* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... எபி போட்டுட்டேன்...
போன எபிக்கு கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி நன்றி....
இந்த எபிசோட்டோட தொடர்ச்சி வார இறுதியில் பதிவு செய்யப்படும்....” */
அத்தியாயம் 48-2
அர்ஜுன் மற்றும் பார்த்திபனிடம் பேசிவிட்டு வெளியே வந்தவள்… தனது உடைமைகளை எடுக்க ஆசிரியர் ஓய்வறைக்குச் சென்று கொண்டிருந்தாள்
வெகு நாட்களுக்குப் பிறகு உணர்ச்சி வசப்பட்டத்தினாலா இல்லை கத்தியதாலா தெரியவில்லை… தலை வலிக்க ஆரம்பித்திருக்க… இதயமோ படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது…
சண்டை போடுவாள்… கத்துவாள் தான்… அதுவுமே தேவைப்பட்டால் தவிர பெரும்பான்மையான சமயங்களில் உணர்ச்சி வசப்படப்படமாட்டாள்… தன் நிதானமான ஆளுமையான குரலிலேயே தன் முன் நிற்பவர்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவாள்… ஆனால் அது அனைத்துமே அவள் உணர்வுகளுக்கு சம்பந்தமில்லாத விசயங்களுக்காக மட்டுமே இருக்கும்…
இன்று பார்த்திபனின் வார்த்தைகள்… அவளைப் பற்றியது கூட இல்லைதான்… ரிஷியைப் பற்றி பார்த்திபன் கூறிய வார்த்தைகளை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… மனம் இப்போதும் கொந்தளித்துக் கொண்டிருக்க.. அப்படியே மேஜையில் அமைதியாக சாய்ந்து அமர்ந்தவள்… ஐந்து நிமிடம் அப்படியே அமர்ந்து விட்டாள்… ஆனாலும் அவளால் சமாதானமாக முடியவில்லை… மேஜையின் மேல் இருந்த அலைபேசியை எடுத்து ரிஷியை அழைத்து அவனோடு பேசினால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று மனதுக்குத் தோன்றினாலும்… அவனுக்கு இப்போது ஷூட்டிங் இருக்கும் என்று மூளை சொல்ல… அவனைத் தொந்தரவு செய்யவில்லை… ஆனாலும்… இருதலைக் கொள்ளி மனமாக… பேசுவோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டுதான் இருந்தாள் கண்மணி…
யோசனையோடு எத்தனை நிமிடங்களைக் கடந்தாளோ… அவளுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரித்விகா ஞாபகம் வர… உடனடியாக எழுந்தவள்… அறையை விட்டு வெளியேறி வர… தொலைவில் அர்ஜூனும் ரித்விகாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்…
தன் வருகைக்காகத்தான் இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்த போதும்…. இருந்த மனநிலையில் அர்ஜூனோடு எப்படி பேசுவாளோ அவளுக்கே தெரியவில்லை… அர்ஜூன் ரிஷியைப் பற்றி பேசவில்லை தான்… பார்த்திபனை பேச விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் ஞாபகத்துக்கு மீண்டும் கோபம் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்க… மனம் இப்போது ரிஷியை நாட ஆரம்பித்திருக்க… கை தானாகவே அலைபேசியில் ரிஷியின் தொடர்பை தேட ஆரம்பித்திருந்தது
ரிஷிக்கு போன் அடித்திருந்தாள் கண்மணி….
