தோழமைகள் அனைவருக்கும் எனது அன்பு...
உங்கள் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மித்ர-விகா 25
அதிரடியாகவோ அல்லது அமைதியாகவோ சமயத்திற்குத் தகுந்தவாறு புத்தி சாதுரியத்துடன் பிரச்சனைகளைக் கையாளும் திறன் அக்னிமித்ரனிடம் கொஞ்சம் அபரிமிதமாகவே இருப்பதால், தம்பியுடைய தயவு விக்ரமுக்கு கொஞ்சம் அதிகமாகவே தேவைப்படும்.
தவறே செய்தலும் அவனைத் தட்டிக்கேட்கும் துணிவு மூத்தவனுக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை.
ஆனாலும் எல்லை மீறும் இவனுடைய அராஜகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க இயலாமல், "அவன் நம்ம கம்பெனில ஒர்க் பண்ற ஆயிரம் பேர்ல ஒருத்தன், அவ்வளவுதான். இந்த அளவுக்கு நேரடியா இறங்கி வந்து அவன் கிட்ட பிரச்சனை பண்ணனுமா நீ?" என மித்ரனிடம் கேட்டேவிட்டான் அவன்.
மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு வந்திருந்தனர் அண்ணனும் தம்பியும்.
சூடான சூப்பை ஊதிச் சுவைத்தவன், "விடுண்ணா... இப்ப என்ன அதைப் பத்தி” என அந்த பேச்சிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் சொன்னான் மித்ரன்.
அவன் சொன்ன தொனியிலேயே அவனுக்கு இந்த பேச்சில் உடன்பாடில்லை என்பது புரிந்தாலும் மனதிலிருப்பதைச் சொல்லிவிடவேண்டும் என்ற உந்துதலில், "இது பிசினஸ் மேட்டர்னா நானே கவலைப்பட்டிருக்க மாட்டேன். பொண்ணு விஷயமோன்னு..” என அவன் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வர, அடக்கப்பட்ட கோபத்துடன் இளையவன் பார்த்த பார்வையில் அப்படியே அடங்கிப்போனான் விக்ரம்.
அதன் பின் மௌனமாக இருவரும் சாப்பிட்டு முடிக்க, அண்ணனை அவனது அலுவலகத்தில் இறக்கிவிட்டவன் மனம் கேட்காமல், "அண்ணா! நான் யோசிக்காம ஒரு விஷயம் செய்யமாட்டேன் அப்படிங்கற நம்பிக்கை உனக்கு இருக்கில்ல" என்று கேட்க, ஆமோதிப்பாகத் தலை அசைத்தவன், "ஆனாலும்" என்று இழுக்க, அதிலேயே அவனுடைய சஞ்சலம் வெளிப்பட, "கவலைப்படாதண்ணா... எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன். இதனால நமக்குள்ள எந்த கான்ட்ரவர்சியும் வேணாம்" என்று சமாதானமாக சொல்லிவிட்டு, "ஓக்கேடா டேக் கேர்" என்றவாறு உள்ளே சென்ற அண்ணனின் முகம் சற்று தெளிவடைந்திருக்கவும் காரை கிளப்பிக் கொண்டு சென்றான் மித்ரன்.
***
அக்னிமித்ரன் அவனுடைய ஃப்ளாட்டை நோக்கி வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க அவனது கைப்பேசி இசைத்தது. அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் ஒரு புன்முறுவலுடன்' "சொல்லு டாலி” என்றவாறு அவன் அழைப்பை ஏற்கவும், "சித்து. நீ இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வா. நாம ஒண்ணா டின்னர் சாப்பிடலாம்" என்றாள் சாம்பவி, விக்ரமின் மகள்.
"இல்ல டாலி... சித்துக்கு முக்கியமான வேலை இருக்கு" என அவன் மென்மையாக மறுக்க, "சித்தூஊஊஊ" எனப் பிடிவாதமாக அழைத்தவள், "அதெல்லாம் முடியாது. உன் வேலையெல்லாம் எனக்காக கேன்சல் பண்ணு. நாளைக்கு எங்களுக்கு ஹாலிடே. ப்ரொஜெக்டர்ல கனெக்ட் பண்ணி... நம்ம வீனஸ் சேனல் ஆப்ல எதாவது மூவி பார்க்கலாம். தென் இன்னைக்கு நைட் நீ என் கூடவும் அண்ணா கூடவும்தான் படுத்துக்கணும்" என முடிக்க, மகளின் கட்டளையை மறுக்க இயலாமல், "ஓகே... என் டாலி சொன்னா சரிதான்" என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது அவனால்.
