இதயம்-18
காலை பூஜை முடித்துவிட்டு மல்லி வெளியில் வரவும் குளித்து, வெகு, எளிமையுடன் வேட்டி, டி-ஷர்டில், ஹால் சோபாவில் வந்து அமர்ந்திருந்தான் ஆதி. தொலைக்காட்சியில், எதோ செய்தி சானல் முந்தைய நாள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது. புதிதாக எந்தத் தகவலும் இல்லை.
இரவு இருந்த இறுக்கங்கள் அனைத்தும் நீங்கி தெளிவாகவே இருந்தது அவன் முகம்.
அந்த நேரத்தில் காலைநேர பரபரப்பு ஏதும் இன்றி தொலைக்காட்சி முன் ஓய்வாக அமர்ந்திருந்த மகனைக் காண ஆச்சரியமாகிப்போனது லட்சுமிக்கு.
“என்ன மல்லி ஒருநாளும் இல்லாத திருநாளா இவன் இப்படி உட்கார்ந்திருக்கான்! அதிசமாயில்ல இருக்கு!” என அவர் மருமகள் காதில் கிசுகிசுக்க அவளும், உதடுகளை வளைத்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.
மகனிடமே சென்றவர், “ராஜா! என்ன அதிசயமா இப்படி உட்கார்ந்திருக்க?” எனக் கேட்க,
அதற்குள் அவன் அருகில் வந்து உட்கார்ந்த வரதன், “அவனே மறந்து போய் இங்க வந்து உட்கார்ந்து இருக்கான் நீயே அவனை விரட்டி விடாதே” என லட்சுமியை கிண்டலடிக்க, கழுத்தை நொடித்துக் கொண்டவர்,
“எதோ மகனை பார்த்ததாலதான் நீங்களே இங்கே வந்து உட்கார்ந்திருக்கிங்க. இல்லைனா வண்டி இந்த நேரம் எந்தக் கடைக்கு போயிருக்குமோ!” என்று கூற சிரித்தேவிட்டார் வரதன்.
அப்பொழுதுதான் ஆதியைக் கவனித்தாள் மல்லி.
அவர்கள் பேசிய எதையுமே அவன் கவனிக்கவில்லை போலும்!.
அவன் கண்கள்தான் தொலைக்காட்சியில் பதிந்திருந்ததே தவிர அவன் யோசனையெல்லாம் எங்கேயோ இருப்பது போல் தோன்றியது மல்லிக்கு.
அதேநேரம், சரியாக அங்கே வந்தனர் விஜித்தும் சுமாயாவும்.
அவர்களைப் பார்த்த லட்சுமி, “சுமதி வா! வா! வாப்பா விஜி” என அவர்களை வரவேற்க,
சுமதி என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் தோன்றவும், ‘என்ன சுமாயாவை சுமதின்னு கூப்பிடறாங்களே?’ என யோசித்த மல்லி அதை ரகசியமாக அவரிடம் கேட்கவும்,
“அவ முழுப் பெயர் சுமாயா திவாரி! இல்ல! நான் சுருக்கி சுமதின்னுதான் கூப்பிடுவேன்” என்றார் லட்சுமி.
அந்தச் செய்தி, அவளுக்கு புதியது யோசனையுடன், “ஓஹோ” என்ற மல்லியை, “ராணியிடம் டிபன் எடுத்து வைக்கச் சொல்லு” என்று, அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டு மற்ற அனைவரையும் சாப்பிட அழைத்தார்.
உணவு முடிந்ததும் சில கோப்புகளில் ஆதி கையெழுத்திட்டு முடித்து, “சுமா! ஒன் ஆர் டூ டேஸ் மேனேஜ் பண்ணிக்கோங்க. ஏதாவது முக்கியமான விசயம்னா சசிகுமாரை கேட்டுக்கோங்க” என்று கூறி விட்டு,
“ஜித் நீங்க சுமாவை, ராயல் அமிர்தாசில் விட்டுவிட்டு த்ரீ ஓ கிளாக் சசி வீட்டுக்கு வந்துடுங்க போதும். ஆனால்! உங்கள் டீமை எப்பவும் அலெர்ட்டாகவே இருக்க சொல்லுங்க” என அவனைப் பணித்தான்.
கிளம்பும் நேரம் சுமாயா ஒரு பார்சலை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
அதை எடுத்துக்கொண்டு அவன் மேலே சென்று