“சொல்லும்மா” – ’ஹலோ’க்கு பதிலாக ரிஷி எப்போதுமே அவளது அழைப்பை ஏற்கும் வார்த்தைகள்…
இவ்வளவு நேரம் அவளை பந்தாடிய மற்றவர்களின் அத்தனை வார்த்தைகளும் ரிஷியின் “சொல்லும்மா” என்ற ஒரே வார்த்தையில்… அதுவும் அவன் குரலில்… சிதறடிக்கப்பட்டிருக்க
இதழ்களை கடித்து தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டவள்… மௌனித்தாள் வார்த்தைகள் துணையின்றி
“கண்மணி” -- ரிஷி மீண்டும் அழைக்க
“எனக்கு… ஊட்டி போகனும்… ஹர்சித் பார்க்கனும்…” என்னமோ கடைக்குப் போகவேண்டும் லாலிப்பாப் வேண்டும் என சிறு குழந்தை போலக் அவனிடம் கெஞ்சலாகக் தன் வேண்டுகோளை வைத்தாள் வேறொன்றும் பேசாமல்
சில நொடி மௌனம் தான் எதிர்முனையில்… கண்மணியை… கண்மணியின் மனநிலையை ரிஷியின் மனம் நொடியில் உள்வாங்கியதோ… ஏன் எதற்கு… என்றெல்லாம் ஒரு கேள்வியுமில்லை…
“ஹ்ம்ம்… நான் பெர்மிஷன் கேட்டு வைக்கிறேன்… ஹர்ஷித் கிட்டயும் சொல்லி வைக்கிறேன்… பட் பீ கேர்ஃபுல்…”
“ஹ்ம்ம்…” இது மட்டுமே அவள் பதிலாக இருக்க… அதுவே அவள் மனநிலையை இன்னும் அவனுக்கு அழகாக எடுத்துக்காட்ட
“என்னாச்சு… இன்னைக்கு யார் பேபிய… இல்லையில்ல பேபிக்கு பிடிச்சவங்களப் பற்றி தப்பா பேசி மூட் அவுட் பண்ணினது”
மௌனம் மட்டுமே பதிலாக எதிர்முனையில் இருந்து வர…
”அந்த அர்ஜூனா” ரிஷியின் குரலில் அர்ஜூன் பெயரை உச்சரிக்கும் எரிச்சல் இருக்க
”இல்லை” – கண்மணி மெதுவாக சொற்களை சேர்க்க
”கண்மணி… உன்கிட்ட ஒரு ஒரு வார்த்தையா வாங்கி என்ன நடந்துச்சுனு கேட்கிற அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்லை… டைமும் இல்லை… ஷூட்டுக்கு மிடில்ல பேசிட்டு இருக்கேன்… அல்ரெடி லேட்… ஞாபகம் வச்சுக்கோ… வேகமா சொல்லு”
புரிந்ததுதான் அவளுக்குமே…
”ராஜம் மேடம்… இருக்காங்கள்ள… அவங்க பையன்” என்று இழுத்தாள் கண்மணி
“ஐ ஃபீல் இட்” ரிஷி கடுப்பாகச் சொல்ல
“என்ன ஃபீல் பண்ணீங்க… நான் எதையுமே சொல்லலை….”
“நீ சொல்ல வந்ததை பற்றி இல்லை… நீ சொன்னேல்ல… எமோஷனல் கண்மணி ரொம்ப டேஞ்சரஸ்னு… அது புரியுதுன்னு சொன்னேன்…. ஆனால் எமோஷனல் ஆகும் போது இல்லாஜிக்கலாவும் ஆகிருவியா என்ன… பார்த்தி எனக்குத் தெரியாத ஆள் மாதிரி… ராஜம் மேடமோட பையன்னு தலையைச் சுத்தி மூக்கைத் தொடற…”
தன் தவறு புரிந்து உதட்டைக் கடித்தவளாக… மெதுவாக நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்க… ரிஷி இடையில் ஏதுமே பேசாமல் சொன்னதை எல்லாம் கேட்டவன்…
“சோ… இப்போ அவங்ககிட்ட நான் யாருன்னு காண்பிக்கனும்… அதுக்காக ஹர்ஷித் வரைக்கும் போகனுமா நீ” என்றவனுக்கு பதிலாக கண்மணி பேசாமலே இருக்க
“என்னமோ பண்ணிக்கோ… ஆனால்… ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ… நம்மைப் பற்றி… ஒவ்வொருத்தவங்ககிட்டயும் எக்ஸ்ப்ளைன் பண்ண ஆரம்பித்தால்… லிஸ்ட் ஸ்டாப் ஆகாது… அது நான் ஸ்டாப் தான்… யோசி கண்மணி “
“யமுனாக்கு பதில் சொல்லனும் நான்…”
”விடு… நான் என்ன சொன்னாலும் கேட்கிற மனநிலைல இல்லை… ஊட்டிக்கு போகனும்னு கேட்ட… ஒகே சொல்லிட்டேன்… நான் வைக்கவா” ரிஷி கோபத்தோடு முடிக்க…
அவன் கோபத்தை எல்லாம் கண்டு கொள்ளாதவள்… அழைப்பையும் துண்டிக்க விடவில்லை..
