ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
/*ஹாய்.... ஹாய்.... back to KmEKm....
@Malini- @bpoornima89 @Nithya @DR.ANITHA selvan @Sathiya @Sumithra Ramalingam @Jayanthi Sakthi @vp vp @bharathi selvakannan @SANGEETHA SEKAR @Malar vizhi @VijiSundar @kavithaa83 @Chitra Ganesan @Baladurga R Elango
உங்க ஒவ்வொருத்தவங்க கமெண்ட்ஸும் கண்மணி ஸ்டோரியோட வெற்றிக்கு முக்கிய காரணம்... அந்த அளவுக்கு உங்க கமெண்ட்ஸ் முக்கியத்துவம் ஆனது...
அண்ட் ஆராதனா- செழியன் ஸ்டோரி... நெகட்டிவ் ஷேட்ஸ் இருக்கிற ஸ்டோரி தான்... எல்லா கதைக்களமும் ஒரே மாதிரி இல்லை... கிராமத்து ஸ்டோரில... எமோசனல் அப்படித்தான் இருக்கும்... எமோசனல்ல வித்தவுட் பில்டர்ஸா தான் அவங்க இருப்பாங்க... அதைத்தான் சொல்ல ட்ரை பண்ணேன்... ’உறவான நிலவொன்று சதிராட’ ... கதையோட தலைப்பிலேயே கதை இருக்கு... ஆராதனா ஹீரோயின் மட்டும் இல்லை... அனைத்துமே அவள் தான்... கீர்த்தனா... தீக்ஷா... சந்தியா... கண்மணி... இவங்க வரிசைல அவ வர மாட்டாள்... செழியன் மேல அவளோட லவ் எவ்வளவோ... அந்த அளவுக்கு நீங்க அவள லைக் பண்ணுவீங்க...😀😀😀 ஏன்னு கதைல தெரிஞ்சுக்கங்க.... இப்போ கண்மணி- ரிஷி க்கு வருவோம்....
Special Thanks for all your comments and supports dears...
கண்மணி என் கண்ணின் மணி... ரொம்ப நாளா போய்ட்டு இருக்குனு எனக்குமே தோணுதுதான்... ஆன்கோயிங் ரீடர்ஸ் பிட் இரிட்டேட் ஆகுறீங்கன்னு தெரியும்... ஆனால் அதுக்காக அவசரப்பட்டு கதையை முடிக்க முடியாது ஃப்ரெண்ட்ஸ்... என்னால் ஒழுங்க கதை எழுத முடியலேன்னா... ஜஸ்ட் ஸ்டாப் பண்ணி வச்சுருவேன்... என்னைப் பொறுத்தவரை நான் கவுண்டிங்குக்கு கதை எழுதல... இந்தக் கதையை எடுத்து ஒரே ஃப்ளோல படிக்கும் போது.... படிக்கிற ரீடர்ஸ்க்கு கண்டிப்பா இந்த ஸ்டோரி ஏமாற்றம் தரக் கூடாது.... இது மட்டுமே எனது நோக்கம்... ’என் உயிரே என் உறவே’... ’அன்பே நீ இன்றி’, ’சந்திக்க வருவாயோ’... இந்த ஸ்டோரிஸ் ஆன்கோயிங்ல போகும் போது ரீடர்ஸ்... வெயிட் பண்ண முடியாமல் கமெண்ட்ஸ் போட்ருக்காங்க... எனக்கும் உங்க உணர்வுகள் புரியுது... அஃப்கோர்ஸ்.... ஜஸ்ட் கதைனு நானும் எழுதல... அதே மாதிரி ஜஸ்ட் கதைனு நீங்களும் படிக்கல... இந்த பாண்டிங்தான் உங்களையும் என்னையும் விடாமல் கனெக்ட் பண்ண வைக்குது...லவ் யூ ஆல்... சோ கீப் மீ வித் யுவர் சப்போர்ட்... அஸ் ஆல்வேஸ்...
