகினும்… ரிதன்யாவை சந்திக்க வேண்டும்… அவளோடு பேச வேண்டும்… ஏற்கனவே முடிவு செய்ததை யோசித்தபடியே அமர்ந்திருந்தவனின் கண்களில்… அந்த ஆஸ்திரேலியா தொலைக்காட்சி சேனல் பட்டு மறைய… அப்போதுதான் ஞாபகம் வந்தது…
“’நியூஜென் ரைட் வீல்’ ரியாலிட்டி ஷோ நியூ சீசன் ஸ்டார்ட் பண்ணிருப்பாங்களே… ” யோசித்தவனாக நிறுத்த
“திஸ் இஸ் கார்லா… அண்ட்… மை ஒன் அண்ட் ஒன்லி ஃபேவரைட்… மை ராக் ஸ்டார்… ஆர்கே அலைஸ் ரிஷிகேஷ்… அஃப்கோர்ஸ் ஐ அம் வெரி ப்ரௌவ்ட் அண்ட் லக்கி கேர்ள் டூ சே… மை ஃபாதர் இஸ் ஹிஸ் ஸ்பான்ஸர்… ஸோ எக்ஸ்பெக்டெட் ரைட் வீல் ராக் ஸ்டார் ரிஷிஸ் இன்டெர்வியூ இஸ் கம்மிங் சூன்… ப்ராபப்லி” என உச்சக்கட்ட உற்சாகக் குரலில் படவென்று படு வேகத்தில் ஏற்ற இறக்கத்தோடு பேசிய பேசிய பெண்ணைப் பார்த்தானோ இல்லையோ… அந்தப் பெண்ணின் பின்னால் இருந்த ரிஷியின் புகைப்படம் கூடவே நட்ராஜின் புகைப்படத்தில் அவன் பார்வை பதிந்திருக்க…
விக்ரமின் மொத்தக் கண்களும் ஆச்சரியமாக ரிஷியிடம் நிலைத்திருக்க… அதே நேரம்… ஆதவனும் அங்கு வந்திருக்க…
“உன்னோட ஃபேவரைட் ஷோன்னு சொல்வதானே” என்றபடி ஆதவனும் திரையில் பார்வையைப் பதிக்க… அதில் தெரிந்த ரிஷியின் முகத்தைப் பார்த்து புருவம் சுருங்கின… ஆச்சரியத்திலோ வியப்பினாலோ அல்ல.. இவனா??? என்ற எகத்தாளமான எள்ளலான பார்வையில்
---
குறிப்பு:கார்லாவின் உரையாடல்கள் ஆங்கிலம் என்ற போதும் நமது தமிழ் வழக்கில் மட்டுமே இங்கு காண்பிக்கப்படும்
(மன்னிக்கவும்… அதிகமான ஆங்கில வார்த்தைகள் தற்போதைய பதிவுகள்ள உணரமுடியுது... முடிந்த அளவு ஆங்கில உரையாடல்கள் தமிழில்… எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ்ல சொல்லமுடியுமோ பெரும்பான்மை வார்த்தைகளை தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்…)
அதே நேரம் ’கண்மணி’ இல்லத்தில்…
”உங்களுக்கு ஏன் ஆர்கே ய இவ்ளோ பிடிக்கும்… பப்ளிஸிட்டி ஸ்டண்ட்… அவரோட ஸ்பான்ஸர் உங்க அப்பா… சோ அதுனால உங்கள வச்சு ’ஆர்கே’ வ ப்ரமோட் பண்றீங்கன்னு பேசுறாங்களே”
கேள்விக் கணைகள் ’கார்லா’-வை நோக்கி வரத் தொடங்கின…
கண்மணியும்… ரிதன்யாவும் இயல்பாக அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க… ரித்விகாவின் முகத்திலோ… கடுப்பான பாவனை… அதிலும் கார்லா என்ற அந்தப் பெண்ணை அவளுக்குப் பிடிக்கவே இல்லை… கிட்டத்தட்ட ரித்விகாவின் வயதுதான் என்று கேள்விப்பட்டதாலோ இல்லை… இந்த வயதிலேயே அத்தனை பெரிய மேடையை இலகுவாக கையாண்டு… அங்கிருந்தோரை தன் வயப்படுத்திக் கொண்டிருந்த காரணத்தாலோ எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
“ஜ்ஸ்ட் டென் மினிட்ஸ்ல ஆர்கே போர்ட்ரெயிட்ட தத்ரூபமா வரையிற அளவுக்கு… உங்கள அட்மைர் பண்ண வச்சது என்ன”
“ஒன்லி ஆன்சர் ஃபார் ஆல் கொஸ்ட்டீன்.. பட் இன் டிஃப்ரெண்ட் வே”
“இங்க யாரெல்லாம் ஆத்திகவாதியோ… அவங்களுக்கான பதில் இது- ஆர்கே இன்னொரு கடவுள் எனக்கு….
