அத்தியாயம் 105-4 (ஃபைனல்)
/*தங்கமா வைரமா என்ன சொல்ல இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல சொந்தமா பந்தமா என்ன சொல்ல ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள
சத்தியமா நான் சொல்லுறேன்டா இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா சுத்தத்திலும் சுத்தத் தங்கமடா இந்த அண்ணாதுர தங்கமா வைரமா என்ன சொல்ல......
கண்ணிரிலே வாழுவான் நீ கண்ணீர் விட்டால் தாங்குவான் தன்னை நம்பி யாரும் வந்தால் உயிரக் கொடுத்துத் தூக்குவான் எருவ... எரிக்க எரிக்க திருநீறு இவன... படிக்கப் படிக்க வரலாறு....(சத்தியமா)
ஒட்டு மொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே வெட்டுப் பட்ட காயமும் வாய் திறந்து பேசுதே உளியில்... வலியை பொறுக்கும் சிலை பாரு இவனில்... வலியில் இருக்கு கதை நூறு..(சத்தியமா) */
“அண்ணி… சாப்பிடுங்கண்ணி… நீங்க இப்படியே இருந்தால் என்னாகும்…” ரிதன்யா கண்மணியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க… அவள் மட்டுமல்ல அனைவரும் கண்மணியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க… ஆனாலும் கண்மணி யாரிடமுமே பேசவில்லை…
கண்மணியின் கல்லாகச் சமைந்து உட்கார்ந்திருந்தாள்… எப்போது அவளது குழந்தை அபாயக்கட்டத்தில் இருக்கும் விசயம் தெரிவிக்கப்பட்டதோ… அதில் இருந்து இப்படித்தான் வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கண்மணி….
கிருத்திகா கூட கண்மணியிடம் பேசிப் பார்த்து விட்டாள்… கண்மணியின் நிலையை மாற்ற முடியவில்லை… கண்மணி ஒரு வார்த்தை வாய் திறந்து பேசவில்லை… ஏன் ரிஷியைப் பற்றி கூட யாரிடமும் கேட்கவில்லை…. மாத்திரை மருந்து என எதையுமே அவள் அனுமதிக்க விடவில்லை… விசயம் கேள்விபட்டதில் இருந்து உறக்கம் என்பதையும் மறந்து தன்னிலை மறந்தி்ருந்தாள்…
அவளுக்குள் ஒரே கேள்விதான்…
“ஒரு குழந்தை குழந்தைனு எல்லோரையும் நம்ப வச்சேனே… அதுக்கு கிடைத்த தண்டனையா எனக்கு… ரிஷி முகத்தில நான் எப்படி முழிப்பேன்… ரிஷி என்னை மன்னிப்பாரா” இதில் தான் கண்மணியின் மனம் சுற்றிக் கொண்டிருந்தது…
”ஏண்டி… இப்போ என்ன… என்ன நடந்துச்சுன்னு இப்படி கல்லா இருந்து எங்களையும் சோதிக்கிற… தங்கமா ஒரு பையன் பெறந்துருக்கான்… மாப்பிள்ளைக்கும் ஆபரேஷன் முடிஞ்சிருச்சு… இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுருவாரு… அவர் உயிருக்கும் ஒரு ஆபத்தும் இல்லைனு சொல்லிட்டாங்க.. இந்த அளவுக்காவது உனக்கு நல்லது நடந்திருக்குனு சந்தோசப்பட்றதை விட்டுட்டு… கவலையை இழுத்து வச்சுக்குவியா… சாப்பிடுடி… இதுக்குத்தான் இவ்ளோ கஷ்டப்பட்டியா நீ… அங்க அந்தப் புள்ளை வெற மயக்கத்துல இருக்கு… நீங்க பெத்த இன்னொரு புள்ளையை யோசிக்க மாட்டீங்களா… நீ சாப்பிட்டாதானே அதுக்கு சாப்பாடு… இந்தப் பிடிவாதம்தாண்டி நீ பட்ற கஷ்டம் எல்லாத்துக்கும் காரணம்… ஒண்ணு ஆட்டம் போட்ற… இல்லை இப்படி குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்துருவ… பாவி உன்னை என்ன மண்ணெடுத்து படைச்சானோ அந்த ஆண்டவன் “ தன்னை வசைபாடிய கந்தம்மாளை நிமிர்ந்து பார்த்தாள் கண்மனி…
சட்டென்று கண்மணியின் ஒரு கண்களில் நீர் கோடு வழிந்து கன்னம் தாண்டி இருக்க… வேகமாக மூக்கை உறிஞ்சியவளாக… கந்தம்மாளையே பாவமாக பார்த்தபடி இருந்தவளின் அழுகை தான் பெருகியதே தவிர… வார்த்தை ஏதும் அவளிடமிருந்து வரவில்லை…
”அழுது தொலைக்காத… தொட்டு கண்ணைக் கூடத் தொடச்சு விட்ற நிலைமைலயா இருக்க… நல்ல அதிர்ஷ்டக்கட்டை…” கந்தம்மாள் கரிசனத்தைக் கூட இப்படித்தான் காட்டுவார்… அவர் அப்படித்தான்… அவரை மாற்ற முடியாது… இன்றும் அப்படியே பேச… மற்றவர்கள் அனைவரும் கந்தம்மாளைக் கோபமாகப் பார்க்க… கந்தம்மாள் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை…
கண்மணி இப்போது வாய் திறந்தாள்… வெகு நேரத்திற்குப் பிறகு…
“கெழவி.. நீ எப்போதும் சொல்றது சரிதான்… நீ சொல்ற மாதிரி நான் அதிர்ஷ்டமே இல்லாதவ தான்… பிறக்கும் போதே அம்மாவை முழுங்கினேன்… இப்போ என் புள்ளையையும்… நான் தப்பு பண்ணிட்டேன் கெழவி… நான்தானே சொன்னேன்… ஒரு குழந்தை ஒரு குழந்தைனு…. கடைசியில அப்படியே ஆகிருமா… ரிஷியைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்… என்னை மன்னிக்கவே மாட்டாரு…” கண்மணியின் குரலில் உச்சக்கட்ட விரக்தி மட்டுமே…
கண்மணியின் பிடிவாதம் உலகம் அறிந்தது… அவள் ஒரு விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் யாராலும் மாற்ற முடியாது… அவள் உயிருக்கே சவாலான நிலையில் போராடிய போது கூட ரிஷியிடம் அவள் பேச மறுத்தது அனைவரும் கண் கூடாக கண்டார்களே… இப்போது மட்டும் எப்படி அவள் பிடிவாதத்தை மாற்ற முடியும்… அனைவரின் முயற்சியும் தோல்வியில் முடிந்திருந்தது…
அவள் பிடிவாதம் ஒரு புறம் இருக்க… குழந்தையின் நிலை காரணமாக ரிஷி இவள் மேல் கோபமாக இருக்கின்றான் என்பதை யாருமே அவளிடம் சொல்லவே இல்லை… மறைத்திருந்தனர்… கண்மணி அதைச் சொல்வதற்கு முன்னே.. இப்படி என்றால்… சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்குமோ… நல்ல வேளை சொல்லாமல் விட்டார்கள்…
ரிஷியுமே உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்குச் சென்றிருப்பான் தான்… ஆனால் கண்மணி முன்னரே கணித்து சொன்னதாலேயே அவனை காப்பாற்ற முடிந்தது என்பதே உண்மை.…
ரிஷிக்கு ரஞ்சித்தால் ஏற்பட்ட கத்திக் குத்து… குழந்தைகளைப் பார்த்தது… அவனது அறுவைச்சிகிச்சை… இப்போது அவன் அபாயக்கட்டத்தை தாண்டியது என எல்லாம் கண்மணிக்குச் சொல்லப்பட்டது தான்… ஆனால் இவள் மீதே கோபமாக இருக்கிறான் என்பது மட்டும் சொல்லப்படவில்லை...
என்ன சொல்லி என்ன பயன்… கண்மணி…. ரிஷி… அவர்களின் இரு குழந்தைகள் என நால்வருமே தனித்தனி தீவுகளாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலையில் இருந்ததுதான் காலத்தின் கொடுமை…
கண்மணிக்கு பிரச்சனை ஏதும் இப்போது இல்லையென்றாலும்… அவளுக்கு அம்மை போட்டிருந்ததால்… அது முழுமையாக சரி ஆகாத சூழ்நிலையில் அறையை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை…
அவளால், ரிஷியை… குழந்தைகளை நெருங்க முடியாத சூழ்நிலை… பித்துப் பிடித்தவள் போல அமர்ந்திருந்தவளை யாருமே தேற்ற முடியாத நிலை… யார் தேற்றினாலும் அதில் அடங்காத மனமாக கண்மணி தவித்திருக்க… தேற்றுபவனோ... யாரிடம் அவள் ஆறுதல் தேட எண்ணினாளோ... அவனின் ஆறுதல் இனி கிடைக்குமா என யாரை எண்ணி பயந்திருந்தளோ அவன் இன்னுமே மயக்கத்தில் இருக்க... யார் தேற்றுவது அவளை...
இதற்கிடையே குழந்தையின் நிலையோ… மிக மிக கவலைக்கிடமாக மாறிக் கொண்டிருந்தது… பணத்தைக் கொட்டிக் கொடுத்தாவது… குழந்தையைக் காப்பாற்றும் திறமைசாலி மருத்துவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து… அவர்களை இங்கு வரவழைத்தாவது… குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்றி கண்மணி கையில் கொடுத்து விட வேண்டுமென்று அர்ஜூனும்…. நாராயணனும்… போராடிக் கொண்டிருந்தனர் ஒருபுறம்….
“அர்ஜூன் குழந்தையைக் காப்பாத்தி என் பேத்தி கைல கொடுத்துறனும்டா… இல்லேனா ரிஷி கண்மணியைப் பார்க்கக் கூட மாட்டான்… என் பேத்தி அதை தாங்கவே மாட்டாடா… அவ சந்தோசமே ரிஷிதான்… என் பேத்தி ரிஷி இல்லாத வாழ்க்கையை வாழமாட்டாடா… எப்படியாவது குழந்தையக் காப்பாத்திக் கொடுக்கனும்டா..” அர்ஜூனிடம் நாராயணன் தழுதழுதிருக்க..
அர்ஜூனுக்கு புரியாததா… தன்னால் முடிந்த அளவுக்கு முயன்று கொண்டிருந்தான் ஒரு புறம்… அவன் ஒருபுறம்… கிருத்திகா ஒரு புறம்… மீனாட்சி ஒருபுறம்… ஏன் அம்பகம் மருத்துவமனையே அல்லோல்கலப்பட்டிருக்க..
இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கிடையே ரிஷியும் ஒரு வழியாக கண் விழித்திருந்தான்…
“சார்… ரிஷி சார் கண்ணு முழிச்சுட்டாங்க… வந்து பாருங்க… சார்” உதவியாளர் நாராயணனின் அறைக்கு சொல்லி விட்டுச் செல்ல… நாரயணன் தன் மருமகனைப் பார்த்தார்…
நட்ராஜோ அங்கிருந்த ஒரு இருக்கையில் துவண்டு அமர்ந்திருந்தார்… மருமகன் எப்போது தன்னை அப்படி திட்டினானோ... அதில் இருந்தே அப்படித்தான் இருந்தார்...