அண்ட் எனக்கு வந்திருக்கிற கமெண்ட்ஸ்ல 99% எமோஷனல் அண்ட் வெல் அனலைஸ்ட் கமெண்ட்ஸ் தான்... ஏனோ தானோ கமென்ட்ஸ்லாம் வந்ததே இல்லை... அது எனக்கு எப்போதுமே பெருமையா இருக்கும்... ஹீரோ ஹீரோவை அவங்க ஃபேமில ஒருத்தவங்களா நினைத்து தான் எழுதுவாங்க... ஒவ்வொரு கமெண்ட்ஸும் நான் சேகரித்து வைக்கிற முத்துக்கள் தான்... வைரங்கள் தான்... ரொம்ப ரொம்ப ப்ரைவேட்டா நானே அசைபோட்டுக்குவேன்.... யார்கிட்டயும் அவ்ளோ ஈஸியா ஷேர் பண்ண மாட்டேன்.... இருந்தும் எனக்கு சில கமெண்ட்ஸ்.... என்னை ஜஸ்ட் ஸ்டாப் பண்ண வச்சுரும்... இந்த அளவுக்கு நம்ம எழுத்து வொர்த்தா என்னன்னு.... நம்ம எழுத்து இவ்ளோ தாக்கம் ஏற்படுத்துமான்னு... அந்த கமெண்ட்ஸ் மட்டும் இப்போ சொல்லனும்னு தோணுச்சு... பெருமைக்காக எழுதல... அப்டி நான் பெருமைக்காக எழுதனும்னா... ஆயிரமாயிரம் கமெண்ட்ஸ் சொல்லலாம்... அதுனால பாஸிட்டிவ் வே ல மட்டும் எடுத்துக்கங்க... இது என்கூடவே வச்சுருக்க தோணல... சோ ஷேர் பண்ணிட்டால்.... எனக்கும் கொஞ்சம் பிரஷ்ஷர் கொறையும்...
முதல் நாவல் எழுதிட்டு இருக்கும் போது.... ப்ரஃபெஷனலாலம் எழுதல... எனக்கு தோணினத எழுதிட்டு இருந்தேன்... பாதி போயிட்டு இருக்கும் போதே... ’பெண்மை’ ல ஆர்சி மேமோட கம்பேர் பண்ணி எழுதின கமென்ட்... இதைப் பார்த்துட்டு... 2 வீக்ஸ் அப்ஸ்காண்ட் நான்... மறுபடியும் எழுதின எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன்... கொஞ்சம் சீரியஸ் நோட் எடுத்து எழுத ஆரம்பிக்க மோட்டிவேட் பண்ணின கமெண்ட் அது... சோ மறக்க முடியாத கமென்ட்...
என் உயிரே என் உறவே படிச்சுட்டு... மது கேரக்டர் அவங்க லைஃப்ல ஒரு சேஞ்ச் கொண்டு வந்தாங்கன்னு... நானும் மது மாதிரி ஒதுங்கி வாழப் போறேன்னு... எனக்கு ஒரு ரீடர் கமெண்ட்ஸ் பண்ணி இருந்தாங்க... ஒன் ஆஃப் த பெஸ்ட் கமென்ட்... ஒருத்தவங்க லைஃப்ல நம்ம கதையோட கேரக்டர் சேஞ்ச் கொண்டு வந்திருக்கான்னு... அதுவும் பாசிட்டிவ் வே லன்னு எமோஷனல் ஆன கமெண்ட்... அதுக்கப்புறம் கேரக்டர்ஸ் அனலைஸ் இன்வால்வ்மென் ஆனேன்....