என்றவாறு சபையின் மறு புறம் திரும்பியவள்…
இங்க யாரெல்லாம் நாத்திகவாதியோ… அவங்களுக்கான பதில்…- என்னோட அப்பா அம்மாவை விட ஆர்கே எனக்கு ஸ்பெஷலான பெர்சன்…
[“who is here theist ….this answer for you friends… ’RK’ is in same place like god to me”
என்றவாறு சபையின் மறு புறம் திரும்பியவள்…
“who is here atheist… catch this answer… "for me... ’RK’ is So Special more than my parents ”]
“ஒகே சீ யூ சூன் வித்… வித் ஹூம் “ என்று கேள்வி கேட்டவளாக மைக்கை மேடைக்கு எதிர்புறம் திருப்ப….
”வித் ராக் ஸ்டார்… ஆர் கே… ரிஷிகேஷ்…. ” என்றபடி உற்சாகக் குரல்கள் அலையென பாய்ந்து அந்த மேடை எங்கும் ஆர்ப்பரிக்க… நிகழ்ச்சியும் அதே ஆர்ப்பாட்டத்தோடு முடிந்திருந்தது….
நங்கென்று ரிமோட்டை தூக்கி நாற்காலியில் போட்ட ரித்விகா… தன் அண்ணியைப் பார்க்க… கண்மணியோ சமையலறையை நோக்கிச் சென்று கொண்டிருக்க… தன் அருகில் அமர்ந்திருந்த தன் சகோதரி ரிதன்யாவின் அருகில் சென்றாள்…
“உனக்கு அந்தப் பொண்ணப் பார்த்து இரிட்ட்டேட் ஆகுதா… இல்லையா சொல்லு… ஓவரா பண்ற மாதிரி இல்லை..”
“இல்லையே…” சொன்னவள்…
“பெருமையா இருக்கு அண்ணனை நினைத்து… இந்த மாதிரி ஒரு பொண்ணுகிட்ட நல்ல பேர் சம்பாதிக்கிறதுலாம் எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா???... எனக்கு ஒரு மாதிரி கூஸ் பம்ப்ஸ் ஆகிருச்சு” என்றபடியே… ரிதன்யாவும் அங்கிருந்து கடந்து செல்ல…
ரித்விகா இப்போது கண்மணியிடம் வந்திருந்தாள்…
“அண்ணி” என்று முகத்தை கடுப்பாக கோபமாக வைத்தபடி அவள் முன்னே நின்றவள்… தன் அண்ணியின் முகத்தையும் ஆராய்ந்தபடியே
“அந்தப் பொண்ணு மேல உங்களுக்கு பொறாமையே வரலையா என்ன… ஆர் கே… ஆர் கே நு உருகுற… பாச மழை பொழியுறா… இவதான் அண்ணா மேல மொத்த பாசத்தையும் வச்சிருக்கிற மாதிரி சீன் போடறா… ட்ராமா பண்றா… அண்ணா போர்ட்ரெயிட் ட்ரா பண்றா… உங்களுக்கு கோபமே வரலையா”
“எதுக்கு கோபம் வரணும்.. எதுக்கு பொறாமை வரணும்… உனக்கு வருதுன்னா அதுக்கு ரீசன் இருக்கு… நீ அவள போட்டியா நினைக்கிறேன்னு நினைக்கிற… உங்க அண்ணாகிட்ட உன் ப்ளேஸ ரீப்ளேஸ் பண்றாளோன்னு தோணுது உனக்கு… “
இப்போது ரித்விகா…
“ஒகே அப்டியே இருந்துட்டு போகட்டும்… ஆனால் இவ்ளோ பப்ளிக்கா… கடவுளுக்கு சமமா… அப்பா அம்மாக்கு மேலன்னு சொல்ற அளவுக்கு என்ன “
”தெரியலையே… அதை உங்க அண்ணாகிட்டதானே கேட்கணும்…” என்று சிரித்தவளாக..