ஒரு புறம் மகளின் நிலை… இன்னொரு புறம் மருமகனின் கோபம்… மற்றொரு புறமோ… அவர் பேத்தியின் கவலைக்கிடமான நிலை…
”மாப்பிள்ளை… வாங்க… ரிஷி கண்ணு முழிச்சுட்டாராம்… நீங்க வந்து பேசுங்க… என் பேத்தியும் வர முடியாத நிலை… அவங்க குடும்பத்துக்கு அப்புறம் நீங்கதான் அவருக்கு நெருக்கமானவர்… வாங்க வந்து பேசுங்க…” என்ற நாராயணனிடம் நட்ராஜ் வர மறுத்தார்…
“இல்ல மாமா… நான் ரிஷியைப் பார்க்க மாட்டேன்… பார்க்க வரலை… நீங்க போங்க”
“எவ்வளாவோ விசயம் நடந்திருக்கு மாமா…. நம்ம கண்மணி எவ்வளவோ அவரை அசிங்கப்படுத்தி இருக்கா… அவமானப்படுத்தி இருக்கா… கஷ்டப்படுத்தி இருக்கா… அதை எல்லாம் அவர் பெரிய விசயமாகவே எடுத்ததில்லை… ஒரு வார்த்தை கண்மணியைப் பற்றி தப்பா பேசியதில்லை… என்னையும் தள்ளி வச்சதில்லை... ஆனால் நேத்து… “ எனும் போதே நட்ராஜ் பொங்கி அழ ஆரம்பித்தவராக…
“என் பொண்ணு பிடிவாதக் காரிதான்… ஆனால் அதை விட என் மாப்பிள்ளை மாமா… அவ்ளோ சீக்கிரம் அவர் ஒருத்தவங்ககிட்ட கோபப்பட மாட்டார்… யாரையும் கைவிட மாட்டார்… ஆனால் அப்படி கை விட்டார்னா கைவிட்டார் தான்… அவரை மாற்ற முடியாது... அதுதான் எனக்கு பயமா இருக்கு...” என்று இத்தனை நாள் ரிஷியிடம் பழகியவராக ரிஷியைப் பற்றி கணித்துச் சொல்ல…
நாராயணன் தான் வம்படியாக நட்ராஜை ரிஷியிடம் அழைத்துச் சென்றிருந்தார்…
---
ரிஷி.. ஐசியூவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்தான்… தன்னைச் சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து பார்வை வட்டத்தை மட்டும் சுழற்றியவனாக அனைவரையும் பார்த்து முடித்தவனின் பார்வை ஏமாற்றத்தையும் அதனோடே ஏக்கத்தையும் அப்பட்டமாக காட்டியிருந்தது…
“அவ எங்க… கண்மணியைப் பார்க்கனும்… அட்லீஸ்ட் போன்லயாவது பேசனும்” ரிஷியின் குரல் நைந்து ஒலித்திருக்க… அனைவரும் இப்போது குழம்பினர்…. இவன் அக்கறையில் விசாரிக்கின்றானா??…. இல்லை கோபத்தில் விசாரிக்கின்றானா??? என்று ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்திருக்க…
”பாப்பா… இன்னும் அப்படியேதான் இருக்காளா… நர்ஸ்கிட்ட கேட்டா சொல்ல மாட்டேங்கிறாங்க…” அடுத்த கேள்வி குழந்தையைப் பற்றி கேட்டவனாக… மீண்டும் கண்மணியிடமே வந்து நின்றான்
”நான் கண்மணியைப் பார்க்கனும்… நான் சொல்றது கேட்குதா இல்லையா… அவளை என்கிட்ட கூட்டிட்டு வாங்க… இல்ல அவகிட்ட என்கிட்ட கூட்டிட்டு போங்க…” ரிஷியின் குரல் இப்போது உயர்ந்து அந்த அறை முழுவதும் எதிரொலித்திருக்க… ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பதறி இருந்தனர்…
”அவ உன்னைப் பார்க்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்கடா… அவ இன்னும் சரி ஆகலைடா…” இலட்சுமி மகனின் நிலைப் பார்த்து பதறியபடி அவனிடம் சொல்ல
“சரிம்மா புரியுதும்மா… அப்போ போன்ல பேசச் சொல்லுங்க… அவளுக்கு போனைப் போடுங்க…”
இலட்சுமி தயங்க…
”போடுங்கம்மா…” இப்போது உச்சஸ்தாயில் கத்தினான் ரிஷி… இலட்சுமியும் வேக வேகமாக அலைபேசியில் ரிதன்யாவுக்கு அழைக்க… ரிதன்யாவும் எடுத்தாள்தான்… ஆனால் கண்மணியின் நிலை… அவள்தான் பேசும் நிலையில் இல்லையே…
“அம்மா… அண்ணி…. இங்க யாரையும் பக்கத்தில நெருங்க விட மாட்டேங்கிறாங்க… அப்படியேதான் இருக்கிறாங்க… ரொம்ப அப்செட்... டிப்ரெஷன்னு…. பயமா இருக்கும்மா… பாப்பாவை வீடியோல பார்த்ததுல இருந்து எப்படி இருந்தாங்களோ…. அதே நிலைலதான் இருக்காங்கம்மா… அர்ஜூன் சாரால கூட சமாதானப்படுத்த முடியலை…. போன்லாம் வாங்கி பேசுற நிலைமைல அவங்க இல்லை…”
இலட்சுமி பேசிக் கொண்டிருக்கும் போதே… ரிஷி வேகமாக எழுந்து அமர்ந்தவன்… அதே வேகத்தில் கட்டிலை விட்டு இறங்கியும் இருந்தான்… இலட்சுமி பதட்டத்தில் அலைபேசியை அணைத்திருக்க
“கண்மணிக்கு என்ன ஆச்சு… சொல்லுங்க… ஏன் என்கிட்ட கண்ல காட்ட மாட்டேங்கிறீங்க… அவ ஏன் பேச மாட்டேன்கிறா… அவ ஏன் என்னை வந்து பார்க்கலை…”
ரிஷியின் குரலில் பதட்டம் வந்திருக்க… அவனின் எண்ணமெல்லாம் எதிர்மறை பயணத்தை நோக்கிப் போக ஆரம்பித்திருக்க… இருந்தும் எதையும் யோசிக்காமல்…
“எ..ன்...என் கண்மணி எங்க… சொல்லுங்க….”
“நீ… நீங்க யாரும் சொல்ல வேண்டாம்…” என்றபடியே நடக்க முயற்சித்தவன்… நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழப் போக…
அதற்குள் வேகமாக சத்யாவும் விக்கியும் தாங்கியவர்களாக…
“டேய் நீ பயப்பட்ற அளவுக்கு… கண்மணிக்கு ஒண்ணும் இல்லடா… பொறுமையா நான் சொல்றதைக் கேளுடா ”
“ப்ச்ச்… என்னை அவகிட்ட கூட்டிட்டுப் போங்க… போங்கன்னா... போங்க” திமிறியவனின் கண்களில் முதன் முதலாக பயம் வந்திருக்க…
அடுத்த நிமிடம் யாரையும் அவன் எதிர்பார்க்கவில்லை… தன்னைப் பிடித்திருந்தவர்களின் கைகளைத் தட்டிவிட்டவனாக வேகமாக வெளியே வந்திருக்க… அப்போது எதார்த்தமாக வந்த அர்ஜூன் தான் அவனைப் பிடித்து நிறுத்தியிருந்தான்…
“என்னாச்சு ரிஷி… ஏன் இப்படி புருசனும் பொண்டாட்டியும் எமோஷனல் வீக்கா இருக்கீங்க… அங்க அவ பித்து பிடிச்ச மாதிரி கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கா… நீ இங்க இப்படி ஆக்ரோசத்தில ருத்திர தாண்டவம் ஆடிட்டு இருக்க… வா முதல்ல ரூம்க்கு வா… கண்மணியை அப்புறம் பார்க்கலாம்” என அர்ஜூன் ரிஷியைக் கட்டுப்படுத்த முயல
ரிஷி அர்ஜூனைப் பார்த்தவனாக…
”நீங்க எனக்கு இரத்தம் கொடுத்திருக்கலாம்… என் உயிரைக் காப்பாத்திருக்கலாம்… அந்த நன்றிக்கடன் எனக்கு இருக்கு…” என்றபடியே தன் முகத்தைத் துடைத்தவனாக…
“அதுக்காக நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்கனும்னு எதிர்பார்க்காதீங்க அர்ஜூன்…”
”நான் ஏன் என் கண்மணியைப் பார்க்கக் கூடாது… அதை நீங்க எதுக்கு சொல்லனும்..”
“அவ என் கண்மணி… நான் அவளைப் பார்க்கிறதை யாரும் தடுக்கக் கூடாது… அவ என் பொண்டாட்டி… நீங்க என்ன சொல்றது அவளைப் பார்க்கக் கூடாதுன்னு”
அர்ஜுன் இப்போது கடுப்பாக…
“அவ உன் கண்மணிதான்…. உன் பொண்டாட்டிதான்… அதோ அந்த ரூம்லதான் இருக்கா…” என்று கண்மணி இருந்த அறையைக் காட்ட
வேகமாக நட்ராஜ்…
“ஐயோ… அர்ஜூன்… என் இப்படி பண்ணுன….” பதறி அடித்துக் கொண்டு ரிஷியின் முன்னால் சென்று ரிஷி கண்மணியிடம் செல்வதை தடுக்க முயல… அர்ஜூன் நட்ராஜைப் பிடித்துக் கொண்டான்…
“போகட்டும் மாமா… விடுங்க… அவளும் யார் பேச்சையும் கேட்க மாட்டா… இவனும் யார் பேச்சையும் கேட்க மாட்டான்…” என்று நிறுத்தியவன்
“உங்க மருமகன் நீங்க பயப்பட்ற மாதிரி அவன் பொண்டாட்டிகிட்ட கண்டிப்பா கோபமெல்லாம் பட மாட்டான்… கண்மணியை அவன் மட்டும்தான் ஹேண்டில் பண்ண முடியும்… அதேபோல ரிஷியை அவ மட்டும் தான் ஹேண்டில் பண்ண முடியும்… இப்போதைக்கு கண்மணிக்கு ரிஷி… ரிஷிக்கு கண்மணி… அவங்க மட்டுமே அவங்களுக்கு ஆறுதலா இருக்க முடியும்… போகட்டும் விடுங்க… ஒண்ணும் ஆகாது”
“இல்லப்பா…. அதெல்லாம் முன்ன…. ரிஷிக்கு கண்மணி மேல கோபம் இருந்தாலும்… அவள்ட்ட இறங்கிப் போவான்…… ஆனால் இப்போ அவன் புள்ளைனு வந்த பின்னால… கண்மணியைக் கூட நினைக்கலையே… இப்போ கண்மணியை அவன் ஆறுதல் படுத்துவானா… அதுமாதிரி இவ்ளோ நாள் பிடிவாதமா அவனை விட்டு தள்ளி நின்ன என் பொண்ணு… எந்த முகத்தை வச்சுகிட்டு அவன்கிட்ட போவா… அவ எப்படி இவனை ஆறுதல் படுத்துவா… என்னை யாரும் புரிஞ்சுக்க மாட்டேன்கறீங்க” நட்ராஜ் புலம்பியபடி இருக்க…
அவர் புலம்பல்கள் எல்லாம் கேட்க… ரிஷி அங்கு நின்றிருந்தால் தானே….