இது ரீசன்ட் கமெண்ட்... கண்டிப்பா இது ஓவர்தான்... அவங்க யார்னு கூட தெரியல... FB page la vantha comment... thanks chitra... உங்க கமென்ட்ஸ் பல முறை படிச்சுட்டேன்... எழுதுறதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிச்சுதான் எழுதிருப்பீங்கன்னு தெரியுது.... எழுத்துலக ஜாம்பவானோடு என்னை கம்பேர் பண்ணாம.. அவருக்கு அடுத்து உங்க எழுத்து எனக்கு பிடிச்சுருக்குனு சொல்லி இருந்தீங்க அந்த வகையில் நிம்மதி... ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் அழகா தேர்ந்தெடுத்து எழுதி இருக்கீங்க...நன்றி... /*நிறைய படிக்கிறேன்... நிறைய பேர் நல்லா எழுதுகிறார்கள்.. ஆனால் உங்க எழுத்து பிரமிக்க வைக்கிறது..*/ - இது ரசிச்சு படிச்ச லைன்... தேங்க்ஸ் சித்ரா... அதே நேரம் கொஞ்சம் பயமாவும் இருக்கு.... எவ்வளவுக்கு எவ்வளவு வானத்தில் பறக்கிறேனோ... அந்த அளவுக்கு அழுத்தத்தைக் கொடுக்குது உங்க கமெண்ட்... எனக்கான ரெஸ்பாண்ஸிபிலிட்டிய இன்கிரீஸ் பண்ணுது.... எனிவே ரொம்ப ரொம்ப நன்றி உங்க வார்த்தைகளுக்கு... தலை வணங்குகிறேன்...
Still saying myself am not a writer... Because Success is not a destination... its a journy....

ஓகே.... ஆல் டன்... எல்லாம் கொட்டிட்டேன்... இப்போ கதைக்கு போகலாமா... வெகு நாளைக்குப் பிறகு... கண்மணியோடு... அண்ட் ரொம்ப நாளைக்கப்புறம் புது அப்டேன்... ஆனால் ரிஷி இந்த எபில இல்லை... சோ திட்டாதீங்க....
கண்மணி என் கண்ணின் மணி- பாகம் 3
அத்தியாயம்: 45
கார் தான் வந்த வேகத்தைக் குறைக்காமல்… அதே வேகத்தில் அந்த ‘பவித்ரா’ இல்லத்தின் நடை பாதையில் வந்து மிகப் பெரும் கிரீச்சிடலுடன் நிற்க… கண்மணியோ நிதானமாக எந்த ஒரு அவசரமும் இன்றி தன் சீட் பெல்ட்டை கழட்டிக் கொண்டிருக்க… அர்ஜூனோ அவளையே பார்த்தபடி இருந்தான்… அந்த வாகனத்தின் கார்க் கதவை லாக் செய்து விட்டு…
கண்மணியும் இப்போது சீட் பெல்ட்டை கழட்டியவளாக கார்க் கதவைத் திறக்க முயல… ஆனால் அது முடியாமல் போக… அர்ஜூனின் முகத்தைப் பார்த்தாள்..
“நான் மனசு வைத்தால் ஒழிய இறங்க முடியாது” அதிகாரமாகச் சொன்னவனை அலட்சியமாகப் பார்த்தவள்…
“அப்டியா… சரி நானும் இறங்க நினைக்கலை…” இவளும் சாவகாசகமே பதில் சொல்ல… அவளின் பதட்டமில்லாத பதிலை ரசித்தபடியே
“சோ பயமில்லை” புருவம் உயர்த்தியபடி அர்ஜூன் கேட்ட விதத்தில்… கண்மணி முகத்தில் ஒரு மாதிரியான பாவம்… எந்த விதம் அர்ஜூனால் உணர முடியவில்லை…
கண்மணி அவன் புறம் திரும்பி அமர்ந்தவளாக…
“இல்லை... ஏன் பயம் … என்னை இந்தக் கார்ல உட்கார வைத்து கதவைப் பூட்டும் போது மகாராணி மாதிரி ஃபீல் பண்ண வச்சீங்கதானே… சோ இறக்கி விடும் போதும்… அதே மகாராணி பீல் தான் கொடுப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அர்ஜூன்…” என்று கண்மணி சொன்ன போதே அர்ஜூன் ஒரு வினாடி அவள் பதிலில் ஸ்தம்பித்து அவளையேப் பார்த்தபடி இருக்க…
இப்போது கண்மணி முகத்தில் திருப்தியான பாவனை வந்திருக்க
“இந்தக் காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டிட்டு வந்தீங்களே… எந்த நம்பிக்கைல அர்ஜூன்…”
”ஆக்சிலேட்டர நம்பியா… இல்லை ப்ரேக்க நம்பியா…”
அர்ஜூனும் இப்போது அவளைச் சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பிக்க…
“ப்ரேக் இருக்குன்ற தைரியத்துல வந்த வேகம் தானே ….”