காலை, அனைவருமாக ஒன்றாக உட்கார்ந்து வழக்கமான கெஞ்சல்களும் கொஞ்சல்களுமாகக் காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும், இதையேதான் அவனுடைய அப்பா பரமேஸ்வரனும் கூட சொன்னார்.
"ஈவினிங் அவனை இங்கேயே வந்துட சொல்லு தீபா. யாருமே இல்லாத மாதிரி எதுக்கு எங்கேயோ போய் தனியா இருக்கணும்" என அவனுடைய அம்மாவை அவர் தூதுவிட, தீபாவும் இயலாமையுடன் மகனை பார்த்துவைக்க, அவருடைய, தம்பியை முறைத்தபடி அமர்ந்திருந்த அவனுடைய அத்தையை ஒரு பார்வை பார்த்தபடி, வேறெந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.
சில வருடங்களாக மித்ரனும் அவரிடமிருந்து ஒதுங்கியிருக்க, பரமேஸ்வரனும் இளைய மகனுடைய விஷயங்களில் தலையிடுவதே இல்லை. எதாவது விஷயத்தில் இவன் அத்துமீறிப் போனால் கூட அன்னை மூலமாக அவரது அதிருப்தி இவனுக்குத் தெரியவரும்.
அதை அலட்சியப்படுத்தமாட்டான் என்றாலும் அவருக்காக இறங்கி வந்தது போல காட்டிக்கொள்ளவும் மாட்டான். அதே வீம்பில்தான் இன்றும் அங்கே போகவேண்டாம் என அவன் முடிவு செய்திருக்க, அதை உடைத்துவிட்டாள் அவனுடைய குட்டி தேவதை. புன்னகையுடன் தன் பாதையை மாற்றிக்கொண்டான் மித்ரன்.
அந்த மாளிகைக்குள் அவனுடைய கார் நுழைந்ததுமே உள்ளே இருந்து ஓடிவந்தாள் சாம்பவி. அவன் வாகனத்தை நிறுத்திவிட்டு வரவும் 'சித்து' என்ற அழைப்புடன் துள்ளலாக வந்து அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டவள், "நான் கூப்பிட்டதாலதான வந்த" என்று கேட்க, "ஆமாம்டா குட்டி" என அவளுடைய உச்சியில் இதழ் பதித்தான் அவன்.
பேசிக்கொண்டே அவர்கள் உள்ளே வந்திருக்க அங்கே உட்கார்ந்திருந்த அக்ஷையிடம், "டேய் அண்ணா, பாரு.. நான் கூப்பிட்டதாலதான் சித்து இன்னைக்கு இங்க வந்திருக்காங்க" என்று சாத்விகா பெருமையாகச் சொல்ல, "இது என்னடி மூத்தவனை வாடா போடன்னு கூப்பிடறது. உன்னைச் சொல்லிக் குறை இல்லை. எல்லாம் உன் சித்தப்பன் கிட்ட இருந்து வருது" என்று அவளைக் கடிவது போல் மித்ரனை குறை சொன்னார் அவருடைய பேரனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவனுடைய அத்தை வாசுகி.
"ஜீ மா, நீங்க என்னை எது வேணா சொல்லுங்க. எங்க சித்துவை ஒண்ணும் சொல்லாதீங்க" எனச் சாம்பவி அவளுடைய சித்தப்பாவுக்கு பரிந்து வர, ''கிராண்ட் மா' என்பதைச் சுருக்கி 'ஜீ மா' என்று அழைக்கப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்ததே மித்ரன்தான். அப்படி அழைத்தாலே பிடிக்காது வாசுகிக்கு.