“உங்க அண்ணா ஒரு மிஸ்ட்ரி ட்ரெஷர் பாக்ஸ் தெரியாதா உனக்கு… ” கிண்டலடித்தாள் ரித்விகாவிடம் கண்மணி
“ப்ச்ச்… “ என்று சலித்த ரித்விகா தன் அருகே அழைத்தவள்…
“அந்தப் பொண்ணு வரைந்த உங்க அண்ணா ஃபோட்டோ… இப்போ இருக்கிற உங்க அண்ணனா… “ கேள்வி கேட்டாள் கண்மணி
”இல்லை… நான் சின்ன வயசுல பார்த்த அண்ணா…” என்றாள் ரித்விகா… தன் அண்ணனின் இள வயது ஞாபகங்களோடு…
“அந்தப் பொண்ணுக்கு வயசு பதினாறு பதினேழுதானே… சோ… அந்தப் பொண்ணுக்கு உங்க அண்ணாவை சின்ன வயசுல இருந்தே தெரிஞ்சுருக்கு… அதுவும் உங்க அண்ணா பழைய ரிஷிய இருந்த போதிலிருந்தே… அந்தப் பொண்ணு வரைஞ்சத வச்சு தோணுச்சு இது… ஆக மொத்தம் திடீர்னு அவ உங்க அண்ணா மேல இவ்ளோ பாசம் வைக்கல… இதுதான் நான் தெரிஞ்சுக்கிட்டது… ”
கண்மணி சொல்லச் சொல்ல… கேட்டுக் கொண்டிருந்த ரித்விகாவோ
“எப்படி அண்ணி…” ஆவென்று ஆச்சரியத்துடன் பார்த்தவள்…
“எங்க அண்ணா யாருக்கு வேணும்னாலும் எம்டி(MT) பாக்ஸ்… ஐ மீன் மிஸ்ட்ரி ட்ரெஷர் பாக்ஸா இருக்கலாம்… ஆனால் இந்த கண்மணிகிட்ட… எம்டி(Empty) பாக்ஸ் தான் தான்… “ என்றபடி தன் அண்ணியை ஓட்ட…
கண்மணியின் இதழ்கள் சோகத்தை அடக்கி… மெலிதான கீற்றலுடன் கூடிய புன்னகையை மட்டுமே அவள் மன்னவனின் தங்கையிடம் பகிர்ந்து கொண்டது…
அந்தப் பெண்… பெண் கூட இல்லை… கார்லா சிறுமியாகத்தான் தோன்றினாள் கண்மணியின் கண்ணுக்கு…
கார்லா ரிஷியிடம் காட்டும் அன்னியோன்யத்தை பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை… அதே நேரம் ரிஷி அவளிடம் நடந்துகொள்ளும் அணுகுமுறையையும் கண்மணி கவனிக்கத் தவறவில்லை… அதைப் பார்க்கும் போதெல்லாம்… ரித்விகாவிடம் ஒரு அண்ணனாக அவன் எப்படி நடந்து கொள்வானோ… அப்படித்தான் கார்லாவிடம் நடந்து கொண்டிருந்தான்… ஆனால் கார்லா அவனைக் கொண்டாடியது அண்ணனாக மட்டுமல்ல… அதற்கும் மேலாக என்பது கார்லாவின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது…
காரணம் என்ன என்று தெரியவில்லை என்றாலும்… ஒரு பெண்… ஒரு ஆணை இத்தனை ஒரு பொது வெளியில் ’கடவுளுக்கு நிகரானவன்’ என்பது சாதாரண விசயமல்ல… அப்படிப்பட்ட பெருமையை தன் கணவன் சம்பாதித்து வைத்திருக்கின்றான் என்ற பெருமையில் மனைவியாக அவளது தேகம் மெய்சிலிர்த்ததுதான்…
ரிஷியின் கல்லூரி நாட்களில்… கார்லாவின் குடும்பத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியதாக தகவலாக சொல்லி இருந்தான்… ரிஷியும் கண்மணியும் பேசி இருந்த அலைபேசி உரையாடலில்…
கார்லா… அவளது வயது… இன்று அவளின் வார்த்தைகள்… கோவா… காவல்துறையிடம் ரிஷி மாட்டியது… என அனைத்தையும் இணைத்துப் பார்த்து… என்ன நடந்திருக்கும் என கண்மணியால் நன்றாகவே ஊகிக்க முடிந்தது தான்…
அதனாலேயே கார்லாவைப் பற்றி ரிஷியிடம் தோண்டித் துருவவில்லை… கடந்து வந்து விட்டாள் கண்மணி… கடந்து வந்தாளா… கண்மணிக்கே தெரியவில்லை… சற்று முன் கணவனை நினைத்து பெருமையுடன் மெய்சிலிர்த்த தேகத்தில்… இப்போது நடுக்கம் வந்து சேர்ந்திருந்தது…
//****
ஹேப்பி தீபாவளி ஃப்ரெண்ட்ஸ்....
கண்மணி என் கண்ணின் மணி.... 50 எபிசோட் முடிச்சுட்டேன்... இந்தக் கதை கொஞ்சம் ட்ஃபெரெண்டா ட்ரை பண்ண நினைத்தேன்... ஓவ்வொரு எபிசோடும் ஒரு கண்டென்ண்டோட கம்ளீட் ஃபீல் வித் ஸ்கீரின் பிளே மாதிரி வைத்துதான் எழுதிட்டு இருக்கேன்... சில பேருக்கு பிடிக்கலாம் சில பேருக்கு பிடிக்காமல் இருக்கலாம்... ஜஸ்ட் ட்ரை... 50த் எபிசோட்... ஆல் சீக்ரட் கேரக்டர்ஸ்... கதைக்குள்ள வந்தாச்சு... எவ்ளோ கேரக்டர் வந்தாலும்... கதையோட தலைப்புக்கான பதில் இன்னும் கேள்விக் குறில தான் இருக்கு... அதாவது கண்மணியின் மீதான ரிஷியின் காதல்... அதற்கான பதிலை நோக்கி இனி வரும் அத்தியாயங்கள்....
தென்... உங்களோட... கண்மணியோட.... சேர்ந்து நானும் ரிஷியை மிஸ் பண்றேன்... 😍 😍😍😍
****///
Lovely update.