”அதே மாதிரிதான்… ”
“இந்த அர்ஜூன் கிட்ட இருக்கிற நல்ல குணம் எனக்குத் தெரியும்… அது அவரை எப்போதுமே கைவிடாது”
அவள் பதிலில் ர்ஜூன் முறைத்தான்தான்… அதன் பின் அமைதியாக தன் இருக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருக்க… கண்மணி அவனிடம்
“சொல்லுங்க… என்கிட்ட பேசனும்னுதானே கூட்டிட்டு வந்தீங்க… எப்படியும் நான் வீட்டுக்குள்ள வர மாட்டேன்… எனக்கு இந்த இடம் ஓகே தான் “
”லாங்க் ட்ரிப் இந்த முறை… ஏன் வந்துருக்கேன்னு தெரியுமா…” அர்ஜூன் இப்போதும் கண்களைத் திறக்காமல்… சாய்ந்தபடியே கண்மணியிடம் பேச ஆரம்பிக்க
“தெரியுமே அம்பகம் ட்ரஸ்ட், அப்புறம் தாத்தாவோட பிஸ்னஸ் எல்லாம் ரெகுலேட் பண்றதுக்கு… “ என்றவளிடம்
“ஹ்ம்ம்… அதுவும் ஒரு காரணம்… “ என்றவன் இப்போது கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவன்… அவளை ஆராயும் பார்வையோடே
”நீ நல்லா இருக்கியா கண்மணி” அர்ஜூன் கேட்ட கேள்வியில் கண்மணி புருவம் சுருக்கிப் பார்க்க…
“ஒரு நிமிசம் கூட… உனக்கு என்னைப் பற்றி நினைக்கத் தோணலையா” எப்போதும் கர்ஜிக்கும் அர்ஜூனின் குரலா இது என்றிருக்க
கண்மணியோ இதற்கு என்ன பதில் சொல்வது என்ற தோரணையில் அமர்ந்திருந்தவள்… பிறகு என்ன நினைத்தாளோ
“இன்னைக்கு உங்களப் பார்த்தவுடனே சந்தோசத்துல துள்ளிக் குதித்தேனே… அது சொல்லலையா அர்ஜூன்… “ எதிர்க் கேள்வி கேட்ட போதே
கண்மணிக்கு ரிஷியின் ஞாபகம் வேறு வந்தது…
“கேள்வி கேட்டால் கேள்வியையே விடையாகக் கொடுக்கும் கணவனின் பழக்கம் தனக்கும் வந்து விட்டதோ…” ரிஷியின் நினைவில் இதழில் புன்னகை ஒட்டிக் கொள்ள அவளையுமறியாமல் அவள் முகமும் மலர ஆரம்பித்து இருந்தது
கண்மணியின் மலர்ந்த முகம் அர்ஜூனுக்குமே மலர்ச்சியைத் தர….
“அப்போ என் கூடவே வந்துரு கண்மணி… ” சட்டென்று கேட்டு விட்டான் அர்ஜூன்
கண்மணி அதிரவோ… இல்லை… ஆத்திரப்படவோ இல்லை… அவளுக்கும் நீண்ட நாளாக உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணம் தான்… இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணம் வலுப்பெற்றிருக்க…
“உண்மையச் சொல்லப்போனால்… உங்களோட இந்தக் கேள்விக்கு… நான் கோபப்பட்ருக்கனும்… இல்லை உங்கள அருவருப்பா பார்த்துருக்கனும்…. ஆனால் இதை எதுவுமே செய்யப் போறது இல்லை அர்ஜூன்… சொல்லுங்க… எந்த தைரியம் இன்னும் இந்தக் கேள்வி எனைப் பார்த்து கேட்க வைக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கனும்… … இன்னொருத்தரோட பொண்டாட்டியப் பார்த்து… என் கூட வான்னு கூப்பிடற தைரியம் எது கொடுக்குத்துனு எனக்கும் தெரிந்தால் நல்லா இருக்கும்”
நன்றாக அமர்ந்து அவன் புறம் திரும்பி நிமிர்ந்து அவனைப் பார்க்க… அர்ஜூனும் சளைக்கவில்லை… அதே நேர்ப்பார்வை பார்த்தபடியே
”அது வாய் வார்த்தைல மட்டும் தான்… அதாவது கண்மணி ரிஷியோட மனைவின்றதை வாய் வார்த்தைல மட்டும் தான் சொல்ல முடியும்…. அது கொடுத்த தைரியம் தான்”
அர்ஜூனும் இப்போது தயங்க வில்லை…. நேரடியாகவே பேச ஆரம்பித்தான்…
“வாய் வார்த்தையா… என்ன சொல்றீங்க” கண்மணி முறைக்க….