அதுவேறு அவருக்கு எரிச்சலைக் கொடுக்க, அவர் கோபத்துடன், "ஊருல இல்லாதா பெரிய சித்தப்பன கண்டுட்ட நீ" என்று அவளிடம் சண்டைக்குக் கிளம்ப, மித்ரன் வேறு அவரை முறைத்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்த பரமேஸ்வரன், "அக்கா. அவதான் சின்ன குழந்தை. அவளுக்கு சரியா நீ ஏன் பதில் சொல்லிட்டு இருக்க. பேசாம ரூம்ல போய் ரெஸ்ட் எடு. டின்னரை அங்கேயே கொடுக்கச் சொல்லி உன் பொண்ணு கிட்ட சொல்றேன்" என அழுத்தமாகச் சொல்லியவாறு மருமகளை பார்த்தார் பரமேஸ்வரன்.
"சரிங்க மாமா, அம்மாவுக்கு டின்னரை நானே ரூம்ல கொண்டுபோய் கொடுத்துடறேன்" என்ற தர்ஷினி, "மா நீங்க ரூமுக்கு போங்க" என்றாள் அன்னையிடம். அதிர்ந்துபோனவராக, தம்பியை எதிர்த்துப் பேசத் துணிவின்றி எதையோ முணுமுணுத்துகொண்டு அங்கிருந்து சென்றார் வாசுகி.
கணவரா அவருடைய தமக்கையிடம் இப்படிப் பேசினார் என ஆச்சரியம் தாங்கவில்லை தீபாவுக்கு.
"என்னடி உங்க மாமா இப்படி ஷாக் கொடுக்கறாரு?" என மனைவியின் காதில் கிசுகிசுத்தான், அனைத்தையும் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த விக்ரம்.
தோளைக் குலுக்கி, 'தெரியல' என்பது போல் உதட்டை சுழித்தாள் அவனுடைய மனைவி. "ஏய். இப்படியெல்லாம் பண்ணி வைக்காதடி. ஏற்கனவே ரெண்டு அட்டெம்ப்ட் அடிச்சாச்சு" என கிறக்கமாக விக்ரம் மனைவியின் காதில் கிசுகிசுக்க, யாரும் அறியாதபடி அண்ணனை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தான் மித்ரன்.
"வேணாம்" என உதட்டசைவால் சொல்லி தம்பியை பார்த்து அவன் முறைக்க, அதற்குள் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் காஃபி கொண்டுவந்து கொடுக்க, அதை சுவைத்துக்கொண்டே,"சித்து... வரியா நாம எல்லாரும் ஷெட்டில் விளையாடலாம்" என அவனை அழைத்தான் அக்ஷை.
"இருடா. ரெப்ரஷ் பண்ணிட்டு ஒரு ஹாஃப் அன் ஹவர்ல வரேன்" என்று சொல்லிவிட்டு அவனுடைய அறை நோக்கிப் போனான் மித்ரன்.
விக்ரம் நைசாக நழுவப்பார்க்கக் கண்களாலேயே அவனை மிரட்டியவள், "மாமு... நீங்களும் சேஞ்ச் பண்ணிட்டு விளையாட வாங்க" என்றாள் தர்ஷினி.
"கொஞ்சம் வேலை இருக்குடி. என்னை விட்டுடு" என அவன் கெஞ்சலாகச் சொல்ல, "என்ன வேலைன்னு எனக்கு தெரியாது? போய் எதாவது தெலுங்கு டப்பிங் படத்த பார்க்க உட்காருவீங்க" என அவள் நொடித்துக்கொள்ள, "மொக்க கொரியன் சீரிஸ் எல்லாம் பார்க்கறவ அதை சொல்லக்கூடாது” என அவளை வாரினான் விக்ரம்.
அவர்களுடைய சொற்போரைக் கவனித்துக்கொண்டிருந்த சாம்பவி, "டாட்... மாம்... ரெண்டுபேரும் விளையாட வரீங்க. டாட்" எனக் கட்டளையாகச் சொல்லிவிட்டு, "ஜீப்பா... நீங்களும் வரீங்கதான" என்று கேட்க, "நீ கூப்பிடறதால வரேன் குட்டிம்மா" என பரமேஸ்வரன் கெத்தாகச் சொல்லவும் மயக்கம் வராத குறைதான் தீபலக்ஷ்மிக்கு. அவருடைய கண்களே கலங்கி விட்டது.