கண்மணி இருந்த அறைக்குள் அவன் எப்போதோ சென்றிருக்க… அங்கோ கண்மணியின் அருகில் செல்ல முடியாமல் கந்தம்மாள்… வைதேகி…. கிருத்திகா… ரிதன்யா… மருத்துவர்… செவிலியர்… போராடிக் கொண்டிருக்க…
”என் குழந்தையை நானே கொன்னுட்டேன்…. என் ரிஷிக்கண்ணா என்னை மன்னிக்கவே மாட்டார் என்னை…. யாரும் என் பக்கத்துல வராதீங்க…” கண்மணி கட்டிலில் ஓரமாக ஒடுங்கி அமர்ந்திருந்தாள்…
”பக்கத்துல வந்தீங்க… எனக்கு ஏதும் வேண்டாம்… நான் மட்டும் பொழச்சு என்ன பண்ணப் போறேன்…“ கையில் கத்தறிக்கோலை வைத்தபடி மிரட்டிக் கொண்டிருந்த போதே அவள் பார்வை வட்டத்தில் ரிஷி வந்திருக்க…
அவளின் வார்த்தைகள் அத்தனையும் நின்றிருக்க…
“ரி… ஷி…” என்றவளின் இதழ்களில் நடுக்கம் மட்டுமே… ரிஷி அவளை நோக்கிச் சென்றபொதே…. கண்மணியும் அவனிடம் ஓடோடி வந்திருக்க…
அடுத்த நொடி…. ரிஷி அவளைத் தனக்குள் கொண்டு வந்திருக்க… கண்மணியின் அழுகை குறையாமல் இன்னும் இன்னும் அதிகமாகி இருக்க…
”எனக்கு என் பாப்பா வேணும் ரிஷி… இவங்கள்ளாம் என்னென்னமோ சொல்றாங்க… என்னன்னு கேளுங்க ரிஷி... என்னை அழ வைக்கிறாங்க ரிஷி...” கண்மணி அத்தனைப் பேரையும் சுட்டிக் காட்டிச் சொன்னவள்… ரிஷியின் முகத்தை அழுதபடியே பார்க்க... மொத்த குடும்பமும் கண்மணியை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்திருந்தது... முக்கியமாக கிருத்திகாவின் முகத்தில் கலவரம் வந்திருந்தது... கண்மணியை ஒரு முறை குணமாக்கியவளுக்கு... இப்போது பயமாகி இருக்க... நட்ராஜும் கிருத்திகாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்...
மற்றவர்கள் தான் கலவரமாகி இருந்தனர்... ரிஷி அப்படி எல்லாம் கலவரம் ஆகவில்லை...
“சரிடா… பார்த்துக்கலாம்… நான் இருக்கேன்ல... என்ன வேணும் உனக்கு... ” ரிஷி அவளை அணைத்தபடியே சமாதானப்படுத்த ஆரம்பித்திருக்க…
”நம்ம பாப்பா வேணும் எனக்கு… ”
”என் அம்மாதான் நான் வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க… இப்போ என் பொண்ணுமா ரிஷி….”
அவளைத் தனக்குள் இறுக்கிக் கொண்டவனாக…
“நம்ம பொண்ணுடி… நான் பழைய ரிஷியா இருந்திருந்தால்… என்கிட்ட இருந்து எதை வேணும்னாலும் எடுத்துட்டு போன்னு விட்ருப்பேன்… இந்த ரிஷிகிட்ட இருந்து அப்படி எதையும் ஈஸியா எடுத்துட்டுப் போக முடியாது…. விடவும் மாட்டேன் நான்…”
”நிஜமாவே சொல்றீங்களா ரிஷி….” நிமிர்ந்த கண்மணி அவனிடம் சலுகையாக கண்களை அகல விரித்துக் கேட்க
ரிஷி தலையை மட்டுமே மேலும் கீழும் அசைக்க…
“நிஜமாவே நிஜமா ரிஷி… நம்ம பொண்ணு நம்மகிட்ட வந்துருவாளா…” கண்மணி இன்னுமே கண்களை விரித்து மீண்டும் அழுத்திக் கேட்க…
“நிஜமாலுமே நிஜமாடி…” ரிஷி அவளைப் போலவே அழுத்திச்சொல்ல…
”சரி” என்றபடி மீண்டும் அவன் நெஞ்சில் தலை வைத்தபடி சில நொடி இருந்தவள்…
“நம்ம பாப்பா சரி ஆகிருவாளா…” இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்து.... நம்பிக்கையின்றி தளர்வாக கேட்க
“பாப்பா சரி ஆகிருவாள்னு நம்பனும்… நீ அந்த நம்பிக்கையை வைக்கனும் முதல்ல…”
“நீ என்ன சொல்லியிருக்க… நமக்கு ரெண்டு குழந்தைனு சொன்ன தானே” வார்த்தைகள் இன்றி கண்மணி அவன் மார்பில் சாய்ந்தபடியே தலையை மட்டும் ஆட்டியிருக்க… அதே நேரம் அவள் கண்ணீர் அவன் நெஞ்சினை நனைத்திருந்தது…
ஆம்… கண்மணியின் உடல்நிலையைப் பொறுத்தவரை இன்னொரு கர்ப்பம் என்பது இனி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது… நினைத்துப் பார்க்கக் கூடாதது… இருவருமே அதை சொல்லிக் கொள்ளாமல் அதை உணர்ந்தபடி இருக்க…
“அப்போ இந்தக் குழந்தை பிழைக்கத்தானே வேணும்… கண்மணி சொல்லி அது நடக்காமல் போகுமா... இல்லை ரிஷிதான் விட்ருவானா...” ரிஷியின் குரலில் இருந்த தீவிரத்தில்… உறுதியில்… நம்பிக்கையில்… கண்மணியின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையுடன் கூடிய புன்னகை வந்திருக்க… அதே நேரம்… இவள் இத்தனை நாட்களாக அவனிடம் நடந்து கொண்டவை எல்லாம் நினைவுக்கு வந்திருக்க…
“ரிஷிக் கண்ணா… சாரி” என்றபடி அவனிடம் மீண்டும் சாய்ந்து தேம்பியவளிடம்…
“ரிஷிக்கண்ணாவா… அது தனிக்கணக்கு மேடம்… இப்போதைக்கு என் குழந்தைகளோட அம்மாவை அந்தக் குழந்தைகளோட அப்பாவாச் சமாதானப்படுத்திட்டு இருக்கேன்…” என்றவனின் குரலில் நக்கல் எல்லாம் இல்லை… சற்று முன் ஒலித்த அதே தொணியே….
சட்டென்று கண்மணி அவனை நிமிர்ந்து பார்த்த போதே… ரிஷியின் கண்களில் உணர்ச்சிகளைத் துடைத்து வைத்தார்போல வெற்றுப் பார்வை மட்டுமே…
“பாப்பாவைப் பார்க்கப் போகலாம் வா” ரிஷி உடனே பேச்சை மாற்றியிருக்க… கண்மணியும் உடனே மாறியவளாக
“ஆனால் நான் எப்படி… வேண்டாம் ரிஷி… ஏற்கனவே பாப்பாக்கு…”
“நீ வா… நான் சொல்றேன்ல… “ என்றவன்…
“நடக்க முடியுமா…“ தான் இருந்த அந்தச் சூழ்நிலையிலும் ரிஷி கண்மணியைப் பார்த்துக் கேட்க… அப்போதுதான் கண்மணி ரிஷியின் தற்போதையை நிலையை உணர… மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தவள்…
“அர்ஜூன் எல்லாம் சொன்னாரு…” என்றவள் அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல்…
“இப்போ புரியுதா டெஸ்டினினு நான் சொல்றதுலாம் பொய் இல்லை… …ஐ லவ் யூ…” தேம்பலோடு மெல்லிய குரலில் சொன்னவளிடம்
“ஹ்ம்ம்… என்ன சொன்ன… ஐ லவ் யூவா… அதெல்லாம் இருக்கா உனக்கு… டெஸ்டினி… அதுக்கு மீனிங்…. நான் காட்டட்டுமா…” கடுப்பான தொணியில் ரிஷி கேட்ட போதே… ரிஷி அவன் கோபத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண்மணி அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு…
”நான் நம்மச் சுத்தி இத்தனை பேர் இருக்கிறாங்கன்லாம் பயப்பட மாட்டேன்… என் லவ்.. அதோட எக்ஸ்டீரீம்… உங்களுக்கு மட்டும் தான் தெரியும்… அப்புறம்அதைக் காட்டினால் நீங்கதான் வெட்கப்பட வேண்டியிருக்கும்…” என்ற போதே…
ரிஷி அவளின் உச்சியின் தன் நாடியை வைத்தபடி…. அமைதியாக சில நிமிடங்கள் அவளின் அருகாமையை மட்டும் அனுபவித்தவனாக இருந்தவன்… நிம்மதிப் பெருமூச்சுவிட்டவன்…
“ஐ ஹேட் யூ டி ரவுடி” ரிஷியின் இத்தனை நாள் பொறுமை எல்லாம் சந்தோஷ அழுகையாக மாறி இருக்க… கண்மணியின் முகத்தில் அவள் கண்ணீர் பட்டு… இருவரின் கண்ணீரும் கலந்திருந்தது…
இப்போது ரிஷி
“மேடம் அவங்கள்ளாம் எப்பவோ போயிட்டாங்க… நீங்கதான் யாரும் இருக்காங்களா இல்லையான்னு பார்க்கக் கூட இல்லை…” என்று சீண்டினான்தான்… இருந்தும் அவளிடம் எல்லை மீறவில்லை… எல்லை மீறும் நிலையிலும் இல்லை அவன் மனைவியின் நிலை … அது அவனுக்குப் புரியாதா…
முத்த பறிமாற்றம் மட்டும் தான் காதலை காட்ட முடியுமா… அவள் உடல்நிலை உணர்ந்து அவன் விலகியதும் அவனின் காதலை அவளுக்குப் புரியவைத்திருக்க... கண்மணி அவனை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள்… அவனை விடவே மாட்டாதவள்…போல….
இருவருமே வேறு ஏதுமே பேசவில்லை… தங்களுக்குள் விளக்கமும் கொடுத்துக் கொள்ளவில்லை… அதற்கான சூழ்நிலையும் இல்லை… என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்…. இப்போது இருவரின் எண்ணங்களிலும் அவர்களின் குழந்தைகள் மேல் மட்டுமே இருக்க…
”நீங்களாவது நம்ம குழந்தைகளை பார்த்தீங்களா ரிஷி…” கண்மணி அழுகை கலந்த பரிதாபத் தொணியோடு கலக்கமாக ரிஷியிடம் கேட்க….