”மேடம் ஏன் முறைக்கறீங்க… நீங்கதான் அதிர மாட்டீங்க… ஆவேசப்பட மாட்டீங்களே… பிறகு ஏன் இந்த லுக்…”
“ஊர்ல இருக்கிறவங்கள எல்லாம் ஏமாத்தலாம்… என்கிட்ட உங்க ட்ராமாவெல்லாம் செல்லாது… “ என்றவனிடம் கண்மணி புரியாத பார்வை பார்க்க
“என்னடி முறைக்கிற… அவன் ஒரு ஆளு… அவன் பண்ணினது மேரேஜ்… மேடமும் என்னவோ அவனைக் கைல வச்சு தாங்கிற மாதிரி பில்டப்… என்ன என்கிட்டேயேவா” அர்ஜுன் அடிக்குரலில் உறும… கண்மணி இப்போது உண்மையிலேயே கோபத்தில் முகம் சிவந்திருந்தாள்…
“அர்ஜூன்… வார்த்தைகளைப் பார்த்து பேசுங்க… நீங்க பேசிட்டு இருக்கிறது என் புருசனப் பற்றி… எங்க வாழ்க்கையைப் பற்றி… அதைப்பற்றி பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை”
“ஓ… “ இகழ்ச்சியாக அவளைப் பார்க்க…
“புருசன்… அவன்… உனக்கு” சிரித்தான் அர்ஜூன்…. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கும் மேலாகவே
“அதுக்கு அவனுக்கு அர்த்தம் தெரியுமா என்ன…” ஏகத்தும் கிண்டல் வழிந்தது அர்ஜூனின் குரலில்…
“அர்ஜூன்” கண்மணி பல்லைக் கடிக்க..
“ஒரு நிமிடம்…. சிரிக்க விடும்மா… “ சொன்னவன் சிரித்தும் முடிக்க….
”வேற மீனிங்க்லாம் நான் நினைக்கல கண்மணி… ” என்ற போதே கண்மணியின் முகம் உக்கிரமாக மாறி இருக்க
”கோபப்படாத… அந்த ரிஷியை தப்பாலாம் சொல்லலை… மத்த பொண்ணுங்க கிட்ட அவன் எப்படியோ… ஆனால் உன்கிட்ட நெருங்க… அதுக்கான தைரியம் எல்லாம் அவன்கிட்ட கிடையாது… அதை என்னால நிச்சயமா சொல்ல முடியும்”
எங்கு அர்ஜுனை தன்னை மீறி அடித்து விடுவோமா என்று நினைக்கும் அளவுக்கு கண்மணியின் கோபத்தின் அளவு உயர்ந்து கொண்டிருக்க.. இருந்தும் அடக்கியபடி அவனைப் பார்க்க…
”என்ன உண்மையை சொல்லிட்டேன்னு கோபம் வருதா உனக்கு… எங்க நான் சொன்னது உண்மையில்லைன்னு சொல்லு பார்க்கலாம்… அவன் சுண்டு விரல் உன் மேல தப்பா பட்ருந்தால் என் பேரை மாத்திக்கிறேண்டி”
“அர்ஜூன்… உங்க லிமிட்ஸ தாண்டிட்டு இருக்கீங்க… நீங்க பேசிட்டு இருக்கிறது… எனக்கும் ரிஷிக்குமான ப்ரைவேட் ஸ்பேஸப் பற்றி…”
“அப்படியா… அப்படின்னு ஒண்ணு உங்க ரெண்டு பேருக்கும் இருக்கா” அவனது குரல் இன்னுமே எக்களிக்க…
”இருந்தால் தானே சொல்றதுக்கு…” சிரிப்பை அடக்கியவனாக அர்ஜூன் அவளைப் பார்த்து புருவம் உயர்த்த
இப்போது கண்மணி கோபத்தின் உச்சத்தில் இருக்க என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே… கார்க் கதவைத் திறக்க முயற்சிக்க… அர்ஜூனின் முகமெங்கும் அப்படி ஒரு திருப்தியான தோரணை…