அதன் பின் அவர்கள் மாளிகையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த ஷெட்டில் கோர்ட்டில் எல்லோரும் கூடிவிட, விளையாட்டும் கேளிக்கையுமாக அன்றைய மாலைப்பொழுதும், அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவுடன் அன்பையும் பரிமாறி உண்டு மனம் நிறைந்த இரவுப்பொழுதுமாக அன்றைய நாள் முடிய, முந்தைய தினம் முழுவதும் இருந்ததற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது அக்னிமித்ரனின் அன்றைய மன நிலை.
அடுத்த நாள் பொது விடுமுறை என்பதால், மித்ரனை வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாதபடி அவனைப் பிடித்துக் கொண்டனர் அவனுடைய அண்ணன் பெற்ற மக்கள் இருவரும். அன்றைய முழு நாளும் முந்தைய தினத்தின் நீட்சியாகவே இருந்தது அவனுக்கு.
அன்றைய நாள் முழுவதும் அவனுடைய அத்தை அவன் கண்களில் படவேயில்லை என்பதிலேயே பரமேஸ்வரனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவனுக்குப் புரிந்தது.
அந்த வெளிப்படையான மாற்றம் உண்மையிலேயே அவன் மனதில் சிறு இளக்கத்தைக் கொடுத்திருந்தது என்பதுதான் உண்மை. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் குறிப்பாக நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களுக்கு நாமும் மிக முக்கியமானவராக இருக்கிறோம் என்கிற உணர்வு கொடுத்த உற்சாகத்துடன் அடுத்த நாள் அலுவலகம் வந்திருந்தான் மித்ரன்.
அதற்கு நேர்மாறாக மனநிலையில் எதையோ பறிகொடுத்த தோற்றத்தில் அவர்களது கேபினுக்குள் நுழைந்தாள் மாளவிகா. அவள் வருவதற்கு முன்னதாகவே அங்கே வந்து அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவும், அவளுடைய விழிகள் வியப்பில் விரிய, "குட் மார்னிங் அக்னி" என்றாள் அவள்.
பதிலுக்கு, "குட் மார்னிங்" என்றவன், "இன்னும் கூட உன்னால என்னை மித்ரனா நினைக்க முடியல இல்ல" என அவன் கேட்க, "ஹார்ட்லி இன்னும் ஃபார்ட்டி டு ஃபார்ட்டி ஃபைவ் டேஸ், இப்படியே இருந்துட்டு போயிடறேன் அக்னி. என்னை பேச வெச்சு மூட் அவுட் ஆகாதீங்க" என்றாள் அவள் சிடுசிடுப்பாக.
'போடி… பெரிய இவன்னு நினைப்பு' என மனதிற்குள் தகித்தவன், ஒரு கோணல் சிரிப்புடன், "ஒரு செகண்ட் குள்ள என்னென்னவோ மாறிப்போகுது. நீ நாற்பது நாளை பத்தி பேச வந்துட்ட. போ... போய் இன்டர்னல் ஆடிட்டர்ஸ் கேட்ட ஸ்டாக் லிஸ்ட் ரெடி பண்ணு” என்றான் எகத்தாளமாக.
'எப்பதான் மத்தவங்கள மதிக்க கத்துக்கபோறயோ' என்ற எண்ணத்தில் அவனை முறைத்துக்கொண்டே போய் கணினியை உயிர்ப்பித்தாள் அவள்.
ஆனால், வேலையில் ஒரு துளி கூட கவனம் செலுத்த இயலவில்லை அவளால். முந்தைய தினம், காலையிலேயே மது போன் செய்து ஆடு ஆடென்று ஆடியிருந்தாள். அவளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பிறகு சரவணன் அவளிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவேயில்லையாம்.
அண்ணனிடம் மட்டும் மாளவிகாவை மணக்க விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறான். மாளவிகா உண்மையைச் சொல்கிறேன் பேர்வழியே என்று அவனிடம் எதோ சொல்லிவைத்ததுதான் காரணம் என்கிற ரீதியிலிருந்தது மதுவின் குற்றச்சாட்டு.
அதன்பிறகு அம்மா அப்பா என அனைவருமே அவளை உண்டு இல்லை என்று செய்துவிட்டனர். அழுகையும் கோபமுமாக ஆடி தீர்த்துவிட்டார் துளசி. அதன்பின் அவளிடம் முகங்கொடுத்தே பேசவில்லை அவர்.