தன் மனைவி இன்னும் குழந்தைகளைப் பார்க்கவில்லையா… கோபத்தோடு அதிர்ச்சியும் கலந்து கண்மணியைப் பார்க்க…
“குழந்தைங்களை என்கிட்ட டேரக்டா ஃபீட் பண்ண விடலை ரிஷி… என்கிட்ட இருந்து வாங்கிட்டு போய் குட்டிக்கு ஸ்பூன்லதான் கொடுக்கிறாங்க… பாப்பாக்கு அது கூட இல்லை…” தாயாக கண்மணி கலங்கிய குரலில் சொல்ல… தாயாக அவளின் நிலையை உணர்ந்தவனுக்கோ் இப்போது ஆறுதல் கூடச் சொல்ல முடியாத நிலை…
தான்… தன் மனைவி… தங்கள் குழந்தைகள் நிலையை எண்ணி… கண் மூடி நின்றிருந்தவன்…. அடுத்து வழக்கம் போல தன் அதிரடியை ஆரம்பித்திருந்தான்…
கண்மணியை அழைத்துக் கொண்டு தங்கள் புதல்வனைப் பார்க்க முதலில் சென்றவன்…
“வாங்கிக்கடி… நம்ம குழந்தையை நீ தூக்காமல் வேற யார் தூக்குவா…” என்றபடியே அவர்களின் புதல்வனைத் அவள் கைகளில் தூக்கி கொடுக்க… கண்மணியின் கைகள் நடுங்க… ரிஷியும் அவளுடன் சேர்ந்து தன் மகன் மனைவி இருவரையும் தாங்கிக் கொள்ள… முதன் முதலாகக் கண்மணி தன் மகனைப் பார்த்த பரவசத்தில்... குழந்தையின் ஸ்பரிசம் தீண்டிய சந்தோசத்தில் இருக்க… அவளின் நெஞ்சம் எல்லாம் கனிந்த நிமிடம் அந்த நிமிடம்…
“ரிஷி… நம்ம பையன் ரிஷி… நான் முத்தம் கொடுக்கலாமா “ கேட்டவள்… யாரின் சம்மதத்துக்காகவும் காத்திருக்கவில்லை… அடுத்த நொடியே… அந்தக் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவளாக…
“ரி... ரிஷி… எ… என்னையே பார்க்கிறான் ரிஷி… நான் அம்மான்னு அவனுக்குத் தெரியுது ரிஷி…” தன் நிலையை எல்லாம் மறந்தவளாக இருந்த கண்மணியின் குரலில் துள்ளல் மட்டுமே… சந்தோசம் பொங்கி வழிய… கண்மணியின் குரலில் இப்படி ஒரு கனிவா… துள்ளலா… பரவசமா… தாயாக மட்டுமே மாறியிருந்தாள் கண்மணி…. அவள் பார்வை அந்தக் குழந்தையிடம் மட்டுமே மையம் கொண்டிருக்க
மனைவியின் புன்னகையில் ரிஷி தன் புன்னகையைக் கொண்டு வந்திருக்க…. ரிஷியின் முகத்தை ஆராய்ந்தபடியே அவனை பார்த்த கண்மணி..
“இவனுக்கும் நம்ம மாதிரி… கன்னத்துல குழி விழுமா ரிஷி… இவன் யார் மாதிரி ரிஷி... உங்கள் மாதிரியா என்னை மாதிரியா” மிகப்பெரிய சந்தேகத்தை கேட்டவளாக… ரிஷியின் முகத்தைப் பார்த்து பின் மகனின் முகத்தைப் பார்த்தபடி…
“ரெண்டு பேர் மாதிரியும் தானே இருக்கான்… ஆனால் எவ்ளோ கலரா இருக்கான் பாருங்க… நானும் இப்படித்தானே இருந்தேனாம்” கண்மணி ரிஷியிடம் மகனைப் பார்த்த உற்சாகத்தில் மடை திறந்த வெள்ளம் போல் பேசிக் கொண்டிருக்க…
மனைவியோடு சேர்ந்து தன் மகனைப் பார்த்து ரிஷியும் பேசிக் கொண்டிருக்க… யாருமே அவர்களின் தனிமையில் குறுக்கிடவில்லை…. ரிஷி-கண்மணி- அவர்களின் மகன் மட்டுமே…
ரிஷி இப்போது…
“நீ இங்கேயே இரு…. நான் பாப்பாவைத் தூக்கிட்டு வர்றேன்” என்றவனிடம் கண்மணி மறுத்துப் பேசும் முன்னேயே…. ரிஷி அங்கிருந்து சென்றவன்….
தன் மகளை… அந்த அறைக்கு தூக்கி வந்திருக்க… இப்போது அவன் பின் மொத்தக் குடும்பமும்…. மருத்துவக் குழுவும் பதறியபடி வர… ரிஷி யாரையும் கண்டு கொள்ளவில்லை….
கண்மணியிடம் வந்துதான் நின்றிருந்தான்….
”புடிடி… உனக்குத்தான் உன் அம்மா இல்லை… அவங்க கை படலை… அதுனால இந்த மருந்து… சிகிச்சை எல்லாம்… உனக்குத் தேவைப்பட்டது.... என் குழந்தைக்கு அதெல்லாம் தேவையில்லை... ”
“அம்மா நீ இருக்கும் போது அதெல்லாம் என் குழந்தைக்கு எதுக்கு… நீ தேவதைடி… உன் பார்வை பட்டாலே அந்த இடம் சொர்க்கம்… நீ தொட்டா கல்லுக்கு கூட உயிர் வரும்டி… நம்ம குழந்தைக்கு வராதா… உன் அன்பு எப்பேற்பட்டது... அதுகிட்ட இல்லாத மந்திரம்… இந்த மருத்து மாத்திரைக்கா இருக்கும்… என்னையவே எனக்குத் திருப்பி எடுத்துக் கொடுத்தவ… என் புள்ளையைத் எனக்கு தந்துர மாட்டியாடி… என் சந்தோசம் நீ மட்டுமில்லடி… என் உலகம் நீ மட்டும் இல்லடி…. நீங்க மூணு பேரும்…”
கண்மணியிடமிருந்து கண்ணீர் முத்துக்களும் சிதறி இருக்க… அதே நேரம் ரிஷியும் அவர்கள் மகளை கண்மணியிடம் கொடுத்திருக்க…
அந்தப் பெண் குழந்தை அவளின் புதல்வனுக்கு மாறாக இருந்தது… தோற்றம்… நிறம்… எடை… என எதுவுமே சொல்லிக் கொள்ளும் படியாக இல்லாமல் ஒருக்க
கண்மணி தன் நெஞ்சமெல்லாம் கருகிய… கலங்கிய நிலையில் நின்றிருக்க….
“என்ன பார்க்கிற… நீ சொல்வியே… நமக்கு ரெண்டு குழந்தைனு… உன் வாக்குப்படியே நமக்கு ரெண்டு குழந்தைடி.. சீக்கிரமா நம்ம பாப்பாவும் நல்லபடியா வருவா.. பேசுடி” கண்மணி வேகமாக தலையை ஆட்டி இருக்க… ரிஷி தன் மகனைக் கையில் எடுத்திருக்க
கண்மணி என்ன நினைத்தாளோ…
“ரிஷி… அவனையும் கொடுங்க…” கேட்ட கண்மணியை ரிஷி தயக்கமாகப் பார்க்க…
“கொடுங்க…” எனும் போதே…. தள்ளி நின்றிருந்த இலட்சுமியும் வைதேகியும் இப்போது வேகமாக ஓடி வந்து… ரிஷியின் கையில் இருந்து…. குழந்தையைக் வாங்கி கண்மணியின் கைகளில் கவனமாகக் கொடுக்க… அதே நேரம் இரு குழந்தைகளை ஒரே நேரத்தில் பிடிக்க வைதேகியும் கண்மணிக்குச் சொல்லிக் கொடுத்திருக்க… கண்மணியும் அழகாக தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு ரிஷியின் கைவளைவுக்குள் வந்தவள்…
”நான் தான் எப்பவும் உங்கப்பாக்கு ஃபர்ஸ்ட்…. அப்புறம் தான் நீங்க… அப்படித்தானே ரிஷி“ குழந்தைகளிடம் சொல்லியபடியே... கண்மணி ரிஷியிடம் குழந்தையாக மாறி கேள்வி கேட்க
ரிஷி பதில் சொல்லவில்லை…. ஒரு போதும் அவள் கேள்விக்கானப் பதிலைச் சொல்லவும் போவதில்லை…
பதிலாக… அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவனாக… அவள் நெற்றியில் தன் நெற்றியை ஒற்றியிருக்க…. அதே நேரம்…. ரிஷி-கண்மணியின் புதல்வன் அழ ஆரம்பித்திருக்க…. அதன் விளைவாக கைகால்களை அவன் ஆட்டியிருக்க… தன் தாய்… தன் தந்தை…. தன் சகோதரன் என மூவரின் உயிர்க்காற்றும் இப்போது அந்தப் பெண் குழந்தையை சூழ ஆரம்பித்திருக்க… இப்போது ரிஷி-கண்மணியின் புதல்வியும் மெல்லிய குரலில் அழ ஆரம்பித்திருக்க… அவளின் முதல் குரல் கண்மணி-ரிஷியின் அணைப்பில் இருந்தபடி வெளி வந்திருந்தது…
“அச்சோ… என் செல்லம்… தங்கம்….” தாய்மையின் குரல் மட்டுமே அந்த அறை முழுவதும் சூழ்ந்திருக்க…
“அச்சினுபட்டு… சிச்சினுமா… அச்சிப்பொண்ணு… சச்சிடுகுட்டி.. அம்மாகிட்ட வந்த பின்னால அழறியாடி செல்லப்பட்டு” அடுத்து அவள் கொஞ்சிய வார்த்தைகளுக்கெல்லாம் தமிழ் அகராதியில் இடமே இல்லாத வார்த்தைகள்… தாய்மை என்னும் அகராதியில் மட்டுமே இருக்கும் வார்த்தைகள்… தாய்-சேய்க்கு மட்டுமே புரியும் வார்த்தைகள் போல… நிமிடத்தில் குழந்தைகளின் அழுகுரலும் அடங்கியிருந்தது அவர்களின் தாயின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே….
கண்மணி சிரித்தபடி இருக்க… மொத்த குடும்பத்தின் முகத்திலும் புன்னகை மலர் மட்டுமே இப்போது விரிந்திருக்க... கூடவே அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு நபரின் கண்களிலும் கண்ணீர் இமையின் ஓரம் கசிந்திருந்தது…. கண்மணி தாய்மையின் பூரிப்பைப் பார்த்தவர்களாக
கண்மணி யாரையுமே கண்டு கொள்ளவில்லை… ஏன் ரிஷியிடம் இருந்து கூட அவள் விலகியிருந்தாள் அவளையுமறியாமல்…
இப்போது ரிஷி கண்மணி கேட்ட அதே கேள்வியை… அதாவது
“உனக்கு நான் முதலிடமா… இல்லை குழந்தைகளா”
ரிஷி கேட்டிருந்தால்… கண்மணி குழந்தைகள் என்றுதான் சொல்லியிருப்பாளோ!!!!…
ஆனால் ரிஷி அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை… வருங்காலத்தில் கேட்கவும் போவதில்லை... கண்மணியையும் தன் குழந்தைகளையும் ரசித்தபடியே நின்றிருந்தவனின் முகத்தில் கண்மணி யாசித்த புன்னகை மட்டுமே... அவன் மனைவிதான் அந்தப் புன்னகையைப் பார்க்கத் தவறியிருந்தாள்...
அதன் பின்...
கண்மணியின் ஒவ்வொரு நிமிடமும் தங்கள் குழந்தைகள்… அவர்களுக்காக மட்டுமே என மாறி இருந்தது அடுத்த சில வாரங்களுக்கு…. குழந்தைகள்…. இரட்டைக் குழந்தைகள்… அதிலும் குறைமாதம் வேறு… கண்மணி மட்டுமல்ல… குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ஓய்வின்றிதான் இருந்தனர்…
இந்தக் குழந்தைகள் அந்தக் குடும்பத்தின் முதல் அடுத்த தலைமுறை… தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதக் குறையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்…
நாராயணன்… வைதேகி ஒருபுறம்…
நட்ராஜ் ஒரு புறம்..