கண்மணி கோபப்பட்டு கத்தியிருந்தால் கூட அவன் இந்த அளவு இருந்திருக்க மாட்டான்… அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கும் பாங்கே கண்மணியிடம் இருக்க… அர்ஜூனின் கணிப்பு நூறு சதவிகிதம் நிருபணம் ஆகி இருக்க… அதில் வந்த நிம்மதி அவன் முகமெங்கும் பரவி இருக்க…
“டோர் லாக்காகி இருக்கு மேடம்… திருவாளர் ரிஷியைப் பற்றி… அவருக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும்… தெய்வீக உறவைப் பற்றி பேசின உடனே… பதட்டம் வந்துருச்சுனு நினைக்கிறேன்” நக்கலாக அர்ஜூன் வினவினான்
“கதவைத் திறங்க அர்ஜூன்….”
“முடியாது” கண்மணியின் நிலையில்லா தன்மையை… படபடப்பை முதன் முதலாக தன் பார்வையில் கண்டான் அர்ஜூன்…
எத்தனையோ முறை அவளை நெருங்குவது போல படம் காட்டி இருக்கின்றான்… ஏன் சற்று முன் கூட இறங்க முடியாது என்று சொன்ன போது கூட அவள் கண்களில் பயம் இல்லை… இப்போது… அவளின் படபடப்பு… அர்ஜூனின் ஆராயும் கூர்ப்பார்வை கண்மணியிடம் இன்னுமே அதிகமாக ஆகி இருந்தது….
“என்னோட… “ ஆரம்பித்தவளுக்கு இப்போது தன் நிலைமை புரிய… தன்னையே அமைதிப்படுத்திக் கொள்ள முயல… கண்மணியிடம் மீண்டும் அவளின் நிதானம் வந்திருந்தது
“எங்க லைஃப் பற்றி இதுக்கும் மேல பேசுனீங்க” அமர்ந்திருந்தபடியே கைகளைப் பின்னால் உயர்த்தி ஹெட் ரெஸ்ட்டில் வைத்தபடியே பேச ஆரம்பிக்க… அர்ஜூன் அதை எல்லாம் கவனிக்க வில்லை…
“எனக்கும் பேச இஷ்டம் இல்லைதான்… மோர் ஓவர்… இல்லாத ஒன்றைப் பற்றி என்ன பேச… பேசலை” சொன்னான் தான் ஆனாலும் விட்டானா என்ன…. விடவில்லை…
”இங்க பாரு கண்மணி… நான் பேசலை விட்றேன்… ஆனால் நீ யோசி… உனக்கும் ரிஷிக்குமான உறவைப் பற்றி… ஆறறிவு இல்லாத விலங்குகளோ… ஆறறிவு இருக்கிற மனுசங்களோ… இவங்கதான் தன்னோட இணைனு உணர்ந்தால் மட்டுமே ஒருத்தரை ஒருத்தர் நோக்கி இழுக்கும் இயல்பான உணர்வு தானா வரும்… உன்னைப் பார்த்து ரிஷிக்கிட்ட வந்துருக்கா சொல்லு… இல்லை உனக்கு ” என்ற போதே
கைகள் இறுகியது கண்மணிக்கு… ரிஷிக்கும் அவளுக்குமான உறவின் விளக்கம் அர்ஜூன் சொல்லச் சொல்ல ரிஷியையும் அவளையும் நட்ட நடு வீதியில் பிறந்த மேனியோடு நிறுத்தி வைத்திருந்தாற் போன்ற அவமானம்… அவளின் நிதானம் எல்லாம் அடியோடு போயிருக்க… அவளின் கோபம் உணர்ந்த அர்ஜூன் அவளைப் பார்க்க… தன் நிதானத்தில் இல்லை என்பதை உணர்ந்தவனாக… பேசியதை நிறுத்தியவனாக அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று ஊகிக்கவே முடியாதவனாக கண்மணியைத் தடுக்க முயற்சிக்க…
அதற்கெல்லாம் கண்மணி வாய்ப்பளிக்கவே இல்லை…
கார்க் கண்ணாடி படாரென்று வெடித்துச் சிதறி இருந்தது…. கண்மணியின் கைகளில் இருந்த ஹெட் ரெஸ்ட்டின் உபயத்தால்….