“அன்னைக்கு அர்ஜூன்… அவரக் கூட விடுங்க… பார்த்திபன்லாம் ஏன் கேள்வி கேட்கிறாரு… ஊர்ல வாழ்ற ஒவ்வொரு கப்புள்ஸ்கிட்டயும் ஒருத்தொருக்கருத்தர் தகுதியானவங்களான்னு இங்க யாரும் கேட்பாங்களா என்ன… நம்ம வாழ்க்கை… நாம வாழறோம்… இவங்களுக்குளாம் இதுல இவ்ளோ ஆராய்ச்சி ஏன்…”
கோபம் மறந்து சிரித்தான் ரிஷி…
“You are such ‘A..E..I..O..U..’ " சிரிப்போடே அவளை ஓட்ட
“பரவாயில்ல… நீங்கதான் என் யூனிவெர்ஸ்... அதுனால "AN EMOTIONAL IDIOT OF UNIVERSE" ஆகவே இருந்துட்டு போறேன்… RK - (Rationale King) பகுத்தறிவு மன்னனாவே நீங்க இருங்க ” பதில் கொடுத்தாள் கண்மணி
“இதுக்கெல்லாம் உன் ஐக்யூவ யூஸ் பண்ணு… ஒகே ஒகே முறைக்காத” என்றவன் தொடர்ந்தான்
“ஃபர்ஸ்ட் நீ ஒண்ணு புரிஞ்சுக்கனும்… உன்கிட்ட கேள்வி கேட்கிறவங்க எல்லாம் உன்னைப் பிடிக்காதவங்க கிடையாது… உன்னை… உன் கேரக்டரை அட்மையர் பண்றவங்க… அவங்க மட்டும் தான் உன்கிட்ட கேள்வி கேட்கிறாங்க… அடுத்து அவங்க ஏன் என்னை டார்கெட் பண்றாங்க… அது ஏன்… ஏன்னா நான் ஒரு டம்ப்… இல்லை எதிர்மாறா சொல்லனும்னா க்ரூக் இதுதான் அவங்க ஃபீல் பண்றது” என நிறுத்தியவன்…
“உன்னை மாதிரி… எக்ஸ்ட்ராடினரி, யுனிக்… லாஜிக்கல்…. எத்திகல்… இண்டெலிஜெண்ட்… இலட்சத்தில ஒருத்தியா இருக்கிற ஒரு பொண்ணு… என்னை மாதிரி… ஆர்டினரி… அப்படி கூட சொல்ல முடியாது… கூட்டத்துல …. தேடிக் கூடகண்டுபிடிக்க முடியாத இடத்தில இருக்கிற ஒருத்தனை தூக்கி வச்சு கொண்டாடுனா… அப்படித்தான் சொல்வாங்க..” இதை முடித்த போது அவன் குரலில் இருந்த சிரிப்பு இப்போதும் அப்படியே இருக்க…
“நீங்க சொல்றதே தப்பு…”
“அப்படியா…” பெருமூச்சு விட்டவன்…
“சரி அதை விடு… சிம்பிளா சொல்லனும்ணா… ‘ மேட் ஃபார் ஈச் அதர்…” இப்படி இருந்தால்… ஜஸ்ட் அட்மையர் பண்ணிட்டு போய்ருவாங்க… ரெண்டுமே இம்பெர்பெக்ட்னா… இக்னோர் பண்ணிருவாங்க… “
“பட் அல்ட்ரா பெர்ஃபெக்ட்… அல்ட்ரா இம்பெர்ஃபெக்ட்… மேக்ஸ்… மேஜிக்… சோ அதை அவங்க ஃபீல் பண்ணாத வரைக்கும்… இந்த மாதிரி கேள்விகளுக்கு ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும் பேபி…”
அமைதியாக இருக்க…
“பெர்ஃபெக்ட் யாரு இம்பெர்பெக்ட் யாருன்னு அடுத்த கேள்வி கேட்கப் போறியா” ரிஷி நக்கல் சிரிப்புடன் கேட்க…
“ஹ்ம்ம்.. அதுவும் தெரியும்… என் ஐக்யூ லெவல் பெஸ்ட்னா பெர்ஃபெக்ட் நீங்கதான்”
சத்தமாகச் சிரித்த ரிஷி… ”ஏய்…இதெல்லாம் ஓவரா இல்ல… எனக்கே… கடுப்பாகுது… மத்தவங்க ஆகுறது நியாயம்தான்”
“சரி நான் வைக்கிறேன்… தேங்க்ஸ் உங்க பிஸி ஷெட்யூல்ல எனக்கு டைம் கொடுத்ததுக்கு”