இலட்சுமி, ரிதன்யா ஒரு புறம்…
போதாக் குறைக்கு… ரித்விகா வேறு…
அதே நேரம்... கந்தம்மாள் இவர்களைப் போலவெல்லாம் ஆட வில்லை… அதே நேரம் குழந்தையைக் குளிப்பாட்டுவது… அதற்குத் தேவையான நாட்டு வைத்தியம் என அவர் பங்குக்கு குழந்தைக்குத் தேவையான அடிப்படை வேலை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்…
என்னதான் வசதி வாய்ப்பு இருந்தாலும்… செவிலியர்… வேலையாள் என யாரிடமும் குழந்தைகளை அந்தக் குடும்பம் ஒப்படைக்கவில்லை… அதற்கு கந்தம்மாளும் ஒரு காரணமாக இருந்தார்….
”நம்ம புள்ளையை நாமதான் பார்க்கனும்… அப்படி என்ன நமக்கு அதைவிட பெரிய வேலை… நம்மளை விட அவங்க நல்லா பார்த்துப்பாங்களா… காசுக்கு பாப்பாங்க… அவ்ளோதான்… நம்ம பாசம் இருக்குமா” என்றபடி கந்தம்மாள் வெளியாட்கள் யாரையும் விடவே இல்லை… அதே போல வைதேகியும் இலட்சுமியும் கந்தம்மாளின் வார்த்தைகளைத் தட்டவில்லை
கந்தம்மாள் அவர் குழந்தைகளைக் குளிக்க வைப்பது முதல் கைவைத்தியமான…. பாட்டி வைத்தியம் வரை அவரே பார்த்துக் கொள்ள
“ஏன் கெழவி… இதெல்லாம் எனக்கும் பண்ணுனியா…” கண்மணி ஆச்சரியாமக் கந்தம்மாளைப் பார்த்து கேட்க
“இதெல்லாம் பார்க்காமத்தான்… பண்ணாமத்தான்… அப்டியே வளர்ந்து வந்துட்டியாக்கும்… “
சொன்னதோடு மட்டுமல்லாமல்
“நீ மாசமா இருக்கும் போது நீ என்கிட்ட இருந்துருந்தேன்னா… அப்போவே கண்டுபிடிச்சிருப்பேன் இரட்டைக் குழந்தையான்னு… நீ ரிஷித்தம்பியை படுத்துன பாட்டுல… கோபத்துல நானும் உன்னைக் கவனிக்காமல் விட்டுட்டேன்…. ”
கண்மணி இப்போது…
“சரி கெழவி… ரொம்பத்தான் பண்ணாத… கொஞ்சம் இறங்கிப் பேசுனா… உடனே உச்சத்துல போய் உக்காந்துருவியே…”
என்றவளிடம்
“ஆமா… உங்க பேச்சுல நாங்க அப்படியே பல்லக்குல உக்காந்துருவோம்… நீயும் தூக்கிகிட்டு ஆடிருவ… போடி இவளே… உன் ஆட்டம் யாருக்கு வேணும்… இனிமேலாவது அடங்கி இரு….” என்ற படியே
“நீயெல்லாம் சோத்துல விசம் வச்சுக் கொல்றதைப் பத்திதானே பேசுவ… “ கந்தம்மாள் குழந்தைகளைக் கவனித்தபடி கண்மணியிடம் நொடிக்க… கண்மணியும் விட்டுக் கொடுக்காமல் தன் பங்கு நியாயத்தைப் பேச ஆரம்பித்தாள்
“நான் என்ன பிறக்கும் போதேவா அப்படி பேசுனேன்… நீதானே அடிக்கடி சொல்வ… உன்னல்லாம் பிறக்கும் போதே கள்ளிப்பாலை ஊத்திக் கொன்றுக்கனும்னு… கோபம் வராதா எனக்கு… நீ பேசுனதைக் கேட்டு கேட்டுத்தான் நானும் அப்படி பேசி வளர்ந்தேன்… நீங்க சொல்லுங்கப்பா என் மேல தப்பா… உங்க அம்மா இந்தக் கெழவி மேல தப்பா…” கண்மணி நட்ராஜிடம் பஞ்சாயத்து வைத்திருக்க
நட்ராஜ் என்று தன் மகளை விட்டுக் கொடுத்திருக்கின்றார்… இன்று மட்டுமா விட்டுக் கொடுப்பார்
“உன் மேல என்னைக்குத் தப்பு இருந்திருக்குடாம்மா…” சொன்ன போதே கந்தம்மாள் மகன் புறம் திரும்பியவர்…
“எல்லாம் என் தப்புதான்… உன்னை என் வயித்துல பெத்தேன்ல…. அதுதான் என் பெரிய தப்பு… “ தலையில் அடித்த போதே
கண்மணி வாய் விட்டுச் சிரித்தவளாக
“ஹலோ… என் அப்பாவை… என் முன்னாடியே திட்றீங்களா..” இப்போது கண்மணி தன் தந்தைக்காக வரிந்து கொண்டு வந்திருக்க..
கந்தம்மாள்… வைதேகியிடம் திரும்பியவராக
“பார்த்தீங்கள்ள என்னதான் வளர்த்தாலும்… எங்கதான் இருந்தாலும் அதது அது கூட(டு)த்தான் நோக்கும்.. பெத்தவங்களத்தான் கொண்டாடும்… இவதான் அதுக்கு பெரிய சாட்சி… நீங்க நாமலாம் இவளுக்கு கண்ணுக்குத் தெரியாது…” நொடித்தபோதே… நட்ராஜ் தன் மகளைப் பெருமையோடும் கர்வத்தோடும் நோக்கினார்… இதை விட வேறென்ன வேண்டும் அவருக்கு… எங்கும் எப்போதும் அவரை அவர் மகள் விட்டுக் கொடுத்தது இல்லையே… இந்தப் பெருமைதானே… கர்வம் தானே… பவித்ரா இல்லாத போதும் சந்தோஷத்துடன் அவர் வாழ்நாளை வாழ வைத்திருக்கின்றது… மகளைக் கண்கலங்கிப் பார்த்தபடி நெகிழ்ந்திருக்க
”சரி சரி கெழவி… ரொம்பத்தான் சலிச்சுக்காத… உன்னை விட்டா நான் யார்கிட்ட சண்டை போட்றது… கோணலா இருந்தாலும் நீ என் கெழவியாக்கும்…” கண்மணி இறங்கி வரும் போதே… கந்தம்மாள் கழுத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டார்… அவருக்கு பாசத்தில் நெகிழ்வது இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது… அது அவர் குணம்… இன்று மட்டுமா நெகிழப் போகிறார்… அவர் சென்று விட… வைதேகி இருவரையும் பொறாமையாகப் பார்த்தார்…
என்னதான் கண்மணி அவரிடம் பாட்டி பாட்டி என உரிமையோடு பேசினாலும் பழகினாலும்… கந்தம்மாளுக்கும் கண்மணிக்கும் இடையேயான பந்தம்… அவர்கள் பேசுவதைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமையாகத்தான் இருக்கும்… இன்று மட்டுமல்ல… கண்மணியின் பத்து வயதில் இருந்தே பார்த்திருக்கின்றாரே…
கண்மணி இப்போது வைதேகிப் பாட்டியப் பார்த்தவளாக…. அவர் நிலையை உணர்ந்தவராக…
“நீங்க எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் பாட்டி… என்னை யாருனே தெரியாமலேயே என்கூட உங்களுக்கு ஒரு பந்தம் வந்துச்சே… அது யாருக்கு வரும்” என்றவளின் உண்மையான வார்த்தைகளில் வைதேகியும் கண்கலங்க… அவரது பேத்தி அடுத்த நிமிடமே அதைத் துடைத்தும் இருந்தாள்…
---
இப்படியாக கண்மணி தன் பொழுதை குழந்தைகளோடும் சொந்தங்களோடும் கழித்திருக்க… ரிஷியும் எதிர்பார்த்ததை விட விரைவில் குணமடைந்திருந்தான்…. இரண்டே வாரங்களில் ஓரளவு சரியாகி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றவன்… வீட்டிலிருந்தபடியே சில நாட்கள் தேவையான ஓய்வை எடுத்திருந்தவன்… அடுத்த சில வாரத்தில் கம்பெனி… மீட்டிங்க்… பிஸ்னஸ்மேனாக தன் அன்றாட வழக்கங்களை மீண்டும் தொடர ஆரம்பித்திருந்தான்….
அதே போல அவன் குழந்தைகளைப் பார்க்காமல் அவனது நாள் தொடங்கியதும் இல்லை முடிந்ததும் இல்லை…. காலை மாலை என தன் குழந்தைகளை மருத்துவமனையில் பார்த்துவிட்டு அவர்களோடு சில மணித்துளிகள் செலவழிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான்…
அவனது குழந்தைகள் சரி… கண்மணி???…
கண்மணியையும் பார்த்தான் தான்… அவளோடு பேசினான் தான்… ஆனால் அவளின் கணவனாக பேசினானா என்றால் இல்லை என்பதே உண்மை… தன் குழந்தைகளின் தாயிடம்… அந்தக் குழந்தைகளின் தகப்பனாக பேசினான் என்றே சொல்ல வேண்டும்…
மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம்…. கண்மணிக்குத் தெரியாமல் இருக்குமா…
ரிஷிகேஷை இலட்சுமி-தனசேகரின் மகனாக… ரிதன்யா-ரித்விகாவின் சகோதரனாக… நட்ராஜின் மருமகனாக… என எல்லா முகமுமாகப் பார்த்தவள்…
இதோ இப்போது அவர்கள் குழந்தைகளின் தகப்பனாகப் பார்க்கின்றாள்…
மகனாக… சகோதரனாக… மருமகனாக மட்டுமே இருந்தவனை கண்மணி மீட்டெடுத்து தன் ரிஷியாக… கண்மணியின் ரிஷிக்கண்ணாவாக மாற்றியிருந்தவள்… இன்று தன் ரிஷிக்கண்ணாவை தொலைத்துவிட்டாளா???… அவனிடம் மனம் விட்டுப் பேசக் கண்மணி துடிக்க…. ரிஷியோ அதற்கான வாய்ப்பையே அவளுக்கு வழங்கவில்லை…
கண்மணிக்கும் அவனுக்குமான தனிமை என்பதே மிகச் சில நிமிடங்கள் எனும் போது… அதுவுமே குழந்தைகள் அவர்கள் இடையே என்பதால் மருத்துவமனையில் தேவையில்லாத வாக்குவாதம் வேண்டாம்… எப்படியும் இன்னும் சில நாள் கழித்து வீட்டுக்குதானே செல்ல வேண்டும்… அங்கு அவர்களின் பிரச்சனைகளை எல்லாம் மனம் விட்டுப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்… அவனிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கண்மணியும் விட்டுவிட்டாள்…
ரிஷி கண்மணியை… கண்மணியின் கணவனாக மன்னிப்பானா…. ???