அவளுடைய அப்பாவும் கடைக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறாரே அன்றி இதைப் பற்றி மகளிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
அன்புவும் கூட, "ஏன் பப்பி அவசரப்பட்டு எல்லாத்தையும் அவர்கிட்ட சொன்ன" என்றுதான் கேட்டான். என்ன, மற்றவர்கள் கொஞ்சம் வன்மையாகச் சொன்னதை இவன் கொஞ்சம் மென்மையாகச் சொன்னான் அவ்வளவுதான்.
"விடுக்கா, இந்த சின்ன மாம்ஸ் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? இந்த சூர்யா இல்லன்னா வேற ஒரு ஆர்யா" என 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' ஸ்டைலில் சொன்ன சாத்விகா மட்டுமே இப்போதைக்குச் சிறிய ஆறுதல் அவளுக்கு.
அன்று காஃபி ஷாப்பில் பேசிவிட்டு கிளம்பும்பொழுது கூட அவள் சொன்னவற்றை மனதார புரிந்து ஏற்றுக்கொண்டதுபோல்தான் இருந்தது சரவணனின் உடல்மொழி.
கடையில் அவளை இறக்கிவிட்டுவிட்டு போகும்பொழுது கூட அவளுடைய அப்பாவிடம் இன்முகமாகத்தான் பேசிவிட்டுப் போனான்.பிறகு ஏன் இப்படிச் சொன்னான் என்றே புரியவில்லை அவளுக்கு.
அவனிடமே கேட்டுவிடலாமென்று அவனுடைய கைப்பேசிக்கு அழைக்க அழைப்பைத் துண்டித்தவன், 'உனக்கும் எனக்கும் செட் ஆகாது. என் சூழ்நிலை சரியில்ல. என்னை மன்னிச்சுடு' என குறுந்தகவல் அனுப்பினான் சரவணன். பேசக்கூட விருப்பமில்லாமல் விலகுபவனிடம் வேறென்ன விளக்கம் கேட்க இயலும்? 'நோ இஷ்யூஸ்' என்று பதில் அனுப்பியவன் அதிகமாகவே குழம்பிப்போனாள்.
ஒருவனை மனதில் நினைத்துவிட்டு பின் வேறு ஒருவனை மணப்பதென்பதை அவளால் கனவிலும் கூட நினைக்க இயலாது.
எவ்வளவு முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக்கொண்டாலும், நம் பெண்களின் ஒவ்வொரு அணுவிலும் கற்பு என்ற பெயரில் விதைக்கப்பட்டிருக்கும் இந்த குற்ற உணர்ச்சியை யாராலும் மாற்றமுடியாது போலும்.
எனவே திருமணம் என்ற ஒன்று நடக்கும் வரை எந்த ஒரு கற்பனையையும் வளர்த்துக்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் அவள். அதனால் அவன் மறுத்தது ஒன்றும் அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
ஆனால் அவளுடைய அம்மா, அப்பா, அக்கா என ஒவ்வொருவரின் முகத்திருப்பலும் அவ்வளவு வலியைக் கொடுத்தது அவளுக்கு.
அலுவலகம் வந்தால் இவனுடைய தொல்லை வேறு. சலிப்பாக இருந்தது அவளுக்கு. அப்படி இப்படி என மதியம் வரை நானும் செய்தேன் என்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தவள், மித்ரன் அழைக்கவும் அவனுடன் மதிய உணவைச் சாப்பிடச் சென்றாள்.
அவளுக்கு மன அழுத்ததால் ஏற்படும் அசிடிட்டி வேறு லேசாக எட்டிப் பார்க்க, உணவுக்கு முன் எடுக்கவேண்டிய மாத்திரையை அவள் போட்டுக் கொண்டதைக் கவனித்தவனுக்கு உண்மையிலேயே மனதிற்குள் சுருக்கென்று தைத்தது.
அவன் செய்துவைத்திருக்கும் வேலையால் அவளுடைய வீட்டில் ஏதோ புயலடித்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு. கொஞ்சம் குற்ற உணர்ச்சி குறுகுறுத்துக்கொண்டுதான் இருந்தது அவன் மனதில்.