அவள் அடித்த அடியில் கார்க் கண்ணாடி தூள் தூளாகச் சிதறி விரிசல்களோடு காட்சி அளிக்க… வேகமாக அர்ஜூன் அவள் கைகளைப் பற்றியவன்… அந்தச் சூழ்நிலையிலும் அவள் கைகளை ஆராய… நல்ல வேளை அவள் கைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை…
அவனிடம் இருந்து தன் கைகளை ஆவேசத்தோடு விலக்கிக் கொண்டவளிடம்
“இவ்ளோ கோபம் உனக்கு எதுக்குடி… உண்மையைச் சொன்னால் கோபம் வருதா உனக்கு” அர்ஜூன் பதறியவனாகக் கேட்க
“இப்போ யாரை அர்ஜூன் அசிங்கப்படுத்துறீங்க… என்னையா?… ரிஷியையா?” கேட்டவளிடம்
”உன்னை என்னடா நான் கேவலப்படுத்தினேன்” அர்ஜூன் ஆதங்கமாகக் கேட்க
“என மேல ரிஷிக்கு ஒரு ஃபீலிங்கும் வரலேன்னு சொன்னா… யார் மேல தப்பு அர்ஜூன்”
“லூசாடி… நான் என்ன சொல்ல வந்தேன்… நீ என்ன நினைச்சுருக்கிற… அவனையும் நான் தப்பா சொல்லல… அவன் மேல உனக்கும் காதல் இல்லை… அவனுக்கும் காதல் இல்லை… அதைப் புரிஞ்சுக்கோன்னு சொல்றேன்… இன்னைக்கு மட்டுமில்லை… அவன் உன் கழுத்தில தாலி கட்டின நாள்ள இருந்து… இதைச் சொல்றேன்… கஷ்டத்தில இருக்கிற ஒரு பையன்… அவனுக்கு ஒரு சப்போர்ட்டா இருக்க… அதே போல அவனுக்கு உன்னோட ஹெல்ப் தேவை… அதைதான் அவனும் உன்கிட்ட எதிர்பார்க்கிறான்… அதுக்கு மேல நீயும் அவன் கிட்ட எதிர்பார்க்கல… அவனும் உன்கிட்ட மனைவியா காதலியா எதையுமே எதிர்பார்க்கலை… இதை எல்லாம் விட அவன் உன்னை நெருங்க மாட்டான்… அவன் அப்படியே நெருங்கினாலும்… தெய்வத்தின் காலடியில் ஆறுதல் தேடும் பக்தனைப் போல்தான்… உனக்கும் அவனுக்கும் உள்ள உறவு இதுதான் கண்மணி… அவன் தெளிவா இருக்கான்… அவன் குடும்பத்துக்கு… அதோட பாதுகாப்புக்கு உன்னை மாதிரி பொண்ணு தேவை… உன்னை நல்லா யூஸ் பண்ணிக்கிறான்… ஆனால் நீதான் உன்னை ஏமாத்திக்கிற… தெளிவா யோசி… உனக்கே புரியும்..” என்றபடியே கார்க்கதவின் லாக்கை திறந்து விட முயற்சிக்க… இப்போது அர்ஜூனால் முடியவில்லை…. கண்மணி கதவை உடைத்திருந்ததில் ஸ்டக் ஆகி இருக்க…. கண்மணி புரிந்தவளாக…
”குனிங்க…” விறைப்பாகச் சொன்னவள்… அவன் புறம் இருந்த கார்க்கண்னாடிக் கதவையும் உடைக்க… அர்ஜூனின் முகமெங்கும் புன்னகை....