----
இதற்கிடையே ரஞ்சித்தையும் கண்டுபிடித்து காவல்துறை கைது செய்திருக்க… ரிஷி… அர்ஜூன்… விக்கி… சத்யா…. பார்த்தி என அனைவரும் காவல் நிலையத்துக்குச் சென்றிருந்தனர்…
“ரிஷி… அட்டெம்ப்ட் மர்டர்… என்னென்ன பாஸிபிலிட்டி இருக்கோ… அத்தனை தண்டனையும் வாங்கிக் கொடுத்து அவன் வாழ்க்கையை ஜெயில்லயே முடிக்கிற மாதிரி பண்ணிறனும் ரிஷி… அதுதான் நம்ம எல்லோருக்கும் நல்லது… அது மட்டுமில்லை முக்கியமா பார்த்தி-யமுனாவுக்கு… இவங்களுக்கு நல்லது மட்டுமில்லை… நிம்மதியும்… அவனை எல்லாம் அன்னைக்கே போட்டுத் தள்ளிருக்கனும்…. இவன்லாம் ஒரு ஆளான்னு விட்டோம்ல… அதுதான் நமக்கே ஆப்பு வச்சுட்டான்… உன் மேலயே கை வச்சுட்டான் ஆர் கே… அதை நினைக்கும் போதுதான்…. நெஞ்சு கொதிக்குது… மேடம் மட்டும் சொல்லைனா… நாங்க அன்னைக்கு சரியான நேரத்துக்கு வந்திருப்போமா….கொஞ்சம் தாமதமா வந்திருந்தாலும் என்ன ஆகிருக்கும்”
காவல் நிலையம் செல்லும் வழியில் ரிஷியிடம் சத்யா கோபத்தில் கொந்தளித்தபடி பேச… அவன் மட்டுமல்ல… அர்ஜூன்… விக்கி…. என அனைவரும் ரஞ்சித்துக்கானத் தண்டனையைப் பற்றியே பேசி வந்து கொண்டிருதனர்….
ரிஷி மௌனமாக வந்துகொண்டிருந்தான்…. அதே நேரம் அவர்கள் தன்னிடம் சொல்லிக் கொண்டிருந்ததையும் காதில் கேட்டபடியே வந்து கொண்டிருந்தான்…
காவல்நிலையமும் வந்து சேர்ந்தார்கள்…
ரிஷி இப்போது வாய் திறந்தான்… காவல் துறை அதிகாரியிடம்
“சார்… கேஸ்லாம் போட வேண்டாம்… எங்க சைட்ல இருந்து கேசை வாபஸ் வாங்கிக்கிறோம்”
ரிஷியின் இந்த வாக்குமுலத்தில் அத்தனை பேரும் அதிர்ந்திருக்க… ரிஷி பிடிவாதமாக தன் நிலையிலேயே இருக்க
ரஞ்சித்தும் வெளியே விடப்பட்டிருந்தான்…
அனைவரின் கோபமும் இப்போது ரிஷியிடம் திரும்பியிருந்தது…
”ஏன் ரிஷி… இப்படி பண்ணிட்டீங்க… அவன் ஒரு அடிபட்ட நல்ல பாம்பு… பழி வாங்குற உணர்ச்சி அவன்கிட்ட இன்னும் அப்படியேதான் இருக்கு… யமுனாவுக்கு அவனால இன்னும் கஷ்டம் தான்…” பார்த்தி ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்த போதே…
ரஞ்சித் அவர்கள் அருகில் வந்து அவர்களை முறைப்புடன் கடந்திருக்க… மற்ற அனைவரும் ரஞ்சித்தை வெறுப்புடன் நோக்கியிருக்க… ரிஷியோ அவனிடம் ஓடிச் சென்று அவனை நிறுத்தி இருந்தான்…
ரஞ்சித் ரிஷியை அலட்சியமாகப் பார்த்தபடி ரிஷியின் கைகளைத் தட்டிவிட்டு போக நினைக்க… ரிஷியோ ரஞ்சித்தை விடவில்லை… அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவனாக
“சாரி ரஞ்சித்… நான் யமுனாகிட்ட கூட கேட்காத… கேட்க நினைக்காத வார்த்தை… யமுனா… அந்த திருமூர்த்தியோட பொண்ணு… அவளோட அப்பா பண்ணின தப்புக்கு பொண்ணை பலிகடா ஆகிட்டா அவரை ஈஸியா தோக்கடிக்கலாம்னு நினைத்தேன்… ஆனால் உன்னை நெனச்சே பார்க்கலை… உன்னை ஏன் செலெக்ட் பண்ணேன் தெரியுமா… ரவுடியா இருந்தாலும் உன் தங்கைக்கு மேரேஜுக்கு உனக்கு பணம் தேவைப்பட்டதுன்னு தெரிஞ்சுதான்… உன்னை செலெக்ட் பண்ணேன்… காசுக்கு வேலை பார்த்ததான்… இல்லைனு சொல்லல… போன உன் மனசு… உன் வாழ்க்கை இதையெல்லாம் அந்தப் பணத்தால சமன் படுத்த முடியாதுதான்…” எனக்கு எல்லாம் புரியுதுதான்…” என ரிஷி தயங்கி நிற்க
“ஏன்… என்னோட காதல் உண்மையா இருக்கக் கூடாதா… நானும் மனுசன்தானே… தப்புதான் நான் பண்ணினது தப்புதான்…. யமுனாவை ஏமாத்தி காதலிச்சது தப்புதான்… ஆனால் அவ என்னை உண்மையா லவ் பண்ணினாளே… நானும் அவளை உண்மையா லவ் பண்ண ஆரம்பித்தேன்… அவளுக்காக நான் மாறினேன்… கண்ணு முன்னால சொர்க்கத்தை காட்டி… அதுவே கொஞ்ச நாள்ல நரகமா மாறின வேதனை உனக்குத் தெரியுமா…”
ரிஷியின் தலை குனிந்திருக்க… ரஞ்சித்தின் பார்வை ரிஷியிடம் வலியாக நிலைத்திருந்தது…
”உன்னைக் குத்தினேன் தான்… ப்ச்ச்… என்ன புண்ணியம்… என்ன பண்ண… யமுனா போய்ட்டாளே… உன்னால அவளைத் திரும்பிக் கொடுக்க முடியுமா…” ரஞ்சித்தின் கண்களில் நீர் மட்டுமே…
”அனுபவிச்சுப் பார்த்தால் தெரியும்… நீயெல்லாம் காசைக் கொடுத்து காதலை கொடுக்கச் சொன்னவன் தானே… லவ்னா ஜாலியா ஒரு பொண்ணோட சுத்துறது… அவ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறது… பணம் தான் காதல்னு நெனச்சுட்டு இருக்கிறவன் தானே… எனக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்ததே யமுனா மனசை காதல்ன்ற பேர்ல கெடுக்கிறதுக்குதானே… உனக்குத் தெரியுமா… ஒரு கட்டத்துல நான் உன்கிட்ட பணம் வாங்குறதை நிறுத்தினேனே”
“அப்போதான் நானும் சுதாரிச்சேன்…” ரிஷியும் சட்டென்று சொன்னவன்
“யமுனா உன்னை விட்ருவான்னு நெனச்சேன்…. ஆனால் வேற மாதிரி ஆன பின்னாலதான்… யமுனாக்கு உன்னைப் பற்றி தெரியுறமாதிரி பண்ணினேன்…”
”அப்படியும் யமுனா உன்னை வெறுக்க முடியாமல் மருந்தைக் குடிச்சுட்டா…” ரிஷியின் முகம் இன்னுமே குற்ற உணர்ச்சியில் இருக்க
“உனக்குத் தெரியுமா… நீ பண்ணினதை… யமுனா ஏற்கனவே பண்ண வந்தா…” ரிஷி சொன்ன போது ரஞ்சித் புரியாத பார்வை பார்க்க
“ஆமாம்… அவளும் என்னைக் கொல்ல ட்ரை பண்ணினா…” ரிசியின் வார்த்தைகளைக் கேட்ட ரஞ்சித்துக்கு இது புதிதாக இருக்க… அவன் கண்கள் பளபளத்தது…
”உன்னால நம்ப முடியலைலதானே… யெஸ் உன்னை மாதிரியே… அதே பழி வெறில அவளும் என்னைக் கொல்லவந்தா… அப்போ நான் தப்பிச்சுட்டேன் … ” தொடர்ந்த ரிஷி
”எனக்குத் தெரியும் ரஞ்சித்… அவளை நீ உண்மையா லவ் பண்ணினது… தெரிந்தேதான் இதைப் பண்ணினேன்… என்னாலதான் நீ யமுனாவைப் பார்த்த… விரும்புன… அப்போ அதே என்னாலதான அவளை உன்கிட்ட இருந்து பிரிக்க முடியும்… அதைதான் நான் பண்ணினேன்…பண்ணிட்டேன்… தப்புதான் ஆனால் இந்தத் தப்பை நான் பண்ணலேன்னாலும் யமுனா உன்கிட்ட இருந்து பிரிஞ்சுருப்பா…” அவன் குரலில் இப்போது நெகிழ்வு போய்... தீவிரம் வந்திருக்க... அதில் தெனாவெட்டும் வந்திருக்க
ரஞ்சித் வேகமாகப் பாய்ந்து ரிஷியின் கழுத்தைப் பிடிக்கப் போக… அதைவிட வேகமாக ரிஷி செயலாற்றியவனாக… அவனிடமிருந்து விலகி…. ரஞ்சித்தையும் தன் பிடிக்குள் கொண்டு வந்தவன்….
“இங்க பாரு…. தப்பு பண்ணிட்டேன்… அதுக்கான மன்னிப்பும் வேண்டிட்டேன்… அதுனால நீ என்கிட்ட ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்கக்கூடாதுப்பா… அன்னைக்கு… நான் நானா இல்லை… உனக்கான நாளா மாறிருச்சு… “ ரிஷியின் வார்த்தைகளில் அப்படி ஒரு எள்ளல்
“அப்புறம் யமுனாவை நீ ஒண்ணும் பண்ண மாட்ட… பண்ணவும் முடியாது… அது எனக்கு நல்லா தெரியும்… உனக்கு அவ மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் அவ மேல வச்சுருந்த காதல் ஒண்ணும் பண்ண விடாது… அவ சந்தோசம் உனக்கு முக்கியம்னு தெரியும்… அதுனால பார்த்தியையும் ஒண்ணும் பண்ண மாட்ட”
ரஞ்சித் சிரித்தவனாக
“என்னது நானா… அவங்களை ஒண்ணும் பண்ண மாட்டேனா….”