வந்தது முதலே அவள் முகம் தேக்கி வைத்திருந்த வேதனை அவனையும் வாட்டி எடுக்காமல் இல்லை. அவள் எடுத்து வந்திருந்த உணவைப் பார்த்தால், அவளுடைய உடல்நிலைக்கு ஏற்றதாக இல்லை. "இல்ல அஜூபா. நீ இதைச் சாப்பிடாத" என்றவன், தர்ஷினியை அழைத்து எளிய உணவாக அனுப்பும்படி சொல்லிவிட்டு, "நீ இப்படி டல்லா இருந்தால் என்னால அதை கொஞ்சம் கூட தாங்க முடியல லயன்னஸ். யூ ஆர் ஸோ ப்ரெஷியஸ் ஃபார் மீ. இப்படி இருக்காத. நான் உன்னை அட்ராக்ட் பண்ணனும்னு இதை சொல்லல. ப்ளீஸ் என் மனச புரிஞ்சுக்க ட்ரை பண்ணு?" என்றான் அவன் வருடும் குரலில். அவளைக் கவருவதற்காக இப்படியெல்லாம் அவளிடம் பேசவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுப் பேசவில்லை, உண்மையில் அவன் மனதில்பட்டதை அப்படியே சொன்னான் அவன்.
இயல்பான அந்த அக்கறை சோர்ந்துபோயிருந்த அவளது மனதிற்கு சிறு நம்பிக்கையையும் ஒரு அமைதியையும் கொடுத்தது. சிறு புன்னகை எட்டிப் பார்த்தது அவளுடைய முகத்தில். அப்படி இல்லை என மேலோட்டமாக எண்ணிக்கொண்டாலும், ஒருவன் அவளை வேண்டாம் என்று மறுத்துவிட்டுப் போன வலி அவள் ஆழ் மனதில் முணுமுணுவென்று அவளை வாட்டிக் கொண்டுதான் இருந்தது.
அந்த வலியை மரத்துப்போகச்செய்வதுபோல், மிகபெரிய உயரத்திலிருக்கும் இப்படிப் பட்ட ஒருவன் தன்னிடம் இறங்கி வந்து யாசித்துக்கொண்டிருப்பது அதீத கர்வத்தைக் கொடுக்க, அவள் மனதில் ஒரு சிறு சலனம் உண்டாகிப்போனது.
அவன் திட்டமிட்டு ஏற்படுத்திய அந்த மெல்லிய இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு இதயத்தைச் சுற்றி அவள் கட்டி வைத்திருக்கும் நெருப்பு வளையத்தைத் தாண்டி அவளுடைய மனதில் தன் முதல் தடத்தை வெற்றிகரமாக எடுத்துவைத்துவிட்டான் மித்ரன். ஒரு அடி எடுத்து வைத்து உள்ளே நுழையவே இவ்வளவு போராடவேண்டியதாக இருந்ததே. முழுவதுமாக மாளவிகாவின் மனதை ஆள முடியுமா அக்னிமித்ரனால்?
விடை இரண்டாம் பாகத்தில்...
Nice presentation sis.. AGM's care..MV's meltness.. Can feel Dad's love which gives real happiness when read.. Everything s fine..bt had one doubt sis.. Meaning of Ajuba..?any secrets hidden there..?
@SANGEETHA SEKAR Thank you sis. This is the word from Athisayame song - jeans movie which I used Agm and mv's first meeting in lift.
ajuba is a hindi word which means unique.
@KPN Fine..Thank you sis.. 😍😍
I would say it was a decent attempt. The last paragraph, particularly the last line ‘oru Adi eduththu’ was awesome. your words and writing in this episode has been much appreciable.
so Good to read father - son relationship and brothers relationship. It was not new though. However, your narration in that part was melodious even though I could sense what Will happen in the second part, i Am eagerly awaiting the next episodes, expecting something different and interesting in the story. I hope you fulfill our expectations
all the best
@Sathiya Thank you. I think surely I'll fulfill your expectations.
Nice and versatile writing ... Kept us tied in mixed emotions. Kudos dear .
@sonapragathesh Thanks a lot
super episode sis sema
@anandhi elangovan thank you
அருமையான பதிவு😊😊
@asterhoney26 நன்றி
Lovely update
@Saru S நன்றி
Nice ud.
@vp vp thank you
@vp vp thank you