“ரவுடி…” அர்ஜூனின் வாயிலிருந்து அவனையுமறியாமல் அந்த வார்த்தைகள் வந்திருக்க… கண்மணியின் காதிலும் அந்த வார்த்தைகள் விழ…. அர்ஜூனின் குரல் அவளை இம்சிக்கவில்லை
மாறாக ‘ரிஷி’… அவன் குரல் மட்டுமே அவளின் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது… அவன் சீண்டலோடு அவளை அழைக்கும் அந்த உரிமையான ’ரவுடி’… என்ற வார்த்தைகளுக்கு அவள் மனம் ஏங்க ஆரம்பித்திருக்க…. வெகுநாட்களுக்குப் பிறகு… கண்ணீர் சுரப்பிகள்… மெல்ல விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்க…. இருந்தும் மீண்டும் அடக்கி வைக்கப்பட்டன கண்மணியால் …
இருவரும் இப்போது காரை விட்டு வெளியே வந்திருக்க… அர்ஜூன் அவளை எவ்வளவோ தடுத்து நிறுத்த முயற்சித்தும்… அவள் பிடிவாதத்தை அவனால் ஜெயிக்க முடியுமா….
“அர்ஜூனா இல்லாமல்… வேற யாராவது இருந்திருந்தா முதல்ல கண்ணாடி உடைந்திருக்காது…” என்றவளின் பார்வை அர்ஜூனின் தலையில் பட்டு மீள… அர்ஜூன் முகத்தில் குறும்பான புன்னகை…
“என்னைத் தவிர வேற யா…ரா... இருந்தாலும்…. அப்படித்தானே… அப்போ இந்த உலகத்தில் நான் தான் உனக்கு முதலில்… தனி இடம்… அதுக்கப்புறம் தான் மற்ற எல்லாரும் ” அர்ஜூன் விடாக் கொண்டனாக அவளிடம் கேள்வியைக் கேட்டும் விட
கண்மணி சற்று திணறியவள்… இதற்கு மேல் என்ன சொல்வது என்ற ரீதியில் அமைதியாக திரும்பி நடக்க…
“எனக்குத் தெரியும்…. நீ இனிமேலாவது யோசிப்பேன்னு…. உனக்காக காத்துட்டு இருப்பேன்” அர்ஜூன் கத்திச் சொல்ல….
அவள் அவன் புறம் திரும்பக் கூட இல்லை… அர்ஜூனின் நடவடிக்கைகள் கிஞ்சித்தும் அவளை இம்சிக்க வில்லை ஆனால்... அவளுக்கும் ரிஷிக்குமான வாழ்க்கையைப் பற்றி புரிதலைப் பற்றி அர்ஜூனின் வார்த்தைகள் மட்டுமே அவளை இம்சித்துக் கொண்டிருந்தன….
“அவன் அதற்கு மேல் உன்னிடம் ஒன்றும் எதிர்பார்க்கவிலை… அவன் அப்படியே நெருங்கினாலும்… தெய்வத்தின் காலடியில் ஆறுதல் தேடும் பக்தனைப் போல்தான்”
இத்தனை மாதங்களில் ரிஷி அவளிடம் என்றாவது அவளிடம் கணவனாக நெருங்கி இருக்கின்றானா… மனைவியாக இவளை ஒரு சிறு பார்வை பார்த்திருக்கின்றானா???? கண்மணியும் முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்திருந்தாள்…
Hi Praveen Nan romba late
3rd part ipo tan padika start seidruken