“ஆமாம்… இவ்ளோ நாள் நீ அவங்களை ஒண்ணும் பண்ணலை…. என்கிட்ட மட்டும் தான் உன் கோபத்தைக் காட்டின… பழி தீர்த்துக்கிட்ட…”
ரஞ்சித்தின் ஆவேசமானப் பார்வை இப்போது ரிஷியிடமிருந்து மாறி எங்கோ இருக்க…. ரிஷி அவனிடம்…
”யோசி… வாழ்க்கைல உனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடச்சிருக்கு… கண்டிப்பா நல்லபடியா மாத்திக்குவேன்னு நினைக்கிறேன்… அண்ட்… இதுக்கும் மேலயும்… யமுனா… யமுனான்னு அவ லைஃப்ல வந்த…” ரிஷியின் பார்வை கூர்ப்பார்வையாக மாறி இருக்க… ரிஷி இப்போது ’ஆர் கே’ வாக அவன் குரலை மீட்டெடுத்திருந்தான்…
“யமுனா விசயத்தில்… உன்னைப் பொறுத்தவரை நான்தான் ஆக்கும் கடவுள்… காக்கும் கடவுள்… அழிக்கும் கடவுள்… அனைத்தும் நானே… யமுனான்னு ஒருத்திய உனக்கு காட்டி நல்ல மனுசனா ஆக்கினேன்… இதோ உன்னை இன்னைக்கு காப்பாற்றியும் விட்டிருக்கிறேன்… இதுக்கும் மேல நான்… இப்படித்தான்… யமுனா-பார்த்தியை வாழ விட மாட்டேன்னு நீ ஆரம்பிச்சா…. உனக்கான அழிக்கிற கடவுளாகவும் நான் மாறுவேன்… “
என்றபடியே…
“புரிஞ்சு நடந்துக்குவேன்னு நினைக்கிறேன்…” என்று ரஞ்சித்தின் சட்டைக் காலரை சீர்படுத்தி தோள்களைத் தட்டி விட்டவன்…
”சத்யா உன்கிட்ட வந்து பேசுவார்… உனக்கான எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வழிகளையும் அவர் உனக்கு காட்டுவார்… அப்புறம் எனக்கு காதல் தெரியுமா… கத்தரிக்காய் தெரியுமா அதெல்லாம் கேட்டதானே… அந்தக் கத்தரிக்காய்…. காதலை எல்லாம் விடு…. ஆனால் அதை விட எனக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு… என்னன்னா.. உன்னை மாதிரியே… எனக்கும் ரெண்டு தங்கச்சி இருக்காங்க… அம்மா இருக்காங்க… அவங்களுக்கு நான் எவ்ளோ முக்கியம்னு தெரியும்…. அதே போல நீயும் உன் குடும்பத்துக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு தெரியும்.. அதுனால உன்னை இப்போ வெளில வரவச்சேன்… சோ இனி உன்னோட வாழ்க்கை உன்னோட கைல தான் இருக்கு… உன்னோட பழிவெறி நீ குத்தி என்கிட்ட இருந்து வெளிய வந்த இரத்தத்தோட போயிருக்கும்னு நம்புறேன்…” என்றவன்… அவனை விட்டு நகர்ந்திருக்க
ரஞ்சித்தோ அப்படியே அந்த இடத்திலேயே நின்றிருந்தான்…. அவனுக்கான பழிவாங்கும் உணர்ச்சி யாரிடம் இருக்க வேண்டும்… யமுனா-பார்த்திபனிடம்… ஆனால் ஏன் ரிஷியிடம் மட்டுமே கோபம் இருக்கின்றது… யோசிக்க ஆரம்பித்திருந்தான்…
எவனொருவன் காரணங்களை யோசிக்க ஆரம்பிக்கின்றானோ… அவனின் வாழ்க்கை நேர்படச் செல்லும் என்பது ரஞ்சித்தின் வாழ்க்கையும் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்ததா????…
ரிஷி சொன்னது போல… மற்றதெல்லாம் மறந்து அவனின் குடும்பம் அவன் கண் முன்னாடி நின்றிருக்க…
அவன் தனக்கான வாழ்க்கையை வாழ நினைத்து ரிஷியிடம் வந்தால் உதவியும் செய்வான் ரிஷி… அதே நேரம் அவன் யமுனாவைத் தொடர்ந்தால்… ரிஷி சொன்ன ஆக்கும்… காக்கும்… அழிக்கும் கடவுள்… வசனம் அவன் காதில் ஒழிக்க… கண்களைத் துடைத்தபடி ரஞ்சித் அங்கிருந்து சென்றிருந்தான்…
---
”ஏன் ரிஷி இப்படி பண்ணின.. அவன் யமுனாவை நிம்மதியா இருக்க விட மாட்டான்… பார்த்தியும் யமுனாவும் ஒவ்வொரு நிமிசமும் அவனை நினச்சு பயந்துட்டே வாழனுமா…. இவனை எல்லாம் அந்தத் துரையை முடிச்ச மாதிரி முடிச்சுறனும்… ஒரு எவிடன்ஸும் இல்லாமல் கேசை முடிச்சிருக்கனும்… ” அர்ஜூன் எச்சரிக்கும் விதமாக ரிஷியிடம்…
ரிஷி நிதானமாகக் சொன்னான்…
“அப்போ எனக்குத்தான் அந்தத் தண்டனையைக் கொடுக்கனும் அர்ஜூன்…” ரிஷியின் வார்த்தைகளில் அர்ஜூன் திடுக்கிட்டு நிமிட
”ஆமாம் அர்ஜூன்… எனக்குத்தான் முதல்ல தண்டனை கிடைக்கனும்… பழிவாங்குறதுக்கு ஒரு பொண்ணை… அவளோட பலவீனத்தை யூஸ் பண்ணின நான்தான் துரோகி… ரஞ்சித் இல்ல… கண்மணியோட வாழ்க்கைல விளையாண்ட துரைக்கும் எனக்கும் என்ன பெரிய வித்தியாசம்… ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசம் இல்லை… ஃபிசிக்கலி அப்யுஸ்ட்… மெண்டலி அப்யூஸ்ட்… எதுவா இருந்தாலும்… தப்பு தப்புதானே…” ரிஷியின் கண்கள் குற்ற உணர்ச்சியில் தாழ்ந்திருக்க…
“நாம அந்த வலியை அனுபவிக்கும் போதுதான்… நம்ம நடுமண்டைல சுத்தியல்ல ஆணி வச்சு இறக்கின மாதிரி எல்லாமே புரியுது…”
என்றபடியே பார்த்திபனிடம் திரும்பியவன்…
“யமுனாவைப் பத்திரமா பார்த்துக்கங்க பார்த்தி… நீங்க, உங்க காதல்… அது போதும் யமுனாவுக்கும்… அவளோடான உங்க வாழ்க்கைக்குமான பாதுகாப்பைக் கொடுக்கும்… அவளோட மனசு உங்களால என்னைக்கும் கஷ்டப்படக்கூடாது… எந்தக் காரணத்துக்காகவும் எப்போதும் அவளைக் கைவிட்றாதீங்க… “
பார்த்திபனும் அதை உணர்ந்தவனாக ரிஷியைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்…
”நான் பார்த்துக்கிறேன் ரிஷி… யமுனா அவ என்னோட வாழ்க்கை… அதுல யார் தலையீடும் இருக்கவும் விட மாட்டேன்… உங்க வீட்டுப் பொண்ணைப் பத்திரமா பார்த்துக்கிறது என்னோட பொறுப்பு… ” பார்த்தி சொன்னபோதே
”யமுனா கண்ணீர் விட்டு பார்த்தி இப்படி பண்ணிட்டான்னு வந்து நிற்கிற மாதிரி சூழ்நிலைல வர வச்சுறாதீங்க… கூடப்பிறந்த உடன்பிறப்பு இல்லைனாலும்… எனக்குத் தட்டிக் கேட்கிற எல்லா உரிமையும் இருக்கு” ரிஷி எச்சரித்த போதே
விக்கி வேகமாக
“டேய்… கண்ணீர் விட்டு வந்து நின்னா… உன் தங்கச்சிங்க எல்லாம் வர மாட்டாங்க.. நாங்கதான் வந்து நிப்போம்… நண்பனா சப்போர்ட் பண்ற நிலைமைதான் உனக்கு வருமே தவிர… உடன்பிறப்பா உனக்கு கஷ்டமும் வராதுடாப்பா… ரொம்பக் கவலைப்படாதப்பா” போலியாக கண்ணீரைத் துடைப்பது போன்ற பாவனையில் சொல்ல…
ரிஷி நண்பனைப் பார்த்து முறைக்க …
“சரிடா மாப்பு… கண்லயே கலவரத்தை வெடிக்க விடாத… தேசம் தாங்காதுப்பா” விக்கி ரிஷியை சமாதானப்படுத்துவது கலாய்க்க ஆரம்பித்திருக்க
இப்போது அர்ஜூன் அவர்களின் உரையாடல்களில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை… ரிஷியிடம் மட்டுமே அவனின் பார்வை நிலைத்திருக்க… ரிஷி அர்ஜூனின் பார்வையைக் கண்டும் காணாதவன் போல் இருந்து கொண்டான்…
---
மாதம் இரண்டு கடந்திருக்க…. கண்மணி குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருந்தாள்…
குழந்தைகளோடு கண்மணி முதலில் பவித்ரா விகாசுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அனைவரின் ஏகோபித்த முடிவாக இருக்க… பெரியவர்களின் வார்த்தைகளை மறுத்து ரிஷி ஏதாவது சொல்லிவிடுவானோ எனக் கண்மணி ரிஷியைப் பார்க்க… ரிஷி அப்படி எல்லாம் ஏதும் மறுக்க வில்லை… அவனும் அனைவரின் முடிவையும் ஏற்றுக் கொண்டிருக்க..
பவித்ரா விகாஸ் உண்மையான விழாக் கோலம் கொண்ட நாள்…. அந்த வீட்டின் பல நாள்… இல்லையில்லை பல வருட சாபம் அனைத்தும் நீங்கிய நாள்…. கண்மணி கையில் குழந்தைகளோடு… வந்து இறங்கிய தினமே
வைதேகி பேத்தியை ஆரத்தழுவி கண்ணீர் மல்க ஆரத்தி எடுக்கப் போக
“அம்மாடா கண்மணி… ரிஷிகிட்ட பாப்பாவைக் கொடு… சேர்ந்து நில்லுங்க” என்று நட்ராஜ் சொல்ல…
“இல்லப்பா… ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தால் தான் அழாம இருப்பாங்க… நானே வச்சுக்கிறேன்” கண்மணி தன் மகள் தன் மகன் இருவரையும் யாரிடமும் கொடுக்காமல்… ஏன் ரிஷியிடம் கூடக் கொடுக்காமல் வைத்திருக்க…
ஆரத்தி எடுத்து முடித்த போது….
நாராயணன் இப்போது…
“மாப்பிள்ளை நீங்களும் நில்லுங்க…” என்றபடி தன் பேத்தியின் குடும்பத்தோடு நட்ராஜையும் நிற்க வைத்து.. மீண்டும் ஆரத்தி எடுக்க வைக்க…
கண்மணி ரிஷியிடம் திரும்பி…
“ஓவரா இருக்கிற மாதிரி இல்ல ரிஷிக்கண்ணா… இந்த மாமா-மாப்பிள்ளை அட்ராசிட்டிஸ்…” அவன் காதில் ரகசியமாகக் கேட்க
ரிஷியோ…
“இதெல்லாம் கம்மிதான்… இனிமேலதான் ஓவர் டோஸே ஆரம்பிக்கும்… இதுக்கே நீ புலம்பினா எப்படிம்மா…” கண்மணியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“இப்போ நீங்க வாங்கிக்கங்க…” குழந்தைகள் இருவரையுமே கணவனிடம் கொடுத்திருக்க… ரிஷியும் கவனமுடன் வாங்கிக் கொண்டான்…
அவளைப் பொறுத்தவரை… எந்த ஒரு விசயமும்… குழந்தைகளுக்கு சமமாகக் கொடுக்கப்பட வேண்டும்…
ரிஷியிடமும் கறாராகச் சொல்லிவிட்டாள்… இரு குழந்தைகளையும் ஒன்றாகத்தான் தூக்க வேண்டும் என்று….
“ஏண்டி… ஒரு குழந்தையைத் தூக்கவே எனக்கு பயமா இருக்கு… ரெண்டு பேரையுமே எப்படிடி… அது எப்டிடி… நீ மட்டும் கேஷுவலா தூக்கி வச்சுருக்க… சொல்லிக் கொடு…”
கேட்டவனாக ரிஷியும் அவளிடமே கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்க… கண்மணியும் அழகாகக் கற்றுக் கொடுத்திருந்தாள்… இந்த சில வாரங்களில் ரிஷியும் பழகி இருந்தான்…
---
அடுத்த சில வாரங்களில்… குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா….