என்ற போதே
“ஓய்ய்… என்ன… இவ்ளோ லெக்சர் கொடுத்து கூல் பண்ணிருக்கேன்… நீ கூலே ஆகாமலே போனை வச்சா என்ன அர்த்தம்” ரிஷி அவளிடம் வம்பளக்க
“இப்போ கொஞ்சம் ஓகே தான் நான்” கண்மணி விட்டேற்றியாகச் சொல்ல
“இல்லையே… மிஸஸ் ஆர் கே… இன்னும் ரவுடி அவதாரம் எடுக்கலையே…. இல்லைனா… இன்னேரம் ஆயிரம் ரிஷி… ரிஷிக் கண்ணா… ரிஷிம்மா வந்துருக்குமே…”
கண்மணி இன்னுமே சமாதானமடையவில்லை என்பதை அவளது நீண்ட மௌனமே உணர்த்த… ரிஷிக்கு மனம் வலித்தது…. தன்னந்தனியே அவள் போராடிக் கொண்டிருந்ததை நினைத்து… ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்…
“ரிஷிக்கண்ணாலாம் எதிர்பார்க்கலை… அட்லீஸ்ட்… ரிஷி போனை வைக்கிறேன்னு சொல்லிட்டு வைங்க பார்க்கலாம்” ரிஷி இன்னுமே தாங்க…
“ஹலோ… ஃபீல் பண்ணிட்டு இருக்கிறது நான்… என்னை பேம்பர் பண்ணத் தோணலை உங்களுக்கு… ரிஷிம்மான்னு உங்கள கொஞ்சனுமா” கண்மணி இப்போது இயல்பாகி இருந்ததோடு மட்டுமல்லாமல்… ரிஷியிடமும் உரிமையுடன் சண்டை போட…
“ஹான் வாடி… அடேங்கப்பா என்ன ஒரு கோபம் என் பொண்டாட்டிக்கு… பேபி… ரவுடி பேபி… ஆர் கேன்னுலாம் சொன்னதெல்லாம் காதுலயே வாங்காம… நமக்கு நம்ம பீலிங்தான்னு முக்கியம்னு… அவங்க ஃபீலிங்கோட குடித்தனம் நடத்திட்டு இருந்தவங்க யாரும்மா”
“ரிஷி” என்று சலுகையாக அழைத்தவள்
“எப்போ ரிஷி… வருவீங்க…. டௌனா ஃபீல் பண்றேன் ரிஷி… ” அவளே உணராமல் அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே…. அவனை நட்ராஜ் அழைக்கும் குரல் கேட்க
“டைம் இல்லடாம்மு… வீட்டுக்கு போய்ட்டு பேசறியா”
”அத்தைய பிடி செண்டர்க்கு கூட்டிட்டு போகனும்… நாளைக்கு பேசறேன்… ஐம் ஓகே…” என்றவள் கண்மணியாக கொஞ்சம் தேறி இருக்க… ரிஷிக்கும் அந்தக் குரலில் திருப்தி வந்திருக்க… போனை வைத்தான்…
ரிஷி… எந்தக் காரணத்திற்காக மகிளாவை விட்டு விலகி வந்தானோ… அதாவது… அவளை தான் ஒவ்வொரு விசயத்திற்காகவும் தாங்கவோ… கொஞ்சவோ முடியாது என்று விலகியவன் கண்மணியை அவளின் சிறு குரல் மாறுதல் கூட தாங்க முடியாமல் அவளை தேற்றிக் கொண்டிருந்தான்… அவன் உணர்ந்தே
கண்மணி… எந்தக் காரணத்திற்காகவும் தான் ரிஷிக்கு முக்கியமாகவோ… அவன் மனச் சுணக்கத்திற்கு காரணமாகக் கூடாது என்று முடிவெடுத்திருந்தாளோ… அதை எல்லாம் உடைத்தவளாக…. அவனை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாள்… அவளே உணராமல்
ரிஷி உணர்ந்தே அவன் இயல்புகளை கண்மணிக்காக மீட்டெடுத்து வர… கண்மணிக்கோ அவள் உணராமலேயே அவள் இயல்புகள் அவளிடம் மீண்டு வர ஆரம்பித்திருந்தன அவளுக்குள்….
Lovely update