இதயம்-37
புதுப்பிக்கப்பட்டு அழகிய பொலிவுடன் திகழ்ந்த மல்லியின் கிராமத்து வீட்டிற்கு அவளை அழைத்து வந்திருந்தான் ஆதி.
வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்ததும் ஜிவ்வென்ற ஒரு உணர்வு மனதில் எழ உடல் சிலிர்த்தது மல்லிக்கு. மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க ஆதியின் முகத்தைப் பார்த்தாள் மல்லி.
விரிந்த புன்னகையூடே புருவத்தைத் தூக்கி, “எப்படி!” என்பது போல் அவன் அவளைப் பார்க்க,
“மாம்ஸ்!” என்றவாறு அவனது கையில் நெற்றியால் முட்டியவள் அவளது கண்ணீரை அவனது சட்டையிலேயே துடைக்க, அதில் அவளுடைய கண்ணீருடன் சேர்ந்து வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவனது சட்டையில் படிந்தது.
“ஏய்! ஏண்டி இப்படி சட்டையை கறையாக்கற. இதுதான் நீ எனக்குக் கொடுக்கும் ரிட்டன் கிஃப்ட்டா? நான் வேற இல்ல எதிர்பார்த்தேன்” என்று கிரக்கமான குரலில் ஆதி சொல்லிக்கொண்டே அவன், கன்னத்தையும், இதழ்களையும் சுட்டிக்காட்ட, நாணம் மேலிட, தலை குனிந்தாள் மல்லி.
அப்பொழுது, வீட்டின் ‘ரேழி’ எனப்படும் பகுதியில் நின்றுகொண்டிருந்த அவர்களை நோக்கி ஓடிவந்த தீபன் மல்லியை இடித்துத் தள்ளிக்கொண்டு,
“தாங் யூ மாம்ஸ்!” என்றவாறு ஆதியை அணைத்துக்கொள்ள, மல்லியின் காதுகளில் புகை வரவில்லை அவ்வளவுதான்.
“அடப்பாவி! தீபா! இங்க ஒருத்தி நிக்கறது உன் கண்ணுக்கு தெரியல. இவங்கள போய் கட்டி பிடிச்சுக்கற இது டூ மச்!
இவங்க எனக்கு மட்டும்தான் மாம்ஸ்! இனிமேல் நீ இவங்கள அத்தான்னே கூப்பிடு” என்று தீபனிடம் சீற.
“பாருங்க மாம்ஸ் எங்க அக்காவுக்கு எவ்வளவு பொறாமை!” என்ற தீபன் மல்லியிடம் திரும்பி,
“நீ போ… அம்மா உனக்காக காத்துட்டு இருக்காங்க. நான் மாமா கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க திரும்ப போற வரைக்கும் நான் மாமா கூடவேதான் இருப்பேன்” என்று மேலும் அவளை வெறுப்பேற்றுவதுபோல் சொல்லிவிட்டு, ஆதியின் கையை பிடித்து இழுக்க அவனால் ஆதியை அசைக்கக்கூட முடியவில்லை.
முறைத்துக் கொண்டு நின்றிருந்த மல்லியைப் பார்த்து சிரிப்பை அடக்கவே முடியாமல், “வா மல்லி உள்ளே போகலாம்” என்றவாறு அவளது கையுடன் தனது கையை கோர்த்துக்கொண்டு மற்றொரு கையை தீபனின் தோளில் போட்டவாறு உள்ளே நுழைத்த ஆதியை, முற்றத்தில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்த ஜெகனின் கண்கள் பனித்தது.
சில தினங்களுக்கு முன்புதான் முத்துராமன் மூலமாக அந்த வீட்டையும், அவர்களது நிலங்களையும் தீபனின் பெயரில் வாங்கியிருந்தான் ஆதி.
மறுக்கவே வழியில்லாமல் அவர்கள் நிரந்தரமாக அங்கேயே வந்துவிடவும் ஏற்பாடு செய்திருந்தான், அனைத்தும் மல்லிக்குத் தெரியாமலேயே.
தீபனை முறைத்துக்கொண்டே மல்லி உள்ளே செல்ல, வீடே பரிமளாவின் கைமணத்தில் கமகமற்றுக் கொண்டிருந்தது.
உடன் அவளது வசந்தா பெரியம்மாவும் இன்னும் சில பெண்களும் உதவிக்கு இருந்தனர்.
மகளின் மறுவீடு சடங்குடன் சேர்த்து, அவர்கள் அங்கே குடிவந்ததற்காகவும் நெருங்கிய உறவினர்களுக்கு சிறிய அளவில் விருந்திற்கு ஏற்பாடு செய