அந்த விழாவும் எந்த ஒரு பிரச்சனையுமில்லாமல் கோலாகலமாக நடந்து முடிந்திருக்க…
’சாதனா’… ’பவித்ரன்’ என ரிஷியின் தந்தை…. கண்மணியின் தாய் இவர்களை நினைவு கூறும் வகையில் தங்கள் வாரிசுகளுக்கு நாமகரணம் செய்திருந்தனர் ரிஷியும் கண்மணியும்…
அதே நாளில்…. அர்ஜூன் - நிவேதா… விக்கி-ரிதன்யா இவர்களின் திருமண நாளையும் பெரியவர்கள் உறுதி செய்திருக்க… அன்றைய தினம் அனைவருக்குமே மிக மிக உற்சாகமான நாளாக இருக்க…
கண்மணியோ… மற்ற அனைவரையும் விட இரு மடங்கு சந்தோசத்தில் இருந்தாள்…
காரணம் இன்று ரிஷி தன்னையும் தன் குழந்தைகளையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவான்… இலட்சுமிதான் மருமகளிடம் இந்தத் தகவலையே சொல்லியிருந்தார்…
தனது பொருட்கள்… குழந்தைகளின் பொருட்கள் என அனைத்தையும் முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்திருந்தாள் கண்மணி… தங்கள் வீட்டுக்குச் செல்லும் தருணத்திற்காகவும்… ரிஷிக்கும் தனக்குமான தனிமையான நிமிடங்களுக்காவும் அவள் ஏங்க ஆரம்பித்திருந்தாள்… மருத்துவமனையில் பவித்ர விகாஸில் தான் அவன் அவளைத் தவிர்க்க முடியும்… ஆனால் தங்கள் இல்லத்தில்… தங்கள் அறையில் அவளை அவன் தவிர்க்க முடியுமா… பொறுமையுடன் காத்திருந்தாள் கண்மணியும்…
---
வரவேற்பறையில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…. நட்ராஜ் தனது மாமனாரிடம் பேச ஆரம்பித்தார்
“மாமா… கண்மணி இன்னும் ரெண்டு மாதம் இங்கேயே உங்களோடயே இருக்கட்டும்… ரிது மேரேஜ் வர்றதுனால… சம்பந்திக்கு வேலை இருக்கும்… ரிதன்யா மேரேஜ் முடிந்த பின்னால்… நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பலாம்… கண்மணிக்கு இப்போதான் அம்மை போட்டதெல்லாம் ஆறியிருக்கு…” சொன்ன போதே கண்மணி அதிர்ச்சி ஒரு புறம் தயக்கம் ஒரு புறமுமாக ரிஷியைப் பார்த்தாள்…
அந்தப் பார்வைக்கும் அர்த்தம் இருந்தது…
ரிஷி இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டான்…. கோபப்படுவான்… என உறுதியாக எண்ணியவளாக…
”ரிஷியை இனியும் கோபப்படுத்தக்கூடாது…. அப்பாவிடம் சொல்லி இன்றைக்கே கிளம்ப வேண்டும்” … ரிஷியை மட்டும் யோசித்தபடியே… என முடிவெடுத்து தந்தையிடம் பேச வாயெடுத்த போதே…
“இதை நான் சொல்லல… இது என்னோட முடிவும் இல்லை…. ரிஷியோட முடிவு இது…” என்று நட்ராஜ் முடித்திருக்க…. கண்மணி கண்களாலேயே ரிஷியை எரித்திருக்க…
ரிஷி இப்போது கண்மணியின் கோபத்தீயில் இன்னுமே எண்ணெய் ஊற்றினான் தன் வார்த்தைகளால்…
“என்ன கண்மணி… ரிதன்யா மேரேஜ் அடுத்த மாதம்… அது முடிஞ்சு அதுக்குள்ள அங்க வரனுமான்னுதானே யோசிக்கிற… முறைக்கிற… புரியிது… எந்தப் பொண்ணுக்கும் அம்மா வீட்டை விட்டு உடனே வரப்பிடிக்காதுதான்… சாரி கண்மணி… உனக்கு எவ்ளோ நாள் இங்க இருக்கனுமோ.... இருந்துக்கோ... நான் கம்பெல் பண்ணலை” என்று சொல்லி அத்தனை பேர் முன்னிலையிலும்… மன்னிப்பு வேறு கேட்டிருக்க
”ரிஷி… உன்ன மாதிரி பொண்டாட்டிக்காக யோசிக்கிற புருசன் இந்த உலகத்துல எல்லோருக்கும் கிடைக்கிறது ரொம்ப அதிசயம்பா…” … ரிஷியை அத்தனை பேரும் பாராட்டிக் கொண்டிருக்க…
ஒரே ஒரு மனதில் மட்டுமே ரிஷிக்கு அர்ச்சனைகள் தாராளமாக அள்ளி வீசப்படுக்கொண்டிருந்தது…
---
கண்மணி தன் அறையில் குழந்தைகளை உறங்க வைத்திருந்தாள்… இன்றைய விழாவின் காரணமாக அயர்வில் குழந்தைகள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க…
கண்மணியோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்… அமர்ந்திருந்தாள் என்பதை விட… ரிஷிக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்..
எப்படியும் கிளம்பும் போது குழந்தைகளையும் தன்னையும் பார்த்துவிட்டுத்தான் செல்வான்… தனியாக அவளிடம் வந்து நின்றுதானே ஆகவேண்டும்….
“தங்கச்சி கல்யாணம்னா சார்க்கும்… சார் குடும்பத்துக்கும் எங்களை…பார்த்துக்க நேரம் இருக்காதாம்மா…. இன்னைக்கு வரட்டும்... அதை விட எவ்ளோ நாள் வேணும்னாலும் இங்க இருக்கனுமா... தலைவருக்கு தைரியம் சாஸ்திதான் ஆகியிருக்கு... இன்னைக்கு இருக்கு எல்லாவற்றுக்கும்” எனக் காத்திருக்க… ரிஷியும் அவளை அதிக நேரம் காத்திருக்க விடாமல் அவள் அறைக்கு வந்திருந்தான்… வரும் போதே பெரிய கோப்போடு வந்தவன்… அதை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு….
”தூங்கிட்டாங்களா ரெண்டு பேரும்…” கேட்டபடியே… குழந்தைகளின் அருகில் அமர்ந்தவன்…
“ரொம்ப டயர்ட் ஆகிட்டாங்களோ கண்மணி…” கண்மணியிடம் கேட்டபடியே… குழந்தைகளை மட்டுமே பார்த்தவனாக இருக்க… சில நிமிடங்கள் கடந்திருக்க… கண்மணியிடமிருந்து பதில் வராமல் இருக்க…
அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை ரிஷி… பதிலாக…
“இவங்க தூங்கினதும் இப்போ நல்லதுதான்… நான் உன்கிட்ட பேசனும்…” ரிஷி எழுந்தவனாக… மேஜையில் தான் கொண்டு வந்த கோப்பைக் கையில் எடுத்து அதில் இருந்து சில காகிதங்களை எடுத்தவன்… கூடவே டைரியையும் எடுத்தான்…
கண்மணி அவனை யோசனையோடே பார்த்தபடி அமர்ந்திருக்க… அவள் அருகில் அமர்ந்தான் ரிஷி…
“என்னது இது…” அவன் பேச ஆரம்பிக்கும் முன்னேயே…. கண்மணி கோபம் பாதி… எரிச்சல் பாதி எனக் கலந்து கேட்க…
”எல்லாம் ஏற்கனவே படிச்சதுதான்… பார்த்ததுதான்… சின்னதா ரெண்டு லைன் ஆட் பண்ணியிருக்கேன் உனக்கு ஃபேவரா“ ரிஷி பொறுமையாகச் சொல்ல…
“புரியல…” கண்மணியின் குரலில் இருந்த அடக்கப்பட்ட பொறுமையே அவளின் கோபத்தைக் ரிஷியின் கண்களுக்கு அடையாளம் காட்டி இருக்க… ரிஷி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல்
“நம்ம டைவர்ஸ் நோட்டிஸ் கண்மணி….”
“அது தெரியுது… ஏதோ எனக்குப் பேவரான்னு சொன்னீங்களே… அது… என்னன்னு கேட்டேன்…” கண்மணி பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க
”ஓ…. அதுவா..” என அவளை நெருங்கி அமர்ந்தவன்… தன்னிடமிருந்த காகிதக் கட்டில் ஒரு காகிதத்தை மட்டும் பிரித்து எடுத்து
“இதுல நாலாவது பக்கம்… அதுல நமக்கு ஒரு குழந்தைன்றதுனால… அதை நான் வளர்க்கிற மாதிரி எழுதி இருந்தோம்… ரெண்டு பேருக்குமே மியூச்சுவல்தான் அது… ஆனால் இப்போ ட்வின்ஸ்… சோ… இந்த வரில மாற்றம் வரனும் தானே... அதைப் பற்றி பேசனும் தானே...”
கண்மணி கோபம் எல்லாம் பட வில்லை இப்போது…. மாறாக ரிஷியைப் பார்த்தபடியே... கை நீட்டி அந்தக் காகிதங்களை அவனிடமிருந்து வாங்கியிருந்தாள்…
யார் யாரை எல்லாமோ மன்னித்த ரிஷிக்கு கண்மணியை மன்னிக்க முடியவில்லையா?????...
--- இறுதி அத்தியாயத்தின் இறுதிப்பாகத்தில் ... கண்மணி ரிஷியுடன்.... சந்திப்போம்
Jii.. Everything is okay.. But kanamani's name..? Subathra arjun's selection.. Then kanamani who suggest tis name jii.. I don't know whether I missed the part.. If so plz mention the ud number jii.. Sorry😌 Much Awaiting jii..
Lovely and super praveee
Ha ha Rishi oda turn
semaya irukku. Your way of narrating the story!!!!! Awesome 🌼
அருமை
ரிஷி நல்லா கண்மணியை சுத்த விடட்டும். ரிஷி எவ்வளவு கா
கஷ்டப்பட்டான். இருந்தாலும் மன்னிச்சிடு ரிஷி.
Wow 😍
Arumaiyana ud. Rishi semma elloraiyum mannikuran, ana Kanmani kitta mattum muraikuran.
Super
Wow superb.இப்போ ரிஷியோட ஆட்டம் ஆரம்பமா? very nice ending.அழகா முடிச்சு இருக்கீங்க.ஒவ்வொரு கேரக்டர் என்டுமே நல்லாவே முடிஞ்சு இருக்கு.(eg: ஆதவன்,துரை,மருது,)
ரஞ்சித் ஒட ending கூட super தான்.எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது ரிஷி மேல்.ஒருத்தர பலி வாங்க காதல ஆயுதமா எடுக்கிறது ரொம்ப தப்புங்க.அத நம்ம hero வே பன்னா accept பன்னவா முடியும்.but அந்த வருத்தம் இப்போ சுத்தமா இல்ல.ரொம்ப அழகாகவே அதையும் முடிச்சு வச்சு இருக்கீங்க.
Super ud...
Super episode. All characters are nicely shown. R-K conversations are good. Ranjith part nicely ended. Arjun also understand both R-K and nicely written. Waiting for next epi.
Sema
சூப்பர். லேட்டா வே மன்னிக்கட்டும். அவன எவ்ளோ நாள் சுத்த விட்டா காரணம் சொல்லாம. அப்போ ரிஷி எவ்ளோ கஷ்ட பட்டான்
Supero super
Beautiful Ud. Waiting for final Ud.
Thanks sis final ud waiting 😀😀😀